Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மாவீரர் தினம் 2014 சிறப்பு பதிவுகள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வெளித் தெரியா வீரியம் லெப். கேணல் முகிலன்.

15.08.2006 நள்ளிரவு நேரம் எமது பகுதியின் தொலைத்தொடர்பு சாதனத்தில் அழைப்பு ஒன்று எடுத்து கதைத்தபோது ஒரு நொடியில் அதிர்ந்து விட்டோம். சில நிமிடங்களின் முன்பே முகமாலைக் களநிலவரம் தொடர்பாக முகிலனிடம் கேட்டறிந்து கொண்டோம். முகிலன் வீரச்சாவா? நம்ப மறுக்கிறது மனம். அவனின் தோழன் லெப்.கேணல் அன்பழகன் தியாகசீலம் சென்று உறுதிப்படுத்த விரைந்தான். தாயக விடுதலைக்காகத் தனது பணிகளை நிறைவு செய்த மன நிறைவுடன் எங்களின் நண்பன் மாவீரன் லெப்.கேணல் முகிலனாகத் துயில்கின்றான்.

22.04.1972 அன்று மகாதேவன்-இராசமலர் தம்பதிகளின் முதல் முத்தாக சிவக்குமார் வேலணையில் பிறந்தான். நல்ல ஒழுக்கமுள்ளவனாக கல்வியில் திறமையாளனாக தந்தையின் சுமையைத் தாங்கும் சுமை தாங்கியாக இருந்தான். கல்வியில்; கல்விப் பொது சாதாரண தரப் பரீட்சையில் நல்ல பெறுபேறுகளைப் பெற்று உயர் தரத்தில் வர்த்தகப் பிரிவில் கல்வி கற்றான். இவனின் ஒழுக்கம், பண்புகள் தான் கற்ற வேலணை மத்திய கல்லூரிக்குப் பெருமை சேர்த்துக் கொடுத்தான்.

உயர் தரம் கற்றுக்கொண்டிருந்த பொழுது இந்தியப் படையினரின் கெடுபிடிகளினால் இவனின் தந்தையார் கொழும்பிலுள்ள உறவினர் ஒருவரின் வியாபார நிலையத்தில் வேலைக்குச் சேர்த்து விட்டார். தனது கல்வியை முழுமையாகத் தொடர முடியாமல் போய்விட்டதை எண்ணி நாளும் வேதனைப்பட்டான். மீண்டும் 1990 ஆம் ஆண்டு நடுப்பகுதியில் 2 ஆம் கட்ட ஈழப்போரால் ஊருக்கு வர பல தடவை முயற்சித்தும் தந்தையின் தலையீட்டால் வர முடியாமல் போனது. கொழும்பில் தமிழர்களுக்குக் கெடுபிடி அதிகரித்த பொழுது யாருக்கும் சொல்லாமல் ஊருக்கு வந்து சேர்ந்தார். ஊர் வந்தவர் தந்தையுடன் இணைந்து விவசாயம் செய்து வாழ்ந்து வந்தார்.

நீண்ட இடைவெளியின் பின் பெற்றோர் சகோதார்களுடனும் உறவினர்களுடனும் இணைந்ததில் மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வந்தான். இவரது வாழ்வில்; 1991 ஆம் ஆண்டு புயல் வீசியது. அவனது ஊரின்மீது சிங்களப் படையினர் மேற்கொண்ட படை நடவடிக்கை காரணமாக இடம்பெயரும் அவலம் நிகழ்ந்தது. சொல்ல முடியாத வேதனையுடன் ஊரைவிட்டு அகன்றான். கிளிநொச்சி-முரசுமோட்டை என்னும் கிராமம் இவனை வரவேற்றது

இடப்பெயர்வு இவனுக்கு மனவேதனையை ஏற்படுத்தியது. புதிய இடமாக இருந்தாலும் விவசாயம் செய்வதற்குச் சிறந்த இடம் என்பதால் ஓரளவு மன நிறைவுடன் தந்தை யாருடன் இணைந்து விவசாயம் செய்தான்.

தனது ஓய்வு நேரங்களில் நூலகம் சென்று புத்தகங்கள் எடுத்து வாசிப்பது இவனின் இயல்பு. அதனால் தனது அறிவை வளர்த்துக் கொண்டான். நூலகத்தில் இவன் வாசிக்காத புத்தகங்களே இல்லையெனலாம். விவசாயம் தன் பணி என்றிருந்த பொழுதும் மனதிற்குள் தாயகத்தில் சிங்களப் படையினரால் அப்பாவி மக்கள் கொல்லப்பட்ட சம்பங்களை அறிந்தும் பார்த்தும் மனதில் விடுதலைத் தீயை வளர்த்துக் கொண்டான் சிவா.

1995 ஆம் ஆண்டில் 3 ஆம் கட்ட ஈழப்போர் தொடங்கிய பொழுது பல இளைஞர், யுவதி போரில் பங்குகொள்ள போராளிகளாகத் தம்மை இணைத்துக்கொண்ட பொழுது தனது மச்சான்களுடன் சிவா விடுதலைப் போராட்டத்தில் தன்னை இணைத்துக் கொண்டான். சரத்பாபு-10 பயிற்சி முகாம் இவனை முகிலன் என்ற நாமத்துடன் போராளியாக மாற்றிக் கொண்டது. பயிற்சி நடைபெற்றுக் கொண்டிருந்த பொழுது அவனின் தந்தையார் இறந்த செய்தி அறிந்தும் பயிற்சியை நிறைவு செய்த பின்னரே சென்றான்.

பயிற்சியை நிறைவு செய்து வெளியேறிய முகிலனை இம்ரான்-பாண்டியன் படையணியின் வெளிப் பாதுகாப்புப் புலனாய்வு அணிக்கு பிரிகேடியர்.இரட்ணம் மாஸ்ரரால் தெரிவு செய்யப்பட்டான். அக்காலப் பகுதியில் அணிப் பொறுப்பாளராக இருந்த கப்டன்.கௌதமன் அவர்களால் அணியின் கல்விப் பிரிவுக்கு நியமிக்கப்பட்டான். எல்லோருடனும் அன்பாகவும் பண்பாகவும் பழகும் இயல்பும் எளிதில் எல்லா போராளிகளிடமும் இவனை நெருக்கம் கொள்ள வைத்தது. முகாமில் நிற்கும் வேளைகளில் புத்தகமும் படிப்புமாகவே இருப்பான்.

ஒரு தடவை புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் பொட்டம்மான் எங்கள் கல்விப் பிரிவினரைச் சந்தித்துக் கலந்துரையாடினார். சந்திப்பின் பொழுது அம்மான் அவர்களிடம் பல கேள்விகள் கேட்டு போராளிகள் தங்களது சந்தேகங்களைப் பூர்த்தி செய்தனர். முகிலனும் அம்மானிடம் கேள்வி கேட்டான். அப்பொழுது இவனை நன்றாகப் பார்த்து விட்டு ‘தம்பி நீ நல்லதொரு புலனாய்வளனாக வருவாய்’ எனக் கூறினார். அதன்பின்னரே அவனின் கேள்விகளுக்குப் பதில் சொன்னார். அம்மான் கூறியதுபோலவே பின்னாளில் சிறந்ததொரு புலனாய்வாளனாக விளங்கினான் எங்கள் முகிலன்.

1996 ஆம் ஆண்டில் சூரியக்கதிர் படை நடவடிக்கை காரணமாக இடம்பெயர்ந்து வன்னி வந்து சில காலம் முகாம் அமைக்கும் பணிகளைச் செய்தான். கழுத்தில் ஒரு துவாய், கையில் ஒரு புத்தகம் இதுதான் இவனது அடையாளம். இவனிடம் நிறையவே எழுத்தாற்றல் இருந்தது. படையணி, புலனாய்வு அணி வெளியீடுகளில் இவனின் எழுத்துக்குத் தனியிடம்.

சண்டைக்குப் போவதற்காக சண்டை பிடிக்கும் இயக்கத்தில் இவனும் இரட்ணம் மாஸ்ரரிடம் சண்டை பிடித்துச் சண்டைக்குச் சென்றான். 1997.01.09 அன்று நடந்த வரலாற்றுச் சமரான ஆணையிறவு-பரந்தன் ஊடறுப்புச் சமரில் உப்பளம் பகுதியில் சமரிட்டான். வெற்றிக்காய் வீழ்ந்தவர்களில் இவனின் தோழர்கள் கப்டன்.அற்புதன், கப்டன்.இராஜேஸ் வீரச்சாவடைந்த பொழுது இவன் வேகங்கொண்டு சமரிட்டான். இச்சமரில் பங்குகொண்டு வெற்றிக்கு பங்கு செய்து வீரத்தழும்புடன் தளம் திரும்பினான். தளத்தில் மீண்டும் தனது பணியைச்செய்து கொண்டு இருந்தவனுக்கு புதிய பணி இவனை உள்வாங்கியது. அதாவது, இவனுக்கு சிங்களமும் தெரியும் என்பதாலும் இவன் ஆழமான சிந்தை கொண்டவன் என்பதாலும் இரட்ணம் மாஸ்ரர் இவனை இராணுவத்தினரின் உரையாடல்களை ஒட்டுக்கேட்கும் பணிக்கு நியமிக்கப்பட்டார். அறிவும் ஆற்றலுமுள்ள இவன் விரைவாகப் பணியின் நுணுக்கங்களை அறிந்து தனக்கு வழங்கப்பட்ட பணியைத் திறம்பட செய்தான். இவன் தரவுகளின் அடிப்படையில் ஒருசில கரும்புலித் தாக்குதலுக்கு பேருதவியாக இருந்தது. இதனால், பிரிகேடியர்.ஆதவன் அவர்களால் பாராட்டப்பட்டவன் எங்கள் முகிலன்.

2000 ஆம் ஆண்டு நடுப்பகுதியில் இம்ரான்-பாண்டியன் படையணித் தளபதியாக இருந்த இரட்ணம் மாஸ்ரர் தலைவரினால் படையப் புலனாய்வுப் பொறுப்பாளராக நியமிக்கப் பட்டார். இரட்ணம் மாஸ்ரர் இவனையும் தன்னுடன் அப்பிரிவுக்கு அழைத்துச் சென்றார்.

இவன் இரட்ணம் மாஸ்ரரின் நம்பிக்கையாளனாகவும் தோழனாகவும் செயற்பட்டான். இரட்ணம் மாஸ்ரர் யாருடனும் இலகுவில் மனம் விட்டு பழகுவதில்லை. பணியும் தானு மாக இருப்பவர். அப்படிப் பட்டவரையே தன்னுடன் நெருங்கிப் பழக வைத்தவன் எங்களின் முகிலன். படையப் புலனாய்வுப் பிரிவு மீள்ளொழுங்கு செய்வதில் இரட்ணம் மாஸ்ரரு டன் கடுமையாக உழைத்தவன். இவன் ஒரு தொய்வு நோயாளனாக இருந்தும் பணிக்கும் முன் அவனுக்கு நோய் ஒன்றும் பெரிதாக தெரிந்ததே இல்லை. 2002 இல் அவனது 30 ஆவது அகவையில் தனது மச்சாளைத் திருமணம் செய்து மகிழ்வாக இருந்தான். அதன் பேறாக மகன் பிறந்தான். மிகவும் மகிழ்வுற்றான். குடும்பத் தலைவனாக இருந்த பொழுதும் தன் பணியை ஒருபொழுதும் மறந்ததில்லை. குடும்பத்தைக் காரணம் காட்டிப் பணிக்கு பின் நிற்கவில்லை. அவனின் எண்ணம், சிந்தனை, கனவு எல்லாமே தன் பணியைப் பற்றியதே. இருந்தும் அவன் தனது மனைவிமீது அளவு கடந்த அன்பும் பாசமும் வைத்திருந்தான். அதன் வெளிப்பாட்டை அவனது மனைவியை காண்பதில் புரிந்து கொள்ளலாம்.

வன்னியிலிருந்து பணியாற்றியவனை 2002 ஆம் ஆண்டு சமாதானக் காலம். இராணுவ ஆக்கிரமிப்புக்குள்ளான யாழ் மண்ணில் தனது புலனாய்வுத் திறனால் இயல்பாக பணியைச் சிறப்பாகச் செய்தான். சமாதானக் காலத்தில் வன்னிப் பகுதியில் படையினரின் ஆழஊடுருவல் அணியின் (LRP) நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதில் இவன் பங்கு மிகப் பெரியது. வவுனியாவிலும் இவனின் பணி தொடர்ந்து 2005 ஆம் ஆண்டு இரணைமடுவில் அமைந்துள்ள எமது வான் தளத்தை அழிக்கும் நோக்குடன் சிங்களப் படை யின் ஆழஊடுருவல் அணி பெரியளவிலான படை நகர்வை நடவடிக்கைக்காக நகர்ந்து கொண்டிருந்தது. அப்போது வவுனியா–ஓமந்தை சாவடியில் ஓர் இராணவ வீரனை இவன் மாற்றி வைத்திருந்தான். அந்த இராணுவ வீரன் தந்த தகவலின் அடிப்படையில் ஆழஊடுருவல் அணியினரின் நடவடிக்கை முறியடிக்கப்பட்டதுடன், வான்தளமும் பாதுகாக்கப்பட்டது. இவ்வாறு இவனின் பல தகவல்களினால் அன்று எமது இயக்கம் பாதுகாக்கப்பட்டுக் கொண்டிருந்தது.

யாழில் பலாலி படைமுகாமை அண்மித்த பகுதிகளில் மக்களுடன் மக்களாக நின்று தனது பணிகளைச் செய்து வந்தான். சமாதானம் குழம்பும் நிலையை அண்மிக்க முன் அவ்வேளை படையப் புலனாய்வுப் பொறுப்பாளராக இருந்த கேணல்.சாள்ஸ் அவர்களால் அவசரமாக வான் எதிர்ப்பு ஏவுகணைகள் யாழ்ப்பாணத்திற்குக்கொண்டு செல்லவேண்டும் எனக் கூறிய பொழுது மிகவும் இறுக்கமான இராணுவத் தடைகளைத் தாண்டி மிகவும் விரைவாகக் கொண்டு சேர்த்தான் எங்கள் முகிலன். இதற்காக தலைவர் அவர்களினால் பாராட்டையும் பரிசினையும் பெற்றுக்கொண்டான்.

11.08.2006 அன்று முகமாலையில் 4 ஆம் கட்ட ஈழப்போர் தொடங்கிய பொழுது அச்சமரை வழி நடத்திய கட்டளைத் தளபதி பிரிகேடியர்.தீபன் அவர்களின் அழைப்பை ஏற்று கேணல்.சாள்ஸ் அவர்களின் அனுமதியுடன் பளைப் பகுதியில் ஓட்டுக்கேட்கும் பணியைச் செய்தான். அத்துடன், யாழ் குடாவில் கிளைமோர் தாக்குதலுக்குரிய வழி நடத்தலையும் மேற்கொண்டிருந்தான்.

15.08.2006 அன்று மாலை பளைப் பகுதியில் தனது கடமையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தான். எங்கும் எறிகணை வீச்சுத் தொடர்ந்த வண்ணமிருந்தது. அதில் தொலைவில் வீழ்ந்து வெடித்த எறிகணை ஒன்றின் சிதறல் இவனின் இதயத்தைத் துளைத்து எங்களிடமிருந்த எங்களின் அன்புத் தோழன் முகிலனைப் பறித்துக் கொண்டது. இவனின் இழப்பினைத் தங்களில் ஒருவனை இழந்ததுபோல் முரசுமோட்டைக் கிராமமே சோகத்தில் மூழ்கியது. இறுதி விடை பெற்ற எங்களின் தோழன் லெப்.கேணல் முகிலனாக கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் தூயிலுமில்லத்தில் தாயகத்திற்காக தனது பணியை நிறைவு செய்த மனநிறைவுடன் உறங்கிக் கொண்டான் எங்களின் முகிலன்.

  • Replies 130
  • Views 39.6k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

இயற் பெயர் - பாலசிங்கம் வசந்தகுமார்

இயக்கப் பெயர் - மனோஐ்/

தாய் மடியில் - 05.02.1971

தாயக மடியில் - 11.12.2001

தலைநகர் உளற்றெடுத்த உப்பாற்றிலே 1971.02.05 தினத்திலே உப்பாற்று மண்ணை காப்பதற்கு மட்டுமல்லாமல், தமிழீழ மண்ணை பாதுகாப்பதற்க்காக ஆண் மகன் ஒருவனை நொந்து சுமந்து ஈன்றெடுத்தாள் அன்னை இராசமணி.

தாய் தந்தையருக்கு மூன்றாவது இளம்பிறையாக தோன்றியவனுக்கு வசந்தன் என்று செல்லப் பெயரிட்டார்கள். ஆனால் இவனோ தன் சமுதாயம் அடக்கி ஒழிக்கப்படுவதைக் கண்ட கண்களும் உடலும் தீப்பிழம்புகள் போல சீறிப்பாய்ந்தன. என் இனிய உள்ளங்களுக்கா இந்த நிலை? இதை மாற்றியமைப்பேன் என்று தன்னுள் ஆணையிட்டான். தன் வீட்டைகாப்பது மட்டுமல்லாமல் தன் தமிழினத்தை காக்கப் புறப்பட்டான்.

எவன் எதிரியோ அவனை கொன்று குவிப்பதுவே அவன் செயல். தனக்கு வேண்டிய பயிற்ச்சிகளை தன்சக போராளிகளுடன் மிக வேகமாக கற்றுத் தேர்ந்தான். தோற்றம் சிறிதாக இருந்தாலும் அவனின் குணாதிசயங்களும் உணர்வுகளும் எல்லை கடந்தது. கடலின் எல்லை காண்பது இலகு. அனால் அண்ணன் மனோஜின் ஆழம் காண்பது கடினமானதாகும்.

குறும்புத்தனமிக்க அண்ணன் எதிரியின் சூழ்ச்சிகளையும் இடங்களையும் வேவு பார்த்து தரவுகளை திறம்பட பொறுப்பாக நடத்துவதிலும் பெயர் போனவர். தனக்குப்பிடித்தவர்கள் என்று வேற்றுப்பிரிவு காட்டமாட்டார். வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் போல் எடுத்துக்காட்டாகவும் தன் திறமைகளை வெளிப்படுத்தினார். புலிகள் என்றும் கூண்டுக்குள் அடைபடுபவர்களுமல்ல காட்டில் மட்டும் வாழ்பவர்களுமல்ல என்ற வரிவிலக்கணத்தை எதிரிகளுக்கு பலதடவைகள் உணர்த்தியவர்.

எந்த ஒரு துரும்பினாலும் நுழைய முடியாது என்று கூறும் போராளிகளை தன் நுண்ணிய அறிவால் வழியமைத்து நுழையவிடுவார். அவரின் பாதம் படாத இந்த புண்ணிய இடம்தான் உண்டோ? சொல்லு வான் நிலாவே? உனக்குத்தான் தெரியும் அவனின் வீரநடையும் செவ்விதழ் புன்னகையை கண்டு நீ பொறாமை கொண்ட நாளும் உண்டு. வன்னியில் இருந்து திருமலைக் காட்டுப்பாதை வழியை கொம்பாஸ் மூலம் கண்டுபிடித்தவர். நாடுகாண் பயணங்களை மேற்கொண்டவர்கள் கூட தனக்கு உதவியாக பலரை இணைத்துக் கொண்டு கடல்பாதையை கண்டு பிடிக்க வருடக் கணக்காயின. அனால் அண்ணன் துணிவும் திறமையும் ஒன்றாகப் பெற்றவர் என்பதால் யாரும் நுழைய முடியாத அந்த வனாந்தர பாதைகளை கண்டு பிடித்து தன்கண்டு பிடிப்பை யாரும் தட்டி விடக்கூடாது என்பதற்காக புல்மோட்டை பாதையில் கிடந்த சிறு கற்களை பொறுக்கி தன் சேட்பொக்கட்டில் போட்டுக் கொண்டு தளபதியிடம் காட்டினார்.

மற்றும் எதிரியுடன் சண்டை செய்வது என்றால் பூனைக்கு கொண்டாட்டம் எலிக்கு மரணம் போல் அவர் குதுகலிப்பார். எதையும் செய்ய முடியாது என்று இவரின் வார்த்தையில் வந்ததே கிடையாது. எதையும் முடிக்கும் திறமை கொண்டவர். இவரின் முதற் சமர் 1990ல் திருமலை யாழ் வீதியில் 16 எதிரிகளின் உடல்களை தரை சாய்த்தது. பாராட்டும் கிடைத்தது.அண்ணாவின் படையில் அதிகளவு போராளிகள் காணப்படமாட்டார்கள். ஆனால் அவரின் முயற்ச்சியால் ஒரு போராளி பத்து பேருக்கு சமன் போல் அவரின் சமர் வெற்றி கொள்ளும் மின்னல் வேகத்தில் சென்று சூறாவளியாக சமரை வீசி பின்பு பனிமழை போல் வருவார். வெற்றிவாகை சூடிக்கொள்வதில் தனிப் பிரிவு இவர்.

ஆண்களின் இயல்பு பெண்களை சீண்டிப்பார்ப்பது. ஆனால் அண்ணன் பெண்களை தாயாக மதிப்பவர். தன் சகாக்கள் பெண்களை நக்கல் செய்தால் பொங்கி எழுவார். இவ்வாறானவர் களத்துக்கு சென்றால் மகளிர்ப் படையணி போருக்குப் புயலாக இணைந்து கொள்ளும். இவர் தலைமையில் வேங்கைகள் போர்களம் புகுந்தார்கள் என்றால் தளபதிகள் கூட தன்னகத்தே பெருமிதம் கொள்வார்கள் மனோஜின் தலைமையிலான போர் வெற்றி கொள்ளும் என்று. அந்த அளவிற்கு தமிழீழத்தை மீட்டெடுத்து தன் தாய் மண்ணை காக்கவேண்டும் என்ற உத்வேகம் தனையனிடம் குடிகொண்டிரு;தது.

மனோஜ் அண்ணன் 2001.07.20 அன்று தன் போராளிகளுடன் தமிழீழ தலைநகருக்கு தன் பயணத்தை ஆரம்பித்தார். காட்டுமிராண்டிகளான சிங்கள இராணுத்தின் கண்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்தவராக காடு மலை கடல்நீர் என்று பல தடைகளையும் கடந்து எம்மை கண்ணை இமை காப்பது போல் காத்து வந்தார். ஆசையோடு கண்டு 15 வருடங்களாகிவிட்ட வெளிநாட்டிலிருந்து வந்த அண்ணன் தன் தம்பியை காண வந்தார். ஆனால் தம்பியோ தன் பிறப்புக் கடமையை உதாசீனம் செய்து சிங்கள வெறியர்களிடம் இருந்து தமிழ் மண்ணை மீட்கும் இலட்சியத்தில் தன் உடல் பொருள் ஆவியை தமிழுக்கும் தமிழர்க்கும் அர்ப்பணித்து தன் பணியில் ஈடுபட்டார்.

அண்ணன் தன் உடம்பில் ஏற்பட்ட சிறு காயத்தினால் சிலகாலம் ஓய்வு பெற்றார். ஆனால் தன் நினைவலைகளை போர்க்களத்திலேயே செலுத்தி நின்றார். சில நாட்களின் பின்னர் வேவுப்புலியானார். அண்ணன் வழிநடத்திச் சென்ற படையணி வெல்வேரிச்சமரில் மாபெரும் வெற்றியை தழுவிக்கொண்டது. இச்சண்டையில் எதிரிகளிடம் இருந்து பல்ரக ஆயுதங்களை கைப்பற்றியதால் தலைவரண்ணாவிடம் இருந்து பாராட்டையும் பரிசையும் பெற்றுக்கொண்டார். இது மட்டும் போதும் என்று நினைக்கவில்லை. இதனைவிட பன்மடங்கு வெற்றியை தன் வழி நடத்தலில் தன் படையணி பெறவேண்டும் என்ற உள்நோக்கம் ஆலவிருட்சம் போல் பரவி கிடந்தது.

இவருடைய முக்கிய சமர்க்களங்களாக திருமலை யாழ்வீதி பதுங்கித்தாக்குதல், தவளைப்பாய்ச்சல் சமர்கள் ஆனையிறவு பரந்தன் சமர்கள், மன்னார் பொலிஸ் நிலைய தாக்குதல், ஜெயசிக்குறு சமர்கள், வெல்வேரி வெற்றிச் சமர், பச்சனூர் பொலிஸ் நிலையதாக்குதல், கந்தளாய் கடவாணை றோட் அம்புஸ் தாக்குதல், பாலம் போட்டாறு பதுங்கித்தாக்குதல், மூதூர் பாலத்தோப்பூர் இராணுவப் புலனாய்வுப்பிரிவு முகாமே இறுதிமுகாமாக இருக்கும் என்று கனவில் கூட நாங்கள் நினைக்கவில்லை. சண்டைக்கான பயிற்ச்சி நெறிகளும் ஆரம்பித்துவிட்டன. ஒத்திகை பார்க்கும் நாளோ நெருங்கிவிட்டது. தனக்கு சிறந்த மகளிர் படையணி தலைவி வேண்டும் என்று கேட்டார். அதற்கமைய இக்கட்டான காலகட்டத்திலும் படையணியை சிறந்தாற்போல் வழிநடத்தும் படையணித் தலைவி கொடுக்கப்பட்டார்.

நள்ளிரவில் தொடங்கிய யுத்தத்தின் சத்தங்களே எம் செவிப்பறைகளை அதிரவைத்தது. சீறிச் சிலிர்த்த புலியாய் எதிரியைத்தாக்க தொடங்கினார். திடிரென மனோஜ் அண்ணனின் தொடர்பு துண்டிக்கப்பட்டது. நாங்கள் அனலில் விழுந்த புழுவாக துடி துடிக்கலானோம். காயம் என்று அறிந்ததும் ஓரளவு மனதைதேற்றிக் கொண்டோம். அந்த வேளையில் யாரும் அறியவில்லை புலரும் பொழுதிலே இடியோசை ஒன்று காத்து நிற்கின்றது என்று.

ஆம்! அதிகாலை 5.25 மணியளவில் மின்னலென எம் செவிகளை நோக்கி ஓர் செய்தி வந்தது மின்னல் வேகத்தில். எதிரியை தாக்கி விட்டு எதிரியின் இலக்குக்கு திடீரென உள்ளாகிவிட்டார். தனயனின் மார்பை எதிரியின் துப்பாக்கி முனை குறிபார்த்து விட்டது. அண்ணனின் துணிவைப் பார்த்து அந்தச் சு10ரியன் கூட தன் செங்கதிரை மண்ணில் பாய்ச்ச மறுத்து விடட்டது. காரணமோ! ஓர் வீரனின் உடல் இங்கு மாய்ந்து கிடக்குறது. அந்த வீரனின் பலத்துக்கு முன் அந்த கதிர்களின் ஒளிக்கு பலமில்லை.

வீரத்தாயின் மடியினிலே வீரத்தாலாட்டில் தமிழீழ மானம் காக்க வந்த சிங்கம் 11.12.2001 அன்று இறுதியான போர்க்களத்துடன் தமிழீழ மண்ணை எங்கள் கரத்தில் ஒப்படைத்துவிட்டு துப்பாக்கி முனையில் தன் உயிரை நீத்து ஈழமண்ணை முத்தமிட்டு மூன்று போராளிகளுடன் ஓர் இமயமலை தரை சாய்ந்தது. அண்ணனே! நீங்கள் மாவீரராகி இன்று துயில்கிறீர்கள்.

உங்கள் ஞாபகமாக மூதூர் பள்ளிக்குடியிருப்பில் "லெப். கேணல் மனோஜ் பாலர் பாடசாலை" ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

மாவீரரான உங்கள் பாதச்சுவட்டை நோக்கி நாங்களும் இங்கு தடம் பதிக்கின்றோம்.

செல்வி ஜீவி

தலைநகர் மகளீர் படையணி

  • கருத்துக்கள உறவுகள்

இயற் பெயர் -

இயக்கப் பெயர் - மலரவன்

தாய் மடியில் -

தாயக மடியில் -

ஆனையிறவு கூட்டுப்படைத்தளம் அந்த ஜனவரி மாதத்து நிசப்தமான குளிரில் உறைந்துபோய்க் கிடந்தது. உடலை ஊடுருவும் உப்புக் காற்றின் குளிரையும் மீறீச் சில உருவங்கள் எதிரியின் முன்னணித் தடைகளை நோக்கி வரிசையாக நகர்ந்து கொண்டிருந்தன.

அது ஒரு வலிந்த தாக்குதலக்குரிய நகர்வு. இறுமார்புடன் நிமிர்ந்து நிற்கும் ஆனையிறவுத் தளத்தின் இதயத்திற் பாய்வதற்காக அவர்கள் முன்னேறிக்கொண்டிருந்தனர். ஆந்த உவர்மண் வெளியில் ஆங்காங்கே காணப்படும் கன்னாப் பற்றைகளை மறைப்பாகக் கொண்டு அவர்களுடைய அணிநகர்ந்துகொண்டிருந்த அணிகளில், பிரதான முகாமைத் தாக்கியழிக்கும் சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படைப்பிரிவின் குறிப்பிட்ட அணியை வழிகாட்டி நகர்த்திக்கொண்டிருந்தான் ஒரு வேவுப்போராளி.

நேரம் நள்ளிரவைத் தாண்டிவிட்டது. அவர்கள் எதிரியின் முன்னணித் தடை வேலியை நெருங்கிவிட்டனர். நீண்டதொரு இரகசிய நகர்வை வெற்றிகரமாகச் செய்து முடித்துவிட்ட திருப்தியில் அவர்கள் இருந்தனர். ஆனால், இன்னுங்கூட அபாயம் நீங்கவில்லை. அப்போது எதிரியால் அவதானிக்கப்பட்டால், அவர்கள் அந்த இடத்திலேயே கொல்லப்படலாம். காவலரண்களின் முன்னாற் சில பத்து மீற்றரில் அவர்கள் நிலத்துடன் நிலமாகக் கிடக்க, அவர்களை வழிகாட்டி அழைத்துவந்த போராளி கைகளில் முட்கம்பி வேலித்தடையை அகற்றும் கருவியுடன் முன்னேறினான்.

சண்டை தொடங்குவதற்கு இன்னும் சில நிமிடங்களே இருந்தன. முதலாவதாக இருந்த கம்பி வேலியை வெட்டி அகற்றிவிட்டு இரண்டாவது தடைக்கு அவன் „ டோப்பிட்டோ “ குண்டை பொருத்த, மறுமுனைகளிற் சண்டை தொடங்குகின்றது. அங்கே பொருத்திய “ டோப்பிட்டோ “ வெடிக்குமென எல்லோரும் ஆவலுடன் காத்திருக்க, அந்தக் குண்டு வெடிக்காமலே போய்விட்டது.

துப்பாக்கிகள் சடசடக்க, எதிரி வானில் ஏவிய “ பரா “ வெளிச்சக் குண்டுகள் இரவைப் பகலாக்கி வானில் ஒளிவீச, அங்கே எமது அணியினர் தமக்குரிய பாதைத் தடையைத் தகர்க்க முடியாமல் இருப்பதை எதிரி கண்டுகொண்டான். தனது சூட்டு வலுவை இப்போது அந்த அணியினர் மீது எதிரி மையங்கொள்ள வைத்தான்.

நிலமை மோசமாகிக்கொண்டிருந்தது. உள்ளே நுழையவேண்டிய அந்த அணி வழியிலேயே எதிரியின் சூட்டிற்கு இலக்காகிப் போராளிகளை ஒவ்வொருவராய் இழந்துகொண்டிந்தது. மீண்டும் அந்தத் தடையைத் தகர்க்க அவ்விடத்தில் கைவசம் மேலதிக “ டோப்பிட்டோ “ வோ,

பின்னாலிருந்து வரவழைக்க அவகாசமோ இருக்கவில்லை. இந்த இக்கட்டான நிலையில் எல்லோரும் தவிப்புடன் பார்த்திருக்க, கைவசம் இருந்த ஒரேயொரு கம்பிவெட்டும் „ கட்டரு “ டன் எழுந்தான்., அந்த அணிக்கு வழிகாட்டி முன்னே நகர்ந்து கொண்டிருந்த லெப்டினன்ட் மலரவன்.

துப்பாக்கிச் சன்னங்களால் துளைக்கப்பட்டு உடலிலிருந்து குருதி வழிய வழிய, தள்ளாடியபடி எதிரியின் தடைக்கம்பி வேலியை நெருங்கியவன், ஒவ்வொரு கம்பியாய் வெட்டத்தொடங்கினான். எதிரியின் துப்பாக்கிகள் அவன் ஒருவனையே குறிவைத்தன. அந்தச் சொற்ப நேரத்தினுள்ளேயே தடையை வெட்டி அகற்றிவிடவேண்டும் என்ற உறுதியுடன் தடைக்கம்பிகளை வெட்டி அகற்றியவாறு அந்தக் கம்பிகளின் மீதே சரிகின்றான் மலரவன். இறுதிக் கம்பி மட்டும் இன்னும் வெட்டப்படாமல் இருந்தது. ஆயினும் பாதை ஏற்பட்டுவி;ட்டது.

அவன் ஏற்படுத்திக் கொடுத்த பாதையின் ஊடாக அணிகள் உள்ளே பாய்கின்றன.அவனது தோழர்கள் அவனைக் கடந்து எதிரியின் அரண்களை நோக்கி ஓடும் போது எஞ்சிய உயிர்த் துளியில் அவனது நாவு உச்சரித்தவை இவைதான்.

„ மச்சான்! ஒன்றையும் விடமாற் பிடியுங்கோ “

அன்றைய அந்த அணியின் சண்டையின் முடிவை மாற்றியமைத்தவன் அந்தப் போராளி. எதிரியின் சூட்டிற்கு ஒவ்வொருத்தராய் வீழ்ந்துகொண்டிருந்த நிலையை மாற்றியது அவனது முடிவுதான்.

தன் உயிர்கொண்டு அவன் தடையகற்ற துணிந்தமையால் தொடர்ந்து எதிரிகளை வீழ்த்திக் கொண்டு முன்னேறியது அவனது அணி. அன்றைய சண்டையில் அவர்கள் ஏராளம் இராணுவத்தினரை கொன்றொழித்தனர். பலம் வாயந்த எதிரியின் பிரதான முகாமை ஊடுருவி அவனது பல ஆயுதங்கள் உள்ளிட்ட ஆட்லறித் தளத்தை அவர்கள் அழித்தனர். அத்தனையும் அன்று சாத்தியமாக்கியது தடையகற்றித் தன் சாவைச் சரித்திரமாக்கிவிட்ட அந்தப் போராளியின் இறுதி நேர முடிவே.

எமது விடுதலை வரலாற்றுப்பற்றித் தலைவர் அவர்கள் கூறுவது போல் „ ஆயிரம் ஆயிரம் தனி மனித சரித்திரங்கள் சங்கமமாகிய பெரு நதியாக வீறுகொண்டோடும் எம் விடுதலை வரலாற்றில் “ தானும் ஒருவனாய் சங்கமித்துப்போன இவனதும் சரித்திர நாயகர்களினதும் தியாகங்களே இன்றும் எம் விடுதலை நதியை வெற்றிப் பாதையில் இட்டுச் செல்கின்றன.

  • கருத்துக்கள உறவுகள்

ரம்போ பிரசாத் அல்லது வசந்தன்

தாயின் மடியில் : 24.05.1964 - வீர சாவு : 16.09.1991
 
தென் தமிழீழத்தில், வீரம் செறிந்த ஆரையூர் மண்ணில் திரு / திருமதி கிருஷ்ணபிள்ளை அவர்களுக்கு மூன்றாவது பிள்ளையாக 24.05.1964 அன்று பிறந்த பிரசாத், தனது ஆரம்ப கல்வியை தனது சொந்த ஊரில் அமைந்திருந்த ராமகிருஷ்ண மிசன் பாடசாலையிலும், சிவானந்த வித்தியாலயத்திலும் பெற்று, பின்னர் மட்டுநகர் இந்து கல்லூரியில் உயர் கல்வியை பயின்றார்.
 
தமிழ் ஈழத்தின் எழுச்சியில் விடுதலையை நோக்கிய பயணத்தில் 1983 இல், கோட்டை கல்லாற்றை பிறப்பிடமாக கொண்ட கப்டன்.பிரான்சிஸ் அண்ணனின் தொடர்பு மூலம், தமிழ் ஈழ விடுதலை புலிகள் இயக்கத்தில் தன்னை இணைத்து கொண்டார்.
 
இந்தியாவில் ஐந்தாவது பயிற்சி பாசறையில் கேணல்.நீலன்(ஆரையம்பதி), மேஜர்.அன்டனி, லெப்.கேணல்.ரீகன் (வெல்லாவெளி), மேஜர்.அகத்தியர் (கோட்டைக்கல்லாறு), மேஜர்.குலதீபன் (களுவாஞ்சிகுடி) ஆகியோருடன் லெப்.கேர்ணல்.ராதாவிடம் படைத்துறை பயிற்சி பெற்றுக்கொண்ட இவர், ராதா அண்ணனின் பல பாராட்டுக்களை பெற்று இருந்தார்.
 
இப் பயிற்சி பாசறையில் திறமையான பயிற்றுனராக ராதா அண்ணனால் இனம் காணப்பட்டதனால், ஈழ மண்ணில் இந்திய படைகள் வெளியேறிய பின்னர் நடந்த பாரிய பயிற்சி பாசறைக்கு பயிற்சி ஆசிரியனாக மட்டக்களப்பு மண்ணில் நியமிக்கப்பட்டார்.
 
ரம்போ பிரசாத் அவர்கள் 1986 - 88 காலப்பகுதியில் தமிழீழ விடுதலை புலிகளின் வாழைக்காலை முகாம் பொறுப்பாளராக இருந்தார். இக் காலப்பகுதில் கொக்கட்டிசோலையை அழித்தொழித்து, ஆக்கிரமிக்கும் நோக்கில் இலங்கை இராணுவம் மேற்கொண்ட பாரிய இராணுவ நடவடிக்கையின் போது, புளுக்குனாவை இராணுவ முகாமில் இருந்து புறப்பட்ட இலங்கை விசேட அதிரடி படையினரை தாந்தாமலை வீதியில் வழி மறித்து தாக்கி துவம்சம் செய்த பெருமை இம் மாவீரனுக்கும் அவனது படையணிக்குமே சாரும்.
 
ரம்போ அவர்களின் பெயர் சொல்லும் தாக்குதல்களின் ஆரம்பமே, மாங்கேணி இலங்கை இராணுவ முகாம் தாக்குதல். இத் தாக்குதல் லெப்.கேணல்.குமரப்பாவின் தலைமையில் இடம்பெற்றிருந்தது, மேலும் இவ்வணியில் வீரம் செறிந்த அருணா அண்ணன், கமல் அண்ணன், மற்றும் பல மூத்த உறுப்பினர்களுடன் ரம்போவும் பங்கு கொண்டு தனது வீரத்தை சிறப்பாக பறை சாற்றினான்.
 
இப்படி துணிவுடன் களமாடிய பிரசாத், வட தமிழ் ஈழத்தில் 1987 இல் JR ஜெயவர்த்தன, லலித் அத்துலத் முதலி ஆகியோரால் ஆரம்பிக்க பட்ட Liberation ஆபரேஷன் இன் பொழுது, தேசிய தலைவரின் கட்டளைக்கமைய தமிழீழத்தின் சகல பகுதிகளில் இருந்தும் படையணிகள் யாழ் மண்ணை மீட்க புறப்பட்டனர்.
 
அந்த கால கட்டத்தில், மட்/ அம்பாறை மாவட்ட தளபதியாக இருந்த லெப்.கேணல்.குமரப்பா தனது படையணியோடு மட்டக்களப்பில் இருந்து புறப்பட்டார். அதில் ரம்போ பிரசாத், லெப்.கேணல்.ரீகன், கப்டன்.சபேசன் ஆகியோரும் அடங்கி இருந்தனர். இவர்களும், பிற மாவட்டங்களை சேர்ந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் படையணிகளும் யாழ் மண்ணை சென்றடைந்தவேளை, தேசிய தலைவரின் நெறிப் படுத்தலின்கீழ் 05 ஜூலை 1987 அன்று தமிழீழ வரலாற்றில் முதல் முறையாக கரும்புலி தாக்குதல் சிங்கள இராணுவ படைகளுக்கு எதிராக வட தமிழ் ஈழத்தில் உள்ள நெல்லியடியில் அமைந்திருந்த பாரிய இராணுவ முகாமில் மேட்கொள்ளபட்டது.
 
இதை கப்டன்.மில்லர் மேற்கொண்டு இருந்தது குறிப்பிடத்தக்கதாகும். இத் தற்கொலை தாக்குதலை தொடர்ந்து, தயாராக இருந்த விடுதலை புலிகளின் படை அணிகள் சிறப்பாக போராடி சிங்கள இராணுவத்தை அழித்தொழித்து, இந்த இராணுவ முகாமை தம்வசம் ஆக்கிகொண்டனர். இந்த இராணுவ முகாம் தாக்குதலின் பொது, இம் மாவீரன் பிரசாத் அவர்கள் கனரக ஆயுதங்களை இலகுவாக கையாண்டு இருந்ததினால், இவரை அன்று தொடக்கம் ரம்போ என்று அடையாள பெயர் கொண்டு அழைக்கப்பட்டார்.
 
உலகின் முதல் தற்கொலை படைகூட தமிழன்தான் என்பதில் சந்தேகமில்லை. - மாவீரன் சுந்தரலிங்கம் மற்றும் அவர் மனைவி வடிவு நாச்யாருமேயாகும்.
 
இந்திய சுதந்திர போராட்டத்தின் போது தமிழகத்திலிருந்து பல சுதந்திர வீரர்கள் தங்கள் உயிரையும் உடமையும் தியாகம் செய்தனர் என்பது நாம் அறிந்ததே. ஆனால் அப்போராட்டத்தில் தங்கள் உயிரை பற்றி சற்றும் எண்ணாமல் எதிரிகளின் ஆயுத கிடங்கை அழித்துள்ளனர் ஒரு வீர தம்பதியினர். ஆம் கட்டபொம்மனின் தளபதியான வீரன் சுந்தரலிங்கம் தனது மனைவியுமான வடிவு நாச்சியாருடன் , கும்பினியாரின் வெடிமருந்து கிடங்குகளை ஒரு தற்கொலை முகவர்களாக சென்று அழித்துள்ளனர். இதுவே உலகம் அறிந்த முதல் தற்கொலை படை தாக்குதலாகும்...
 
ரம்போ பிரசாத் அவர்கள் முன்னின்று பல கண்ணிவெடி தாக்குதல்கள், இலங்கை இராணுவத்துக்கு எதிரான அதிரடி வழி மறிப்பு தாக்குதல்கள் என இவரது வீரம் ஈழ மண்ணில் பறை சாற்றி நின்றது. மேலும் இந்திய ராணுவம், ஈழ மண்ணை விட்டு ஓட்டம் எடுத்த போது, ஒட்டுக்குழுக்களின் முகாம்களை மேஜர்.அண்டனியின் தலைமையில் தாக்கி அளித்ததில் பெரும் பங்காற்றிய தளபதி ரம்போ பிரசாத்தாகும்.
 
இவர் வருடம் தோரும், கண்ணகை அம்மன் கோவில் சடங்கு காலம் மட்டும் தான் பிறந்த மண்ணை மிதித்து, தனது சொந்தங்கள், பாடசாலை நண்பர்கள், தனது பாடசாலை ஆசிரியர்கள் என சகலரையும் சந்தித்து கொள்ளுவது வழக்கம். இதட்கேன்று, இவர் வருடத்தில் ஒதுக்கிகொள்வது இந்த இரண்டு, மூன்று நாட்கள் மட்டுமே.
 
மட்டக்களப்பில் விடுதலை பயணிப்பில் பணியாற்றிய வேளையில், இவருடன் சேர்ந்து இந்திய மண்ணில் பயிற்சி பெற்றவர்களான கேணல்.நீலன்(ஆரையம்பதி), மேஜர்.அன்டனி (கல்முனை), லெப்.கேணல்.ரீகன் (வெல்லாவெளி), ஆகியோர் மிக முக்கிய பொறுப்புகளை வகுத்தவர்கள் ஆகும். அன்றைய நிலையில் தேசிய தலைவரின் நம்பிக்கைக்கு பாத்திரமாய் இருந்த மட்டக்களப்பு தளபதியால் ஒதுக்கப்பட்டார் இச் சிறந்த வீரம் மிக்க போராளி.
 
தமிழ் ஈழ விடுதலை புலிகளின் அமைப்பில் இருந்து விலகி குருநாகல் பிரதேசத்தில் ஒளிந்திருந்த போதும், தன்னுடன் இரண்டு சயனைடு வில்லைகளை ஒளித்து வைத்திருந்தான் பிரசாத், அவ் வேளையில்தான், சுற்றிவளைப்பு நடாத்தப்பட்டு, தமிழர்கள் கைது செய்யப்பட்டார்கள்.
 
அக் கைதுக்கு பின்னர், தான் விசாரணைக்காக நாலாம் மாடிக்கு கொண்டு செல்லப்பட நேரும் என்னும் பட்சத்தில், தான் வளர்க்கப்பட்ட, பயிற்றுவிக்கப்பட்ட மரபுக்கமைய சயனைடு உட்கொண்டு தன் வீரத்தை பறை சாற்றி, தன் உயிரை எதிரியின் கைகளில் மாட்டாமல் தானே மாய்த்து கொண்டான். இவ் வீர மறவன். இவரது இளைய சகோதரர் வீரவேங்கை - முரளி (கிருஷ்ணபிள்ளை கிரிஷ்ணமுரளி) 16.06.1990 ஆம் ஆண்டு களுவாஞ்சிகுடி இலங்கை முகாம் தாக்குதலில் வீரச்சாவடைந்தவர்.
 
தமிழீழ வரலாற்றிலே கிழக்கு மாகாணத்தில், ஆரையூரில் அவதரித்த முதல் ஆண் மாவீரரான வீரவேங்கை - பிரதீஸ் (சின்னதுரை ரகு), வீரவேங்கை - பிரியன் (தம்பிப்பிள்ளை நவரெத்தினராஜா) ஆகிய இரு வேங்கைகளும் 09. 09 .1985 அன்று இலங்கை அதிரடிப்படையினர் சுற்றி வளைத்தபோது தங்களுக்கு கொடுக்க பட்டிருந்த கைக்குண்டை வீசிவிட்டு சயனைடு அருந்தி தங்களின் விடுதலை அமைப்பையும், தனது ஊரின் வீரத்தையும் காப்பாற்றி தமிழீழ மண்ணை முத்தமிட்டனர். இவ் விரு மாவீரர்களும், தென் தமிழீழ மண்ணில் ஆரம்பிக்கப்பட்ட முதலாவது பயிற்சி பாசறையில் தங்களின் படைத்துறை பயிற்சியை முடித்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
பிரதீஸ் (ரகு), இவர் LTTE Aunty என்று போராளிகளால் அன்பாக அழைக்கப்பட்ட பூரணம் அம்மாவின் ஒரே மகன் என்பது இங்கு குறிப்பிட வேண்டிய விடயம். பூரணம் அம்மா எமது இன விடுதலைக்காகவும், எம் அமைப்புக்காகவும் பட்ட துன்பங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. அவர் கையால் ஒரு பிடி உணவு உண்ணாத கிழக்கு மாகாணத்தில் வாழ்ந்த போராளிகள் இருக்க முடியாது.
 
இதை மேல் மட்டங்கள் மறந்ததுதான் வேதனைக்கு உரிய விடையம். இத் தாயின் அன்பு, பாசம் அனைத்தும் நீண்ட காலம் நீடிக்காமல் செய்து விட்டனர் தேச துரோகிகள். டெலோ அமைப்பில் இருந்து, இந்திய சிப்பாய்களுக்கு ஏவல் வேலை செய்த கிழவி ரவி, அன்வர் ஆகியோரால் 1988 இல் இத் தாய் சுட்டு கொல்லப்பட்டார்.
 
இப் படுகொலைகள் அனைத்துக்கும் தலைமை தாங்கியவர் முன்னாள் கிழக்கு மாகான டெலோ தலைவரும், பாராளுமன்ற உறுப்பினரும் என்பது எம் மக்கள் மறக்க கூடாத விடயம். இதைப் போன்று, ஆரையம்பதி மண்ணில் உதித்த லெப்.கலா(கிருஷ்ணபிள்ளை சதானந்தரத்தினம்), கல்முனையை சேர்ந்த ரமணண்ணா, மற்றும் சில போராளிகள் இந்திய இராணுவத்தின் சதியில் 19.04.1988 அன்று விடுதலை செய்யப்பட்டவுடன், அவர்களை வெட்டி படுகொலை செய்த பங்கும் இந்த டெலோ தலைவன் ஜனாவையே சாரும். இதில் உயிர் தப்பிய நானும், இன்னும் ஒரு முன்னாள் போராளியும் இன்றும் உயிருடன்தான் உள்ளோம்.
 
இவர்களை தொடர்ந்து, இந்திய சிப்பாய்கள் ஈழ மண்ணை ஆக்கிரமித்து இருந்த போது, EPRLF அடி வருடிகளினால் அடையாளம் காணப்பட்ட வேளை, எதிரியின் கைகளில் உயிருடன் சிக்காமல் சயனைடு அருந்தி, 2வது லெப்.அனித்தா (இந்திராதேவி தம்பிராஜா) கிழக்கு மாகாணத்தின் முதல் பெண் மாவீரர் பட்டியலில் தன்னை 28.11.1988 அன்று இணைத்துக் கொண்டு தனது ஊருக்கு பெருமை சேர்த்தார்.
 
இப்படி எம் மண்ணுக்கு வீரத்தை விதைத்து விட்டு சென்ற வீரர்களே, நீங்கள் என்றும் எம் நெஞ்சில் தீயாக எரிந்திடுவீர். துரோகிகளை எங்கள் மூலம் எரித்திடுங்கள்.

தமிழீழத் தாயகத்தின் விடிவிற்காக.........
உலகத்தமிழரின் குரலாக ஒன்றிணைவோம்.
நன்றிகள் பல.
 

 

.
 

 


.

tr94.jpg

 

  • கருத்துக்கள உறவுகள்

lt_col_kumarappa.gif

யாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகக் கொண்ட லெப்டினன்ட் கேணல் குமரப்பா அவர்கள் 1983ம் ஆண்டு தன்னை முழுமையாக தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைத்துக் கொண்டார்.

lt_col_kumarappa2.jpg

தமிழர் தாயகப் பகுதிகளில் நிலை கொண்டிருந்த சிறிலங்கா படையினருக்கும், காவல்துறையினருக்கும் எதிராக மேற்கொள்ளப்பட்ட பல்வேறு தாக்குதல்களில் பங்கெடுத்து சிறிலங்கா படையிருக்கு பல்வேறு அழிவுகளை ஏற்படுத்தியிருந்தார். தமிழீழத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் சிறிலங்கா படையினருக்கு எதிரான தாக்குதல்களில் லெப்.கேணல் குமரப்பா அவர்கள் பங்கு கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

குமரப்பா அவர்களின் திறமையை அறிந்திருந்த தேசியத் தலைவர் அவர்கள் மட்டக்களப்பு மாவட்ட தளபதியாகவும், யாழ். மாவட்டத் தளபதியாகவும் நியமித்தார். தலைவர் அவர்கள் தன் மீது வைத்திருந்த நம்பிக்கையை தனது செயற்பாட்டின் மூலம் குமரப்பா அவர்கள் நிருப்பித்திருந்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் தளபதியாகவும். யாழ். மாவட்டத்தின் தளபதியாகவும் விளங்கிய காலத்தில் அந்தந்த மாவட்டங்களில் சிறிலங்கா படையினருக்கும், சிறிலங்கா காவல்துறையினருக்கும் எதிராக மேற்கொள்ளப்பட்ட பல்வேறு தாக்குதல்களில் லெப்.கேணல் குமரப்பா அவர்கள் ஈடுபட்டதுடன் அந்தந்த மாவட்டங்களில் விடுதலைப் புலிகள் அமைப்பினை உறுதியாகக் கட்டியமைக்க அயராது உழைத்தார்.

lt_col_kumarappa1.jpg

சிறிலங்கா - இந்திய உடன்படிக்கை காலப்பகுதியில் லெப்.கேணல் குமரப்பா அவர்கள் திருகோணமலை மாவட்டத் தளபதி லெப்.கேணல் புலேந்திரன் உட்பட்ட போராளிகளுடன் தமிழீழக் கடற்பரப்பில் பயணித்துக் கொண்டிருந்தவேளை சிறிலங்கா கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டு காங்கேசன்துறை படை முகாமிலும் பின்னர் பலாலி படைமுகாமிலும் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.

தடுத்து வைக்கப்பட்டிருந்த இவர்களை கொழும்பிற்குக் கொண்டு செல்வதற்கு சிறிலங்கா - இந்தியப் படைகள் மேற்கொண்ட சதியினை முறியடிப்பதற்காக சயனைட் உட்கொண்டு தம் இன்னுயிர்களை இவர்கள் ஈகம் செய்தனர்.

இந்திய சிறிலங்கா படைகளின் சதியினை அறிந்து கொண்ட லெப்.கேணல் குமரப்பா அவர்கள் தன்னை அழித்து கொள்வதற்கு முன்னர் தேசியத் தலைவர் அவர்களிற்கு எழுதிய மடல்:

கனம் தலைவர் அவர்களுக்கு,

குமரப்பா ஆகிய நான் 3.10.87 அன்று அதிகாலை 4.30 மணியளவில் சிறிலங்கா கடற்படையால் பருத்தித்துறை கடலுக்கு மேலாக வைத்துக் கைது செய்யப்பட்டேன். பின்பு காங்கேசன்துறை முகாமிற்கு கொண்டு வந்து, அங்கிருந்து பலாலி இராணுவ முகாமுக்கு இந்திய அமைதிப் படையினரின் கண்காணிப்பிலும், இலங்கை இராணுவத்தின் பாதுகாப்பிலும் இருக்கிறேன்.

மேலும் என்னை கொழும்பிற்குக் கொண்டு செல்ல நேரிடலாம். நான் இலங்கை அரசாங்கத்தின் சட்டங்களை அங்கீகரிக்கவில்லை. என்னைக் கொழும்பு கொண்டு செல்ல நேரும் பட்சத்தில் என்னை முழுமையாக அழித்துக் கொள்ள சித்தமாயுள்ளேன்.

”புலிகளின் தாகம் தமிழீழ தாயகம்”

இங்ஙனம்

குமரப்பா

(ஒப்பம்)

lt_col_kumarappa3.jpg

 

 

 

http://www.veeravengaikal.com/index.php/adikatkal/58-lt-col-kumarappa-balasundaram-ratnabalan-valveddithurai-jaffna

  • கருத்துக்கள உறவுகள்

இயற் பெயர் -

இயக்கப் பெயர் - திவாகினி

தாய் மடியில் -

தாயக மடியில் - 25.05.2000

கப்டன் திவாகினி தொலைத் தொடர்பாளராய் பணி ஆரம்பித்து நிர்வாகப் பணியும் இடையிடையே போர்களப்பணியும் ஆற்றியவள். அலைகள் விரிந்து ஓயாத அலை மூன்று வீச்சம் கொண்ட தருணத்தில் ஆட்பற்றாக்குறை நிவர்த்தியாய் தருணத்திற்குப் பொருத்தமாய் எல்.எம்.ஜி (L.M.G) கனரக இயக்குநராய் வேவுப்புலியாய் வேண்டிய விதமாய் அடையாளப்பட்டுக் கொண்டவள்.

இயல்புச் சுபாவத்தில் தனித்த கலவை அவள். அதிகம் நெருங்கிக் கொள்ளாதவர்களுக்கு அவள் கடுமை அடிதடி அடாவடி. நெருங்கியவர்களுக்கு காரியவதி கண் பார்த்தால் கை செய்யும் நுட்பக்காரி அன்னியையும் பொன்னியாக்கும் கைவரிசைக்காரி.

மனமுண்டானால் இடமுண்டு என்பதற்கு உதாரண புருசி.

கூட்டுப்பணி எனில் குழப்பம்தான். தனித்த பணியே தடம் வைத்திருக்கிறது. தொடக்க காலத்தில் மனமொப் பாத பணியாகில் இஞ்சி தின்ற குரங்காய் அவள் செய்கைகள் வெளிப்படினும் கட்டளைக்குக் கீழ்பணிந்து காரியம் நடக்கும். பெறுபேற்றில் அது வெளிப்பட்டிருக்கும். மனமொப்பிவிட்டாலோ வானத்திற்கும் éமிக்குமாய் குதிப்பு நடக்கும். பணிக்கப்பாலும் பறப்பு நடக்கும்.

நிர்வாக பணிகளில் நீண்டகாலம் அடக்கப்பட்டு விட்டதாய் அங்கலாய்த்தவர்களுக்கு ஓயாத அலைகள் மூன்று அலைக்கரம். அத்தனை பேருக்குமான சண்டைக்கள வாய்ப்பைத் திறந்து விட்டது என்று குறிப்பிடும் அளவிற்குஅநேகமான நிர்வாகப் பணியாளருக்கு வாய்ப்புக் கொடுத்த வள்ளன்மை கொண்டது. திவாகினிக்கு ஓயாத அலைகள் மூன்றுதான் போர்கள வாய்ப்பை கொடுத்த முதற்களம் அல்ல. ஏலவே 'சத்ஜெய" களத்தில் அணித்தலைவியாயும் கொம்பனி மேலாளரின் உதவியாளராகவும் பணியாற்றிய அனுபவமிருந்தது. அதிகாரிகள் கற்கைநெறிக்காய் தெரிவாகி கற்றுக்கொண்டிருந்த காலப்பகுதியில்(1997) 'ஜெயசிக்குறு" ஜெயம் என்ற போது கற்றுக் கொண்ட காட்டுப்பயிற்சிகளைக் கொண்டு களமாடிய அனுபவமுமிருந்தது. எனினும் சத்ஜெயக்களமோ ஜெசிக்குறுக் களமோ அவளிற்கு அவ்வளவாய் சரிப்பட்டு வரவில்லை.

ஓயாத அலைகள் மூன்றே அவளது போர்முகத்தை வெளிப்படுத்தியது. ஆட்பற்றாக்குறை மட்டுமன்றி அது அதுபற்றிய அறிவு கொண்டோர் அருந்தலாய் இருந்த நெருக்கடியான அக்காலமதில் நிலமை புரிந்து 'இடனறிந்து" துணிந்த போர்குணமே அவளது நிமிர்வு.

அத்தியாயம் முடிந்தாய்அரணிட்டு இறுமார்ந்திருந்த பகுதிகளை அடுத்தடுத்து விடுவித்தபடியே சீறிக்கொண்டிருந்த வீச்சக் காற்றில்விடுவிக்கப்பட்ட பகுதிகளை தக்கவைத்துக் கொள்ளதக்க தற்காப்பு வேண்டும் விதமாய் நீண்டுகொண்டேயிருந்தது. அப்போது பல மைல்கள் பல பத்துப் பேருமின்றி ஒரு சில கனரகங்களையும் மன ஓர்மத்தையுமே மாற்றாய்க் கொண்டிருந்த காலம் அது.

திவாகினி எல்.எம்.ஜி பற்றி தான் சுயமாய் அறிந்துகொண்டே சிற்றறிவோடு துணிவாய்ப் பணியேற்றாள். வேண்டும்போது வேவுப் புலியாயும் மாறிப் போனாள். மணலாறு, கலகலப்பையாறு, பப்பாசிப் பொயின்ற், சத்துருக்கொண்டான், சேமடு என்று எல்.எம்.ஜி யோடு பவணி வந்தாள். மரையடித்த குளத்திற்கு பணி நகர்ந்தபோது அணித்தலைவியாய்வேவுப் புலியாய் கனரகம் வேண்டிய போது கனரக இயக்குநராய் களமிறங்கினாள். ஓயாத அலைகள் மூன்று வடபோர்முனை நோக்கி திரும்பியபோது அவள் உற்சாகம் மென்மேலும் கரைபுரண்டு கொண்டது. விடுவிப்புச் செயற்பாட்டு அணியாயும் அழைப்பு வந்தது சொந்த மண்ணிற்கே. சொந்த மண்ணின் சுகம்! உணர்ந்து கொண்டர்களுக்குப் புரியும். திவாகினியும் விதி விலக்கல்ல.

மருதங்கேணி மையப்பகுதி வீடு விக்கப்படாது சீறிச்சினந்து கொண்டிருக்கையில் உள்நுழைந்து உற்சாகம் தந்தவள். முகாவில், இயக்கச்சி, பளை என்று பணிசெய்து முகமாலையில் தரித்து நின்றபோதுதான் அது நிகழ்ந்தது.

25.05.2000 'சட்" சிறிய சத்தம். நிலையிலிருந்தவளிடம் நிசப்தம்! ஓய்விலிருந்தபோது அது நிகழ்ந்தது. அவள் முகமாலை மண்ணை முத்தமிட்டுக் கொண்டாள். 'ஞாலம் கருதினும் கைகூடும் காலம் கருதி இடத்தான் செயின்"

'தகுந்த காலத்தைக் குறித்து இடனறிந்து செய்வானாயின் அவன் உலகமெல்லாம் பெற நினைத்தானாயினும் பெறலாம்" என்ற திருவள்ளுவரின் திருவரிகள்கப்டன் திவாகினியின் பட்டறிவாய் படிப்பினையாய் பதிவாகியது.

'நான் வீரச்சாவடைந்த பின் என் இக்குறிப்பினை வாசிக்கும் யாராக இருந்தாலும் என் ஆசைத் தங்கையை என் வழியில் அழைத்து வாருங்கள்."

புதிதாய் பிறக்கும் புலிகளுக்குள் அவள் ஆன்ம வரிகள் அர்த்தம் கொள்ளும்.

அகநிலா

  • கருத்துக்கள உறவுகள்
  • தொடங்கியவர்

lt_col_vanathi.gif

 

lt_col_vanathi1.jpgவிடுதலைப் போராட்ட வரலாறுகளில் முதன்மையான தமிழீழ விடுதலை போராட்டமானது தன்னகத்தே பெரும் போராளிகள் மக்களின் தியாகங்களை சுமந்த வலராறுகள் நாம் அறிவோம்.

ஆனாலும் மறைமுக கரும்புலிகள் போராளிகளிகளின் உள்ளுணர்வுகளும் தியாகங்களும் பலரது மனங்களுள்ளே மறைந்து போகிறது ஆனாலும் அவர்களின் வாழ்வும் மண்ணிற்க்காய் தம்மை அர்ப்பணித்த தற்க்கொடையும் எம்மையெல்லாம் எம் இலக்கு நோக்கிய பயணத்தில் உந்தி தள்ளும் விசையாக செயற்பட ஏதுவாகிறது.

தாயக களங்களில் சமர்களிலெல்லாம் போராளிகளின் தன்னலமற்ற செயற்பாடுகளே வெற்றிகளை எமதாக்கியது.

குடும்ப வாழ்வில் இணைந்த பெண் போராளிகளாயினும் போராட்ட வாழ்வின் முன்னுதாரணங்களாக மேஜர் நிர்மலா, லெப்.கேணல் கமலி, மேஜர் சுடரேந்தி, லெப்.கேணல் வரதா, கேணல் தமிழ்செல்வி, லெப்.கேணல் இசைப்பிரியா ஆகியோரின் வரிசையில் லெப்.கேணல் வானதியும் இணைந்து கொண்டாள்.

ஆம் குடும்ப சுமைகளை தாங்கும் குடும்பத்தலைவிகளாகவும் தாயக சுமைகளை தாங்கும் வீராங்கனைகளாகவும் போராடும் வாழ்வின் ஆதாரங்களாக மனதின் துணிவு எங்கிருந்துதான் கிடைக்க பெற்றது இவர்களிடம்.....!!!!!!!!

சிறுத்தை படையணியின் இரண்டாவது பயிற்சி முகாமிலே பயிற்சிகளை நிறைவு செய்தவள் லெப்.கேணல் கிருபா/ வானதி.

தொடக்க காலம் முதல் லெப்.கேணல் சுதந்திராவின் வழிகாட்டலில் சிறுத்தை படையணிகளால் நடாத்தபட்ட பாரிய வலிந்த தாக்குதல்கள், ஊடுருவி தாக்குதல்கள், வேவு நடவடிக்கைகள் போன்றவற்றில் மிகவும் திறமையாக செயற்பட்டாள்.

சமகாலத்தில் கவிகை, கட்டுரை, நாடகங்களென இவளது கலைத்திறமைகளும் வெளிவந்து கொண்டிருந்தன. அமைதியான இயல்பிற்கு சொந்தகாரி இவள். ஆனாலும் போராளிகளின் மத்தியில் கல, கலப்பாகவும் போராளிகளை மகிழ்வித்த வண்ணமிருப்பாள்.

பல சமர்களில் விழுப்புண்களை ஏற்ற உடலுடன் தொடர்ந்தும் களப்பணிகளில் இவளது பயணம் தொடர்ந்தது.

சிறுத்தை படையணி சோதியா படையணியுடன் இணைக்கப்பட்ட பின்னர் வலிந்த தாக்குதல் நடவடிக்கைகான பயிற்சி நடவடிக்கைகள், மாதிரி பயிற்சி நடவடிக்கைகள்களை தானே முன்னின்று நடாத்த சமருக்கான வெற்றிக்கு வழிசமைத்தாள்.

மேஜர் சோதியா படையணியில் பிரிகேடியர் துர்க்கா அவர்களின் நிர்வாக பொறுப்பாளாராக பல ஆண்டுகள் பணியாற்றினாள்.

போர் அமைதி காலத்தின் போது யாழ்.மாவட்டத்திற்கு அரசியல் பணிக்காக தெரிவு செய்யப்பட்ட சோதியா படையணி போராளிகளிற்கு பொறுப்பாளாராக நியமிக்கபட்டாள். அமைதிக் காலமென்றாலும் பல புல்லுருவிகளின் செயற்பாடுகள், இராணுவ புலனாய்வாளர்களின் ஊடுருவல் முயற்சிகளிலிருந்து பெண் போராளிகளை காக்கும் பணி இவளின் முதன்மை செயற்பாடாகவிருந்தது.

2005 ம் ஆண்டு காலப்பகுதியில் தலைவர் அவர்களின் வேண்டுகோளுக்கமைய தான் வாழ்க்கை துணைவராக நேசித்த புலனாய்வுத்துறை பொறுப்பாளர்களில் ஒருவரான வினோதன் எனும் போராளியை கரம் பிடித்து திருமணபந்தத்தில் இணைந்துகொண்டாள்.

திருமணபந்தத்தில் இணைந்துகொண்ட போதிலும் தனது கள செயற்பாட்டில் எவ்வேளையிலும் பின் நிற்காது தொடர்ந்தும் சமர்களிலும், நிர்வாக செயற்பாடுகளிலும் உழைத்தாள். 2006 ம் ஆண்டு பண்ணரசன் எனும் குழந்தைக்கு தாயான போதும், அவளது போராட்டச் செயற்பாடுகள் தொடர்ந்த வண்ணமிருந்தன.

இறுதி சமர் வன்னியெங்கும் விரிந்திருந்த போதும், குடும்ப வாழ்வும், களமுனை வாழ்வுமாக இவளது பயணம் தொடர்ந்தது. தான் வளர்த்து விட்ட தோழிகளின் இழப்புக்கள், மக்களின் பேரழிவுகள், தொடர் வான் தாக்குதல்கள், இடப்பெயர்வின் அவலங்கள், மனதினை தாக்கிய போதும் கூட தனது குடும்பம், தனது குழந்தையென எவற்றையும் எண்ணாது தாயகத்தை எதிரியின் வல்வளைப்பிற்குள் செல்லாது தடுக்கும் பணியில் இரவு பகல் பாராது ஈடுபட்டாள்.

துணைவன் ஒரு சமர் களத்தில், இவளோ எதிரியின் வரவை எதிர்பார்த்து வேறொரு சமர் களத்தில், இவர்களின் குழந்தை செல்வமோ உறவினர்கள், நண்பர்களின் பராமரிப்பில் மாதமொருமுறை ஒரு சில மணித்துளிகளே குடும்பங்களுடனான சந்த்திப்புக்கள். இப்படியாகத்தான் இறுதிப் போர் காலங்களில் போராளிக் குடும்பங்களின் வாழ்விருந்தது.

இறுதிப் போர்க்காலங்களில் தொடர்ச்சியாக எதிரின் வல்வளைப்புக்களிற்கு எதிரான சமர்களில் ஈடுபட்ட லெப்.கேணல் வானதி 21.03.2009 அன்று தாக்குதல் நடவடிக்கை ஒன்றிற்கான திட்டமிடல் பணிகளில் ஈடுபட்டிருந்தபோது எதிரியின் எறிகணை வீச்சில் வீரச்சாவை அணைத்துக் கொண்டாள்.

 விடுதலைக்காய்
வீச்சாகி -நின்றவள்
களங்களிலே
கனலாகி நின்றவள்
சிறுத்தையணியில்
சீற்றமுடன் பகையளித்தவள்
சோதியா படையணியின்
சோதியாய் நின்றவள்
கனவுகள் தாங்கி
நினைவெல்லாம் நடப்போம்.

  • கருத்துக்கள உறவுகள்
  • கருத்துக்கள உறவுகள்

இயற் பெயர் - சின்னத்தம்பி பத்மநாதன்

இயக்கப் பெயர் - அமுதன் / மல்லி

தாய் மடியில் - 27.04.1964

தாயக மடியில் - 17.11.1994

17.11.1994 அன்று நெடுங்கேணிப் பகுதியில் சிறிலங்கா படையினர் பதுங்கியிருந்து நடத்திய தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்.கேணல் மல்லி(அமுதன்) அவர்களின் 16ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.

சிறிலங்காவில் சந்திரிகா தலைமையில் புதிய அரசு தேர்ந்தெடுக்கப்பட்டதையொட்டி தமிழீழ விடுதலைப் புலிகள் நல்லெண்ண நடவடிக்கையாக அறிவித்த தன்னிச்சையான போர்நிறுத்த காலப்பகுதியிலேயே சிறிலங்கா படையினரால் லெப்.கேணல் மல்லி மீதான தாக்குதல் நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

லெப்.கேணல் மல்லி, விடுதலைப் புலிகளின் மூத்த தளபதிகளில் ஒருவன். இவன் விடுதலைப்போராட்ட காலத்தில் பல களங்களில் தன் முத்திரையைப் பதித்தவன்.

இரு தேசங்களின் ஆக்கிரமிப்பு இராணுவங்களுடன் இவன் போராடினான். முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு எனும் இடத்தில் பிறந்தான். நீண்ட போராட்ட வாழ்வில் ஒயாது கடுமையாக உழைத்தவன். தனைவருத்தி தன்னொளி பார்த்தவன். அமைதிப் போர்வையுடன் வந்த இந்தியப் படைகள் முள்ளியவளையில் முகாம் இட்டிருந்தன.1990ம் ஆண்டில் இம்முகாம் மீதான தாக்குதலில் பங்கேற்று நின்றான். இந்தக் காலப்பகுதியிலேயே அவர்களோடு கூட்டாக நின்ற கும்பல்கள், கிளிநொச்சி 18ம் போர் எனும் இடத்தில் முகாம் அமைக்க முற்பட்ட வேளையில் தேசத்துரோகிகள் மீதான தாக்குதலில் ஈடுபட்டான்.

1991களில் கொக்காவில், முல்லைத்தீவு, மாங்குளம் என தொடர்ந்து வீழ்ந்த இராணுவ முகாம்களின் தாக்குதல்களில் முன்நின்றான்.

1991 ஆ.க.வெ என விடுதலைப் புலிகளால் பெயர் சூட்டப்பட்டு நடாத்தப்பட்ட ஆனையிறவு முகாம் மீதான தாக்குதல்களிலும் 1992ல் வண்ணாங்குள முகாம் தாக்குதல்களிலும் 1993ல் பூநகரி முகாம் தாக்குதல்களிலும் புயலென நின்றான்.1990ம் ஆண்டு மாங்குள முகாமிலிருந்து மல்லாவிப் பக்கமாக முன்னேற முயன்ற இராணுத்தினருடன் நேரடி மோதலில் நின்றான்.

சிலாவத்துறையில் இருந்து அளம்பில் நோக்கி முன்னேற முயன்ற இராணுவத்தினருடனான நேரடி மோதலில் குதித்தான்.

யாழ்தேவி எனப் பெயரிடப்பட்டு மேற்கொள்ளப்பட்ட இராணுவ நடவடிக்கை அது. கட்டைக்காட்டிலிருந்து புலோப்பளையை நோக்கி முன்னேற மூயன்ற யாழ்தேவியை தடம்புரள வைத்தான். அன்பும் பண்பும் அகத்திருத்திய மனிதரைச் சுமந்து யாழ்தேவிவரின் வரலாமேயன்றி ஆக்கிரமிப்பு எண்ணங்கொண்டு எவரும் வருதல் இயலாது என்று எதிர் நின்றான். தாயை தாய்த் தேசத்தை தன் உயிரினும் மேலாகப் பூசிக்கின்றவன். போர் என்றால் நெஞ்சம் பூரித்து தோள்கள் வலுவுற நிமிர்ந்து நடந்தவன். எங்கள் தேசம் நிமிர்வுற நிமிர்ந்தவன்.

  • கருத்துக்கள உறவுகள்

இயற் பெயர்

இயக்கப் பெயர் - நிதி

தாய் மடியில்

தாயக மடியில்

மன்னார் மாவட்டத்தில் வீரமரணம் அடைந்த முதல் புலி. இராணுவச் சுற்றிவளைப்பின் போது இறுதி வரை போராடி எதிரியின் கையில் தான் பிடிபடக்கூடாது என நினைத்து தன் கைத் துப்பாக்கியாலே தன்னைத் தானே சுட்டு எமது இயக்க மரபுக்கு இணங்க வீர மரணத்தை அடைந்தவன் நிதி.

அன்று நாங்கள் நிதியைப் பற்றி அறிந்திருந்தோமே தவிர விடுதலையைப் பற்றிப் புரியவில்லை. நிதியின் இறுதி நிகழ்வு பெரிதாக ஊர்வலமாக நடத்தப்படவில்லை. அன்றைய காலகட்டம் மிகப்பயஙகரமாக இருந்ததால், ஒவ்வொருவர் வாயிலும் மெதுவாகப் பேசப்படுகிறது.

புலிப்படை நிதி இறந்து விட்டான் என்றே கூறப்படுகிறது. அன்றைய நேரத்தில் மரண நிகழ்வு என்பது எவராலும் தாங்கிக்கொள்ள முடியாத மனநிலையில்தான் இருந்தது.இளம்வயது, வாழ வேண்டிய காலம். இப்படி மரணித்துப் போவதா? என்று மக்கள் கலக்கத்தோடு கண்கலங்கித் திரிகின்றார்கள். ஞாயிற்றுக்கிழமைகளில் நாம் தேவாலயத்துக்குப் போகும்போது ஒரு பையோடு சந்தியில் நிற்கும் நிதி.

அப்போது புலிப்படையைப் பார்க்க ஆவல். நாம் நேரத்திற்கு கோயிலுக்குப் போவதாகக் கூறிவிட்டு சந்தியில் நிற்கும் புலிப்படையினரைத் தள்ளி நின்றே பார்ப்போம். சிலர் நெருங்கி நின்று கதைப்பார்கள். நாமும் மெதுவாகக் கிட்டச் சென்று நிற்போம்.

சில நாட்கள் போனபின் சந்தியில் சிரித்து நின்ற நிதியின் வீரமரணம் பற்றி போஸ்ரர் ஒட்டப்பட்டிருந்ததைப் பார்க்கும்போது எங்கள் மனம் எதையோவெல்லாம் யோசித்து கலங்கிக் கொண்டே இருந்தது.

ஏன் இறந்தான் நிதி ? பிரபாகரனால் ஏன் இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது ? மரணம் என்பது என்ன ? நாம் ஏன் வாழ்கின்றோம் ? எப்படியான நிலையில் தமிழினம் இருக்கிறது ? தமிழனுக்கு என்ன நடக்கிறது ? எமக்கு யார் விடுதலை பெற்றுத் தற்தவர்கள் ? விடுதலையில் நாம் வாழ்கின்றோமா ? சிறீலங்கா அரசின் கொடுமைபற்றி புரியாத நிலையில் கிடந்த மக்களுக்கு நிதியின் வீரமரணத்தின் பின்தான் தமிழனின் நிலை எப்படியுள்ளது என்று தெரியவந்தது. எமக்கும் அன்று தெரியவந்தது.

ஒரு புலி வீரமரணம் அடையும் போது மேலும் பல புலிகள் பாசறையை நோக்கி வருவார்கள் என மேஜர் அசோக் அண்ணன் அன்று எங்களுக்கு அடிக்கடி கூறுவார். அது உண்மை. நிதி அண்ணனின் வீரமரணத்தின் பின் என் மண் எவ்வளவோ துரித வளர்ச்சி பெற்று வருகிறது. போராட்டத்தில் இன்று அத்தனைக்கும் காரணம் அண்ணன் காட்டிய வழியில் நின்று போராடி வீர மரணத்தைத் தழுவிய மாவீரர்கள். களத்தில் நின்று போராடும் போராளிகளே.

மன்னார் மண் முதல் முதல் கண்ட களப்பலியில் நிற்கும் நிதி, அன்சார் ஆகிய மாவீரர்களின் தியாகம் இன்று எம்மை பலப்படுத்தி வளரச் செய்துள்ளது. அன்சார்( நிக்கலஸ் மைக்கல் குருஸ் ) எனும் போராளி தெல்லிப்பளையில் நடந்த முற்றுகையின் போது போராடி வீரச்சாவடைந்தான். நிதி, அன்சார், எம் மாவீரர்கள் எம் மண்ணுக்கு ஒளிவிளக்காக நின்று மெழுகுவர்த்தியாக உருகியவர்கள்.

எமது இயக்கத்தில் முதல் முதல் வீரமரணமடைந்த சங்கர் அண்ணன்: அதே ஞாபகத்தில் என மன்னார் மண் இழந்த மாவீரர்கள் தமக்கு சுதந்திரம் கிடைக்க வேண்டும் என்று போராடியவர்கள் அல்ல. தம் மண், இனம் விடுதலை பெறவேண்டும் என எண்ணி சாவுக்கு மத்தியில் நின்று போராடி, எம்மையும் எம் மண்ணையும் பாதுகாத்து தங்கள் உடல்களை எமக்காப் புதைத்தவர்கள். அவர்கள் காட்டிய வழியில் நாமும் விடுதலை பெறும் வரை தொடர வேண்டும். அவர்களின் இலட்சியமும் கனவும் நிறைவேறி எம் மண் விடுதலை பெற நாமும் எமக்காக களத்தில் விழுந்த மாவீரர்களின் ஆயுதத்தை எடுத்து களத்துக்குப் புறப்படுவோம். வா நன்பனே ! இன்று புதை குழியில் இருக்கும் மாவீரன் நிதியின் வரலாற்றைப் படிப்போம். நாளாந்தம் போராடிக் கொண்டிருக்கும் போராளிகளைப் பற்றிச் சிந்திப்போம். எங்களுக்காக எம் மண்ணைப் பாதுகாக்கும் புனிதப் போரில் நாளாந்தம் வீரமரணமடையும் மாவீரனின் பாதையில் சேர்வோம் என உறுதி எடுப்போம். விடுதலை பெற ஒவ்வொருவரும் போராட வேண்டும். போர்களம் வா தமிழா !

எஙகள் நிதி எமக்காக மடிந்தான். எங்கள் நிதி தன்னை விட மண்ணை அதிகம் நேசித்தவன். எங்கள் நிதி தன் குடும்பத்தை விட தமிழ் மக்களை நேசிததவன். நிதியின் பாதையில் நானும் செல்வேன் என உறுதி எடுப்பேன். ஐயம் இல்லை எனக்கு.

  • கருத்துக்கள உறவுகள்

adikatkal.gif

 

capt_lingam.gif

9capt_lingam.png

capt_lingam1.jpg

9capt_lingam1.png

9capt_lingam2.png

capt_lingam2.jpg

9capt_lingam3.png

  • கருத்துக்கள உறவுகள்
  • தொடங்கியவர்

maj_thulashi.gif

காங்கேசன்துறை நடேஸ்வராக் கல்லூரியில் முதல்தர மாணவி, பின் நாட்களில் வேம்படி மகளிர் கல்லூரியின் க.பொ.த (உ/த) விஞ்ஞானபீட மாணவி, அந்த அமைதியான குகபாலிகா புலிகளோடு போனது எல்லோரையும் வியப்பில் ஆழ்த்திவிட்டது. வாய்திறந்து அதிகம் போசாத, ஆரவாரங்களில்லாத 'றோசாக்கா'வினுள்ளிருந்த நாட்டுப்பற்றை எவராலுமே ஏற்கனவே அடையாளம் கண்டிருக்கமுடியவில்லை.

அவரது நெருங்கிய தோழியின் தங்கையொருவர் 1989 இல் புலிகள் அமைப்பில் இணைந்து கொண்ட செய்தி காற்றில் பரவியது. செய்தியை கேள்வியுற்ற குகபாலிகா தோழியிடம் ஓடிவந்து, "எனக்கு ஒரு சொல்லுச் சொல்லியிருந்தா, நானும் சேர்ந்து போயிருப்பன். சொல்லாமல் போய்விட்டாள்"

என்று கவலைப்பட்டபோதுதான், அவளுக்குள்ளிருந்த விடுதலை நெருப்பைத் தோழியால் புரிந்துகொள்ள முடிந்தது.

நடேஸ்வராக் கல்லூரியில் படிக்கும் வரை ஒரு தவணைப் பரீட்சையில் குகபாலிகா முதலாமிடம் வந்தால், தோழி இரண்டாமிடத்தில் இருப்பர். மறு தவணையில் தோழி முதலாமிடத்துக்கு வர, குகபாலிகா இரண்டாமிடத்தில் இருப்பார். இருவருக்குமிடையிவான இடைவெளி ஒன்றோ, இரண்டோ புள்ளி களாகத்தான் இருக்கும். படிப்பில் முதல்தர போட்டியாளராக இருந்தவர்தான், குகபாலிகாவின் மிக நெருங்கிய நண்பி என்பது எல்லோரையும் வியப்படைய வைத்தது போலவே, அவர் போராடப் போனதும் பலருக்கு வியப்பைத் தந்தது.

படிப்பில் புலியாக இருந்தவர், விடுதலைப்புலியாக மாறியபோது இந்திய படைகள் எமது தாயகத்தைவிட்டு மெதுவாக விலகத்தொடங்கி விட்டிருந்தது. விடுதலைப்புலிகள் மகளிர் படையணியின் 7ஆவது பாசறையில் படையத்தொடக்கப் பயிற்சியை முடித்துக்கொண்டு துளசி யாகியவர், அதன் பின் கப்புதூ - மண்டான் போன்ற வெளியான பகுதிகளில் எமது அணி களுடன் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டார். 1990ஆம் ஆண்டின் இறுதிப் பகுதியில் விடுதலைப்புலிகள் மகளிர் படையணியின் இலத்திரனியல் கற்கை - பயிற்சி நெறியில் இணைத்துக் கொள்ளப்பட்டார். இலத்திரனியலோடு தொலைத்தொடர்புக் கருவிகளைப் பற்றியும் படித்துக்கொண்டே வேலை செய்யும் வல்லமை பெற்றிருந்த அந்த அணியில், துளசியின் அறிவும் திறமையும் மற்றவர்களில் இருந்து அவரை தனித்து அடையாளம் காட்டியது. வெளியில் இருந்து வருகின்ற ஆசிரியர்கள் கற்பித்துவிட்டுப்போகும் விடயங்களை அன்றன்றே தனது அணிக்கு மீளவும் விரிவாகத் துளசி கற்பிப்பார். ஐயம் திரிபற அவர்கள் கற்பதற்கு அவர் தனது விரிவான பங்கை ஆற்றியிருந்தார். செயல் முறைகளை ஆசிரியர்கள் ஒருதடவை சொல்லிக்கொடுத்தபோதே தெளிவாக விளங்கிக்கொள்ளும் அவர், ஆசிரியர்கள் போனபின் அணியினரை மறுபடி மறுபடி செய்வித்து அவர்களின் நினைவில் பதியவைத்துவிட்டார்.

ஒலியலை வாங்கிகளைச் செய்வது, தொடர்பாடல் கருவிகளைத் திருத்துவது, நேரக்கட்டுப்பாட்டுப் பொறிகளைச் செய்வது என ஒரு வருடம் வரை அந்த அணியினரோடு அவரின் பணி தொடர்ந்தது. 1991ஆம் ஆண்டின் இறுதியில் இவர்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சிலர், சிறப்புப் படையணி ஒன்றினுள் உள்வாங்கப்பட்ட போது, துளசியும் அவர்களில் ஒருவராகப் போயிருந்தார்.

சிறப்புப் படையணியின் தொலைத் தொடர்புப் பகுதிக்குப் பொறுப்பாக விடப்பட்ட துளசி, தனது அணியினரை வைத்துப் படையணியினருக்குத் தொடர்பாடல் கருவிகளைப் பயிற்றுவித்ததுடன், அவர்களுக்கான படையப் பயிற்சியளித்தலிலும் பங்கேற்றார். அதேநேரம் சிறப்பு அணியினருக்கான கராத்தேப் பயிற்சியில் ஈடுபட்டு மண்ணிறப் பட்டியைப் பெற்றுக்கொண்டார்.

1993ஆம் ஆண்டு காலப்பகுதியில் புதியவர்களைக்கொண்ட அணியொன்று துளசிக்கு வழங்கப்பட்டு, சிறப்பு அணியினருக்கான கணினிப் பிரிவு தோற்றுவிக்கப்பட்டு, இவரின் பொறுப்பில் விடப்பட்டது. கணினி கற்கைநெறியில் தானும் ஈடுபட்டவாறே தனது பிரிவினருக்கும் கற்பித்துக் கொண்டிருந்தார் அவர். தேடல் அவரின் இயல்பாகவே இருந்ததால் கணினி பற்றிய ஆங்கில நூல்களைத் தேடி வாசித்து, அதைத் தமிழாக்கம் செய்து தனது பிரிவினருக்கும் வாசிக்கக்கொடுப்பார்.

maj_thulashi1.jpg

"Populer Science" என்ற சஞ்சிகையில் What's new என்ற பகுதியில் ஒவ்வொரு முறை ஒவ்வொரு புதிய கண்டுபிடிப்புக்கள் பற்றிய தகவல்கள் வெளியாகும். அவற்றைத் தமிழாக்கம் செய்து ஷஷநவீன கண்டுபிடிப்புக்களில் சிறந்தவை|| என்ற பெயரில் ஒரு நூலாக வெளியிட்டிருந்தார்.

இந்த வேலைதான் தன்னுடையது என்ற வரையறை எதுவும் துளசிக்கு இல்லை. அவரது பிரிவினர் க.பொ.த (சா.த) தோற்றுவதற்கென கடுமையாகப் படித்துக்கொண்டிருந்த சில நாட்களில் அவர்களது சமயலுக்கான மரக்கறிகள், மாமிச வகையறாக்களைச் சந்தையில் வாங்கி, உரைப்பையில் வைத்து மிதிவண்டித் தாங்கியில் வைத்துக் கட்டியபடி துளசி மிதிவண்டியில் போவதைச் சாதாரணமாகக் காணலாம்.

தமது வேலைகளைக் கணினி மயப்படுத்தவிளைந்த எமது அமைப்பின் சில பிரிவுகளுக்கு, குறிப்பாகத் தமிழீழ நிதித்துறையின், பெண், ஆண் போராளிகளை உள்ளடக்கிய ஒரு அணியினருக்கு துளசி கணினியைக் கற்பித்தார்.

1994ஆம் ஆண்டின் இறுதிவரை தொடர்பாடல், இலத்திரனியல் பிரிவினருக்கும், கணினிப் பிரிவுக்கும் பொறுப்பாக இருந்தவரின் சுமை மிக அதிகம். பிரிவுகளின் விரிவு கருதி 1995ஆம் ஆண்டில் தொடர்பாடல், இலத்திரனியல் பகுதி தனியாகப் பிரிந்து இயங்க, துளசி கணினிப் பிரிவைத் தொடர்ந்தும் வழிநடாத்தினார். அதுவரை நாளும் சிறப்பு அணியினரின் பெண்களைக்கொண்ட இரு அணிகள், ஆண்களின் ஒரு அணி, கடலுக்கான சிறப்பு அணியினரின் இரு அணிகள், கடற்புலிகளின் படைத்துறைப் பள்ளி மாணர்வகள், தமிழீழ படைத்துறைப்பள்ளி மாணவர்கள் ஆகியோருக்கான தொடர்பாடல், இலத்திரனியல் வகுப்புகளுக்கான குறிப்புக்கள் துளசியால் தயாரிக்கப்பட்டு அவரது அணியினரால் கற்பிக்கப்பட்டிருந்தன.

போர்க்களம் போகும் அவா துளசியின் மனதில் கொழுந்துவிட்டெரிந்து கொண்டேயிருந்தது. 1991ஆம் ஆண்டில் ஆனையிறவு மீதான ஆகாய, கடல், வெளிச் சமருக்கு அழைக்கப்படாதவர் களில் துளசியும் ஒருவர். பெரும் சமர் ஒன்றுக்கான வாய்ப்பை இழந்த துளசிக்கு, இப்போது ஆவல் கட்டுமீறியது. துளசியின் வேண்டுகோளை மறுக்க முடியாத பொறுப்பாளர் அவரைப் போர்முனைக்கு அனுப்பினார்.

சூரியக் கதிர் - 01 எதிர் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த விடுதலைப்புலிகளின் மகளிர் படையணி இவருக்கு சமர்க்கள வாய்ப்பைக் கொடுத்தது. அந்த நடவடிக்கை முடியும் வரை காவும் குழுக்கள் சிலவற்றுக்குப் பொறுப்பாக நின்று களத்தில் காயமுறும் போராளிகளின் உயிர் காக்கும் கடினப் பணியைச் செய்திருந்தார்.

இரண்டு அக்காக்களுக்கும் ஒரு அண்ணாவுக்கும் செல்லத்தங்கையாக வீட்டிலே மென்மையாக வளர்ந்திருந் தாலும் கடின உழைப்பிற்கு அவர் பின்னிற்பதில்லை. சிறப்பு அணியினரோ இளம் வயதினர். 10 கிலோமீற்றர் தூரத்தை அவர்கள் ஓடும் வேகத்தில் எவராலும் ஓடிவிடமுடியாது. அதிகாலை 4.30 மணிக்கு ஓடுபாதைக்குவரும் துளசி 10 கிலோமீற்றர் தூரத்தை தன்னுடைய வேகத்தில் ஓடி முடிப்பார். இரண்டு, மூன்று நாட்களின் பின் அவரது கால்கள் வீங்கும். ஒரு நாள் ஓய்வெடுப்பார். மறுநாள் ஓடுவார். அவரை "ஓடு" என்று எவரும் சொன்னதில்லை. ஓடாமல் அவரும் நின்றதில்லை. அதனால்தான் சூரியக் கதிர் - 01 சமர்க்களத்தின் கடுமை யான நாட்களிலும் சிரிப்பு முகத்துடன் கடமையைச் செய்ய அவரால் முடிந்தது.

விடுதலைப்புலிகள் மகளிர் படையணி தன்னை 2ம் லெப்.மாலதி படையணியாக உருமாற்றிக்கொண்ட போதும் உடனிருந்த துளசி, வலிகாமத்திற்கான சண்டை முடிந்து எமது அணிகள் தென்மராட்சிக்கு வந்தகையோடு படையணியின் போர்ப்பயிற்சி ஆசிரியர்கள் அணியில் இணைத்துக் கொள்ளப்பட்டார். அதன் பின் துளசிக்கு ஓய்வே இருக்க வில்லை. சூரியக் கதிர் - 02 எதிர் நடவடிக்கை, ஓயாத அலைகள் - 01, உண்மை வெற்றி - 01, 02, 03 எதிர் நடவடிக்கைகள், பரந்தன் ஆனையிறவு ஊடுருவித் தாக்குதல் என நீள்கிறது அவர் பயிற்சி கொடுத்து அணிகளைக் களமிறக்கிய நடவடிக்கைகள். கூடவே தானும் போய்விடுவார்.

வன்னியைத் துண்டாடும் முயற்சியில் ஒரு பாரிய படைநகர்வு சிறிலங்கா அரசால் தயார்ப்படுத் தப்படுவதை ஊகித்த தலைவர் அவர்கள் எதிர் நடவடிக்கைக்கு எமது அணிகளைத் தயார்ப்படுத் தினார். நெடுங்கேணி, மாங்குளம் பகுதிகளில் காவல் உலா போய் இடங்களை பழக்கப்படுத்தும் வேலைகளை எமது அணிகள் செய்தபோது துளசியும் கூடவே நடந்தார். அந்நேரம் மணலாற்றுப் பகுதியில் முன்னரங்க நிலை களைப் பலப்படுத்தவென லெப்.கேணல் தட்சாயினியின் கொம்பனி புறப்பட்டது. இதுவரை நாளும் பயிற்சி வழங்கியதிலேயே அதிக காலத்தைச் செலவிட்ட துளசி, தன்னைத் தாக்குதல் அணியோடு இணைத்துவிடும்படி அடம்பிடித்து, தட்சாயினியின் கொம்பனியின் பிளாட்டூன்களில் ஒன்றைப் பொறுப்பேற்றார்.

கனவு நனவான பூரிப்பு அவருக்கு. மார்பிலே கட்டியிருந்த மேலதிக ரவைக்கூட்டு அணியை நித்திரிரையில்கூட கழற்றியதில்லை. எந்நேரமும் சுடுகலனையும் தொலைத்தொடர்புக் கருவியையும் சுமந்தபடி எப்போதும் சண்டைக்குத் தயாரான நிலையில்தான் மணலாற்றிலே துளசியைக் காணலாம். ஒரு நாளில் ஒன்றிற்கு மேற்பட்ட தடவைகளில் தனது பிளாட்டூனின் கண்காணிப்பிற்கு உட்பட்ட இடங்களைச் சுற்றிப்பார்த்து அணியினருடன் கதைத்திருப்பார். எதையும் தான் செய்த பின்னரே ஏனையவர்களுக்குக் கட்டளையிடுவதால் எல்லோராலும் விரும்பப்படுகின்ற அணி முதல்வியாக அவர் இருந்தார். தட்சாயினி வந்து பார்த்துத் திருத்தம் செய்கின்ற அளவிற்கு அந்தப் பிளாட்டூனில் சிறிதுதவறும் இருக்காது.

இவர்கள் மணலாற்றில் நின்றபோதே நெடுங்கேணியில் இருந்தும், பின் வவுனியாவிலிருந்துமாக சிறிலங்காப் படைகள் நகரத்தொடங்கிவிட்டிருந்தன. புளியங்குளச் சந்தியை மையமாகக் கொண்டு படைத்தளம் ஒன்றை அமைத்து, எமது அணிகள் எதிரி நகர்வை முடக்கிவைத்திருந்தன.

தமக்கு எப்போது அழைப்புவரும் என்று ஆவலுடனிருந்த தட்சாயினியின் கொம்பனிக்கு வந்தது அழைப்பு. எதிரி நகர்வைத்தடுக்க அல்ல. ஊடுருவித் தாக்க. கொம்பனி தயாராகிவிட்டது. பிளாட்டூனின் வழிநடத்துனராக இருந்த துளசியை இப்போது நான் தட்சாயினியின் நிலைமை அறிவிப்பாளராக மாற்றிவிட்டதில் அவருக்குச் சிறிதும் உடன்பாடில்லை. களத்தில் நேரடியாக தான் நடவடிக்கையில் ஈடுபடுவதையே அவர் விரும்பினார். கொம்பனி மேலாளர் ஒருவரின் நிலைமை அறிவிப்பாளராகப் பணியாற்றவேண்டியதன் முக்கியத்துவத்தை நான் விளக்கிய பின்னரே, அரைமனதோடு ஒப்புக்கொண்டார்.

எதிரிகளால் சிறிதளவும் ஊகிக்கமுடியாத துணிகரத் தாக்குதலாகவே தாண்டிக்குள ஊடறுப்புத் தாக்குதல் தலைவர் அவர்களால் திட்டமிடப்பட்டிருந்தது. அந்த வெற்றிகரத் தாக்குதலில் துளசியின் பங்கு மறக்கமுடியாதது.

சில நாட்களிலிலேயே அடுத்த ஊடுருவித்தாக்குதலுக்கு அணிகள் தயாராகின. இப்போதும் தட்சாயினியின் நிலைமை அறிவிப்பாளராகவே துளசியும் தயாராகினார். பெரியமடு மீதான ஊடுருவித் தாக்குதலின்போது, தேவையேற்பட்டால் கொம்பனியை இரண்டாகப் பிரித்துச் சண்டையில் ஈடுபடுத்தும்படி தட்சாயினியிடம் நான் கூறியிருந்தேன். கொம்பனி பிரிவதாக இருந்தால், உள்நுழையும் மற்றைய அணியைக் களத்திலே வழிநடத்தும் பணியைத் தன்னிடம் தரும்படி தாட்சாயினியிடம் துளசி உடனேயே கேட்டிருந்தார்.

அணிகள் புறப்பட்டன. பெரியமடுவில் இருந்த சிறிலங்காப் படைத்தளம் ஊடுருவித் தாக்கப்பட்டது. களத்திலே அணியை வழிநடத்தும் கனவோடுபோன துளசியைத் தோழில் சுமந்தபடி திரும்பிவந்தன அணிகள். ஆளுமை மிக்க, அறிவாற்றல் உள்ள ஒரு போராளியை அதற்குள்ளேயே இழந்துவிட்டோமா என்ற வேதனை, துளசியை அறிந்த எல்லோருக்குள்ளும் எழுந்தது.

* * * * * * * * * * * * * * **

கல்லூரித் தோழிகள் 'றோசா சரியான அமைதி' என்கிறார்கள். வேலைக்குப் போகின்ற அம்மா, அப்பா, பாடசாலை போகின்ற அக்காக்கள், அண்ணா என துளசியின் மாணவப் பருவம் தனிமையில் கழிந்ததால் அந்நேரம் அவர் அமைதியாக இருந்திருக்கலாம். ஆனால் சிறப்புப் படையணியினருக்கோ அவர் நகைச்சுவை உணர்வு மிகுந்த நல்ல பொறுப்பாளர். ஆயிரக்கணக்காணவர்கள் ஒத்த இலட்சியத்தோடு உடனிருந்த சூழல் அவரை கலகலப்பாக்கிவிட்டது.

போர்ப்பயிற்சி ஆசிரியராக அவர் எங்களோடு இருந்த காலத்தில் தான் வயதில் மூத்தவர் என்றோ முதுநிலை அதிகாரி என்றோ வேறுபாடு காட்டாமல் எல்லோரோடும் ஒரே மாதிரியாகவே பழகுவார். பலரோடு அவர் இருக்குமிடத்தில் இளையவர் யார், மூத்தவர் யார் என பார்ப்பவர்களால் அடையாளம் காணமுடியாது. மிகப்பெரிய நகைச்சுவை ஒன்றைச் சொல்லிவிட்டு அவர் அமைதியாகிவிடுவார். கேட்டவர்கள்தான் அடக்கமாட்டாமல் சிரித்துக்கொண்டிருப்பார்கள். பார்ப்பவர்கள் துளசி அமைதியானவர் என்று எண்ணத்தக்க வகையில் சூழல் இருக்கும் நெருங்கியவர்களுக்கு மட்டுமே அவரின் இயல்பு புரியும்.

1994ஆம் ஆண்டின் கரும்புலிகள் நாள் அன்று சிறப்புப் படையணியின் ஒன்றுகூடலில், துளசி எழுதி நெறியாள்கை செய்து, கணினிப் பிரிவினர் நடித்த கருத்தாழம்கொண்ட சமூக நாடகம் அவரின் கலையாற்றலை எல்லோருக்கும் வெளிக்காட்டியது. சிறப்புப் படையணியின் ஒன்றுகூடல்களின் போது "இம்முறை கணினிப்பிரிவு என்ன கலைநிகழ்ச்சி கொண்டுவந்திருக்கின்றது" என்று ஆவலுடன் எதிர்பார்க்கும் அளவிற்குத் துளசியின் நெறியாழ்கையில் உருவாகுகின்ற நிகழ்ச்சிகள் இருக்கும். ஒருமுறை நாடகம் என்றால் அடுத்தமுறை தொலைக்காட்சி நிகழ்வு, இன்னொருமுறை வேறொன்று என்று புதிது, புதிதாக அவரின் நிகழ்ச்சிகள் இருக்கும்.

பிளாட்டூன் ஒன்றுடன் சண்டைக்குப்போன பட்டறிவில்லாமலே, கொம்பனி உதவியாளராகச் செயற்படத்தக்க அறிவாற்றல் கொண்ட துளசியைப் பற்றி எங்களுக்கு இருந்த கற்பனைகள் அதிகம். "துளசியக்கா நல்லதொரு பொறுப்பாளர். இருந்திருந்தால் எவ்வளவோ செய்திருப்பார்" சிறப்புப் படையணியினர் மட்டுமல்ல அவரை அறிந்த எல்லோருமே இதைத்தான் சொல்கின்றார்கள்.

 

Edited by தமிழினி

  • கருத்துக்கள உறவுகள்

maj_albert.gif

 

8maj_albert.png

maj_Albert.jpg

8maj_albert1.png

8maj_albert2.png

8maj_albert3.png

  • கருத்துக்கள உறவுகள்

இயற் பெயர் - செல்வராசா தயாளினி

இயக்கப் பெயர் - நித்தியா

தாய் மடியில் - 13.07.1973

தாயக மடியில் - 16.09.2001

சிறுத்தைகளைப் போன்று பதுங்கிப் பாயும் அணியொன்றின் நிர்வாக வேலையில் சிலகாலம் பங்கேற்ற பின் விடுதலைப்புலிகள் மகளிர் படையணிக்கு வந்திருந்தார் நித்தியா. எப்போதும் சிரித்த முகம். மனம் சிரிப்பது விழிகளில் வெளிப் படையாகத் தெரியும் படியான சிரிப்பு. சளைக்காமல், களைக்காமல் எத்தனை கடின பயிற்சியையும் செய்தார். விடுதலைப்புலிகள் மகளிர் படையணிக்கு வந்த நாளிலிருந்து தொடர்ந்து சண்டைதான். தொடர்ந்து காயங்கள்தான்.

பயிற்சி செய்வார். களம் செல்வார்.

காயத்தோடு வந்து ஓய்வெடுப்பார்.

மறுபடி பயிற்சி, சண்டை, காயம்,......., ......., என்று ஒரு தொடர் சங்கிலி.

அமைதியான இயல்பைக் கொண்ட அவர் கண்டிப்பான அணி முதல்வியாக அல்லாமல், அன்பான அணி முதல்வியாகவே தனது முதற் களமான 1992ஆம் ஆண்டில் தொண்டைமானாற்றிலிருந்து ஒட்டகப்புலம் வரையான நூற்றைம்பது காப்பரண்கள் மீதான தாக்குதலில் தொடங்கி, 1997இல் ஜெயசிக்குறு எதிர்நடவடிக்கை வரை எம்மோடிருந்தார். பயிற்சி செய்தால், தூரம் நடந்தால் கால் வீங்கும் என்று தெரிந்து கொண்டே சளைக்காமல் எல்லாவற்றிலும் ஈடுபட்ட நித்தியாவினுள் கரும்புலிக் கனவு மொட்டவிழ்ந்து வாசம் வீசியபோது, எங்களுக்குத் தெரிந்துவிட, “என்ன நித்தியா, கரும்புலிப் பயிற்சி செய்யிற நிலைமையிலா நீ இருக்கிறாய்” என்ற நண்பிகளின் அக்கறையான கேள்விக்கும் சிரிப்பையே பதிலாகத் தந்துவிட்டு, அவர் போய்விட்டார்.

-மலைமகள் -

  • கருத்துக்கள உறவுகள்

2ம் லெப்.தமிழழகி

இயற் பெயர்

இயக்கப் பெயர் - தமிழழகி

தாய் மடியில்

தாயக மடியில் - 17.04.1999

மிக இளைய பராயத்திலேயே அறிவியல் புத்தகங்களிலிருந்து ஆராய்ச்சிப் புத்தகங்கள் வரையிலும் சிற்றிதழ்களிலிருந்து சிறுகதைகள், நாவல்கள் ஈறாக ஊடாடிய உயரம் அவள்.

அவளது வாசிப்பாற்றலே, அவளது பல்துறை ஆற்றலினதும் அளவுகோல். புத்தகம் என்றால் சந்தடிஎல்லாமே சமாதியாகிவிடுவாள். ஊன் உறக்கம் எல்லாம் அடுத்த பட்சம், கடமை மட்டும் நீங்கலல்ல.

கடமை நீங்கல் ஆகையில், காணிக்கை அதிகம் வேண்டியிருக்கும். ஓய்வொழிச்சல் நேரங்கள் இரையாகும். நித்திரா தேவிக்கு நிந்திப்பு நடக்கும். நள்ளிரவு தாண்டியும் வாசிப்பு நீளும். அதிகாலையும் கண்டு, அடுத்தநாள் கடமையும் அரவணைத்த நாட்கள் அவள் பதிவில் இருக்கிறது.

தன் பணிசார்ந்த வேலையோ எதுவோ எடுத்த காவடி ஆடி முடித்துத்தான் இறக்கப்படும். இரவுபகல். மாற்றங்கள் அவளை வரையறுத்துக் கொண்டதில்லை. கற்பதில் ஆர்வம் எப்பவும் சாதிக்க வேண்டும் என்ற ஓர்மம் எவ்வேலையானாலும், வேளையானாலும் கற்றுத் தனித்தியங்கும் துடிப்பு.

சமையலிலும் சமர்த்து. தொடர்சமையல்தான் பணியென்றாலும் சலியாத சிருஸ்டி பலமைல்கள் பொதி சுமந்து பொசுங்காத பூரிப்பு. கோபம் கோலமிடுக் கண்டதில்லை. வயதுக்கு மீறிய வளர்த்தி மட்டுமல்ல வனப்பும் ஆர்வ வளமும் அவளிடம்.

துன்பப்படுபவர்கள், பெரியவர்களோ, சிறியவர்களோ, பொறுப்பாளரோ பணியாளரோ மந்திராலோசனை நடக்கும் ஒவ்வொன்றையும் எப்படி எதிர்கொள்ள வேண்டுமென்றே எதிர்வு கூறல்கள் விளக்கங்கள், வியாக்கியானங்கள் முன்மொழியப்படும். சிறியவளளிற்க்குள் இருக்கும் சீமாட்டி வெளிப்பட்டு கட்டிடபோடும் துணுக்குற்றவரை.

ஆச்சி அளந்து கொண்டே போவாள்.

அவள் அடிப்படைப் பயிற்சி முடித்து வெளிவந்தபோது அவள் வயதை ஒத்தவர்கள் அடிப்படைக் கல்வி பெற தேர்வாக்கப்பட,அவள் கணிணிக்கற்கை நெறிக்காய்த் தேர்வானாள். அவள் கணிணியைக் கற்றுக்கொண்டே கடமையைத் தொடர்ந்தாள். அவள் வேலைகளின் ஐக்கியம் ஆழ அகலப் பரிமாணங்கள் பொருத்தங்கள் முரண்களாய் வெளிபடுத்தப்படும்.

போராட்ட வாழ்வில் அலுவலகப்பணியென்பது அதிமுக்கிய பணியாகிற போதும் பற்றிப் பிடிக்கச் செய்யும் பணியன்று. போர்களப் பணிக்காய் தாக்கல் செய்ய வைக்கும் மகிமை அதற்குண்டு.

தமிழழகிக்கு மட்டும் விதிவிலக்கு. ஞாபகத்திரையில் அத்தனையும் டாலடிக்கும். பணிச்சிரத்தையின் பரிசு என்று பாராட்டுதள் வேறு கிடைக்கும்.அசிரத்தை அவளிடம், தன்னைக் கவனத்தில் கொள்வதை மட்டுமே. டக்(Duck) டக்கி என்று செல்லமாயும் காரணமாயும். (வாத்துப்போல் நடப்பதனால்) அழைக்கப்படும் அவள் டக்கேதான்.

ஓயாத அலைக்கரம் அகன்று கொண்டபோது சண்டை அனுபவத்திற்கான வாய்ப்பு அவளுக்கு வாய்த்தது. நிர்வாகப் பணியிலேயே நிலைத்து விட்டவளுக்கு சுட்டதீவுக் களம் சுக்கான் கொடுத்தது.

"அக்கா அப்படியே கிடக்கட்டும் நான் வந்து கவனிக்கிறேன். திரும்பத்திரும்பச் சொல்லிப்போன அவள் வார்த்தைகள் எதிரெலிக்க அவள் வருகைக்காய் யாவும் அப்படியேதான இருந்தது.

இந்தச் சண்டையில் நான் செத்திட வேணும் என்ற வெளிப்பாடுகளுக்கு நடுவில் அவள் உறுதியாய்ச் சொன்னாள் "நான் சாக விரும்பேல்ல" சாதிக்க வேணும் வாழ வேணும் வருவன் வருவன்; என்று.

18.03.1999 களமிறங்கினாள் 17.04.1999 வரலாறாகிப் போனதாய் கிளிநொச்சி பரந்தன் சுட்டதீவுப் பகுதியில் எதிர்பாராத நேரடி மோதல் சொன்னது.

காலத்தின் கட்டளையில் கடமையுனர்ந்தவள். கட்டுமாணப் பணிக்காய் 3 வருடங்கள் கணிப்பொறியில் கணிப்புச் செய்தவள். கால நீட்ச்சியில் கடமை நீட்ட காலன் கணக்கு வைக்க வில்லை. அவள் தண்டனை பெற்று தட்டி நிமிர்த்தப்பட்டது. மிகக் குறைவு. சுய திட்டமிடலில் பணி பகிர்ந்து பணி இலகுவாக்கும் பக்குவத்தால் எப்பணியும் அவளுக்கு பஞ்சு.

முடியாது என்பது அவள் அகராதியில் கிடையாது. அவளும் ஜெனரேட்டரும் என்று கதையே எழுதலாம்.அவள் ஜெனரேட்டர் ஸ்ரட் செய்ய எடுத்துக்கொணட் முயற்சியை நினைக்க.

ஆண் போராளிகளே வழமையாக அந்த ஜெனரேட்டரை ஸ்டார்ட் செய்வது வழக்கம். அன்று இவள்தான் ஸ்ராட் செய்வாதாக சொன்னாள். சாதாரண பொறிகளைவிட இயல்பான இயக்கத்தில் இயக்கம் பெறும் இயல்பை அது இழந்தே இருந்தது. அவள் விடுவதாய் இல்லை. அன்று முழு நாள் அதே முயற்சியிலேயே அவள்.

முயற்சி வெற்றியாய் முடிந்ததிலிருந்து அதன் இயக்குநர் அவளேதான். காலம் மட்டும் ஆயுட்காப்புறுதி செய்திருக்குமானால் கனதியாய் அவள் சேவையை தாயகம் பெற்று பெருமைப்பட்டிருக்கும்.

நன்றி - எரிமலை . தை-2005

  • கருத்துக்கள உறவுகள்

கடற்புலி மேஜர் தமிழ்வேந்தினி

இயற் பெயர் - கந்தையா விஐயகலா

இயக்கப் பெயர் - தமிழ்வேந்தினி

தாய் மடியில் - 20.05.1982

தாயக மடியில் - 24.05.2007

பங்குபற்றிய இறுதித்தாக்குதல்:

நெடுந்தீவு கடற்படைத்தளம் மீதான தாக்குதல் 24.05.2007

தமிழீழ விடுதலையை நோக்கி இயக்கத்தில் இணைந்தது 1996 இல், ஒரு இலட்சிய நெருப்பாய் சென்றவள், கடற்புலியாக உருவெடுத்து களம் பல கண்ட சிறந்த போராளி..!!

நெடுந்தீவு கடற்படைத்தளம் மீதான தாக்குதலுக்கு முன்பாகத்தான் தன் குடும்பத்தினரோடு விடுமுறையில் வந்து குதூகலமாக இருந்து சென்றாள்.

அம்மாவின் கையால் உணவுண்டு, அண்ணனோடும் தம்பியோடும் சண்டை பிடித்து விளையாடி.. சின்னச் சின்ன சந்தோஷங்களில் மகிழ்ந்திருந்தாள்.

வீட்டின் முன்புறம் அண்ணனின் முழு நீள உருவப்படம் ஒன்று வைக்கப் பட்டு இருந்தது. அதன் அருகில் சென்று "எனக்கும் இப்படி ஒரு படம் சொல்லி அண்ணனுக்கு பக்கத்தில் வையடா, தம்பி" என்று கூறிவிட்டு அம்மாக்குச் சொல்லாதே, இப்போ இல்லை பிறகு.." என்றாளாம்.

அம்மாவின் ஆசைப்படி சேலை உடுத்து, பொட்டிட்டு, தலையில் பூமாலை சூடி புகைப்படங்கள் எடுக்கப்பட்டன. விடைபெறும் நாளும் வந்தது. கண்ணீருடன் கண்கள் விடைபெற, அம்மா கேட்டாள் "குஞ்சு எப்ப இனி வருவாய்?" புன்னகையுடன் "ம்ம்ம்.. இனி வந்தால் புதுக்குடியிருப்பு பேஸ் இற்கு பக்கத்தில வீடு எடுத்துத் தருவன். அங்கு தான் இருக்க வேண்டும். விசுவமடு வேண்டாம்.." என்று விட்டு அன்னையை கட்டியணைத்து முத்தமிட்டுச் சென்றாள். பிறகு வரவில்லை.

நெடுந்தீவு சிறிலங்கா கடற்படைத் தளம் கடற்புலிகளால் தாக்கியழிப்பு: 34 கடற்படையினர் பலி

யாழ். தீவகம் நெடுந்தீவு சிறிலங்கா கடற்படைத்தளம் தமிழீழ விடுதலைப் புலிகளின் கடற்புலிகளால் வெற்றிகரமாக தாக்கியழிக்கப்பட்டது. யாழ்ப்பாணத்தின் மேற்குப்புறத் தீவுகளின் தொலைவில் உள்ள நெடுந்தீவின் தென்பகுதியில் சிறிலங்கா கடற்படையினர் 2006 இல் அமைத்த கடற்படைத்தளத்தின் மீது 24.05.2007 அதிகாலை கடற்புலிகள் தாக்குதலைத் தொடுத்தனர். கடற்புலிகளின் சிறப்பு கொமாண்டோ தாக்குதல் அணிகள் படகுகளில் சென்று அதிகாலை 12.45 மணிக்கு நெடுந்தீவுப்பகுதியின் தெற்குக்கரையில் தரையிறங்கின. நெடுந்தீவு தெற்கு வெல்லைப்பகுதியில் தரையிறங்கிய கடற்புலிகளின் தாக்குதல் அணிகள், அதிகாலை 1.05 மணிக்கு உயர்பாதுகாப்பு அமைப்புகளுடன் இருந்த கடற்படைத்தளத்தை முற்றுகையிட்டு தாக்குதலைத் தொடக்கினர்.

தொடர்ச்சியாக கடற்புலிகள், கடற்படைத் தளத்தின்மீது தீவிரமாக நடத்திய தாக்குதலையடுத்து அதிகாலை 2.45 மணிக்கு தளத்தை முற்றாக தாக்கியழித்தனர். அப்போது அப்பகுதி சிறிலங்கா கடற்படையினர் டோராப் பீரங்கிப்படகுகள், நீருந்து விசைப்படகுகளில் வந்தன. இவற்றுக்கு எதிராகவும் கடற்புலிகள் தாக்குதலை தொடுத்தனர். அந்த தாக்குதலின் போது டோராப் பீரங்கிப்படகு ஒன்று கரையோர முருகைக்கற்பாறைகளில் மோதி முற்றாக சேதமடைந்தது.

மேலும் இரண்டு பீரங்கிப்படகுகள் சேதமாக்கப் பட்டன. இதனையடுத்து தளத்தை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த கடற்புலிகள் அங்கிருந்த கடற்படையினரின் 50 கலிபர் துப்பாக்கி - 01, பிகே எல்எம்ஜி துப்பாக்கிகள் - 02, ஆர்பிஜி - 01, ரி-56 ரக துப்பாக்கிகள்-2 உட்பட போர் ஆயுதங்கள் வெடிபொருட்கள் ஆகியவற்றை கைப்பற்றி வெற்றிகரமாக தளம் திரும்பியுள்ளனர்.

இந்தத் தாக்குதலில் கடற்படைத்தளத்தில் 34 கடற்படையினரைத் தாக்கி கொன்றழித்த கடற்புலிகள், சிறிலங்கா கடற்படையினரின் பெரும் பாதுகாப்புப்பகுதியில் உள்ள நெடுந்தீவு கடற்படைத் தென்பகுதித்தளத்தை வெற்றிகரமாக தகர்த்து அழித்தனர். இவ் வெற்றிகரத் தாக்குதலில் வீரச்சாவடைந்த கடற்புலிகள் 4 பேரில் மேஜர் தமிழ்வேந்தினியும் ஒருவர் ஆவார்.

வித்துடல் பெட்டி பூட்டப்பட்ட நிலையில் அவள் வீட்டிற்கு

தமிழ்வேந்தினி...!

கதறி அழுத சுற்றங்கள்... அன்னையின் கண்ணீர் என அவள் எதையும் பார்க்கவில்லை. வெற்றி பெற்ற சந்தோஷத்தோடு, தமிழீழக் கனவோடு, உறங்குகின்றாள். இல்லை, தமிழீழ மூச்சோடு மண்ணில் கலந்து, விருட்சமாகி, எம் நெஞ்சில் வாழும் மாவீரர்களில் ஒருவராய் சுடராகி விட்டாள்.

அவளின் அன்புத்தம்பி அண்ணனின் அருகில் அக்காவிற்கு படம் வைத்து, பூமாலை சூட்டினான். அக்காவின் வழி செல்ல மனம் துடித்தாலும் அன்னையின் உடல்நிலைக்காக கட்டுப்பட்டு, இன்று முகாமில் செய்வதறியாது தவிக்கும், ஒரு அப்பாவி இளைஞனாக.., அக்காவை எண்ணிப் பெருமைப்படும் ஒரு தம்பியாக.., அங்கு அல்லற்படுகின்றான்.

  • கருத்துக்கள உறவுகள்

கடற்கரும்புலி மேஜர் . தமிழ்மங்கை

இயற் பெயர் - சத்தியவாணி துரைராசா

இயக்கப் பெயர் - மங்கை/நைற்றிங்கேள்

தாய் மடியில் - 03.08.1973

தாயக மடியில் - 22.12.1998

நாலடி நடந்தாலே நகங்களுக்குச் சாயம் பூசும் வளமுள்ள செந்நிற மண்பூமி. விமான ஓடுதளம் மட்டுமன்றி பலாலிப் பகுதி முழுதுமே சிறிலங்காப் படையினரின் பிடியில் சிக்கி விட்டிருந்தது. 1990ஆம் ஆண்டு காலப் பகுதியில் பலாலிப் படைத்தளத்தின் பெரும்பகுதியை விடுதலைப்புலிகள் மகளிர் படையணி காவல் செய்தது. இந்திய இராணுவத்திடம் போர்ப் பயிற்சியை மூன்றாண்டுகள் பயின்றிருந்த, படையணியின் மூத்த உறுப்பினர்களும் அப்போதுதான் பயிற்சி முடித்து வந்த புதியவர்களுமாக துடிப்புமிக்க இளையவர்களால் எமது காவல் அரண்கள் எப்போதுமே விழிப்பாக இருந்தன.

கனரக ஆயுதங்களின் பலம் இல்லாத காலம் அது. எழுபத்தைந்து பேர் கொண்ட அணி காவல் செய்யும் பகுதியில் ஒரேயொரு பிறண் எல்.எம்.ஜியும் ஒரு ஆர்.பி.ஜியும் நின்ற காலம். எமது படைவலு இலகுரக ஆயுதக்காரர்களது சூட்டு வலுவிலும், மனோ வலுவிலும் பேணப்பட்டது. கையில் குண்டுகளுடனோ, சுடுகலன்களுடனோ ஒருவர், இருவராக முன்னே போய் பகைக் காப்பரண்களை நெருங்கித் திடீர்த் தாக்குதல் செய்து எதிரியை நிலைகுலைய வைப்பதுதான் அப்போது எமது முக்கிய வேலை. நைற்றிங்கேள் இதில் மிகவும் தேர்ந்தவர். எதிரி ஏவும் இருரவைகளுக்கு இடையேயுள்ள இடைவெளியைப் பயன்படுத்தி முன்னேறவும் பின்னகரவும் அவரால் முடியும் என்று எங்களில் பலரால் அவரது செயல்கள் சொல்லப் படுவதுண்டு. பலாலியின் செழித்த வாழைமரங்களில் ஒன்றுமட்டும் போதும் எதிரியின் கண்ணில் படாமல் இவருக்குக் காப்பளிக்க. அவ்வளவு மெல்லிய உடல்வாகு. தோற்றத்துக்குச் சற்றும் பொருந்தாத கடும் துணிச்சல். சிறிதும் குறிவழுவாத சூடு.

1990ஆம் ஆண்டின் பிற்பகுதியில் மாங்குளத்தில் அமைந்திருந்த சிறிலங்காப் படைத்தளத்தை அழிப்பதற்கான பயிற்சிக்கு திறமையாளர் பலர் தேர்ந்தெடுக்கப் பட்ட போது பட்டியலில் நைற்றிங்கேள் என்ற பெயர் முன்னணியில் இருந்தது. அப்போது அவர் ஏழுபேர் கொண்ட அணியின் பொறுப்பாளர். இவரின் மேலான பொறுப்பாளர் பலாலியிலிருந்து நைற்றிங்கேளைப் போகவிடமாட்டேன் என்று சிறப்புத் தளபதியிடம் ஒற்றைக் காலில் நின்றார். சண்டையொன்றில் தான் விழுந்தால், வெற்றிடத்தை நிரப்ப நைற்றிங்கேள் வேண்டும் என்ற அவரின் பிடிவாதமே கடைசியில் வென்றது.

என்னுடைய அணியில் நைற்றிங்கேள் இருக்கவேண்டும் என்ற விருப்பம் இவர் ஒருவரிடம் மட்டுமல்ல, அணித்தலைவிகள் பலரிடமும் இருந்தது. மிகச் சிறந்த சூட்டாளர் என்பதால் இவருக்கு ஆர்.பி.ஜி வழங்கப்பட்டது. ஏவப் படுகின்ற எறிகணைகள் ஒவ்வொன்றும் இலக்கை சரியாகத் தாக்கவேண்டும். “தவறிவிட்டது” என்ற சொல்லுக்கு அகராதியில் இடமில்லை. எனவே ஆர்.பி.ஜியும் நைற்றிங்கேளும் தோள் சேர்ந்தனர்.

விடுதலைப்புலிகளின் வரலாற்றுப் புகழ்மிக்க, ஆகாய கடல் வெளிச்சமர் பரந்த வெளியில் விரிந்த போது கடலால் தரையிறக்கப் பட்டு இரைந்து வந்த ராங்கிகளிடமிருந்து எமது ஆளணியைப் பாதுகாக்க ஆர்.பி.ஜியின் பலம் தேவைப் பட்டது. எந்த அணியிலும் இல்லாது நைற்றிங்கேள் தனியாக இயங்க விடப் பட்டிருந்தார். “நைற்றிங்கேளை அனுப்பு” என்ற கட்டளை களத்தின் ஒரு முனையிலிருந்தும், கேணல் பால்ராஜிடமிருந்தும் வரும். மறுமுனையிலிருந்து கேணல் யாழினியிடமிருந்தும் (விதுஷா)

வரும். எங்கு ராங்க் இரைந்ததோ, அங்கு அவர் தேவைப் பட்டார். எத்திசையில் அவர் போனாரோ, அங்கு அதன் பின் ராங்கின் இரைச்சல் கேட்காது.

களத்தின் தேவைக்கேற்ப கடுகதியாக விரையும் நைற்றிங்கேள், துளியும் தற்பெருமை இல்லாத, எப்போதும் எவரையும் கனம் பண்ணுகின்ற தன் இயல்பில் கடைசிவரை வழுவவில்லை. 1993ஆம் ஆண்டில் பூநகரியிலிருந்த சிறிலங்காப் படைத்தளத்தைத் தாக்குவதற்கு நாம் தயாராகிக் கொண்டிருந்தோம். நடவடிக்கையில் இறங்கப் போகும் ஆர்.பி.ஜிக்களின் பொறுப்பாளர் நைற்றிங்கேள். பூநகரிப் படைத்தள இராணுவம் அதற்கிடையில் முன்னகரப் போவதற்கான அறிகுறிகள் தென்பட, மறிப்பதற்கு பூங்கா தலைமையில் பெண் போராளிகளின் அணியொன்று போனது. மறிப்பு வேலியாகக் காப்பரண்களை அமைத்தது. ஆர்.பி.ஜிக்களுக்கான நிலைகள் மிகநேர்த்தியாக நைற்றிங்கேளின் வழிநடத்தலில் அமைக்கப் பட்டு, பார்வையை ஈர்த்தன. நிலைகளைப் பார்வையிட வந்தார் கேணல் சொர்ணம். அவரின் கவனத்தையும் அந்நிலைகள் ஈர்த்தன.

“ஆர் உங்கட ஆர்.பி.ஜி பொறுப்பாளர்?”

கேணல் சொர்ணத்தின் முன், காற்றிலாடும் கழுகுபோல வந்துநின்ற நைற்றிங்கேளைப் பார்க்க அவருக்குச் சிரிப்பு வந்துவிட்டது.

“எத்தினை ஷெல் அடிச்சிருக்கிறீங்கள்?”

“இருபத்திமூண்டு”

அதிர்ச்சி தரும் பதில்.

“எங்கெங்கே அடிச்சீங்கள்?”

“ஆனையிறவில பதினெட்டு. அதுக்குப் பிறகு வேற வேற சண்டையளில அஞ்சு”

நைற்றிங்கேளைக் கூர்ந்து பார்த்தவர்,

“நீங்கள்தான் அந்த நைற்றிங்கேளோ?”

என்றார்.

இதுபோதும். இதற்குமேல் நைற்றிங்கேளைப் பற்றி நாம் வேறெதுவும் பேசத் தேவையில்லை. போன சண்டைகள் எதிலுமே அவர் காயப்பட்டதில்லை. தனது இலக்கைத் தாக்கி விட்டு, சிறு கீறல் கூட இல்லாமல் திரும்பி வந்த ஒவ்வொரு முறையும், “ஏதோ ஒரு சண்டையில் நான் முழுசாப் போறதுக்குத்தான் இப்படிக் காயங்களேயில்லாமல் வாறன்” என்றவர் பூநகரி சிங்களக் கூட்டுப்படைத்தளம் மீதான “தவளை” நடவடிக்கையில் காலில்லாமல் வந்தபோது, சற்று நிம்மதியடைந்தோம். ஆள் போவதைவிடக் கால்போனது பரவாயில்லையென்று. ஒற்றைக் காலோடு தன் வாழ்வின் அடுத்த கட்டம் இதுதான் என்பதை அவர் முடிவெடுத்த போது நாம் கவலை அடையவில்லை. கடலிலும் அவரின் வேகம் தணியவில்லை எனப் பெருமைப்பட்டோம்.

-மலைமகள் -

  • கருத்துக்கள உறவுகள்

மேஜர் தங்கவேல்

இயற் பெயர் - இராமச்சந்திரன் ராஜேந்திரம்

இயக்கப் பெயர் - தங்கவேல்

தாய் மடியில் - 21.03.1971

தாயக மடியில் - 10.11.1995

1971 பங்குனித் திங்கள் 21ம் திகதி நம்பியார் இராமச்சந்திரன் தம்பதிகளின் செல்வப் புதல்வனாய் மறத்தமிழ் மகனாய் முத்துக்கள் விளையும் பூமி முருங்கனில் ராஜேந்திரம் என்னும் பெயருடன் இம்மண்ணில் உதித்தான். இவன் மிகவும் வறிய குடும்பத்தில் பிறந்தும் இவனது தந்தை இவனின் ஆரம்பக்கல்வியை மன்னார் முருங்கன் மகாவித்தியாலயத்தில்; பயிற்றுவித்தார். இவன் ஆசிரியர்கள் மத்தியில் நற்பெயருடனும் திறமையானவனாகவும் செயற்பட்டு வந்தான். இவனது திறமைகளைக் கண்டு ஆசிரியர்கள் இவனை மகாவித்தியாலயத்தின் மாணவர் தலைவனாக நியமித்தனர்.

இக்காலப் பகுதியில் எமது கிராமம் இந்திய ஆக்கிரமிப்பாளர்களால் சுற்றி வளக்கப்பட்டு தேசவிரோதிகளால் காட்டிக் கொடுக்கப்பட்டும் வந்தது. இக் காலப்பகுதியில்தான் இவன் எமது நாட்டில் நடக்கும் செயல்களுக்கு ஒரு முற்றுப்புள்ளி இடவேண்டும் என்ற நோக்குடன் இவன் தனது நண்பர்களிடம் 'மச்சான் நாம் அடிமைகளாய் வாழ்கிறதை விட விடுதலைக்காய் போராடி சாவதுமேல், நான் ஒரு முடிவு எடுத்திட்டன் நான் இயக்கத்திலை இணையப் போறன்" என்று கூற அவனுடன் நண்பர்களான 2ம் லெப் நவாசும், லெப்ரினன் றொபேட்டும் 1988 இல் இணைந்து எமது அமைப்பில் பதிவாகினர். பதிவானதும் இவனுக்னு தங்கேஸ் என்னும் பெயர் சூட்டப்பட்டு மன்னாரில் 9 வது அணியில் பயிற்சி பெற்றான்.

இவன் பயிற்சி முகாமில் திறமையாக பயிற்சி பெற்று பொறுப்பாளர் மத்தியில் நற்பெயருடன் விளங்கியவன். பயிற்சி முடிந்ததும் அரசியல் வேலைத்திட்டத்திற்காய் தனது சொந்த கிராமத்திற்கே அனுப்பப்படுகிறான். இவன் தனது கிராம மக்களுக்கு எங்கள் அமைப்பைப் பற்றியும், எமது போராட்டத்தையும் தெளிவு படுத்தியவன். அத்தோடு இவன் நின்று விடவில்லை. இவனது திறமைகளைக் கண்ட மன்னார் மாவட்ட சிறப்புத் தளபதியாக இருந்த லெப்ரினன் கேணல் சுபன் அண்ணன் அப்போது மன்னார்த்தீவுப் பொறுப்பாளராக இருந்த லட்சுமன் அண்ணனுடன் இவனை விட்டார். அங்கும் பொடுக்கும் வேலைகளை திறம்பட செய்து முடித்தான்.

அக்காலப் பகுதியில் 2ம் கட்ட ஈழப்போர் ஆரம்பமாகியது. அந்நேரம் மன்னார் பழைய பாலம் என்னும் இடத்தில் நிலை கொண்டுள்ள சிறீலங்கா இராணுவம் மீது தாக்குதல் நடாத்த பொறுப்பாளர்களால் திட்டம் தீட்டப்பட்டு தாக்குதல் நடாத்தப்படுகின்றது. இத்தாக்குதலில் தங்கேசும் பங்குபற்ற அனுமதி கிடைத்தது. இத்தாக்குதலில் ஏராளமான படையினர் கொல்லப்பட்டனர். இம்முகாம் முற்றாக தாக்கி அழிக்கப்பட்டது. இத்தாக்குதலில் இவன் திறமையாக செயல்பட்டு களமாடினான். அத்துடன் மன்னாரில் நடை பெற்ற பல தாக்குதல்களில் தனது திறமைகளை வெளிக் கொணர தவறவில்லை. இதற்காக தளபதியிடம் பாராட்டுக்கள் பல பெற்றான். இவனது திறமைகளைக் கண்ட மன்னார் மாவட்ட சிறப்புத் தளபதியாக இருந்த லெப்ரினன் கேணல் சுபன் அண்ணன் 1991ல் தன்னுடன் தங்கேசை எடுத்துக் கொள்கிறார்.

இந்நேரம் சிலாபத்துறைக்கு கொண்டச்சியிலிருந்து வரும் இராணுவத்திற்கு தாக்குதல் நடாத்த சுபன் அண்ணாவால் திட்டம் வகுக்கப் படுகின்றது. இக்தாக்குதலுக்கு தங்கேசின் திறமையான செயல்கனைக்கண்டு தங்கேசை ஒரு குழுவிற்கு அணித்தலைவனாக அனுப்புகின்றார். இத்காக்குதலிலும் தங்கேஸ் தனது திறமையைக் காட்டத்தவறவில்லை. இத்தாக்குதலில் இவன் விழுப்புண் அடைகின்றான். பின் 1992 காலப்பகுதியில் மன்னார் மாவட்ட சிறப்புத் தளபதியால் இவன் வேறு துறைக்கு விடப்படுகின்றான். இங்கும் இவனது திறமைகள் வெளிபடுத்தப்பட்டு வளர்க்கப் படுகின்றது. அத்துறையிலும் இவனது திறமைகளைக்கண்டு பொறுப்பாளர்களின் பாலாட்டைப் பெற்று ஓர் படி வளர்கின்றான். அதன் பின்பு தங்கேல் தாக்குதல்களுக்கு செல்ல வேண்டும், எதிரியை எல்லையை விட்டு என்ற நோக்கத்துடன் கான் தாக்குதல்களுக்கு செல்வதற்கு பொறுப்பாளரிடம் அனுமதி கேட்கின்றான். இவனது தொடர்ச்சியான வற்புறுத்தலால் அப்போது மன்னார் மாவட்ட சிறப்புதளபதியாக இருந்த யான் அண்ணன் அவனை தாக்குதல் குழுவில் குறிப்பிட்ட சில அணிகளுக்கு பொறுபாளனாக விடுகின்றார். இந்நேரம்தான் ப10நகரி தவளைத்தாக்குதல் திட்டமிடப்பட்டு தாக்குதலும் வெற்றிகரமாக நடாத்தப்பட்டது. இத்தாக்குதலில் தங்கேஸ் மிகவும் திறம்பட தனது அணிகளை நகர்த்தி தாக்குதல்களை வேகப்படுத்திய வேளை எதிரியின் தாக்குதலால் காயமடைகின்றான்..

பின் 1994ல் மாவட்ட சிறப்பு தளபதியால் மாவட்ட வேவு அணிக்கு இரண்டாவது பொறுப்பாளனாக தங்கேஸ் விடப்படுகின்றான். தாக்குதல்களில் மட்டுமல்ல வேவு வேலைகளிலும் எதிரியின் காவலரன்களுக்கு அண்மையில் சென்று வேவு பார்த்து வந்தான். பின் மாவட்ட சிறப்புத் தளபதியின்; மெய்க்காப்பாளனாக இவன் தேர்ந்து எடுக்கப்படுகின்றான். இதன் பின்பு இவன் பல தாக்குதல்களுக்கு தலைமை தாங்கி தாக்குதல்களை நடாத்துவதற்கு சிறப்புத்தளபதி அனுமதிக்கின்றார்.

அதன்படி இவனும் பல தாக்குதல்களை வெற்றிகரமாக செய்து முடிக்கின்றான். இவ்வேளையில் தான் யாழ் குடாநாட்டில் சிங்கள அரசால் திட்டமிடப்பட்டு இனஅழிப்பை குறிக்கோளாகக் கொண்டு நடாத்தப்பட்டது சூரியக்கதிர் இராணுவ நடவடிக்கை. இத் தாக்குதலில் ஓர் அணியை வழிநாடாத்தும் பொறுப்பு அவனுக்கு வழங்கப்பட்டது. அதை இவன் மிகுந்த சந்தோசத்துடன் ஏற்று தனக்கு கொடுக்கப்பட்ட பகுதியில் எதிரியை முன்னேற விடாது தனது கட்டுபாட்டினுள் வைத்திருக்கின்றான். இதற்கு முன் நடாத்தப்பட்ட இடிமுழக்க நடவடிக்கையில் தலையில் விழுப்ப10ண் அடைந்தும் அவன் சளைக்கவில்லை. அக்காயத்துடன் தனது மக்கள் விடுதலை பெற வேண்டும், தனது மண் பறி போகக் கூடாது என்ற சிந்தனையுடன் மழை என்றும் பராது தனக்குரிய கடமைகளை செய்தவண்ணமே காணப்பட்டான்.

இந் நேரம்தான் எமக்கு தாங்கமுடியாத சோகம் ஒன்று காத்திருந்தது. 10.11.1995 அன்று தங்கேசின் வோக்கி அலறுகிறது. 'கலோ தங்கேஸ்" தங்கேஸ் தனது வோக்கியை எடுத்துக் கதைக்கிறான். அந்நேரம் எதிரியானவன் தனது தாக்குதலை அதிகரிக்கின்றான். தங்கேஸ் அவசரமாகவும் தனது உறுதி தளராத குரலிலும் கூறுகிறான். 'அண்ணை என்ர உயிர் இருக்குமட்டும் எதிரி ஒரு அங்குலம் தானும் அரக்க முடியாது. வேறை ஒன்றும் இல்லை. நன்றி அவுட்" என்ற பதிலே தங்கேசுவிடம் இருந்து கிடைத்தது. அதன் பிறகு தங்கேஸ் கட்டளைகளைப் பிறப்பித்தவாறு எதிரியின் தாக்குதல்களை முறையடித்தவாறு எதிரிமீது தாக்குதல் தொடுக்கின்றான். இந்நேரம் எங்கிருந்தோ வந்த எதிரியின் எறிகணை தங்கேசின் அருகில் விழ்;ந்து வெடிக்கின்றது. அவ் இடத்தே தங்கேஸ் சத்தமின்றி இப் புனித மண்ணை முத்தமிடுகின்றான். தான் நேசித்த காதலித்த மண்ணிற்காகவும் மக்களுக்காவும் அம் மண்ணிலேயே மடிகின்றான்.

தங்கேஸ் சாகவில்லை. சரித்திரமாகிவிட்டான்.

எழுதியவர். போராளி சு.கீரன்.

  • கருத்துக்கள உறவுகள்
  • தொடங்கியவர்

lt_col_jeevan.gif

கையெட்டும் தூரமே கண்ணுக்குத் துலங்காத மைசொட்டும் இரவு. உடலெங்கும் உரிமையோடு கை போட்டிருக்கும் முட்செடிகள். கொழும்பு ரோட் (மட்டு. - கொழும்பு நெடுஞ்சாலை) அண்மித்து விட்டதால் காலணிகள் கைக்கு ஏறுகின்றன. ரைபிள் சிலிங்குகள் சலசலக்காது இறுக்கிப் பிடிக்கப்படுகின்றன. ஆபத்தைத் தவிர்க்கும் அளவிற்கு தேவையான இடைவெளி விட்டு முன்னே செல்பவரின் சிறு அரவத்தைக் கொண்டு திசையறிந்து செல்வதே ஒரு கலை. தென் ஈழக் காடுகளிலே இந்தக் காலைதான் தேவையான அரிச்சுவடி. கத்தி வெட்டுப் போல் ஒரு நகர்வு... கை வீசும் தென்றல் போல் ஒரு நகர்வு... இப்படி புத்தியையும் பலத்தையும் எடைபோட்டு நடந்ததாலேயே அங்கு போராட்டம் தாக்குப்பிடித்து, தளிர்கொண்டது. கத்தியையும் புத்தியையும் இடம்மாறி வைத்தவர்களை காலம் மட்டுமல்ல, காடுகள் கூட கை கழுவி விடும்.
 
ஒரு பத்தாண்டிற்கு மேலாக கொழும்பு ரோட்டிற்கு குறுக்காக நடந்த பெரும்பாலான நகர்வுகளை ஜீவன் தான் வழி நடத்தியிருக்கிறான். தவழ்ந்து திரிந்து வேவு பார்ப்பதும், தாக்குதல் செய்து தலை நிமிர்ந்ததும், தவறு செய்து தண்டனை பெற்றதும், உயிரைப் பணயம் வைத்து உறுதியை நாட்டியதும் எல்லாமே இந்த கொழும்பு ரோட்டில்தான். அதன் இரு மருங்கிலும் நிற்கும் மரங்கள், வயல் வரம்புகள், மின் கோபுரங்கள், மண் மேடுகள் என்று எல்லாமே ஜீவனின் மனதுக்குள் அடக்கம்.
 
* * * * * * * * * * * * * * * * * * * * * *
 
அணியின் நகர்வு தடைப்படுகின்றது. பாதை தவறியது தெரியவருகிறது. பெரியதொரு காவு அணியையும் அதற்கேற்ற சண்டை அணியையும் கொண்ட அந்த நீண்ட மனிதக் கோடு மீண்டும் நகரத் தொடங்கியது. இப்போது அதன் முதல் ஆளாக ஜீவன் நடந்து கொண்டிருக்கிறான்.
 
இது ஜீவனது வழமையான பாணி என்பதால் ஒரு தளபதியை முதல் ஆளாக விட்டு பின்னே செல்லும் போது உண்டாகும் கூச்சம் பலருக்கு ஏற்படுவதில்லை. ஆபத்தை நாடிச் செல்லும் ஜீவனின் இயல்பிற்கு சிங்கபுர நிகழ்வு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.
 
சிங்கபுர தங்கக பகுதி படையினருக்கு ஒரு சிம்ம சொப்பனமாகவே இருந்து வருகிறது. ஒரு இடத்தில் பல தடவை பதுங்கித் தாக்குதல் செய்யப்பட்டதே அதன் காரணம். அதிலே இரண்டாவது தாக்குதல் 1992ம் ஆண்டு இடம் பெற்றது அதிலே ஜீவன் களத்தளபதி.
 
இதற்கு முன்பு நிகழ்ந்த தாக்குதலிலே கொல்லப்பட்ட எதிரிகளின் நினைவாக அமைக்கப்பட்ட சிறிய நினைவுத் தூபியை நிலையெடுத்த இடத்தில் இருந்தே பார்க்கக் கூடியதாக இருந்தது. எதிரி அதிலே காப்பு நிலையெடுத்து எம்மைத் தாக்கினாலே தவிர, அதைச் சேதப்படுத்த வேண்டாம் என்று இறுதி முதற் கொகுப்புரையில் எமக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது.
 
தாக்குதல் தொடங்கியது.
 
எதிரியின் கவச ஊர்தியை நோக்கி ஆர்.பி.ஜி. கணையொன்று சீறிச்சென்று வெடிக்க எங்கும் புகைமயம். பவள் உடைந்து விட்டதா? என்ற கூச்சலும் பொறிகளின் உறுமலுடன் வேட்டொலியுமாக சிறு குழப்பம் நிலவினாலும் ஆங்காங்கே தென்பட்ட எதிரிகள் சுட்டு விழுத்தப்பட்டுக் கொண்டிருந்தார்கள். புகை விலகிய போது பவலிற்கு மிக நெருக்கமாக ஜீவன் ரீ56 -2 உடன் நிற்பதையும் அவனின் தலையின் மேலாக 50 கலிபரால் சிவப்பாக தும்பியபடி பவல் பின்வாங்கி ஓடுவதையும் காணக் கூடியதாக இருந்தது. எந்தச் சமரின் போதும் இறுக்கமான பகுதிக்கே ஜீவன் அனுப்பி வைக்கப்படுவது வழக்கம், அந்தப் பகுதியிலும் மிக இறுக்கமான இடம் நோக்கியே ஜீவன் ஈர்க்கப்பட்டதற்கு அவனது போரார்வமும் மாசற்ற வீரமுமே காரணம். "எங்கும் செல்வோம்" என்று எம் படைகள் எழுந்து நடந்ததும் "எதிலும் வெல்வோம்" என்று சூழ் கொட்டி நிமிர்ந்ததும் ஜீவன்களாலே அன்றி வேறு வழிகளில் அல்ல.
 
ஜீவனின் வாழ்க்கைத் தடத்தில் பயத்திற்கு மட்டுமல்லாது பகட்டிற்கும் இடமிருக்கவில்லை. தலைமைத்துவப் பாடநெறியொன்றில் எல்லோரையும் விட அதிக புள்ளிகளை ஜீவன் பெற்றபோது, பகட்டு ஏதுமின்றி தனிமையிலிருந்து ஜீவன் கற்றதையும் தலைவரின் பேச்சடங்கிய ஒலிநாடாக்களை பரபரப்பின்றி கேட்டு வந்ததையும் அறியாத பலர் மூக்கிலே விரல் வைத்தார்கள். நடையுடை பாவனைகளில் கூட ஜீவன் எளிமையானவன்.
 
போராளிகளுடன் சேர்ந்து பதுங்கு அகழி வெட்டிக் கொண்டிருந்த ஜீவன் சற்றுக் களையாற, சராசரிப் போராளியின் உடையில் தனது தளபதி இருப்பார் என்பதைச் சற்றும் எதிர்பாராத புதிய போராளி தொடர்ந்து ஜீவனை ஏவியதும் அடுத்த தேனீர் இடைவேளை வரை ஜீவன் பதுங்கு அகழி வெட்டியதும் மங்கிப் போக முடியாத மனப்பதிவுகள்.
 
வன்னியிலே நடந்த பல மறிப்புச் சமர்களிலே இறுக்கமானவை எனக் கருதப்பட்ட இடங்களிலும் 'ஓயாத அலைகள் - 2' நடவடிக்கையிலும் முக்கிய பங்கு வகித்து, பின் மட்டு - அம்பாறை மாவட்ட இணைத் தளபதியாகப் பொறுப்பேற்ற பின் - ஏறத்தாழ பதினைந்தாண்டு காலம் வெடிப்புகையையும், சமர்ப் புழுதியையும் சுவாசித்ததால் முப்பதாவது வயதில் முதற் தடவையாக ஈழை நோயால் பாதிக்கப்பட்ட பின் நிகழ்கிறது இச் சம்பவம். இந்த எளிமை கலந்த ஈகை உழைப்புக்களாலேயே பெரு வெற்றிகள் சாத்தியமாகின என்பதை எவரும் மறுப்பதற்கில்லை.
 
87ன் தொடக்கத்தில் இயக்கத்தில் இணைந்து கொண்ட ஜீவன் 90ன் பிற்பகுதியில் ஒரு தனிச் சண்டை அணியின் தலைமையாளனாக வளர்ந்திருந்தான். தானே வேவு பார்த்து, திட்டமிட்டு, களத்தில் வழி நடத்துவதையே அவன் எப்போதும் விரும்பினான். வெற்றியும் அவனையே விரும்பியது.
 
எதிரியின் மீது தாக்குதல், போர்க் கருவிகள் பறிப்பு என்ற செய்தி கிடைக்கும் போதெல்லாம், அத் தாக்குதல்களின் தன்மையை ஒப்பிட்டு இது ஜீவனுடைய பாணியில் அல்லவா அமைந்திருக்கிறது என்று பேசுகின்ற அளவிற்கு சிறு தாக்குதல்களில் தனி முத்திரை பதித்திருந்தான் ஜீவன். இது எந்த வீரனுக்கும் இலகுவில் கிடைத்துவிடாத மிகவுயர்ந்த பேறு.
 
மூன்றாம் ஈழப்போர் தொடங்கி 97ன் தொடக்கத்திற்கும் இடையேயான காலத்தில் ஜீவன் வாகரை பிரதேச கட்டளை மேலாளராக இருந்த போதே பல சிறு தாக்குதல்களின் மூலம் கிடைக்கக் கூடிய பெரிய நன்மைகளை் அவனால் ஏற்படுத்தப்பட்ட . கதிரவெளி வரை பரவியிருந்த எதிரி முகாம்கள் ஐந்து காயான்கேணிப் பகுதியையும் கடந்து பின்வாங்கப்பட்டன. மக்களின் கல்வி பண்பாட்டு முறைகள் சீர் பெற்றன. மருத்துவமனை அடங்கலான எமது முகாம்கள் பல குடியிருப்புப் பகுதியில் அமைக்கப்பட்டன. வாகரை முதன்மைச் சாலைக்கு அருகே (திருமலை வீதி) மாவீரர் துயிலும் இல்லம் நிறுவப்பட்டது.
 
அங்கே நிகழ்த்தப்பட்ட போர்ச் சாதனை பற்றி அக்காலத்தில் மாவட்ட அறிக்கைப் பிரிவின் மேலாளராகவிருந்த மேஜர் லோகசுந்தரம் (வீரச்சாவு: 05.03.1999 மாவடி முன்மாரிப் பகுதியில் சிறப்பு அதிரடிப் படையினருடனான மோதலில்) அவர்கள் கூறியது: "அந்த அறிக்கைகளை ஒப்பிடுவது ஒரு புதிய அனுபவம். 20 மாத காலத்தினுள் வாகரைப் பிரதேச 'விசாலகன் படையணி' சந்திவெளி, சித்தாண்டிப் பகுதிகளில் நிகழ்த்திய நான்கு பெரும் தாக்குதல்கள், மாவடி முன்மாரிப் பிரதேசத்தில் நிகழ்ந்த நடுத்தர அளவிலான சில தாக்குதல்களிலும் கலந்து கொண்டது போக தமது பகுதிகளில் மட்டும் தனியாகச் செய்த நடுத்தர மற்றும் சிறிய தாக்குதல்களில் 340ற்கும் மேற்பட்ட படைக்கலங்களைக் கைப்பற்றியிருக்கிறது. இப்படியொரு விடயத்தை இதற்கு முன் நான் கேள்விப்பட்டதில்லை."
 
சாதனைகள் பொதித்த ஜீவனின் போரியல் வாழ்வில் சோதனைகளுக்கும் குறைவில்லை. குடும்பிமலைப் பகுதியில் கொமாண்டோக்களுக்கு எதிரான தாக்குதலிலும், பூநகரித் தவளைச் சமரிலும் பின்பு கூமாஞ்சோலை முகாம் தாக்குதலிலும் உடலின் எடையில் ஈயமும் பங்கேற்கும் அளவிற்கு செம்மையாகக் காயப்பட்டிருந்தான்.
 
"ஜீவன் உன்ர குப்பியையும், தகட்டையும் வாங்கிப் போட்டு தண்டித்து சமைக்க விடும்படி பொறுப்பாளர் சொல்லியிருக்கிறார்."
 
இதே கொழும்பு ரோட்டிலேயே, போராளிகளின் சுமைகருதி, தவிர்க்கவேண்டிய பாதையொன்றினூடாக வழி நடாத்தியதால் ஏற்பட்ட இழப்பிற்கான தண்டனை அறிவித்தலை தனது உணர்வுகளைச் சிரமப்பட்டு அடக்கியபடி இன்னுமொரு தளபதி ஜீவனிடம் கூறியபோது மிக அமைதியாகப் பதில் வந்தது. "சரி நிறைவேற்றுங்கள்"
 
அதைத் தொடர்ந்து ஒரு புதியை போராளியைப் போல 'புளுக்குணாவ' முகாம் தகர்ப்பிற்கான தடையுடைப்புப் பயிற்சி பெறுகிறான் ஜீவன். தொட்டாற் சுருங்கி முட்கள் முழங்காலிலும், முழங்கையிலும் புண்களை ஏற்படுத்துகின்றன.
 
தன்னைத் தோள் பிடித்து தூக்கி நிறுத்திய தளபதி, அரவணைத்து ஆறுதல் தந்த தோழன், முன் நடந்து வீரம் காட்டி விழுப்புண் சுமந்த பெருமகன் - மண் தேய்ந்த காயத்துடன் பயிற்சி பெறுவதைக் காண பயிற்சிப் பொறுப்பாளனின் மனம் விம்முகின்றது.
 
"ஜீவண்ணன்...... நீங்கள் எழுந்து போய் சற்று ஓய்வெடுக்கலாம்."
 
புலிக்குறோளில் போய்க் கொண்டிருந்த ஜீவனிடமிருந்து நிமிர்ந்து பார்க்காமலே பதில் வருகின்றது.
 
"எல்லோருக்கும் பொதுவான விதிகளே எனக்கும் பொருந்தும்"
 
இறுக்கமான முகத்துடன் தொடர்ந்து நகரும் ஜீவனைப் பார்க்க பயிற்சி பொறுப்பாசிரியனின் உதடுகள் துடித்து வழிகள் பொங்க குரல் தளம்பாமல் சமாளித்தபடி கூறுகிறான்.
 
"பயிற்சிப் புண் அதிகமாகி விட்ட போராளிகளுக்கு நாங்கள் பயிற்சி தருவதில்லை. இங்கு நானே பொறுப்பாளன். இது என்னுடைய கட்டளை. நீங்கள் எழும்பலாம்."
 
இதுவரை தங்கள் உணர்வுகளை மரக்க வைத்து ஜீவனுடன் நகர்ந்து கொண்டிருந்த அத்தனை போராளிகளும் நன்றிப் பெருக்கோடும் நிம்மதிப் பெருமூச்சோடும் பயிற்சிப் பொறுப்பாசிரியனை நிமிர்ந்து பார்க்கிறார்கள். ஒவ்வொரு சோடிக் கண்களிலும் ஒவ்வொரு சோடிக் கண்ணீர் துளிகள்.
 
ஜீவனுடைய எளிமையையும் ஈகையும் போலவே குறும்புகைளையும் குறைவான பக்கங்களையும் கூடத் தலைவர் அறிந்திருந்தார். இருப்பினும் சுற்றாரைக், கற்றோரே காமுறுவர் என்பது போல, பலம் பலத்திற்கு மரியாதை செய்யும் என்பது போல வீரம் வீரத்தால் ஈர்க்கப்படுவதும் தவிர்க்க முடியாததது என்பதை ஜீவனின் சாவிற்குப் பின்னான தலைவனின் உணர்வு வெளிப்பாடுகள் திரைவிலக்கித் தெரியவைத்தன - தெளிய வைத்தன. சராசரிக்கும் மேலான ஜீவனின் போரியல் பண்புகளை தலைவர் அவதானித்தே வைத்திருக்கிறார்.
 
* * * * * * * * * * * * * * * * * * * * * *
 
சாலையில் ஜீவன் மிடுக்காய் கால்பாரவி நிற்க நிழல்போலக் கடந்து செல்கிறார்கள் போராளிகள். அந்த இருட்டிலும் ஆட்களை அடையாளம் கண்டு காதோடு நலம் விசாரித்து, தூரம் சொல்லி, தோள் தட்டி துரிதப்படுத்தி நிற்கிறான் ஜீவன். ஆபத்தை நோக்கி முதல் ஆளாய்ச் சென்று அதன் நடுவில் நின்று நம்பிக்கை தருவதும் கடைசி ஆளாகவே அவ்விடத்தை விட்டு அகலுவதும் போராளிகள் ஜீவன் மேல் பற்று வைப்பதற்கு முதன்மைக் காரணங்கள். வீரமுள்ள எவராலும் ஜீவனை வெறுக்க முடியாது.
 
"நாங்கள் சுமந்து திரியும் ரவைகளில் எந்தெந்த ரவை எந்தெந்தச் படையாளின் உடலுக்குரியதோ தெரியவில்லை. இதே போல எனக்குரிய ரவையையும் ஒரு படையாள் இப்போது சுமந்து திரிவான். அது எப்போது புறப்படும் என்பது எவருக்கும் தெரியாது." சண்டைகளின் முன்னான நகைச்சுவைப் பொழுதுகளில் சிரித்தபடி ஜீவன் சொல்வதும வழக்கம். அன்று, கொழும்பு ரோட்டின் மையிருளிலே ஈழப்போரின் இன்னுமொரு அத்தியாயம் முடிய இருந்த சூழ்நிலையில், பதுங்கிக் கிடந்த படையாள் ஒருவனின் தொடக்க ரவையாக அது புறப்படும் என்பதையும் எவரும் அறிந்திருக்கவில்லை.
 
ஜீவனின் நினைவுகளை மீட்கும் போது, தனக்குக் கீழுள்ள படைத் தலைவர்களின் உணவுத் தட்டுகளைக் கூட கழுவி வைத்து ஒழுக்கம் பழக்கும் எளிமையா? அல்லது முன் செல்லும் போது முதல்வனாகவும் பின் வலிக்கும் போது இறுதி ஆளாகவும் வரும் தலைமைத்துவமா? எது மேலோங்கி நிற்கிறது என்று அலசினால் அவையிரண்டையும் விட அவனின் களவீரமே எல்லோர் மனதிலும் ஆழப்பதிந்து கிடக்கிறது. பிறந்த போது குடிசையில் பிறந்த ஜீவன் இறந்தபோது ஈழத்தின் இதய சிம்மாசனத்தில் வீற்றிருந்ததற்கும் அவனது ஏழ்மையற்ற மிடுக்கே காரணம்.
 
பிறப்பினால், எவருக்கும் பெருமைவருவதாக நாம் நம்புவதில்லை. ஜீவன் தன் நடப்பினால் தாய் மண்ணின் தலையைப் பலமுறை நிமிர வைத்திருக்கிறான். அவன் இழப்பினால் தாய் மண்ணே துயரம் ததும்பும் பெருமையுடன் ஒரு கணம் தலை குனிந்து நிற்கிறது.
 
ஜீவனின் இரத்தம் தோய்ந்த கொழும்புச் சாலையில் இருக்கும் எதிரிச் சுவடுகள் ஒரு நாள் துடைத்தழிக்கப்படும். அந்த உன்னத விடுதலை திருநாளின் போது தாயகப் பெருஞ்சாலைகள் கருந்தாரிட்டு செவ்வனே மெழுகப்படும். ஆனால் ஜீவனின் உணர்வு சுமந்து நிற்கும் ஒவ்வொரு தோழனுக்கும் அது செஞ்சாலை.
 

 

  • கருத்துக்கள உறவுகள்

veera_aananth.gif

 

3veera_ananth.png

3veera_ananth1.png

veera_aananth1.jpg

3veera_ananth2.png

  • கருத்துக்கள உறவுகள்

2ம் லெப். சுரேந்தினி

இயற் பெயர் - ஐனந்தினி பரமானந்தம்

இயக்கப் பெயர் - சுரேந்தினி

தாய் மடியில் -

தாயக மடியில் -

வலிகாமத்தின் வடபகுதியில் அமைந்த அழகிய கிராமம்தான் இளவாலை. விவசாயிகளின் கை வண்ணத்ததில் பசுமை குறையாது செழிப்புடன் விளங்கியது. தமிழீழ சுதந்திரப் போராட்டத்திற்கு பெரும் உறுதுணையாக பல ஆண், பெண் போராளிகளைத் தந்து புகழ் பூத்த மண்ணது. அந்த மண்ணில் பிறந்ததாலோ என்னவோ ஜனந்தினியும் அச்சம் சிறிதும் இன்றி ஆயுதம் கரத்தில் ஏந்தி களம் பல கண்டு வீரச்சாவை புகழுடன் தழுவிக் கொணடவள்.

இளவாலையைச் சேர்ந்த பரமானந்தம் தம்பதிகளுக்கு மூன்று சகோதரர்களுக்கு ஒரே ஒரு அன்புச் சகோதரியாக ஜனந்தினி மலர்ந்தாள். ஒரேயோரு பெண் குழந்தை என்று பெற்றோரும் இனத்தவர்களும் மிகச் செல்லமாக ஜனந்தினியை வளர்த்தார்கள். அவளை நல்ல முறையில் கற்பித்து ஆளாக்க வேண்டுமென பெற்றோர் பெருவிருப்புக் கொண்டனர். அவர்களின் விருப்பத்துக்கமைய தெல்லிப்பளை பகாஜனாக் கல்லூரியில் தனது ஆரம்பக் கல்வியை ஜனந்தினி ஆரம்பித்தாள். கல்வியில் அவள் கொண்ட விருப்பு அவளை ஆவலுடன் படிக்கத் தூண்டியது. ஒவ்வொரு வகுப்பிலும் தங்குதடையின்றி சித்தியேய்தினாள். இவளின் கல்வித்திறமையை பார்க்க கொடுத்து வைக்காமல் தந்தையார் இவளது சிறு வயதிலிலேயே காலமாகிவிட தாயின் அன்பான அரவணைப்பில், அவள் கொடுத்த ஊக்கத்தில் கல்விப் பொதுத் தராதர சாதசரண பரீட்சையில் திறமைச் சித்திகள் மல பெற்று சித்தியெய்தினாள். உயர் வகுப்பை உன்னதமாகப் படித்துத் தேறிவிடவேண்டுமென உறுதியான எண்ணதுடன் தன்னை தயார்படுத்திக் கொண்டிருந்த வேளை அவளது எண்ணத்தைக் கலைத்தது சிறிலங்கா இராணுவத்தில் தமிழர் மீதான தாக்குதல்கள்.

சிங்கள இராணுவம் தமிழர் மீது கேரத் தாக்குதல்கள் மாத்திரம் மேற்கொள்ளவில்லை. ஒரு இன அழிப்பையே மேற் கொண்டிருந்தனர். அத்தோடு தமிழரின் முன்னேற்றத்துக்கான கல்வியை திட்டமிட்டு அழிக்க முற்பட்டனர். அவர்களின் கொடூரத்தனமான குண்டு வீச்சுக்கு அடிக்கடி தமிழ்ப் பிள்ளைகள் படிக்கும் கல்விக் கூடங்கள் இலக்காகி சிதறின. இராணுவ நடவடிக்கைகளால் சேதமுறாத பள்ளிக்கூடங்களே தமிழ் மண்ணில் இல்லை என்று சொல்லலாம். கல்வியில் மேன்மை அடைய வேண்டுமென பெருவிருப்புக் கொண்டிருந்த ஜனந்தினியின் மனதை இது பெரிதும் பாதித்தது. தமிழ் மக்களின் உயிரினும் மேலான பொக்கிசமான கல்வியை பயில வாய்ப்பில்லாத நிலையை உருவாக்கிய அந்த எதிரிமீது ஜனந்தினி உள்ளூரக் கோபம் கொண்டாள். கல்வி... கல்விக்குத் தடையாய் இருக்கிற இந்தப் பேய்களை...... கோபத்தில் குமுறியவள் எதிரியை ஒழிக்க 1995 ம் ஆண்டு விடுதலைப் புலிகள் அணியில் போராளியாக இணைந்து கொண்டாள். 30 வது பயிற்சி முகாமில் தனது ஆயுதப் பயிற்சியைப் பெற்றுக் கொண்டாள். பயிற்சியின் நுட்பங்களை மிக இலகுவாக புரிந்து கொண்டு பொறுப்பாளர்களின் நன் மதிப்பை பெற்றுக் கொண்டாள். பயிற்சி முடிந்து வெளியேறும் போது சுரேந்தினி என்னும் போராளியாக வெளிவந்தாள். பயிற்சி முடிந்த பின் மற்றைய போராளிகளுடன் உயிர் காக்கும் சேவையான மருத்துவப் பகுதிக்கு அந்தத் துறையைப் பயில்வதற்காக அனுப்பப்பட்டாள். அந்த மருத்துவக் கல்லூரி பயிற்சியும் சுரேந்தினிக்கு பெரும் அக மகிழ்வினைத் தந்தது. போருக்கு பக்கபலமான பெரிய சேவை மருத்துவச் சேவை. போரில் காயப்படும் போராளிகளின் உயிரைக் காப்பாற்றுவதும் குணமடையச் செய்து எதிரியை அழிக்க மீண்டும் களம் அனுப்பும் பாரிய பணியை மருத்துவ பிரிவுவல்லவா செய்து கொண்டிருக்கின்றது. அந்தச் சேவையில் விருப்புடன் செயலாற்றியதாலோ என்னவோ சுரேந்தினியின் முகம் எந்த நேரமும் சாந்தமாக அமைதியாக இருக்கும். சக போராளிகளுக்கு எந் நேரமும் எந்த வித உதவி என்றாலும் சிறிதும் தயங்காமல் இன்முகத்துடன் செய்து முடிப்பாள். கோபம் என்பதை இவளிடம் காணவே முடியாது. மருத்துவத் துறையில் மிகவும் திறமையாகவும் கடமை உணர்வுடனும் செயற்பட்பாள்.

தான் மாத்திரம் திறமையாக இருந்தால் போதாது மற்றவர்களும் திறமைசாலிகளாக வரவேண்டும் என்பதற்காக தான் கற்ற அறிவினை மற்றவர்களுக்கும் எடுத்து விளக்குவாள். தமிழர் வாழ்வைக் குலைத்து இனத்தின் குரல் வாளையை முறுக்கி நறுக்கிவிட வென சிங்கள இராணுவத்தால் சூரியக்கதிர் 01 என நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டது. இரவு பகல் பாராது கண்விழித்த போராளிகளைக் காப்பாற்றுவதில் கடமை உணர்வில் ஈடுபட்டாள். அவளது சேவையைப் பெற்று எத்தனையோ போராளிகள் மீண்டும் களம் ஏறினார்கள். மருத்துவம் என்கின்ற அந்தப் புனித சேவையில் அவள் தொடர்ந்து ஈடுபட்டாள். சூரியக்கதிர் 01 நடவடிக்கையை அடுத்து முல்லைச் சமர் களத்தில் அவளது மருத்துவப் பணி தொடர்ந்தது. போர்களத்திற்கு மிக அருகே அவள் பணிவிடம் அமைந்திருந்தது. எதிரியின் வெறி கொண்ட தாக்குதலுக்கு சுரேந்தினி குறியானாள். அவள் உடல் தளர்ந்தது. மெல்ல மெல்ல மண்ணில் சரிந்தாள். தமிழர் தம் போர்க்காவியம் படைத்த முல்லைமண் அவள் உடலைத் தழுவிக் கொண்டது. அவள் மாவீரர் ஆனாள்.

இவளின் அன்பான நெருக்கமும் திறமையான செயற்பாடுகளும் இவளது சக போராளிகளுக்கு எந்நாளும் அவளை நினைவு கூரச் செய்யும். அவள் விட்டுச் சென்ற பாதையில் உறுதியுடன் விரையும் கால்கள் வெகுவிரைவில் தமிழீழம் வென்றெடுக்கும் .

எழுதியவர் போராளி

  • கருத்துக்கள உறவுகள்

போராளி சுயந்தன்

இயற் பெயர்

இயக்கப் பெயர்

தாய் மடியில்

தாயக மடியில்

09.01.1997 நடுநிசியைத் தாண்டிய அதிகாலை வேளை. ஆனையிரவு, பரந்தன் கூட்டுப்படைத் தளத்தினூடாக புலிகளின் அணிகள் நகர்ந்து கொண்டிருந்தன. அந்தத் தளத்தின் அமைவிடம் வலிந்த ஒரு தாக்குதலுக்குச் சாதகமற்ற பௌதீகச் சூழலைக் கொண்டிருந்தது. தரவைகள், உப்பு வெளிகள், சிறிய சிறிய உவர்நீர் நிலைகள் ஆகியவற்றைக் கொண்டிருந்தது அந்தச் சூழல், எனினும், முகாமின் முக்கியத்துவத்தை உணர்ந்த போராளிகள் அனைவரும் கண்களில் ஒரு வெறியுடனும், எங்கள் மண்ணை ஆக்கிரமித்தவனை அழிக்கவேண்டுமென்ற மனவுறுதியுடனும் நீரற்ற அந்த உப்பு வெளிகளினூடக ஊர்ந்து கொண்டிருந்தனர்.அது ஒரு நீண்ட நகர்வு. விடுதலைப் புலிகளின் போரியல் வரலயாற்றிலேயே ஒரு வலிந்த தாக்குதலுக்காகச் சண்டையை எதிர்பார்த்து எமது படையணிகள் நகர்ந்த நீண்ட நகர்வுகளில் அது குறிப்பிடத் தக்கது. எங்காவது எதிரியால் அவதானிக்கப்பட்டால் அங்கே நகர்ந்து கொண்டிருக்கும் அத்தனை போராளிகளின் உயிர்களும் கேள்விக் குறியாகிவிடும.

அங்கே நகர்ந்து கொண்டிருந்த அணிகளிற் சார்ள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் ஓர் அணியும் அடங்கியிருந்தது. முகாமின் ஒரு முக்கிய பகுதியைக் கைப்பற்றும் பணி அவர்களுக்குரியது. அவர்களின் அன்றைய சிக்கலான பணியில் எமக்குக் கிடைக்கப் போகும் வெற்றியின் ஒரு கணிசமான பகுதி தங்கி நிற்கிறது.

சண்டை தொடங்கி விட்டது. சார்ள்ஸ் அன்ரனி படையணியும் அவர்களுக்குரிய பாதை வழியாகச் சண்டையைத் தொடங்கியது. முட்கம்பி வேலிகளை „ டோப்பிட்டோ “ குண்டுகள் தகர்க்க, அணி ஒவ்வொரு தடையாகத் தாண்டி நகர்ந்து கொண்டிருந்தது. எதிரியின் இயந்திரத் துப்பாக்கிகள் அவர்களை நோக்கிச் சடசடக்க அப்போதுதான் அந்தப் பாதையில் உள்ள பிரச்சனை அவர்களுக்குத் தெரிந்தது.

ஆம் எமது வேவுத் தரவின்படி அங்கேயிருந்த முட்கம்பிச் சுருள் தடைகளை விட புதிதாக இன்னுமொரு முட்கம்பிச் சுருள் தடையை எதிரி அமைத்திருந்தான். ஓவ்வொரு நொடியும் சண்டையின் முடிவைத் தீர்மானிக்கும் ஓர் இக்கட்டான நேரம். நாம் அந்தத் தடையைத் தகர்த்து உள்நுளையா விட்டால் எதிரி தன்னைத் தயார்படுத்தக் கூடும். பின்னர் அந்தப் பகுதியைக் கைப்பற்றுவது இயலாமற்கூட போய்விடும். புதிதாகத் தடையை உடைக்க „ டோப்பிட்டோ “ வும் கைவசம் இல்லை. மாற்று வழிகளைப் பரிசீலிக்கக் கூட நேரம் இல்லாத ஓர் இக்கட்டான சூழல். முட்கம்பியை வெட்டச் சென்ற போராளி சுயந்தன் அரைவாசிக் கம்பிகளை வெட்டிய நிலையில் எதிரியின் ரவை பட்டு வீழ்ந்து விட்டான். எதிரி, அந்த இடத்தில் முட்கம்பிகளை வெட்டப் படாமல் இருப்பதையும் நாம் அதை வெட்ட முயல்வதையும் கண்டு விட்டான். அவன் தன் முழுச் சூட்டு வலுவையும் இப்போது அங்கே மையங் கொள்ள வைத்தான். அது வார்த்தைகளின் வர்ணணைக்கு அப்பாற்பட்ட இறுக்கமான சூழல். அன்றைய சண்டையின் முடிவைத் தீர்மானிக்கும் ஓர் அணி தடையை உடைக்க முடியாமல் நிற்க, தனியொருவனாகச் சுயாந்தன் நிலைமையை மாற்றி அமைத்தான்.

அந்தத் தடையை அகற்ற வேண்டிய தேவையை அவன் உணர்ந்தான். அன்றைய சண்டையின் முடிவு கண்களிற் பட சுயந்தன் உறுதியான முடிவெடுத்தான். ஓடிச்சென்று முட்கம்பிச் சுருளின் மீது பாய்ந்தான், நசுங்கிய கம்பியின் மேல் அவன் கிடக்க, அவன் அமைத்துத் தந்த உயிர்த்துடிப்பான பாதையின் வழியாக இலக்கை நோக்கி நகர்ந்தனர் தோழர்கள்.

அவனது அணி, கொடுக்கப்பட்ட எதிரிப் பகுதியைப் பிடித்துக் கொண்டு முன்னேறியது. எதிரியின் சூட்டில் விழ வேண்டியவர்களாய் இருந்த அவனது தோழர்கள் எதிரியை வீழ்த்திக் கொண்டு முன்னேறினர். தாக்குதலின் முடிவில் நூற்றுக் கணக்கான எதிரிகளை வீழ்த்தினர். எதிரியின் பீரங்கிகளை அழித்தனர். அந்த வெற்றிக்கு வழியமைப்பதற்காகத் தன் உடலால் வழி சமைத்தவன் சுயந்தன். உடலின் உயிரணுக்கள் ஒவ்வொன்றும் வேதனையால் துடிக்க அத்தனை வேதனைகளையும் தாங்கிக் கொண்டு தான் நேசித்த மக்களின் வாழ்விற்காக முட்கம்பித் தடையின் மீது பாய்ந்து தன் தோழர்களுக்கு வழி சமைத்துக் கொடுத்த அவனது வீரம்.

தலைவரவர்களின் „ எமது போராட்டத்தின் வலிமை எமது போராளிகளின் நெஞ்சுரத்திலிருந்தே பிறக்கின்றது “ என்ற கூற்றுப்படி தனது நெஞ்சுரத்தால் அன்றைய சண்டையை மாற்றியமைத்தவன் பின் „ ஜயசிக்குறுய் “ சமரில் வித்தாகிப் போனான். இவன்போன்ற போராளிகளின் தியாகங்களே இன்றும் வழித்தடங்களாக எமக்கு வழிகாட்டி நிற்கின்றன.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.