Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலம்பெயர் புங்குடுதீவு ஒன்றியங்களுடன் இணைந்து செயல்பட, நாளை புங்குடுதீவில் நடத்தப்படும் “பகிரங்கக் கூட்டம்”..!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

முதலில் ஒரு வீடு முன்னேற வேண்டும். அடுத்து ஒரு ஊர் முன்னேற வேண்டும்.பிறகு நாடு தானாகவே முன்னேறும்.புங்குடுதீவு மக்களின் முன்மாதிரியைப் பின்பற்றி ஏனைய கிராமங்களும் வளர வேண்டும்.

  • தொடங்கியவர்

பந்து கிடைத்த சந்தோசம் ..வல்லன் புங்குடுதீவு 

1689175_541639389313631_9045584588753776

10418277_541641399313430_234183750585486

10647013_541638465980390_745423555028060

  • தொடங்கியவர்

சுமார் இரண்டு வருடங்களுக்கு முன்னர், புங்குடுதீவு சமூக பொருளாதார அபிவிருத்தி கூட்டுறவு சங்கம், ஹுதேக் ஹரிதாஸ் (Hudec caritas) நிறுவனத்திடம் விடுத்த வேண்டுகோளை ஏற்று, “மழைநீர் சேமிப்புத் தொட்டிகள்” ஒன்பதை தமது செலவில் அமைத்து தர முன்வந்தது.

பின்னர் ஹுதேக் ஹரிதாஸ் -Hudec caritas – நிறுவனம், கிராம சேவையாளர், பிரதேச சேவையாளர் பிரிவுகளுடன் இணைந்து “மழைநீர் சேமிப்புத் தொட்டிகள்” ஒன்பதையும் அமைக்கும் இடங்களை தெரிவு செய்து, தற்போது அதன் வேலைப்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

புங்குடுதீவு பகுதியில் ஹுதேக் ஹரிதாஸ் (Hudec caritas) நிறுவனத்தால் நிர்மாணிக்கும் “மழை நீர் சேகரிப்பு தொட்டிகள்” மடத்துவெளி சனசமூக நிலையம், மடத்துவெளி கிராம சேவையாளர் அலுவலகம், தல்லையபற்று முருகன் கோவில், பாரதி சனசமூக நிலையம், சவேரியார் கடல் தொழிலாளர் சங்கம், ரோமன் கத்தோலிக்க பாடசாலை, அமெரிக்கன் மிசன் பாடசாலை, சிவலைப்பிட்டி துரைசாமி பாடசாலை, இறுப்பிட்டி முன்பள்ளி ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டு வருகின்றன.

தகவல்…

அருட்தந்தை. சின்னதுரை லியோ ஆர்ம்ஸ்ராங்,

(தேவாலய பங்குத்தந்தை, புங்குடுதீவு)

Pung.Haritas-002-640x360.jpg

Pung.Haritas-003-640x360.jpg

Pung.Haritas-008-640x360.jpg

  • தொடங்கியவர்

இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் திட்டமான “திவிநேகும” எனும் “வாழ்வின் எழுச்சி” பசுமைத் திட்டத்தின் ஒருகட்டமாக, இன்றையதினம் புங்குடுதீவின் பல பிரதேசங்களிலும் தென்னை, மா, போன்ற மரக்கன்றுகள், பயிர்களின் விதைகள் நடப்பட்டன.

இன்றையதினம் கொட்டும் மழையிலும், புங்குடுதீவின் பல பிரதேசங்களிலும் “கிராம சேவகர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், மதகுருமார்கள், மாதர்சங்க உறுப்பினர்கள், பயனாளிகள்” எனப் பலரும் கலந்து சிறப்பித்தனர்.

தகவல்…

அருட்தந்தை. சின்னதுரை லியோ ஆர்ம்ஸ்ராங்,

(தேவாலய பங்குத்தந்தை, புங்குடுதீவு)

pung.thivineguma-006-640x360.jpg

pung.thivineguma-007-640x360.jpg

pung.thivineguma-028-640x360.jpg

புங்குடுதீவு பாரதி விளையாட்டுக் கழகம் நேற்றுமுன்தினம் நடத்திய விளையாட்டு போட்டிகளின் நிகழ்வின் போது ஊர்பெரியவர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து சிறப்பித்து இருந்தனர். அத்துடன் இங்கு வழங்கப்பட்ட வெற்றி பரிசில்கள் சிலவற்றை, தமது உறவுகளின் நினைவாக புலம்பெயர் புங்குடுதீவு உறவுகள் வழங்கி இருந்தமையும் குறிப்பிடத்தக்கது. இன்று நடைபெறவுள்ள இறுதிப்போட்டியின் பின்னர் அது குறித்த செய்திகளையும், படங்களையும் பதிவேற்றுகிறோம்… தகவல்… திருமதி.சுலோசனா தனம்.

pung.paarathi-009-640x360.jpg

pung.paarathi-014-640x360.jpg

pung.paarathi-012-640x360.jpg

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

 புங்குடுதீவு குறிகட்டுவான் வீதியில் அமைக்கப்பட்டுள்ள குளிக்கும் கிணற்றுக்கு எந்த ஒரு மறைப்பும் இல்லாமல் பெண்கள் குளித்து கொண்டு இருக்கிறார்கள். அவர்கள் கூறியவிடயம், பல பேரிடம் உதவி கேட்டும் செய்து தரவில்லை .

10346381_872279999462891_521609853160471

1901436_872280029462888_2817070801513647

  • கருத்துக்கள உறவுகள்

நாலு வீட்டில மரம் கிடுகு என சேர்த்தாலே விசயம் முடிந்திடும். புட் போல் அடிப்பதை ஒரு நாளைக்கு நிறுத்தி கிடங்கை கிண்டச் சொல்லுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

நாலு வீட்டில மரம் கிடுகு என சேர்த்தாலே விசயம் முடிந்திடும். புட் போல் அடிப்பதை ஒரு நாளைக்கு நிறுத்தி கிடங்கை கிண்டச் சொல்லுங்கள்.

சரியான கருத்து

பார்வை

வெளிநாடுகளில்  பணம் வானத்திலிருந்து கொட்டுகிறது எனும் ஒரு அபிப்பிராயத்தில் சமூகம் வளருவதை ஊக்குவிக்கமுடியாது...

இதில் இன்னுமொரு பயங்கரம் இருக்கிறது

இதை பிரசுரித்த நபர்

அங்கே பெண்கள் குளிப்தை படம் பிடித்தது மட்டுமல்லாது

அதை இணையங்களிலும் உலாவவிட்டுள்ளார்

தான் பகிரங்கப்படுத்தியபடி

காவல் பண்ணுங்கோ என்றும் சொல்கிறார்

கண்டிக்கப்படவேண்டிய  விடயம் இது.......... :(

  • தொடங்கியவர்

நாலு வீட்டில மரம் கிடுகு என சேர்த்தாலே விசயம் முடிந்திடும். புட் போல் அடிப்பதை ஒரு நாளைக்கு நிறுத்தி கிடங்கை கிண்டச் சொல்லுங்கள்.

உண்மை தான் அக்கா ஆனால் அடிக்கும் காற்று இரண்டு நாளில் புடுங்கி போட்டுடும் அதை விட இந்த பொது கிணறுகள் காலம் காலம் பாவனையில் உள்ளவை இவைகளுக்கு நிரந்த மறுப்பு வேணும் இரண்டா பிரித்து ஆண் பெண் எண்டு தடுப்பு சுவர் எழுப்பினால் நல்லம் என்பதால் அந்த மக்களின் கோரிக்கை ....

எல்லவற்றுக்கும் ஆதாரம் கேட்கும் ஆக்களுக்காக இங்கு படம் போடபட்டது அதிலும் முகம் தெரியாது எடுகப்பட்டே போடபட்டுள்ளது ....

நடிகை உள்ளாடைவரை புகுந்து கலர் பார்க்கும் சிலர் இங்கு பெண்ணியம் பற்றி பேசுவது சிரிப்பா இருக்கு .....

வெறும் தரவையை சுற்றி சுவர் கட்டி பெயர் போடுவதை விட ...தண்ணியில்ல கிணத்துக்கு வெள்ளை அடித்து பெயர் போடுவதை விட இவ்வாறான பொது கிணறுகளுக்கு சுவர் கட்டுவது நன்மை அளிக்கும் ...

லட்சம் செலவு செய்து சுவர் கட்டும் நேரத்துக்கு நான்கு கம்பி தூண் நிறுவி சுற்றி முள்ளுக்கம்பி அடித்து இரண்டு தகரம் மேல்கீழ அடித்தால் பத்துவருடம் மேல் நிக்கும் சில ஆயிரத்துடன் வேலை முடியும் .....

பெயர் எழுத பலலட்சம் மக்கள் பணம் வீணா போகுது காசு கொடுத்தவன் பெயர் எல்லாம் சுவர் எல்லாம் எழுதுற பிளானே திரில்லா  :D  :D

இங்கு உள்ள சங்கத்துக்கு யாரு தலைவர் என்றே தெரியாது யாரை கேட்டலும் நான் தான் பொறுப்பு என்று சொல்கிறார்கள் அப்படி இருக்கு நிர்வாக தெரிவு ........

ஒரு கலியாணம் சாமத்திய வீட்டுக்கு வரும் சனம் கூட அண்மையில் நடந்த கூட்டத்துக்கு வரவில்லை என்பதை பார்த்தாவது எங்க பிழை இருக்கு என்று உணர்வார்கள் ஆக  :)

பணமும் முதலாளிதுவமும் வேறு மக்களின் மனம் வேறு  :icon_idea:

  • தொடங்கியவர்

புங்குடுதீவு கமலாம்பிகையை சூழவுள்ள, புங்குடுதீவின் 7ஆம் 8 ஆம் வட்டாரங்களின் வயல்நிலங்களின் வரம்புகள் அழிவடைந்து இருந்தன.

இந்நிலையில் 'நிலத்தடி நீர் சேமிப்பின்' ஓர் அங்கமாக, சுவிஸ் கமலாம்பிகை பழைய மாணவர்களின் நிதிப்பங்களிப்புடன் அந்நிலங்களில் வரம்புகள் மீளமைக்கப்பட்டுள்ளன.

தண்ணியை சேமிக்க சுவர் கட்டாது வரம்பு கட்டும் பழைய மாணவர்கள் .

1380055_942668709095007_8512212302544694

1897971_942668772428334_4786118771423904

10733971_942668805761664_881470656101140

10632851_942668839094994_557639396757890

1969322_942668905761654_3199285612304663

1557518_942668935761651_4891274768121317

சுமார் இரண்டு வருடங்களுக்கு முன்னர், புங்குடுதீவு சமூக பொருளாதார அபிவிருத்தி கூட்டுறவு சங்கம், ஹுதேக் ஹரிதாஸ் (Hudec caritas) நிறுவனத்திடம் விடுத்த வேண்டுகோளை ஏற்று, “மழைநீர் சேமிப்புத் தொட்டிகள்” ஒன்பதை தமது செலவில் அமைத்து தர முன்வந்தது.

பின்னர் ஹுதேக் ஹரிதாஸ் -Hudec caritas – நிறுவனம், கிராம சேவையாளர், பிரதேச சேவையாளர் பிரிவுகளுடன் இணைந்து “மழைநீர் சேமிப்புத் தொட்டிகள்” ஒன்பதையும் அமைக்கும் இடங்களை தெரிவு செய்து, தற்போது அதன் வேலைப்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

புங்குடுதீவு பகுதியில் ஹுதேக் ஹரிதாஸ் (Hudec caritas) நிறுவனத்தால் நிர்மாணிக்கும் “மழை நீர் சேகரிப்பு தொட்டிகள்” மடத்துவெளி சனசமூக நிலையம், மடத்துவெளி கிராம சேவையாளர் அலுவலகம், தல்லையபற்று முருகன் கோவில், பாரதி சனசமூக நிலையம், சவேரியார் கடல் தொழிலாளர் சங்கம், ரோமன் கத்தோலிக்க பாடசாலை, அமெரிக்கன் மிசன் பாடசாலை, சிவலைப்பிட்டி துரைசாமி பாடசாலை, இறுப்பிட்டி முன்பள்ளி ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டு வருகின்றன.

தகவல்…

அருட்தந்தை. சின்னதுரை லியோ ஆர்ம்ஸ்ராங்,

(தேவாலய பங்குத்தந்தை, புங்குடுதீவு)

Pung.Haritas-002-640x360.jpg

Pung.Haritas-003-640x360.jpg

Pung.Haritas-008-640x360.jpg

அஞ்சரன்,

இவ்வாறான மழைநீர் நீர் சேமிப்புத் தொட்டிகள் இயங்கும் முறை எப்படி என்று விளக்க முடியுமா? அதன் மேல் பக்கம் மூடி போட்டு மூடி இருக்குமா? அப்படி மூடி இருந்தால் மழை நீர் எப்படி உள்ளே செல்லும்? சுவர் முழுக்க சீமெந்தால் பூசியிருப்பதால் மண்ணின் துளைகளினூடாகவும் மழை நீர் இதனுள் உட் செல்லாதே? மழைக்காலத்தில் எவராவது மேல் மூடியைத் திறந்து விடுவார்களா?

தமிழகத்து மழை நீர் சேமிப்புத் தொட்டிகள் வேறு விதமாக இருப்பதை புகைப்படங்களில் கண்டுள்ளேன்.

இவை

கூரையிலிருந்து வரும் மழைநீரை தேங்கப்படுத்தவே உதவும்

மேலேயிருந்து இன்னொரு  பைப்  லைன் கிணற்றுக்குள் போகும் என நினைக்கின்றேன்...

போன தண்ணீர் வெளியேறாத வண்ணமே உள்ளே அடைக்கிறார்கள்.....

நல்லதொரு  திட்டம்

ஆனால் எந்தளவுக்கு மக்கள் இதில் விழிப்புணர்வு படுத்தப்படுவர் என்பதிலேயே  இதன் வெற்றி  தங்கியுள்ளது..

காரணம் எமது ஊரவர் எல்லாம் மழைத்தண்ணியையும்

தேங்கி  நிற்கும் தண்ணியையும் பாவிப்பார்களா.....??

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

உண்மை தான் அக்கா ஆனால் அடிக்கும் காற்று இரண்டு நாளில் புடுங்கி போட்டுடும் அதை விட இந்த பொது கிணறுகள் காலம் காலம் பாவனையில் உள்ளவை இவைகளுக்கு நிரந்த மறுப்பு வேணும் இரண்டா பிரித்து ஆண் பெண் எண்டு தடுப்பு சுவர் எழுப்பினால் நல்லம் என்பதால் அந்த மக்களின் கோரிக்கை ....

எல்லவற்றுக்கும் ஆதாரம் கேட்கும் ஆக்களுக்காக இங்கு படம் போடபட்டது அதிலும் முகம் தெரியாது எடுகப்பட்டே போடபட்டுள்ளது ....

1- நடிகை உள்ளாடைவரை புகுந்து கலர் பார்க்கும் சிலர் இங்கு பெண்ணியம் பற்றி பேசுவது சிரிப்பா இருக்கு .....

வெறும் தரவையை சுற்றி சுவர் கட்டி பெயர் போடுவதை விட ...தண்ணியில்ல கிணத்துக்கு வெள்ளை அடித்து பெயர் போடுவதை விட இவ்வாறான பொது கிணறுகளுக்கு சுவர் கட்டுவது நன்மை அளிக்கும் ...

லட்சம் செலவு செய்து சுவர் கட்டும் நேரத்துக்கு நான்கு கம்பி தூண் நிறுவி சுற்றி முள்ளுக்கம்பி அடித்து இரண்டு தகரம் மேல்கீழ அடித்தால் பத்துவருடம் மேல் நிக்கும் சில ஆயிரத்துடன் வேலை முடியும் .....

பெயர் எழுத பலலட்சம் மக்கள் பணம் வீணா போகுது காசு கொடுத்தவன் பெயர் எல்லாம் சுவர் எல்லாம் எழுதுற பிளானே திரில்லா  :D  :D

இங்கு உள்ள சங்கத்துக்கு யாரு தலைவர் என்றே தெரியாது யாரை கேட்டலும் நான் தான் பொறுப்பு என்று சொல்கிறார்கள் அப்படி இருக்கு நிர்வாக தெரிவு ........

2- ஒரு கலியாணம் சாமத்திய வீட்டுக்கு வரும் சனம் கூட அண்மையில் நடந்த கூட்டத்துக்கு வரவில்லை என்பதை பார்த்தாவது எங்க பிழை இருக்கு என்று உணர்வார்கள் ஆக  :)

பணமும் முதலாளிதுவமும் வேறு மக்களின் மனம் வேறு  :icon_idea:

இந்த  இரண்டுக்கும் பதில்தரவேண்டிய  கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளேன்

முதலாவது கருத்தை கண்டவுடன்

இது பிழையான வழிகளை  யாழில் காட்டிவிடும்

பல இடங்களிலும் கருத்தெழுதும் கருத்தாளர்களை  பாதிக்கும் என நினைத்து

நிர்வாகத்துக்கு ரிப்போட் செய்திருந்தேன்

ஆனால் இந்த கருத்து இத்தனை நாளாக அவ்வாறே  இங்குள்ளது

அத்துடன் நான் பயந்தவாறே

இதே போன்று கருத்தாளர்களை  வகைப்படுத்தி  வேறு சிலரும் எழுத தூண்டியுள்ளதை கருத்துக்களத்தில் பார்க்கக்கூடியதாக உள்ளது...

1- யாழ் களத்தில் பல பகுதிகள் உண்டு. அத்தனை பகுதிகளிலும் எழுதிவருகின்றோம்.

ஊர்ப்புதினம்

சமூகச்சாரளம்

இனிய  பொழுது

பேசாப்பொருள்

நகைச்சுவை....... என பலவாறுண்டு

அந்தந்த திரிக்கு ஏற்பவே எழுதமுடியும்.....

யாழின் வளர்ச்சியும் இதில் உள்ளது

யாழ் குடும்பத்தை சேர்ந்த நாம்

எல்லா வாசகர்களையும் சென்றடைய எல்லாப்பகுதிகளிலும் அந்தந்த திரிக்கு ஏற்ப கருத்தாடுவோம்

இதை பிடிக்காதவர்கள்

யாழின் இது போன்ற திரிகளை ஒழிக்க கேட்கணும்

அல்லது

இத்திரிகளை வாசிக்காதிருக்கணும்

அல்லது யாழுக்கே வராதிருக்கணும்..

அதைவிடுத்து

இவ்வாறு தான் கருத்தாளர்கள் எழுதணும்

அதை இதைத்தான் எழுதணும் என்பது ஏற்புடையதல்ல

அதிலும் எழுத்தாளர்

பத்திரிகையாளர் என அறிமுகமாகும் அஞ்சரனுக்கு தகுதியில்லை.....

2- பிரான்சில் நடைபெற்ற  அஞ்சரனின் முகடு வெளியீட்டு விழாவுக்கு வந்த மக்கள்   தொகையைத்தந்தால்....

(ஒரு கலியாணம் சாமத்திய வீட்டுக்கு வரும் சனம் கூட அண்மையில் நடந்த கூட்டத்துக்கு வரவில்லை என்பதை பார்த்தாவது எங்க பிழை இருக்கு என்று உணர்வார்கள் ஆக  ....

பணமும் முதலாளிதுவமும் வேறு மக்களின் மனம் வேறு  ...)

பிரான்சில் நடைபெறும் கலியாணம் சாமத்தியவீடுகளுக்கு வரும் சனத்தைவிட அதிகம் வந்திருந்தால்

மக்களைப்புரிந்தவர்

மக்கள் மனதை வென்றவர்

மக்களோடு நிற்பவர் என்பதை நான் ஏற்றுக்கொள்கின்றேன்....

முதல் பிரச்சினை நீங்கள் ரிப்போட் பண்ணியும் என் கருது நீக்கப்படவில்லை என்பதுக்கான ஆதங்கம் ஆக யாழ் இணையம் நீங்கள் நினைப்பது போல உங்கள் சொல்லுக்கு கட்டுப்பட்டு நடக்கவில்லை என்பதே ...

நன்றி யாழ் இணையத்துக்கும் நிர்வாகத்துக்கும் என் கருத்தின் நியாம் புரிந்து விட்டதுக்கு .

இரண்டு ..வளர்த்து ஆலமரமா இருக்கும் ஒரு பெரும் முதலாளித்துவம் கொண்ட புங்குடுதீவு மக்கள் ஒன்றியத்தை கொண்டுவந்து ஒரு ஆறுபேர் சேர்த்து எம்மால் ஆனா சமூக செயல்பாடு அதாவது செய்வம் என்று எங்கள் சொந்த பணத்தை போட்டு ஒரு பத்திரிகை வெளிக்கொண்டு வந்தோம் உங்கள் ஒன்றியத்தை அதனுடன் ஒப்பிடும் நிலையில் உங்கள் நிர்வாக செயல் இருக்கு சந்தோசம் ....

முகடு சஞ்சிகை வெளியிட்டு விழாக்கு வந்த பத்து பேர் என்றாலும் பெறுமதியான ஆக்கள் எதோ ஒரு துறையில் சாதித்த இளையவர்கள் இணைய வெளியில் அவர்கள் யார் என்று பலருக்கு தெரியும் ஒரு நட்சத்திர அந்தஸ் உள்ளவர்கள் என்பதை மறந்து போனீர்கள் ...

ஒன்றிய கூட்டத்துக்கு வருகை தந்த அல்லது அங்கு நின்ற ஒருவர் ஆவது தனது பெயருக்கு பின்னல் ஒரு எழுத்தாவது போட தகுதி உள்ளவர்களா சொல்லுங்கள் கேட் சூட் போட்டால் படித்தவர் ஆகிவிட முடியாது பாருங்கோ ...

எங்கள் சொந்த பணத்தில் நாம் ஒரு முயற்சி செய்கிறோம் அதை விடுத்து ஊரான் பணத்தில் செய்ததுக்கு எங்க பெயர் போடும் ஆசை எங்களுக்கு இல்லை ...

ஆக உங்களுக்கு உள்ள பிரச்சினை இளையவரின் வளர்ச்சி பூனைக்கு யாரு மணிகட்டுவர் என்று இருந்த பொழுது முதல் மணியை கட்டிட்டான் என்னும் வன்மம் வேறு ஒன்றும் இல்லை .

அது எல்லாம் இருக்கட்டும் நீங்கள் புங்குடுதீவு ஒன்றியத்தில் என்ன தகுதி நிலையில் உள்ளீர்கள் .....அதை உங்களால் சொல்ல முடியுமா .

  • கருத்துக்கள உறவுகள்

உந்த புங்குடுதீவு பிரச்சினை புட்டின் வரைக்கும் போகும் போலை இருக்கே.. :unsure:

  • கருத்துக்கள உறவுகள்

உந்த புங்குடுதீவு பிரச்சினை புட்டின் வரைக்கும் போகும் போலை இருக்கே.. :unsure:

பேசாமல் புங்குடிதீவு பதினெட்டு பட்டிக்கும் பஞ்சாயத்தை கூட்டுங்கப்பா.. :D

Edited by சுபேஸ்

இரண்டு ..வளர்த்து ஆலமரமா இருக்கும் ஒரு பெரும் முதலாளித்துவம் கொண்ட புங்குடுதீவு மக்கள் ஒன்றியத்தை கொண்டுவந்து ஒரு ஆறுபேர் சேர்த்து எம்மால் ஆனா சமூக செயல்பாடு அதாவது செய்வம் என்று எங்கள் சொந்த பணத்தை போட்டு ஒரு பத்திரிகை வெளிக்கொண்டு வந்தோம் உங்கள் ஒன்றியத்தை அதனுடன் ஒப்பிடும் நிலையில் உங்கள் நிர்வாக செயல் இருக்கு சந்தோசம் ....

முகடு சஞ்சிகை வெளியிட்டு விழாக்கு வந்த பத்து பேர் என்றாலும் பெறுமதியான ஆக்கள் எதோ ஒரு துறையில் சாதித்த இளையவர்கள் இணைய வெளியில் அவர்கள் யார் என்று பலருக்கு தெரியும் ஒரு நட்சத்திர அந்தஸ் உள்ளவர்கள் என்பதை மறந்து போனீர்கள் ...

ஒன்றிய கூட்டத்துக்கு வருகை தந்த அல்லது அங்கு நின்ற ஒருவர் ஆவது தனது பெயருக்கு பின்னல் ஒரு எழுத்தாவது போட தகுதி உள்ளவர்களா சொல்லுங்கள் கேட் சூட் போட்டால் படித்தவர் ஆகிவிட முடியாது பாருங்கோ ...

எங்கள் சொந்த பணத்தில் நாம் ஒரு முயற்சி செய்கிறோம் அதை விடுத்து ஊரான் பணத்தில் செய்ததுக்கு எங்க பெயர் போடும் ஆசை எங்களுக்கு இல்லை ...

ஆக உங்களுக்கு உள்ள பிரச்சினை இளையவரின் வளர்ச்சி பூனைக்கு யாரு மணிகட்டுவர் என்று இருந்த பொழுது முதல் மணியை கட்டிட்டான் என்னும் வன்மம் வேறு ஒன்றும் இல்லை .

அது எல்லாம் இருக்கட்டும் நீங்கள் புங்குடுதீவு ஒன்றியத்தில் என்ன தகுதி நிலையில் உள்ளீர்கள் .....அதை உங்களால் சொல்ல முடியுமா .

நீங்கள் 6 பேர் சேர்ந்து உங்கள் சொந்த பணத்தில் நடத்துவது போல் தான் புங்குடுதீவு மக்கள் ஒன்றியமும் தமது அங்கத்தவர்களின் பணத்தில் இயங்குகிறது.

கூட்டத்திற்கு வந்தவர்கள் எத்தனை பேர் என்ற உங்கள் கேள்விக்கே விசுகு அண்ணாவும் உங்கள் பத்திரிக்கை வெளியீட்டிற்கு எத்தனை பேர் வந்தார்கள் என்று உதாரணமாக சுட்டிக்காட்டினார்.

வந்தவர்களை பற்றி அவர் எந்த குறையும் சொல்லவில்லையே. நீங்களாக எதற்கு வந்தவர்களின் மதிப்பு, பட்டம், பதவி பற்றி கதைக்கிறீர்கள்? நட்சத்திர அந்தஸ்து உள்ளவர்கள் தான் அங்கத்தவர்களாக வேண்டும், பணம் வழங்க வேண்டும், கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்று கட்டாயமோ? ஏன் மற்றவர்கள் உதவி செய்ய கூடாதோ?

முன்னைய கருத்தில் எத்தனை பேர் வந்தார்கள் என்று தானே கேட்டீர்கள். அதற்கு விசுகு அண்ணா தந்த பதிலுக்கு திருப்பி கருத்து எழுத முடியவில்லை என்றால் உடனே வேறு கேள்வி கேட்டு திசை திருப்புவது.

இறுதி கேள்விக்கு விசுகு அண்ணாவின் பதில் தெரிந்து என்ன செய்யப்போகிறீர்கள்? :D

Edited by துளசி

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல காலம், நான் இந்த இலக்கியக் கூட்டங்களுக்குப் போற பழக்கமெல்லாம் இல்ல! இப்பவெல்லாம் பேருக்குப் பின்னால பட்டம் இருந்தா மட்டும் தான் உள்ளவே விடுறாங்களாம்! Bar is too high! :rolleyes:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.