Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுமந்திரனின் பனங்கொட்டை திட்டம் படுதோல்வி!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

sumanthiran.png

வடமராட்சியின் பருத்தித்துறைப்பகுதியில் பனங்கொட்டைகளை நாட்டும் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனின் முயற்சி படுதோல்வி அடைந்துள்ளது. அவர் சார்ந்த கட்சியின் ஆதரவின்மையே இத்தோல்விக்கு காரணமெனத் தெரிவிக்கப்படுகின்றது.

எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் தேசியப்பட்டியலில் இல்லாமல் வடமராட்சியில் களமிறங்க நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் விருப்பங்கொண்டுள்ளார். கட்சி தலைமையும் அதனையே ஊக்குவித்துவருகின்றது. இது தொடர்பான ஆலோசனைகளை சம்பந்தன் நேரடியாக வழங்கியதாகவும் தொடர்புடைய வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

இந்நிலையில் தேர்தல் பரப்புரைக்கான முன்னேற்பாடாக தனக்கு இவ்வருடம் பாராளுமன்ற உறுப்பினரென்ற அடிப்படையில் ஒதுக்கப்பட்ட நிதியில் பெருமளவை வடமராட்சியின் நலத்திட்டங்களிற்கே அவர் ஒதுக்கியிருந்தார். அதன் ஒரு கட்டமாக பத்தாயிரம் பனங்கொட்டைகளை பருத்தித்துறையில் நாட்ட அவர் முடிவு செய்திருந்தார்.

எனினும் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் வடமராட்சியில் சுமந்திரன் களமிறங்கினால் அவரை தோற்கடிப்போமென சவால் விடுத்துள்ள தமிழரசுக்கட்சியின் இளைஞரணி அவரது பனங்கொட்டடை திட்டத்தை முற்றாக புறக்கணித்துள்ளது. அத்துடன் மற்றையவர்களிடையேயும் எதிர் பிரச்சாரங்களை மேற்கொண்டுவருகின்றது.

இதனையடுத்து தனது பனங்கொட்டை நடுகை திட்டத்தை இருநூறுடன் நிறுத்திக்கொண்டுள்ள சுமந்திரன் இது தொடர்பில் தமிழரசுக்கட்சி தலைவர் மாவை.சேனாதிராசாவிற்கும் புகார் செய்துள்ளார்.

 

http://www.pathivu.com/news/35328/57//d,article_full.aspx

  • கருத்துக்கள உறவுகள்

இளைஞரணி ஏன் பிகு பண்ணுது?? :D

  • கருத்துக்கள உறவுகள்

இந்தப் பனங்கொட்டைப் பிரச்சனையையே கையாளத் தெரியாத சுமந்திரன்

எப்படித் தமிழருடைய பிரச்சனையைத் தீர்த்து வைப்பார்.
இளைஞர் அணி விழிப்பாகவே இருக்கின்றது

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எப்படியாவது அல்லது இப்படியாவது சுமந்திரனை கலைத்து விட்டால், இளைஞர் அணி மிச்ச விஷயத்தை கொண்டு போகும்..

 

 இளைஞர் அணியிடம் விடுங்கப்பா பிரச்சனையை.. எப்பவும் இளைஞர்கள் துடிதுடிப்புடன் வெற்றி பெறுவார்கள் என்பது வரலாறு

  • கருத்துக்கள உறவுகள்

சபேசன்

நீங்க சொல்வதில் உள்குத்து ஏதும் இல்லையே?

  • கருத்துக்கள உறவுகள்

உட்கட்சிப் பிரச்சினை என்பது எமக்குப் புது விஷயமா என்ன ?

  • கருத்துக்கள உறவுகள்

இந்தத் திட்டத்துக்கு வேறு ஏதாவது.. கவர்ச்சியான பெயர் வைத்திருந்தால், வெற்றி பெற்றிருக்குமோ? :D

 

அத்துடன் 'பனங்கொட்டை' என்ற பெயரின் காப்புரிமை..எங்களுக்கு மட்டுமே சொந்தம்!  :icon_idea:

 

 

  • கருத்துக்கள உறவுகள்

இந்தக்கொட்டையை சுமந்திரன் முன்னரே போட்டிருக்கவேண்டும்.இது காலம் கடந்த விதைப்பு

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சபேசன்

நீங்க சொல்வதில் உள்குத்து ஏதும் இல்லையே?

உள்குத்தா? சேச்சே..  அமிர் போன்ற ஆட்களிடம் இருந்து பிரச்சினையை எடுத்து இளைஞர் அணி சர்வதேச அளவில் பன்முகப்படுத்தியிருக்கு.. அடுத்த இளைஞர் அணியிடம் விட்டால் இன்னும் விசேஷமாக செய்வார்கள். இவர்களுக்கும் ஒரு சான்ஸ் கொடுத்து நிறைந்த பலனை பெறலாம் என்று சொன்னேன். பரிசோதனை செய்ய வேண்டுமென்றால் சேதாரம் பார்க்க கூடாது.

Edited by sabesan36

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்தத் திட்டத்துக்கு வேறு ஏதாவது.. கவர்ச்சியான பெயர் வைத்திருந்தால், வெற்றி பெற்றிருக்குமோ? :D

 

அத்துடன் 'பனங்கொட்டை' என்ற பெயரின் காப்புரிமை..எங்களுக்கு மட்டுமே சொந்தம்!  :icon_idea:

 

எம் மூலாதார விதைகளை பதிப்போம். பயனடைவோம்.  :D

சுமந்திரன் ,ஐங்கரநேசன் ,மாவை முவரும் சென்றவாரம் அமேரிக்கா வந்திருந்தனர் .அங்கு பலதரப்பு(அமெரிக்க இராஜாங்க திணைக்கள உயர் அதிகாரிகள் உட்பட ) சந்திப்புக்களை முடித்துக்கொண்டு சுமந்திரன் மாத்திரம் கனடா வந்திருந்தார் .நேற்று சந்தித்து பலதரப்பட்ட விடயங்களை கலந்துரையாடினோம் .இன்று ஒட்டவாவில் வெளிவிவகார அமைச்சில் சந்திப்புகள் நடைபெற உள்ளன .


பனங்கொட்டை திட்டத்தை கேட்டபோது வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக சொன்னார் .

சுமந்திரனை பல வழிகளிலும் அநாகரிகமாக விமர்சிக்கும் பத்திரிகையை சார்ந்தவர்களும் தனிப்பட சந்தித்தனர் . மார்ச்சில் வரவிருக்கும் ஐ நா மனித மனித உரிமை விசாரணை அறிக்கையை எதிர்ப்பதால் என்ன விளைவுகள் ஏற்படும் என்பதை அவர்களுக்கு விளக்கியதாக அறிந்தேன் .ஆனாலும் இந்த வேதாளங்கள் மீண்டும் முருங்கைமரமேறத்தான் போகுது ? இதில் சுமந்திரனின் பெருந்தன்மை பாராட்டப்பட வேண்டும் .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.