Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜீ.ஜீ.பொன்னம்பலத்தின் 113வது பிறந்த தினம் இன்று! – யாழ்ப்பாணத்தில் மலர் அஞ்சலி.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
gg-ponnampalam-b.day-200-news.jpg

அமரர் ஜீ.ஜீ.பொன்னம்பலத்தின் 113வது பிறந்த தினத்தை முன்னிட்டு இன்று யாழ்.குருநகரில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மலர் மாலை அணிவித்து,மலர் வணக்கம் செலுத்தப்பட்டது. இன்று முற்பகல் 10மணியளவில் இடம்பெற்ற இந்தநிகழ்வில் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸின் தலைவர் இராயப்பு எட்வேட் ஆனந்தராஜா, பொதுச் செயலாளர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், உதவிச் செயலாளர் கனகையா ஸ்ரீகிருஸ்ணகுமார்,தென்மராட்சி அமைப்பாளர் கந்தர் ஆறுமுகம், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன், தேசிய அமைப்பாளர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் ஆகியோர் மலர் மாலை அணிவித்தனர்.

   

அதனைத் தொடர்ந்து அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஆகிய கட்சிகளின் உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் கலந்து கொண்டு ஜீ.ஜீ யின் திருவுருவச் சிலைக்கு மலர் வணக்கம் செலுத்தினர்.

 

gg-birthday-081114-seithy.jpg

 

 

gg-birthday-081114-seithy-1.jpg

 

 

gg-birthday-081114-seithy-2.jpg

 

http://seithy.com/breifNews.php?newsID=120351&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

ஜீ.ஜீ. பொன்னம்பலம் தமிழினத்துக்கு ஆற்றிய சேவை என்ன?

இந்திய வம்சாவளியினருக்கு வாக்குரிமை போக சிங்களத்திற்கு துணை போனது ,

சிங்கள அரசில் மாறி மாறி மந்திரி பதவி எடுத்தது

சேர்த்த பணத்தில் மலேசியாவில் இறப்பர் தோட்டம் வாங்கியது 

பிறகு பிள்ளை .பேரன் என்று இருக்கும் பணத்தை வைத்து பெரும்பான்மை கட்சிகளை உடைக்க வழியமைத்தது .

தமிழர் என்னும் ஒரு அடையாளத்தை உலகிற்கு உருவாகிய ஒரு சிலரில் ஜி ஜி யும் ஒருவர் எனலாம் ... :lol:

  • கருத்துக்கள உறவுகள்

நுனி நாக்கினால், ஆங்கிலம் பேசியபடி தமிழ் வளர்த்தவர்கள் பலர்!

 

சேர் பொன் இராமநாதன், சேர் பொன் அருணாசலம்...ஜி.ஜி.பொன்னம்பலம், சிவசிதம்பரம், அமிர்தலிங்கம் என்று இந்த வரிசை நீள்கின்றதே தவிரத் தமிழனுக்கு விமோசனம் தேடித் தந்தவர்களில், இவர்கள் பெயர்கள் இணையாது என்பதை மட்டும் உறுதியாகக் கூற முடியும்!

 

தந்தை செல்வாவின் நிலையும், ஊர்காவற்துறை நவரத்தினம் அவர்களது நிலையம் கொஞ்சம் வித்தியாசமானது!

 

இவர்களைச் செயற்பட விடாமல், தடுத்து நிறுத்தியவர்கள் வரிசையில்..ஜி.ஜி. பொன்னம்பலம் போன்றவர்கள் அடங்குவார்கள்!

 

இத்தகையவர்கள் தமிழினத்தின் பிரச்சனையைத் தீர்க்கவில்லை... தமிழின அரசியல் மூலம் தங்களை வளர்த்துக்கொண்டவர்கள்!

 

தமிழன் பெயரை உலகறிய வைத்த ஈழத் தமிழர்கள் நிறையப் பேர் இருக்கிறார்கள்!

 

அடங்காத் தமிழன் சுந்தரலிங்கம் போன்றவர்களும், எமில் சவுந்தர நாயகம் போன்றவர்களும் இதில் அடங்குவார்கள்! 

 

ஒரு தேநீருக்கும், சுருட்டுக்கும் விலை போன அரசியல் வாதிகளே ஜி.ஜி. பொன்னம்பலம் போன்றவர்கள்! இவர்களுக்கு இரண்டு முகங்கள் இருந்தன!

 

ஒன்று யாழ்ப்பாண முகம்... மற்றையது கொழும்பு முகம்..!

 

இத்தகையவர்களுக்கு 'சிராவஸ்தி' வீடுகளும் தேவை...யாழ்ப்பாண வீடுகளும் தேவை என்ற நிலையில் வாழ்ந்தவர்கள்!

 

தனிப்பட்ட முறையில்... இவர்களது தொழில் வாழ்க்கையும்.. அறிவும்.. ஒரு தீப்பெட்டியில், ஒரு யானை இருக்கிறதா அல்லது இரண்டு யானை இருக்கிறதா என்று வாதிட்டு நிரூபிப்பதிலும்,  ஒரு ஊசியின் 'கண்' அசைந்து கொண்டிருக்கும் போது, அதனுள் நூலைக் கோர்க்க முடியுமா.. என்று வாதிட்டுக் குற்றவாளிகளையும், சமுதாய விரோதிகளையும் காப்பதிலே கழிந்தது.

 

இது தான் இவர்கள் திறமை எனின்...இவர்களைப் பார்த்துக் காறித் துப்பி விட்டு நடந்து செல்வதைத் தவிர வேறு ஏதும் என்னால் கூற முடியவில்லை!

 

இறுதியாக, இந்த அரசியல் வாதிகள் சரியான முறையில்.. எமது இனத்துக்காகப் போராடியிருந்தால்.. இளைய தலைமுறை.. ஆயுதமேந்தும் நிலைக்கு ஒரு நாளும் போயிருக்காது!

 

பலர் இப்போது எழுதுவது போல,  தமிழினம் ' பயங்கரவாத ஆயுதம்' ஏந்தும் இனமல்ல. அவ்வாறு இருந்திருந்தால்... வட பரந்து கிடந்த இந்திய மண்ணிலிருந்து .. தென் திசை நோக்கித் துரத்தப் பட்டு.. இறுதியில் கடல் தாண்டி.. இலங்கை வரையும் ஓடி வந்திருக்காது. எதிர்த்துப் போராடியிருக்கும்!

 

இத்தகைய சுயநல அரசியல் வாதிகளின் ' நெறிப்படுத்தலே' எம்மக்களை முள்ளிவாய்க்கால் வரை கொண்டு சென்றது!

 

இன்னும் இந்த அரசியல் வாதிகளின் பிடியிலிருந்து ' ஈழத் தமிழினம்' மீண்டு வரவில்லை!

 

ஏதோ ஒரு வடிவில்... இப்படியான அரசியல் வாதிகள்.. எமது மக்களின் வாழ்வை அழித்துத் தங்களை வளப்படுத்திக் கொண்டே போகின்றார்கள்!

 

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜீஜீ பொன்னம்பலம் அன்றைய காலகட்டத்திற்கு நல்ல வழக்கறிஞர்.......

 

ஆனால் தமிழினத்திற்கு ஒரு நாதாரி......

 

ஏதோ ஒரு நப்பாசையில் இவரும் தமிழினத்தின் நல்லவராக போற்றப்படுகின்றார்.

மலையகத்தமிழரின் வாக்குரிமையை இழப்பதில் சிங்களத்துக்கு ஆதரவளித்தது இவர் செய்த மாபெரும் தப்பு.
 
ஆனால் நாங்கள் யாரும் செய்யாத தியாகத்தை இவர் மகன் குமார் தன் இனத்திற்குச் செய்துள்ளார் என்பதை நாம் மறக்கக்கூடாது.
  • கருத்துக்கள உறவுகள்

 

மலையகத்தமிழரின் வாக்குரிமையை இழப்பதில் சிங்களத்துக்கு ஆதரவளித்தது இவர் செய்த மாபெரும் தப்பு.
 
ஆனால் நாங்கள் யாரும் செய்யாத தியாகத்தை இவர் மகன் குமார் தன் இனத்திற்குச் செய்துள்ளார் என்பதை நாம் மறக்கக்கூடாது.

 

உண்மை தான்....ஈசன், அதை எவருமே மறுக்க முடியாது!

Edited by புங்கையூரன்

  • கருத்துக்கள உறவுகள்

குமார் பொன்னம்பலம் இறப்பதற்கு ஓரிரு வருடங்களுக்கு முன்னரே புலிசார்பு பேச்சுக்களைத் தொடங்கினார். இலங்கை அரசியலில் பல மேல்மட்டத் தொடர்புகள் இருந்ததனால் அரசாங்கத்தினால் தனக்கு உயிராபத்து வராது எனக் கருதியிருந்தார். கொழும்பின் கறுவாதோட்டத்தில் வசித்த பல பென்ஸ் கார்களுக்குச் சொந்தக்காரரான குமார் அவர்களுக்கு தமிழர்கள்  கண்மூடித்தனமாக நடத்தப்பட்ட வேளைகளில் சுதந்திரமாக நடமாட முடிந்தது. புலிகளுக்கு நல்லபிள்ளைவேடம் போடத் தொடங்கியபோது சிங்களம் தனது கைவரிசையைக் காட்டி அவரது உயிரினைக் காவுகொண்டது. புலிகளும் தங்களது அரசியல் இராசதந்திரத்தைக் காண்பிக்க அவரை மாமனிதராக்கினார்கள்.

 

Spoiler
இவரைப் போல ஏரம்பு வாத்தியாரும் மாமனிதரே!
குமார் வேஷம் எதுவும் போடவில்லை வாலி. கொழும்பில் இயக்கத்தில் இயங்கியவர்களுடன் தன் கவுரவம் கூடப்பார்க்காமல் இறங்கி வந்து பழகினார். பல வழக்குகளில் வாதிட்டு பலரை விடுவித்ததுடன் பல பேர் காணாமல் போவதையும் தடுத்திருந்தார். ஆரம்பத்தில் உயிராபத்தில்லை என்று கருதியிருந்தாலும் பின்பு நிலமை மோசமாவதை நன்கே அறிந்திருந்தார். அவருடன் அந்தக் காலத்தில் வேலை செய்த சட்டத்தரணிகள் உயிர் அச்சுறுத்தலின் மத்தியில் தான் வேலை செய்தார்கள். 
 
உண்மையில் குமார் இதில் தன்னை சம்பந்தப் படுத்தியிருக்க வேண்டிய தேவையே இல்லை. சொகுசாக வாழ்ந்திருக்க முடியும். இலங்கையில் அதிகூடிய பென்ஸ் கார்களின் உரிமையாளருக்கு வாழத்தெரியாதா என்ன ? 
 
மாமனிதர் பட்டம் மாத்திரம் இல்லை, அவர் கொலைக்கு பழிவாங்க தற்கொலை போராளி ஒருவரையும் அனுப்பி இருந்தார்கள்.
  • கருத்துக்கள உறவுகள்
 
ஜீ.ஜீ.பொன்னம்பலத்தின் 113வது பிறந்த தினம் இன்று! – யாழ்ப்பாணத்தில் மலர் அஞ்சலி. 
[saturday 2014-11-08 20:00]
gg-ponnampalam-b.day-200-news.jpg
அமரர் ஜீ.ஜீ.பொன்னம்பலத்தின் 113வது பிறந்த தினத்தை முன்னிட்டு இன்று யாழ்.குருநகரில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மலர் மாலை அணிவித்து,மலர் வணக்கம் செலுத்தப்பட்டது. இன்று முற்பகல் 10மணியளவில் இடம்பெற்ற இந்தநிகழ்வில் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸின் தலைவர் இராயப்பு எட்வேட் ஆனந்தராஜா, பொதுச் செயலாளர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், உதவிச் செயலாளர் கனகையா ஸ்ரீகிருஸ்ணகுமார்,தென்மராட்சி அமைப்பாளர் கந்தர் ஆறுமுகம், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன், தேசிய அமைப்பாளர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் ஆகியோர் மலர் மாலை அணிவித்தனர்.
 
அதனைத் தொடர்ந்து அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஆகிய கட்சிகளின் உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் கலந்து கொண்டு ஜீ.ஜீ யின் திருவுருவச் சிலைக்கு மலர் வணக்கம் செலுத்தினர்.http://www.seithy.com/breifNews.php?newsID=120351&category=TamilNews&language=tamil

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.