Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கத்தி திரைவிமர்சனம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு வீட்டு கணணியில் கூட பார்க்கும் எண்ணமில்லை.இதை பாக்கிற நேரத்துக்கு நல்ல நித்திரை கொண்டு ,அடுத்தநாள் கொஞ்சம் பிரஷ்ஷா வேலைக்கு போகலாம்.

கலெக்டர் அலெக்ஸ் பால் மேனன்
 
 
எனக்கு தமிழ் சினிமாவின் மீதோ சினிமாக் கலைஞர்கள் மீதோ எந்தக் கோபமும் கிடையாது , ஏனெனில் அவர்கள் வியாபாரிகள் , அவர்கள் , மேம்போக்காய் சிலிர்க்க வைக்கவும் ,மேலோட்டமாய்  அரிப்பெடுக்க வைக்கவும் , அரித்த இடத்தில் சொகுசாய் சொரிந்தும் கொடுத்து காசு கறக்கத் தெரிந்திருக்கும் வித்தகர்கள் , அவர்களிடம் சமூகப் பொறுப்பை எதிர்பார்ப்பதும் , ஆழ்ந்த சிந்தனையும்  ,தெளிந்த படைப்புகளையும்  எதிர்பார்ப்பது "சிட்டுக்குருவி லேகியம் விக்கிறவன் கிட்ட  போய் ,கேன்சர் கட்டிக்கு கீமோதெரபி கேட்பது மாதிரி " அதனால் இந்தப் பதிவின் எள்ளல் ,துள்ளல் , நகை , நட்டு , துப்பல் , தூற்றல் எல்லாம் என் இனிய தமிழ் மக்களையே போய்ச் சேரும் .
 
முதலாவதாக சமூகத்தைப் பீடித்திருக்கும் நோய்களைப் பற்றிய புரிதல் நம்மில் எத்தனை பேருக்கு  இருக்கிறது  ? ஒரு விஷயத்தை பொத்தாம்பொதுவாகப் புரிந்து கொள்கிறோமா , அல்லது ஆழமாய் ,அகலமாய் , புத்தகங்கள் , இணையம் வாயிலாக வாசித்தறிகிறோமா ? நம்மின் அறிவுக்  குறைபாடுதானே நம் சார்ந்த சமூகத்துக்கும் , அந்த சமூகம் பெற்றேடுத்திருக்கும் கலைத் தெய்வங்களுக்கும் இருக்கும் , அப்படியிருக்க சினிமாக்காரனைச் சாடுவதென்ன முறை ? இப்படி சமூக விஷயங்களைப் பற்றி மேம்போக்கான ஆர்வமும் மேலோட்டமான புரிதலும் கொண்டதனால்தானடா ஒரு நாள் முதல்வர்களால் உங்கள் தமிழகத்தைத் திருத்த முடிகிறது , திருத்தி உங்கள் சில்லறைக் காசுகளைத் திருடி  அவர்கள் கல்லா கட்ட முடிகிறது . ஒரே ஒரு ஹீரோ இல்லன்னா நாலு கோவக்கார இளைஞர்களால யாரையாவது உள்துறை மந்திரி அல்லது முதல் மந்திரியைக் கடத்தி அவர்களின் அறிவுக் கண்களை நாலு வசனத்தில் திறக்க முடிகிறது ! மொத்தத்தில் உங்கள் பிரச்சினைகளுக்கான காரணம்  நீங்கள் அல்ல ,அதற்கான தீர்வும்  உங்களிடம் இல்லை  என்ற உங்கள் மொண்ணைப் புரிதலால் தானடா வீராணம் குழாய்க்குள்ளே உக்கார்ந்தா உங்க வீட்டுக் கிணத்துலயும் , வயக்காட்டுலயும் தண்ணி வந்திரும்னு நம்புறீங்க , கை தட்டித் , தட்டிக் , காசுக்கு வசனம் பேசுற  எல்லாத்தையும் தலைவனா ,  வாழ்க்கைய உய்விக்க வந்த பெருமானா நினைச்சு , இவரு அரசியலுக்கு வந்தா நல்லாருக்குமா , அவரு வந்தா நம்மளக் காப்பாத்திருவாரான்னு  கண்ல ஏக்கத்தோட திரியறீங்க !சமூகப் பொறுப்பும் நிஜ அக்கறையும், மாற்று அரசியல் பற்றிய அறிவும் , சமூக மாற்றம் கொணர வேண்டும் என்ற துடிப்பும் உள்ளவர்கள் சினிமாத்துறையிலிருந்தும் , மற்ற எந்தத்  துறையிலிருந்தும் வரலாம் , வரவேண்டும் . ஆனால் முதல் படம் நடித்த உடனே முதல்வர் நாற்காலியில் குத்த வைக்க வேண்டும் என்று விரும்பும் விடலைத்தனங்கள்  அல்ல,
 
சரி முக்கியப் பிரச்சினைக்கு வருவோம் : தமிழகம் தண்ணீரின்றித் தவிக்கிறது , தமிழக விவசாயி தண்ணீர் இல்லாமல் , விளைநிலங்களை விற்றுக்  கட்டிடக் கூலியாய் பெருநகரங்களின் பிளாட்பாரங்களில் படுத்துறங்கி அழுந்துகின்றான் . யார் காரணம் ? கார்ப்பரேட்களா , கொக்காகோலாவா ,பெப்சியா ? அல்லது எல்லையே இல்லாமல் , குடிக்க , கட்ட , விவசாயம் செய்ய ,தண்ணீர் என்னும் வளத்தை சூறையாடிக்கொண்டிருக்கும் ஆழ்துளைக் கிணறுகளா  . நம் நதி ,நீர்நிலைகளை மாசுபடுத்த , ஏரிகளைத் தூரத்து பிளாட் போட, 1000 அடி ரெண்டாயிரம் அடி என ஆழ்துளைக் கிணறுகள் இட கிஞ்சித்தும் யோசிக்காமல் செயலில் இறங்கும் மொண்ணைப்புத்திப் பொதுசனமாகிய நாம் காரணமா அல்லது குளிர்பானக் கம்பெனிகளா ? நீரை உறிஞ்ச நாம் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும் , ஏதோ ஒரு "தன்னாலப் பொங்குற தன்னூத்து" எல்லார் வீட்டுக்கடியிலயும் , வயக்காட்டுக்கடியிலயும்  ஓடுதுன்னு புத்திகெட்டு நம்பறதால தானடா ! ஓடி ஓடி உறிஞ்சத் தெரிந்த நாம, மீண்டும் பூமியில் நீர் நிரப்ப என்ன கிழித்தோம் என்ற சிந்தனை கொஞ்சம் கூட இல்லாமல் , அரைவேக்காட்டு சினிமா வசனங்களுக்கு கைதட்டிப் பொங்கிப் புளகாங்கிதம் அடைந்து விட்டு , 'டாஸ்மாக்'களில் உங்கள் மூளையையும் , மூலதனங்களையும் அடகுவைத்துக் குடித்துவிட்டு, தமிழன் வாழ்வாதாரப் பிரச்சினைகளை எல்லாம் தீர்க்கும் தலைவன் ஒருவன் பிறப்பான் என்று தெருவோரச் சாக்கடைகளில் விழுந்து கிடக்கவோ , இல்லை நடக்கும் எந்தப் பிரச்சினைகளுக்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது போல் கின்லே தண்ணி வாங்கிக் குடிச்சிட்டு , பீட்சா சாப்டுட்டு , டிவி பாத்துட்டே வோட்டு கூடப் போடாம குடிப்பணியாற்றிட்டு , உலகத்தையே நொட்டை சொல்லிட்டே காலத்தை கடத்தவோ உன்னால் மட்டும்தான் தமிழா முடியும் 
 
சரி விஷயத்துக்கு வருவோம் !தமிழகத்தின் நீர்த்தேவைகள் எங்கு , எப்படிப் பூர்த்தியாகிறது ?மழை எது ? நதி எது ? குளம் எது?அணை எது?  கால்வாய் எது ? கண்மாய் எது ? ஊருணி எது ? தண்ணீர் பற்றிய தமிழனின் அறிவு என்ன ?
 
தமிழ்நாட்டில்   3 வேறுபட்ட காலங்களில் மழை பொழிகிறது . தென்மேற்குப் பருவமழையின்  போது (ஜூன் முதல் செப்டம்பர் வரை ) ஒரு சிறிய மழையும்  ,வட கிழக்குப் பருவமழையின்  போது (அக்டோபர் முதல் டிசம்பர் வரை)   அதிகபட்ச மழையையும் ,(ஜனவரி முதல் மே வரை) வறண்ட பருவத்தில் ஒரு சிறிய மழையும் தமிழகத்துக்குக் கிட்டுகிறது .சாதாரண சூழ்நிலைகளில்  945 mm (37.2 in) மழை நமக்குக் கிடைக்கிறது .
 
தமிழகம் பொதுவில் ஒரு வறண்ட பிரதேசமாக இருந்தாலும் , சிலபல வற்றாத ஜீவநதிகளையும் (பாலாறு , செய்யாறு , பொன்னியாறு ,காவேரி , மெய்யாறு , பவானி  , அமராவதி , வைகை , சிற்றாறு , தாமிரபரணி ) பல பருவகால நதிகளையும்(வெள்ளாறு , நொய்யல் , சுருளி ,குண்டாறு இன்னபிற) கொண்டுள்ளது .
முன்னொரு காலத்தில் ஒவ்வொரு கிராமத்திலும் , ஊருணிகள் அமைக்கப்பட்டன , வணிகர்கள் , அரசர்கள் எல்லாரும் திருப்பணிக்காக ஊருணிகளும் , அவற்றில் தண்ணீர் வந்து சேர கண்மாய்களும் அமைத்தனர் , இவை அல்லாமல் இவற்றைப் பராமரிக்க , "குடிமரம்மத்து" என்றொரு அருமையான பழக்கமும் இருந்தது . ஆறு குளம் கண்மாய்களைத்  தூர்வாற , மக்கள் காசுகேட்காமல் (free labour )வேலை செய்தனர் , இன்று தேசிய ஊரக வேலைத் திட்டம் என்றொரு அருமையான   திட்டம் இருந்தும் , நீர்நிலைகள் நீர்வரத்துகள் அனைத்தையும் கூலி வாங்கிக்கொண்டு பராமரிக்கும் வாய்ப்புக் கிடைத்தபின்பும் , நிழலில் நின்றுகொண்டு , வேலையே செய்யாமல் சிலநூறு 'ஓவா'க்களை வாங்கி டாஸ்மாக்கில் அதையும் கரைத்துக் குடிப்பவன் தானே நீ , தமிழா !
 
ஒரு சிறுகதை நினைவுக்கு வருகிறது . ஒரு ராசாவுக்கு ஒருநாள் தன்னோட அரண்மனைக் குளத்துல , பால் நிரப்பிக் குளிக்கணும்னு ஆசை வந்திச்சாம், குளத்துத் தண்ணிய எல்லாம் வெளியேத்திட்டு , எல்லா குடிமக்களையும் கூப்பிட்டு , இன்னிக்கு ராத்திரிக்குள்ள ஒவ்வொரு குடும்பமும் ஒரு சொம்பு பால் கொண்டு வந்து குளத்துல ஊத்தணும்னு உத்தரவு போட்டானாம் , குடிமக்களும் , உத்தரவு ராசாவேன்னுட்டு வீட்டுக்குப் போனாங்களாம் . நாள் விடிஞ்சது , ராசா கண்ணுமுழிச்சுப் பாத்தாராம் , குளத்துல ஒருபொட்டுப் பாலில்ல , வெறும் தண்ணிதான் . எல்லாப் பயலும் , இருட்டுல தான் மட்டும் ஒரு சொம்புத்  தண்ணி ஊத்துனாத்  தெரியவா போகுதுன்னு , தண்ணி மட்டுந்தான்   ஊத்தியிருக்கானுங்க , ஒரு பயலும் பால் ஊத்தல . இப்படித்தான தமிழா உன் கடமைய மறந்துட்டு , நமக்குப் பதிலா வேற எவனாவது வந்து நம்ம பிரச்சினைகளுக்கு தீர்வு குடுப்பான்னு எந்நேரமும் வெளியிலேயே பராக்குப் பார்த்துட்டு இருக்கற ! மழைநீர் சேமின்னு முக்குக்கு முக்கு அரசாங்கம் முழங்குனாலும் , நீ இன்னும் போர்வெல் ஆழத்தைக் கூட்டறதுலையே குறியாருக்குற தமிழா  !
 
வானம் பார்த்த பூமியாம் தமிழகத்தில் ,நீர் மேலாண்மை பற்றிய பழமையான அறிவு இருந்தது , அதனால் தான் , அணைக்கட்டுகள் சிறியதும் பெரியதும் கட்டி , கண்மாய்கள் வெட்டி அவற்றை ஊருணிகளோடு இணைத்து , கிடைத்த மழைநீரை எல்லாம் தேக்கி வைக்கத் தலைப்பட்டான் தமிழன் , இன்று இந்த நீர்நிலைகளை மாசுபடுத்தவும் , பிளாட் போடவும்  , ஆக்கிரமிப்புச் செய்வதும்  யார் தமிழா ? கொக்ககோலாவா ? இல்லை சக தமிழனா ? மிகக் குறைந்த நீர் வளம் கொண்ட இஸ்ரேல் நீர் மேலாண்மையைச் சரிவரச் செய்து , விவசாயத்தில் தன்னிறைவு அடைந்திருக்கிறதே ? எப்படி , விழும் ஒவ்வொரு மழைத் துளியையும் சேமிப்பதாலும் , விவசாயத்துக்கு உகந்த நுட்பங்களைக் கடைபிடிப்பதாலும் தானே , அட இஸ்ரேலை விடு தமிழா ! இங்கே பக்கத்திலிருக்கிற மகாராஷ்டிரா மாநிலத்தின் ஹிர்வே பஜாரின் கதை அறிந்திருக்கிறாயா ? 1989இல் குடிகாரக் கிராமமாக , வறட்சி தலை கால் உடம்பு விரித்து ஆடிய பிரதேசமாக இருந்த அந்த சின்னக் கிராமம் இன்று நீர் மேலாண்மை மற்றும் சரியான விவசாய உத்திகளைப் பயன்படுத்தி லட்சாதிபதிகளின் கிராமமாக மாறிய கதை தெரியுமா ?பொபட்ராவ் பவார் என்றொரு பஞ்சாயத்துத் தலைவனின் தலைமையில் , மொத்தக் கிராமமும் அங்கிருந்த 22 மதுக்கடைகளையும் இழுத்து மூடிவிட்டு , நீர்மேலாண்மைக்காக , 52 நீர்ச்சேமிப்புக் குளங்கள் , 2 பொசிவுக் குளங்கள் (percolation  tanks ) , 32 கல் வரப்புகள் (stone bunds ) , 9 தடுப்பணைகள் எனக் கட்டி எழுப்பியது , கோடிகள் தேவைப்படவில்லை தமிழா ,வெறும் தன்னார்வத் தொண்டும் , சில அரசுத் திட்டங்களின் பணமுமே போதுமானதாக இருந்தது . யாரும் கத்திக் கத்தி வசனம் பேசவுமில்லை , எதிரியை வெளியில் தேடவுமில்லை .பிரச்சினைக்கான காரணம் , மோசமான நீர் மேலாண்மையே என்பதை உணர்ந்து செயலில் இறங்கினார்கள் , சாதித்தும் காட்டினார்கள் .
 
1995 ல்  வருடாந்திர மழை  சுமார் 15 அங்குலம் மட்டுமே , தமிழகம் சாதாரணமாகப் பெறுவது 37 அங்குலம் என்பதை கவனத்தில் இருத்து தமிழா !  முதல் பருவமழைக்குப்  பின், நீர்ச் சேமிப்பால் , பாசன பகுதி அதிகரித்தது. 2010 ல், கிராமத்தில் மழை 190 மிமீ மட்டுமே கிடைத்தது, ஆனால் நீர் மேலாண்மை நன்கு நிர்வகிக்கப்பட்டதால் , கிராமத்தில் தண்ணீர் பிரச்சினைகள் வரவே இல்லை .
நீர் மேலாண்மை அவர்களைப்  பல பயிர்கள் அறுவடை  செய்ய உதவியது. 1995 க்கு முன், 90 திறந்தவெளிக்  கிணறுகள் 80-125 அடியில் தண்ணீர் கொடுத்தன . இன்று, 15-40 அடியில்  தண்ணீர் தரும்  294 திறந்தவெளிக்  கிணறுகள் உள்ளன. பக்கத்து அகமத் நகர் மாவட்டத்தில் மற்ற கிராமங்கள் தண்ணீர் அடைய கிட்டத்தட்ட 200 அடி தோண்ட வேண்டி இருக்கிறது .
1995 ஆம் ஆண்டில், பத்தில் ஒரு பாகம் நிலம் மட்டுமே சாகுபடிக்கு ஏற்றதாக  இருந்தது, இன்று மொத்த நிலமும் பயிர் செய்யவோ , தீவனப் பயிர் வளர்க்கவோ பயன்படுகிறது . இன்றும் நீர் மேலாண்மை பற்றிய விழிப்புணர்வுக்கு இந்தியா முழுவதிலிருந்தும் பஞ்சாயத்துத் தலைவர்களும் , உறுப்பினர்களும் , இன்ன பிறரும் ஹிவரே பஜாருக்கு புனிதப் பயணம் போன வண்ணம் இருக்கிறார்கள் .
 
மொத்த இந்தியாவில் ஒரு ஹிவரே பஜார் மட்டும் தானே , அதனால் தான் நம் அட்டைக்கத்தி கலைஞர்கள் கவனத்துக்கு விஷயங்கள் வராமல் வீராணம் குழாய்க்குள்ள போய் உக்கார வேண்டியதாப் போச்சு என இணையப் போராளிகள் கிசுகிசுப்பது கேட்கிறது , அடப் பதர்களா , கண் திறந்து பாருங்கள் , இணையமெங்கும் இதே போல் வெற்றிக் கதைகள் கொட்டிக் கிடக்கின்றன , பாலைவன ராஜஸ்தானில் , தண்ணீர் மனிதன் என அறியப்பட்ட , மெகசேசே விருது வாங்கிய ராஜேந்திர சிங் என்னும் போராளி , மறைந்த ஆர்வாரி நதியை உயிர்ப்பித்துக் காட்டியது நம் அட்டக்கத்திக் கலைஞர்களின் கவனத்தைக் கவரவில்லை , ஏன்னா அங்க கத்திக் கத்திக் வசனம் பேசி , கொக்கோ கோலா கம்பெனி ரவுடிகளை அடித்துத் துவைத்து , தமிழனுக்கு , அரிப்புக்கு சுகமா சபட் லோஷன் தடவிக் காசக் கறக்க முடியாது பாருங்க . 
 
அது எதுக்குப்பா தமிழா , அடுத்த காந்தி இவருதான்னு நீங்க எல்லாம் டீக்கடைல உக்கார்ந்து பேப்பரும் கையுமா விவாதிச்ச அன்னா ஹசாரேவோட ராலேகான் சித்தி , பாபா ஆம்டேவோட சோம்நாத் மற்றும் ஆனந்த்வன் அப்டின்னு நீ பாக்காத நிஜத் தலைவன்கள், நீர்மேலாண்மை பற்றிப் பக்கம் பக்கமா ,புத்தகம் புத்தகமா பேசியிருக்காங்க . இதெல்லாம் நம்ம பேய்த்தூக்கத்தக் கலைக்கல , ஒரு சினிமா வசனம்தான் நமக்கெல்லாம் மின்னதிர்ச்சி கொடுத்து நம்ம ஞானக் கண்ணத் திறந்து வைக்குது .
 
ஆனா பாவம் நம்ம அட்டக்கத்திக் கலைஞர்களுக்குத் தான் காசு மட்டுமே தெரியிற ஒரு "செலக்டிவ் கம்னாட்டீஷியா" இருக்கு , உன்னிலிருந்து பிறந்த கலைக்கடவுள்கள் உன்ன மாதிரித் தான இருப்பாங்க தமிழா , அதுக்கெதுக்கு  ரத்தக் கொதிப்பும் பக்கவாதமும் ஒருசேர வந்த மாதிரிக் கோழை  வழியக்  , கொக்ககோலா விளம்பரத்துக்கு வந்த தம்பி இப்போ அதே கம்பெனிய எதுத்துப் பேசலாமான்னு , கேணத்தனமா ஒரு கேள்வியக் கேக்குற ? கேட்டு உனக்குப் புத்தி சுவாதீனமில்லன்னு நீயே வெளிக்காட்டிக்கிற !
 
எந்தப் பயிர், எந்த வகை , குறைவாகத்  தண்ணீர் கேட்கும் எனப் புரிந்து பயிரிடுவதும் , ஸ்ரீ முறை (SRI -System Of Rice Intensification ,(இப்போது இம்முறை ஏனைய பயிர்களிலும் பயனில் இருக்கிறது ) DSR (Direct Seeding of Rice ) முறை , Micro Irrigation , Crop rotation , Crop Diversification , Organic Farming , Integrated farming இவை பற்றியெல்லாம் நம் விவசாயிகளுக்கு , கழுத்து நரம்பு புடைக்காம , பெப்சிகாரன குறை சொல்லாம பாடம் எடுத்து கொஞ்சம் புரிய வை தமிழா !
 
முடிவாய் ஒன்றே ஒன்று தமிழா : நம் பிரச்சினைகளுக்குக் காரணங்களும் , காரணிகளும் நமக்கு வெளியில் இல்லை , நமக்குள்ளேயே தான் இருக்கின்றன என்பதை உணர் ! நம் தவறுகள் என்னென்ன , நம் நடவடிக்கைகளில் என்னென்ன மாற்றம் கொணர்ந்தால் என்னென்ன நன்மைகள் விளையும் என்பதை ஆய்ந்தறி ! வெறுமே வீர வசனங்களும் , பஞ்ச! டயலாக்குகளும் நம் வாழ்வைத் திருத்தி அமைக்கப் போவதில்லை , திறந்த மனதோடு பிரச்சினைகளை ஆய்ந்து , தீர்வுகள் அறிந்து , அதைச் செயல்படுத்தி , நமக்கு நாமே உதவினால் ஒழிய , நமக்கு உய்வில்லை என்பதை உணர் ! அட்டைக்கத்திகளை நம்பி நேரம் , பணம் விரயமிடாமல் , உன் மொண்ணைக் கத்தி மூளையைக் கொஞ்சம் கூர்தீட்டு தமிழா ! தமிழகமெங்கும் ஹிவ்ரேபஜார்களை உருவாக்கு , மக்கள் தலைவர்கள் ,ஒவ்வொரு பஞ்சாயத்திலும் , மக்களுக்குள்ளேயே மறைந்திருக்கிறார்கள்  . அவற்றை பொம்மலாட்டத் திரையில் தேடாதே தமிழா !
 
முன்குறிப்பை வலியுறுத்தும் ஒரு சிறு பின்குறிப்பு : இந்தப் பதிவை படித்துவிட்டு , "நீ நடிகர் விஜய்க்கு எதிரானவனா ? முருகதாசிக்கு எதிரானவனா ? சினிமாக் கலைஞர்களுக்கு  எதிரியா என்று மொண்ணைக் கேள்விகள் கேட்போரின் , ட்ரோல் செய்ய முயற்சிக்கும் அறியாப்பதர்களின் ,  வால்கள் ஓட்ட நறுக்கப்படும் ,  உள்நாட்டு , பன்னாட்டு நிறுவனங்களின் சுரண்டலை எவ்விதத்திலும் ஆதரிப்பது இந்தப் பதிவின் நோக்கமல்ல , அவர்களைவிட பெரிய குற்றவாளி , அடிப்படைப் புரிதலற்ற , அறியாமையிலிருக்கும் நாமே என்பதை வலியுறுத்தவே இந்த ஆதங்கப் பதிவு . தமிழகத்தின் தண்ணீர் தேவையைத் தீர்க்க,  விழும் ஒவ்வொரு மழைத் துளியையும் சேகரிக்க வேண்டியதும் , தண்ணீரைச் சரியாய்ப் பயன்படுத்தும் மேலாண்மை உத்திகளுமே  ஒரே உறுதியான வழி . "தன்னூத்து"கள் தானே பொங்கி நிரம்புவதில்லை , நீயும் நானும் சேர்ந்து நிரப்பினால் தான் அது காலாகாலத்துக்கும் நிறைந்து நம் தேவை தீர்க்கும் . கொக்ககோலாவும் பெப்சியும் சிறு எதிரிகள் , நீர் மேலாண்மை பற்றிய உன் அடிப்படை அறிவின்மையே பெரும் எதிரி !

எனக்கு ஒரே ஒரு விடயம் மட்டும் விளங்கவில்லை.

தமிழ் சினிமாவில் வாரத்துக்கு எத்தனையோ படங்கள் வெளிவருகின்றன. எத்தனையோ நடிகர்களின் நடிப்பில் எத்தனையோ இயக்குனர்களின் இயக்கத்தில்.

எதுக்கு பிரபல்யமான நடிகரின் அல்லது இயக்குனரின் படங்களுக்கு மட்டும் ஆயிரத்தெட்டு விமரிசனங்கள்.

பிரபல்யங்களை விமர்சனம் செய்து, முரண்பாட்டு பிரபல்யம் அடையும் நோக்கமா இந்த எழுத்தாளர்களுக்கு.

இந்த படம் வரும் வரை நீங்கள் தண்ணீர் பற்றிய விளக்கங்களும் பன்னாட்டு கம்பனிகளின் சுரண்டல்கள் பற்றி எழுதிய கட்டுரைகளும் எத்தனை.?

ஆக குறைந்தது உங்களை போன்ற ஆட்களை விளித்து எழுப்பி கட்டுரைகள் எழுத வைக்க ஆவது இந்த படங்கள் உதவி இருக்கின்றன.


 

தானும் ..... தள்ளியும் ..... மாட்டான் தமிழன்.

எனக்கு ஒரே ஒரு விடயம் மட்டும் விளங்கவில்லை.

தமிழ் சினிமாவில் வாரத்துக்கு எத்தனையோ படங்கள் வெளிவருகின்றன. எத்தனையோ நடிகர்களின் நடிப்பில் எத்தனையோ இயக்குனர்களின் இயக்கத்தில்.

எதுக்கு பிரபல்யமான நடிகரின் அல்லது இயக்குனரின் படங்களுக்கு மட்டும் ஆயிரத்தெட்டு விமரிசனங்கள்.

பிரபல்யங்களை விமர்சனம் செய்து, முரண்பாட்டு பிரபல்யம் அடையும் நோக்கமா இந்த எழுத்தாளர்களுக்கு.

இந்த படம் வரும் வரை நீங்கள் தண்ணீர் பற்றிய விளக்கங்களும் பன்னாட்டு கம்பனிகளின் சுரண்டல்கள் பற்றி எழுதிய கட்டுரைகளும் எத்தனை.?

ஆக குறைந்தது உங்களை போன்ற ஆட்களை விளித்து எழுப்பி கட்டுரைகள் எழுத வைக்க ஆவது இந்த படங்கள் உதவி இருக்கின்றன.

 

தானும் ..... தள்ளியும் ..... மாட்டான் தமிழன்.

 

சமூகத்தில் சாதாரண நிலையில் இருக்கும் ஒருவரது கருத்துக்கு மற்றவர் கொடுக்கும் மதிப்பு குறைவு அதன் தாக்கமும் குறைவே. ஆனால் சமூகத்தில் புகழ் பெற்றவர் வைக்கும் ஒரு கருத்துக்கு மதிப்பும் அதன் வீச்சும் அதிகம். அதனாலே அது அதிகம் விமர்சிக்கப்படுகிறது. அதுவும் தமிழகத்தின் அடுத்த முதல்வர் என ரசிகர்களால் தூக்கி நிறுத்தப்பட்டு இருக்கும் ஒருவரது பேச்சுக்கு விமர்சனம் என்பது பெரிய விடயம் அல்ல.

பன்னாட்டு கம்பனிகளின் சுரண்டல்கள் பற்றியும், நீர் மேலாண்மை பற்றிய கட்டுரைகளும் இணையத்தில் ஏராளம் உள்ளன. ஆனால் நம் வலைப்பதிவர்கள் கத்தி படம்தான் இந்த சிந்தனையை தூண்டியதாக எழுதியதன் விளைவே தான் இந்தக் கட்டுரையை எழுதுவதாக  அலெக்ஸ் பால் மேனன் குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்தக் கட்டுரையின் நோக்கம் கத்தி படத்தை விமர்சிப்பதல்ல...மாறாக அடிப்படைப் புரிதலற்ற , அறியாமையிலிருக்கும் தமிழக மக்களை இந்த சந்தர்ப்பத்தில் சாட்டுவதே என்று குறிப்பிட்டுள்ளார்.

நீர் மேலாண்மை பற்றி அறிய வேண்டுமானால் கீழ்க்கண்ட சொற்பதங்களை இணையத்தில் தேடிப்பாருங்கள்..

Balisana,Bhaonta ,Kolyala, Darewadi,Devgaon,Gandhigram,Guriaya, Jhabua, Mahudi,Mandalikpur ,  Mangarol, Melaghar, Moti morasal,Onikeri, Pallithode, Raj Samadhyala, Ranapur,Rozam,Sayagata , Saurashtra, Sukhomajri

 

ரசிகனே, ஒரு நிமிஷம்... கத்தி படமும் சூரியூர் கிராமமும்!

தமிழகத்தின் வளமான காவிரிக் கரையோர கிராமமொன்றுக்கு நேர்ந்துள்ள தண்ணீர்க் கொடுமை இப்போது சமூக வலைத் தளங்களில் பரபரப்பாக வலம் வருகிறது. அந்த உண்மைக் கதையை இங்கே பார்க்கலாம்... திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழகம் பின்புறம் அமைந்துள்ள ஓர் அழகிய கிராமம் தான் 'சூரியூர்'. ஜல்லிக்கட்டுக்கு பெயர்போன இங்கு தொன்றுதொட்டு வரும் ஒரே தொழில் விவசாயம்தான். திருச்சியைச் சுற்றி காவிரியாற்றின் தண்ணீரை நம்பித்தான் விவசாயமே உள்ளது. காவிரி வறண்டு போனதால் பல ஏக்கர் நிலம் பாலைவனம் ஆனதை நாம் பார்த்திருக்கிறோம்.

 

28-cow-former-agriculture-600.jpg

ஆனால் சூரியூரில் சிறு அளவு வாய்கால் பாசனம் கூட இல்லை. வானம் பார்த்த மானாவரி பூமிதான். அதே நேரம் தமிழகத்தில் வறட்சி ஏற்பட்டபோதும் முப்போகமும் விளைந்த பூமி இந்த சூரியூர். காரணம், சூரியூரைச் சுற்றி முன்னோர்கள் விட்டுச்சென்ற எண்ணற்ற ஏரிகளும், குளங்களும்தான் நிலத்தடி நீரை வற்றாமல் பார்த்துக்கொண்டன.

 

28-water81-600.jpg

 

செயற்கைக் கோள் உதவியோடு சூரியூரில் உள்ள தண்ணீர் வளத்தை கண்டறிந்த பெப்சி நிறுவனம், தனது தொழிற்சாலையை நிறுவ ஆசைப்பட்டது.

 

பெப்சி (Pepsi) நிறுவனத்தின் ஆசையை நிறைவேற்ற அவர்களுடன் கைகோர்த்தது திருச்சியில் உள்ள LA Bottlers Pvt Ltd நிறுவனம். LA Bottlers Pvt Ltd நிறுவனத்தின் உரிமையாளர் அடைக்கலராஜ் காங்கிரஸ் கட்சியிலிருந்து தொடர்ந்து 3 முறை திருச்சி நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர்.

 

சூரியூரில் பாட்டில் (Glass Bottle) தயாரிக்கும் தொழிற்சாலை வரப்போவதாக தவறான தகவலை அப்போதைய சூரியூர் ஊராட்சிமன்ற தலைவர் மலர்விழி மூலம் சொல்லி தொழிற்சாலையின் கட்டிட வேலையைத் தொடங்கி 2012 ம் ஆண்டுமுதல் தொழிற்சாலை இயங்கியது.

 

28-water-issue1-600.jpg

 

அடுத்த மூன்றே மாதத்தில் படிப்படியாக விவசாய கிணற்றில் தண்ணீர் வற்றத் தொடங்கியது. அப்போதுதான் சூரியூர் மக்களுக்கு தெரியவந்தது இயங்கிகொண்டிருப்பது பெப்சி குளிர்பான கம்பெனி என்று. உஷாரான பெப்சி நிர்வாகம் உடனடியாக சூரியூரில் உள்ள சிலருக்கு தினக்கூலியாக வேலை வழங்கப்பட்டது.

 

இருப்பினும் தொடர்ந்து கிணற்றில் தண்ணீர் வற்றியதால் 2012, டிசம்பர் மாதம் சூரியூர் விவசாய சங்கம் சார்பில் திருச்சி மாவட்ட ஆட்சியர் ஜெயஸ்ரீ முரளிதரன் அவர்களிடம் புகார் மனு தந்தனர். இந்நிலையில் சில நண்பர்களுடன் சூரியூர் சென்று அங்குள்ள நிலவரத்தை ஆராய்ந்தனர் சில தன்னார்வலர்கள். அப்போதுதான் ஆபத்தான, சுத்திகரிக்கப்படாத கழிவுநீரை அங்குள்ள நிலங்களில் நேரிடையாகக் கலக்க விட்ட கொடுமை தெரிய வந்தது.

 

அன்றுமுதல் சூரியூரைச் சார்ந்த ராஜேந்திரன் பெயரில் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் பல்வேறு துறைகளில் இருந்து தொழிற்சாலையின் உரிமம் சம்மந்தமாக ஆவணங்கள் பெறப்பட்டது. பெறப்பட்ட ஆவணங்களை பார்த்தபோதுதான் பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்தன. இந்த தொழிற்சாலை அனுமதி பெறாமலேயே கட்டப்பட்டிருப்பது நகர் ஊரமைப்புத் துறை மூலம் அம்பலமானது. அதுமட்டுமில்லாமல் போலி ஆவணங்களைச் சமர்ப்பித்து தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்திடமிருந்து உரிமம் பெறப்பட்டுள்ளதும் தெரியவந்தது.

 

இன்னும் பல ஆவணங்களை ஒன்றிணைத்து திருச்சி மாவட்ட ஆட்சியர் ஜெயஸ்ரீ முரளிதரன் அவர்களிடம் புகார் மனு அளிக்கப்பட்டது. ஆனால் நடவடிக்கை எடுக்க முன்வரவில்லை. அதனால் மக்களை திரட்டி போராட்டம் நடத்த திட்டமிட்டு " உலக தண்ணீர் தினம் - 2014 அன்று உண்ணாவிரதம் இருக்க முடிவெடுக்கப்பட்டது.

 

இந்நிலையில் திருச்சிராப்பள்ளி கோட்டாசியர் தலைமையில் நடைப்பெற்ற அமைதி பேச்சுவார்த்தையில், அரசு நிர்வாகம் பெப்சி தொழிற்சாலைக்கு மட்டுமே ஆதரவாக பேசியதைத் தொடர்ந்து பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. திட்டமிட்டபடி உண்ணாவிரதம் நடந்தது. இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு மாசுகட்டுப்பாட்டு வாரியம் பெப்சி தொழிற்சாலைக்கு உரிமத்தை புதுப்பித்து நீட்டிப்பு வழங்கப்படவில்லை.

 

இருப்பினும் இன்றுவரை மாவட்ட நிர்வாகம், பத்திரிக்கை, ஊடகம் என்று பல கதவுகளை தட்டிவிட்டார்கள் சூரியூர் மக்கள். ஆனால் அதிகார பலமும், பண பலமும் பாதாளம் வரை சென்று அறவழியில் போராடும் சூரியூர் மக்களுக்கு நியாயம் கிடைக்கவிடவில்லை.

 

28-kaththi4-699.jpg

 

தற்போது வெளிவந்துள்ள "கத்தி" திரைப்படம் மூலம் இந்த பிரச்சினை மீண்டும் அதிகார வர்க்கத்தின் கவனத்தை எட்டும் என்ற நம்பிக்கையில், மீண்டும் சூரியூர் பிரச்சினையை முன்னெடுத்துள்ளனர். "கத்தி" திரைப்படத்தில் வரும் கற்பனை கதையை பார்த்துவிட்டு கண்ணீர் விடும், ஆதங்கப்படும், கோபப்படும் ரசிகர்களே, சூரியூரில் பெப்சி கம்பெனிக்கு எதிராக நடைபெறும் போராட்டதுக்கு என்ன செய்யபோகிறீர்கள். தன்னால் மட்டும் என்ன செய்யமுடியும் என்று விலகிபோகிறீர்களா? அல்லது "சிறு துரும்பும் பல் குத்த உதவும்" என்று எங்களுடன் இணையபோகிறீர்களா? மனசாட்சியுள்ளவர்கள், மானமுள்ளவர்கள் இந்த விவசாயிகளின் கண்ணீரை துடைக்க எங்களின் அறப்போராட்டத்தில் இணையவார்கள் என்று நம்புகிறோம்" என்று குரல் எழுப்பியுள்ளனர் சூரியூர் மக்கள்.

 

மேலும் விவரங்களுக்கு: தண்ணீர் இயக்கம்

 

www.thanneer.org

 

வினோத்ராஜ் சேஷன்: 9500189319

 

ivfvinothraj@gmail.com

http://tamil.filmibeat.com/news/sooriyur-village-affected-corporate-bottling-company-031495.html

Edited by பகலவன்

  • கருத்துக்கள உறவுகள்
தெரியாமல் போய், நேற்று இரவு கத்தி காரர்களிடம் மாட்டி விட்டேன்.
 
லைட் ஆப் பண்ணிப் போட்டு சாத்தோ, சாத்து எண்டு சாத்தி விட்டார்கள்.
 
50 ரௌடிகளை, வில்லன் அனுப்ப, (அவர்கள் இருக்கும், ஆர்ப்பாட்ட சூழலிலும்) காயின்ஸ் எறிய, அது விழும் சத்தத்தில், மெயின் சுவிட்சினை ஆப் பண்ணி, ஒன் பண்ணி, வில்லன்களைப் பந்தாடுகிறார் நம்ம அட்டக் கத்தி தலைவர்.
 
அட போங்கடா... நீங்களும் உங்க லாயிக்கும்..... :o  :blink:  :unsure:  :huh:

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

தெரியாமல் போய், நேற்று இரவு கத்தி காரர்களிடம் மாட்டி விட்டேன்.

லைட் ஆப் பண்ணிப் போட்டு சாத்தோ, சாத்து எண்டு சாத்தி விட்டார்கள்.

50 ரௌடிகளை, வில்லன் அனுப்ப, (அவர்கள் இருக்கும், ஆர்ப்பாட்ட சூழலில்) காயின்ஸ் எறிய, அது விழும் சத்தத்தில், மெயின் சுவிட்சினை ஆப் பண்ணி, ஒன் பண்ணி, வில்லன்களைப் பந்தாடுகிறார் நம்ம அட்டக் கத்தி தலைவர்.

அட போங்கடா... நீங்களும் உங்க லாயிக்கும்..... :o:blink::unsure::huh:

அண்மையில் தெரியாத்தனமாக மெட்ராஸ் என்றொரு படம் பார்க்க வேண்டியதாப் போய்விட்டது. அரங்கில் மொத்தமே இருபதுபேர்தான்..! இப்படியெல்லாம் படம் எடுத்து அது ஓடும் எண்டு நினைக்கிறார்களா என்று தோன்றியது.. :o

  • கருத்துக்கள உறவுகள்
கிழடு கட்டயளைக் கொண்டு போய், தண்ணி போற குழாய் உள்ளார ஒக்கார வைத்து தலைவர் வேற அதுக்குள்ள குந்தி இருக்கிறாரு.
 
இன்னுமொரு குழாய் உள்ளார, இன்னுமொரு கூட்டம் கிழடுகள், சமந்தாவுடன்.
 
வெளிய போலீஸ், media, 
 
மக்கள் வேற தண்ணி வர இல்லை எண்டு அல்லோல கல்லோலம்.  :o
 
இந்த ரணகணதிளையும் அவுகளுக்கு, ஒரு கனவு... டூயட் பாடல்... :wub:
 
என்ன இழவு லாஜிக் அப்பா, முருகதாஸ்!!  :blink:

Edited by Nathamuni

அடுத்த கிழமை "பாசமலர்" போடுகின்றார்களாம் போய் பாருங்கோ . :icon_mrgreen: .

 

 

கத்தி வசூலில் நூறு கோடி தாண்டிவிட்டது .அவர்கள் வேண்டுவதும் அதுவே . :o

 

மெட்ராஸ் அருமையான படம் ,இரண்டு படவிழாகளுக்கு தெரிவுசெய்யப்பட்டிருக்கு . இவர்கள் வேண்டியதும் இதுவே . :o

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்த கிழமை "பாசமலர்" போடுகின்றார்களாம் போய் பாருங்கோ . :icon_mrgreen:

கத்தி வசூலில் நூறு கோடி தாண்டிவிட்டது .அவர்கள் வேண்டுவதும் அதுவே . :o

மெட்ராஸ் அருமையான படம் ,இரண்டு படவிழாகளுக்கு தெரிவுசெய்யப்பட்டிருக்கு . இவர்கள் வேண்டியதும் இதுவே . :o

கொஞ்சம் அசந்தீங்கெண்டா, 1000 கோடி எண்டு சொல்லீடுவம்.

பண்ணாடைப் படங்கள் எடுக்கிறது. பிறகு பீலா விடுறது.

ஒரு சிற்றி தண்ணி சப்ளை நிறுத்தி, வெளிய வந்தா, நின்ற, பொலிஸ் படை, அடுத்த நாள், அவரா வந்து சரணடைவாராம் என்டு சொன்னதை கேட்டு, எஸ்கேப். கீரோ டூயட் பாட கிளம்பிட்டாரூ.

ஸ்ஸ்.. அப்பா, முடியல.

பயங்கரமா, கடுப்பேத்திட்டாங்க மை லாட் :icon_mrgreen:

சூது கவ்வும், அதிதி, நேரம் போன்ற சின்ன பட்ஐட் படங்கள், அருமை.

 

ஆமா அர்ச்சுன் அண்ண, பாசமலர் உங்க காலத்துப் படமோ?  :icon_mrgreen:

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

கதை திரைக்கதை வசனம் படத்தில பார்த்திபன் சொல்கிறார் மூளையை கழட்டி வைச்சுட்டு படம் பாருங்கள் என்று. அது இப்ப அனேகமான படங்களுக்குப் பொருந்தும்.  நீங்கள் வீணா மூளையுடன் போய்ப் படத்தைப் பார்த்தது தப்பு...! :)

அண்மையில் தெரியாத்தனமாக மெட்ராஸ் என்றொரு படம் பார்க்க வேண்டியதாப் போய்விட்டது. அரங்கில் மொத்தமே இருபதுபேர்தான்..! இப்படியெல்லாம் படம் எடுத்து அது ஓடும் எண்டு நினைக்கிறார்களா என்று தோன்றியது.. :o

 

இசை,

 

மெட்ராஸ் ஒரு அருமையான அரசியல் படம். உங்களுக்கு ஏன் அது பிடிக்கவில்லை என்று தெரியவில்லை. பார்ப்பன மொழியில் கதைக்காத உண்மையான மக்களின் வாழ்வியலை படம் பிடித்து காட்டிய சினிமா மெட்ராஸ். நான் இரண்டு தடவை அடுத்தடுத்த நாட்கள் பார்த்த படம்.

 

ஒரு சில வெளிநாட்டு விருதுகளையும் இப் படம் பெறும் என்று நம்புகின்றேன்.

ரசிப்புதன்மை ரசிகனுக்கு ரசிகன் மாறுபட்டது.

எனக்கு மெட்ராஸ் படம் பிடித்தது. ஒரு சாதாரண வாழ்க்கைக்குள் அரசியல் எப்படி பட்டது என்றதை இதை விட அருமையாக யாரும் விளக்க முடியாது. அந்த இயக்குனர் ரஞ்சித் ஒரு யதார்த்தமான இயக்குனர்.

அவரது முதல்படமான அட்டைக்கத்தி பார்த்தவர்களுக்கு விளங்கும். எத்தனை பேர் படம் காட்டி கொண்டு திரிகிறார்கள் (வாழ்கையில் கூட ) என்று.

வாய் கிழிய கத்தி கொண்டு தான் அரசியல் செய்வார்கள் என்று இல்லை, சுப்ரமணியபுரம் போல மெட்ராஸ் போலவும் அரசியல்வாதிகள் நிஜ வாழ்கையில் நிறைய பேர் இருக்கிறார்கள்.

அவர்கள் பேசும் மொழியும், அந்த சாக்கடை சூழலும் மேல் தட்டு வர்க்க மக்களின் கற்பனைகளில் கூட வரமுடியாத காட்சிகள்.

  • கருத்துக்கள உறவுகள்

இசை,

மெட்ராஸ் ஒரு அருமையான அரசியல் படம். உங்களுக்கு ஏன் அது பிடிக்கவில்லை என்று தெரியவில்லை. பார்ப்பன மொழியில் கதைக்காத உண்மையான மக்களின் வாழ்வியலை படம் பிடித்து காட்டிய சினிமா மெட்ராஸ். நான் இரண்டு தடவை அடுத்தடுத்த நாட்கள் பார்த்த படம்.

ஒரு சில வெளிநாட்டு விருதுகளையும் இப் படம் பெறும் என்று நம்புகின்றேன்.

படத்தின் பின்புலம் வடசென்னை எல்லாம் சரி.. ஐடி கம்பனி மாதிரி ஒன்றில் வேலைபார்க்கும் நாயகன் பக்கா ரவுடி மாதிரியும் திரிகிறார். கொலை செய்துவிட்டு இறுதியில் நாயகியுடன் சேர்ந்து ரீச்சங் பண்றார்.. என்னய்யா அநியாயம் இது.. :D

அந்த மாதிரி சண்டைக்காட்சிகளைப் பார்த்தாலே எழும்பி ஓடவேணும் போலை இருக்கும். இந்த ரோதனைக்காகத்தான் படம் பார்க்கப் போறதில்லை.. என்ன செய்யிறது.. மகள் அஞ்சான் என்ற படத்தைப் பார்த்திட்டு இதுக்கும் போக வெளிக்கிட்டதால நான் மாட்டினன்.. :huh:

  • கருத்துக்கள உறவுகள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.