Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மைத்திரி எனது நண்பர், எங்களின் தவறுகாரணமாகவே நாங்கள் அவரை இழந்தோம் - கோத்தபாய

Featured Replies

இப்படியே போனால் நாங்கள் வீதியில் இறங்கமுடியாத நிலைவரும், நாங்கள் வெளிநாட்டிற்கும் செல்ல முடியாது, கடலில்தான் குதிக்க வேண்டும் குளோபல்தமிழ்ச்செய்தியாளர் கொழும்பு

gothapaya4_CI.jpg

மைத்திரி எனது நண்பர், எங்களின் தவறுகாரணமாகவே நாங்கள் அவரை இழந்தோம்; என பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச கவலை வெளியிட்டுள்ளார்.

மாத்தறை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சாகலரட்ணாயக்கவின் சகோதரர் கவின் ரட்ணயாக்காவின் கொழும்பு 7 இல்லத்திற்கு சென்று தனது மனக்குமுறலை அவர் வெளியிட்டுள்ளார்.

ஜனாதிபதி எவருடைய ஆலோசனையையும் ஏற்க மறுக்கிறார், நானும் அண்ணன் சமலும் சில நாட்களுக்கு முன்னர் அவரது வீட்டிற்கு சென்று அனைத்தையும் தெளிவுபடுத்தினோம், அவ்வேளை அவர் அதற்கு இணங்கினார், ஆனால் பின்னர் வேறு மாதிரி செயற்படுகின்றார்,

இப்படியே போனால் நாங்கள் வீதியில் இறங்கமுடியாத நிலைவரும், நாங்கள் வெளிநாட்டிற்கும் செல்ல முடியாது, கடலில்தான் குதிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார் கோத்தபாய,

பசிலும், நாமலும் அனைத்தையும் குழப்பகரமானதாக மாற்றியுள்ளனர். ஜனாதிபதியின் பிரச்சார பொறுப்பு அவரது புதல்வர்களான யோசித மற்றும், ரோகிதவுடம் வழங்கப்பட்டுள்ளது. அவர்களுடைய பணிகளில் ஓருங்கினைப்பு  இல்லை,

நான் மைத்திரியின் நண்பன் என்பதால் அவர்கள் என்னையும் சந்தேகப்படுகின்றனர். ஜனாதிபதி வெளிநாட்டிற்கு செல்லும் வரை காத்திருந்திருந்து விட்டு நான் மைத்திரியுடன் இணைந்து புறக்கோட்டையின் மிதக்கும் சந்தைதொகுதியை திறந்துவைத்ததாக அமைச்சர்கள் எனக்கு எதிராக ஜனாதிபதியிடம் கதைவிடுகின்றனர்.

மைத்திரி எனது நண்பர், எங்களின் தவறுகாரணமாகவே நாங்கள் அவரை இழந்தோம்,அவரை குற்றம்சொல்வதில் அர்த்தமில்லை, இந்த தவறை திருத்தாவிட்டால் எங்கள் கதை முடிவிற்கு வந்துவிடும் எனவும் கோத்தா தெரிவித்துள்ளார்.

இதன்பின்னர் கவின் அவரை சமாதானப்படுத்த முயன்றதாகவும், சிலநிமிடங்கள் அமைதியாக இருந்த பின்னர் கோத்தபாய அங்கிருந்து வெளியேறியதாகவும் தெரியவருகின்றது. இது பாரிய மாற்றமொன்றின் ஆரம்பமாக இருக்கலாம் என அரசியல்வட்டாரங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

Edited by Athavan CH

  • கருத்துக்கள உறவுகள்
இப்படியே போனால் நாங்கள் வீதியில் இறங்கமுடியாத நிலைவரும், நாங்கள் வெளிநாட்டிற்கும் செல்ல முடியாது, கடலில்தான் குதிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார் கோத்தபாய,

இதே நீங்கள் தான்.. 2009 இல்.. தமிழ் ஆண் கடலுக்கு..  தமிழ் பெண்கள் எமது இராணுவத்துக்கு என்று முழக்கியவர் என்பதையும் மறக்க வேண்டாம். இவர் கடலோடு அடிக்கடி உறவு கொண்டாடுறார். முடிவும் கடலுக்க தான் இருக்கப் போகுதோ என்னமோ..??! பார்த்து பிளேன்.. கப்பல்ல.. போறது கவனம். :icon_idea::lol:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியே போனால் நாங்கள் வீதியில் இறங்கமுடியாத நிலைவரும், நாங்கள் வெளிநாட்டிற்கும் செல்ல முடியாது, கடலில்தான் குதிக்க வேண்டும் குளோபல்தமிழ்ச்செய்தியாளர் கொழும்பு

gothapaya4_CI.jpg

மைத்திரி எனது நண்பர், எங்களின் தவறுகாரணமாகவே நாங்கள் அவரை இழந்தோம்; என பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச கவலை வெளியிட்டுள்ளார்.

மாத்தறை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சாகலரட்ணாயக்கவின் சகோதரர் கவின் ரட்ணயாக்காவின் கொழும்பு 7 இல்லத்திற்கு சென்று தனது மனக்குமுறலை அவர் வெளியிட்டுள்ளார்.

ஜனாதிபதி எவருடைய ஆலோசனையையும் ஏற்க மறுக்கிறார், நானும் அண்ணன் சமலும் சில நாட்களுக்கு முன்னர் அவரது வீட்டிற்கு சென்று அனைத்தையும் தெளிவுபடுத்தினோம், அவ்வேளை அவர் அதற்கு இணங்கினார், ஆனால் பின்னர் வேறு மாதிரி செயற்படுகின்றார்,

இப்படியே போனால் நாங்கள் வீதியில் இறங்கமுடியாத நிலைவரும், நாங்கள் வெளிநாட்டிற்கும் செல்ல முடியாது, கடலில்தான் குதிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார் கோத்தபாய,

பசிலும், நாமலும் அனைத்தையும் குழப்பகரமானதாக மாற்றியுள்ளனர். ஜனாதிபதியின் பிரச்சார பொறுப்பு அவரது புதல்வர்களான யோசித மற்றும், ரோகிதவுடம் வழங்கப்பட்டுள்ளது. அவர்களுடைய பணிகளில் ஓருங்கினைப்பு  இல்லை,

நான் மைத்திரியின் நண்பன் என்பதால் அவர்கள் என்னையும் சந்தேகப்படுகின்றனர். ஜனாதிபதி வெளிநாட்டிற்கு செல்லும் வரை காத்திருந்திருந்து விட்டு நான் மைத்திரியுடன் இணைந்து புறக்கோட்டையின் மிதக்கும் சந்தைதொகுதியை திறந்துவைத்ததாக அமைச்சர்கள் எனக்கு எதிராக ஜனாதிபதியிடம் கதைவிடுகின்றனர்.

மைத்திரி எனது நண்பர், எங்களின் தவறுகாரணமாகவே நாங்கள் அவரை இழந்தோம்,அவரை குற்றம்சொல்வதில் அர்த்தமில்லை, இந்த தவறை திருத்தாவிட்டால் எங்கள் கதை முடிவிற்கு வந்துவிடும் எனவும் கோத்தா தெரிவித்துள்ளார்.

இதன்பின்னர் கவின் அவரை சமாதானப்படுத்த முயன்றதாகவும், சிலநிமிடங்கள் அமைதியாக இருந்த பின்னர் கோத்தபாய அங்கிருந்து வெளியேறியதாகவும் தெரியவருகின்றது. இது பாரிய மாற்றமொன்றின் ஆரம்பமாக இருக்கலாம் என அரசியல்வட்டாரங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

இந்தாளுக்கு  தானூம் நண்பரின் கட்சியில் சேரும் எண்ணமோ ?

  • கருத்துக்கள உறவுகள்

இந்த கடலுக்குள் குதிக்கும் கதை கெமுனு சொன்னதாக சொல்லப்படும் இனவாதக் கதை. அதை இவர் இங்கு குறிப்பிடுவது யோசிக்க வைக்கிறது. கெமுனுவைப் போலே அதிகாரம் இவரது கைக்குள் வரலாம். :o

எது எப்படி இருந்தாலும், இவருக்கு இவரது அண்ணனுடன் பிணக்கு என்பதை நான் நம்பமாட்டன்.. :D

  • கருத்துக்கள உறவுகள்

எது எப்படி இருந்தாலும், இவருக்கு இவரது அண்ணன்களுடன் பிணக்கு என்பதை நானும்  நம்பமாட்டன்..  :D 

கதை, வசனம், மொழியாக்கம் சூப்பரோ சுப்பர்.

வாழ்க தமிழ் ஊடகம்.

  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் எத்தனை கூத்துக்கள்  அரங்கேறுமோ
எல்லாம் ராஜபக்ச குடும்பத்திற்கே வெளிச்சம் :D

  • கருத்துக்கள உறவுகள்

சூப்பர் கதை வசனம். இதை எழுதியவர் சினிமாவுக்கு கதை எழுதப் போகலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்த குடும்பத்துக்குள் குத்து வெட்டு என தமிழ் பத்திரிகைகள் சில வருடங்களாக எழுதி வருகின்றன.

  • கருத்துக்கள உறவுகள்

மைத்திரி, வென்று.... ஜனாதிபதி ஆகி விடுவார் என்று,
கோத்தா பயந்து போனார். அது தான்... இப்பவே... ஜஸ் வைக்கிறார்.mx%20(60).gif

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.