Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஜெனீவா பயணம்

Featured Replies

kajans%209598747845.jpg

 

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செயலாளர் செ.கஜேந்திரன் ஆகியோர் நேற்று அதிகாலை ஜெனீவா பயணமாகினர். ஜெனீவாவில் தற்போது இடம்பெற்று வரும் ஐ.நா. மனித உரிமை அமர்வில் கலந்து கொள்ளும் சர்வதேச நாட்டுப் பிரதிநிதிகளை சந்தித்து இலங்கையின் தற்போதைய நிலைவரம் தொடர்பாக எடுத்து கூறும் நோக்கிலேயே இவர்கள் ஜெனீவாவிற்கு சென்றுள்ளனர் என்று கூறப்படுகின்றது.
 
 

மீண்டும் கோமாளிகளின் கும்மாளம் ஜெனிவாவில் அரங்கேறப்போகிறது .

இவ்வளவு தாமதமாகப்போய் என்னத்தை கிளிக்கப்போறீன்கள் .நெடியவன் குழு ஆனந்திக்குத்தான் முதலில் விசா கொடுத்ததாம் என்று கதையடிபடுகுது :)

 

http://www.yarl.com/forum3/index.php?showtopic=138399&hl=

மீண்டும் கோமாளிகளின் கும்மாளம் ஜெனிவாவில் அரங்கேறப்போகிறது .

இவ்வளவு தாமதமாகப்போய் என்னத்தை கிளிக்கப்போறீன்கள் .நெடியவன் குழு ஆனந்திக்குத்தான் முதலில் விசா கொடுத்ததாம் என்று கதையடிபடுகுது :)

 

http://www.yarl.com/forum3/index.php?showtopic=138399&hl=

 

தான் அரசியலுக்கு வந்த காலத்தில் இருந்து எவர் மீதும் தேவையற்ற வசை பாடுதல்கள் இல்லாமல் தான் கொண்ட கருமமே கண்ணாக காணாமல் போன உறவுகளின் குடும்பத்தினருக்கு நீதிவேண்டி பல அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் தாயகத்தில்  போராடிவரும் திருமதி அனந்தி மீது Gari அவர்களுக்கு எப்போதும் ஒரு கண். திரும்ப திரும்ப அனந்தியை பற்றி தேவையற்ற முறையில் எழுதிவருகிறார். காரணம் என்னவோ?

  • கருத்துக்கள உறவுகள்

மீண்டும் கோமாளிகளின் கும்மாளம் ஜெனிவாவில் அரங்கேறப்போகிறது .

இவ்வளவு தாமதமாகப்போய் என்னத்தை கிளிக்கப்போறீன்கள் .நெடியவன் குழு ஆனந்திக்குத்தான் முதலில் விசா கொடுத்ததாம் என்று கதையடிபடுகுது :)

 

http://www.yarl.com/forum3/index.php?showtopic=138399&hl=

 

ராணுவ, அரசியல்  நெருக்கடிக்குள் வாழ்ந்து மக்களுக்காகக் குரல் கொடுப்பவர்களுக்கு மட்டுமே அவர்களுடைய பிரச்சனைகள் விளங்கும்.

சிங்கள அரசாங்கத்தையும் அதன் இன அழிப்பு நடவடிக்கைகளையும் விமர்சிப'பதை விடவும் தமக்கு எதிரான அல்லது தமக்கு எதிர்காலத்தில் சவாலாக விளங்கக் கூடியவர்களைத் தாக்குவதில் தமிழர்களில் பலர் துடிப்புடன் இயங்கிக் கொண்டிருக்கின்றனர்.

 

இந்த வகையி;ல மாகாணசபை உறுப்பினர் அனந்தி ஜெனிவா வந்ததையும் அங்கு மனித உரிமை ஆணையாளர் உள்ளிட்டவர்களைச் சந்தித்ததையும் பரிகசித்து கனடாவில் வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழைக் காப்பதற்காக நாளும் பொழுதும் 'கடுமையாக' உழைத்துக் கொண்டிருக்கும் சுமந்திரனின் நெருங்கிய நண்பர் ஒருவர் முகநூலில் பிரச்சாரங்களை மேற்கொள்கிறார். 

 

அதே போல ◌தாயகத்தில் கடும் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் தமது பணிகளைச் செய்து கொண்டிருக்கும் கஜேந்திரகுமார் போன்றவர்கள் மீதும் சேறு வாரி இறைக்கப்படுகின்றது.

 

உங்களுக்குள் நிலவும் அதிகாரப் போட்டியில் வெற்றி பெறுவதற்கு அவர்களை விட நாங்கள் தீவிரமாக இயங்குகிறோம் என்பதை மக்களிடம் காட்டலாமே.

 

குறிப்பாக அனந்தீ மனித உரிமை ஆணையாளரைச் சந்தித்தால் சுமந்திரன் வந்து ஐநா செயலாளர் நாயகத்தைச் சந்தித்து தமிழ் மக்களின் அவல நிலையைப் பற்றிச் சொல்லலாம்.

 

கஜேந்திர குமார் அமெரிக்க மற்றும் பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்களைச் சந்தித்தால் சம்பந்தன் ஐயா வந்து டேவிட் கமறூனையும் ஒபாமாவையும் சந்தித்து தமிழர்களின் அவலத்தைச் சொல்லலாம்.

 

இந்தப் போட்டி ஒரு வகையில் அல்லலுறும் தமிழ் மக்களுக்கு எதாவது ஒரு வகையி;ல உதவியாக அமையலாம்.

 

அதை விடுத்து அனந்தி ஜெனிவாப் பயணத்திற்காக பணத்தை வீணாக்குகிறார் என்றும் கஜேந்திரகுமார் தேவையற்ற வேலைகளைச் செய்கிறார் என்றும் புலம்புவது எதற்காக?

 

தூய தமிழை வளர்ப்பதற்கும் தமிழின் பெருமையைப் போற்றவும் முதலில் தமிழர்களும் தமிழர்களின் நிலங்களும் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதை தமிழ் ஆர்வலர் என்று கூறிக் கொண்டு சுமந்திரனுக்கு வால் பிடிப்பவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். 

 

அதிலும் தூய தமிழிற்காகச் சண்ரைட பிடிக்கும் அந்தப் பெரியவர் அனந்திக்குத் ஆங்கிலம் தெரியாது என்று வேறு பரிகாசம் செய்கிறார். அரசியல் பட்டறிவு கொண்ட அவர் ரஸ்யத் தலைவர் புட்டின் எப்போதும் மொழிபெயர்ப்பாளர்களினூடாகவே சர்வதேச ரீதியில் பேச்சு நடத்துகிறார் என்பதை அறியாமலுள்ளாரா. அத்கு அவர் ரஸ்ய மொழியின் மீது கொண்ட காதலும் ஒரு காரணம் என்பதை அறிய மாட்டாரா?

 

தயவு செய்து தமிழரைத் தாக்கி உங்கள் தவறுகளை மறைக்காமல் தாயக மக்கள் காக்க துரிதமாகச் செயற்படுங்கள்....

 

கடைசியாக ஒரு சந்தேகம்:

 

சுமந்திரனும் சம்பந்தன் ஐயாவும் ஐநா மனித உரிமை ஆணையாளரின் இலங்கை தொடர்பான விசாரணையில் சாட்சியமளித்து விட்டார்களா????

 

 

 

Edited by Manivasahan

மணி,

 

அன்று தொட்டு இன்று வரைக்கும் இந்த வகையான கேவலம் கெட்ட அரசியல் குழிபறிப்புகளும், ஒருவரை ஒருவர் திட்டித் தீர்ப்பதும், தாமே அரசியலில் முன்னுக்கு வரவேண்டும் என்று பேராசை கொள்வதும் தான் நடக்கின்றது. இந்த போக்கின் இறுதி கட்டமாக சிங்களத்துடன் சேர்ந்து இயங்குவதில் தான் முடிகின்றது. 

 

தமிழ் மக்களின் தேவைகளுக்காக, அரசியல் அபிலாசைகளுக்காக, உரிமைகளுக்காக ஒரணியில் இவர்கள் நிப்பார்கள் என்று நாங்கள் நினைத்து நினைத்து தொடர்ந்து முட்டாள்களாக போய்க்கொண்டு இருக்கின்றோம்.

ஓரணியில் நிற்பார்கள் என்ற நம்பிக்கை தொலைந்து பல காலமாகி விட்டது நிழலி.

 

ஆனாலும் தமக்கிடையிலான போட்டியை ஆக்கபூர்வமானதாக்கி அதன் மூலம் தமிழர்களுக்கு ஏதாவது செய்ய மாட்டார்களா என்ற ஆதங்கம் தான்.

 

புலத்தில் இயங்கும் அமைப்புகளும் அப்படியே இயங்கலாம். நாடுகடந்த அரசு  டவுண் ரவுணில் கண்டனப் பேரணியொன்றை நடத்தினால் அதை குறைசொல்லாது தமிழர் பேரவை ஒட்டாவாவில் அதை விடப் பெரிய கண்டனப் பேரணியை நடத்தலாம்.

 

தமிழர் பேரவை தாயக மக்களுக்கால பத்தாயிரம் டொலர்களை சேகரித்துக் கொடுத்தால் அதைப் பற்றி விமர்சனம் செய்யாது நாடு கடந்த அரசு 20 0000 டொலர்களைச் சேர்த்துக் கொடுக்கலாம்.

 

அதை விடுத்து தமக்குச் சார்பான ஊடகங்கள் மூலமும் அடுத்தவரின் செயற்பாடுகளை ஏளனம் செய்து பொழுதைக் கழிக்கும் இவர்களை என்னென்பது?

நாட்டில் தமிழ் மக்கள் அவர்களுக்காக அரசியல் செய்ய அவர்கள் பிரதிநிதிகளை தெரிவுசெய்துவிட்டார்கள் .அவர்கள் செயற்பாடுகளை ஆதரிப்பதுதான் எமக்கான கடமை விரும்பினால் விமர்சனமும் வைக்கலாம் ,

ஆனால் கஜேந்திரகுமாரும் கஜேந்திரனும் செய்வது குழி பறிப்பு அரசியல் .

 

கஜேந்திரகுமாரிடம் பணத்திற்கு மேல பணம் குவிந்து கிடக்கு, அவர் பரம்பரையே தமிழர்களுக்கு இதே அரசியல் தான் செய்தது .

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப இனிச் சரியா? :D

எல்லோருடைய கேள்விகளுக்கும் பதில் தருவேன் .போட்டி அரசியலையும் ,குழிபறிப்பு களையும் யார் துவங்கியதென்று பழைய பதிவுகளை படியுங்கள் தெரியும் . :)

  • கருத்துக்கள உறவுகள்

நேத்துத்தான் பார்த்தேன் சித்தார்த்தன் பற்றிய செய்தியை இன்னுமொரு இடுகையில், சித்தார்த்தனுக்கு பெருமளவு சொத்துக்கள் இருக்கு, வவுனியாவில் அரசியல் செய்த ஒண்ணுமேயில்லாதவர்கள் எல்லாம் அரசியல்செய்து வீடுவளவு தொழில் என செற்றில் ஆகிட்டினம் என.

 

உங்களுக்கு என்ன ஆழுக்கொரு நியாயமோ?

 

நீங்கள்தானே புலிகளைக் கூறினீர்கள் எங்களையும் அரசியல் செய்ய விடுங்கோ இது ஜனநாயக விரோதம் எண்டு.

 

ஆனந்தி, கஜேந்திரகுமார் கஜேந்திரன் போன்றோர் தமிழர் உரிமைபற்றிப்பேசும்போது எதுக்காக உங்களுக்கு பிரச்சனையாக இருக்கு?

 

 

பின்வீட்டுக்குள்ளால அரசியலுக்கு வந்தவையளைத் தூக்கிப் பிடிக்கிறியள்.

 

குமார் பொன்னம்பலம் வங்கிக்கொள்ளையடித்தோ அன்றேல் கள்ளக்கோழி பிடித்தோ கொழும்புத்தெருவில் போலீசுக்குப் பிடிபடாமல் சண்டித்தனம் செய்ததால் என்கவுண்டரில போட்டுத்தள்ளவில்லை.

 

தமிழ்தேசியத்துக்கு ஆதராவக நின்றதாலேயே கொலைசெய்யப்பட்டார். பொன்னர் ஒரு பிழைவிட்டிருக்கலாம் அப்ப ஆனந்தசங்கரியற்ற பெடியன் ஹரி ஆனந்தசங்கரியத் தூக்கிப்பிடிக்கிறியள் அதுமட்டும் எந்தவிதத்தில. நியாயம்.

 

முதலில் ஐநாவின் மனித உரிமைக்கவுன்சில் கூட்டம் நடந்தபோது கூடமைப்பு தங்கள்சார்பில் தகுதிவாந்த எவரையும் பரப்பிரைக்கு ஜெனீவா அனுப்பவில்லை. அதன் பின்னதான நல்லூர் சட்டநாதர் கோவுக்கு பக்கத்தில் இருக்கும் மண்டபத்தில அதுபற்ரிய கலந்துரையாடலில்.  ஐநா மனிதௌரிமைக் கவுண்சில் மண்டபத்தின் ஓடைகளில் தேத்தண்ணி வாங்கிக் கொடுத்து அங்கு வருகிறவர்களுக்கு இலங்கை மனித உரிமை விடையங்களைப்பற்ரிக் கதைப்பதில் எந்தவிதப் பிரயோசனமும் இல்லை என்று சுமந்திரன் மாவை அண்ணரைப் பக்கத்தில வைத்துக்கொண்டு கூறியது எல்லோருக்கும் ஞாபகம் இருக்கும். அதன் காட்சிப்பகுதி அனேகமாக யூடியூப்பில இருக்குது என நினைக்கிறன்.

 

அனால் அடுத்து வந்த மனித உரிமைக் கவுன்சில் கூட்டங்களை கூட்டமைப்பு தவிர்க்க மிடையாது இருந்தமைக்கு கஜேந்திரன் ஆனந்தி கஜன் ஆகியோரது செயற்பாடுகளே காரணம்.

 

நேற்று இணைக்கப்பட்ட தமிழ்நெற் ஆக்கத்தைப் பார்த்தாவது கொஞ்சமேனும் புரிந்துகொள்ளுங்கள்.

 

 

 

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

அரசியல் என்பது ஒரு பன்முக மேடையாயிருப்பதே எல்லாருக்கும் நல்லம். கஜேந்திரன் ஒரு வெத்துப்பயலே ஆனால் கஜன் பொன்னம்பலம் அப்படியில்லை. மக்கள் மீது நியாயமான கரிசனையும் அதேவேளை கொஞ்சம் மூளையும் உடையவர்.

இப்போ இவர்களின் தீவிர தமிழ்த்தேசியத்தை மக்கள் நிராகரித்துள்ளனர். உலக நாடுகளும் அப்படியே. ஆனால் இவர்களுக்கும் தமக்கு தோன்றியபடி அரசியல் செய்யும் உரிமை இருக்கிறது. ஜெனிவா வந்து முடிந்தளவு முயர்சிக்கட்டும். நல்லது நடந்தால் சந்த்ஹோசம்.

கூட்டமைப்பிற்கு உள்ள பொறுப்பு இவர்களிற்க்கு இல்லை. இவர்கள் என்ன கூத்தும் ஆடலாம்.

கூட்டமைப்பு அப்படியில்லை - அவர்கள் எதையும் இந்தியா, சர்வதேசம், இலங்கை இவற்றை இட்டு அளந்துதான் செய்ய முடியும்.

எல்லோருடைய கேள்விகளுக்கும் பதில் தருவேன் .போட்டி அரசியலையும் ,குழிபறிப்பு களையும் யார் துவங்கியதென்று பழைய பதிவுகளை படியுங்கள் தெரியும் . :)

போட்டிகளையும் குறிபறிப்புகளையும் கடந்து தான் புலிகள் போராடினார்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.