Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

லண்டனில் நடந்த தேசியத் தலைவரின் பிறந்தநாள் கொண்டாட்டம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தலைவர் தனது பிறந்தநாளைக் கொண்டாடுவதில்லை. அன்று முழுவதும் முதல் மாவீரன் பெல். சங்கர் தனது மடியில் வீரச்சாவடைந்ததை நினைவு கூரும் வகையில் எதுவும் உண்ணாமல் மெளன விரதம் இருப்பார் என்றுதான் படித்திருந்தேன். தமிழ்நெற் முழுவதும் சல்லடை போட்டுத் தேடியும் ஆதாரத்தைக் காட்ட ஒரு கட்டுரையையும் கண்டுபிடிக்கவில்லை. எனவே இப்போது பிறந்தநாள் கொண்டாடுபவர்கள் தமிழ்நெற்றில் இருந்த ஆதாரமான கட்டுரையைத் தூக்கிவிட்டார்களோ என்று சந்தேகமாக இருக்கின்றது.

ஆனால் கடற்புலித் தளபதி சூசை தலைவருடைய பிறந்தநாளை பெருமெடுப்பில் கொண்டாடியிருக்கின்றார் என்றும் அதில் தலைவர் கலந்துகொண்டுள்ளார் என்றும் ஆதாரத்தோடு படங்களும் காணொளிகளும் இணைக்கப்பட்டிருப்பதைப் பார்க்க தலைவரும் தனது கொள்கைகளில் மாற்றங்களைக் கொண்டுவந்தாரா என்று சந்தேகமாக இருக்கின்றது. இந்த நேரத்தில் பிறந்தநாள் கொள்கையில் மாற்றங்களைக் கொண்டுவந்திருந்தாலும் தமிழீழத்தைக் கைவிட்டால் தன்னைச் சுட்டுக்கொல்லும்படிச் சொன்னதில் இருந்து மாறவில்லை என்பதுதான் அவரும் இன்றும் தமிழர்களின் தலைவராக இருப்பதற்குக் காரணம் என்பதை ஒத்துக்கொள்கின்றேன்.

..................

From 1991 the entire week from November 21-27, was declared as Great Heroes Week. Interestingly the birthday of LTTE leader Prabakharan was November 26. Since this day was now within the Great Heroes Week more importance was attached to it.

An outpouring of emotion both genuine as well as sycophantic emerged. Gradually the focus shifted from Great Heroes Day to the leader’s birthday. Some even thought that Great Heroes day was to celebrate the leaders birthday. Soon Prabakharan acted firmly and clamped down all festive activity connected with his birthday. The week was for the fallen heroes and the red letter day of that week would only be November 27, the Great Heroes Day he decreed. Nevertheless various religious observances were undertaken by followers and well wishers on November 26, seeking divine protection and blessings on the man who supposedly personified Tamil resistance to Sinhala chauvinist hegemony.

மிகுதியைப் படிக்க ஜெயராஜின் பக்கம் போகவேண்டும்!

http://dbsjeyaraj.com/dbsj/archives/35472

...........................

எனக்குத் தெரிந்து கிட்டர் இலண்டனில் இருந்த காலத்தில் அந்தக்காலத்தில் மேய்ப்பர்களாக இருந்தவர்கள் எல்லாரும் விம்பிள்டன் கோயிலிலும் (இன்னும் பல கோயில்களிலும்) தலைவர் நீண்ட ஆயுளுடன் வாழவேண்டும் என்று அர்ச்சனை, அபிஷேகம் செய்திருந்தார்கள். உபயமாகப் பரிமாறிய உணவைச் சாப்பிட்டதால் நானே அதற்குச் சாட்சி! மிகவும் எளிமையாகவும் கடவுளின் ஆசியை வேண்டியும் கோயில்களில் அர்ச்சனை செய்யப்பட்டதை யாரும் விமர்சிக்கவில்லை.

அதே நேரத்தில் தலைவரின் பிறந்தநாளை வெகுவிமர்சையாகக் கொண்டாடி தமிழ்த் தேசியத்தை வளர்க்கின்றோம், பிற இனத்தினருக்கு தமிழர்களின் போராட்டத்தை அறிமுகப்படுத்துகின்றோம் என்பதெல்லாம் சுத்தமுட்டாள்தனமான விடயங்கள் என்பது எனது பார்வை.

மாவீரர் வாரத்தை அனுட்டிப்பதில் (observe) இருந்து மாவீரர் வாரத்தைக் கொண்டாடுவதுவரை (celebrate) முன்னேறிய தமிழ்த் தேசியவாதிகள், தலைவரே விரும்பாத கொண்டாட்டத்தை பெரிய அளவில் கேக் வெட்டியும், தீபாவளிக்கு பட்டாசும் வாணவேடிக்கையும் செய்வது போலவும் கொண்டாடுவதைப் பெருமிதமாக நினைக்கமுடியவில்லை. "பாட்டி சொத்துத்தானே, புகையாகப் போகட்டும்" என்றுதான் செய்கின்றார்களாக்கும். இப்படி இறைக்கின்ற காசைத் தலைவரை நம்பிப் போராட்டத்தில் ஈடுபட்டு இன்று நடுத்தெருவில் நிற்கும் போராளிகளுக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் கொடுத்திருக்கலாம். அல்லது மரங்களாவது இலண்டனிலும் பாரிஸிலும் நட்டிருந்தால்கூட அவை இன்னும் நூறு வருடங்களுக்காவது நின்று அவரை நினைவுபடுத்தியிருக்கும். இதையெல்லாம் செய்யமாட்டார்கள். ஏனென்றால் இந்தக் கொண்டாட்டங்களில் ஈடுபடுபவர்கள் பல வகையினர்:

1) தலைவர் மேல் உண்மையான அன்புகொண்டவர்கள். கண்ணை மூடிக்கொண்டு எல்லாவற்றுக்கும் ஆமாப் போடும் விசுவாசிகள்

2) தலைவரின் பெயரைச் சொல்லிப் பிழைக்குப் பிழைப்புவாதிகள்

3) போலித் தேசியவாதிகள்.

4) தாங்கள் செய்வது எல்லாம் சரியென்ற வெறியர்கள் (fanatics)

இதற்கு மேல் இந்தத் திரியில் சொல்ல எனக்கு எதுவுமில்லை.

 

 

கிருபன்

நல்லதொரு கருத்தாளர் என உங்கள் மீது மரியாதையுண்டு

 

ஆனால் இங்கே எழுதப்பட்ட வரிகள் மிகவும்  சுயநலவரிகள்....

எவரையோ மட்டம்தட்ட மட்டுமே  இவை உதவமுடியும்...

 

நான் அந்த பிறந்தநாள் விழாவுக்கு சென்றிருந்தேன்

எல்லோரது முகங்களிலும் ஒரு சோகமும்  இறுக்கமுமே இருந்தது....

ஆனாலும் ஒரு தலைவர்  என்ற முறையில் 

அவரது பிறந்தநாளை செய்யவேண்டும் என்பதாலேயே  செய்ததை பார்க்கமுடிந்தது

அதற்காகவே எனது அண்ணர் இறந்து ஒரு கிழமையாக இருந்தபோதும் 

நான் அங்கு சென்றிருந்தேன்...

இவை எல்லாம் உங்களுக்கு வேடிக்கையாகவும்

ஆடம்பரமாகவும் தெரிவது மிகவும் மனவருத்தம் தருகிறது...

 

மற்றும்

தலைவர் தனது பிறந்தநாளைக்கொண்டாடுவதில்லை என்பதற்காக

அவரது பிறந்தநாளை மக்கள் கொண்டாடக்கூடாது என்பது போன்ற கருத்தை நீங்கள் வைத்திருப்பது

உலக வரலாறுகளைப்படித்தவர் என்ற எனது கணிப்புக்குள் கொண்டுவரமுடியவில்லை..  :(  :(  :(

  • Replies 80
  • Views 6.8k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

என்ன இந்த வருடம் ஆளாளுக்கு போட்டி போட்டுக் கொண்டு பிறந்த நாள் விழா கொண்டாடுகிறார்கள்!...மக்கள் தலைவரை மறந்து விடுவார்கள் என்று நினைத்து விட்டார்களா?...அப்படி நினைத்தால் அது தலைவருக்கு செய்யும் அவ மரியாதை...இப்படி கேக் வெட்டி அவருடைய பிறந்த நாளை கொண்டாடுவதை தலைவர் எங்கேயாவது இருந்து பார்த்துக் கொண்டு இருந்தால் ஆனந்தக் கண்ணீர் வடிப்பார்

 

????????????????

 

விசுகு! தலைவர் பாதுகாப்பாக இருந்தபடி அடுத்த கட்ட நடவடிக்கைக்கு தயாராகிக் கொண்டிருக்கும் நிலையில், நீங்கள் கலந்து கொண்ட பிறந்த நாள் நிகழ்வில் ஏன் மக்கள் சோகமாகவும் இறுக்கமாகவும் இருந்தார்கள்?

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்கள் பலர் இப்ப கைதேர்ந்த நடிகர்களாகி விட்டனர்

 

  • கருத்துக்கள உறவுகள்

விசுகு! தலைவர் பாதுகாப்பாக இருந்தபடி அடுத்த கட்ட நடவடிக்கைக்கு தயாராகிக் கொண்டிருக்கும் நிலையில், நீங்கள் கலந்து கொண்ட பிறந்த நாள் நிகழ்வில் ஏன் மக்கள் சோகமாகவும் இறுக்கமாகவும் இருந்தார்கள்?

 

 

தேவையற்று

யாருடனோ ஆன தங்களது தனிப்பட்ட விரோதங்களை  வைத்துக்கொண்டு பழிவாங்க

தலைவர்மீதும்

அவரை மதிப்பவர்கள் மீதும்

ஏன் தலமை ஏற்று அடுத்த கட்டநடவடிக்கையை  செய்யமுடியாதவர் என்பது போல் 

தலைவர் மீதும்

குற்றம்  சுமத்தி எழுதுவது கண்டிக்கப்படவேண்டியது.

 

இதுவரை

யாழின் நீண்டகால உறுப்பினர் என்றரீதியில்

எவரும் தலைவர் பாதுகாப்பாக இருந்தபடி

அடுத்த கட்டத்துக்கு தயாராகின்றார் என  எழுதி  நான் பார்த்தில்லை....

 

அவர் இல்லையென்றால்

அதற்கான தங்களுக்கு கிடைத்த ஆதாரங்களை  இணைக்கணும்

இல்லாதுவிட்டால்

நம்புவர்கள் மீது சேறு பூசாதிருக்கணும்

இது ஆகக்குறைந்த அடிப்படை மனிதாபிமானம்.....

  • கருத்துக்கள உறவுகள்

தலைவரின் பிறந்தநாளை தமது சொந்த அரசியலுக்கும், பிழைப்புக்கும், பெருமைக்கும், புகழுக்கும் கொண்டாடுபவர்களைப் பற்றித்தான் எனது விமர்சனம். அதிலும் ஒரு சிலர் முள்ளிவாய்க்கால் நினைவுநாளில் ஓடி ஓடி மற்றவர்களுடன் நின்று தங்களைப் படம் எடுத்துப் புரஃபைலைக் கூட்டிக்கொண்டிருந்தார்கள் என்றும் பார்த்திருந்தேன். இவர்களுக்கு எல்லாம் தமிழர்களின் அரசியல் அபிலாஷைகள் முக்கியமல்ல. இதைச் சொல்லாமல் இருப்பதும் எதிர்காலத் தவறுகளுக்கு ஆதரவளிப்பதும் ஒன்றுதான்.

 

மேலும் தலைவரின் பிறந்தநாளை அன்புடன் கொண்டாடுபவர்களைப் பற்றி எனது விமர்சனம் இல்லை.


கிருபன்
நல்லதொரு கருத்தாளர் என உங்கள் மீது மரியாதையுண்டு
 
ஆனால் இங்கே எழுதப்பட்ட வரிகள் மிகவும்  சுயநலவரிகள்....
எவரையோ மட்டம்தட்ட மட்டுமே  இவை உதவமுடியும்...

யாரையும் திருப்திப்படுத்த நான் கருத்துக்கள் எழுதுவதில்லை. உங்கள் பார்வையில் சுயநலமான வரிகளாக இருக்கலாம். ஆனால் எனக்கு எந்த ஆதாயமும் கிட்டாது!

தலைவரின் பிறந்தநாளை தமது சொந்த அரசியலுக்கும், பிழைப்புக்கும், பெருமைக்கும், புகழுக்கும் கொண்டாடுபவர்களைப் பற்றித்தான் எனது விமர்சனம். அதிலும் ஒரு சிலர் முள்ளிவாய்க்கால் நினைவுநாளில் ஓடி ஓடி மற்றவர்களுடன் நின்று தங்களைப் படம் எடுத்துப் புரஃபைலைக் கூட்டிக்கொண்டிருந்தார்கள் என்றும் பார்த்திருந்தேன். இவர்களுக்கு எல்லாம் தமிழர்களின் அரசியல் அபிலாஷைகள் முக்கியமல்ல. இதைச் சொல்லாமல் இருப்பதும் எதிர்காலத் தவறுகளுக்கு ஆதரவளிப்பதும் ஒன்றுதான்.

மேலும் தலைவரின் பிறந்தநாளை அன்புடன் கொண்டாடுபவர்களைப் பற்றி எனது விமர்சனம் இல்லை.

யாரையும் திருப்திப்படுத்த நான் கருத்துக்கள் எழுதுவதில்லை. உங்கள் பார்வையில் சுயநலமான வரிகளாக இருக்கலாம். ஆனால் எனக்கு எந்த ஆதாயமும் கிட்டாது!

நீங்கள் குற்றம் சாட்டிய நாடுகடந்த தமிழீழ அரசாங்க உறுப்பினர் வெறும் வேடமிடுகிறார் என்று கூறினீர்கள்.

அதே முள்ளிவாய்க்கால் தினத்தில் பல கோரிக்கைகளை முன்வைத்து கையொப்பம் வாங்கியதை, அதை பின்னர் டேவிட் கமரூனின் அலுவலகத்தில் சமர்ப்பித்ததை ஏன் நீங்கள் எழுதவில்லை.

அதே போல் அவர் பலவற்றை செய்த ஆதாரம் அவர் முகநூலிலேயே உள்ளது. இங்கு நின்று புலம்பாமல் போய் பாருங்கள்.

Edited by துளசி

petition இல் இருந்த கோரிக்கைகள்

Stop the Genocide of Tamils.

Stop the Land grabbing.

Stop the Disappearance.

Stop the Tamil Human Rights Abuses.

Stop the colonisation of Singalese in North & East.

Demand for UN supervised referendum in N&E for Tamil Eelam.

Stop deportation of Tamils to Sri Lanka from UK.

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் குற்றம் சாட்டிய நாடுகடந்த தமிழீழ அரசாங்க உறுப்பினர் வெறும் வேடமிடுகிறார் என்று கூறினீர்கள்.

அதே முள்ளிவாய்க்கால் தினத்தில் பல கோரிக்கைகளை முன்வைத்து கையொப்பம் வாங்கியதை, அதை பின்னர் டேவிட் கமரூனின் அலுவலகத்தில் சமர்ப்பித்ததை ஏன் நீங்கள் எழுதவில்லை.

அதே போல் அவர் பலவற்றை செய்த ஆதாரம் அவர் முகநூலிலேயே உள்ளது. இங்கு நின்று புலம்பாமல் போய் பாருங்கள்.

எங்களுக்குப் புலம்ப மட்டும்தான் முடியும் என்பதால்தான் இப்படியான நிகழ்வுகளுக்குப் போகின்றோம். நேரடியாகப் பார்த்ததைவிட முகநூலூடாகப் பார்த்த உங்களுக்கு நிறைய விடயங்கள் தெரியும் என்பதை ஒத்துக்கொள்கின்றேன்.

எங்களுக்குப் புலம்ப மட்டும்தான் முடியும் என்பதால்தான் இப்படியான நிகழ்வுகளுக்குப் போகின்றோம். நேரடியாகப் பார்த்ததைவிட முகநூலூடாகப் பார்த்த உங்களுக்கு நிறைய விடயங்கள் தெரியும் என்பதை ஒத்துக்கொள்கின்றேன்.

நேரடியாக பார்த்த உங்களை விட முகநூலில் பார்த்த எனக்கு அதிகம் தெரியும் என்பது உண்மை தான். நான் ஆதாரத்துடன் இணைப்பதற்கு உங்களால் பதிலளிக்க முடியாமல் நீங்கள் திணறுவதிலிருந்து தெரிகிறது. :lol:

  • கருத்துக்கள உறவுகள்

எங்களுக்குப் புலம்ப மட்டும்தான் முடியும் என்பதால்தான் இப்படியான நிகழ்வுகளுக்குப் போகின்றோம். நேரடியாகப் பார்த்ததைவிட முகநூலூடாகப் பார்த்த உங்களுக்கு நிறைய விடயங்கள் தெரியும் என்பதை ஒத்துக்கொள்கின்றேன்.

 

துளசி 

தலைவரது பிறந்தநாளை நேரில் பார்த்தார்

நீங்கள் இணையத்தில் பார்த்தீர்கள்..  என்பதையும் தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கின்றோம்..... :o  :o  :o

மாவீரர் வாரத்தை அனுட்டிப்பதில் (observe) இருந்து மாவீரர் வாரத்தைக் கொண்டாடுவதுவரை ??????(celebrate) முன்னேறிய தமிழ்த் தேசியவாதிகள், 

இந்த வரிகளை உங்கள் இடம் இருந்து எதிர் பார்க்கவில்லை கிருபன் அண்ணா .

  • கருத்துக்கள உறவுகள்

இந்த வரிகளை உங்கள் இடம் இருந்து எதிர் பார்க்கவில்லை கிருபன் அண்ணா .

தமிழ்நெற்றில் இருந்ததைத்தான் தமிழ்ப்படுத்தியிருந்தேன்.

mark - நினைவுகொள்ளல்,

observe - அனுஷ்டித்தல்

celebrate - கொண்டாடுதல்

98 இல் வந்த செய்தி இப்படி இருக்கின்றது.

Great Heroes' Day celebrations in Vanni

[TamilNet, Friday, 27 November 1998, 18:02 GMT]

Velupillai Prabakaran leader of Liberation Tigers of Tamil Ealam saluted the slain heroes of the movement in the Vanni ceremony marking the Maaveerar's Day, the VoT said.

The radio said that he lighted the traditional oil lamp at 6.07 pm. the Vanni time today after the salutation at 6.06pm. (The time in the Vanni region is half an hour late from the time of the army controlled area of the country).

The field commanders and area leaders of the LTTE followed their leader Prabakaran and lighted the oil lamp in respect to their 13,233 slain heroes today, said sources in Vanni.

The traditional functions of the Maveerar of the LTTE were observed widely in Maveerar Thuyilum Illam (Cemeteries where the dead LTTE cadres were cremated and considered to be the holy place), camps of the LTTE, institutions, government and private sections, public places and houses all over the Vanni, the radio said.

The oil lamp was lighted at the same time widely by the field commanders and area leaders.

Special Commander of the Sea Tigers Soosai lighted the lamp at Mulliyawalai

Assistant Commander of the Sea Tigers Vaani at Alampil

Commander Col. Karunaa at Visvamadu

Commander Col.Theepan at Kanagapuram in Kilinochchi district

Commander Lt.Col.Vithusha at Thunukkai in Mankulam area

Commander(jsgjp) Veeman at Vannivilaankulam in Vavunikulam area

David at Poonagary in Mulankaavil area

Political wing Leader Karikaalan at Aandaankulam in Mannar district

Suthaakar at Pandivirichchaan

The Voice of Tiger said that the anti aircraft wing unit of the LTTE was deployed all over Vanni to give protection from the assumed attacks of the SLAF during the Maaveerar Celebrations to the tiger cadres and the public who witnessed the ceremony.

The radio added that the Air Tigers sprayed flowers from two air crafts of the LTTE flying low in the Vanni region over the Maveerar cemeteries and a large number of people witnessed the scene happily.

Sources said that this is the first time that LTTE has celebrated its Maaveerar's Day celebrations in a colourful way after withdrawing from Jaffna peninsula in 1995.

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=2389

  • கருத்துக்கள உறவுகள்

 

 

வைரவன்... அது சரி இந்த குத்தாட்டம் போடுவது பற்றி ... இது கொஞ்சம் ஓவரா தெரியல

"பொய் சொன்னாலும் ...பொருந்தச் சொல்லவேணும்" 

 

அண்ணர் கனடாவில் ஈழமுரசு நடத்திய

நிகழ்வுக்கு போயிட்டு வந்தனீர்களோ...................?

அல்லது போகாமல் வெறுமனே

ஊகத்தில் பதில் சொல்கின்றீகளோ?

அண்ணர் கனடாவில் ஈழமுரசு நடத்திய

நிகழ்வுக்கு போயிட்டு வந்தனீர்களோ...................?

அல்லது போகாமல் வெறுமனே

ஊகத்தில் பதில் சொல்கின்றீகளோ?

கனடாவில் ஈழமுரசு நடத்திய நிகழ்வில் நடனம் இடம்பெற்றிருந்தது. நடனத்துக்கும் குத்தாட்டத்துக்கும் வித்தியாசம் தெரியாதா? கனடா பற்றி கதைக்க வேறு திரி ஆரம்பியுங்கள். லண்டன் திரிக்குள் செருகாமல்.

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு கன பேர் தலைவர் பிரபாகரன் அவர்களின்

பிறந்த தினத்தினை கொண்டாடுவதை நாங்கள்

துரோகத்தனத்துடன் எதிர்க்கின்றம் என்று அழுகினம்

அவர்களுக்காக....எழுதுகின்றேன் மீண்டும்

 

இங்கு இரண்டு விடயங்கள்

 

முதலாவது

 

ஒன்று முந்தி நிலமும், மக்களும் எங்களுக்கு

என்று இருக்கும் போது,

விடுதலைப் போராட்டம்

வீறு கொண்டு நடக்கும் போது

நிகழ்ந்தவை

 

போராளிகள் மக்களுக்கு அருகருகே

வீரத்துடன் வாழ்ந்து கொண்டிருந்த

காலகட்டத்தில் போர் எழுச்சி காலத்தில்

நிகழ்ந்தவை

 

ஆனால் இன்று

 

எந்த மக்களுக்காக போராடினார்களோ

அம் மக்கள் துப்பாக்கி குழழ்களின்

அடுத்த முனையில் பலியிடப்பட காத்திருக்கையில்

 

அளப்பரிய தியாயங்கள் புரிந்து

மாவீரர்களானார்களின் வித்துடல்கள்

உழுதுபப்பட்டும் எலும்புகளும் வீதி எங்கும்

வீசப்பட்டும் இருக்கும் கால கட்டத்தில்

 

போரின் வலி சுமந்தவ மக்கள்

அரசியல் இராணுவ ரீதியில்

அநாதைகளாக்கப்பட்ட சூழலில்

 

முன்னால் போராளிகளில் வீதிகளில் கடலை வித்தும்

உடலை வித்தும் ஊர் மக்களாலேயே ஒதுக்கப்பட்டு

வாழ்விழந்து போயிருக்கும்

நேரத்தில்

 

இன்று பட்டாசு கொளுத்தி, கேக் வெட்டி, குத்தாட்டம் போட்டு கொண்டாடுகின்றனர்

 

போர் நிகழ்ந்த பூமி விடுதலை ஆகாமல் அடிமைக்குள்ளாகி

அநாதையாகிய இன்று கொண்டாடுவதும்

அன்று கொண்டாடுவதும்

ஒன்றா.....................?

 

இரண்டாவது

 

மாவீர்ர் வாரம் என்பது வெறுமனே 3 நாட்கள் மட்டும்

அனுட்டிக்கும் வாரம்

ஆரம்பத்டில் 7 நாட்களாக இருந்து பின் 3 நாட்களாக

குறைக்கப்பட்ட 'வாரம்'

 

இம் மூன்றே மூன்று நாட்களில்

எந்த ஒரு கொண்டாட்டங்களிலும்

வைபவங்களிலும்

ஈடுபடாமல்

களிப்பேற்றும் நிகழ்வுகளில்

கலந்து கொள்ளாமல்

இருக்க முடியாத ஒரு இனமா நாங்கள்?

 

இயற்கையின் விதியாக தலைவரின் பிறந்த நாளும்

இதன் இடையில் வருவதால் மட்டும்

இம் மூன்று நாட்களில் ஒரு நாள்

கொண்டாட்ட தினமாக மாற்றுவது சரியா

 

எனக்கு தெரிந்து விரதம் இருந்து'

கார்த்திகை மாதம் முழுதுமே

எந்த ஒரு நிகழ்விலும்

பங்கு கொள்ள மனம் விரும்பாத

பல தமிழர்கள் உண்டு

பொழுது போக்கு அம்சங்களை

கூடியவரைக்கும் புறக்கணிக்கும்

மாவீரர்களின் பெற்றோர்கள் உண்டு

 

 

இன்றும் மனசு முழுதும் மாவிரர்களுக்காக ஏங்கும்

தம்ழர்கள் உண்டு

ஆனால் தமிழ் தேசியத்தினை

தம் உழைப்புக்காகவும், போராட்டத்தினை

காசு பார்க்கும் விடயமாகவும் பாவித்து பழகி

போனவர்களின் கூட்டம் புலம்பெயர் தேசம் எங்கும் இருக்கின்றது

 

கடந்த பல வருடங்களாக தமிழ் தேசியத்தினை சாட்டி வயிறு வளர்த்த

இவ் கூட்டங்கள் தான் இத்தகையை கொண்டாட்டங்களை

மாவீர்ர் வாரத்திலும் நிகழ்த்தி தம் இருப்பை பேணுகின்றது

 

இவர்கள் மக்களால் புறக்கணிக்கப்படும் காலம் விரைவில் வரும்

 

 

 

 

 

 

 


கனடாவில் ஈழமுரசு நடத்திய நிகழ்வில் நடனம் இடம்பெற்றிருந்தது. நடனத்துக்கும் குத்தாட்டத்துக்கும் வித்தியாசம் தெரியாதா? கனடா பற்றி கதைக்க வேறு திரி ஆரம்பியுங்கள். லண்டன் திரிக்குள் செருகாமல்.

 

கருத்துக் கணிப்பு திரியில்

லண்டன் நிகழ்வு பற்றி நான் எழுதியதை

குறிப்பிடும் போது மட்டும்

உமது அறிவு எங்கு போனது காணும்?


அப்ப நான் வரட்டா...

இங்கு கன பேர் தலைவர் பிரபாகரன் அவர்களின்

பிறந்த தினத்தினை கொண்டாடுவதை நாங்கள்

துரோகத்தனத்துடன் எதிர்க்கின்றம் என்று அழுகினம்

அவர்களுக்காக....எழுதுகின்றேன் மீண்டும்

இங்கு இரண்டு விடயங்கள்

முதலாவது

ஒன்று முந்தி நிலமும், மக்களும் எங்களுக்கு

என்று இருக்கும் போது,

விடுதலைப் போராட்டம்

வீறு கொண்டு நடக்கும் போது

நிகழ்ந்தவை

போராளிகள் மக்களுக்கு அருகருகே

வீரத்துடன் வாழ்ந்து கொண்டிருந்த

காலகட்டத்தில் போர் எழுச்சி காலத்தில்

நிகழ்ந்தவை

ஆனால் இன்று

எந்த மக்களுக்காக போராடினார்களோ

அம் மக்கள் துப்பாக்கி குழழ்களின்

அடுத்த முனையில் பலியிடப்பட காத்திருக்கையில்

அளப்பரிய தியாயங்கள் புரிந்து

மாவீரர்களானார்களின் வித்துடல்கள்

உழுதுபப்பட்டும் எலும்புகளும் வீதி எங்கும்

வீசப்பட்டும் இருக்கும் கால கட்டத்தில்

போரின் வலி சுமந்தவ மக்கள்

அரசியல் இராணுவ ரீதியில்

அநாதைகளாக்கப்பட்ட சூழலில்

முன்னால் போராளிகளில் வீதிகளில் கடலை வித்தும்

உடலை வித்தும் ஊர் மக்களாலேயே ஒதுக்கப்பட்டு

வாழ்விழந்து போயிருக்கும்

நேரத்தில்

இன்று பட்டாசு கொளுத்தி, கேக் வெட்டி, குத்தாட்டம் போட்டு கொண்டாடுகின்றனர்

போர் நிகழ்ந்த பூமி விடுதலை ஆகாமல் அடிமைக்குள்ளாகி

அநாதையாகிய இன்று கொண்டாடுவதும்

அன்று கொண்டாடுவதும்

ஒன்றா.....................?

இரண்டாவது

மாவீர்ர் வாரம் என்பது வெறுமனே 3 நாட்கள் மட்டும்

அனுட்டிக்கும் வாரம்

ஆரம்பத்டில் 7 நாட்களாக இருந்து பின் 3 நாட்களாக

குறைக்கப்பட்ட 'வாரம்'

இம் மூன்றே மூன்று நாட்களில்

எந்த ஒரு கொண்டாட்டங்களிலும்

வைபவங்களிலும்

ஈடுபடாமல்

களிப்பேற்றும் நிகழ்வுகளில்

கலந்து கொள்ளாமல்

இருக்க முடியாத ஒரு இனமா நாங்கள்?

இயற்கையின் விதியாக தலைவரின் பிறந்த நாளும்

இதன் இடையில் வருவதால் மட்டும்

இம் மூன்று நாட்களில் ஒரு நாள்

கொண்டாட்ட தினமாக மாற்றுவது சரியா

எனக்கு தெரிந்து விரதம் இருந்து'

கார்த்திகை மாதம் முழுதுமே

எந்த ஒரு நிகழ்விலும்

பங்கு கொள்ள மனம் விரும்பாத

பல தமிழர்கள் உண்டு

பொழுது போக்கு அம்சங்களை

கூடியவரைக்கும் புறக்கணிக்கும்

மாவீரர்களின் பெற்றோர்கள் உண்டு

இன்றும் மனசு முழுதும் மாவிரர்களுக்காக ஏங்கும்

தம்ழர்கள் உண்டு

ஆனால் தமிழ் தேசியத்தினை

தம் உழைப்புக்காகவும், போராட்டத்தினை

காசு பார்க்கும் விடயமாகவும் பாவித்து பழகி

போனவர்களின் கூட்டம் புலம்பெயர் தேசம் எங்கும் இருக்கின்றது

கடந்த பல வருடங்களாக தமிழ் தேசியத்தினை சாட்டி வயிறு வளர்த்த

இவ் கூட்டங்கள் தான் இத்தகையை கொண்டாட்டங்களை

மாவீர்ர் வாரத்திலும் நிகழ்த்தி தம் இருப்பை பேணுகின்றது

இவர்கள் மக்களால் புறக்கணிக்கப்படும் காலம் விரைவில் வரும்

கருத்துக் கணிப்பு திரியில்

லண்டன் நிகழ்வு பற்றி நான் எழுதியதை

குறிப்பிடும் போது மட்டும்

உமது அறிவு எங்கு போனது காணும்?

அப்ப நான் வரட்டா...

இத்திரியில் உங்கள் முதல் பதிவில் முதல் நாள் கொண்டாட்டம் அடுத்தநாள் கண்ணீர் அஞ்சலி என்று செய்வது உலகில் வேறு எந்த இனத்திலும் நடக்காது என்று பொதுவாக குற்றம் சாட்டி எழுதியிருந்தீர்கள். அது தலைவரின் பிறந்தநாள் கொண்டாடப்படுவதற்கு எதிர்ப்பு என்றே அர்த்தம் தரும். அதற்கு உதவிக்கு 2009 அவலங்களை இழுத்தீர்கள்.

சூசை அவர்கள் கொண்டாடியதை நான் இணைத்ததும் பதில் கூற முடியாமல் "முன்னர் கொண்டாடினால் தவறில்லை. 2009 இன் பின் கொண்டாடினால் தான் தவறு" என்று கதையை மாற்றுகிறீர்கள்.

இப்போதைய உங்கள் கதைக்கு பதிலளிப்பதானால்,

2009 க்கு முன்னர் இறந்தவர்களின் உயிர் உயிர் இல்லையோ? அதென்ன முன்னர் கொண்டாடலாம் இப்பொழுது கொண்டாடக்கூடாது?

நான் எனது பிறந்தநாள் கூட கொண்டாடுவதில்லை. அதே நேரம் தலைவரின் பிறந்தநாள் கொண்டாடப்படுவதற்கு எதிர்ப்பு இல்லை. ஏனென்றால் இரண்டிற்கும் உள்ள வித்தியாசத்தை புரிந்து கொண்டவள்.

கருத்துக்கணிப்பு திரியில் பொதுவில் நிர்வாகத்துக்கு பதில் எழுதிய போது ரதி அக்கா இந்த திரியை சுட்டிக்காட்டி கேள்வி கேட்டிருந்தார். அவருக்கு பதிலளிப்பதற்கு உங்கள் கருத்தை சுட்டிக்காட்டியிருந்தேன்.

Edited by துளசி

  • கருத்துக்கள உறவுகள்

கிருபன்,

நீங்கள் சொல்வது சரியே. லெப். சங்கரின் சாவுக்குப்பிறகு பிரபா ஒரு போதும் பிறந்தநாள் கொண்டாடியதில்லை.

இதற்க்கான ஆதாரம் "விடுதலைத் தீப்பொறி" எனும் நிதர்சனம் வெளியீட்டில் வந்த வீடியோ சஞ்சீகையில் இருக்கிறது.

இது முன்பு ஒளிவீச்சில் பகுதி பகுதியாக வந்து, சமாதான காலத்தில் தனி சீடியாக வந்தது. அதில் சங்கர் தன் மடியில் உயிர் விட்டது பற்றியும், அதன் பின் தான் மெளனவிரதம் இருப்பது பற்றியும், பிறந்தநாள் கொண்டாடாமை பற்றியும் பிரபாவே தன் வாயால் கூறியுள்ளார்.

ஆனால் சிறிய அளவில் அண்ணைமார் டொபி குடுப்பதோடு நிண்ட பிறந்தநாள் கொண்டாட்டங்கள் - ஜெயசிக்குறு முடிவின் பின் ஓரளவுக்கு எடுப்பில் கொண்டாடப் பட்டன என்பது உண்மையே. ஆனால் பிரபா இதில் எதிலும் கலந்து கொண்டதாய் எனக்குத்தெரியாது.

இப்போ மட்டுமில்லை அப்போதும் பிறந்தநாளை கொண்டாடியவர்கள் ஒவ்வொரு காரணத்துக்காக கொண்டாடினார்கள். சூசை போன்ற விசுவாசிகள் கண்மூடித்தனமான விசுவாசத்திலும் மேலும் சிலர் காக்காய் பிடிக்கவும் கொண்டாடினார்கள்.

நிச்சயமாய் அன்றும், இன்றும் (இருந்தால்) இது பிரபாவை தர்மசங்கடத்தில்தான் ஆழ்த்தியிருக்கும். என்ன செய்வது என்று விட்டிருப்பார் என்றே நினைக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

கோஷன் ஷே...
பிறந்தநாளை கொண்டாடியவர்களின் மனவோட்டம் இப்படியும் கூட இருக்கலாமே ...

  • அவரின் வீரம் சொரிந்த போராட்டம்
  • அவரின் உறுதி குலையாத கொள்கை
  • அவரின் தியாக உணர்வு
  • அவர் சக போராளிகள் மேல் கொண்டிருந்த நம்பிக்கை, பாசம்
  • அவரின் ஓர்மம், திட்டமிடல், நேர்மை 
  • நாதியில்லாமல் கிடந்த தமிழ் இனத்தை உலகறிய செய்த வள்ளமை
  • பெண் அடிமை, சாதியம், குற்ற ஒழிப்பு போன்றவற்றை நிலை நாட்டியமை
  • போலீஸ், ராணுவம்,  ,கடல் படை, விமானப்படை, பிராங்கிப்படை, நீதித்துறை, மருத்துவத்துறை போன்றன எமக்குள்ளே உருவாக்கியமை,
  • தமிழரை துச்சமாக மதித்து ஓட ஓட விரட்டிய சிங்களவரை.. நாடுகள் பூராவும் ஓட ஓட வைத்து உதவி கேட்டு ஒப்பாரி வைக்கப் பண்ணியமை...
  • தியாகம் என்ற சொல்லுக்கு புதிய பரிணாமத்தை கொடுத்தமை...
  • இதெல்லாம் விடுங்க இன்று நீங்களும் நானும் தமிழ் மேல், தமிழ் இனத்தின் விடிவு மேல் பற்று  கொண்டு உரையடுகிரோமே ....

இப்படி எத்தனையோ காரண காரியங்களுக்காக அவரின் பிறந்த நாளை மனதார கொண்டாடலாம்.

மேலே நான் எழுதியது என் மண்டைக்குள் இந்த 2 நிமிடங்களில் வந்த விடயங்கள் மட்டுமே.... இன்னும் எவ்வளவு எழுதலாம்.

 

நீங்கள் எதுக்கு சார்
"விசுவாசிகள் கண்மூடித்தனமான விசுவாசத்திலும் மேலும் சிலர் காக்காய் பிடிக்கவும் கொண்டாடினார்கள்" என்று மட்டும் நினைகிறீர்கள்.

(அப்படியானவர்கள்  இருக்கவில்லை என்பது என் வாதம் அல்ல.) Think positive
 

Edited by Sasi_varnam

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அவருக்கு என்று ஒரு நினைவு நாள் வரும் வரை பிறந்த நாளை கொண்டாடுவோம் ... பிறகு மிச்சதுததை பார்ப்போம்

  • கருத்துக்கள உறவுகள்

????????????????

ரதி அக்கா, நான் தலைவரின் பிறந்தநாள் கொண்டாட்டத்துக்கு சென்றேன் என்றோ செல்லவில்லை என்றோ இத்திரியில் கருத்து கூறியிருக்கவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் குற்றம் சாட்டிய நாடுகடந்த தமிழீழ அரசாங்க உறுப்பினர் வெறும் வேடமிடுகிறார் என்று கூறினீர்கள்.

அதே முள்ளிவாய்க்கால் தினத்தில் பல கோரிக்கைகளை முன்வைத்து கையொப்பம் வாங்கியதை, அதை பின்னர் டேவிட் கமரூனின் அலுவலகத்தில் சமர்ப்பித்ததை ஏன் நீங்கள் எழுதவில்லை.

அதே போல் அவர் பலவற்றை செய்த ஆதாரம் அவர் முகநூலிலேயே உள்ளது. இங்கு நின்று புலம்பாமல் போய் பாருங்கள்.

இந்தத் திரியில் இனி எதை எழுதினாலும் வெறும் இரைச்சலாகத்தான் இருக்கும். என்றாலும்...

அதே முள்ளிவாய்க்கால் தினத்தன்று என்ன நடந்தது என்பதை யாழில் அலசி ஆராய்து உலர்த்திக் காயப்போட்டிருந்தார்கள். கவனிக்கவில்லையாக்கும்.

http://www.yarl.com/forum3/index.php?/topic/140241-லண்டனில்-may-18-தினத்தன்று-மக்களின்/

நானும் போயிருந்ததால் ஒரு பதிவை வைத்திருந்தேன்.

http://www.yarl.com/forum3/index.php?/topic/140241-லண்டனில்-may-18-தினத்தன்று-மக்களின்/?p=1011792

எனக்கு அண்மையாக நின்றிருந்த அம்மணி ஒருவரிடம் ஏதோ படிவத்தை நீட்டி நிரப்புமாறு கேட்டபோது அந்த அம்மணி வணங்காமண் கப்பலுக்கு எனச் சேர்த்த நிதியைப் பற்றியும் கப்பலை அனுப்பியதைப் பற்றியதும் பற்றி வாங்குவாங்கென்று வாங்கினர். வந்த பெரியவர் தான் 78 இலேயே இலண்டனுக்கு வந்துவிட்டேன் என்றும் தமிழர்களுக்குச் சேவை செய்வதற்கு இப்படியெல்லாம் கேட்கவேண்டி இருக்கின்றதே என்று அழாக்குறையாகச் சொல்லி வேறு எவரிடமும் படிவங்களை நீட்டாமல் சென்றுவிட்டார்.

சரி. அப்பால் போவோம் என்று படிகளில் மேல் ஏறினால் ஐரோப்பிய பாராளுமன்றத் தேர்தலுக்கு தனக்கு வாக்களிக்கும்படி புன்சிரிப்புடன் வளைய வந்துகொண்டிருந்தார் கோர்ட்டுப் போட்டிருந்தவர். இளைஞர்களுடன் சேர்ந்து படம் எடுப்பதிலும் தனது தேர்தல் பிரச்சாரத்திலும் அவருக்குக் கவனம் இருந்ததேயொழிய முள்ளிவாய்க்கால் துயரத்தினை நினைவு கூர்வதில் அக்கறை எதுவும் இருக்கவில்லை.

அந்தத் திரியில் நான் குறிப்பிட்ட மாதிரி அந்த நிகழ்வுதான் நான் கடைசியாகப் போன தமிழர்களின் போராட்டம் சம்பந்தமான பொது நிகழ்வு. அந்த வகையில் கோர்ட்டுப் போட்டவருக்கும் கொடி பிடிக்கவேண்டும் என்று சண்டை போட்டவர்களுக்கும் நன்றிகள் பல கோடி உரித்தாகட்டும்.

தேர்தல் நடத்தக் கூட வக்கற்ற நா.க.த அரசு ஒரு சிலரை குடும்பமாகவே அங்கத்துவர்களாகக் கொண்டுள்ளார்கள். அவர்கள் தமிழர்களின் தலையைச் சிரைத்து மொட்டையடிப்பதைத் தவிர வேறு எதுவும் செய்யமாட்டார்கள் (ஸ்கைப்பில் சாற்றிங் செய்வதைத் தவிர!)

நன்றி. வணக்கம்.

  • கருத்துக்கள உறவுகள்

ரதி அக்கா, நான் தலைவரின் பிறந்தநாள் கொண்டாட்டத்துக்கு சென்றேன் என்றோ செல்லவில்லை என்றோ இத்திரியில் கருத்து கூறியிருக்கவில்லை.

துளசி நான் உங்கள் கருத்தை மேற் கோள் காட்டி எழுதவில்லை.நீங்கள் போகவிலை என்டால் விசுகு அண்ணா ஏன் அப்படி எழுத வேண்டும்?...அதை நீங்கள் ஏன் சுட்டிக் காட்டவில்லை?

துளசி நான் உங்கள் கருத்தை மேற் கோள் காட்டி எழுதவில்லை.நீங்கள் போகவிலை என்டால் விசுகு அண்ணா ஏன் அப்படி எழுத வேண்டும்?...அதை நீங்கள் ஏன் சுட்டிக் காட்டவில்லை?

இப்பொழுது கூட நான் போனேன் என்றோ போகவில்லை என்றோ கூறவில்லை. :)

இதற்கு தான் சொல்வது. தெரியாத விடையத்தை பற்றி கதைக்க கூடாது என்று.

நான் பிறந்தநாள் நிகழ்விற்கு சென்றேனா இல்லையா என்பது யாழில் யாருக்கும் தெரிய வேண்டியதில்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.