Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மிதிவெடி பூமி: பளையில் எஜமானைக் காப்பாற்றிய நாய்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மிதிவெடி பூமி: பளையில் எஜமானைக் காப்பாற்றிய நாய்

11 செப்டம்பர் 2014

do_CI.jpg

மிதிவெடியில் சிக்கி தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த தனது எஜமானின் உயிரை சமயோசிதமாகச் செயற்பட்டுக் காப்பாற்றியுள்ளது ஒரு நாய். உடனே எங்கோ வெளிநாட்டில் நடந்த சம்பவம் என்று எண்ணிவிடாதீகள். இந்தச் சம்பவம் பளை, இத்தாவில் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

மிதிவெடியில் இத்தாவில் பகுதியைச் சேர்ந்த 62 வயதுடைய சு.செல்வராஜா தனது வளர்ப்பு நாயுடன் கடந்த திங்கட்கிழமை மதியம் முயல் வேட்டைக்குக் கிளம்பியுள்ளார்.

முன்னால் சென்ற அவரது நாய் முயல் ஒன்றைக் கண்டுவிட்டு, அதனைத் துரத்தத் தொடங்கியது. செல்வராஜாவும் நாயின் பின்னால் ஓடியுள்ளார். முயலைத் துரத்திக் கொண்டு செல்வராஜாவும் அவரது நாயும் வள்ளிமனை தோட்டப் பகுதிக்கு சென்றனர்.

அப்போதுதான் அந்த அனர்த்தம் நடந்தது.செல்வராஜாவின் வலதுகால் அங்கிருந்த மிதிவெடியயான்றில் சிக்கியது. அவரது வலதுகால் படுகாயமடைந்த நிலையில் அவர் தூக்கி வீசப்பட்டார். அதிகளவு இரத்தம் வெளியேறியதால், செல்வராஜா மயக்கநிலையை அடையத் தொடங்கினார்.

தமது குடுத்தினருக்கு தொலைபேசி மூலம் அவர் அழைப்பை ஏற்படுத்தியபோதும், அவரால் பேசமுடியவில்லை. இந்த அனர்ந்தம் நடந்தது அவரது வீட்டிலிருந்து சுமார் ஒரு கிலோமீற்றர் தூரத்துக்கு அப்பால்.வெடிப்பொலியையும், தந்தையின் தொலைபேசி அழைப்பையும் வைத்து செல்வராஜாவின் மகன் என்ன நடந்திருக்கக்கூடும் என்பதை ஓரளவு ஊகித்துக் கொண்டார்.

உறவினர்களை அழைத்துக் கொண்டு தந்தையைத் தேடுவதற்கு அவர் ஆயத்தப்படுத்தியபோதும், தந்தை எங்கிருக்கின்றார் என்பதை ஊகிக்க முடியாது அவர் திண்டாடினார். இரத்தப்போக்கு அதிகரித்தால் செல்வராஜாவின் உயிருக்கு ஆபத்தாகிவிடும் என்பதை உணர்ந்த அவர்கள் என்ன செய்வதென்று அறியாது பதறிப்போயிருந்தனர்.

அப்போதுதான் அந்தச் சம்பவம் நடத்தது. செல்வராஜாவுடன் சென்ற அவரது நாய், வேகமாக வீட்டை நோக்கி வந்துகொண்டிருந்தது. வந்தநாய் செல்வராஜாவின் மகனின் மீது பாய்ந்து, பிடித்து இழுத்ததுடன் அவரைப் பார்த்துத் குரைத்தவாறு அங்கும், இங்கும் ஓடியது. அவரைப் பார்த்துப் பலமாகக் குரைத்த நாய் மீண்டும் வந்தவழியே பாய்ந்தோடத் தொடங்கியது.

நாயின் செயற்பாடுகளை அவதானித்த, செல்வராஜாவின் மகனும், உறவினர்களும் நாயின் பின்னே வேகமாகச் செல்லத் தொடங்கினர். சுமார் ஒரு கிலோமீற்றர் தூரம் அழைத்துச் சென்ற நாய், படுகாயமடைந்தநிலையில் மயங்கிக் கிடந்த செல்வராஜாவை அவர்களுக்குக் காட்டியது.

உடனடியாக அவர் பளை மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார். அவரது வலது கால் அகற்றப்பட்டபோதும், உயிர் காப்பாற்றப்பட்டது. அவரது வளர்ப்பு நாயின் சமயோசித நடவடிக்கையைப் பலரும் சிலாகித்துப் பேசியதைக் காணமுடிந்தது.

பல மாதக் கண்ணிலும் வருடக் கணக்கிலும் மிதிவெடிகளை அகற்றுவதாக இலங்கை அரசாங்கம் கூறிய பகுதிகளில் பளையும் ஒன்று.

மீள்குடியேற்றத்தின் பின்னர் இந்தப் பகுதியை உட்பட இத்தாவில், முகமாலை உள்ளிட்ட பகுதிகளில் மிதிவெடிகளில் பலர் சிக்கியுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/111476/language/ta-IN/article.aspx

Edited by கிருபன்

  • கருத்துக்கள உறவுகள்

உயிர்பிழைத்தது பெரிய விடயம்.

இந்தக் கண்ணிவெடிகளை எல்லாம் அகற்றியதாகச் சொன்னார்களே..  :unsure:

இசை  யோசியுங்கள் எல்லா கண்ணிவெடிகளையும் கண்டுபிடிக்க முடியுமா என்று...

அதுவும் இவர் முயல்வேட்டைக்கு (காடு/பற்றைக்குள்) சென்றிருக்கிறார்.....

கண்ணிவெடி அகற்றுபவர்கள் மக்கள் அதிகமாக புழங்கக்கூடிய இடங்களிலேயே அவற்றை அகற்ற பார்ப்பார்கள் என்று "நினைக்கிறன்"..

இன்னும் இரண்டாம் உலகயுத்தத்தின் பொது வீசிய குண்டுகளால் பாதிப்படைபவர்கள் இருக்கிறார்கள்(ஐரோப்பாவில்)..

  • கருத்துக்கள உறவுகள்

------

மீள்குடியேற்றத்தின் பின்னர் இந்தப் பகுதியை உட்பட இத்தாவில், முகமாலை உள்ளிட்ட பகுதிகளில் மிதிவெடிகளில் பலர் சிக்கியுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது

இந்தக் கண்ணிவெடிகளை எல்லாம் அகற்றியதாகச் சொன்னார்களே..  :unsure:

முற்றாக மிதிவெடி அகற்றிய பகுதிகளில்.... சிங்கள, முஸ்லீம், புதிய குடியேற்றங்களும்,

அரை குறையாக மிதிவெடி அகற்றிய பகுதிகளில்.... தமிழரை அங்கு மீள குடியேற அனுமதித்துள்ளார்கள்.  

  • கருத்துக்கள உறவுகள்

இசை  யோசியுங்கள் எல்லா கண்ணிவெடிகளையும் கண்டுபிடிக்க முடியுமா என்று...

அதுவும் இவர் முயல்வேட்டைக்கு (காடு/பற்றைக்குள்) சென்றிருக்கிறார்.....

கண்ணிவெடி அகற்றுபவர்கள் மக்கள் அதிகமாக புழங்கக்கூடிய இடங்களிலேயே அவற்றை அகற்ற பார்ப்பார்கள் என்று "நினைக்கிறன்"..

இன்னும் இரண்டாம் உலகயுத்தத்தின் பொது வீசிய குண்டுகளால் பாதிப்படைபவர்கள் இருக்கிறார்கள்(ஐரோப்பாவில்)..

முற்றாக அகற்றமுடியாது என்பதை ஒத்துக்கொள்கிறேன். இந்த நேரத்தில் இலங்கை அரசு முன்னர் என்ன சொன்னது என்பதையும் பார்க்க வேண்டும்.

போர் முடிந்து சில ஆண்டுகளின் பின்னர் கூட போர் நடந்த இடங்களை சுற்றிப் பார்க்க நாடுகள், தொண்டர் அமைப்புக்கள், ஐநா என எல்லோருக்கும் அனுமதி மறுக்கப்பட்டது. அதற்குச் சொல்லப்பட்ட காரணம் கண்ணிவெடி அகற்றப்படவில்லை என்பது. (அப்போது ஆதாரங்களை அழித்துக்கொண்டிருந்தார்கள் என்பது வேறுவிடயம்).

பிறகு கண்னிவெடியை அகற்றிவிட்டோம் என்று சொல்லி ஊருக்கு கண்காட்சி நடத்துகிறார்கள். ஆனால் தமிழர்களுக்கு இன்னும் கண்ணிவெடி வெடித்துக்கொண்டே இருக்குது.  :o

  • கருத்துக்கள உறவுகள்

மிதிவெடி பூமி: பளையில் எஜமானைக் காப்பாற்றிய நாய்

11 செப்டம்பர் 2014

do_CI.jpg

சாதித்த களை.. முகத்தில தெரியுது.

பாராட்டப்பட வேண்டிய ஜீவன்.

வடக்கு மாகாண சபை.. யுத்தம் தீவிரமாக நிகழ்ந்த பிரதேசங்களில்.. மிதிவெடிகள் தொடர்பிலான மீள் கண்காணிப்புக்களை செய்வது.. நல்லது. பிரிட்டன் போன்ற நாடுகளிடம் இதற்கு உதவி கேட்கலாம். நவீன கருவிகள் பொருத்திய வாகனங்களில் சென்று இதனை செய்ய முடியும்..! கால விரயமும் ஆகாது.. கூடிய விரைவில் போதிய அளவிற்கு மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யலாம்.

சிங்கள அரசையும்.. அதன் படைகளையும் எப்பவுமே நம்ம முடியாது.!!! :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

முற்றாக அகற்றமுடியாது என்பதை ஒத்துக்கொள்கிறேன். இந்த நேரத்தில் இலங்கை அரசு முன்னர் என்ன சொன்னது என்பதையும் பார்க்க வேண்டும்.

போர் முடிந்து சில ஆண்டுகளின் பின்னர் கூட போர் நடந்த இடங்களை சுற்றிப் பார்க்க நாடுகள், தொண்டர் அமைப்புக்கள், ஐநா என எல்லோருக்கும் அனுமதி மறுக்கப்பட்டது. அதற்குச் சொல்லப்பட்ட காரணம் கண்ணிவெடி அகற்றப்படவில்லை என்பது. (அப்போது ஆதாரங்களை அழித்துக்கொண்டிருந்தார்கள் என்பது வேறுவிடயம்).

பிறகு கண்னிவெடியை அகற்றிவிட்டோம் என்று சொல்லி ஊருக்கு கண்காட்சி நடத்துகிறார்கள். ஆனால் தமிழர்களுக்கு இன்னும் கண்ணிவெடி வெடித்துக்கொண்டே இருக்குது.  :o

உதெல்லாம்.... நாந்தானுக்கு, விளங்க.....  தலையிலை, சரக்கு இருக்க வேணும்.

கூலிக்கு.... மாரடித்துக்குக் கொண்டிருக்கிறார்.

உதுகளை, திருத்திறதை விட....  நா#  வாலை, நிமித்தலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

யோசியுங்கள் மக்காள்

-நாய் முயலை துரத்தியிராவிட்டால் - நாய்க்குப் பின்னால் எசமான் பற்றைக்குள் ஓடியிருக்க மாட்டார் - மிதிவெடியிலும் சிக்கியிருக்கமாட்டார்.

வெளித்தோற்றத்துக்கு எசமானின் உயிரைக்காத்த ஹீரோ போல் தெரியும் நாய், உண்மையில் அவரின் காலைக் காவு கொண்ட வில்லன்.

இதே உவமானம் பல விடயங்களுக்கும் பொருந்தும்.

சிந்தியுங்கள் மக்காள்.

முற்றாக அகற்றமுடியாது என்பதை ஒத்துக்கொள்கிறேன். இந்த நேரத்தில் இலங்கை அரசு முன்னர் என்ன சொன்னது என்பதையும் பார்க்க வேண்டும்.

போர் முடிந்து சில ஆண்டுகளின் பின்னர் கூட போர் நடந்த இடங்களை சுற்றிப் பார்க்க நாடுகள், தொண்டர் அமைப்புக்கள், ஐநா என எல்லோருக்கும் அனுமதி மறுக்கப்பட்டது. அதற்குச் சொல்லப்பட்ட காரணம் கண்ணிவெடி அகற்றப்படவில்லை என்பது. (அப்போது ஆதாரங்களை அழித்துக்கொண்டிருந்தார்கள் என்பது வேறுவிடயம்).

பிறகு கண்னிவெடியை அகற்றிவிட்டோம் என்று சொல்லி ஊருக்கு கண்காட்சி நடத்துகிறார்கள். ஆனால் தமிழர்களுக்கு இன்னும் கண்ணிவெடி வெடித்துக்கொண்டே இருக்குது.  :o

ஊருக்கும் காட்டுக்கும் வித்தியாசம் தெரியாது...

ஒவ்வொருநாளும் மக்கள் சாதாரணமாக திரியும் இடம் எல்லாம் கண்ணிவெடி வெடிக்கிறது....

கண்ணிவெடி களைபவர்களுக்கு X-ray கண்கள்...எதையும் மிஸ் பண்ண மாட்டார்கள்....

எல்லாம்..தமிழ்தேசியத்தின் பாதிப்பு :)

இங்கு சிலபேரை பார்க்கும் போது பரமார்த்தகுருவும் சீடர்களும் போலிருக்கு....

இசை சீடன் இல்லை :)

நான் எழுதியது கண்ணிவெடி வெடிப்பது பற்றியதல்ல.. அதை அகற்றுவதற்குப்பின் இருந்த அரசியல் பற்றியது. இதற்குமேல் விளங்கப்படுத்துவது கடினம். :lol:

  • கருத்துக்கள உறவுகள்

முன்னால ஓடின முயலும் கண்ணிவெடியில் சிக்கேல்ல:lol: துரத்திப் போன நாயும் கண்ணிவெடியில் சிக்கேல்ல:lol:பாவி மனிதன் மாட்டுப்பட்டு விட்டார். இது தான் விதியோ:o

  • கருத்துக்கள உறவுகள்

யோசியுங்கள் மக்காள்

-நாய் முயலை துரத்தியிராவிட்டால் - நாய்க்குப் பின்னால் எசமான் பற்றைக்குள் ஓடியிருக்க மாட்டார் - மிதிவெடியிலும் சிக்கியிருக்கமாட்டார்.

வெளித்தோற்றத்துக்கு எசமானின் உயிரைக்காத்த ஹீரோ போல் தெரியும் நாய், உண்மையில் அவரின் காலைக் காவு கொண்ட வில்லன்.

இதே உவமானம் பல விடயங்களுக்கும் பொருந்தும்.

சிந்தியுங்கள் மக்காள்.

இதை இப்படியும் சிந்திக்கலாம்.....

சிங்களமும் சிங்களவர்களின் வாலுபிடிகளும் பச்சோந்திகளும், எட்டப்பர் கூட்டங்களும் புலிகளை முள்ளிவாய்க்கால் வரை வஞ்சகமாக கொண்டு சென்றிருக்காவிட்டால் மக்களும் சென்றிருக்கமாட்டார்கள், கொல்லப்பட்டிருக்கவும் மாட்டார்கள். எனியாவது...திருந்த முயற்சிக்கவும்

  • கருத்துக்கள உறவுகள்

அந்தளவுக்கு எடுப்பார் கைப்பிள்ளைகளாகவும், சுயபுத்தி இல்லாதாராயும் புலிகள் இருந்திருக்கிறார்கள் என்கிறீர்களா ராகா?

எந்த சிறிய செய்தி என்றாலும்  எமக்குள் இருக்கும் கருத்து முரண்பாடுகள் வளர்க்க அந்த செய்தி மிகவும் கவனமாக யாழ்களத்தில் கையாளப்படுவது தெரிகிறது. எதையும் எப்படி வேண்டுமானாலும் எழுதி  பேசி முரண்பாடுகளை வளர்க்கலாம். நானும் என்  பங்கிற்கு ஒரு உதாரணதை  எழுதுவோம்.

அந்த முயல்  பூர்வீகமாக வாழ்ந்து வந்த அதன் பூர்வீக நிலமான காட்டிற்குள்  அடாத்தாக பிரவேசித்து அதனை அடக்கி ஆண்டு வேட்டையாட அந்த முயலைப் போன்ற ஒரு சக மிருகமான நாயின் துணையுடன் சென்ற மனிதன் எதிர்பாராது நடந்த விபத்தால் பாதிக்கபட்டான். அந்த விபத்து நடந்திருக்காவிட்டால்  காட்டில் பூர்வீகமாக வாழ்ந்து வரும் அந்த முயலுக்கு ஆபத்து நிகழ்ந்திருக்கும். அந்த விபத்து முயலின் உயிரை காப்பாற்றியது .மிருகம் என்ற தனது இனத்தை  அழிக்க சென்றபோது அதற்கு துணையாக சென்ற நாய்  தனது எஜமானுக்கு சிறு ஆபத்து என்றவுடனேயே   விசுவாசத்துடன் சுறுசுறுப்பாக  செயற்பட்டு தனது எஜமானை காப்பாற்றி தனது விசுவாசத்தை நாய் நிரூபித்து கொண்டது. இவ்வாறு கூட இந்த சம்பவத்தை எழுதலாம். ஆனால்>>>>>>>>>>>>>>>>>>>>

மேற்கண்ட இவ்வாறான  கண்ணோட்டதில் நடந்த இச்சம்பவத்தை எழுதுவது கருதுவது  எவ்வளவு  தவறு. நாம் எம்முள் தேவையற்ற முரண்பாடுகளை வளர்ப்பதற்காக ஏதோ ஏதோ எல்லாம் எழுதுகிறோம். உண்மையில்  நடைபெற்றது ஒரு துயர விபத்து. அதில் பாதிக்கபட்ட திரு செல்வராஜா அவர்கள் பூரண குணமடையவேண்டும்.  அவரை காப்பாற்றிய அவரது வளர்ப்பு பிராணியின் புத்திசாலித்தனம் வியப்புக்குரியது. இவ்வாறான விபத்துக்கள் மேலும் நிகழாமல் இருக்க போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்படல் வேண்டும். கண்ணிவெடி அகற்றப்பட பிரதேசங்களில் போதிய முதலுதவி பிரிவுகள் மக்கள் மத்தியில் ஏற்படுத்தபடல் வேண்டும்.

ஐயா

நாய்க்கே இந்தக்கதி  என்றால் எமக்கு..??

இங்கு 

காயமடைந்தவர்

காப்பாற்றிவர்

காயமடைந்ததற்கு காரணமானவர்கள்...

இதைத்தாண்டி இன்னொருவர் இருக்கிறார் புலிகள்.

சுற்றி வளைத்து

வந்த காரியத்தை  நிறைவேற்ற புலி  வாந்தி....

அவர்களை  எப்படியாவது இதற்குள் இழுத்துவிடணும்...

அதற்கு

கையில் பட்டாலென்ன?

மூக்கில் பட்டாலென்ன???

இதையே  நான் எதிர்த்து வருகின்றேன்....

விசுகு நீங்கள் புலியா அல்லது அவர்களின் அல்லக்கையா? (மற்றவர்களை ஒட்டுக்குழு..வாந்தி,,பேதி என்றால் இப்படித்தான் வரும்)

உண்மையான பிரச்சனையை பற்றி கதைக்காமல் தங்களின் கருத்துக்கு எதிரானவர்கள்/சார்பில்லாதவர்கள் அல்லது பிடிக்காதவர்களின் மேல் சேறு எறிந்து விளையாடுவதாலேயே இந்த பிரச்சனை,

இன்று தமிழர்களின் பிரச்சனை பற்றி ஒவ்வொருவரும் ஒவ்வொரு கருத்தோடு உள்ளார்கள்...

சிலருக்கு: புலிகள் செய்தது எல்லாம் சரி...

சிலருக்கு: தமிழரின் பிரச்சனையை புலிகளும் சிக்கலாகினாக்கினார்கள்..

சிலருக்கு: ராமன் ஆண்டால் என்ன ராவணன் ஆண்டால் என்ன

இப்படி பலரும் பலவித கருத்தோடு இருக்கும் போது..ஒரு பொது இடத்தில் எல்லாரும் சொல்வதை கேட்கும் தன்மை அவசியம்..

ஆனால் புலிகளின் ஆதரவாளர்கள் யார் புலிகளுக்கு எதிரான கருத்தை வைத்தாலும் கருத்தை சொல்பவர்மேல் பாய்வது...அவர்களுக்கு பட்டங்கள் சூட்டுவது....

அதை இங்கே குறைத்தால் எல்லாரும் பரஸ்பரம் உரையாடலாம்..இல்லையென்றால் ஏட்டிக்கு போட்டியாக தான் பதில்கள் வரும்...

யாழ்களம் என்னை மன்னிக்கவும்...

Edited by naanthaan

அண்ணை  ஏன்   தொப்பியைத்தூக்கி போடுகிறார்??

நான் புலியா  என்றதுக்கு 

ஆமாண்ணே

சிங்களம் அப்படித்தான் எல்லாத்தமிழரையும் சொல்லுது..

அதை இங்கே குறைத்தால் எல்லாரும் பரஸ்பரம் உரையாடலாம்..இல்லையென்றால் ஏட்டிக்கு போட்டியாக தான் பதில்கள் வரும்...

உதைத்தான் நானும் மேலே  எழுதியுள்ளேன்..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.