Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நந்திக் கடலில் இறந்து கரையொதுங்கும் மீன்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
gg%20%281%29%285%29.JPG
-ரஸீன் ரஸ்மின்

முல்லைத்தீவு நந்திக்கடலில் தொடர்ந்தும் மீன்கள் இறந்த நிலையில் கரையொதுங்கி வருவதாக மீனவர்கள் குறிப்பிடுகின்றனர். நந்திக்கடல் வடக்காறு பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை முதல் மீன்கள் இவ்வாறு இறந்த நிலையில் கரையொதுங்கிக் கொண்டிருப்பதாகவும் மீனவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். சிலாப்பி, கெளிறு, மணல், மன்னா, கூறல் உள்ளிட்ட மீன்களே இவ்வாறு இறந்த நிலையில் கரையொதுங்குவதாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர். இன்று வியாழக்கிழமையுடன் ஐந்தாவது நாளாகவும் சுமார் 50 ஆயிரம் கிலோவுக்கும் அதிகமான மீன்கள் இவ்வாறு கரையொதுங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

இவ்வாறு கரையொதுங்கி வரும் மீன்களை வட்டுவாகல் கிராமிய கடற்தொழில் மீன்பிடி கூட்டுறவு சங்கத்துடன் இணைந்து கறைத்துறைப்பற்று பிரதேச சபை மற்றும் மீனவர் கூட்டுறவு சங்கத்தினர் இணைந்து துப்பரவு செய்யும் முயற்சியில் தொடர்ந்தும் ஈடுபட்டு வருகின்றனர். வட்டுவாகல் கிராமிய கடற்தொழில் மீன்பிடிக் கூட்டுறவுச்சங்கத்தில் அங்கத்துவம் பெற்றுள்ள 70இற்கும் அதிகமான மீனவர்கள், கரையொதுங்கும் இம்மீன்களை துப்பரவு செய்வதற்காக ஈடுபட்டு வருகின்றனர்.
gg%20%282%29%285%29.JPG
gg%20%283%29%282%29.JPG
gg%20%284%29.JPG
gg%20%285%29%281%29.JPG
gg%20%286%29.JPG
gg%20%287%29.JPG
gg%20%2810%29.JPG
 
 
  • கருத்துக்கள உறவுகள்

ஒரு உயிர், காரணம் தெரியாமல் அழிவதென்பது கொடூரமானது.
அதுகும்... 50,000 கிலோ மீன், ஏன் அழிந்தது?
அந்த இடத்தில் தான்.... எமது ஆயுதப் போராட்டமும் முற்றுப் பெற்றது.

 

அது, அந்த... மீன்களுக்கு பொறுக்க முடியாமல்,
இப்போ வந்திருக்கும் சிங்களவன், முஸ்லீம், ஒட்டுக்குழுக்களின்.... 

வலையில் ஏன் மாட்டுப் பட்டு சாக வேண்டும் என்று நினைத்து...

தாமாக உயிர் துறக்கின்றனவோ... என சந்தேகிக்கின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்

மீன்கள் கரையொதுங்குவது எதனால் என்று யாருக்கும் தெரியவில்லையா ???

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களவன் எமது இனத்தை அழிப்பதற்கு பாவித்த இரசாயன மாருந்துகளின் தாக்கங்களின் விளைவால்தான் மீன்கள் இறந்திருக்குமோ என சிந்திக்கவேண்டி உள்ளது  ...  :o  :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களவன் எமது இனத்தை அழிப்பதற்கு பாவித்த இரசாயன மாருந்துகளின் தாக்கங்களின் விளைவால்தான் மீன்கள் இறந்திருக்குமோ என சிந்திக்கவேண்டி உள்ளது  ...  :o  :rolleyes:

 

அப்பிடியும் இருக்குமோ ??????? :lol:

 

  • கருத்துக்கள உறவுகள்

மீன்கள் கரையொதுங்குவது எதனால் என்று யாருக்கும் தெரியவில்லையா ???

 

gg%20%282%29%285%29.JPG

 

நந்திக் கடல்  வற்றியதால்.... மீன்கள் இறந்து.... கரை ஒதுங்கியிருக்கும்.

 

நந்திக்கடல் பகுதியில்... தமிழ் கல்விமான்களை கொண்டு,

சிங்களம் ஆராய்ச்சி செய்ய விடுமா.... என்பது  கேள்வி?

  • கருத்துக்கள உறவுகள்

லட்சக்கணக்கான மக்கள் உயிருடன் புதைக்கப்பட்ட

விச வாயுகள் கொண்டு எரிக்கப்பட்ட பூமி இது..... :(

 

என்ன  நடக்குதோ.....? :(

  • கருத்துக்கள உறவுகள்

லட்சக்கணக்கான மக்கள் உயிருடன் புதைக்கப்பட்ட

விச வாயுகள் கொண்டு எரிக்கப்பட்ட பூமி இது..... :(

 

என்ன  நடக்குதோ.....? :(

 

அந்தப் பகுதியில்,  புதிதாக குடியேறிய......

சிங்களவன், சோனகன் எல்லாம்.... தலை தெறிக்க ஓடப் போறாங்கள் விசுகு. :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

இவ்வளவு மீன்களை வீணாகப் புதைப்பதிலும் பார்க்கக், கோழித்தீன், மற்றும் வளர்ப்புப் பிராணிகளுக்கான உணவுக்காக  உபயோகிக்கலாமே? :D

 

ஒரு வேளை மீனிலும் நஞ்சு கலந்திருக்குமோ. என்னமோ? :wub:

  • கருத்துக்கள உறவுகள்

"இவ்வளவு மீன்களை வீணாகப் புதைப்பதிலும் பார்க்கக், கோழித்தீன், மற்றும் வளர்ப்புப் பிராணிகளுக்கான உணவுக்காக உபயோகிக்கலாமே? "

http://tamil.oneindia.in/news/tamilnadu/thiruttani-17-persons-got-ill-after-eating-poisoned-mutton-212141.html

ஒருவர் கலியாணவீட்டிற்குக் கட்டி வைத்த மருந்தடித்துப் பழுக்க வைத்த வாழைப்பழங்களைக் கொண்டு போய் ஆடுமாட்டுக்குப் போட்டார். ஆடு ஒன்று செத்துவிட்டது. மாடு மயக்கமான நிலைக்குச் சென்று விட்டது. 50 ரூபாயைச் சேமிக்கின்றோம் என்று 10 ஆயிரம் ரூபா நட்டம்...

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் பல்கலைக்கழகம் 21ம் நூற்றாண்டை நோக்கி நகர வேண்டும். குறிப்பாக விஞ்ஞான பீடம். ஒரு நகர்வு நிலை ஆய்வு கூட வாகனம் அதற்கு இருப்பது அவசியம். இப்படியான இக்கட்டான தருணங்களில்.. மாதிரிகளை சேகரித்து.. ஆய்வுகளை துரித கதியில் நடத்தி.. முடிவுகளை மக்களுக்கு எளிய முறையில் விளக்கிச் சொல்லும்.. அறிவியல் சார் நிலை தாயகத்தில் வளர்க்கப்பட வேண்டும்.

 

மாறாக யாழ் பல்கலைக்கழகம்.. சிங்கள அரசு சார் அரசியல் செய்யும் இடமாக மாறிக் கொண்டிருப்பதோடு.. இராணுவ.. மற்றும் சிங்கள.. மற்றும் ஒட்டுக்குழு மயப்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது. ஒரு பல்கலைக்கழகம் எங்குள்ளதோ.. அங்கு..எது தேவையோ அதை வழங்கும் நிலையில் யாழ் பல்கலைக்கழகம் இல்லாமையே இவ்வாறான நிகழ்வுகளுக்கு ஊகங்களை பதில் அளிக்க வேண்டிய நிலையில் மக்களை வைத்துள்ளது.

 

இந்த மரணங்கள்... இயற்கையான தொற்றுக்கள் மூலம் நிகழ்ந்திருக்கலாம். கடல் மாசாதல் மூலம் நிகழ்ந்திருக்கலாம். கடலடியில் ஏற்பட்ட எரிமலை வெடிப்புக்களால் ஏற்படும்.. நச்சு வெளியேற்றம் மூலம் நிகழ்ந்திருக்கலாம்.. மனிதர்கள் நச்சுக்களை கலந்ததன் மூலம் ஏற்பட்டிருக்கலாம்.. நஞ்சுத்தன்மையான அல்கா உணவுகளை உண்டதால் நிகழ்ந்திருக்கலாம்.. இப்படி பல காரணங்கள் இருக்கும் நிலையில்.. இவற்றை பாவிப்பதை தவிர்த்து எரிப்பது அல்லது புதைப்பதே சிறந்து.

 

ஒரு கல்வி சார் சமூகம் சும்மா கிடந்தால்.. இது தான் நிகழும். தமிழர்களின் படிப்பு என்பது.. சமூகத்துக்கு.. தேசத்துக்கு உதவுவதல்ல. பேப்பரில்.. இணையத்தில்.. போட்டு விலாசம் காட்ட மட்டுமே.. அதிகம் பயன்படுவது.. காலம் காலமாக எமது இனம்.. ஒரு விதமான.. பிற்போக்கான.. தாழ்வுமனப்பான்மையில் வாழ்வதை அது எடுத்துக்காட்டுகிறது. இந்தப் போக்கு.. அதற்கும்.. அதன் எதிர்காலத்துக்குமே தீங்கானது..!

 

 வடக்கு மாகாண சபையாவது.. ஒரு நடமாடும்.. விஞ்ஞான ஆய்வு கூடத்தை நவீன.. ஆராய்ச்சி சாதனங்கள் பொருத்தி நல்ல ஆய்வாளர்களர்களைக் கொண்டு இயங்க முனைவது.. ஆய்வுகளை முன்னோடியாகவும்.. உடனடியாகவும்.. மேற்கொண்டு.. தரவுகளை.. முடிவுகளை மக்களுக்கு உடனுக்குடன் உறுதிப்படுத்தும் போது.. பல சிக்கல்கள் தீர்வதோடு வள விரயங்களை.. மக்களுக்கு நேர இருக்கும் ஆபத்துக்களை வெகுவாகக் குறைக்க முடியும்..!! :icon_idea:

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இறுதி யுத்தத்தில் பிணங்கள் மிந்த நந்திக்கடலில் இலட்சம் மீன்கள் இறந்து மிக்கின்றன

 

 

இறுதியுத்தம் நடைபெற்ற முல்லைத்தீவு வட்டுவாகல், நந்திக்கடல் மற்றும் வடக்காறு பகுதிகளில் கடந்த 5 நாள்களாக மீன்கள் இறந்து கரையொதுங்கி வருகின்றன.

 
உலகில் தற்போது அதிகம் பேசப்படும் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை யுத்தத்தின்போது கொல்லப்பட்ட பல ஆயிரக்கணக்காண மக்களின் பிணங்கள் நந்திக்கடலில் மிதந்த காட்சியை போலுள்ளன. 
 
இது வரை சுமார் 60 ஆயிரம் கிலோவுக்கும் மேற்பட்ட சிறிய வகை மீன்கள் இறந்து கரையொதுங்கி cள்ளன.  வட்டுவாகல் கிராமிய கடற்றொழில் அமைப்பால் கரையொதுங்கிய மீன்களை அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. 
 
குறித்த விடயம் தொடர்பில் கருத்தில் எடுத்த வடக்கு மாகாண சபை உறுப்பினர் நேரில் சென்று பார்வையிட்டதுடன் மீனவ குடும்பங்களுடனும் உரையாடியுள்ளார்.
 
எனினும் குறித்த பகுதி சுனாமிக்குப் பின்னர் ஆழம் குறைந்து விட்டதாகவும் தற்போது ஏற்பட்டுள்ள அதிகரித்த வெப்பத்தினால் இந்த மாற்றம் ஏற்பட்டு இருக்கலாம்  எனவும் பரிசோதனை முடிவுகள் கிடைத்ததும் சரியான விபரம் தெரியவரும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
 
மேலும் இது தொடர்பில் மாகாண அமைச்சர் டெனீஸ்வரனுக்கும் தெரியப்படுத்தியுள்ளார்.  
 
இதேவேளை, கடந்த செவ்வாய்க்கிழமை அன்று தேசிய நீர்வாழ் ஆராய்ச்சி அபிவிருத்திக்கான நிறுவனம் பரிசோதனைக்கான மாதிரிகளை எடுத்துச் சென்றதாகவும் முடிவுகள் ஒரு வாரத்திற்குள் தெரியவரும் என்றும் முல்லைத்தீவு கடற்றொழில் நீரியல் திணைக்கள உதவிப்பணிப்பாளர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
 
  • கருத்துக்கள உறவுகள்

யாழ் பல்கலைக்கழகம் 21ம் நூற்றாண்டை நோக்கி நகர வேண்டும். குறிப்பாக விஞ்ஞான பீடம். ஒரு நகர்வு நிலை ஆய்வு கூட வாகனம் அதற்கு இருப்பது அவசியம். இப்படியான இக்கட்டான தருணங்களில்.. மாதிரிகளை சேகரித்து.. ஆய்வுகளை துரித கதியில் நடத்தி.. முடிவுகளை மக்களுக்கு எளிய முறையில் விளக்கிச் சொல்லும்.. அறிவியல் சார் நிலை தாயகத்தில் வளர்க்கப்பட வேண்டும்.

உண்மை. ஆனால் இவற்றையெல்லாம் செய்வதற்கு... முதல்ல‌ துட்டு வேணும் சார்.. துட்டு.. :D

  • கருத்துக்கள உறவுகள்

மீண்டும் ஒரு இயற்கை அனர்த்தம் வரும் சாத்தியக்கூறுகளாக  இருக்கலாம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.