Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாயினியின் பக்கம்..பல்சுவை அம்சங்களோடு..

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய பொழுது அனைவருக்கும் இனிய பொழுதாக அமைய வாழ்த்துக்கள்..மற்றும் யாயினியின் பக்கத்தை புரட்டிச் செல்லும் அத்தனை உறவுகளுக்கும் எனது மனம் நிறைந்த நன்றிகள்...

Edited by யாயினி

  • Replies 3.9k
  • Views 330.8k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

விடியாத இரவென்று

எதுவுமில்லை...

முடியாத துயரென்று

எதுவுமில்லை...

வடியாத வெள்ளமென்று

எதுவுமில்லை..

வாழாத வாழ்க்கையென்று

எதுவுமில்லை.

கவிஞர் வைரமுத்து

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்திய நட்புக்கள்,யாழ் இணைய உறவுகளுக்கு திருஓணம் பண்டிகை நல் வாழ்த்துக்கள்!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒரு செயல் பாட்டை கால தாமதமின்றி விரைவாக  செய்வது உத்தமமானது.விரைவாக முடிவு எடுப்பது அதி உத்தமானது...காலத்தே பயிர் செய் என்று இதை தான் சொல்லி வைத்தார்களோ.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நேற்று நான் வீட்டில் சாப்பிட்டுக் கொண்டு இருக்கும் போது பத்திரிகையில் படித்த செய்தி ஒன்றைப் பற்றி பேசிக் கொண்டு இருந்தார்கள்...அந்த செய்தியானது சீன நாட்டு செவ்ப் சமையல் காரர் ஒருவரால் சுப் செய்யப் பட்ட பாம்பின் தலை இறுதிக் கணத்தில் அந்த மனிதரையே பதம் பார்த்துக் கொண்டதுவாம்.உணவுக்காக,மதுவிற்காக வளர்க்கபட்டு வந்த பாம்பே ஒரு தலை மட்டும் மிஞ்சிய நிலையில் அந்த மனிதரை பழி வாங்கி இருக்கிறது.அந்த மனிதர் நினைத்தே இருக்க மாட்டார்.உடன் நான் மனதுக்குள் நினைத்துக் கொண்டது ஒன்றே ஒன்று தான் எல்லாரையும் நம்பும் என் போன்றவர்களுக்கு கடசியில் அதிலிருந்து மீள முடியாதளவுக்கு சில வலிகளை  தாங்க வேண்டியதாக இருக்கும்.எப்போதும் பாம்பு,பாம்பு தான். 

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் பதிவுகளை ஆவலுடன் வாசிக்க ,,நானும் ஆவலாக உள்ளேன்....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கபிலர் இயற்றிய குறிஞ்சிப் பாட்டில் கூறப்பட்டுள்ள 99 பூக்கள் இங்கே:

வள் இதழ் ஒண் செங் காந்தள், ஆம்பல், அனிச்சம், தண் கயக் குவளை, குறிஞ்சி, வெட்சி, செங் கொடுவேரி, தேமா, மணிச்சிகை, உரிது நாறு அவிழ் தொத்து உந்தூழ், கூவிளம், எரி புரை எறுழம், சுள்ளி, கூவிரம், வடவனம், வாகை, வான் பூங் குடசம், எருவை, செருவிளை, மணிப் பூங் கருவிளை, பயினி, வானி, பல் இணர்க் குரவம், பசும்பிடி, வகுளம், பல் இணர்க் காயா, விரி மலர் ஆவிரை, வேரல், சூரல், குரீஇப் பூளை, குறுநறுங் கண்ணி, குருகிலை, மருதம், விரி பூங் கோங்கம், போங்கம், திலகம், தேங் கமழ் பாதிரி, செருந்தி, அதிரல், பெருந் தண் சண்பகம், கரந்தை, குளவி, கடி கமழ் கலி மா, தில்லை, பாலை, கல் இவர் முல்லை, குல்லை, பிடவம், சிறுமாரோடம், வாழை, வள்ளி, நீள் நறு நெய்தல், தாழை, தளவம், முள் தாள் தாமரை, ஞாழல், மௌவல், நறுந் தண் கொகுடி, சேடல், செம்மல், சிறுசெங்குரலி, கோடல், கைதை, கொங்கு முதிர் நறு வழை, காஞ்சி, மணிக் குலைக் கள் கமழ் நெய்தல், பாங்கர், மராஅம், பல் பூந் தணக்கம், ஈங்கை, இலவம், தூங்கு இணர்க் கொன்றை, அடும்பு, அமர் ஆத்தி, நெடுங் கொடி அவரை, பகன்றை, பலாசம், பல் பூம் பிண்டி, வஞ்சி, பித்திகம், சிந்துவாரம், தும்பை, துழாஅய், சுடர்ப் பூந் தோன்றி, நந்தி, நறவம், நறும் புன்னாகம், பாரம், பீரம், பைங் குருக்கத்தி, ஆரம், காழ்வை, கடி இரும் புன்னை, நரந்தம், நாகம், நள்ளிருள் நாறி, மா இருங் குருந்தும், வேங்கையும், பிறவும், அரக்கு விரித்தன்ன பரு ஏர்அம் புழகுடன்,

றோசாப் பூவையும் சேர்த்தால், 100 பூக்கள்

இதில் இப்போ.... 50%மான பூக்கள், அழிந்திருக்கும் என நினைக்கின்றேன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

றோசாப் பூவையும் சேர்த்தால், 100 பூக்கள்

இதில் இப்போ.... 50%மான பூக்கள், அழிந்திருக்கும் என நினைக்கின்றேன்.

ஓம் இப்போ நிறையப் பூக்கள் அழிந்து போய் இருக்கலாம்,பெயர்கள் கூட புளக்கதில் இல்லாமலும் போய் இருக்கலாம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் பதிவுகளை ஆவலுடன் வாசிக்க ,,நானும் ஆவலாக உள்ளேன்....

நன்றி தம்பி!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழில் ஆண்கள்,பெண்களுக்கு மட்டுமல்ல பூக்களுக்கும் பருவங்கள் உண்டு அவையாவன..

அரும்பு-----பூ   அரும்பும் நிலை

மொட்டு-------பூ    மொக்கு விடும் நிலை

முகை---------பூ    முகிழ்கும் நிலை

மலர்-----------பூ     மலரும் நிலை

அலர்----------பூ     மலர்ந்த நிலை

வீ---------------பூ    வாடும் நிலை

செம்மல்----பூ    வதங்கும் நிலை

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல திரி யாயினி. தொடருங்கள். இன்று ஓணம் ஏன் கொண்டாடுவது என்று யாரிடமாவது கேட்கவேண்டும் என நினைத்தேன் நீங்கள் கூறிவிட்டீர்கள். என் கணவருக்குத் தெரிந்த ஒருவர் இன்று 23 வகைக் கறிகள் செய்து கொடுத்துவிட்டார். உண்ணவே முடியவில்லை. ஆனால் எல்லாம் வித்தியாசமான சுவை. சுடச்ச்சுட விடயங்களைப் போடுவதால் எல்லா விபரமும் உங்கள் திரியிலேயே கிடைத்துவிடும் போல் இருக்கே. வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

றோசாப் பூவையும் சேர்த்தால், 100 பூக்கள்

இதில் இப்போ.... 50%மான பூக்கள், அழிந்திருக்கும் என நினைக்கின்றேன்.

அருமையானாதை அழகானதை தேவர்கள் தமது தேவலோகத்திற்கு எடுத்து சென்று விட்டார்களாம். எஞ்சியிருப்பதைதான் மானிடப்புளுக்கள் அனுபவிக்கின்றார்களாம்..புராண இதிகாகங்களில் சொல்லப்பட்டுள்ளது. :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நல்ல திரி யாயினி. தொடருங்கள். இன்று ஓணம் ஏன் கொண்டாடுவது என்று யாரிடமாவது கேட்கவேண்டும் என நினைத்தேன் நீங்கள் கூறிவிட்டீர்கள். என் கணவருக்குத் தெரிந்த ஒருவர் இன்று 23 வகைக் கறிகள் செய்து கொடுத்துவிட்டார். உண்ணவே முடியவில்லை. ஆனால் எல்லாம் வித்தியாசமான சுவை. சுடச்ச்சுட விடயங்களைப் போடுவதால் எல்லா விபரமும் உங்கள் திரியிலேயே கிடைத்துவிடும் போல் இருக்கே. வாழ்த்துக்கள்.

உங்கள் கருத்துக்களுக்கம் வாழ்த்திற்கும் மனம் நிறைந்த நன்றிகள் அக்கா..நான் இப்படியான விடையங்கள் தேடிச் சேகரிப்பது, சின்ன,சின்னதாய் எழுதுவது,வீட்டு வேலை  பொன்றவற்றேில் தான் எனது நேரத்தை செலவிடுவது வளக்கம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

  டாக்ரர் சீர்காளி கோவிந்தராஜன் அவர்களின் இன்னிசைக் கச்சேரி 1970 ஆண்டு.யாழ்ப்பாணம் புன்னாலைக்கட்டுவன்.

Edited by யாயினி

தமிழில் ஆண்கள்,பெண்களுக்கு மட்டுமல்ல பூக்களுக்கும் பருவங்கள் உண்டு அவையாவன..

அரும்பு-----பூ   அரும்பும் நிலை

மொட்டு-------பூ    மொக்கு விடும் நிலை

முகை---------பூ    முகிழ்கும் நிலை

மலர்-----------பூ     மலரும் நிலை

அலர்----------பூ     மலர்ந்த நிலை

வீ---------------பூ    வாடும் நிலை

செம்மல்----பூ    வதங்கும் நிலை

என்ன யாயினி இப்படிச் சொல்லீட்டீங்க....
 
அப்போ... தமிழ்ச் செம்மல் என்போர் நிலை ???
 
ஓ........  காட் !!
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இனிய காலை வணக்கங்களுடன் யாயினி......அனைத்து உறவுகளுக்கும் இனிதான பொழுதாக அமைய வாழ்த்துக்கள்.எப்பொருள் யார்,யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய் பொருள் காண்பதறிவு!

எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான்...இன்று சர்வதேச எழுத்தறிவு தினம்.world letracy day.முதன் முதலில் 1965ம் ஆண்டு உலக எழுத்தறிவு தினம் பிரகடனப்படுத்தப்பட்து.இலங்கையில் எழுத்தறிவு தினம் 95.6 மதிப்பிடப்பட்டுள்ளது.

Edited by யாயினி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒரு நல்ல நட்பு

கரும்பைபோன்றதது,

நாம் அடித்தாலும்..

ஒடித்தாலும்,

கடித்தாலும்,

பிழிந்தாலும் நமக்கு

அது  இனிப்பை,

மட்டுமே தரும்!

Edited by யாயினி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒருவர் எவ்வளவுக்கு, அமைதியாக பயந்த சுபாவமாக இருப்பாரோ அந்தளவுக்கு மற்றவர்ளினால் தாக்கப்படுவார்..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆபிரகாம் லிங்கன் தன் மகனின் பள்ளித் தலைமை ஆசிரியருக்கு எழுதிய கடிதம்.

மரியாதைக்கு உரிய ஆசிரியர் அவர்களுக்கு.என் மகன் அனைத்து மனிதர்களும் நியாயமானவர்கள் அல்ல..அனைத்து மனிதர்களும் உண்மையானர்வர்களும் அல்ல  என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.ஆனாலும் மனிதர்களில் கயவன் இருப்பது போல,பின்பற்ற தக்கவர்களும் இருக்கிறார்கள் என்பதையும்,ஒவ்வொரு தன்னல அரசியல் வாதி இருப்பது போல  அர்ப்பணிப்பு மிக்க தலைவரும் இருக்கிறார் என்பதையும் ஒவ்வொரு பகைவனைப் போல ஒரு நண்பரும் இருப்பார் என்பதையும் அவனுக்கு கற்றுக் கொடுங்கள்.

அடுத்து நான் சொல்ல வருவதை அவன் கற்றுக் கொள்ள நாளாகும் என்று எனக்கு தெரியும்.உழைத்து சம்பாதித்த ஒரு டாலர் உழைக்காது பெற்ற ஐந்து டாலரை விட அதிக மதிப்புடையது என்று கற்றுக் கொடுங்கள்.

தோல்வியை ஏற்றுக் கொள்ளவும் ,வெற்றியை அனுபவிக்கவும் கற்றுக் கொடுங்கள்.பொறாமைக் குணம் வந்து விடாமல் கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள்.மவுனமாக ரசித்து சிரிப்பதன் ரகசியத்தை கற்றுக் கொடுங்கள்.எதற்கு எடுத்தாலும் பயந்து ஒளிவது கோழைத்தனம் என்பதை புரிய வையுங்கள்.புத்தகங்கள் என்ற அற்புத உலகத்தின் வாசல்களை  அவனுக்கு திறந்து காட்டுங்கள்.

அதனை விடவும் இயற்கையின் அதிசயத்தை ரசிக்கவும் அவனுக்கு கற்றுக் கொடுங்கள்.ஏமாற்றுவதை விடவும் தோல்லியடையவது எவ்வளவோ மேலானது என்பதை அவனுக்கு பள்ளியில் கற்றுக் கொடுங்கள்.மென்மையான மனிதர்களிடம் மென்மையாகவும் முரட்டுக் குணம் கொண்டவர்களிடம் கடினமாகவும் நடக்க  அணுகுவதற்கு பயிற்சி கொடுங்கள்.

கும்பலோடு கும்பலாய் கரைந்து  போய் விடாமல் சுயமாக செயல்படும் ததரியத்தை அவனுக்கு கற்றுக் கொடுங்கள்.கஷ்டமான சுழ்நிலையில் சிரிப்பது எப்படி என்று கற்றுக் கொடுங்கள்.கண்ணீர் விடுவதில் தவறில்லை என்றும் கற்றுக் கொடுங்கள்.

போலியான நடிப்பைக் கண்டால் எள்ளி நகையாடவும்,புகழ்ச்சியைக் கேட்டால் எச்சரிக்கையாக இருக்கவும் அவனுக்கு பயற்சி கொடுங்கள்.தன் செயல் திறனுக்கும் அறிவார்ந்த ஆற்றலுக்கும் மிக அதிக ஊதியம் ஊதியம் கோரும் உறுதி அவனுக்கு வேண்டும்.ஆனால் தன் இதயத்திற்கும் தன் ஆன்மாவிற்கும் விலை பேசுபவர்களை  அவன் ஒரு போதும் அனுமதிக்க கூடாது.இது மிகப் பெரிய பட்டியல் தான்.இதில் உங்களுக்கு சாத்தியமானதை எல்லாம் அவனுக்கு நீங்கள் கற்றுக் கொடுங்கள்.அவன் மிக நல்லவன் என் அன்பு மகன்!

Edited by யாயினி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒரு யானையை வளர்க்கும் பாகன் எப்படித் தான் அந்த யானையைத் தடவிக் கொடுத்து அன்பாக வளர்ந்து வந்தாலும் அது மதம் கொள்ளும் போது தன்னை வளர்த்த பாகனையே பதம் பார்த்து விடுகிறது....அன்பானவர்கள்,பண்பானவர்கள் என்று பழகும் போது அவர்கள் எங்களுக்கு தெரியாமலே தங்களைப் பலப்படுத்திக் கொண்டு போவது நோவுகள் ஏற்படும் போது தான் தெரிகிறது...

நான் மெழுகாய் உருக

இரவுகளை  நேசிக்கிறேன்

நம்பியவர் தேனாய்

உருக பெண்ணைத்

தேடி பயணமாகிட்டர்..

இது தான் இன்றைய உலகம்.

Edited by யாயினி

  • கருத்துக்கள உறவுகள்

சிறப்பான தேர்வுகள் மிக நல்ல பதிவுகள்...! :)

  • கருத்துக்கள உறவுகள்

இவ்வளவு திறமையையும்  வைத்துக்கொண்டு

ஏன் ஒதுங்கியிருப்பான்....

இதை வெளிக்கொணர  என்னால் முடிந்தது

என் பாக்கியம்......... :icon_idea:

தொடருங்கள்...

நல்லதொரு முயற்ச்சி.......பாராட்டுக்கள் யாயினி!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.