Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முல்லைப் பெரியாறு அணை: கேரளாவின் மனு சீராய்வு மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி

Featured Replies

ராஜவன்னியன் அவர்களே! வணக்கம்!!
எனக்கு தெரியாத சில விடயங்களுக்கு விடைதருகிறீர்களா?
முல்லைப்பெரியாறின் அணையின் நீர்மட்டத்தை உயர்த்துவதால் தமிழ்நாட்டிற்கு என்ன இலாபம்?
தமிழ்நாட்டு மக்களுக்காக பேசுவதற்க்கு தமிழ்நாட்டு அரசாங்கம் இருக்கிறதே?
 இந்நிலையில் மக்கள் போராட்டம் பிரச்சினையை இன்னும் சிக்கலுக்குள்ளாதாக்காதா?
இச்சிக்கலுக்கு சமையோசிதமாக தீர்வு காண முடியாதா?
இந்த நீர்த்தேகத்தின் மூலம் மின்சாரம் பெறப்படுகிறதா?
 
நன்றி
சிறிய புள்ளி
 
 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

ராஜவன்னியன் அவர்களே! வணக்கம்!!
எனக்கு தெரியாத சில விடயங்களுக்கு விடைதருகிறீர்களா?
முல்லைப்பெரியாறின் அணையின் நீர்மட்டத்தை உயர்த்துவதால் தமிழ்நாட்டிற்கு என்ன இலாபம்?
தமிழ்நாட்டு மக்களுக்காக பேசுவதற்க்கு தமிழ்நாட்டு அரசாங்கம் இருக்கிறதே?
 இந்நிலையில் மக்கள் போராட்டம் பிரச்சினையை இன்னும் சிக்கலுக்குள்ளாதாக்காதா?
இச்சிக்கலுக்கு சமையோசிதமாக தீர்வு காண முடியாதா?
இந்த நீர்த்தேகத்தின் மூலம் மின்சாரம் பெறப்படுகிறதா?
 
நன்றி
சிறிய புள்ளி

 

வணக்கம், சிறிய புள்ளி!

 

சிறிய புள்ளியாக வந்து பெரும் புள்ளி கேள்வி கேட்டுவிட்டீர்கள்..

 

யாழ் களத்தில் "முல்லைப் பெரியாறு அணை" பற்றி ஏற்கனவே விரிவான திரி உள்ளது.

 

இங்கே சென்றால் முழு விபரமும் உங்களுக்கு கிட்டும். தயவு செய்து படித்தறிக..! :)

 

 

முல்லைப் பெரியாறின் உண்மை

 

 

நன்றி!
  • கருத்துக்கள உறவுகள்
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

"The thickly populated taluks or sub-divisions of Idukki district having a large number of Tamil speaking population include Devikulam, Udumbanchola and Peerumade.

 

"In these three taluks, close to 70 percent are Tamil speaking people. In Tamil Nadu, water has always been politicized. Earlier, a series of agitations took place in both the states over the Mullaperiyar dam (in Idukki district) issue," Rajendran added.

 

Munnar, a famous tourist destination, is also located in Idukki district. Of the 1.1 million people in Idukki, 40 percent are Tamil speaking."

 

Zee News

  • கருத்துக்கள உறவுகள்

கோவிக்கவில்ல அம்மணி.

முல்லைப் பெரியாறு பிரச்சனை 1970 களிலிருந்தே இரு மாநிலங்களுக்கிடையே இருக்கிறது. அதே போன்று காவிரியாறு நதிநீர் பிரச்சனையும். மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது பூர்வீக தமிழர் நிலங்களை தமிழகம் இழந்து, அதை மீட்க நீதிக்கட்சி தலைவர்கள் போராடியபோதும் யாரம்மா ஈழத்திலிருந்து குரல் கொடுத்தது? இதன் வரலாற்று பின்னணியையாவது ஈழத்தமிழர்கள் அறிவார்களா?

முல்லைப் பெரியாறு அணை விவகாரம் மட்டுமல்ல, மலையகத் தமிழர் விவகாரத்திலும் ஈழத்தமிழர்கள் கண்டுகொள்ளவில்லையென்பதே வரலாறு.. இன்னும் சொல்லப்போனால் மலையகத் தமிழர்களுக்கு துரோகம் இழைத்து, அவர்களின் குடியுரிமையை பறிக்க துணை போனவர்கள் ஈழத்தலைகள்.

இந்திய சுதந்திரத்தின் முதல் பல வருடங்களாக தமிழகத்தின் எந்த பிரச்சனைகளிலும், ஈழத்தமிழர்கள் கண்டுகொண்டதுமில்லை, அக்கறையுமில்லை, குரல் கொடுத்ததுமில்லை!

'ஈழத்தமிழர்களும், சிங்களவர்களும், சகோதரர்கள் நாங்கள்' என்றே உங்கள் பலரின் மனநிலை முன்னர் இருந்தது. தனிச் சிங்களச் சட்டம், மற்றும் தரப்படுத்துதல் முறை வந்து தமிழர்களுக்கும், சிங்களவர்களுக்கும் முறுகுநிலை வந்தவுடன்தான் இனநலன் சார்ந்த அரசியலில், எங்களின் நினைப்பே உங்களுக்கு வந்தது என்பது கசப்பான உணமை.

இனப்பிரச்சனை மட்டும் இலங்கையில் இல்லையென்றால், தமிழ்நாட்டு தமிழர்களை நீங்கள் ஏறெடுத்தும் பார்க்க மாட்டீர்களென்பதையும் அறிவோம். அதற்கு மலையகத் தமிழர்கள் மற்றும் ஈழத்தமிழர்களின் சமூக/உறவு நிலையே நல்ல உதாரணம். :)

இவ்வளவிருந்தும் 1991 வரை ஈழத்தமிழர்களுக்கும், இயக்கங்களுக்கும் தமிழகத்தில் அளப்பரிய மரியாதையும், சிறு சிறு தவறுகள் இருந்தாலும் தமிழகம் அரவணைத்தே வந்துள்ளது.. அதன்பின் நடந்தவை துரதிஷ்டமானது.

டங்கு முன் பதிவில் சொன்ன மாதிரி, இருபுறமும் அவரவர் பிரச்சனைகளை முற்றிலும் அறிந்து ஒருவருக்கொருவர் ஆதரவுடன் இருந்தாலே தமிழ் இனத்தின் எதிர்காலம் சுபிட்சமாக இருக்கும்.

இதை புரிந்துகொள்ளுங்கள்.

நன்றி.

ஜயா முல்லைப் பெரியாறு பிரச்சனை 1970 களிலிருந்து இருந்து இருக்கலாம்.அதற்கு முதலில் தமிழகத்தில் உள்ள அனைத்து மக்களும்[தமிழரும்] ஒற்றுமையாக குரல் கொடுத்து இருக்க வேண்டும்.அந்த நேரத்தில் நீங்கள் கூப்பிட்டு நாங்கள் உதவிக்கு வரா விட்டால் தான் அது பெரிய பாதகமாய் இருந்திருக்கும்.நான் எழுத வேண்டியதை விசுகு அண்ணா எழுதியிட்டார் என்ட படியால் மிகுதியை தவிர்க்கிறேன்.நன்றி.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

"1956 இல் மொழிவழி மாநிலப் பிரிவினை நடந்தபோது, தமிழகத்தோடு இணைய வேண்டிய தேவிகுளம், பீர்மேடு, மூணாறு ஆகிய பகுதிகள் கேரளத்துடன் இணைக்கப்பட்டன. கேரளாவின் மொத்த வருவாயில் 10 சதவிகித வருமானம் தேவிகுளம், பீர்மேடு தேயிலைத் தோட்டங்களிலிருந்து கிடைப்பதால் மலையாளிகள் இம்மலைப்பகுதிகளை சூழ்ச்சியுடன் அபகரித்துக் கொண்டனர்.

 

இடுக்கி மாவட்டத்தில் 80 சதவிகித மக்கள் தமிழர்களாக இருப்பது கேரள அரசுக்கு ஆபத்து எனக் கருதிய கேரள முதல்வர் பட்டம் தாணுப்பிள்ளை, இன்று இலங்கையில் ராஜபக்சே செய்வது போல "குடியேற்றம்' என்ற நாடகத்தை அரங்கேற்றினார். அவர் முதல்வராக இருந்தபோது, தேவிகுளம், உடுமன்சேரி, பீர்மேடு, தொடுபுழா போன்ற பகுதிகளில் குற்றவாளிகளாக சிறைகளிலிருந்த மலையாளக் கைதிகளை விடுதலை செய்து தமிழர்கள் அதிகளவில் வசிக்கும் மேற்படி பகுதிகளில் குடியமரச் செய்தார். மலையாளிகளைக் குடியமரச் செய்து விட்டால் தேவி குளம், பீர்மேடு பகுதிகள் எந்தக் காரணத்தாலும் கேரளாவை விட்டு பிரிந்து செல்ல முடியாது என்பதை நோக்கமாகக் கொண்டே அவர் செயல்பட்டார்.

இப்போது தமிழர்களை அங்கிருந்து விரட்டினால் அது தேசியப் பிரச்சனையாக உருவெடுக்கும் என்று உணர்ந்த கேரள உயரதிகாரிகள் தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் தேசியப் பூங்காக்களையும், வன விலங்கு சரணாலயங்களையும் அமைத்துள்ளனர். இரவிகுளம் தேசியப் பூங்கா, ஆனைமுடி சோலை தேசியப் பூங்கா, பாம்படம் சோலை தேசியப் பூங்கா, மதிகெட்டான் சோலை தேசியப் பூங்கா, சின்னாறு வனவிலங்கு சரணாலயம், குறிஞ்சிமலை வனவிலங்கு சரணாலயம் என ஒரே தாலுகாவில் இவையனைத்தையும் அமைத்து, இப்பகுதிகளில் 100 ஆண்டுகளுக்கும் மேலாக உழைத்துவரும் தமிழர்களை இடுக்கி மாவட்டத்திலிருந்து வெளியேற்ற வேண்டும் என்ற முனைப்போடு மலையாளிகள் செயல்பட்டு வருகின்றனர்."

 

 

கீற்று இணையம்

 

 

தமிழகம் தான் அனைத்து விடுதலை போராளிகளுக்கும் அடைக்கலம் தந்தது ,பின்னர் இருக்க இடமும் கொடுத்து உண்ண உணவும் கொடுத்தது தமிழக மக்கள் தான் .தமிழக பட்டிதொட்டி எங்கும் பிரச்சார கூட்டம் வைத்து நிதி வேறு சேர்த்தோம் .ஈழதமிழன் என்று ஆட்டோகாரர்கள் பணம் வாங்க மறுத்த சம்பவங்களும் எனக்கே நடந்தது .திருப்பூரில் சேர்க்காத நிதியா ?

தமிழ் நாட்டில் அரசியல் ஆதரவு மக்கள் ஆதரவு இந்தியாவில் அரசியல் ஆதரவு எல்லாம் நிறைய இருந்தது .

எப்ப அவர்களது அரசியலுக்குள் நாங்கள் விழுந்தோமோ அல்லது அவர்கள் எங்களை தமது தேவைக்கு பாவிக்க தொடங்கினார்களோ அன்று தொடங்கியது அனைத்து பிரச்சனைகளும் .

அடுத்து டெலோவை புலிகள் அடிக்க வெளியில் தலையெடுக்க முடியாத நிலை .நானே பலரிடம் பேச்சு வாங்கினேன் .பிறகு இந்திய இராணுவத்துடன் மோதல் ,ராஜீவ் கொலை என்று அனைத்து ஆதரவிற்கும் அனுதாபத்திற்கும் ஆப்பு விழுந்தது .

அதன் பிறகு பதினைந்து வருடங்கள் எமது போராட்டம் தொடர்ந்தாலும் உடைந்த உறவை மீண்டும் ஒட்டமுடியவில்லை ,இதற்குள் காசு பார்க்கும் கூட்டம் ,தனது அரசியல் ஆதாயம் தேடும் கூட்டம் என்று எல்லாவாற்றையும் கலந்து கூவம் ஆக்கிவிட்டார்கள் .

2009 இல் கூட அதேதான் நடந்தது .ஒப்புக்கு சிலர் ஒப்பாரி வைத்தார்களே ஒழிய மனதளவில் நாங்கள் சொல்லும் "தொப்புள்கொடி உறவு " எம்மாலேயே தான் அறுக்கப்பட்டது தான் மிக சோக வரலாறு .

  • கருத்துக்கள உறவுகள்

அர்ஜுன் அண்ணா,

 

உங்கள் அளவிற்கு எனக்கு அரசியல் தெரியாது. ஆனால் மேலே நீங்கள் குறிப்பிட்ட தமிழகத்தில் புலியெதிர்ப்பு நிலைபற்றி நான் அறிந்ததை எழுதுகிறேன்.

 

முதலாவது, இந்தியா போராளிகளுக்கு தார்மீக ஆதரவும், ஆயுதமும், பயிற்சியும் கொடுத்ததென்பது. இது நடந்தது எல்லோருக்கும் தெரியும். நானும் அதை மறுக்கவில்லை. ஆனால், இவ்வாறு இந்தியா போராளிகளுக்கு பயிற்சி கொடுத்ததன் நோக்கம் உண்மையாகவே தமிழர்களுக்கென்று ஒரு தனிநாடு வேண்டும் என்கிற அக்கறையில்த்தான் என்று நீங்கள் நம்புகிறீர்களா? நான் அப்படி நம்பவில்லை, ஏனென்றால், தனது கட்டுக்குலிருந்து வெளியேறிச் செல்லும் சின்னம் சிறிய நாடான இலங்கையை தனது கட்டுக்குள் மீண்டும் கொண்டுவரவும், இலங்கையில் அப்போது தலையெடுக்கத் தொடங்கியிருந்த அமெரிக்க செல்வாக்கை முளையிலேயே கிள்ளியெறியவும்தான் இந்தியா இலங்கையில் தலையிட்டது என்று நாம் நம்புகிறேன். இந்தியாவின் செல்வாக்கு இலங்கையில் தொடர்ந்தும் இருக்கவேண்டுமென்றால், தமிழரின் பிரச்சினைக்கு தீர்வென்பது ஒருபோதுமே வரக்கூடாதென்று இந்தியா விரும்பியது. இலங்கையரசோ அல்லது தமிழ்ப் போராளிக் குழுக்களோ, இருவரில் எவருமே போரில் வெற்றிபெறக் கூடாதென்றுதான் இந்தியா விரும்பியது. ஆகவே தமிழர் பிரச்சினையில் கொதிசட்டியில் மூடியை மூடுவதுபோல தனது கைக்குள் வைத்திருக்கப் பார்த்தது இந்தியா. ஆகவேதான் தமிழருக்கென்று நீதியான தீர்வொன்று வருவதை இந்திய விரும்பவில்லை என்று நான் நினைக்கிறேன்.

Edited by ragunathan

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்தது தமிழக அரசியலில் எமது பிரச்சினை எந்தளவு தூரத்திற்கு பாவிக்கப்பட்டதென்பது,

 

எம்.ஜி. ராமச்சந்திரன் உண்மையாகவே புலிகளின் அபிமானியாக இருந்தவர். தனிப்பட்ட ரீதியில் புலிகளுக்கு உதவியவர். ஆனால் அவர்கூட ஈழப்பிரச்சினையில் அதிக அக்கறை எடுத்துக்கொண்டதன் காரணம், தமிழ்த்தேசியம் எனும் ஒரு ஆயுதத்தைப் பாவித்து தமிழகத்தில் தனது செல்வாக்கைத் தக்கவைத்துக்கொள்ளத்தான் என்று நினைக்கிறேன். ஆனால் அவர் அரசியலில் இருந்திருக்காவிட்டாலும்கூட புலிகளை ஆதரித்திருப்பார் என்பதில் எனக்கு அசைக்கமுடியாத நம்பிக்கையுண்டு.

  • கருத்துக்கள உறவுகள்

மூன்றாவது, தமிழ்ப் போராளிக் குழுக்களுக்கிடையிலான மோதல் என்பது,

 

அருஜுன் அண்ணா, தமிழ்ப் போராளிக் குழுச் சண்டைக்கும் இந்தியாவுக்கும் எந்தவித தொடர்புமில்லை என்று நீங்கள் நம்புகிறீர்களா?? அரசியல் கட்சி சார்பாகவும், மாநில, மத்திய அரசு சார்ந்தும் தனித்தனிப் போராளி இயக்கங்கள் இந்தியாவால் வளர்க்கப்பட்டன என்பதை ஏற்றுக்கொள்கிறீர்களா? எம்.ஜி. ஆர் புலிகளையும், கருணாநிதி டெலோவையும், இன்னும் வெறு அரச அமைப்புக்கள் இதர போராளிக் குழுக்களையும் வளர்த்தன என்பதை ஏற்றுக்கொள்கிறீர்களா??

 

இதற்கு மிகச் சிறந்த உதாரணம், 1987 இல் புலிகளுக்கும் இந்திய ராணூவத்துக்கும் போர் தொடங்கிய நாளில் இருந்து அவர்க்ள் 1990 ஏப்ரில் மாதத்தில் வெளியேறும்வரை புலிகளுக்கு எதிரான அனைத்துப் போராளிக்குழுக்களும் இந்திய ராணுவத்துடன் சேர்ந்தே வேலை செய்தனர் என்பதும், புலிகளுக்கெதிரான போரில் அவர்களை இந்திய மிகவும் திறமையாகப் பாவித்தது என்பது நீங்கள் அறியாதது அல்லவே.

 

அப்படியிருக்க இயக்க மோதல்களுக்கு இந்தியாதான் அடிப்படையில் காரணம் என்பதை நீங்கள் ஏற்றுக்கொள்வீர்களோ தெரியாது, ஆனால் நான் அப்படித்தான் நினைக்கிறேன்.

 

ஆனால் இந்தியா அப்படிச் செயற்படுவது தெரிந்தும் நாம் ஏன் பிரிந்து அடிபட்டோம் என்பது எம்மை நாமே கேட்கவேண்டிய கேள்வி.

 

 

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய ராணுவத்துடனான மோதல் என்பதில் இந்திய உளவுத்துறையின் பங்கென்ன என்பது உங்களுக்குத் தெரியாதது அல்ல. இலங்கை இந்திய ஒப்பந்தமென்பது எந்தளவு தூரத்திற்கு தமிழர்களின் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்திருந்ததென்பதும், ஒப்பந்தத்தில் ஒப்புக்கொள்ளப்பட்ட விடயங்களை நடைமுறைப் படுத்துவதில், புலிகளிடமிருந்து ஆயுதங்களைக் களைவதைத்தவிர மற்றைய விடயங்களை நடைமுறைப்படுத்துவதுபற்றி இந்தியா எவ்வளவு தூரத்திற்கு அக்கறையாக இருந்தது என்பதை ஒரு புலியெதிர்ப்பு வாதியாக இல்லாமல் நடுநிலை வகித்து சிந்தித்துப் பார்த்தீர்களென்றால் உங்களுக்குப் புரியும் என்று நம்புகிறேன்.

 

ஒப்பந்தம் செயலற்றுப் போவதற்கும், இந்தியாவுடனான போர் தொடங்குவதற்கும் இந்தியாவின் பங்கு எவ்வளவு இருந்ததோ, அதேயளவு பங்கு புலிகளின் செயற்பாடுகளின் மூலம் ஏற்பட்டதென்பதை நான் மறுக்கவில்லை. எல்லைக் கிராமங்கள் மீதான தாக்குதலும், பன்னிரு புலிகள் சயனைட் உட்கொண்டு மரணித்தபின்னர் அவர்கள் நடந்துகொண்ட விதமும் ஒப்பந்தத்தை செயலற்றதாக்க உதவின. ஆனால், கடலில் கைதுசெய்யப்பட்ட பன்னிரு புலிகளின் தளபதிகளையும் விடுவிக்க இந்தியா எவ்வளவு தூரத்திற்கு (அவர்கள் உயிரிழந்தால் நடக்கப்போகும் அசம்பாவிதங்களை நன்றாக உணர்ந்திருந்தும் கூட) இதய சுத்தியுடன் முயன்றது என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?

 

இப்படித் தனது பலத்தினாலேயே வலிந்து திணிக்கப்பட்ட ஒரு ஒப்பந்தத்தைக்கூட செயலாக்க முடியாத நிலையில் இந்திய செயற்பட்டது யாருடைய தவறு ? இதற்குப் புலிகளை மட்டும் குற்றம் சொல்வது என்ன நியாயம்? இந்தியாவின் பங்கிற்கு யாரைக் குற்றம் சொல்வது ?

யாருக்கு அரசியல் கூட தெரியும் என்று ஒன்று இல்லை .எல்லாம் அவரவர் கருத்துக்களும் நம்பிக்கையும் தான் .

இந்தியாவின் அரசியல் பற்றி அனைவரும் அறிந்ததுதான் .தனி நாடு என்ற பேச்சுக்கே அங்கு இடமில்லை .நானும் அந்த கனவில் போனவன் தான் ,போராட வந்த போராளிகளும் அந்த கனவில் வந்தவர்கள் தான் 

இந்தியா சென்றபின் தான் இந்தியா என்ற பிரமாண்ட அநியாயம் விளங்கியது .தமிழ் நாட்டுக்காரர்களுக்கே அங்கு எதுவும் புடுங்கமுடியாத நிலை .காங்கிரஸ் தலைமை தங்களை பார்த்து கையை காட்டினாலே அதை பெரியவிடயமாக நினைக்கும் அவர்களின் மனப்பாங்கு முழு உண்மையையும் சொல்லிவிட்டது .

அதை விட அனைத்து இயக்க தலைமைகளிடமும் தனி நாடு கனவிலும் இல்லை என்று உறுதியாக சொல்லிவிட்டார்கள் .அனைத்து இயக்கங்களும் இருப்பது இந்தியா பயிற்சி தருவது இந்தியா .இருபத்திநாலு மணி நேரத்தில் எல்லோரையும் கைது செய்து இலங்கைக்கு அனுப்பக்கூடிய சூழ்நிலை.எங்களை பகடைகாயக வைத்து தமது இந்து சமுத்திர பிராந்திய வல்லமையை நிலை நாட்ட நின்றார்கள் .

இதற்குள்தான் தான் எமது அரசியல் சாணக்கியம் இருக்கு .எமக்கு ஆதரவான பல பத்திரிகையாளர்கள் ,அரசியல்வாதிகள் பலர் எச்சரிக்கை வேறு செய்தார்கள் .பக்குவமாக இந்தியாவை பகைக்காமல் உங்கள் அரசியல் செய்து முடிந்த ஒரு தீர்வை முதலில் எடுங்கள் என்று .

அதை புரியாமல் விட்டதன் விளைவுதான் இன்று நடக்கும் அரசியல் .

குறிப்புகள் -

இந்தியா வெளிநாட்டு கொள்கையும்  றோவும் பெரியதொரு வலைப்பின்னல்  .நாங்கள் --- விட்டாலே மணந்துவிடுவார்கள்.உமா தனிப்பட எவ்வளவு கெட்டவராக இருந்தாலும் எமது போரட்டத்தை சர்வதேச அளவிற்கு கொண்டு போக முயற்சித்தார் .சில தொடர்புகளையும் ஏற்படுத்தினார் ஆயுதங்கள் வாங்கினார் .முதல் ஆப்பு அவருக்குத்தான் விழுந்தது .அதன் பின் எதுவும் வக்கிலாமல் பொய்யிற்கு இயக்கத்தை போட்டு இழுத்தார் .கருவில் அழித்தார்கள் .

பின்னர் இலங்கையை பணிய வைத்து ஒரு ஒப்பந்தம்.அதில் அவர்கள் நலம் தான் முதன்மை .ஆனால் அது சிங்களவனில் இருந்து எம்மை பாதுக்காப்பதர்காகான முதல் படி .இதையும் நாங்கள் சரியாக கையாளவில்லை சிங்களவன் அந்த மாதிரி கையாண்டு பயிற்சியும் ஆயுதமும் தந்தவர்களுடன் மோத வைத்து தனது சாணக்கியத்தை மீண்டும் நிரூபித்தான்.

இந்தியாவை கொண்டு சிங்களவனுக்கு அடிபோட்டிருக்கவேண்டும்  .அந்த கெட்டித்தனம் எமக்கு இல்லாமல் போய்விட்டது .

  • கருத்துக்கள உறவுகள்

ராஜீவின் மரணம் ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல. எமது போராட்டம் அழிக்கப்பட்டதற்கு இந்த ஒற்றைக் காரணமே பெரும் பங்காற்றியது என்பதை நான் நம்புகிறேன். ராஜீவ் ஈழத்தமிழர் விடயத்தில் எவ்வளவு கேவலமாகவும், தாந்தோன்றித்தனமாகவும் நடந்திருந்தாலும் கூட, அவர் கொல்லப்பட்டதை நியாயப்படுத்த முடியாது. கொல்லப்பட்ட 10,000 தமிழர்களுக்கும், 600 போராளிகளுக்கும், கூட்டுப் பாலியல் வல்லுறவுக்கு உடபடுத்தப்பட்ட ஆயிரக்கணக்கான தமிழ்த் தாய்மார்களுக்கும் நீதிகேட்டுப் பழிவாங்கலாகத்தான் புலிகள் அந்தக் கொலையை நடத்தியிருந்தாலும் கூட, அது நடந்திருக்கத்தேவையில்லை.

 

பொதுவாகவே மற்றைய மாநிலங்களைக் காட்டிலும் இந்தியத் தேசியவாதத்தின் மேல் அதிக நம்பிக்கை கொண்டுள்ள தமிழகத் தமிழர்களைப் பொறுத்தவரையில் தமது நம்பிக்கை நட்சத்திரமான ராஜீவ் கொல்லப்பட்டதை, அதுவும் தமிழகத்தில் வைத்தே கொல்லப்பட்டதை ஜீரணிக்கமுடியவில்லை என்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன். இதற்காக அவர்களை நாம் நோவதில் எந்தப் பயனுமில்லை.

 

இலங்கையில் தமிழர்களை சிங்களவர்கள் நடத்துவதை காட்டிலும் செல்வாக்குடனேயே தமிழகத்தமிழரை இந்தியா நடத்தி வந்தது, ஓரளவிற்கு சுயாதீனமான அட்சியை தமிழர்கள் அங்கே நடத்த முடிவதும், இந்தியா எனும் நாட்டை, அதன் தேசியத்தை தமிழகத் தமிழர்களால் நேசிதக்க முடிகிறதென்பதையும் நான் ஏற்றுக்கொள்கிறேன்.


யாருக்கு அரசியல் கூட தெரியும் என்று ஒன்று இல்லை .எல்லாம் அவரவர் கருத்துக்களும் நம்பிக்கையும் தான் .

இந்தியாவின் அரசியல் பற்றி அனைவரும் அறிந்ததுதான் .தனி நாடு என்ற பேச்சுக்கே அங்கு இடமில்லை .நானும் அந்த கனவில் போனவன் தான் ,போராட வந்த போராளிகளும் அந்த கனவில் வந்தவர்கள் தான் 

இந்தியா சென்றபின் தான் இந்தியா என்ற பிரமாண்ட அநியாயம் விளங்கியது .தமிழ் நாட்டுக்காரர்களுக்கே அங்கு எதுவும் புடுங்கமுடியாத நிலை .காங்கிரஸ் தலைமை தங்களை பார்த்து கையை காட்டினாலே அதை பெரியவிடயமாக நினைக்கும் அவர்களின் மனப்பாங்கு முழு உண்மையையும் சொல்லிவிட்டது .

அதை விட அனைத்து இயக்க தலைமைகளிடமும் தனி நாடு கனவிலும் இல்லை என்று உறுதியாக சொல்லிவிட்டார்கள் .அனைத்து இயக்கங்களும் இருப்பது இந்தியா பயிற்சி தருவது இந்தியா .இருபத்திநாலு மணி நேரத்தில் எல்லோரையும் கைது செய்து இலங்கைக்கு அனுப்பக்கூடிய சூழ்நிலை.எங்களை பகடைகாயக வைத்து தமது இந்து சமுத்திர பிராந்திய வல்லமையை நிலை நாட்ட நின்றார்கள் .

இதற்குள்தான் தான் எமது அரசியல் சாணக்கியம் இருக்கு .எமக்கு ஆதரவான பல பத்திரிகையாளர்கள் ,அரசியல்வாதிகள் பலர் எச்சரிக்கை வேறு செய்தார்கள் .பக்குவமாக இந்தியாவை பகைக்காமல் உங்கள் அரசியல் செய்து முடிந்த ஒரு தீர்வை முதலில் எடுங்கள் என்று .

அதை புரியாமல் விட்டதன் விளைவுதான் இன்று நடக்கும் அரசியல் .

குறிப்புகள் -

இந்தியா வெளிநாட்டு கொள்கையும்  றோவும் பெரியதொரு வலைப்பின்னல்  .நாங்கள் --- விட்டாலே மணந்துவிடுவார்கள்.உமா தனிப்பட எவ்வளவு கெட்டவராக இருந்தாலும் எமது போரட்டத்தை சர்வதேச அளவிற்கு கொண்டு போக முயற்சித்தார் .சில தொடர்புகளையும் ஏற்படுத்தினார் ஆயுதங்கள் வாங்கினார் .முதல் ஆப்பு அவருக்குத்தான் விழுந்தது .அதன் பின் எதுவும் வக்கிலாமல் பொய்யிற்கு இயக்கத்தை போட்டு இழுத்தார் .கருவில் அழித்தார்கள் .

பின்னர் இலங்கையை பணிய வைத்து ஒரு ஒப்பந்தம்.அதில் அவர்கள் நலம் தான் முதன்மை .ஆனால் அது சிங்களவனில் இருந்து எம்மை பாதுக்காப்பதர்காகான முதல் படி .இதையும் நாங்கள் சரியாக கையாளவில்லை சிங்களவன் அந்த மாதிரி கையாண்டு பயிற்சியும் ஆயுதமும் தந்தவர்களுடன் மோத வைத்து தனது சாணக்கியத்தை மீண்டும் நிரூபித்தான்.

இந்தியாவை கொண்டு சிங்களவனுக்கு அடிபோட்டிருக்கவேண்டும்  .அந்த கெட்டித்தனம் எமக்கு இல்லாமல் போய்விட்டது .

 

 

 

பச்சை  முடிந்துவிட்டது. முதல் தடவையாக வேறுபட்ட கோணத்தில் உங்களின் கருத்தைப் பார்க்கிறேன்.
 

ஆரம்பத்தில் புலிகளை இந்த அளவிற்கு வளர்த்துவிட்டது இந்தியாதான் .அனைத்து இயக்கங்களுக்கும் பயிற்சி கொடுத்தாலும் புலிகளுக்கு பயிற்சி கொடுத்ததை முடிந்தவரை மறைத்தே வைத்திருந்தார்கள் .அனுராதபுர தாக்குதல் நடந்த நேரம் நான் டெல்கியில் நின்றேன் .ஈபி சாந்தனையும் (லண்டன் ஆள்  இப்பவும் அங்குதான்  ) கேதீசையும்(புலிகளால் பல வருடங்களுக்கு பின்னர் கொழும்பில் கொல்லபட்டவர்) சந்தித்தேன் .

எமது அழிவின் ஆரம்பம் என்று சொன்னார்கள் .

முழு இயக்கங்களுடனும் தொடர்பில் இருந்த றோ சந்திரசேகரன் இன்னமும் உயிருடன் தான் இருக்கின்றார் . திம்பு பேச்சு வார்த்தை ஒழுங்கு செய்தது இவர்தான் .உண்மையில் என்ன நடந்தது என்று அவருக்கு தெரியும் .ஏன் இப்படி செய்தீர்கள் என்று அவரிடம் கேட்கலாம் ?

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.