Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சம்பந்தன், சுமந்திரன், சுரேஷ் சென்னைக்குத் திடீர் பயணம்! - ஏனையோர் கொழும்பு திரும்பினர்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
 
சம்பந்தன், சுமந்திரன், சுரேஷ் சென்னைக்குத் திடீர் பயணம்! - ஏனையோர் கொழும்பு திரும்பினர். 
[Monday 2014-08-25 13:00]
sampanthan-delhi-media-300-news.jpg

புதுடில்லியில் நேற்று முன்தினம் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேச்சு நடத்திய இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுவினர் நேற்று அங்கிருந்து திடீரென தமிழகத்திற்குப் பயணமாகியுள்ளனர். சம்பந்தன், சுமந்திரன், சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆகியோரே தமிழகத்துக்குச் சென்றுள்ளனர். ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, செல்வம் அடைக்கலநாதன், பொன். செல்வராசா ஆகியோர் நேற்றிரவு நாடு திரும்பினர்.

தமிழக விஜயத்தின்போது அ.தி.மு.க. உட்பட இலங்கைத் தமிழர்களுக்காகக் குரல் கொடுக்கும் தமிழகக் கட்சிகளின் முக்கியஸ்தர்களைச் சந்தித்துக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் கலந்துரையாடுவர் எனத் தெரிவிக்கப்படுகிறது. இதன்போது தமிழக முதல்வர் ஜெயலலிதாவை அவர்கள் சந்திப்பர் என எதிர்பார்க்கப்படுகின்ற போதிலும் இது தொடர்பில் உத்தியோகபூர்வ தகவல் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.

http://www.seithy.com/breifNews.php?newsID=115580&category=TamilNews&language=tamil

  • Replies 60
  • Views 3.4k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

மோடியிடம் எதிர்பார்த்தது  கிடைக்கவில்லை போலும்

எங்க   சுற்றினாலும் இங்கதான் வந்தாகணும். :(

  • கருத்துக்கள உறவுகள்

புலிச்சாயம் உள்ளவர்களை ஜெ சந்திக்க விரும்பவில்லையாம். அதனால்தான் மாவை அவுட்டாம்.

மண்டையன் குழு சுரேஸ் பற்றி ஜெக்கு வடிவா தெரியாது போல.

ஜெக்கு எப்பவும் நல்ல ஆங்கிலம் பேசுபவரை பிடிக்கும். அதுதான் BJPமுந்தி ஜஸ்வந்த் சிங்கையும் கம்யூக்கள் காரத்தையும் அனுப்பிறவை.

இந்தவகையில் சம்பந்தன் சுமந்திரன் சரியான தெரிவு. சுரேஸ் அவர்ர கர்ர்ர்ர் புர்ர்ர் இங்கிலிச வச்சு காரியத கெடுக்காட்டிச் சரி.

  • கருத்துக்கள உறவுகள்

jaya-seeman.jpg

இந்தப் புலியையே சந்திக்கிற போது..???!

:lol: சாயம் அடிக்கிறதில சில பேர் கைதேர்ந்த ஆக்கள் போல..! :D

seeman_vaiko.jpg

சில பேருக்கு இந்தப் படங்கள்.. கசப்பாத்தான் இருக்கு.. இருந்தாலும்.. படங்களை பார்த்துக்கோங்க. :lol:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

தற்போதையசூழலில் இவர்கள் முதலமைச்சரையும், மற்ற தமிழக அரசியல் தலைவர்கள் முடிந்தவரை அனைவரையும் சந்தித்து ஒரு 'ஹாய்..!' சொல்லிவிட்டு நாடு திரும்புவது நல்லது. பின்னர் 'ஈகோ'வினால், என்னை வந்து பார்க்கவில்லை என்ற சொல்லுக்கு இடமிருக்காது பாருங்கள்... :)

தமிழக தலைகளின் குணமும் மணமும் எதிர்பார்ப்பும் அப்படி இருக்கு! :lol:

  • கருத்துக்கள உறவுகள்

ஜெ எப்பவும் தெளிவா வைகோவை பயன்படுத்துவா ஆனால் சமயம் வரும் போது கழட்டி விடுவா. புலி ஆதரவாளர் தமிழ்நாட்டில் பிடி கொள்ள கூடாது என்பதில் அவ்வளவு அக்கறை அவக்கு.

சீமான் - ஜெயின் agent provocateur, தமிழில் சொன்னால் ஒற்றன். புலி ஆதரவு/ தமிழ் தேசிய ஆதரவு முகாம் திமுக பக்கம் சாயாமல் பார்த்துகொள்ளுவதே ஜெ சீமானுக்கு கொடுத்திருக்கும் பணி. இடைக்கிடை அரசியும் ஒற்றனும் அணைத்துக் கொள்வார்கள் அடித்து கொள்வார்கள். இதெல்லாம் சாணக்கியன் அர்த்தசாத்திரத்தில் எப்பவோ சொல்லிவிட்டான்.

ஆனால் புலிகள் ஒரு தீய சக்தி என்பது ஜெவின் தொடர் நிலைப்பாடு.

ஜெயின் ராஜதந்த்ஹிரத்தை தமிழ்நெற் வகையறாக்கள் புரிந்துகொள்ள இன்னும் 100 ஆண்டுகள் எடுக்கும்.

சப்பா.. முடியல்ல. ஜெயின்.. ராஜதந்திர வழிகாட்டி.. வகுப்பெடுக்கிறார்.. எல்லோரும் படிச்சுக்குங்க.

சீமான்.. ஒன்றைத் தெளிவாகத்தான் சொல்லி செயற்படுகிறார். ஜெ.. ஈழத்தமிழ் மக்களுக்கு நீதிகிடைக்க செயற்படாத விடத்து.. திமுக வை எதிர்த்தது போல.. அதிமுகவையும் எதிர்க்க நேரிடும் என்று.

வை.கோ கூட்டணி வைச்சிருந்தாலும்.. கொள்கைக்கு முரணாக போய்க் கொண்டிருந்தால்.. கூட இருக்கமாட்டார்.

கொள்கையே இல்லாத நீங்கள் எல்லாம்.. சீமானுக்கு.. வை.கோவுக்கு வகுப்பெடுப்பது தான் சகிக்க முடியாத உலக அசிங்கமாக உள்ளது. இதுக்கு ராஜீய புத்திமதின்னு.. ஒரு சுய விளக்கம் வேற. அதுக்கு தமிழ்நெட்டில் வேற குறைபிடிப்பு.

தமிழ்நெட்.. உங்களைப் போல காலத்துக்கு நேரத்துக்கு ஏற்ப.. ஜெ.. சீமான்.. வை.கோ.. கருணாநிதி.. மகிந்த.. துதிபாடுவதில்லை. அது தெளிவாக தமிழ் மக்களின் விடிவை மட்டும் முன்னிறுத்துகிறது. அதனை நோக்கி ஆதரவாக செயற்படுபவர்களின் நிலையை வரவேற்கிறது. எதிரானவர்களின் நிலையை விளக்குகிறது. முதலில் அதனை விளக்கிக்குங்க. இன்று தமிழ் இளையோர் அமைப்புக்கள்.. தமிழ்நெட்டை தான் அதிகம்.. நடுநிலை ஊடகமாக உள்வாங்கிச் செயற்படுகிறார்கள். உலக ஊடகங்களும் அதனையே மேற்கோள் காட்டி எழுதுகின்றன. :icon_idea::)

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் நெட் நடுநிலை ஊடகம் - எல்லோரும் ஜோரா ஒருதரம் கைதட்டுங்க.

மேலே நீங்கள் சொன்னவற்றில் இது ஒன்றுதான் ரசிக்கும் படி இருந்தது.

  • கருத்துக்கள உறவுகள்

புலிச்சாயம் உள்ளவர்களை ஜெ சந்திக்க விரும்பவில்லையாம். அதனால்தான் மாவை அவுட்டாம்.

மண்டையன் குழு சுரேஸ் பற்றி ஜெக்கு வடிவா தெரியாது போல.

ஜெக்கு எப்பவும் நல்ல ஆங்கிலம் பேசுபவரை பிடிக்கும். அதுதான் BJPமுந்தி ஜஸ்வந்த் சிங்கையும் கம்யூக்கள் காரத்தையும் அனுப்பிறவை.

இந்தவகையில் சம்பந்தன் சுமந்திரன் சரியான தெரிவு. சுரேஸ் அவர்ர கர்ர்ர்ர் புர்ர்ர் இங்கிலிச வச்சு காரியத கெடுக்காட்டிச் சரி.

இது  உங்களுக்கு நீங்களே  எழுதிக்கொண்டதா??

சகோதரி ரதி சொன்னது மிகச்சரி. எந்த திரியை எடுத்தாலும் புலிகள் காலத்தில் அப்படி, புலிகள் காலத்தில் இப்படி என்று கவுண்டர் ரேஞ்சுக்கு, எதோ புலிகள் ராமராஜ்யம் நடத்திய மாரி பீலா வுடுறது, பதிலுக்கு நாங்கள் புலிகளின் கொடுங்கோன்மையை விமர்சித்தால் ஐயோ புலிக்காய்ச்சல் என்று புலம்புவது.

பலருக்கு இங்கு இதுதான் வேலையே.

நேரவிரயம் என்று தெரிஞ்சா கிளம்பி போறதுதானே, போய் தமிழ்நெட்ல லூசுதனமாய் ஒரு கட்டுரை எழுதலாம்.    

:( :(  :(  :(

  • கருத்துக்கள உறவுகள்

வரவேற்கிறோம்.முன்பே செய்திருக்க வேண்டிய விடயம்.முக்கியமான ஆளை கழட்டி விட்டிட்டு சொதப்பல் ஆட்கள் போகினம்.தமிழ்த் தேசிய அரசியலில் நீண்ட காலம் இருந்த மாவையை விட்டுட்டு கத்துக்குட்டி சொதப்பல் சுமத்திரன் போறது நல்லதாகப்படவில்லை.அண்ணே கோசான் டெல்லிக்கே போனவர்களுக்கு தமிழ்பேசும் தமிழ்நாட்டுக்குப் போய் சமாளிக்க ஏலாதோ??????

  • கருத்துக்கள உறவுகள்

புலவர்த் தம்பி,

மாவையிண்ட தமிழ் தேசிய அரசியல் எல்லாத்தையும் டெல்கியிலிய கடனே எண்டு கண்டுக்காம விடுவீனம்.

அம்மா அப்படியில்லை. தீய சக்திகளை அடியோடு வெறுக்கிறவர். இதில் எந்த சமரசுத்துக்கும் இடமில்லை.

ஆகவே மாவை -அவுட்.

சுமந்த்ஹிரன் ஆங்கில அறிவு மட்டுமில்லை, என்றும் தீவிரவாதத்தை ஆதரிக்காத, பிரிவினைவாதம் பேசி இளஞர்களை உசுப்பேத்தாத ஒருவர்.

மிக முக்கியமாக 2009 ற்க்கு பின்னான, புலிகளால் நியமிக்கப் படாத, புலிக்கறை தீண்டாத ஒருவர். நிச்சயமாக எம்சார்பில் டெல்லியுடனும், ஜெயுடனும் பேச மிக தகுதியானவர் இவரே.

கோசான் மிக தெளிவான யதார்த்தமான அரசியல் கதைப்பது சந்தோசமாக இருக்கு .

கனவு நடிப்பு பொய் வேஷம் இப்படி வாழ்வதே பலருக்கு அரசியல் ஆகிவிட்டது  :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

புலிச்சாயம் உள்ளவர்களை ஜெ சந்திக்க விரும்பவில்லையாம். அதனால்தான் மாவை அவுட்டாம்.

மண்டையன் குழு சுரேஸ் பற்றி ஜெக்கு வடிவா தெரியாது போல.

ஜெக்கு எப்பவும் நல்ல ஆங்கிலம் பேசுபவரை பிடிக்கும். அதுதான் BJPமுந்தி ஜஸ்வந்த் சிங்கையும் கம்யூக்கள் காரத்தையும் அனுப்பிறவை.

இந்தவகையில் சம்பந்தன் சுமந்திரன் சரியான தெரிவு. சுரேஸ் அவர்ர கர்ர்ர்ர் புர்ர்ர் இங்கிலிச வச்சு காரியத கெடுக்காட்டிச் சரி.

கோசான்... நீங்கள், சம்பந்தன் ஆதரவாளர் என்று.... எமக்கு எப்பவோ தெரியும்.

ஆனால்... சம்பந்தனை காப்பாற்ற, நீங்கள் நடிக்கும் நாடகம் வெட்கக் கேடானது.

முன்பு... கருணாநிதி ஆட்சியிலும், இப்படியான மத்திய அரசுடன் நடந்த சந்திப்பில்....

சம்பந்தனுடன் சென்ற கஜேந்திரகுமார், பத்மினி சிதம்பரநாதன், கஜேந்திரன் ஆகியோரை சம்பந்தன் தவிர்த்து விட்டு சென்றதை...... அப்போதைய, செய்திகளில் வந்ததை நாம் அறிவோம்.

சம்பந்தனில்... உள்ள,  கெட்ட குணத்தை மறைக்க... நீங்கள் நாடகம் ஆட வேண்டாம்.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

சிறீ எனக்கு எத்தனை எசமான்? மகிந்த, கோத்தா, றோ, இப்ப புதிதா சம்பந்தர்.

இதில் மறைக்க என்ன கிடக்கு, பத்மினி, குதிரை கஜன் போன்ற புலிபினாமிகளை சம்பந்தர் துரத்தியடித்தது வரவேற்கவேண்டிய செயல். இல்லாட்டி இப்பவும் மோடியை சந்தித்திருக்க முடியாது.

பொன்னர் மொக்குத்தனமாய் இவையளோட போய்ச்சீரழியிரார்.

சிவாசிலிங்கத்தை மீள எடுத்தது சம்பந்தர் விட்ட பெரும் பிழை.

விக்கி சுமந்த்ஹிரனை கொண்டுவந்த்ஹது - நல்ல விசயம்.

2009 ற்க்கு பின்னான சூழலில் தமிழ் தலைமை ஒரு புலி-நீக்கத்துக்கு (de-LTTEfication) உள்ளாகியே தீரவேண்டியது காலக்கட்டாயம்.

இதை சரிவர செய்யும் யார்க்கும் என் ஆதரவுண்டு.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்

deLTTEfication இங்கு சிலரின் கனவு. தமிழ் மக்கள் தான் புலிகள். அது 1980 களின் ஆரம்பத்தில் அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த ரொனாட் ரேகன்.. ஜே ஆருக்கு போதித்தது போல..  ஈழத்தில் தமிழ் மக்களை பூண்டோடு ஒழித்தாலும்.. எனி சாத்தியமில்லை. ஏனெனில் ரோகன்.. அன்று புரட்சிகர தமிழர்களை இலங்கையில் தான் கண்டார். இன்று உலகம் பூராவும் இருக்கான்.

இந்த கோச்சான்.. கூச்சான்.. எல்லாம் மரத்துக்கு மரம் தாவலாமே தவிர.. நினைப்பது நடக்காது. புலிகள் போதித்த தமிழ் தேசியம்.. மற்றும் போர்க்குற்றம்.. தமிழீழம்.. சுயநிர்ணயம்.. இனப்படுகொலை.. இவற்றை உச்சரிக்க தவறினாலே.. சம்பந்தன் வகையறாக்கள்.. தேசிய பட்டியலை கட்டிக்கிட்டால்.. தான் தேறலாம்..! இன்றேல்... ஆனந்தசங்கரியர் போல.. ஒதுக்கப்பட்டு கடிதம் எழுதி.. புலம்ப வேண்டியான். :D:icon_idea: :icon_idea: :icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

"Nothing can stop an idea, that's time has come". DeLTTEfication என்பது நிஜம், களயதார்த்தம்.

சில புலப்பினாமிகள் தங்கள் வியாபாரம் படுத்துவிடும் என்ற பயத்தில் புலி புலி என்று கத்தலாம். ஆனால் ஊரில் pirabaharan and the LTTE are history. எல்லாளன் பண்டாரவன்னியன் போல் ஒரு வரலாறு, முடிந்து போன கதை, அவ்வளவே.

மக்கள் தனிநாட்டுக் கோரிக்கையை தலையைசுத்தி எறிந்துவிட்டார்கள் என்பதற்கு குதிரை கஜன் கும்பலுக்கு தேர்தலில், கிடச்ச சாணி அடியே சாட்சி.

ஈபிடிபி அளவுக்கு கூட பிரபாகரனின் கொள்கைக்கு இப்போ ஆதரவில்லை என்பதுதான் தேர்தல் முடிவு சொல்லும் பாடம்.

  • கருத்துக்கள உறவுகள்

சிறீ எனக்கு எத்தனை எசமான்? மகிந்த, கோத்தா, றோ, இப்ப புதிதா சம்பந்தர்.

இதில் மறைக்க என்ன கிடக்கு, பத்மினி, குதிரை கஜன் போன்ற புலிபினாமிகளை சம்பந்தர் துரத்தியடித்தது வரவேற்கவேண்டிய செயல். இல்லாட்டி இப்பவும் மோடியை சந்தித்திருக்க முடியாது.

பொன்னர் மொக்குத்தனமாய் இவையளோட போய்ச்சீரழியிரார்.

சிவாசிலிங்கத்தை மீள எடுத்தது சம்பந்தர் விட்ட பெரும் பிழை.

விக்கி சுமந்த்ஹிரனை கொண்டுவந்த்ஹது - நல்ல விசயம்.

2009 ற்க்கு பின்னான சூழலில் தமிழ் தலைமை ஒரு புலி-நீக்கத்துக்கு (de-LTTEfication) உள்ளாகியே தீரவேண்டியது காலக்கட்டாயம்.

இதை சரிவர செய்யும் யார்க்கும் என் ஆதரவுண்டு.

கோசான்... நீங்கள் மேற் கூறிய எந்த விடயத்திலும், எனக்கு உடன்பாடு இல்லை.

சம்பந்தன் தமிழ் தேசியக் கூட்டமைப்பில், தலைமை வகிப்பதும் சுத்த, அபத்தம்.

இவர் தலைமையில்... உள்ள கூட்டமைப்புக்கு,

தமிழ் மக்கள் வாக்கு போட்டு வெல்ல வைப்பது,.... அடுத்த தெரிவு இல்லை என்பதால் தான்.

"ஆலை... இல்லாத ஊருக்கு, இலுப்பம் பூ சர்க்கரை." போன்றதே....

கூட்டமைப்பின் வெற்றி என்பதை, நீங்கள் புரியாதது.... உங்கள் முட்டாள் தனத்தையே... காட்டுகின்றது.  :)

  • கருத்துக்கள உறவுகள்

மக்கள் ஏன் தலைவர் தேர்ந்து பொறுக்கிய குதிரைகஜன், பத்மினி கூட்டத்துக்கு வாக்குப்போடவில்லை? அவை இலுப்பைபூவில்லை, சுத்த சக்கரைதானே?

  • கருத்துக்கள உறவுகள்

"Nothing can stop an idea, that's time has come". DeLTTEfication என்பது நிஜம், களயதார்த்தம்.

சில புலப்பினாமிகள் தங்கள் வியாபாரம் படுத்துவிடும் என்ற பயத்தில் புலி புலி என்று கத்தலாம். ஆனால் ஊரில் pirabaharan and the LTTE are history. எல்லாளன் பண்டாரவன்னியன் போல் ஒரு வரலாறு, முடிந்து போன கதை, அவ்வளவே.

மக்கள் தனிநாட்டுக் கோரிக்கையை தலையைசுத்தி எறிந்துவிட்டார்கள் என்பதற்கு குதிரை கஜன் கும்பலுக்கு தேர்தலில், கிடச்ச சாணி அடியே சாட்சி.

ஈபிடிபி அளவுக்கு கூட பிரபாகரனின் கொள்கைக்கு இப்போ ஆதரவில்லை என்பதுதான் தேர்தல் முடிவு சொல்லும் பாடம்.

தங்கள் கனவு. இதனை இப்படியே வளர்த்துக் கொண்டு விட்டத்தில் படம் வரைந்து வாழ்ந்து கொள்ளுங்கள். நிம்மதியான சாவாவது அமையும்.

எமது மக்களும் போராளிகளும் வேறுவேறல்ல. எமது மக்களின் இதயங்களில் இருந்து அவர்களின் பிள்ளைகளை எந்தக் கொம்பனாலும் அசைக்க முடியாது.

வாழ்நாளில் அதிகம் கொழும்பில் கிடந்த விக்னேஸ்வரன் கூட.. தேர்தல் மேடை என்று ஏறியதும் உச்சரித்த.. முதல் சொல்.. பிரபாகரன். அவர் எமக்கு மன்னர் போல.

ஒட்டுக்குழு நாசகாரிகளான.. ஈபிடிபிக்கு வக்காளத்து வாங்கும் தாங்கள்.. ஈபிடிபி மாகாண சபை தேர்தலில்.. பெற்ற வாக்குகள்.. என்பது.. எங்கும்.. பெரும்பான்மையை நிரூபிக்க தகுதியற்றிருந்ததை மறைப்பது நல்லதல்ல. தீவக் கோட்டையும் மீள் குடியேறிய மக்களின் புரட்சியால்.. சரிந்து போனது..! :lol::D 

இன்று ஈபிடிபி சிதறி சின்னாபின்னமாகி மண்டை உடைப்புப் போரில் ஈடுபட்டுள்ளது. அதனையும் தாங்கள் கண்டு களிக்கக் கடவ. :icon_idea::lol:

"Nothing can stop an idea, that's time has come". DeLTTEfication என்பது நிஜம், களயதார்த்தம்.

சில புலப்பினாமிகள் தங்கள் வியாபாரம் படுத்துவிடும் என்ற பயத்தில் புலி புலி என்று கத்தலாம். ஆனால் ஊரில் pirabaharan and the LTTE are history. எல்லாளன் பண்டாரவன்னியன் போல் ஒரு வரலாறு, முடிந்து போன கதை, அவ்வளவே.

மக்கள் தனிநாட்டுக் கோரிக்கையை தலையைசுத்தி எறிந்துவிட்டார்கள் என்பதற்கு குதிரை கஜன் கும்பலுக்கு தேர்தலில், கிடச்ச சாணி அடியே சாட்சி.

ஈபிடிபி அளவுக்கு கூட பிரபாகரனின் கொள்கைக்கு இப்போ ஆதரவில்லை என்பதுதான் தேர்தல் முடிவு சொல்லும் பாடம்.

நேற்று இரவு லண்டனில் இருந்து வந்த நண்பரை  சந்தித்தேன் .வன்னியில் ஒரு வேலைத்திட்டம் போட்டு வீடுகள் ,கிணறுகள் கட்டி கொடுக்கின்றார் .மேலே நீங்கள் சொன்ன அதே கருத்தை தான் அப்படியே சொன்னார் .

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் நண்பர் அல்லவா. வேற என்னத்தைச் சொல்வார்.

அண்மையில் ஒரு நண்பர் ஊரில போய்.. முல்லைத்தீவில்.. உள்ள உறவுகளை சந்தித்து வந்தார்.

புகலிடத்தில் உள்ள சிலர் தானாம்.. ஊர் போகனும் என்று புலிகளை பற்றி கதைக்க பயப்பிடினம். அங்க மக்கள் தங்கள் பிள்ளைகளைப் பற்றி நினைவு கூறாத தருணமே இல்லையாம். அவங்கள் இருந்திருந்தால்.. இந்தச் சிங்கள நாய்கள் எங்கள் வீட்டு வாசலில் பெட்டை பிடிக்க.. சிகரட்டோட நிக்குங்களோ என்று கேட்குதாம் சனம்..!

பன்றிக்கூட்டத்தோடு பன்றி சேரும். புலிக்கூட்டத்தோடு புலி சேரும். பன்றிக் கூட்டத்தோடு சேரும் பன்றி என்னதால் குளித்து எழும்பினாலும்.. கூட்டத்தின் துர்நாற்றம் வீசவே செய்யும்..! புலிகள் எப்பவும் சுத்தமானவை. :lol::D

  • கருத்துக்கள உறவுகள்

நான் ஈபிடிபி ஆதரவாளரில்லை. ஆனால் அவர்களுக்கு இருக்கும் ஆதரவு கூட பிரபாகரின் வழிநடக்கும் ததேமமு விற்கு இல்லை என்பதே களயதர்ர்த்தம்.

  • கருத்துக்கள உறவுகள்

மக்கள் ஏன் தலைவர் தேர்ந்து பொறுக்கிய குதிரைகஜன், பத்மினி கூட்டத்துக்கு வாக்குப்போடவில்லை? அவை இலுப்பைபூவில்லை, சுத்த சக்கரைதானே?

manipay_01.jpg

manipay_02.jpg

manipay_03.jpg

தேர்தல் நேரம், நீங்கள் செய்த..... அச்சமூட்டும், இந்த வேலைகளை மறந்து விட்டீர்களா?

நீங்கள் மறந்தாலும், நாம் மறக்கவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

அப்படி மக்கள் பயந்திருந்தால் முழு சீட்டும் அரசு கட்சிக்கு போய் இப்போ தவராசா சி எம் ஆகியிருக்கோணும்?

அதெப்படி பயந்த மக்கள் கூட்டமைப்புக்கும் மட்டும் செம வெற்றியை கொடுத்தார்கள்?

உங்கள் லாஜிக் இடிக்குது. மறுபடியும் டிரை பண்ணுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

நான் ஈபிடிபி ஆதரவாளரில்லை. ஆனால் அவர்களுக்கு இருக்கும் ஆதரவு கூட பிரபாகரின் வழிநடக்கும் ததேமமு விற்கு இல்லை என்பதே களயதர்ர்த்தம்.

ஈபிடிபி ஒட்டுக்குழு நாசகாரிகள்.. 1990 முதல் சிறீலங்கா சிங்கள பேரினவாத அரசின் பணப்பலத்தில்.. சிங்கள இராணுவ சேவைகளின் கூலிச் சேவையோடு தமிழின அழிப்பு...ஆயுத அரசியல் செய்து வருகிறார்கள்.

அவர்களை.. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஒரு அங்கமாக விளங்கி.. சம்பந்தனின் சோரம்போதல் அரசியலை கண்டித்து.. கடந்த 4 ஆண்டுகளாக பிரிந்து இயங்கும்.. த தே ம மு தீவிர தமிழ் தேசிய எதிர்ப்பு அரசியல் செய்யவில்லை.

தமிழ் தேசியக் கூட்டமைப்போடு இணங்கித்தான் பல நிகழ்வுகளை செய்து வருகிறார்கள். ஆர்ப்பாட்டங்கள் என்றால் என்ன வெகுசனத்தொடர்பு என்றால் என்ன. அவர்கள் தங்கள் எதிர்ப்பை காண்பிப்பது சம்பந்தன் வகையறாக்களின் தமிழ் தேசிய விரோத.. தமிழ் மக்கள் விரோத நிலைப்பாடுகளுக்கே அன்றி.. எதிர்ப்பு அரசியலை மேற்கொள்வது அல்ல நிலைப்பாடு.

மேலும்.. அவர்கள் பல தேர்தல்களில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வெற்றியை பாதிக்காத வகையில்.. முடிவுகளை எடுத்துச் செயற்பட்டிருக்கிறார்கள்.

கடந்த சிங்களப் பாராளுமன்றத் தேர்தலோடு தோற்றம் பெற்று உடனடியாகவே தேர்தலை சந்தித்த போதும்.. யாழ்ப்பாணத்திலும் திருமலையிலும் மட்டும் சுமார் 7500 வாக்குகளைப் பெற்றனர்.

அதேவேளை டக்கிளஸ் தேவானந்தா பிரேமதாச காலத்தில்.. 1991 இல் வெறும் பத்துகளில் பெற்ற வாக்குகளை வைத்து எம் பியும் ஆகி அமைச்சரும் ஆனவர். அவர்களை எல்லாம் யார் யாரோடு ஒப்பிடுவது என்ற விவஸ்தையே ஒட்டுக்குழுக்களுக்கு வக்காளத்து வாங்கும் அறிவாளிகளுக்கு இல்லாமல் போய் விட்டது. :icon_idea:

Edited by nedukkalapoovan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.