Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழில் வந்தது முதலாவது புற்தரை மைதானம்

Featured Replies

எனக்கு இன்னும் இந்த அரசியல் விளங்குதில்லை. யாராவது விளங்க படுத்துங்களேன்.

சிங்கள அரசு எங்களுக்கு நியாயமான தீர்வை தரப்போவதில்லை. (முடிந்த முடிபு, அல்லது ஏற்றுகொள்ள படக்கூடிய விவாதம்).

யாழ்ப்பாணத்தில் சிங்கள அரசு நேரடியாக புகையிரதம் விடுதல், வீதி புனரமைத்தல், மைதானம் செய்தல் அபிவிருத்தி என்ற போர்வையில் நடக்கும் கண்துடைப்பு நாடகம் என்பது பலருடைய வாதம்.

சரி இந்த நாடகம் யாருக்கு

இருவருக்காக இருக்கலாம்

1. மேற்குலக நாடுகளுக்கு

2. யாழ்ப்பாண மக்களுக்கு (தேர்தலில் வெல்ல)

இந்த நாடகத்தை போலி அல்லது கண்துடைப்பு என்று உங்கள் அறிவுக்கு தெரிந்ததுக்கு மேற்குலக கொள்கை வகுப்பாளர்களுக்கோ, யாழ் மக்களுக்கோ தெரியமல் இருக்க அவர்கள் முட்டாள்கள் என்று நீங்கள் நினைக்கிறீர்களா.?

அபிவிருத்தி செய்கிறார்கள் எனவே இனி தீர்வு கிடைத்து விடும் என்று மேற்குலகம் சும்மா இருக்கும் என்று நினைகிறீர்களா..??

புற்தரையும், புகையிரதமும் விட்ட மகிந்தவுக்கு தான் இனிமேல் யாழ் மக்கள் தங்கள் வாக்குகளை அள்ளி வீசுவார்களா..??

சரி இன்னொரு விதமாக பார்ப்போம்.

அவர்கள் தீர்வுதான் தரவில்லை. இப்படியான சின்ன சின்ன அபிவிருத்திகளை கூட செய்ய கூடாது என்று சொல்கிறீர்களா. அது கூட வேற ஏதாவது நாடு கொடுக்கும் பணத்தில் ஒரு கொஞ்சத்தை எங்களுக்கு செலவு செய்கிறது.

அதை கூட வேண்டாம் என்று சொல்கிறீர்களா..?

எதாவது ஒரு நாடு இலங்கை அரசாங்கத்தை மீறி உங்கள் கோரிக்கைகளுக்கு செவி சாய்த்து வடமாகாண சபைக்கு நேரடி நிதி பங்களிப்பை செய்துவிட முடியுமா..??

எதோ எங்கட மக்களுக்கு கொஞ்சமாவது கிடைக்குது என்று சந்தோசபடுங்கள்.

எங்களுக்கு என்று ஒரு நாடு அல்லது தீர்வு கிடைக்கும்போது, இதுகளுக்கு செலவு செய்யும் காசாவது மிச்சப்படும் தானே.

நாங்கள் எங்களுக்குள் முரண்படுவதால் இதுவரை ஏதும் லாபம் கிடைச்சு இருக்கிறதா..??

அல்லது எங்களுக்கு புற்தரை மைதானம் வேண்டாம், வன்னியிலே மக்களுக்கு இடவசதி செய்து கொடு, இராணுவத்தை வெளியேற்று என்று பத்திரிசியார் கல் லூரி மாணவனையோ ஆசிரியரியோ அதிபரையோ சொல்ல சொல்லுங்கள் பார்க்கலாம்.

இங்கே எங்களுக்குள் பேசி எங்களுக்குள் முரண்பட்டு என்னதான் பயன்.

இங்கே நாங்கள் எழுதும் கருத்துகள் யாரை நோக்கி எழுதுகிறோம். இது அவர்களை போய் சேருமா..??

இராணுவத்தை நிகழ்வுக்கு கல்லூரி அதிபர் மகிழ்வுடன் தான் கூப்பிட்டு இருப்பாரா.? எங்களுக்கு அது பற்றி தெரியுமா..??

இப்படி எத்தனையோ கேள்விகள் இருக்க நாங்கள் பொதுவாகத்தான் முரண்பட்டு கொண்டு இருப்போமா..??

இது எனது மனசில் தோன்றிய பொதுவான கருத்து யாரையும் காயபடுத்தி இருந்தால் மானசீகமாக மனிப்பு கேட்டுகொள்கிறேன்.

யாழ்ப்பாணத்திற்கு செய்யும் உதவிகள் தனியே ஓட்டுக்காக செய்யும் உதவிகள் கிடையாது. மாறாக தமிழர்ககளை நாங்கள் நன்றாக வைத்திருக்கின்றோம் தமிழர்கள் எந்தப் பிரச்சனையும் இல்லாமல் இருக்கின்றார்கள் என்பதை யாழ்ப்பாணத்தை வைத்துத்தான் உலகத்திற்கு காட்டுவது. பேசப்படுவது தமிழர் பிரச்சனை என்றபோதெல்லாம் யாழ்ப்பாணமே அதற்கு அடயாளமாக காட்டப்படுவது. அதனால் தான் போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிதியில் அப்பிரதேசங்களுக்கான அபிவிருத்தியை அலட்சியப்படுத்தி யாழ்ப்பாணத்தில் நீச்சல் குளங்கள் புகையிரதங்கள் கோவில் புனரமைப்புகள் திருவிழாக்கள் திருவிழாக்களுக்கு பூத்துவுதல் வாகனங்கள் வளங்குதல் மைதானங்கள் அமைத்தல் என அனைத்தையும் சிங்கள அரசு செய்கின்றது.

போரால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு மன்னர் வவுனியா மட்டகிழப்பு அம்மாறை போன்ற பிரதேசங்கள் குறித்து எவரும் அக்கறைப்படுவதில்லை. வெளிநாட்டுத் தூதர்கள் வந்தாலும் தமிழர் பிரச்சனை குறித்துப் பேசுவதற்கு அவர்கள் யாழ்ப்பாணத்தையே பார்வையிடுவார்கள் தவிர உண்மையில் பாதிக்கப்பட்ட இடங்களை இல்லை.

அதே நேரம் புலம்பெயர் தேசத்தில் இருந்த பெரும்பான்மை நிதி உதவிகளும் யாழுக்கே சென்றடைகின்றது. அரச உத்தியோகங்களும் அரசை அண்டிப்பிழைக்கும் வியாபாரங்களும் யாழைச் சுற்றியே அதிகம் இருக்கின்றது. சிங்களம் ஈழம் என்ற பிரச்சனையை சர்வதேசரம் அணுக முற்படும் போதெல்லாம் யாழ்ப்பணத்தைப் பார் என்று படம் காட்டுகின்றது.

யாழ்வாசிகளும் தமக்கு கிடைப்பது கிடைக்கட்டும் என்று அனுபவிக்ப்பழக்கப்பட்டவர்கள். அவர்களே பத்திரிகைகளோ ஒருபோதும் எங்களுக்கு இந்த உதவிகள் வேண்டாம் போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு செய்யுங்கள் என்று சொனன வரலாறும் கிடையாது சொல்லப் போவதும் கிடையாது. அவ்வளவு ஏன் வடக்கு முததலமைச்சர் எத்தனை தரம் போரால் பாதிக்கப்பட்ட வவுனியா மன்னார் முல்லைத்தீவுப் பிரதேசங்களுக்கு போனரர் மக்களுடன் கதைத்தார் என்று கேட்டுப்பார்த்தால் இவைகளின் சூட்சுமம் புரியும்.

பேரினவாதம் தமிழர்களை அடக்கி ஒடுக்கி கொடும் போரைத்தெடுத்து நிர்கதியாக்குகின்றது. யாழ் மையவாதம் அரசின் நெழிவுசுழிவுகளூடாக அண்டிப்பிழைத்துக்கொள்கின்றது. நிர்கதியான மக்களுக்கான சர்வதேச உதவிகளை பேரினவாதம் மையவாதத்திற்கு திருப்புகின்றது அதை மையவாதமும் அனுபவிக்கின்றது. இதனால் தான் பேரினவாதமும் மையவாதமும் எப்போதும் நண்பர்களாக இருக்கின்றனர்.

போருக்கும் போரால் பாதிக்கப்பட்ட மக்களின் நிர்கதிக்கும் இன்னும் அவர்கள் வறுமையில் வாடுவதற்கும் சிங்களப்பேரினவாதமும் யாழ்மையவாதமும் இணைந்தே காரணமாகின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

துல்ஸ் கிரிகெட் போரிங் எந்த காலமெல்லாம் மலையேறிப் போச்சு.

ஒருநாள் போட்டி T20 எனும் அரைநாள்ப் போட்டி எல்லாம் வந்தாச்சு.

கால்பந்து என்பது எப்போதுமே சிந்திக்க தெரியாதவர்களின் முரட்டு விளையாட்டு. ரூனி ஆகட்டும், ரொனால்டோ ஆகட்டும், பெக்கம் ஆகட்டும், மரடோனா ஆகட்டும், கண்டோனா ஆகட்டும், ஹென்றி, சிடான் என்று பெரும்பாலான வீரர்கள் முரடர்களாயும், மூளைக்கு வேலை கொடாதவர்களாயும், மனேஜரின் சொல்படி நடக்கும், ஒரு தெளைவான பேச்சாற்றல் அற்ற மனிதர்களாயே பெரும்பாலும் இருக்கிறனர்.

கிரிகெட் அப்படியில்லை, உடலுக்கும் மூளைக்கும், மனித விழுமியங்களுக்கும் பண்பாட்டுக்கும் வேலை கொடுக்கும் விளையாட்டு. கிட்டதட்ட ஒரு மினி வாழ்க்கைப்பாடம்.

வீரர்களும் கனவான்களையே இருப்பர். விளையாட்டின் ரசிகர்களும் அப்படியே.

அதனால்தான் போலோ - ராஜ விளையாட்டு

கால்பந்து - தொழிலாளர்களின் விளையாட்டு

கிரிகெட் - கனவான்களின் விளையாட்டு

என்று சொல்லப் படுகிறது.

இதை ஏற்றுக்கொள்ள முடியாது கோசன்.
 
கோல்ப் தான் ஜென்டில்மென் விளையாட்டு. மேலும் பணம் கொழிக்கும் விளையாட்டுக்களை பின்வ்ருமாறு பட்டியலிடலாம்.
 
1.கோல்ப்
2.டென்னிஸ்
3.உதைப்பந்து
4.கிறிக்கட்
 
அதிகளவு உடல்வழு தேவையான‌மற்றும் விரைவில் களைப்பை எற்படுத்தும் விளையட்டுகள்
 
1.கூடைப்பந்து
2.றகர்
3.உதைப்பந்து
4.டென்னிஸ்
5.கிறிக்கட்
 
மேலும், யாழில் றகர் பிரபல பாடசாலைகளில் விளையாடப்படுகிறதா? ஏன் றகர் யாழில் பிரபலம் அடையவில்லை?
  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணத்திற்கு செய்யும் உதவிகள் தனியே ஓட்டுக்காக செய்யும் உதவிகள் கிடையாது. மாறாக தமிழர்ககளை நாங்கள் நன்றாக வைத்திருக்கின்றோம் தமிழர்கள் எந்தப் பிரச்சனையும் இல்லாமல் இருக்கின்றார்கள் என்பதை யாழ்ப்பாணத்தை வைத்துத்தான் உலகத்திற்கு காட்டுவது. பேசப்படுவது தமிழர் பிரச்சனை என்றபோதெல்லாம் யாழ்ப்பாணமே அதற்கு அடயாளமாக காட்டப்படுவது. அதனால் தான் போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிதியில் அப்பிரதேசங்களுக்கான அபிவிருத்தியை அலட்சியப்படுத்தி யாழ்ப்பாணத்தில் நீச்சல் குளங்கள் புகையிரதங்கள் கோவில் புனரமைப்புகள் திருவிழாக்கள் திருவிழாக்களுக்கு பூத்துவுதல் வாகனங்கள் வளங்குதல் மைதானங்கள் அமைத்தல் என அனைத்தையும் சிங்கள அரசு செய்கின்றது.

போரால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு மன்னர் வவுனியா மட்டகிழப்பு அம்மாறை போன்ற பிரதேசங்கள் குறித்து எவரும் அக்கறைப்படுவதில்லை. வெளிநாட்டுத் தூதர்கள் வந்தாலும் தமிழர் பிரச்சனை குறித்துப் பேசுவதற்கு அவர்கள் யாழ்ப்பாணத்தையே பார்வையிடுவார்கள் தவிர உண்மையில் பாதிக்கப்பட்ட இடங்களை இல்லை.

அதே நேரம் புலம்பெயர் தேசத்தில் இருந்த பெரும்பான்மை நிதி உதவிகளும் யாழுக்கே சென்றடைகின்றது. அரச உத்தியோகங்களும் அரசை அண்டிப்பிழைக்கும் வியாபாரங்களும் யாழைச் சுற்றியே அதிகம் இருக்கின்றது. சிங்களம் ஈழம் என்ற பிரச்சனையை சர்வதேசரம் அணுக முற்படும் போதெல்லாம் யாழ்ப்பணத்தைப் பார் என்று படம் காட்டுகின்றது.

யாழ்வாசிகளும் தமக்கு கிடைப்பது கிடைக்கட்டும் என்று அனுபவிக்ப்பழக்கப்பட்டவர்கள். அவர்களே பத்திரிகைகளோ ஒருபோதும் எங்களுக்கு இந்த உதவிகள் வேண்டாம் போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு செய்யுங்கள் என்று சொனன வரலாறும் கிடையாது சொல்லப் போவதும் கிடையாது. அவ்வளவு ஏன் வடக்கு முததலமைச்சர் எத்தனை தரம் போரால் பாதிக்கப்பட்ட வவுனியா மன்னார் முல்லைத்தீவுப் பிரதேசங்களுக்கு போனரர் மக்களுடன் கதைத்தார் என்று கேட்டுப்பார்த்தால் இவைகளின் சூட்சுமம் புரியும்.

பேரினவாதம் தமிழர்களை அடக்கி ஒடுக்கி கொடும் போரைத்தெடுத்து நிர்கதியாக்குகின்றது. யாழ் மையவாதம் அரசின் நெழிவுசுழிவுகளூடாக அண்டிப்பிழைத்துக்கொள்கின்றது. நிர்கதியான மக்களுக்கான சர்வதேச உதவிகளை பேரினவாதம் மையவாதத்திற்கு திருப்புகின்றது அதை மையவாதமும் அனுபவிக்கின்றது. இதனால் தான் பேரினவாதமும் மையவாதமும் எப்போதும் நண்பர்களாக இருக்கின்றனர்.

போருக்கும் போரால் பாதிக்கப்பட்ட மக்களின் நிர்கதிக்கும் இன்னும் அவர்கள் வறுமையில் வாடுவதற்கும் சிங்களப்பேரினவாதமும் யாழ்மையவாதமும் இணைந்தே காரணமாகின்றது.

Good one.

பச்சை முடிந்து போச்சுது.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழரின் நீதியான கோரிக்கைகளுக்கு ஒரு தீர்வை வழங்காமல், இன்னும் திட்டமிட்ட இனவழிப்பிற்குள் அவர்களை வைத்துக்கொண்டு, வெளிநாடுகளுக்காக தமிழர் தாயகத்தில் நடப்பதாகக் காட்டும் அபிவிருத்தித் திட்டங்களால் பெரிதாக அவர்களின் வாழ்க்கை நிலை மாறிவிடப்போவதில்லை என்பது உண்மைதான். எம்மில் பெரும்பாலானவர்கள் இந்த மன நிலையிலேயே இன்றும் இருந்துகொண்டிருக்கிறோம். ஆகவே சிங்களம் செய்யும் எந்த வெளிப்பூச்சு வேலைகளும் எம்மைத் திருப்திப் படுத்தப்போவதில்லை என்பதும் தெரியும்.

ஆனால் மக்களுக்கு இதனால் ஏதாவது ஒரு நண்மை கிடைக்குமென்றால் இவற்றை ஆதரிக்காவிட்டாலும்கூட, எதிர்க்காமலாவது இருக்கலாம்.

ஏனென்றால் போரில் தோற்றுவிட்ட பின்னர் எம்மால் நிபந்தனை எதுவுமே விதிக்கமுடியாது. அவன் வைத்ததுதான் சட்டம், நாம் வேடிக்கை மட்டும்தான் பார்க்க முடியும்.

Edited by ragunathan

  • கருத்துக்கள உறவுகள்

கிரிக்கெட் ஒரு அடிமை விளையர்ட்டு .பிரிட்டனினால் ஆட்சிசெய்யப்பட்ட நாடுகள் மட்டும் விளையாடும் விளையாட்டு.(கொலண்ட் விதி விலக்கு) உதைபந்தாட்டம் சர்வதேச விளையாட்டு.

  • கருத்துக்கள உறவுகள்

கொழும்பான்,

http://codeofthegentleman.com/cricket-the-gentlemans-game/

கிரிகெட் தான் கனவான்களின் விளையாட்டு, கொல்பை வேணுமெண்டா பணக்காரரின் விளையாட்டு எனலாம்.

பணம் கொழிப்பதில் கிரிகெட் உலக அளவில் 4 ம் இடம் எண்டாலும், தெற்காசியை பொறுத்தவரை 1ம் இடம்தான்.

இலங்கையில் என்ன பெரிய உதைபந்து வீரராய் இருந்தாலும், சென் ஹென்றீஸ், பொற்பதி, பாடும்மீன், கொழும்புக்கு வந்தால் ரட்ணம்ஸ், ரெணொன்ஸ், சாண்டேர்ஸ் என்று பூட்ஸ் வாங்கவே யோசிக்கும் நிலைதான். ஆனால் கிரிகெட்டில் எண்டால் பணம் கொட்டும்.

ஆகா யாழில் இப்போ ஒரு துறைசார் விளையாட்டாக, சந்தைவாய்ப்புள்ள விளையாட்டாக நாம் முன்னேற்ற முயலக்கூடியது கிரிகெட்டை மட்டுமே. யாழ்ப்பாணம் யூரொப்பில் இல்லை, தெற்காசியாவில் இருக்கிறது.

றகர் - யாழில் வடகிழக்கில் எங்கும் இல்லை. கொழும்பு, கண்டி, காலியில் மட்டுமே றகர் பிரபல்யம். இதற்க்கு ஆங்கில வகுப்பு (class system) முறை தான் காரணம். ஆங்கில சமூகத்தை 4 வகைப்படுத்துவர். மேட்டுக்குடி (பிரபுக்கள்), மேல் நடுத்தர வர்க்கம் ( உயரதிகாரிகள், பண்ணைக்காரர், தொழிலதிபர்கள்). கீழ் நடுத்தரவர்கம்( இடை நிலையதிகாரிகள், வைத்தியர்கள்). உழைக்கும் வர்க்கம். றகர் ஒரு மேட்டுக்குடி, உயர் நடுத்தர வர்க்க விளையாட்டு. இன்றும் மிகவும் பிரசித்தமான உயர் பாடசாலைகளிலேதான் றகர் உண்டு. சாதாரணர்கள் படிக்கும் பள்ளிகளில் இல்லை.

கண்டி, கொழும்பில் ஆங்கில அதிகாரிகளின் பிள்ளைகள் படித்த பாடசாலைகள் இருந்தன (றோயல், தோமஸ், டினிரினிடி) ஆகவே அவை ஆங்கிலேயருக்கு மட்டுமே உரித்தான றகரை கொண்டிருந்த்ஹிருக்கலாம். இது பின்னர் கொழும்பின் இதர பாடசாலிகளான, தேரான், பீட்டர்ஸ் ற்கும் பரவியிருக்கலாம். யாழ்ப்பாடசாலைகள், சுதேசிகளை கற்பிக்க உருவாக்கப்பட்ட உழைக்கும் வர்கத்துக்குரிய பாடசாலைகள் எனவே அங்கே றகர் கலாச்சாரம் அறிமுகப்படுத்த படவில்லை. தவிர யாழில் அமெரிக்கன் மிசன் பாடசாலைகள் அதிகம்.கொழும்பில் அங்கிலிக்கன் அல்லது ஆங்கில அரசுப் பாடசாலைகள் இருந்தன.

கிரிகெட் அடிமை விளையாட்டு எண்டால், டெனிஸ், நவீன உதைபந்து, றகர், டேபிள் டெனிஸ், நெட்பால், கோல்ப் நெறி கிட்டதட்ட நாம் ஒரு விளையாட்டும் விளையாட முடியாது.

கீழே உள்ள தரவை பார்க்கவும் - "சர்வதேச" விளையாட்டாக நீங்கள் அள்ளும் உதைபந்தின் இன்றைய நவீன வடிவம் ஆங்கிலேயருடையதே

http://www.telegraph.co.uk/expat/expatpicturegalleries/9438973/Sports-invented-by-the-British.html?frame=2293458

தமிழ்தலிபான்கள் - நாளைக்கு ஆங்கிலமும் அடிமை மொழி, தமிழில் மட்டும் குதிரை ஓட்டுங்கள் என்றும் சொல்லக்கூடும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.