Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சென்னை - சிங்காரமா...?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

2hhooeg.jpg

 

சென்னை...

 

நடு ரோட்டில் எச்சில் துப்பும்

நவ நாகரிக சமூகமும்..

 

சட்டசபைக் குறிப்பிலிருந்து

நீக்கப்பட்ட வார்த்தைகளும்...

 

சேலை கட்டியிருந்தால்

போதுமென உரசிப்பார்க்கும்

பத்தரைமாற்றுத் தங்கங்களும்...

 

பணம் எந்த வழியில்

வந்தால் என்ன

என் கைக்கு வந்தால் போதும்

என நினைக்கும் முதலைகளும்..

நிறைந்த அழகான ஊர்...

 

சிங்காரச் சென்னை...

 

(நன்றி: நிலாமகள்)

 

 

இப்படி கடுமையாக விமர்சிக்கப்படும் சென்னையின் மறுபுற சிங்காரத்தை, அழகை புகைப்படக் கலவையில் இங்கே காண்போமா? :)

 

.

Edited by ராசவன்னியன்

  • Replies 88
  • Views 10.3k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

சென்னை...

-----

சேலை கட்டியிருந்தால்

போதுமென உரசிப்பார்க்கும்

பத்தரைமாற்றுத் தங்கங்களும்...

-----

இப்படி கடுமையாக விமர்சிக்கப்படும் சென்னையின் மறுபுற சிங்காரத்தை, அழகை புகைப்படக் கலவையில் இங்கே காண்போமா? :)

 

 

சேலை கட்டியிருப்பவரையும், பஞ்சாபி போட்டிருப்பரையும்.... உரசிப் பார்ப்பது சென்னையில் மட்டுமல்ல அகில இந்தியாவிலும் நடப்பதை பார்க்க அதிர்ச்சியாக உள்ளது.

பல பெண் தெய்வங்களை கொண்ட மதத்தை பின் பற்றும் நாட்டில், இதுவும் நடக்க என்ன காரணம் என்று.... யோசிப்பதுண்டு.

-------

 

சென்னையின் மறுபுற சிங்காரத்தையும்....

நீங்கள் கட்டணம் வசூலிக்காமல் காட்டினால்,

நாங்கள் பார்க்க.... ரெடி. :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சென்னையின் மறுபுற சிங்காரத்தையும்....

நீங்கள் கட்டணம் வசூலிக்காமல் காட்டினால்,

நாங்கள் பார்க்க.... ரெடி. :D

 

நன்றி, தமிழ்சிறி.

 

கட்டணம் ஏதுமில்லை..

பார்த்தால் மனம் வசப்படும்..

இப்படி வசை பாடாது..! :lol:

 

vpd8qp.jpg

என் சகோதரி சென்னையில் தான் வசிக்கின்றார். தன் அனுபவத்தில் பெண்களுக்கு மரியாதையும், அன்பையும் வழங்கும் இடங்களில் சென்னை தான் உசத்தி என்கின்றார்.  தள்ளுவண்டியில் மரக்கறி விற்கும் சின்ன வியாபாரியில் இருந்து, பெரிய ஆட்கள் வரைக்கும் பெண் என்பதால் மரியாதை கொடுப்பார்களாம்.

 

 


அழகான படங்களை; முக்கியமாக இயற்கை அழகுகளை இணையுங்கள் ராசவன்னியன்!

  • கருத்துக்கள உறவுகள்

மெரினா கடற்கரையில்...... எனது அப்பா, அம்மா, தம்பி, தங்கச்சியுடன் ஒரு மாலைப் பொழுதை கழித்தோம்.
திடீரென்று... கன நேரம் அப்பாவை காணவில்லை.
கொஞ்சம் யோசித்துக்கொண்டிருந்த போது....
அப்பா.... சிரித்துக் கொண்டு, கடுதாசியால் சுற்றிய ஒரு பொட்டலத்தை காட்டினார்.

நாங்கள் அதற்குள்... சுண்டல் மாதிரி, ஏதாவது ஒரு சாப்பாட்டுச் சாமான் என நினைத்தோம்.
ஆனால்....அதற்குள் இருந்தது, ஒரு வலம்புரிச் சங்கு.
அதன் விலையை.. கேட்ட போது அவர் சொல்ல மறுத்து விட்டார்.
அந்தச் சங்கு, பல நாடுகள் போய்... இப்போது, எமது சாமி அறையில் உள்ளது. :)

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

COOUM__5_102969f.jpg


கூவம் நாற்றம் மட்டும் இல்லை என்றால் அருமையான இடம் 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அழகான படங்களை; முக்கியமாக இயற்கை அழகுகளை இணையுங்கள் ராசவன்னியன்!

 

நிச்சயமாக.

 

தகவலுக்கு நன்றி.

 

மெரினா கடற்கரையில்...... எனது அப்பா, அம்மா, தம்பி, தங்கச்சியுடன் ஒரு மாலைப் பொழுதை கழித்தோம்..

 

So,சென்னை உங்களுக்கு புதிதல்ல... :)

 

கூவம் நாற்றம் மட்டும் இல்லை என்றால் அருமையான இடம் 

 

ஆங்கிலேயர்கள் ஆண்டவரை கூவம் என்பது அழகான நதி. 

அதை நாறடித்தது திருவாளர் சென்னைவாசிகளும், அரசியல்வியாதிகளுமே!

 

5arrld.jpg

 

  • கருத்துக்கள உறவுகள்

-----

So,சென்னை உங்களுக்கு புதிதல்ல... :)

 

 

25 வருடத்துக்கு முந்திய சென்னை வேறு. இப்போதிருக்கும் சென்னை வேறு.

எக்மோர் ரயில்வே நிலையத்துக்கு முன் உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்தோம். தம்பி.... கோயம்புத்தூரில்  படித்துக் கொண்டிருந்தார்.

விடுமுறைக்கு, ஊருக்கு... வரும் போது, ஸ்ரீலங்கா ராணுவம் உலங்கு வானுர்தியில் இருந்து சுட்டு, நல்லூர் சிவன் கோவில் வாசலில் இறந்து விட்டார்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

...விடுமுறைக்கு, ஊருக்கு... வரும் போது, ஸ்ரீலங்கா ராணுவம் உலங்கு வானுர்தியில் இருந்து சுட்டு, நல்லூர் சிவன் கோவில் வாசலில் இறந்து விட்டார்.

 

ஓ..!  வருந்துகிறேன்.

இங்கே யாழில், பலருக்கும் பின்னால் கனதியான சோகம் பொதிந்துள்ளது போலும்.

 

chennai.jpg

Fishermen push their boats transporting baskets full of fishes at a fishing harbour in the southern Indian city of Chennai

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

சென்னைத் தமிழில்.....
"நைனா... நீ, நாஷ்டா சாப்புட்டியா...?"
என்றால்... என்ன அர்த்தம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சென்னைத் தமிழில்.....

"நைனா... நீ, நாஷ்டா சாப்புட்டியா...?"

என்றால்... என்ன அர்த்தம்.

 

தமிழுசிறி நைனா, உன்னோட மெட்ராஸு தமிழு ஷோக்கா கீதுபா.. :)

இப்பால இஸ்கூலுல கத்துக்கினியா?

 

ஐயே.. மெய்யாலுமா 'நாஷ்டா' மீனிங்கு தெராதா ?

இப்போ இன்னா டவுட்டு உனுக்கு?

"ஐயா, நீங்கள் காலை உணவு சாப்பிட்டுவிட்டீர்களா..?" இதாம்பா மீனிங்கு!

மெட்ராஸு பாஷைல உஷாரா இரு மாமு..! இல்லன்னா

நிஜார உருவிடுவானுங்க..!!

டங்குவார் புட்டுக்கும்..!!!

 

நான் தமிழ் நாட்டையும் அங்கு வாழும் தமிழில்,தமிழனில் விருப்பு உள்ளவர்களை மதிக்கிறேன். தமிழ் நாட்டுக்கும் வந்துள்ளேன்.அங்கு பிடிக்காத விடையங்களில் ஒன்று இந்த கூவம் ஆறு . இந்த நவீன தொழில்னுட்ப உலகில் ஏன் கூவம் ஆற்றிற்கு ஒரு தீர்வு காணமுடியாது? என்னால் ஒரு சிக்கனமான தீர்வு கொடுக்க முடியுமா? என பலதடவை நினைப்பது உண்டு. அல்லது உலக நிருவனங்களின் உதவிகள் மூலம்( ஐ. நா சுகாதார நிருவனம்) தீர்வு காணலாம் என நினைக்கிறேன்.இது ஒரு சுகாதார பிரச்சனை. எனக்குள் சில தீர்வுகள்,வழிமுறைகள் உண்டு. ஆனால் எப்படி உதவுவது? ராசவன்னியன் அவர்களே..

  • கருத்துக்கள உறவுகள்

லண்டனின் தேம்ஸ் ஆறுகூட முன்பு அசுத்த நீராகத்தான் இருந்ததாம். :huh: (இன்று நிலைமை பரவாயில்லை.. அவ்வளவே.. :lol: ) அரசு முயன்றால் காலப்போக்கில் சீர்செய்யலாம். :blink:

 

 

 

 

2q1hydg.jpg

 

 

 

இது கேரளாவாக்கும் ராசவன்னியரே ???

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இது கேரளாவாக்கும் ராசவன்னியரே ???

 

ஈஸ்வரா...

 

சென்னைக்கு அருகேயும் 40 கி.மீ தொலைவில் கிழக்கு கடற்கரை சாலையில், மகாபலிபுரம் செல்லும் வழியில் கோவளம் என்ற ஊர் இருக்கப்பு.. :)

300px-MTC_white_line_bus.jpg

இந்த கோவளம் கிராமம் வரைக்கும் ஆங்கிலேயர்கள் பக்கிக்ஹாம் கால்வாய் அமைத்து படகுப் போக்குவரத்து நடைபெற்றது ஐயா. இந்த கிராமத்திற்கு சென்னை பிராட்வே பேருந்து நிலையத்திலிருந்து தடம் எண் 19G என்ற மாநகரப் பேருந்தும் செல்கிறது.

உலகில் என்னை வசிப்பதற்கு ஒரு நகரத்தை தெரிவு செய்ய சொன்னால் சென்னை தான் எனது முதல் தெரிவு .காரணம் எனது வாழ்க்கை முறையை ஒட்டிய பல விடயங்கள் .

 

பிடிக்காத பல விடயங்களும் இல்லை என்று சொல்லவில்லை குறிப்பாக பெண்கள் பற்றிய விடயம் .இந்த விடயத்தில் நிழலியின் கருத்துடன் உடன் பாடில்லை .இந்த விடயத்தில் நாகரீகம் இலங்கையர்களுடன் அவர்களை ஒப்பிடவே முடியாது .

 

எனது மனைவி சொன்னார் தான் இரவு பஸ்சில் தாயாருடன் தஞ்சாவூர் சென்றபோது முன்னிருக்கையில் இருந்தவர் வலிய இருக்கையை பின்னுக்கு சரித்து தொடர்ந்தும் கஷ்டம் கொடுத்துக்கொண்டு வந்தாராம் .டீ குடிக்க பஸ்ஸை நிறுத்தியபோது விசயத்தை தங்களை கூட்டிக்கொண்டு போனவரிடம் சொல்ல அவர் சீட்டின் சாயும் இடத்தையே புடுங்கி எடுத்துவிட்டாராம் .(நம்ம சங்கர் - பாலு மகேந்திராவின் மனைவியின் தம்பி) 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

இது கேரளாவாக்கும் ராசவன்னியரே ???

காரைநகரில் மட்டுமில்லை சென்னையிலும் கோவளம் என்ற பெயர் உண்டு ஈசனாரே.......

58096962.jpg


Place near Kovalam (ECR Road)


90648012.jpg

Illuminated Swami Vivekananda's House, Chennai 


3947741.jpg

Taking off from Chennai airport

2426908.jpg

chennai, basin bridge


34585207.jpg

Spencer Plaza. Chennai, Tamil Nadu, India.

ஈஸ்வரா...

 

சென்னைக்கு அருகேயும் 40 கி.மீ தொலைவில் கிழக்கு கடற்கரை சாலையில், மகாபலிபுரம் செல்லும் வழியில் கோவளம் என்ற ஊர் இருக்கப்பு.. :)

300px-MTC_white_line_bus.jpg

இந்த கோவளம் கிராமம் வரைக்கும் ஆங்கிலேயர்கள் பக்கிக்ஹாம் கால்வாய் அமைத்து படகுப் போக்குவரத்து நடைபெற்றது ஐயா. இந்த கிராமத்திற்கு சென்னை பிராட்வே பேருந்து நிலையத்திலிருந்து தடம் எண் 19G என்ற மாநகரப் பேருந்தும் செல்கிறது.

 

 

 

 

நீர்த் தாவரங்களையும் ( ஆகவே நன்னீர் ) படகோட்டி வைத்திருக்கும் குச்சியையும் பார்த்து கேரளாவாக்கும் என்று நினைத்துவிட்டேன். கோவளம் கடற்கரை பற்றி அறிந்திருந்தாலும் நன்னிர் டெல்டா இருப்பது தெரிந்திருக்கவில்லை. (போனதில்லை)
 
கேரள கோவளம் ஏற்கனவே அறிந்தது.
 
 
 

 

காரைநகரில் மட்டுமில்லை சென்னையிலும் கோவளம் என்ற பெயர் உண்டு ஈசனாரே.......

 

 

 

கோவல‌ம் நம்ம தாய்வழிப் பாட்டனார் பூர்வீகம். ( கேரளாக் கோவளம் அல்ல)
 
கோ ‍  - அரசன்
வலம் ‍-  ரவுண்ட்ஸ்  :D
சென்னை 375: ஒரு முன்கதைச் சுருக்கம்

 

madras_day_2064667h.jpg

இந்தியாவில் கிழக்கிந்திய கம்பெனியின் ஆட்சி உருவாவதற்கு 119 ஆண்டுகளுக்கு முந்தைய காலம் அது. விஜயநகரப் பேரரசுக்கு உட்பட்டு திருப்பதி அருகே உள்ள சந்திரகிரியில் ஒரு ராஜா இருந்தார். அவருக்குக் கட்டுப்பட்டவராக பூந்தமல்லியின் நாயக்கரான வேங்கடகிரி இருந்தார். அவர்களின் பிடியில் இன்றைய சென்னையின் நிலம் இருந்தது.

ஒரு குடியிருப்பைக் கட்ட நிலம் தேடி கிழக்கிந்திய கம்பெனி அதிகாரிகள் பிரான்ஸிஸ் டேவும் ஆண்ட்ரூ ஹோகனும் புதுச்சேரி வரை கடற்கரையில் அலைந்தனர். பெரி திம்மப்பா எனும் வணிகரின் சைகை மொழிபெயர்ப்பு உதவியோடு, மனித வாடை இல்லாத சுமார் ஐந்து கி.மீ. தூரமுள்ள கடற்கரையோர நிலம் வேங்கடகிரியிடமிருந்து வாங்கப்பட்டது. ஆங்கிலேயர் குடியிருப்பின் சுற்றுச்சுவருக்கு வெளியே கருப்பர் நகரம் உருவானது. சென்னை நகரின் முதல் குடும்பம் என்ற பெயரை பெரி திம்மப்பாவின் குடும்பம் பெற்றது. ஆக, சென்னையின் ஸ்தாபகர்களாக பிரான்ஸிஸ் டே, ஆண்ட்ரூ ஹோகன், பெரி திம்மப்பா ஆகிய மூவரும் வரலாற்றில் இடம்பிடித்துவிட்டனர். ஆனால், அவர்கள் பெயரில் ஒரு தெருகூட சென்னையில் இன்னமும் இல்லை.

ஆங்கிலேயர்களின் குடியிருப்புக்கு உள்ளே இந்தியாவின் முதல் ஆங்கில மருத்துவமனை 1664-ல் உருவானது. பிறகு, கோட்டைக்கு வெளியே வந்தது. அதுதான் இன்றைய அரசு பொது மருத்துவமனை. 1842 முதல் இந்தியர்களுக்கும் அதில் மருத்துவம் செய்யப்பட்டது.

 

மதறாஸ் நகராட்சி

1668-ல் திருவல்லிக்கேணியை உள்வாங்கிக்கொண்ட சென்னை 1688-ல் சென்னை நகராட்சியாக (அதாவது மதறாஸ் நகராட்சி) இங்கிலாந்து அரசரால் அறிவிக்கப்பட்டது. அப்போது ஆசியாவில் எங்கும் அப்படிப்பட்ட உள்ளாட்சி முறை இல்லை. இதற்கிடையே சந்திரகிரி ராஜாவை கோல்கண்டா சுல்தான் தோற்கடித்தார். சுல்தானைப் பேரரசர் அவுரங்கசீப் தோற்கடித்தார். வென்றவர்களிடம் போய் நின்று தங்கள் சென்னை கோட்டைக்குப் பாதுகாப்பு தேடிக்கொண்டார்கள் ஆங்கிலேயர்கள்.

1701-ல் அவுரங்கசீப் படைகள் சென்னைக் கோட்டையை லேசாகத் தட்டிப்பார்த்தன. 1746-ல் பிரான்ஸ் படைகளால் கோட்டை கைப்பற்றப்பட்டது. பிற்காலத்தில் பெரும்புகழ் அடைந்த ராபர்ட் கிளைவ், சென்னை நகருக்கு வெளியே ஓடிப்போய் ஒரு கோட்டையில் ஒளிந்துகொண்டார். வடஅமெரிக்காவில் தங்களிடம் இருந்த ஒரு தீவை பிரான்ஸுக்கு விட்டுக்கொடுத்து, சென்னையை ஆங்கிலேயர்கள் 1748-ல் மீண்டும் வாங்கினார்கள்.

ஆர்க்காடு நவாப் சாந்தோம் பகுதியை ஆங்கிலேயர்களுக்குப் பரிசாக வழங்கினார். மயிலாப்பூர், எழும்பூர், புரசைவாக்கம், தண்டையார்பேட்டை போன்றவை ஆங்காங்கே தீவுகள் போன்று தனித்து இருந்த கிராமங்கள். சென்னையின் வளர்ச்சி எனும் கடல் அவற்றை இடைவெளி விடாமல் தழுவிக்கொண்டது.

1711-ல் முதல் அச்சகம் சென்னையில் அமைக்கப்பட்டது. கிறிஸ்தவப் பாதிரியார்களைத் தவிர யாரும் அச்சகங்களை வைத்திருக்கக் கூடாது என கிழந்திய கம்பெனியின் தடை 1840 வரை இருந்தாலும், சென்னை மாகாண ஆளுநராக இருந்த எல்லீஸ் உள்ளிட்டோரின் முன்முயற்சியால் தமிழ் நூல்கள் அச்சாகின. சென்னையில் அச்சான நூல்கள்தான் பிற்பாடு எழுந்த தமிழ் மறுமலர்ச்சியின் மையம்.

 

பஞ்சமும் போர்களும்

தென்னிந்தியாவில் 1876 முதல் 78 வரை தாதுவருசப் பஞ்சம். ஒரு கோடிக்கும் அதிகமான மக்கள் இறந்துள்ளனர். சென்னையில் பஞ்சத்துக்கான நிவாரண வேலைக் கூலியாக 6 பைசாவும் அரை கிலோ தானியமும் தந்து பக்கிங்காம் கால்வாய் கட்டப்பட்டது.

முதல் உலகப் போரின்போது ஜெர்மன் கப்பல் எம்டன் சென்னையின் மீது குண்டுவீசிவிட்டு மறைந்தது. 1942-ல் இரண்டாம் உலகப் போரின் பீதி சென்னை மக்களை வெளியேற்றியது.1943-ல் ஜப்பான் விமானங்கள் நகரில் குண்டுகளை வீசின.

சென்னை கோட்டையைச் சுற்றி உருவாகியிருந்த கருப்பர் நகரம், பிரான்ஸ் படையெடுப்பின்போது அழிக்கப்பட்டது. கருப்பர் நகரம் இருந்த இடத்தைச் சுற்றி 1708-ல் ஒரு கோட்டை கட்டப்பட்டது. 1911-ல் அந்தக் கோட்டைக்கு ஐந்தாம் ஜார்ஜ் மன்னனின் பெயர் சூட்டப்பட்டது.

சென்னை சாலையின் முதல் காரை பாரி அண்ட் கோவின் இயக்குநர் 1894-ல் ஓட்டினார். அதற்கு அடுத்த ஆண்டு ஆரம்பமான டிராம் சர்வீஸ் 1953-ம் ஆண்டு 'டாட்டா' காட்டியது. 1931-ல் முதல் மின்சார ரயில் சென்னை கடற்கரை முதல் தாம்பரம் வரை ஓடியது.

1901-ல் சென்னையின் மக்கள்தொகை: 5,40,000. பரப்பளவு: 70 சதுர கிலோமீட்டர். 1914-ல்தான் சென்னையில் கழிவுநீர் அமைப்புகளும் தெருவிளக்குகளும் குடிநீர் அமைப்புகளும் உருவாகின. ஆங்கிலேயர்களின் காலத்திய அந்த அமைப்புகளில் ஏற்படும் அடைப்புகளை எடுக்கத்தான் நவீன இயந்திரங்களும் சில நேரங்களில் பாதாளச் சாக்கடைக்குள் இறங்கி மனிதர்களும் போராடிக்கொண்டிருக்கிறார்கள்.

சென்னையில், 1917-ல் முதல் விமானம் பறந்தது. 1923-ல் 80 சதுர கிலோ மீட்டராக வளர்ந்தது. 1925-ல் பேருந்து போக்குவரத்து தொடங்கியது. ரிப்பன் மாளிகையிலிருந்து வானொலி ஒலிபரப்பு 1930-ல் தொடங்கியது.

1946-ல் சைதாப்பேட்டை நகராட்சி உட்பட வேளச்சேரி முதல் அயனாவரம் வரை பல பகுதிகள் சென்னையுடன் இணைந்தன. 1947-ல் மதராஸ் மாகாணத்தின் தலைநகராக மெட்ராஸ் எனும் சென்னை தேர்வானது. 1950-ல் 129 சதுர கிலோ மீட்டராக சென்னை விரிந்தது. 1969-ல் மெட்ராஸ் மாகாணம் என்பது தமிழ்நாடு என்று பெயர் மாற்றப்பட்டது. 1996-ல் மெட்ராஸ் மாநகரம் சென்னை என பெயர் மாற்றப்பட்டது. 2011-ல் 9 நகரங்கள், 8 பேரூராட்சிகள், 25 பஞ்சாயத்துகள் இணைக்கப்பட்டு 426 சதுர கிலோ மீட்டர் பரப்பளவுள்ள இன்றைய பெருநகரமாக சென்னை விரிவடைந்துள்ளது.

 

http://tamil.thehindu.com/opinion/columns/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-375-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/article6327962.ece?homepage=true&theme=true

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.