Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கரி ஆனந்தசங்கரியை அப்புறப்படுத்த வெளிக்கிட்டவர்கள் தமிழ்மக்களால் அப்புறப்படுத்தப் பட்டார்கள்! நக்கீரன்

Featured Replies

கரி ஆனந்தசங்கரி பற்றி இல்லாததையும் பொல்லாததையும் சொல்லி – அவர்மீது வாரா வாரம் சேறு அடித்து வந்த உலகத்தமிழர் ஏட்டுக்கு – அதன் ஆசிரியருக்கு – ரூச் பார்க் மக்கள் பெரிய பட்டை நாமம் போட்டுள்ளார்கள். ஏதோ தன்னைப் பெரிய அரசியல் ஞானி போல நினைத்துக் கொண்டு “இனப்படுகொலையை ஏற்காதவரை தமிழ் மக்கள் ஆதரிப்பார்களா?” என்ற கேள்வி எழுப்பி ஆனந்தசங்கரி அவரது தந்தையாரி்ன் வார்ப்பு என்ற கருத்துப்பட இரண்டு பேரது புகைப் படங்களையும் முன்பக்கத்தில் சென்றவாரம் உலகத்தமிழர் ஏடு பிரசுரித்திருந்தது. உலகத்தமிழர் வரலாற்றில் இது ஒரு கரும்புள்ளி.

உலகத்தமிழரின் கேள்விக்குத் தெளிவாகவும் தீர்க்கமாகவும் உரக்கவும் தமிழ்வாக்காளர்கள் பதில் அளித்துள்ளார்கள். ரூச் பார்க் தொகுதிக்கு நடந்த நியமனத் தேர்தலில் மக்கள் 1,400 வாக்குகளை கரி ஆனந்தசங்கரிக்கு ஆதரவாகப் போட்டு மகத்தான வெற்றியை ஈட்டிக் கொடு்த்துள்ளார்கள். இதில் 95 விழுக்காடு வாக்குகள் தமிழர்களது வாக்குகள். அவருக்கு எதிராகப் போட்டிபோட்ட அஸ்வானிக்கு 600 வாக்குகள் மட்டும் கிடைத்தது. இதில் 98 விழுக்காடு வாக்குகள் அவரது இனத்தவர்களும் இந்தியர்களும் போட்ட வாக்குகள். எஞ்சிய 2 விழுக்காடு வாக்குகள் தமிழர்களது வாக்குகளாக இருக்கலாம்.

கரி ஆனந்தசங்கரியை பொதுவாழ்வில் இருந்து அப்புறப்படுத்துங்கள் என்ற முழக்கத்தோடு பல முகமூடிகளை அணிந்து கொண்டு புறப்பட்டவர்களை இன்று மக்கள் பொதுவாழ்வில் இருந்து அப்புறப்படுத்தி விட்டார்கள். உலகத்தமிழர் சேர்த்த சுமார் 300 லிபரல் உறுப்பினர்களில் அஸ்வானிக்கு இருபது தமிழர் கூட வாக்களிக்கவில்லை. அவருக்கு விழுந்த வாக்குகள் அவரது சமூகத்தைச் சார்ந்தவர்களும் ஏனை இந்திய சமூகத்தினரும் போட்ட வாக்குகள ஆகும். மாலை 5.00 மணி அளவிலேயே கரி ஆனந்தசங்கரிதான் வெல்வார் என்று அங்கு திரண்டிருந்த வெள்ளம் போல் தமிழர் கூட்டம் பறைசாற்றியது. Vote Gary என எழுதப்பட்ட நூற்றுக்கணக்கான ரி சேட் அணிந்த தொண்டர்கள் பம்பரமாகச் சுற்றித் திரிந்தார்கள். நூற்றுக்கணக்கான விளம்பர அட்டைகள் ஆங்காங்கே வைக்கப்பட்டிருந்தன.

தேர்தல் நடந்த இடத்தில் அஸ்வானிக்கு வாக்குச் சாவடி இருக்கும் அங்கே உலகத்தமிழர் கொண்டுவந்து இறக்கிய தமிழ்வாக்காளர்கள் அலை மோதுவார்கள் என எதிர்பார்த்தால் அங்கு சாவடியே இல்லை. உலகத்தமிழர் ஏட்டின் ஆசிரியர் யானைப்படை, குதிரைப்படை, தேர்ப்படை, காலால்படை புடைசூழ, தாரைgary-winning-team தப்பட்டை முழங்க வந்திறங்கியிருப்பார் என்று பார்த்தால் அருமையான இன்னொருவரோடு தனி மரமாக நின்று கொண்டிருந்தார். பார்க்கப் பரிதாபமாக இருந்தது. குடை நிழலிருந்து குஞ்சரம் ஊர்ந்தோர் நடை மெலிந்து அயலூர் நண்ணினும் நண்ணுவர் என்ற பழம் பாடல் நினைவுக்கு வந்தது. குஞ்சரம் என்றால் யானை. குடை நிழலில் இருந்து கொண்டு யானை மேல் அமர்ந்து பவனி வந்தோர் அவற்றை இழந்து கால் நடையாக அயலூருக்குச் செல்ல நேர்ந்தாலும் நேரலாம் என்பது பொருள்.

இதற்கு முற்றிலும் மாறாக கரி ஆனந்தசங்கரியின் வாக்குச் சாவடிப் பக்கம் தமிழ்மக்கள் கடல் அலையெனத் திரண்டிருந்தார்கள். இளையோர், முதியோர், தொண்டர்கள், ஆதரவாளர்கள், வாக்காளர் என நீக்கமற நிறைந்திருந்தார்கள். தொண்டர்கள் மட்டும் சுமார் 1000 பேர் நின்றிருந்தார்கasavaniள். திரும்பிய பக்கம் எல்லாம் நீக்கமற VOTE FOR GARY என்ற அட்டைகள், ரி சேட்டுக்கள் கண்ணில் பட்டுத் தெறித்தன. VOTE FOR ASHWANI என்ற அங்கியை அணிந்த ஒரு தமிழரையும் நான் காணவில்லை! பாவம் அந்த மனிதர். உலகத்தமிழரின் ஆதரவாளர்கள் சில நூறு வாக்குகளை ஆவது போடுவார்கள் என்று எதிர்பார்த்து ஏமாந்து போனார். அப்படி எதிர்பார்த்து உலகத்தமிழர் ஏட்டில் ஒரு முழுப்பக்க விளம்பரம் கூடக் கொடுத்திருந்தார்.

அடே எங்கப்பா! அவர்கள் ஆடிய ஆட்டம் என்ன? பாடிய பாட்டென்ன? ஓடிய ஓட்டம் என்ன? எழுதிய மொட்டைக் கடிதங்கள் என்ன? தமிழ் சமூக ஆர்வலர்கள், ரூச் பார்க் மக்கள், கரி ஆனந்தசங்கரிக்கு எதிரான கன்னை எனப் பல மொட்டைக் கடிதங்கள் வெளிவந்தன. பாவம் எல்லாமே வீண்! எல்லாமே பாழ்! அனைத்துமே கோவிந்தா! ஒரு தமிழன் தேர்தலுக்கு நிற்கும் போது அவருக்கு எதிராக இன்னொரு இனத்தைச் சார்ந்த ஒருவரை உலகத்தமிழர் ஆதரித்தால் மக்கள் ஒப்புக் கொள்வார்களா? ஏற்றுக் கொள்வார்களா? மக்கள் அப்படி என்ன மாங்காய் மடையர்களா உலகத்தமிழர் எதைச் சொன்னாலும் தலையாட்டுவதற்கு?

ஒரு காலம் இருந்தது, 90 விழுக்காடு மக்கள் ஒரே அணியில் தமிழ்த் தேசியத்தின் பக்கம் நின்றார்கள். அந்த நிலைமை இன்றில்லை. உலகத்தமிழர் எல்லோரையும் பகைத்துக் கொண்டுள்ளது. தொண்டர்களில் பாதிக்கு மேல் அவர்களோடு இல்லை. இருக்கிற தொண்டர்களையும் மொட்டைக் கடிதங்கள் போடப் பயன்படுத்துகிறார்கள். அதுவும் நள்ளிரவில் ஊர் உறங்கிய பின்னர். அதே சமயம் தங்களது பிள்ளைகளைப் பொத்தி பொத்தி வளர்க்கிறார்கள். கண்டனக் கூட்டம், ஆர்ப்பாட்டம் எதிலும் ஈடுபட விட மாட்டார்கள்.

2010 ஆம் ஆண்டு இலங்கையில் நடந்த பொதுத்தேர்தலில் திருமலையில் சம்பந்தர், யாழ்ப்பாணத்தில் மாவை, சுரேஷ் ஆகியோரைத் தோற்கடிக்கப்படுவதற்கு என்றே ஒரு கட்சி தொடங்கப்பட்டது. அதன் பெயர் தமிழ் தேசிய மக்கள் முன்னணி. கைவசம் பொன்னம்பலம் குடும்பத்குக்குச் சொந்தமான அகில இலங்கை காங்கிரஸ் கட்சியால் பலனில்லை – அதற்கு மக்கள் வாக்களிக்க மாட்டார்கள் என நன்கு அறிந்து கொண்டதால் இந்த ததேமமு உருவாக்கப்பட்டது. அதற்குப் புலம்பெயர் தமிழ் அமைப்புக்களின் தூண்டுதலும் பக்கபலமும் இருந்தது. இன்னும் சொல்லப் போனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை ஓரங்கட்டிவிட்டு இந்த அமைப்புக்கள் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை தமிழ்மக்களின் தலைவராக முடிசூட்ட திட்டமிட்டன என்று கூடச் சொல்லலாம். அவருக்குப் பரிவட்டம் கட்டி, காளாஞ்சி கொடுத்து பப்பாளி மரத்தில் ஏற்றிவிட்டன. அரசியலுக்குப் புதியவரான கஜேந்திரகுமார் அந்தவலையில் சிக்குண்டார்.

dfdafasd கனடாவில் உலகத்தமிழர் ஏடும் சிரிஆர் வானொலியும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியை இரவு பகல் விழுந்து விழுந்து ஆதரித்தன. யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தையும் திருகோணமலைத் தேர்தல் மாவட்டத்தையும் முற்றாகப் பிடித்துவிட்டதாகப் படம் காட்டின. திருமலை ததேமமு வேட்பாளர்கள் சம்பந்தரின் கோட்டையான திருமலையைப் பிடித்துவிட்டதாகக் காற்றலையில் வந்து முழங்கினார்கள். தேர்தல் நிதியும் சேர்த்து அனுப்பப்பட்டது. முடிவு? அந்தக் கட்சி நாலாவது இடத்துக்குத் தள்ளப்பட்டது. குறைந்தபட்ச 5 விழுக்காடு வாக்குகள் கிடைக்காததால் முதல் சுற்றிலேயே வெளியேறியது. கஜேந்திரகுமார், கஜேந்திரன், பத்மினி எல்லோரும் கட்டுக்காசை இழந்தார்கள். ஆனால் அந்தத் தோல்வியில் இருந்து பாடம் எதையும் உலகத்தமிழர் வட்டாரம் படிக்கவில்லை. தொடர்ந்து மலட்டு அரசியல் – தேர்தல் புறக்கணிப்பு – நடத்தும் அந்தக் கட்சிக்கு ஆதரவு அளித்து வந்தது. ததேகூ இன் தலைவர் இரா சம்பந்தனை, எம்.ஏ. சுமந்திரனை துரோகிகள் எனத் தூற்றி எழுதும் கட்டுரைகளைத் தொடர்ந்து வெளியிட்டது. ஆனால் இரா சம்பந்தன், எம்.ஏ.சுமந்திரன் ரொறன்ரோ வரும் போது மட்டும் அவர்களைப் பின்வாசலால் சென்று சந்தித்துப் பேசுவார்கள். என்ன பேசினார்கள் என்று தெரியாது ஆனால் சந்தித்துப் பேசினார்கள்.

ஆடி அமாவாசை பார்த்து அருமையாக உலகத்தமிழர் ஆசிரியருக்கு ஞானம் வருவதும் உண்டு. “அண்ணை, எங்களிலும் பிழை இருக்கிறது நாங்களும் பிழைவிட்டு விட்டோம். நடந்ததை மறந்து விட்டுத் தொடர்ந்து எழுதுங்கள்” என்பார். அனால் அது கொஞ்ச நாட்களுக்குத்தான். வேதாளம் மறுபடியும் முருங்கை மரத்தில் ஏறிவிடும். உண்மை என்னவென்றால் இவர்கள் சுயமாகச் சிந்திப்பதில்லை. நோர்வே, இங்கிலாந்து போன்ற நாடுகளில் இன்னமும் தங்களைப் புலிகள் என்று சொல்லிக் கொள்வோர் இடும் கட்டளைப் படி நடக்கிறார்கள். இவர்களது பரமார்த்த குரு தமிழ்நெட் நடத்தும் ஜெயச்சந்திரன். சேரமான் என்ற புனைபெயரில் எழுதுபவர். தன்னை தேசத்தின் குரல் அன்டன் பாலசிங்கம் அவர்களின் வாரிசு என்று நினைப்பவர்.

சேரமான் தேர்தல்களை புறக்கணிக்க வேண்டும் – அது எந்தத் தேர்தல் என்றாலும் சரி – என்ற கருத்தியலின் தத்துவாசிரியர். மாகாணசபைத் தேர்தல் என்பது தமிழர்களது தாயகக் கனவை மறக்கடித்து மாகாணசபைக்குள் முடக்கிவிடும் சதிப்பின்னல் என மனதார நம்புபவர். வடக்கு மாகாண சபைத் தேர்தலில் பங்குபற்றுவதன் மூலம் தனது அரசியல் மரணத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவு செய்துள்ளது என்பதை ஸ்பெய்னில் பிரபல்யம் வாய்ந்த எருமைச் சண்டையோடு உவமித்தவர். “ததேமமு மாகாணசபைத் தேர்தலை புறக்கணித்த முடிவை உற்று நோக்கும் பொழுது அதில் ஆழப் பொதிந்திருக்கும் தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் சிந்தனையின் அர்த்தபரிமாணத்தை நாம் கண்டுகொள்ள முடியும். தலைவர் பிரபாகரன் அவர்களிடம் பூகோள அரசியல் பாடம் கற்ற மாணாக்கன் என்ற வகையில் வடக்கு மாகாண சபைத் தேர்தலை புறக்கணிப்பதற்கு கஜேந்திரகுமார் எடுத்துள்ள முடிவு தலைவரின் சிந்தனைக்கு செயல்வடிவம் கொடுக்கும் ஓர் நகர்வாக அமைந்துள்ளது எனக்கூறின் மிகையில்லை” என மார்தட்டியவர். (http://thisaikaddi.com/?p=22509)

கஜேந்திரகுமார் சொன்னது போல மாகாணசபையைத் ததேகூ புறக்கணித்திருந்தால் என்ன நடந்திருக்கும்? டக்லஸ் தேவானந்தா முதலமைச்சராக வந்திருப்பார். மகிந்த இராஜபக்சே அவரை வடக்கின் முடிசூடா மன்னன் எனப் பிரகடனப்படுத்தியிருப்பார். முன்னரே பசில் இராஜபக்சே அவரை யாழ்ப்பாணத்தின் இளவரசர் என்று பிரகடனப்படுத்தியிருந்தார். இப்படித்தான் 1994 இல் பொதுத் தேர்தலைப் புறக்கணித்ததால் 10,744 வாக்குகள் பெற்ற இபிடிபி கட்சிக்கு 9 இருக்கைகள் கிடைத்தன. இதுவே இபிடிபி கட்சியின் அரசியல் நுழைவுக்கு வழி சமைத்துக் கொடுத்தது. அத்திவாரமாக அமைந்தது.

பரமார்த்தகுருவின் இலட்சணங்கள் இவை என்றால் சீடர்கள் எப்படி உருப்படுவார்கள்?

இதே உலகத்தமிழர் வட்டாரம் 2013 ஆம் ஆண்டு கனடிய தமிழர் பேரவையின் ஆதரவில் fetnaநடந்த பெட்னா மாநாட்டைக் குழப்பினார்கள். யூலை 5 கரும்புலிகள் நினைவு நாள் என்றார்கள். பெட்னா யூலை 4, 5, இல் தான் கடந்த இரண்டு தசாப்பந்தங்களுக்கு மேலாக விழா நடத்தி வருகிறது. இருந்தும் அந்த விழா நடைபெறக் கூடாது, அதனை மக்கள் புறக்கணிக்க வேண்டும் என இரவு பகல் போராடினார்கள். ஆனால் மக்கள் புறக்கணிகச் சொன்னவர்களைப் புறக்கணித்தார்கள். விழா சிறப்பாக நடந்தேறியது.

இவற்றைப் பார்க்கும் போது உலகத்தமிழர் வட்டாரம் இந்தப் பிறப்பில் திருந்த மாட்டாது போல் தெரிகிறது. தாங்கள் பிடித்த முயலுக்கு மூன்று கால் எனத் தொடர்ந்து வாதாடுவார்கள் போல் தெரிகிறது.

மே 18, 2009 க்குப் பிறகு உலகத்தமிழர் வட்டாரம் என்ன செய்திருக்க வேண்டும்? விடுதலைப் போராட்டம் தோல்வியுற்றதற்கான காரண காரியங்களை மக்களுக்கு விளக்கி இருக்க வேண்டும். உலகத்தமிழர் ஏடு உட்பட இயக்கச் சொத்துக்களை ஒரு அறக்கட்டளையிடம் ஒப்படைத்திருக்க வேண்டும். போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் மீள்குடியிருப்புக்கு உதவி sothu-goldஇருக்க வேண்டும். கால் இழந்த, கை இழந்த போராளிகளுக்கு இயன்றமட்டும் உதவியிருக்க வேண்டும். ஒரு நூறு (மொத்தம் 89,000) கைம்பெண்களின் வாழ்வாதாரங்களை ஆவது மீள் கட்டியெழுப்ப உதவி செய்திருக்க வேண்டும். இதில் எதையுமே இவர்கள் செய்யவில்லை. கேட்டால் “நாங்கள் இப்போது மக்களிடம் நிதி சேகரிப்பதில்லை” எனக் கூறிக் கைவிரித்தார்கள்.

உலகத்தமிழர் வட்டாரம் எதிரியாகப் பார்ப்பது கரி ஆனந்தசங்கரியை அல்ல. அவர்கள் பார்ப்பது கனடிய தமிழர் பேரவை என்ற அமைப்பை. கனடா மக்கள் அவை கதபே யோடு ஒரு நிழல் யுத்தத்தை நடத்தி வருகிறது. இரண்டும் கனடிய மையநீரோட்ட அரசியல் களத்தில் செயல்படுகின்றன. இதனால் நான் பெரிதா நீ பெரிதா என்ற போட்டி. மற்றது கதபே குருவை மிஞ்சிய சீடனாகிவிட்டது என்ற அழுக்காறு. கதபே உலகத்தமிழர் இயக்கத்தால் உருவாக்கப்பட்டது. FACT அமைப்புத்தான் அதன் முன்னோடி. யாரோ சில லிபரல் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் சொன்னார்கள் என்று சொல்லி அதனை முடக்கிவிட்டுக் கனடிய தமிழர் பேரவை தொடக்கப்பட்டது. மிகுந்த ஆரவாரத்தோடு தொடக்கப்பட்ட கதபே எண்ணி எட்டுமாதங்களில் அதன் அலுவலகம் மூடப்பெற்றது. அதன் பின் அது மரணப்படுக்கையில் விழுந்தது. டன்ரன் துரைராசா அவர்கள் கனடா வந்த பின்னர்தான் அது உயிர் பெற்றது. இன்று பல நூறு உறுப்பினர்களையும் தொண்டர்களையும் குறைந்தது இரண்டு முழுநேர ஊழியர்களையும் பெரிய அலுவலகத்தையும் கொண்டு செயற்பட்டு வருகிறது.

மக்கள் அவையும் கனடிய தமிழர் பேரவையும் இரட்டைக் குழல் துப்பாக்கி போல் செயல்பட்டால் என்ன? தனித்தனியாக இருந்தாலும் எதிரியைத் தாக்கும் போதாவது ஒன்று சேர்ந்து தாக்கினால் என்ன? லெனின் ஒருமுறை சொன்னார் “தனித்தனியாக அணிவகுத்து வாருங்கள் ஆனால் (எதிரியை) ஒன்றாகத் தாக்குங்கள் (March separately but strike jointly).

கரி ஆனந்தசங்கரி இனப்படுகொலையை ஆதரிக்கவில்லை எனச் சொல்லி அவருக்கு எதிராக எந்த முகாந்திரமும் இல்லாமல் ஒரு கேவலமான பரப்புரை உலகத்தமிழர் ஏட்டினால் மேற்கொள்ளப்பட்டது அதனை மறுத்து அவ்வப்போது எழுதியுள்ளேன். தேர்தல் காலத்தில் இந்தப் புரளி மீண்டும் மீண்டும் கிளப்பப்பட்டது. கனடிய தமிழர் பேரவை சென்ற சனவரி 2014 இல் நடந்த பொங்கல் விழா தொடர்பாக கனடிய தமிழர்களின் “குரல்” என்ற நினைவு மலரை வெளியிட்டிருந்தது. அதில் கரி ஆனந்தசங்கரி ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். கட்டுரையின் தலைப்பு “March 2014: Time for the UN to take decisive action on Sri Lanka” (“மார்ச் 2014: அய்நா அவை சிறீலங்கா மீது தீர்க்கமான நடவடிக்கை எடுக்க வேண்டிய நேரம் இது” )என்பதே அந்தக் கட்டுரையின் தலைப்பு. சட்ட நுணுக்கத்தோடு எழுதிய அந்தக் கட்டுரையில் அவர் பின்வருமாறு எழுதியிருந்தார்:

இந்த ஆண்டு அய்.நா சபை சரியான வழியில் நடந்தால் – அது போர்க் குற்றங்கள், மானிடத்துக்கு எதிரான குற்றங்கள் மற்றும் இனப்படுகொலை பற்றி விசாரிக்க ஒரு பன்னாட்டு, சுயாதீனமான விசாரணைக் குழுவை அமைப்பதற்கான கதவைத் திறக்க வேண்டும். 2011 ஆம் ஆண்டு அய்.நா. வல்லுநர் குழு ஒரு முடிவுக்கு வந்தது. சிறீலங்காவில் போர்க் குற்றங்கள், மானிடத்துக்கு எதிரான குற்றங்கள் இடம்பெற்றிருக்கின்றன. ஆனால் அதற்கான சான்றுகள் நிரூபிக்கப்பட வேண்டும் எனக் கூறியது. பொதுமக்கள் கொல்லப்பட்டதற்கு அப்பால் அவர்கள் மீதான தாக்குதல்கள் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டன. தமிழருக்கு எதிராக அரசினால் மேற்கொள்ளப்படும் தொடர்ச்சியான இன அழிப்பு காரணமாக எதிர்காலம் இருண்டுபோய் உள்ளது. இத்தகைய தாக்குதல்கள் இலங்கைத் தீவிலுள்ள தமிழ்மக்களது அடிப்படை அடையாளங்களான மொழி மற்றும் பண்பாட்டுக்கு எதிரானவை. தமிழர்களின் பாரம்பரிய நிலத்தின் அடையாளத்தை அழிக்கும் முயற்சி அதிகரித்து வரும் இந்த நேரத்தில் பன்னாட்டு சமூகம் சிறீலங்காவில் வாழும் தமிழ் மக்களுக்கு எதிராக இனப்படுகொலை தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படுகிறதா என்பதை ஆராய முன்வரவேண்டும். இனப்படுகொலை ஆகட்டும், போர்க் குற்றங்கள் அல்லது மானிடத்துக்கு எதிரான குற்றங்கள் ஆகட்டும் அவை உண்மை அறியும் பணிப்பாணை கொடுக்கப்பட்ட ஒரு செவ்வையான பன்னாட்டு சுயாதீனமான விசாரணை குழு இல்லாமல் நிரூபிக்க முடியாது.

பன்னாட்டு சமூகம், குறிப்பாக அமெரிக்கா, அய்க்கிய இராச்சியம், அய்ரோப்பிய ஒன்றியம் போன்ற நாடுகளது ஆதரவை மனித உரிமை அமைப்புக்களும் அரசியல் கட்சிகளும் குறிப்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெற்றுக்கொண்டதால் அய்.நா. மனித உரிமை ஆணையரின் அலுவலகம் (Office of the High Commissioner for Human Rights (OHCHR) 3 வல்லுநர்கள் அடங்கிய பன்னாட்டு விசாரணைக் குழுவை நியமித்துள்ளது. இந்த ஆணைக் குழு தனது பணியை ஏற்கனவே தொடங்கிவிட்டது. இப்போது பந்து தமிழ்மக்கள் பக்கம் இருக்கிறது. இந்த விசாரணைக் குழுவின் முன் நிலத்தில் இருப்பவர்களும் புலத்தில் இருப்பவர்களும் போர்க் குற்றங்கள், மானிடத்துக்கு எதிரான குற்றங்கள் மற்றும் இனப்படுகொலை போன்ற குற்றங்களை நிரூபிக்க வலுவான சாட்சியங்களை பதிவு செய்தல் வேண்டும். இதுதான் புலம்பெயர் தமிழ் அமைப்புகளுக்கு முன்னுள்ள முக்கிய பணியாகும்.

நடந்து முடிந்த கரி ஆனந்தசங்கரியின் லிபரல் கட்சி வேட்பாளர் நியமனத் தேர்தல் வெற்றிக்கு பல காரணங்கள் உண்டு. அவையாவன:

Gari-ekuruvi-SKP (161)-L(1) கனடிய தமிழ் சமூக மட்டத்தில் இருந்த பரந்து பட்ட ஆதரவு. அறிவுப் பிழைப்பாளர்கள், வணிகர்கள், முதியோர், இளையோர் போன்றோரது ஆதரவு.
(2) நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட முன்வரும் ஒருவருக்கு இருக்க வேண்டிய தகைமைகள் – கல்வி, தொழில், நிதிவசதி, பொதுத் தொண்டு, சமூக ஈடுபாடு.
(3) அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்களின் பரந்துபட்ட ஆதரவு. இகுருவி இணையதளம் அவரைத் துணிச்சலாகவும் வெளிப்படையாகவும் ஆதரித்தது.
(4) தொண்டர் பலம்.
(5) திட்டமிட்டு நன்கு நெறிப் படுத்தப்பட்ட தேர்தல் பரப்புரை.
(6) தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் அவர்களது வலுவான பரிந்துரை. வெற்றிபெற வேண்டும் என்ற வாழ்த்துக்கள்.
(7) லிபரல் கட்சியோடும் அதன் தலைவரோடும் வைத்திருக்கின்ற நெருக்கமான உறவு.
(7) உலகத்தமிழர் ஏடு எழுதிய தலையங்கம், விசர்த்தனமான விமர்சனங்கள், மொட்டைப் பிரசுரங்கள் ஆகியவை ஏற்படுத்திய எதிர்மறை விளைவு.

வேறு காரணங்களும் இருக்கலாம். இந்த நியமனத் தேர்தலோடு கதை முடிந்துவிடவில்லை. நியமனத் தேர்தலில் வெற்றி பெற 1,400 வாக்குகள் போதுமானதாக இருந்தது. ஆனால் அடுத்த ஆண்டு நடைபெறும் பொதுத் தேர்தலில் வெற்றிபெற வேண்டும் என்றால் 25,000 வாக்குகளுக்குக் குறையாது பெற வேண்டும். தொகுதியில் மொத்த வாக்காளர் எண்ணிக்கை ஒரு இலட்சத்துக்கும் மேல் இருக்கிறது.

ஒரு தேர்தலில் போட்டியிடும் ஒரு வேட்பாளர் வெற்றிபெற வேண்டும் என்றால் அவர் போட்டியிடும் கட்சிக்கு மக்கள் ஆதரவும் கட்சியின் தலைவருக்கு மக்களிடை செல்வாக்கும் இருக்க வேண்டும். ஸ்காபரோ ரூச் பார்க் தொகுதி புதிதென்றாலும் மறுசீர் அமைக்கப்படாத ஸ்காபரோ ரூச் றிவர் தொகுதி 2011 வரை லிபரல் கட்சியின் கோட்டையாக இருந்து வந்திருக்கிறது.

இவற்றின் அடிப்படையில் எதிர்வரும் பொதுத் தேர்தலில் கரி ஆனந்தசங்கரியின் வெற்றி வாய்ப்பு ஒளிமயமாக இருக்கிறது.

 

 

http://ekuruvi.com/category/canada

Edited by Gari

  • கருத்துக்கள உறவுகள்

ஊரில் சிறுவனாக இருந்தபோது கூட்டுறவுச் சங்கத் தலைவர் போட்டியில் தெரிவு செய்ததற்கே சீனவெடியை தோற்றவர்களின் பக்கம் கொளுத்தி ஆர்ப்பரித்ததைப் பார்த்திருக்கின்றேன். அந்தப் பாரம்பரியம் கனடாவிலும் தொடர்கின்றது என்பதைத்தான் நக்கீரன் ஐயாவின் இந்தக் கட்டுரை சொல்லுகின்றது. நேரடியாகவே உலகத் தமிழர் அமைப்பிடனும் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினருடன் மோதவேண்டும் என்று தீர்மானித்துவிட்டார்கள் போலுள்ளது.

அது சரி, இந்த நக்கீரன் ஐயாதானே இசைஞானி இளையராஜா நவம்பர் மாதத்தில் ரொரான்ரோவில் இசைக்கச்சேரி செய்யக்கூடாது என்பதற்காக முன்னின்று போராடியவர்????

  • கருத்துக்கள உறவுகள்

ஊரில் சிறுவனாக இருந்தபோது கூட்டுறவுச் சங்கத் தலைவர் போட்டியில் தெரிவு செய்ததற்கே சீனவெடியை தோற்றவர்களின் பக்கம் கொளுத்தி ஆர்ப்பரித்ததைப் பார்த்திருக்கின்றேன். அந்தப் பாரம்பரியம் கனடாவிலும் தொடர்கின்றது என்பதைத்தான் நக்கீரன் ஐயாவின் இந்தக் கட்டுரை சொல்லுகின்றது. நேரடியாகவே உலகத் தமிழர் அமைப்பிடனும் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினருடன் மோதவேண்டும் என்று தீர்மானித்துவிட்டார்கள் போலுள்ளது.

அது சரி, இந்த நக்கீரன் ஐயாதானே இசைஞானி இளையராஜா நவம்பர் மாதத்தில் ரொரான்ரோவில் இசைக்கச்சேரி செய்யக்கூடாது என்பதற்காக முன்னின்று போராடியவர்????

 

நேற்று  ஒரு காணொலி பார்த்தேன்

 

அதில் தமிழ் மக்களின் வாக்ககளை  கள்ளமாக விற்று சிலர் கோடிக்கணக்கில் பணம் பெறுவதாக ஒருவர் சொல்கிறார்.

எனக்கு அதைச்சொல்பவர்  மீது ஆத்திரம் ஆத்திரமாக வந்தது

அதற்கு அவர் தரும் ஆதாரங்களையும்

தத்துவ விளக்கங்களையும் கேட்டபோது..

 

இவர் தமிழர்களை  மட்டுமல்ல

கனடிய அரசையே லஞ்சத்தில் திளைப்பவர்கள் என்கிறார்.... :(  :(  :(

எதை உருப்படியாக செய்ய வெளிக்கிட்டாலும் அதை குழப்ப நாலுபேர் இருப்பார்கள் .இவரும் அந்த பட்டியலில் ஒருவர்தான் . .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நக்கீரன் ஐயாவின் கட்டுரையை முழுமைக்கும் ஏற்க முடியாது. 

முள்ளந்தண்டுக்கும் முழங்காலுக்கும் உலகத்தமிழா் ஏடு முடிச்சுப்போடுகிறது என்றால் இவரும் அதை செய்ய விளைகின்றாா்.

இறுதி தேர்தலில் மக்கள் கரிக்கு கரி பூசுவார்கள். இது நிச்சயம்.  :D

  • கருத்துக்கள உறவுகள்

எதை உருப்படியாக செய்ய வெளிக்கிட்டாலும் அதை குழப்ப நாலுபேர் இருப்பார்கள் .இவரும் அந்த பட்டியலில் ஒருவர்தான் . .

தமிழர் களுடைய  விடுதலை போராட்டத்தை அவதூறு கூறி தெரியும்போது உங்களுக்கு அது தெரியவில்லை.
தமிழ் ஈழத்திற்கு கொம்பு சீவி விட்டு விட்டு ............ எல்லோரும் அவரவர் வேலையை பார்த்துகொண்டு ஓவரு பெட்டையளையும்  இழுத்துக்கொண்டு சென்று பிள்ளை பெற்று குடும்பம் ஆன நீங்கள்.
 
எந்த முகத்தை வைத்துகொண்டு ..................... வேறு எந்த வழியும் தெரியாது 16 17 வயது பிள்ளைகள் நெருப்பாற்றில் நீந்தி நடத்திய போரை. புலி முத்திரை குத்தி குதர்க்கம் பேசி திரிகிறீர்கள் ?
 
நக்கீரனுக்கும் ............. உங்களுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. 
சுய விளம்ரம் என்பதில் இருவருக்கும் அண்ணன் தம்பி உறவுகூட வரலாம். 

 

தமிழர் களுடைய  விடுதலை போராட்டத்தை அவதூறு கூறி தெரியும்போது உங்களுக்கு அது தெரியவில்லை.
தமிழ் ஈழத்திற்கு கொம்பு சீவி விட்டு விட்டு ............ எல்லோரும் அவரவர் வேலையை பார்த்துகொண்டு ஓவரு பெட்டையளையும்  இழுத்துக்கொண்டு சென்று பிள்ளை பெற்று குடும்பம் ஆன நீங்கள்.
 
எந்த முகத்தை வைத்துகொண்டு ..................... வேறு எந்த வழியும் தெரியாது 16 17 வயது பிள்ளைகள் நெருப்பாற்றில் நீந்தி நடத்திய போரை. புலி முத்திரை குத்தி குதர்க்கம் பேசி திரிகிறீர்கள் ?
 
நக்கீரனுக்கும் ............. உங்களுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. 
சுய விளம்ரம் என்பதில் இருவருக்கும் அண்ணன் தம்பி உறவுகூட வரலாம். 

 

 

அது நீங்கக் தலைவரை கேட்க வேண்டியது...அவர் தான் எல்லாரையும் கொத்தி கலைத்தார்....வாயை மூடிக்கொண்டு அவரின் கீழிருந்து சேவை செய்ய எல்லாரும் விரும்புவது இல்லை..... அறிவுள்ளவன் வெளியேறி தான் பாதுகாப்பான இடத்திலிருந்து எதிர்குரல் கொடுப்பான்...அப்பாவிகள் எல்லாம் கடவுள் விட்ட வழி என்று இருப்பார்கள் (மூளைச்சலவையும் செய்யப்பட்டிருப்பார்கள்).....

 

கருணா, KPஐயே வெளியேற்றிய தலைவரின் சிந்தனைகளை போற்றி பாடுவோம்.. :)

 

Edited by naanthaan

  • கருத்துக்கள உறவுகள்

அது நீங்கக் தலைவரை கேட்க வேண்டியது...அவர் தான் எல்லாரையும் கொத்தி கலைத்தார்....வாயை மூடிக்கொண்டு அவரின் கீழிருந்து சேவை செய்ய எல்லாரும் விரும்புவது இல்லை..... அறிவுள்ளவன் வெளியேறி தான் பாதுகாப்பான இடத்திலிருந்து எதிர்குரல் கொடுப்பான்...அப்பாவிகள் எல்லாம் கடவுள் விட்ட வழி என்று இருப்பார்கள் (மூளைச்சலவையும் செய்யப்பட்டிருப்பார்கள்).....

 

கருணா, KPஐயே வெளியேற்றிய தலைவரின் சிந்தனைகளை போற்றி பாடுவோம்.. :)

 

உயிர் தமிழுக்கு .............
உடல் தமிழ் மண்ணுக்கு ........... என்று கூவி திரிந்ததெல்லாம் அப்ப வெறும் பூச்சாண்டியா?
 
ஒரு தலைவராலேயே கொசு கலைப்பதுபோல் கை வீச கலைந்தவர்களுக்கு ஏன் ஆயுத போராட்டம் ?
 
இந்திய இராணுவம் ...
ஒட்டு குழு ஒட்டாத  குழு...
இலங்கை இராணுவம் ...
என்று எல்லோரும் சேர்ந்து கலைத்தபோதும் (1987இல்) புலிகள் தமிழ் ஈழ மண்ணில்தானே இருந்தார்கள்.
 
நல்லவேளை பூச்சாண்டி காரர்களை இனம் கண்டு காலம் தாமதிக்காது கை வீசியே புலிகள் கலைத்துவிட்டார்கள்.
லிபெரசன் ஒபெரசன் போல ஆமி வெளிக்கிட்டு இருந்தால் ?
மக்களாகிய நாம்தான் ஆமியோடு போராட வெடி வந்திருக்கும். 
 
முயல் பிடிக்கிற நாயை மூஞ்சியிலேயே தெரியுமாம்.
ஆயுதம் ஏந்தி போராட தெரியாவிட்டால் ............... போராடுபவனை அவன் பட்டில் விட்டு விட்டு பொத்திக்கொண்டு இருப்பதுதான்  அழகு.
 
ஆயுத ஏந்தி விடுதலைக்காக ஏகபத்திய உலகில் போராடுவது என்பது. சோத்து பாசல் கட்டி  உண்பது போல் அல்ல. நெருப்பாற்றை நீந்துவது போல் ஆனது.
அது பற்றி கலைந்த கொசுக்கள் கதைக்க கூடாது................. மக்கள் நாங்கள் வேண்டுமென்றால் கதைக்கலாம் இல்லை கதைத்து கொண்டுதான் இருந்தோம்.
மக்களுக்கும் புலிகளுக்கும் இடைவெளிகள் இருக்கவில்லை................ அதனால்தான் எதிரிகூட மக்கள் புலிகள் என்று எப்போதும் பாகுபாடு  காட்டவில்லை எல்லோரையும் ஒன்றாகவே அழித்தான். 
 
கொசுக்கள் வேண்டுமானால் .........கலைவது எப்படி என்று கட்டுரைகள் எழுதலாம். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.