Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மானிப்பாயில் கிருஸ்ணா குழுவாம்! உருவாக்கப்படும் இளம் குற்றவாளிகள்!! Photo's

Featured Replies

யாழில், வாள்வெட்டு போன்ற குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டு வந்தததாக கூறப்படும் கிருஸ்ணா என்ற குழுவைச் சேர்ந்த 4 பேரை கைதுசெய்ததாக இலங்கை காவல்துறை அறிவித்துள்ளது. தொடர்பில் அவர் மேலும் தெரியவருகையில்,
யாழ்.மாவட்டத்தில் இடம்பெறுகின்ற சமூக விரோதச் செயல்களில் கிருஷ்ணாக் குழு ஈடுபட்டு வருவதாகவும் அந்தக் குழு மானிப்பாய் பகுதியை மையமாக வைத்து இயங்கி வருவதாகவும் பொலிஸ் புலனாய்வுப் பிரிவினரிடம் இருந்து தகவல்கள் கிடைக்கப்பெற்றன.



krishna_gorup_jaffna1.png

இந்நிலையில், வியாழக்கிழமை (14) அதிகாலை ரோந்து பணியில் ஈடுபட்ட பொலிஸார், மானிப்பாய் சந்தைக்கருகில், சந்தேகத்திற்கிடமான முறையில் மோட்டார் சைக்கிள்கள், சைக்கிள்களில் வாள்களுடன் 8 பேர் நிற்பதை அவதானித்தனர். மானிப்பாய் பொலிஸ் நிலையத்திலிருந்து மேலதிகப் பொலிஸார் வரவழைக்கப்பட்டு, அந்தக் குழு சுற்றிவளைக்கப்பட்ட போது, அவர்கள் தப்பி ஓட முயன்றனர். இதனையடுத்து, காலுக்குக் கீழ் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டு, நால்வர் கைதுசெய்யப்பட்டனர். மிகுதி நால்வரும் தப்பி ஓடியுள்ளனர். துப்பாக்கிச் சூடு நடத்தியதில் சந்தேக நபர்களில் ஒருவர் காயமடைந்ததுடன் அவருக்கு மானிப்பாய் வைத்தியசாலையில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

krishna_gorup_jaffna2.png

http://www.pathivu.com/news/33169/57//d,article_full.aspx

 

Edited by chinnavan

  • கருத்துக்கள உறவுகள்

இந்தக் குழு எல்லாம்.. புலிகள் காலத்தில் எங்க போய் இருந்தன. புலிகள் காலத்தில்.. ஒரு பெண் நட்ட நடு இரவில்.. எந்தப் பயமும் இன்றி நடமாட முடிந்தது..! தனக்குரிய வேலைகளை செய்ய முடிந்தது... இன்று....

 

இதனை நாங்கள் நேரடியாக.. அனுபவித்திருந்தாலும்.. இந்திய புகழ்பாடும்.. இந்தியா டுடே கூட.. காந்தி தேடிய பெண் சுதந்திரம்.. புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ளது என்று அன்று எழுதி இருந்ததை இங்கு சுட்டிக்காட்டுதல் தகும்...! :icon_idea:

ஜெயிலுக்குள் உள்ள பெண்கைதிகளை ஜெயிலரை தவிர யாரும் சீரழித்ததாக கேள்விப்பட்டதில்லை...

நல்ல ஜெயிலில் பெண்கள் சீரழிக்கபடமாட்டார்கள்....

  • கருத்துக்கள உறவுகள்
நல்ல ஜெயிலில் .............
 
அன்று மக்கள் தமக்கு தேவை என்று எதற்கும் திட்டம் தீட்ட தேவை இருக்க வில்லை. ஜெயில் கைதிகள் போல் இருந்தார்கள். மக்களுக்கு தேவை ஆனா எல்லாவற்றையும் நிறைவு செய்ய புலிகள் கல்வித்துறை கணணி துறை காவல் துறை காட்டு வன பாதுகாப்பு துறை என்று எல்லாவற்றையும் நிறுவி. பொருளாதார தடை விதித்து ஒரு ஆதிக்க பூதமே எமை அழிக்க சுற்றி நின்றபோதும்.
நாம் எந்த வழியும் தெரியாமல் ஜெயில் கைதிகள் போல் நிம்மதியாக படுத்து கிடந்தோம்.
அக்காக்கள் கோவில் போய்  வருவார்கள் 
தங்கைகள் டியுசன் முடிய அரட்டை அடித்து விட்டு இரவு வருவார்கள் 
எந்த பயமும் இருந்ததில்லை............. பயம் என்று ஒரு உணர்வே இருந்ததில்லை.
 
இன்று காட்டேரிகள் வந்து ஓட்டுன்னிகளுடன் பரவி கிடக்கிறது. கோவிலுக்கு பாட்டியை அனுப்புவதற்கும் பயம் கொள்ள வேண்டி கிடக்கிறது.
  • கருத்துக்கள உறவுகள்

இது ஒத்துகொள்ளவேண்டிய உண்மை, புலிகள் சட்டம் ஒழுங்கை பேணினார்கள்.

ஆனால் தாம் வைத்ததுதான் சட்டம் என்றார்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இது ஒத்துகொள்ளவேண்டிய உண்மை, புலிகள் சட்டம் ஒழுங்கை பேணினார்கள்.

ஆனால் தாம் வைத்ததுதான் சட்டம் என்றார்கள்.

 

தாம் வைத்த சட்டத்தினால்த்தான் சட்டம் ஒழுங்கை பேணினார்கள். :)

 

காத்தான் பூத்தானின் சட்டங்களைத்தானே இப்போது பார்க்கின்றோம். :D

  • கருத்துக்கள உறவுகள்

புலிகள் இருந்தபோது கொலை கொள்ளை பாலியல் வல்லுறவு பயம் இல்லவே இல்லை.

ஆனால் தமிழ் ஈழம் ஒரு மொக்கு ஐடியா ஐசே என்று நண்பருக்கு சொன்னதுக்காக ஒரு மாசம் காம்பில ஜட்டி தோய்க்கும் படி இருந்தது.

மாற்று இயக்கத்தில் அடிநிலை போராளியாய் இருந்த ஒரே காரணுக்துக்காக, மாத்தையா கிட்டுவின் காலை பறிக்க, அருணா கொதி ஏறி பலரை போட்டுத்தள்ளும் படி இருந்தது. தலைமைக்கு விசுவாசி என்பதால் எந்தச் சட்டமும் அருணாவை ஒன்றும் செய்யவில்லை.

தனியாரின் ஜீப் கார்களை நாட்டுக்காக பறி கொடுக்க வேண்டி இருந்தது. ஆனால் எல்லா பொறுப்பாளர்களும் பிக்கப்பில். ஒரு லண்டன் காரருக்கு மட்டும் கார்.

சண்டையே வேண்டாம் எண்டு பயந்து ஓடவும் விடாமல் பாஸ் இருந்தது ஆனால் தெரியவேண்டியவர்களை தெரிந்தோர் குடும்பம் குடும்பமாக ஓமந்தையை தாண்டும் படி இருந்தது.

எல்லோரும் பொருளாதார தடையில் அவதிப் பட ஒருவர் வீட்டில் மட்டும் எப்போதும் ஷிவாஸ் இருந்தது. நாயும் இருந்து காணமல் போய், பேப்பரில் அறிவிப்பும் வந்தது.

சட்டம் ஒழுங்கு இருந்தது. அவர்கள் வைத்தபடி.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
அமெரிக்க புரட்சி வெற்றி பெற்றது எல்லோரும் பாராட்டினார்கள்.
 
சீனப் புரட்சி வெற்றி பெற்றது அனைவரும் அன்னியோன்யமானார்கள்.
 
பிரிட்டிஷ்காரன் உலக நாடுகளை பிடித்தான்....யாருமே வாய் திறக்கவில்லை
 
 இதே பாணியை ஹிட்லர் தொடங்கினான். அது இந்த உலகிற்கு சர்வாதிகார செயலாக தென்பட்டது.
 
இதில்  நம்பிக்கெட்டவன் ஈழத்தமிழன்.

இது ஒத்துகொள்ளவேண்டிய உண்மை, புலிகள் சட்டம் ஒழுங்கை பேணினார்கள்.

ஆனால் தாம் வைத்ததுதான் சட்டம் என்றார்கள்.

 

அதை விடுங்க கோசான். அவங்க பயங்கரவாதிகள்  என்றுதானே கூறினீங்க அவங்க அப்படிதானே செய்வாங்க.

மற்றய மாகாணங்களில் ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் நிதி நியதி சட்டங்களை கூட ஆளுனர் வடமாகண சபைக்கு கிடைக்காமல் தடுத்து நிராகரித்துவிட்டதாக சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். . சட்டத்தின் படி அமைந்த வட மாகாண சபையை எந்த சட்டத்தை வைத்து தடுக்கிறார்கள். ஒவ்வொரு செயலுக்கும் முட்டுக்கட்டை போடுகிறார்கள். அதை பற்றியும் கொஞ்சம் அந்தந்த திரிகளில் பேசுவோமா கோசான்.   அல்லது  அது பற்றி பேச உங்களுக்கு இப்ப ஆர்வம் இல்லையா? 

  • கருத்துக்கள உறவுகள்

அதை விடுங்க கோசான். அவங்க பயங்கரவாதிகள்  என்றுதானே கூறினீங்க அவங்க அப்படிதானே செய்வாங்க.

மற்றய மாகாணங்களில் ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் நிதி நியதி சட்டங்களை கூட ஆளுனர் வடமாகண சபைக்கு கிடைக்காமல் தடுத்து நிராகரித்துவிட்டதாக சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். . சட்டத்தின் படி அமைந்த வட மாகாண சபையை எந்த சட்டத்தை வைத்து தடுக்கிறார்கள். ஒவ்வொரு செயலுக்கும் முட்டுக்கட்டை போடுகிறார்கள். அதை பற்றியும் கொஞ்சம் அந்தந்த திரிகளில் பேசுவோமா கோசான்.   அல்லது  அது பற்றி பேச உங்களுக்கு இப்ப ஆர்வம் இல்லையா? 

 

நீங்கள் கோசானை, யாழ்களத்துக்கு வராமல் செய்ய.... பிளான் போடுகிறீர்கள் போலுள்ளது. :D

  • கருத்துக்கள உறவுகள்

துல்பென் பேசுவோம் வாருங்கள்.

வடமாகாண சபை திட்டமிட்டு முடக்கப்படுகிறது. ஆளுனரும் பிரதம செயலாளரும் முதலமைச்சரை விட பவர்புல்லாய் இருக்கிறார்கள்.

இதற்கு என்ன செய்யலாம்?

1) முரண்டு பிடித்து அரசியல் செய்யலாம்

2) சரணாகதி அரசியல் செய்யலாம்

3) நடுவழி (Middle path) அரசியல் செய்யலாம்

தமிழ் கூட்டமைப்பு தன் அரசியலை இரண்டாய் பகுக்க வேண்டும்.

1) தூர நோக்கு அரசியல் - தேசிய அரசியல்

2) கிட்ட நோக்கு அரசியல் - மாகாண அரசியல்

தேசிய அரசியல் பிரச்சினைகளாக இறுதித்தீர்வு, போர்க்குற்றவிசாரணை, உயர் பாதுகாப்பு வலயம், 13வது சரத்து, இதியாவை கையாளுவது, இராணுவ வெளியேற்றத்தை அமைத்து அவற்றை சம்பந்தன், சுமந்த்ஹிரன், மாவை, சுரேஸ் போன்ற எம்பிக்கள் கையிலெடுக்க வேண்டும்.

மாகாண அரசியலில் சீவீ மிடில் பாத் அரசியல் மூலம் வளைந்து கொடுக்கும் அரசியல் செய்யலாம். இப்படி ஒரு தன்மை உடையவர் சிவி - அதனால் தான் அவரால் தமிழராய் இருந்தும் உச்ச நீதி மன்றுவரை போக முடிந்தது. இதுவே இந்த நெகிழ்வுப் போக்கே ஏனைய தமிழ் தலைவர்களை விட இவரை முதல்வர் பதவிக்கு தகுதியாக்கியது. ஜனாதிபதி முன் பதவியேற்றது இதையே பிரதிபலித்தது, நானும் வரவேற்றேன்.

ஆனால் தொடர்ந்து பசிலுடன் மோதல் போக்கு, செயளாளர் விவகாரம் என்று சீவி முரண்டு அரசியலுக்குத் தாவினார், அல்லது தள்ளப் பட்டார். சர்வ வல்லமை பொருந்திய அரசும், ஏட்டிக்குப் போட்டியாக வடக்குமாகாணசபையை முடக்கியது.

இப்போ முதலமைச்சரின் முன் உள்ள தெரிவுகள் மூன்று.

1) முரண்டு அரசியலை தொடர்வது - இதில் இவர் தமிழ் தேசியர்களின் கதாநாயகன் ஆகுவார் ஆனால் முதலமைச்சராக எதுவும் சாதிக்க முடியாது.

2) பதவி விலகுவது - நற்பெயரையும் moral high ground ஐயும் தக்க வைக்கலாம், வேறு பலன் இல்லை.

3) ஜனாதிபதி, கோத்தா, பசில் ஆகியோருடன் communication channels ஐ திறந்து, ஒரு minimum working plan ஐ ஏற்படுத்தி வடமாகாணசபையை இயங்க வைப்பது. இதில் சீவீயை அரசு எவ்வகையிலும் கூட்டமைப்பின் தேசிய அரசியல் நோக்குகளுக்கு எதிராக பயன்படுத்திவிடாமல் மிக அவதானமாய் இருப்பது. இந்த கத்திமேல் நடக்கும் செயலை செய்யும் ஆற்றல் சீவீக்கு இருப்பதாயே நான் நம்புகிறேன்.

இன்னும் காலமும் இருக்கிறது - ஆனால் விரைந்து கழிகிறது.

இது முதலமைச்சர் முடிவெடுக்க வேண்டிய காலம்.

பி.கு: நான் வெளியில் இருந்து அனுமானித்த கள நிலைமையே இது. உண்மை இதை விட வித்தியாசமாய் இருக்கலாம். அதை முதலமைச்சருக்கு நெருக்கமானவர்களே சொல்லவேண்டும்.

Edited by goshan_che

நன்றி கோசான் இப்படிப்பட்ட ஆய்வு பூர்வமான விவாதங்களையே நான் விரும்புகிறேன். ஆனால் இவ்விடயத்தில் நீங்கள் கூறியது போல் விக்கினேஸ்வரனில்  எந்த தவறும் இருப்பதாக நான் கருதவில்லை. அவர் பல முறை தனது நல்லெண்ணத்தையும் அரசிடம் காண்பித்துள்ளார். கூட்டமைபுபு கூட பல தடவை தமது நல்லெண்ணத்தை காட்டியுள்தாகவே நான் கருதுகிறேன். சம்பந்தர் அண்மையில் பி.பி.சிக்கு அளித்த பேட்டியை கேட்டீர்களா. அரசுடனான பேச்சுவார்த்தை எவ்வாறு முறிவடையந்தது என்பதை அவர் மிகவும் தெளிவாக விளக்கியுள்ளார். இணக்கம் காணப்பட்ட எதையுமே நடைமுறைப்படுத்தாது காலம் கடத்தியதுடன் இறுதி பேச்சு வார்த்தை மேசையில் தாம் காத்திருக்க அரசு தரப்பு சமுகம் தரவில்லை என்று கூறியிருந்தார். இதற்கு மேல் தமிழர் தரப்பு எப்படி இறங்கி போகமுடியும் என்று நீங்கள் நினைக்கின்றீர்கள். இந்தியாவின் பாராமுகம் இதில் அரசிற்கு துணைபோவதாகவே நான் கருதுகிறேன். புலிகள் இருக்கும் போது அவர்களை குற்றம் சுமத்திய இந்தியா தற்போது மிதவாத அதுவும் இந்தியாவிற்கு விசுவாசமாக தலைவர்கள் இருக்கும் கூட்டமைப்புடன் இணங்கி செல்ல இனியும் கூட்டமைப்பு என்ன நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இன்னமும் எவ்வளவு இறங்கி செல்ல வேண்டும். அவர்களை கையாள்வது என்றால் என்ன? இதற்கு மேல் கையாள என்ன இருக்கிறது.?

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவின் போக்கு என்னவென்றால் இலங்கையிடம் அனுசரித்துப் போங்கள் என்பதே. ராஜீவ் காலம் தொட்டு இன்றுவரை இதுதான் நிலைமை.

87முதலே தமிழர் தரப்பு இந்தியாவை பிழையாகவே கையாள்கிறோம். சண்டை தொடங்கும் முன் பிரபாவுக்கு எம்ஜிஆர் அனுப்பிய செய்தியில் இதயசுத்தியுடன் தமிழக முதல்வரின் கையாலாகா நிலையையும் இந்தியாவை பகைக்கும் முட்டாள்தனத்தையும் சொல்லி இருந்தாராம்.

நாம் விட்ட வெற்றிடத்தை இலங்கை அரசு கப்பென பிடித்துக் கொண்டது. நாமோ சீமான் ராமதாசு போன்ற வியாபாரிகள் பின்னால் அல்லது வைகோ நெடுமாறன் போன்ற நல்ல ஆனால் வினைதிறன் அற்றோர் பின்னால் அலைகிறோம்.

அதிகார வர்க்கத்தை கைக்குள் போடும் ஒரு முயற்சியும் இல்லை. இதில் புலம்பெயர் பணமக்கள் செய்யக்கூடியது ஏராளம்.

இந்தியாவை கைக்குள் கொண்டுவருவது ஒரு மெகா புரோஜெக்ட். முதலில் கூட்டமைப்பு இதுக்கென சுமந்திரன் போன்ற சிந்திக்கும் ஆற்றல் உடைய ஒருவரை நியமித்து அவர் தலைமையில் ஒரு செயல்திட்டத்தை புலம்பெயர் அமைப்புகளையும் சேர்த்து செய்யணும்.

இந்தியாவின் போக்கு என்னவென்றால் இலங்கையிடம் அனுசரித்துப் போங்கள் என்பதே. ராஜீவ் காலம் தொட்டு இன்றுவரை இதுதான் நிலைமை.

87முதலே தமிழர் தரப்பு இந்தியாவை பிழையாகவே கையாள்கிறோம். சண்டை தொடங்கும் முன் பிரபாவுக்கு எம்ஜிஆர் அனுப்பிய செய்தியில் இதயசுத்தியுடன் தமிழக முதல்வரின் கையாலாகா நிலையையும் இந்தியாவை பகைக்கும் முட்டாள்தனத்தையும் சொல்லி இருந்தாராம்.

நாம் விட்ட வெற்றிடத்தை இலங்கை அரசு கப்பென பிடித்துக் கொண்டது. நாமோ சீமான் ராமதாசு போன்ற வியாபாரிகள் பின்னால் அல்லது வைகோ நெடுமாறன் போன்ற நல்ல ஆனால் வினைதிறன் அற்றோர் பின்னால் அலைகிறோம்.

அதிகார வர்க்கத்தை கைக்குள் போடும் ஒரு முயற்சியும் இல்லை. இதில் புலம்பெயர் பணமக்கள் செய்யக்கூடியது ஏராளம்.

இந்தியாவை கைக்குள் கொண்டுவருவது ஒரு மெகா புரோஜெக்ட். முதலில் கூட்டமைப்பு இதுக்கென சுமந்திரன் போன்ற சிந்திக்கும் ஆற்றல் உடைய ஒருவரை நியமித்து அவர் தலைமையில் ஒரு செயல்திட்டத்தை புலம்பெயர் அமைப்புகளையும் சேர்த்து செய்யணும்.

 

ஒரு சிறிய தேசிய இனத்திடன் இருந்து இந்தியா எதை எதிர்பார்க்கிறது? இலங்கையிடம் அனுசரித்து போக நாம் தயார்தானே. அவர்கள் தானே எமது உரிமைகளை தராமல் எம்மை அடக்க நினைக்கிறார்கள். எப்படி அனுசரித்து போவது விளக்குவீர்களா? உங்களுக்கு தெரியுமா தமிழ் மக்கள் ஆரம்ப காலத்தில் இருந்தே இந்தியாவின் நண்பர்களாகவே உள்ளனர். இந்தியாவிற்கும் அது தெரியும். இதைவிட மெகா புரஜெக்டை ஒரு சிறிய பாதிக்கபட்ட இனத்திடனம் இருந்து இந்தியா எதிர்பார்ப்பதாக கூறுகிறீர்கள்.  இலங்கையிடம் அனுசரித்து அடிமையாக போவதற்கு ஏன் இந்தியாவை கையாளவேண்டும். அதை நாமே செய்யலாமே.புலிகள் இருக்கும் வரை அவர்கள் சாட்டு இந்தியாவிற்கு. தற்போது யார் சாட்டு.

 

  • கருத்துக்கள உறவுகள்

நீங்க என்னமோ நான் சவுத்பிளாக் அதிகாரி போல என்னை நிக்க வச்சு இந்தியா பற்றி கேட்கிறீங்க? :)

இந்தியாவுக்கு நாம் ஒருபோதும் பெரிதாக தேவைப்படவில்லை. இந்திரா ஜேஆர் இடையே இருந்த தனிப்பட்ட பகையும் ஜேஆரின் அமெரிக்க சார்பும் ஒருசில வருடங்கள் இந்தியாவை நம் நண்பனாக்கியது. அவ்வளவே.

இந்தியா நம்மிடம் எதையும் எதிர்பாக்கவில்லை. அவர்கள் எதிர்பார்ப்பெல்லாம் இலங்கையிடமே. அது பொய்க்கும் போல தோன்றினால் எம்மை காட்டி இலங்கையை வழிக்கு கொண்டுவருவார்கள்.

இந்த போக்கை மாற்றவே நாம் மெகா பிராஜெக்ட் செய்யவேணும். யூதர்களும் அமேரிக்காவும் போல.

நன்றி கோசான் இதுபற்றி உரையாடும் திரி இதுவல்ல என்ற போதிலும் இவ்வாறான உரையாடல்கள் வாசகர்களிடம் சிந்தனையை தூண்டும். புதிய புதிய ஐடீயாக்களை வாசகர்களிடையே ஏற்படுத்தும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.