Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கறுப்பி ரசித்த நகைச்சுவை

Featured Replies

ஏன் குரங்கு அடிக்கடி தலையை சொறியுது. ( ஆதிவாசி சார் யை நினைச்சுடாதீங்க)

யாராவது சொல்லுங்களன்

அக்கா அது முழுகவில்லையாம் கொஞ்ச நாள் சோ ஊத்தை கொஞ்சம் கூடி கடிக்குதாம அது தான் சொறிகிறது.

அத்துடன் பேனும் கூடிப்போச்சாம்

பிகு: இவை அனைத்தையும் எனக்கு சொன்னவர் ஆதி என்பதை அறியத் தருகின்றேன்

Edited by சந்தியா

  • Replies 265
  • Views 33.6k
  • Created
  • Last Reply

ஆங்கில ஆசிரியர் ஒருவர் வகுப்பில் Discover கும் Invention வேறுபாட்டை பின்வருமாறு விளக்கினார் அவர் அதனை விளக்கும் பொருட்டு கொலம்பஸ் Discovered America எனவும் கிரகம் பெல் Invented telephone எனவும் விளக்கினார் அதன் பின் ஒரு மாணவனை இவ்விரு வசங்களையும் வைத்து வசனம் இரண்டு அமைக்கும் படி வேண்டினார் அதற்கு அம் மாணவன் நான் ஒரு வசனத்தில் அமைக்கவா என கேட்டபோது அசிரியர் மிக்க சந்தோசத்தில் என்னைவிட என் மாணவன் இவ்வளவு புத்திசாலியாக இருகிறானே எங்க சொல்லு பாப்பம் என்றார் அதற்கு அம் மாணவன் my father discovered my mother and invented me என்றான்

ஆங்கில ஆசிரியர் ஒருவர் வகுப்பில் Discover கும் Invention வேறுபாட்டை பின்வருமாறு விளக்கினார் அவர் அதனை விளக்கும் பொருட்டு கொலம்பஸ் Discovered America எனவும் கிரகம் பெல் Invented telephone எனவும் விளக்கினார் அதன் பின் ஒரு மாணவனை இவ்விரு வசங்களையும் வைத்து வசனம் இரண்டு அமைக்கும் படி வேண்டினார் அதற்கு அம் மாணவன் நான் ஒரு வசனத்தில் அமைக்கவா என கேட்டபோது அசிரியர் மிக்க சந்தோசத்தில் என்னைவிட என் மாணவன் இவ்வளவு புத்திசாலியாக இருகிறானே எங்க சொல்லு பாப்பம் என்றார் அதற்கு அம் மாணவன் my father discovered my mother and invented me என்றான்

வாவ் ஈழவன் அண்ணா சூப்பர் ஜோக் :P :D:D:lol::lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அக்கா அது முழுகவில்லையாம் கொஞ்ச நாள் சோ ஊத்தை கொஞ்சம் கூடி கடிக்குதாம அது தான் சொறிகிறது.

அத்துடன் பேனும் கூடிப்போச்சாம்

பிகு: இவை அனைத்தையும் எனக்கு சொன்னவர் ஆதி என்பதை அறியத் தருகின்றேன்

அது எப்படி ஆதிவாசி சாருக்கு தெரியுமாம்

அது எப்படி ஆதிவாசி சாருக்கு தெரியுமாம்

அக்கா இப்படி குறுக்கு கேள்வி கேட்பீங்கள் என்று தெரிந்திருந்தால் நான் ஆயர் ஆகியிருக்க மாட்டேன் இந்தக் கேள்வியை ஆதியிடமே கேளுங்கள் :D:D:lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஏன் குரங்கு அடிக்கடி தலையை சொறியுது எண்டு அந்த குரங்குக்குதானே தெரியும். இது தெரியாமலே

ஆதிசார் இப்படி சொல்லிட்டாரே.நான் நினைச்சிருந்தன் ஆதி கொஞ்சம் புத்திசாலி எண்டு.

ஆதிசார் ஏன் தலையை அடிக்கடி சொரியிரார் எண்டு ஆதிக்குதானே தெரியும்

நானும் என்பாட்டில் போவம் எண்டு பாத்தா......, இந்தக் கப்பிக்கும், சந்திக்கும் வேற வேலையே இல்லைப்போல.....

கப்பி!, சந்திதான் தலையில் சோ ஊத்தை இருந்தா என்ன செய்யும் என்று கேட்டா.....அதோட விட்டாவே..... பேன் கடிச்சா என்ன செய்யவேணும் என்றும் கேட்டா.... இதுக்கு நான் 'சொறியும்!" என்று சொன்ன பதிலை இங்க போட்டிருக்கா அவ்வளவுதான்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த சொறியிற விசயத்துக்கே இவளவு இருக்கா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வகுப்பில கெமிக்கல் பாடம் நடந்துகிட்டிருந்துது.

ஒரு பாத்திரத்தில கெமிக்கல் கலந்த நீரை நிரப்பி அதில 1 ருபாயை போட்டா அது கரையுமா கரையாதா?

"டேய் ராமு நீ சொல்லடா" என்றார் வாத்தியார்.

"கரையாது சார்" என்றான் ராமு.

"ஆக எப்படி ராமு இவ்வளா சரியா சொல்லுறாய்? கெமிக்கலோட தன்மையை வச்சுத்தானே?" என்றார் வாத்தியார்.

"ஒரு தன்மையையும் வச்சு இல்ல. எல்லாம் உன்னோட தன்மைய வச்சு தான். கரையிற 1 ருபாயா இருந்தால் நீ உள்ள போடுவியா"

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆசிரியர்: "அன்புக்கும் காதலுக்கும் என்ன வித்தியாசம். சோமு நீ சொல்லு"

"உங்க மகள் மேல நீங்க வச்சிருந்தா அது அன்பு சார். அதே அன்பை நான் வச்சிருந்தா அது காதல் சார்"

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒருத்தன் சாக்கடையில விழுந்து எழும்பிட்டு பரிட்சைக்கு போனான்.

அவனோட பரிட்சை எழுதின எல்லாரும் நாத்தம் தாங்க முடியா மூக்கை போத்திக்கொண்டு எழுதினாங்க.

ஆசிரியர்: "ஏன்டா உனக்கு ஒழுங்க குளிச்சிட்டு வந்து எழுத தெரியாதா"

"எங்கப்பா தான் சார் சொன்னார் எல்லாரும் மூக்கு மேலை விரலை வைக்கிற மாதிரி பரிட்சை எழுதீட்டு வாடா என்டு"

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

"குழந்தை மணிக்கணக்கா அழுதிட்டிருந்திருக்கு.. இப்ப கொண்டு வந்திருக்கீங்களே?"

"அதுவும் என்னை மாதிரியே டி.வி. சீரியல் பார்த்து

அழுதிட்டிருக்காக்கும்னு இருந்துட்டேன்.. டாக்டர்!"

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஜானியின் நண்பன் ஒரு பிரச்னையோடு ஜானியிடம் வந்தான். ''இந்தப் பிரச்னையை நீதான் தீர்த்து வைக்கனும். நேத்து எங்க அம்மா ஒரு இளம் விதவையை எனக்கு அறிமுகப்படுத்தி அவளைத்தான் கல்யாணம் கட்டிக்கிறனும்னு சொல்றாங்க. அவகிட்ட ஏகப்பட்ட சொத்து இருக்கு. ஆளும் அழகா இருக்கா. ஆனா நான் எங்க வீட்டு வேலைக்காரியை காதலிக்கிறேன். அவளைத்தான் கல்யாணம் பண்ண நினைக்கிறேன். ஆனா என்ன பண்றதுன்னே தெரியல. நீ ஒரு வழி சொல்லு.'' ஜானி சொன்னான், ''நீ இரண்டு விஷயம் செய்யணும். ஒண்ணு உங்க வீட்டு வேலைக்காரியவே கல்யாணம் பண்ணிக்கனும். ஏன்னா காதலைவிட பெரிசு உலகத்தில எதுவுமே இல்லை.'' நண்பன் கேட்டான், ''இரண்டாவது விஷயம் என்ன?'' ஜானி அலட்டாமல் சொன்னான். ''அந்த விதவையோட அட்ரஸை எனக்குத் தா.''

  • கருத்துக்கள உறவுகள்

அட்ரஸ் எதுக்கு அழகுக்கா இலலை சொத்துக்கா :huh:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அட்ரஸ் எதுக்கு அழகுக்கா இலலை சொத்துக்கா :huh:

அழகியின் சொத்தோடு சுகத்துக்கும் தான் எப்ப அந்த அட்ரஸை யாழில் போடுவிங்கள்?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நோயாளி: டாக்டர் என் கால் நல்லா போயிடுமா டாக்டர்

டாக்டர்: இன்னும் மூனு நாளைக்குள்ளே உங்க கால் சரியாயிடும்

நோயாளி: நான் நடக்கலாமா

டாக்டர்: நல்லா நடக்கலாம். நான் கொடுத்திருக்கும் மருந்த மறக்காம தடவுங்க

நோயாளி: இந்த மருந்த தடவுனா கால் வலி போயிடுமா டாக்டர் நான் அப்புறமா ஓடலாமா.

டாக்டர்: தாராளமா

நோயாளி: இந்த மருந்துக்கு அத்தனை பவரா..நான் சைக்கிள் ஓட்டலாமா.

டாக்டர்: ம்..ஓட்டலாமே...

நோயாளி: ஏன்னா எனக்கு சைக்கிள் ஓட்டத் தெரியாது..அதான் கேட்டேன்.

டாக்டர்: ......??????????

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒரு மெக்கானிக் காரின் எஞ்சினை கழற்றி பழுது பார்க்கும்பொழுது அவ்வழியே அவ்வூரின் தலைசிறந்த இதயநோய் நிபுணர் வருவதைக் கண்டார்.

அவரிடம் சென்று " டாக்டர்! உங்ககிட்ட ஒரு கேள்வி. இங்க பாருங்க.. நானும் வண்டியோட இதயம், எஞ்சினை தான் பழுது பார்க்கிறேன். வால்வ் ரிப்பேர் பண்றேன். ஆனா ஒரே மாதிரி வேல பார்த்தும் உங்களுக்கு மட்டும் ஏன் இவ்வளவு பணம் கிடைக்குது?"

டாக்டர் சொன்னார்...

"எஞ்சின் ஓடும் போது பழுது பார்க்க முயன்று பார்..தெரியும்"

  • கருத்துக்கள உறவுகள்

கறுப்பி. டொக்ரர் எனக்கு மற்றவர்கள் பேசுவது நன்றாக தெளிவாக கேட்கிறது ஆனால் பார்க்க முடியவில்லை

டொக்ரர். ஓ அப்படியா எவ்வளவு காலமாக உங்களிற்கு இந்த பிரச்சனை இருக்கு

கறுப்பி. போனிலை கதைக்கும் போது மட்டும் தான் டொக்ரர்.

டொக்ரர். ??????? :(:icon_idea:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கறுப்பி. டொக்ரர் எனக்கு மற்றவர்கள் பேசுவது நன்றாக தெளிவாக கேட்கிறது ஆனால் பார்க்க முடியவில்லை

டொக்ரர். ஓ அப்படியா எவ்வளவு காலமாக உங்களிற்கு இந்த பிரச்சனை இருக்கு

கறுப்பி. போனிலை கதைக்கும் போது மட்டும் தான் டொக்ரர்.

டொக்ரர். ??????? :(:icon_idea:

சாத்திரி சார் எனக்கு போனில் கதைக்கும் போது மட்டுந்தான் கண்தெரியாது ஆனா உங்களுக்கு யாரும் வாழ்த்து சொன்னா அதை பார்க்கக்கூட கண் தெரியாது இல்லையா அதற்காக இனி வாழ்த்த அனுப்பமாட்டன் எண்டு நினைச்சுடாதிங்க

  • கருத்துக்கள உறவுகள்

சாத்திரி சார் எனக்கு போனில் கதைக்கும் போது மட்டுந்தான் கண்தெரியாது ஆனா உங்களுக்கு யாரும் வாழ்த்து சொன்னா அதை பார்க்கக்கூட கண் தெரியாது இல்லையா அதற்காக இனி வாழ்த்த அனுப்பமாட்டன் எண்டு நினைச்சுடாதிங்க

வாழ்த்தா எனக்கா?? எனக்கு யார் செர்ல போறாங்க எண்டு கவனிக்கலை மன்னிக்கவும் அனைவருக்கும் நன்றிகள் அதுசரி எதுக்கு வாழ்த்து சொன்னீங்கள் ஒண்டும் விழங்கேல்லை

Edited by sathiri

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

விழங்கேல்லயா? புது வருசத்துக்கு பொங்கலுக்கு எல்லாம் அனுப்பினன் தனிமடலில் ஒரு நன்றி இல்லை. சரி தலைக்கணம் பிடித்த மனிதர் எண்டு முடிவே பண்ணிட்டேன்

அமெரிக்காவில ஒரு இடத்தில கணவனும், மனைவியும் சந்தோசமா வாழ்ந்து கொண்டு இருப்பீனம். வாழ்க்கை நன்றாகத்தான் போய்க்கொண்டு இருக்கும். ஆனால், கணவனுக்கு மாத்திரம் மனைவியில் ஒரு விடையம் பிடிக்காம இருக்கும். அதுவென்னவென்றா அவவுக்கு இவர் எப்போதும் புதுசு, புதுசா பரிசுகள் வாங்கிக் குடுத்துக்கொண்டு இருக்க வேணும். அதுவும் பிறந்தநாளென்றா சொல்லி வேலை இல்லை. கணவன் தனக்கு சரியான காசை செலவளித்து ஏதாவது வாங்கித்தராட்டி மனைவி வீட்டில ஒரே ரகளை தான்.

இப்பிடித்தான் ஒருமுறை மனைவிக்கு பிறந்தநாள் வரும் போது என்ன வாங்கிக்கொடுக்கலாம் எப்படி என்ற மனுசிய திருத்தலாம் என்று கணவன் யோசிச்சுக் கொண்டு இருக்கும் போது நல்ல ஒரு ஐடியா அவருக்கு வரும். அவர் இந்தமுறை வித்தியாசமான ஒரு பரிசை மனைவிக்குக் கொடுத்தார். அது என்ன வென்றா மிக அழகான விலை உயர்ந்த சவப்பெட்டி! மனைவியும் அழகாகவும் விலை உயர்ந்தும் சவப்பெட்டி இருந்ததால் அதைவாங்கி கவனமா ஒரு இடத்தில் பத்திரப்படுத்தி வைத்தா. இப்படியே நாட்கள் கடந்தது.

அடுத்த வருட பிறந்த நாளும் வந்தது. மனைவி இன்னும் தான் திருந்தவில்லை. கணவன் இந்தமுறை தனக்கு என்ன வாங்கித்தருவார் என்று கனவு கண்டு கொண்டு இருப்பா. பிறந்த நாளும் வந்தது. ஆனால் கணவன் இந்த முறை மனைவிக்கு ஒன்றும் வாங்கிக் கொடுக்கவில்லை. மனைவிக்கோ பேரதிர்ச்சி! கணவனைப் போய்க் கேட்பா, ஏன் தனக்கு ஒன்றும் வாங்கித்தரவில்லை என்று!

இதற்கு கணவன் ஆறுதலாக அமைதியாக இவ்வாறு பதில் சொல்வார்: "நான் போன வருசம் உனக்கு பிறந்த நாளுக்கு வாங்கித்தந்த பரிசையே நீ இன்னும் பாவிக்கவில்லை! அதற்குள் நான் எப்படி இன்னொரு புதிய பரிசை இந்த வருட பிறந்த நாளுக்கு வாங்கித்தர முடியும்?"

மனைவி இந்தப்பதிலைக் கேட்டு வாயடைச்சு நிற்பா! இதற்குப் பிறகு அவ ஒரு நாளும் பரிசுகள் கேட்டு கணவனை கஸ்டப்படுத்தாது சந்தோசமாக வாழ்வா!

புத்திசாலிக் கணவன்?

  • கருத்துக்கள உறவுகள்

விழங்கேல்லயா? புது வருசத்துக்கு பொங்கலுக்கு எல்லாம் அனுப்பினன் தனிமடலில் ஒரு நன்றி இல்லை. சரி தலைக்கணம் பிடித்த மனிதர் எண்டு முடிவே பண்ணிட்டேன்

வாழ்த்துப் போட்டா பதில் எதிர்பார்த்தா போடுறீங்கள்? சாத்திரி இத்தனுண்டு உடம்பில் இந்தத் தலைக்கனம் எண்டால் தலையைத் தூக்கி கொண்டு எப்படியப்பா நடக்கின்றியள்?

  • கருத்துக்கள உறவுகள்

பாவம் அந்தாலுக்கு பல சோலிகள். :P

நல்ல பிறந்தநாள் பரிசுதான். அனைத்து நகைச்சுவைகளும் இரசிக்ககூடியதாகவே உள. நன்றிகள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.