Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மகள்களைபோல் மகன்களையும் கட்டுக்கோப்பாக வளருங்கள்: பெற்றோர்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

புதுடெல்லி: பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நாட்டிற்கு பெரும் தலைகுனிவை ஏற்படுத்துகின்றன என்று வேதனை தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி, மகள்களை போல் மகன்களையும் பெற்றோர்கள் கட்டுக்கோப்பாக வளர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

டெல்லி செங்கோட்டையில், பிரதமர் நரேந்திர மோடி மூவர்ண தேசிய கொடியை ஏற்றி வைத்து நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில், நமது நாட்டின் பாலின விகிதத்தை பார்த்திருக்கிறீர்களா? யார் இந்த ஏற்றத்தாழ்வை உருவாக்கியது கடவுள் இல்லை.

பெண் குழந்தைகளை கருவறையிலே மருத்துவர்கள், பெற்றோர்கள் கொல்ல வேண்டாம் என்று கேட்டு கொள்கிறேன். மகன் வேண்டும் என்பதற்காக பெற்றோர்கள் பெண் குழந்தையை கொல்ல வேண்டாம் என்று கோரிக்கை விடுத்துக் கொள்கிறேன். பெண் குழந்தைகளை கருவறையிலே கொல்லாதீர்கள். அவர்கள் 21ஆம் நூற்றாண்டின் இந்தியாவின் ரத்தம். பெண் குழந்தைகளின் கனவை நிறைவேற்ற வேண்டும்.

நான் நிறைய குடும்பங்களை பார்த்திருக்கிறேன். 5 ஆண் மகன் சேர்ந்து ஒரு குடும்பத்திற்கு என்ன நன்மை செய்து விடுவார்களோ அதைவிட அதிகமாக ஒரே ஒரு பெண் பிள்ளை செய்து காட்டியதை நேரடியாக பார்த்திருக்கிறேன். நமது விளையாட்டு வீரர்கள் நம் தேசத்திற்கு நிறைய பெருமை சேர்த்துள்ளனர். அவர்களில் நிறைய பெண்களும் இருக்கின்றனர்.

பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நாட்டிற்கு பெரும் தலைகுனிவை ஏற்படுத்துகின்றன. மகள்களை போல் மகன்களையும் பெற்றோர்கள் கட்டுக்கோப்பாக வளர்க்க வேண்டும். பெற்றோர்களாக நாம் நம் பெண் பிள்ளைகளிடம் பல கேள்விகள் கேட்கிறோம். ஆனால் எப்போதாவது ஆண் பிள்ளையிடம் எங்கே போகிறாய் என கேட்டிருக்கிறோமா? பெண் பிள்ளைகளுக்கு விதிக்கும் ஒழுக்க நெறி கட்டுப்பாடுகளை ஏன் நாம் ஆண் பிள்ளைகளுக்கு விதிப்பதில்லை? குற்றங்கள் நடைபெறும் போது சட்டம் தன் கடமையை நிச்சயம் செய்யும். ஆனால் நாமும் நமது மகன்கள் நேர்வழியில் செல்வதை உறுதி செய்ய வேண்டும்" என்று கூறினார்.

http://news.vikatan.com/article.php?module=news&aid=31350

ஒரு மணிநேரம் 10 நிமிடத்திற்குப் பின்னர் பாருங்கள்.  பெற்றோரே மகன்களைக் கெடுப்பதற்கு உதாரணங்கள் தரப்படுகின்றன.

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள்...... இருவரையும் சமமாகத்தான் பாவிச்சனாங்கள்.
அந்த.... பெல்ற். இன்னும்.... இருக்கு.
அதைப் பார்த்தாலே..... பழைய ஞாபகம், இன்னும்... அவங்களுக்கு வரும்.

முக்கிய பிற்குறிப்பு: இதை எல்லா.... தகப்பன்மாரும் பின்பற்றக் கூடாது.
புத்திசாலி தகப்பன்மார், சூழ் நிலையை யோசித்து பாவிப்பதில் தப்பில்லை. :)

பெல்ற் பாவித்தால் பிள்ளைகளை அரசாங்கம் பொறுப்பெடுத்து வேறு குடும்பத்தினரிடம் கொடுத்துவிடுவார்கள். பெல்ற் பாவித்தவரை சிறைக்குள் அனுப்பிவிடுவார்கள். இலண்டனில் ஒரு சில தமிழர்களுக்கு இப்படி நடந்துள்ளதாகத் தெரிகின்றது.

நாங்கள்.... பெல்ற்றால், அடித்தது செல்ல அடி.

"அடி நீ... கள்ளி, என்பது போல...." கன்னத்தை  கிள்ளுவார்கள் கிருபன்.

அதை நிச்சயம், நீங்கள் கேள்விப்பட்டிருப்பிர்கள் தானே.... :D

பெத்த பிள்ளைக்கு....... மோட்டுத்தனமாக அடிக்க, நான் என்ன விசரனா.... :)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
மோடியின்ரை உபதேசம் புலம்பெயர் தமிழ் பெற்றோர்க்கும் கேட்கட்டும். :icon_idea:
 
"அவன் எங்கையெண்டாலும் படுத்துகிடந்து எழும்பிவரட்டும்.அவள் பள்ளிக்கூடம் விட்டால் நேரை வீட்டைதான் வரோணும்"
 
புலம்பெயர்ந்த தாய்.
  • கருத்துக்கள உறவுகள்

தமிழச்சி இணைச்ச வீடியோவைப் பார்த்தேன் தமிழகத்தில் மட்டுமல்ல எங்கட ஆட்களும் அப்படித் தான்.தங்கட ஆண் பிள்ளைகள் என்டால் பத்து வீடும் மேய்ஞ்சிட்டு வரலாம். ஆனால் தங்கட வீட்டு பெண்கள் என்டால் வீட்டுக்குள்ளே அடங்கி,ஒடுங்கி இருக்க வேண்டும் என எதிர் பார்க்கிறார்கள்

நூறுவீதம் சரியான கருத்து ரதி. யாழில் பச்சை போட முடிவில்லை. மனதால் ஆயிரம் பச்சை போடுகிறேன்.

இது விலங்குகளின் மனோபாவம்.. :D ஆண்சிங்கம் பலமாக இருக்கும் மட்டும் பல பெண்சிங்கங்களை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும். இன்னொரு பலமான ஆண்சிங்கம் வந்தால் மோதவேண்டி வரும்.. :lol:

நூறுவீதம் சரியான கருத்து ரதி. யாழில் பச்சை போட முடிவில்லை. மனதால் ஆயிரம் பச்சை போடுகிறேன்.

இனி உங்களாலும் பச்சைப் புள்ளிகளை இட முடியும் Trinco. உங்கள் உறுப்பினர் மட்டத்தினை 'கருத்துக்கள உறுப்பினர்' மட்டத்துக்கு நகர்த்தியுள்ளோம்

இனி உங்களாலும் பச்சைப் புள்ளிகளை இட முடியும் Trinco. உங்கள் உறுப்பினர் மட்டத்தினை 'கருத்துக்கள உறுப்பினர்' மட்டத்துக்கு நகர்த்தியுள்ளோம்

நன்றி நிழலி.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.