Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நோபல் பரிசுகள் - 2014

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

_78039927_hi024222522.jpg

2014 இல் மூவர் மருத்துவம் அல்லது உடற்தொழிலியலுக்கான நோபல் பரிசைப் பகிர்ந்து கொண்டுள்ள நிலையில்.. அதில் அரைவாசியை வென்ற.. இலண்டனில் வசிக்கும் பேராசிரியர் John O'Keefe ஊடகங்களுக்கு வழங்கிய செய்தி இதோ.

_72798888_c0094618-many_lab_mice-spl.jpg

2014 மருத்துவம் அல்லது உடற்தொழிலியலுக்கான நோபல் பரிசு மூளையில் உள்ள GPS.. திசைகாட்டிக் கலங்கள் மற்றும் அவற்றின் செயற்பாடுகளை கண்டறிந்ததை இட்டு வழங்கப்பட்டுள்ளது. மேற்படி கலங்கள் சுண்டெலிகளில்.. 1971 இலேயே கண்டறியப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்தக் கலங்களின் செயற்பாட்டை சரியாக விளங்கிக் கொள்வதன் வாயிலாக அல்சிமர்.. டெம்ன்சியா(Dementia) போன்ற மூளை நரம்பியல் நோய்களுக்கு தீர்வு தேட வசதிகள் பிறக்கும் என்று நம்பப்படுகிறது.

 

blue-led.jpg

 

அதேவேளை இயற்பியல் அல்லது பெளதீகவியலுக்கான 2014 நோபல் பரிசு நீல ஒளிகாழும் இருவாயி (BLUE LED) கண்டுபிடிக்கப்பட்டமைக்கு வழங்கப்பட்டுள்ளது.  இந்தப் பரிசில் இரண்டு ஜப்பானிய மற்றும் ஒரு அமெரிக்க பேராசிரியர்களிடையே பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.

இந்த இருவாயிகள் இன்று சிமாட்போன்கள்.. மற்றும் எல் ஈ டி தொலைக்காட்சிப் பெட்டிகள் மற்றும் சக்தி சேமிப்பு மின்குமிழ்களில் பாவிக்கப்பட்டு வருகின்றன. இந்தக் கண்டுபிடிப்பு 1990 களின் ஆரம்பத்தில் செய்யப்பட்டிருந்தது. ஏலவே சிவப்பு.. மற்றும் பச்சை நிற எல் ஈ டிக்கள் கண்டறியப்பட்டிருந்த போது.. நீலம் கண்டுபிடிக்கப்படுவதில் தாமதம் நிலவியது.

 

http://kuruvikal.blogspot.co.uk/

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்
நீல எல் ஈ டி கண்டுபிடித்த ஜப்பானிய விஞ்ஞானிகளுக்கு இயற்பியல் நோபெல் பரிசு

இந்த வருடத்தின் இயற்பியலுக்கான நோபெல் பரிசு 1990களின் ஆரம்பத்தில் நீல நிற எல் ஈ டி (Light Emitting Diode) விளக்கை கண்டுபிடித்ததற்காக ஜப்பானிய விஞ்ஞானிகளான பேராசியர்கள் இசாமு அகாசகி, ஹிரோஷி அமானோ, ஷூஜி நக்கமுரா ஆகியோருக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

விருதோடு வழங்கப்படுகின்ற எட்டு மில்லியன் ஸ்வீடிஷ் குரோனர் பரிசுத் தொகையை வெற்றிபெற்றவர்கள் பகிர்ந்துகொள்வார்கள்.

 

1901ஆம் ஆண்டிலிருந்து இயற்பியலுக்காக நோபல் பரிசை வாங்கியுள்ள 196 பேர்களுடைய பட்டியலில் பேராசியர்கள் இசாமு அகாசகி, ஹிரோஷி அமானோ, ஷூஜி நக்கமுரா ஆகியோரது பெயர்களும் தற்போது சேர்ந்துள்ளன.

ஸ்வீடனில் நடத்தப்பட்ட செய்தியாளர் கூட்டத்தில், அறிவிப்பை வெளியிட்ட தேர்வுக்குழுவினர் லைட் எமிட்டிங் டையோட் எல் ஈ டியின் பயன்பாட்டை வலியுறுத்தினர்.

 

மிகக் குறைவான மின் சக்தியிலேயே இயங்கக்கூடிய, சுற்றுச்சூழலைப் பாதிக்காத வகையிலான ஒளி ஆதாரமாக எல் ஈ டி விளக்குகள் அமைவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

 

ஒளி உமிழும் இண்கேண்டஸெண்ட் விளக்குகள் 20ஆம் நூற்றாண்டில் உலகின் ஒளி ஆதாரமாக விளங்கியது என்றால் 21ஆம் நூற்றாண்டின் உலகின் ஒளி ஆதாரமாக விளங்கப்போவது எல் ஈ டி விளக்குகள்தான் என தேர்வுக் குழுவின் அறிக்கை கூறுகிறது.

 

பச்சை நிறத்திலான எல் ஈ டியும், சிவப்பு நிற எல் ஈ டியும் நெடுங்காலமாகவே புழக்கத்தில் இருந்துவந்தாலும், நீல நிற எல் ஈ டி என்பது ஏராளமானோர் முயன்றும் கண்டுபிடிக்கப்பப்பட முடியாமலே இருந்துவந்தது.

 

 

மற்ற இரண்டு நிறங்களோடு நீலமும் சேரும்போதுதான், வெளிச்சத்தின் ஆதாரமான வெள்ளை வெளிச்சம் உருவாகும்.

அப்படியிருக்க மற்ற விஞ்ஞானிகளும் தொழில்துறையும் முப்பது ஆண்டுகாலம் சாதிக்க முடியாமல் இருந்த ஒரு விஷயத்தை ஜப்பானில் நகோயா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த இசாமு அகாசகியும், ஹிரோஷி அமானோவும், டொக்குஷிமாவில் ஒரு சிறிய நிறுவனத்தில் வேலைபார்த்துவந்த ஷூஜி நக்கமுராவும் சேர்ந்து சாத்தியமாக்கியிருந்தனர்.

 

 

இசாமுவும் ஹிரோஷியும் தொடர்ந்து நகோயா பல்கலைக்கழகத்திலேயே பணியாற்றுகிறார்கள். ஷூஜி அமெரிக்காவின் கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தில் தற்போது பணியாற்றிவருகிறார்.

 

 

வெள்ளை வெளிச்சம் தரும் எல் ஈ டி விளக்குகள் பல ஆண்டுகள் காலம் பழுதாகாமல் வேலை செய்யும், தவிர ஒளி உமிழும் இண்கேண்டசெண்ட் விளக்குகளை விட மிகவும் குறைவான மின் சக்தியிலேயே இவை இயங்கும்.

உலகில் கால்வாசி அளவான மின் சக்தி விளக்குகளில்தான் செலவாகின்றன என்ற நிலையில், எல் ஈ டி விளக்குகள் பரவலாகப் பயன்படுத்தப்படும்போது, மின் உற்பத்திக்காக உலகின் இயற்கை வளங்கள் விரயமாவது கணிசமாக குறையும்.

 

 

மின்சார வசதி இல்லாத சூழ்நிலை உள்ளவர்கள் உலகில் நூற்றைம்பது கோடி பேர் இருக்கிறார்கள் என்று மதிப்பிடப்படுகிறது. இவர்களுக்கும்கூட மின் இணைப்பு தேவைப்படாத விளக்கொளி ஆதாரமாக எல் ஈ டி விளக்குகள் விளங்க முடியும் ஏனென்றால் சூரிய சக்தியில் கிடைக்கக்கூடிய குறைவான மின்சாரத்திலேயே எல் ஈ டி விளக்குகள் சிறப்பாக எரியும்.

 

 

http://www.bbc.co.uk/tamil/science/2014/10/141007_nobelprizephysics

  • கருத்துக்கள உறவுகள்

ஒளி நுண்ணோக்கி ஆய்வு: 3 விஞ்ஞானிகளுக்கு வேதியியல் நோபல் பரிசு

 

 

nobel01_2144231f.jpg
வேதியியல் நோபல் வெற்றியாளர்கள் | படம்: ஏ.எஃப்.பி.

2014ஆம் ஆண்டு வேதியியலுக்கான நோபல் பரிசை அமெரிக்க விஞ்ஞானிகள் இருவரும், ஜெர்மன் விஞ்ஞானி ஒருவரும் கூட்டாக வென்றுள்ளனர்.

அமெரிக்காவின் ஆஷ்பர்னில் உள்ள ஜேன்லியா ஃபார்ம் ரிசர்ச் கேம்பஸைச் சேர்ந்த விஞ்ஞானி எரிக் பெட்ஸிக், ஜெர்மனியின் ஹைடல்பர்க் புற்றுநோய் ஆய்வு மையம் மற்றும் மாக்ஸ் பிளாங்க் உயிர் பவுதீக வேதியியல் கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானி ஸ்டீஃபன் ஹெல், அமெரிக்காவின் ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த வில்லியம் மோர்னர் ஆகியோர் 2014ஆம் ஆண்டுக்கான வேதியியல் நோபல் பரிசை பகிர்ந்துள்ளனர்.

உயர் தொழில்நுட்ப புளூரசென்ஸ் மைக்ராஸ்கோப்-ஐ மேம்படுத்த மகத்தான பங்களிப்பு செய்ததற்காக ராயல் ஸ்வீடிஷ் அகாடமி ஆஃப் சயன்சஸ் இந்த நோபல் பரிசை வழங்கியுள்ளது.

nobel1_2144229a.jpg

நீண்ட காலமாக ஆப்டிகல் மைக்ராஸ்கோப் என்பது வரம்புகளுக்குட்பட்ட அளவிலேயே பயன்படுத்தப்பட முடிந்துள்ளது. ஆய்வு செய்யும் பொருள் குறித்து ஒளியின் பாதி அளவு அலைநீளத்திற்கு மேல் உயர்தெளிவை பெற முடியாத நிலை இருந்தது.

தற்போது இந்த விஞ்ஞானிகள் புளூரசெண்ட் மூலக்கூறுகள் உதவியுடன் இந்த வரம்பைக் கடந்து ஒளி நுண்ணோக்கி தொழில்நுட்பத்தில் நேனோ பரிமாணத்தை எட்ட பங்களிப்பு செய்துள்ளனர்.

 

இந்த 3 விஞ்ஞானிகள் செய்த சாதனை என்ன? அதனால் ஏற்படும் பயன்கள் என்ன?

ஆப்டிகல் மைக்ராஸ்கோப் 0.2 மைக்ரோமீட்டர்களுக்கு அதிகமாக தெளிவை ஒருபோதும் அளிக்காமல் இருந்து வந்தது. தற்போது புளூரசென்ஸ் மூலக்கூறுகளை பயன்படுத்தி இந்த 3 விஞ்ஞானிகளும் இந்த வரம்பை உடைத்துள்ளனர்.

இதனால் செல்களின் உள்ளே தனிப்பட்ட மூலக்கூறுகளின் ஊடாட்டத்தை சிறப்பாக அறுதியிட முடியும். நோய்களுக்கு தொடர்பான புரோட்டீன்களை இப்போது நுண்ணோக்கி மூலம் பார்க்க முடியும், மேலும் செல் பிரிவதை மிகவும் நுண்ணிய நேனோ மட்டத்தில் தடம் காண முடியும்.

17ஆம் நூற்றாண்டில் விஞ்ஞானிகள் மைக்ராஸ்கோப் மூலம் வாழும் நுண்ணுயிர்கள் பற்றி ஆராய்ச்சி செய்த போது அவர்கள் கண்கள் முன் புதிய உலகமே திறந்தது. ரத்தத்தின் சிகப்பு செல்கள், பாக்டீரியா, யீஸ்ட் செல்கள், உயிரணுக்கள் ஆகியவை பற்றிய உலகம் அவர்கள் கண் முன்னே விரிந்தன.

இதுதான் ‘மைக்ரோ பயாலஜி’ என்ற ஒரு பெரிய விஞ்ஞானத் துறையாக வளர்ச்சி கண்டது. பிற நுண்ணோக்கிகளுக்கான கண்டுபிடிப்புகளும் தொடர்ந்து வந்த போதிலும் சில வேளைகளில் எலக்ட்ரான் மைக்ராஸ்கோப் செல்களையே அழிப்பதாக அமைந்தது.

இந்த நிலையில் மைக்ராஸ்கோப்பின் வரம்புகளும் தெரியவந்தது. அதாவது ஒளியின் அலைநீளத்திற்கு தோராயமாக பாதியளவு உள்ள நுண்ணுயிரிகளை, (அதாவது 0.2 மைக்ரோமீட்டர்கள்) மைக்ரோஸ்கோப்பினால் சரியாகப் பார்க்க முடிவதில்லை.

செல்லின் உள்ளே, தனிப்பட்ட புரோட்டீன் மூலக்கூறுகளின் ஊடாட்டங்களை மரபான நுண்ணோக்கியினால் சரியாகக் கணிக்க முடியாமல் இருந்தது.

உதாரணத்திற்குக் கூற வேண்டுமென்றால், ஒரு நகரத்தின் கட்டிடங்களையே பார்க்க முடிந்தது என்று கூறலாம். கட்டிடங்களுக்குள் மனிதர்கள் எப்படி வாழ்கிறார்கள் அல்லது எப்படி தங்களுக்குள் உறவாடுகிறார்கள் என்பதை அறிய முடியவில்லை என்று கூறலாம்.

ஒரு செல் எப்படி செயல்படுகிறது என்பதை அறிய தனிப்பட்ட மூலக்கூறுகள் அதனுள் எப்படி ஊடாடுகின்றன என்பதை அறுதியிடுவது அவசியம்.

தற்போது எரிக் பெட்ஸிக், ஸ்டீபன் ஹெல் மற்றும் வில்லியம் மோர்னர் ஆகியோரது புளூரசண்ட் மூலக்கூறுகள் உதவியுடன் செய்யப்பட்ட ஆய்வில் மட்டுப்படுத்தப்பட்ட பயன்பாட்டில் இருந்த மைக்ராஸ்கோப், மேலும் நுண்ணிய மூலக்கூறுகளை ஆய்வு செய்யும் நேனோஸ்கோப்பாக வளர்ச்சியடைந்துள்ளது.

இதன் மூலம் மூளையில் உள்ள நரம்பு செல்களினிடையே நரம்புகளின் நியூட்ரான் முனைகளை மூலக்கூறுகள் உருவாக்குகின்றன என்பதை இப்போது அறிய முடியும்.

தலை முதல் உடல் முழுதும் நடுங்கும் நரம்புத் தளர்ச்சி நோயான பார்கின்சன் நோய் மற்றும் பெருமறதி நோயான அல்செய்மர் ஆகியவற்றிற்கு மூலக்காரணமான புரோட்டீன்களை இப்போது தெளிவாக தடம் காண முடியும்.

கருமுளைகளாகப் பிரியும் கருமுட்டைகளில் உள்ள தனிப்பட்ட புரோட்டீன்களை இப்போது பின்தொடர முடியும். சுருக்கமாக மருந்தில்லா நோய்களைத் தற்போது முற்றிலும் தடுப்பதற்கான மகத்தான பல ஆய்வுகளுக்கு நேனோஸ்கோப் வித்திட்டுள்ளது என்றால் அது மிகையாகாது. 

 

 

http://tamil.thehindu.com/world/%E0%AE%92%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%A8%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-3-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81/article6481596.ece?homepage=true

Edited by பிழம்பு

  • கருத்துக்கள உறவுகள்

இலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு!

 

ஸ்டாக்

nobel%20price%20literature_.jpgஹோம்: இந்த ஆண்டிற்கான (2014)  இலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. பேட்ரிக் மோடியானோ  என்னும்  பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த புதின ஆசிரியர் இந்த பரிசைப் பெறுகிறார்.

69 வயதான பேட்ரிக் மோடியானோ, பிரெஞ்ச், ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் 30க்கும் மேற்பட்ட நூல்களை படைத்துள்ளார். இலக்கியத்திற்காக நோபல் பரிசு பெறும் பிரான்ஸைச் சேர்ந்த 11வது எழுத்தாளர் பேட்ரிக் மோடியானோ என்பது குறிப்பிடத்தக்கது.

 

நாஜிப் படையினர் ஆக்கிரமிப்பு  காலத்து வாழ்க்கையை  தனது படைப்புகளில் வெளிப்படுத்தி உள்ளார். மேலும், கடைக்கோடி மனிதனின் மன உணர்வுகளை புதினமாக்கியதால் புகழ் பெற்றவர் பேட்ரிக் மோடியானோ என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

 

http://news.vikatan.com/article.php?module=news&aid=33321

 

  • கருத்துக்கள உறவுகள்

2014´ம் ஆண்டு, நோபல் பரிசு பெற்றவர்களின் பெயர்களை...

ஒரு தலைப்பின் கீழ் பதியும் நெடுக்காலபோவான், பிழம்பு ஆகியோருக்கு நன்றி.

 

கேள்விப்பட்ட செய்தி ஒன்று.
ஒவ்வொரு ஆண்டும், நோபல் பரிசு அறிவிக்கும் போது...
முதலாவதாக மருத்துவத் துறைக்கான பரிசைத் தான்... அறிவிப்பார்களாம்.
 

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் இலக்கியச் சந்திப்பில் பங்குபெறுகிறவர்கள் யாரும் பரிசீலிக்கப்படவில்லையா?? அல்லது இவர்கள்தான் அப்ளை பண்ணில்லையா?? என்னய்யா பெரிய பரிசு உங்கடை நோபல் பரிசு?!?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் இலக்கியச் சந்திப்பில் பங்குபெறுகிறவர்கள் யாரும் பரிசீலிக்கப்படவில்லையா?? அல்லது இவர்கள்தான் அப்ளை பண்ணில்லையா?? என்னய்யா பெரிய பரிசு உங்கடை நோபல் பரிசு?!?

 

வெள்ளையின அம்மா: மகனே கேம்பிரிஜ் இன்ரவியு என்ன மாதிரி.. இடம் கிடைச்சுதோ..?!

 

வெள்ளைப் பையன்: இன்ரவியு ஓகே மம். பட் அவங்க என்னை விட நல்ல திறமை சாலியை எதிர்பார்க்கிறாங்க போல.

 

தமிழ் அம்மா: டேய்.. கேம்பிரிச்சு கேம்பிரிச் என்று போய் வந்தா.. என்ன இடம் கிடைக்குமோ இல்ல அங்கையும் குழப்பிப் போட்டியோ..?!

 

தமிழ் பையன்: என்ர அறிவுக்கு அங்க இடம் கிடைச்சாலும் போறதா இல்லை அம்மா. கனடா பெரியம்மாட்ட.. அவுஸி சித்திட்ட.. நியூசி.. சித்தப்பாட்ட..  போன் பண்ணி சொலிடு என்ன.!! :lol::D

kaliash1_2148106f.jpg
இடது: கைலாஷ் சத்யார்த்தி - படம்: ஆர்.வி.மூர்த்தி | வலது: மலாலா யூசுப்சாய் - படம்: ராய்ட்டர்ஸ்

இந்திய சமூக ஆர்வலர் கைலாஷ் சத்யார்த்தி, பாகிஸ்தான் சிறுமி மலாலா யூசுப்சாய் இருவரும் 2014-ம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசை பகிர்கின்றனர்.

சிறார் மற்றும் இளைஞர் பாதுகாப்புக்கும், குழந்தைகளின் கல்வி உரிமைக்காகவும் பாடுபட்டதற்காக, இந்த உயரிய அங்கீகாரம் அளிக்கப்படுவதாக நோபல் கமிட்டி அறிவித்துள்ளது.

 

விரிவான தகவல் - விரைவில்

 

http://tamil.thehindu.com/world/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D/article6488641.ece?homepage=true

 

  • கருத்துக்கள உறவுகள்

அதாவது மலாலா போன்றவர்கள் "ஊக்குவிக்கப்படுகிறார்கள்". :wub:

  • கருத்துக்கள உறவுகள்

ச்சே இந்த வருசம் மகிந்தவுக்கு போகும் என்டு எதிர்பார்த்தன். வர வர விஐய் அவார்ட்ஸ் பாக்கிற மாதிரி இருக்கு. 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
703.jpg
 
2014ம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசை இந்தியர் உள்பட இருவர் பெறுகின்றனர். இந்தியர் கைலாஷ் சத்தியார்த்தி, பாகிஸ்தானின் மலாலாவுக்கு நோபால் பரிசு அறிவிக்கப்பட்டுளளது. நார்வே தலைநகர் ஆஸ்லோவில் அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. இந்தியாவும், பாகிஸ்தானும் இணைந்து நோபல் பரிசு பெறுவது இதுவே முதல் முறை. அமைதிக்கான நோபல் பரிசு டிசம்பர் 10ஆம் தேதி நார்வேயின் ஆஸ்லோவில் வழங்கப்படுகிறது. 
 
குழந்தைத் தொழிலாளர் முறையை ஒழிக்கப 1990 முதல் பாடுபட்டு வருபவர் கைலாஷ் சத்தியார்த்தி. பச்பன் பச்சாவோ அந்தோலன் என்ற அமைப்பை கைலாஷ் சத்யார்த்தி நடத்தி வருகிறார். சுமார் 80 ஆயிரம் குழந்தைத் தொழிலாளர்களை விடுவித்து மறுவாழ்வுக்கு உதவியுள்ளார். ஜெர்மனியும் இவரை கவுரவித்து விருது வழங்கியிருக்கிறது. கைலாஷ் சத்தியார்த்தி 1985, 1995, 2006, 2009 ஆண்டுகளில் அமெரிக்காவின் உயரிய விருதுகளை பெற்றவர். 60 வயதான அவர் தற்போது டெல்லியில் வசித்து வருகிறார். 
 
இதே போல், பாகிஸ்தானில் பெண் கல்விக்காக போராடி வருபவர் மலாலா யூசப்சையி. பெண் கல்வியின் அவசியம் குறித்து இணையதள வலைப்பக்கத்தில் எழுதி வந்தார் மலாலா. பெண் கல்விக்காக போராடியதால், கடந்த 2012ம் ஆண்டு தலிபான்களின் துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்தவர் மலாலா என்பது குறிப்பிடத்தக்கது. துப்பாக்கிச் சூட்டில் காயம் அடைந்த அவர், இங்கிலாந்தில் சிகிச்சை பெற்று திரும்பினார். பாகிஸ்தானில் முதன் முதலாக தேசிய இளைஞர் அமைதி பரிசு மலாலாவுக்கு வழங்கப்பட்டது. 12 ஜூலை 1997ல் பிறந்த இவருக்கு தற்போது வயது 17. மிக குறைந்த வயதில் அமைதிக்கான நோபல் பரிசை பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
நன்றி: நக்கீரன்.கொம்
  • கருத்துக்கள உறவுகள்

இரண்டு சமூக ஆர்வலர்களுக்கும் நல்வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறேன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மலாலாவுக்கு நோபல்பரிசு????? இது இன்னும் அழிவுகளை தூண்டும். எரியும் நெருப்பில் எண்ணை ஊற்றுகின்றார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த மலாலாவை தலிபான் சுட்டு ஆள் மண்டையைப் போட, அதை வைத்து அரசியல் ஆதாயம் தேடுவினம் இனி.  :rolleyes:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நோபல் பரிசு மேற்குலகின் முதுகுசொறிதல் என்று எண்ணும் அளவிற்கு அண்மைக் காலமாக.. அதிர்ச்சி அளிக்கும் முடிவுகளை எடுக்கிறது நோபல் பரிசுக் கமிட்டி.

 

ஒபாமாவுக்கு அதிகாரத்துக்கு வந்தவுடன் நோபல் பரிசு வழங்கி கண்டது என்ன.. ஐ எஸ்..  ஐ..உருவாக்கி விட்டதோடு.. சிரியாவை நாசமாக்கியது..! பல இலட்சம் மக்களை கொன்றும்.. இடம்பெயர்த்தியும் வைத்திருப்பது. மேலும்.. இத்தாலிக் கடலில்.. மக்களை அகதிகளாக தவிக்க விட்டு சாகடித்தது.. ஆயிரக்கணக்கில்..!!

 

மலலா.. 17 வயசுச் சிறுமி. இவரிடம்.. உலக அமைதி பற்றி என்ன சிந்தனை இருக்க முடியும்..??! பாடசாலையில்..  15 வயதில்.. சூழல் பாதிப்புப் பற்றி நாங்களும் தான் கட்டுரை எழுதி பரிசு வாங்கினம். அப்ப எங்களுக்கும்.. மலலா போல.. கட்டுரை எழுதிறதுக்கு நோபல் பரிசு தந்திருக்கலாமில்ல...!!

 

மலலாவுக்கு நோபல் பரிசு என்பதை தலிபான்களுக்கான தண்டனை என்று பார்க்கிறது போலும்.. மேற்குலகம்..! இதெல்லாம் சரியாப் படல்ல...!! :):icon_idea:

 

 


இந்த மலாலாவை தலிபான் சுட்டு ஆள் மண்டையைப் போட, அதை வைத்து அரசியல் ஆதாயம் தேடுவினம் இனி.  :rolleyes:

 

அவா.. இப்ப இங்கிலாந்தில்.. பார்மிங்காமில் செற்றில் ஆகிட்டா. நீங்க.. வேற...!! பாகிஸ்தானியர்களும் நம்மவர் போலத்தான். அசைலம் கிடைக்க எங்க பொந்திருக்கு என்று பார்த்துத் திரிபவர்கள்..!! :):icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

மலலா.. 17 வயசுச் சிறுமி. இவரிடம்.. உலக அமைதி பற்றி என்ன சிந்தனை இருக்க முடியும்..??! பாடசாலையில்..  15 வயதில்.. சூழல் பாதிப்புப் பற்றி நாங்களும் தான் கட்டுரை எழுதி பரிசு வாங்கினம். அப்ப எங்களுக்கும்.. மலலா போல.. கட்டுரை எழுதிறதுக்கு நோபல் பரிசு தந்திருக்கலாமில்ல...!!

 

 

உங்களுக்கும் தந்திருக்கலாம்.. ஆனால் தலிபான், ஐசிஸ் யாரும் உங்களை சுடவில்லை..  :huh:

 

இப்பவும் ஒன்றும் குறைந்துபோகவில்லை.. ஐசிசுக்கு எதிரா இங்கிலாந்தில் போராட்டம் அறிவியுங்க.. :D நோபல் பரிசுக்கு மிச்ச வழியை நாங்க பார்க்கிறம்.. :lol:

  • கருத்துக்கள உறவுகள்

உங்களுக்கும் தந்திருக்கலாம்.. ஆனால் தலிபான், ஐசிஸ் யாரும் உங்களை சுடவில்லை..  :huh:

 

இப்பவும் ஒன்றும் குறைந்துபோகவில்லை.. ஐசிசுக்கு எதிரா இங்கிலாந்தில் போராட்டம் அறிவியுங்க.. :D நோபல் பரிசுக்கு மிச்ச வழியை நாங்க பார்க்கிறம்.. :lol:

 

 

அடப்பாவி

மேல அனுப்புவது என்று முடிவே செய்தாச்சா?? :lol:  :D

இங்கு பலருக்கு இனிப்பான முடிவு... :(

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.