Jump to content

வாழைப்பழ முட்டை தோசை.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
10-bananaeggpancakes.jpg

 

வாழைப்பழ முட்டை தோசை.

 

காலையில் குழந்தைகள் விரும்பி சாப்பிடும் வகையில் ஏதேனும் காலை உணவு செய்ய நினைத்தால், வாழைப்பழ முட்டை தோசை செய்து கொடுங்கள். இந்த தோசை உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது. மேலும் உடலை பிட்டாக வைத்துக் கொள்ள நினைப்பவர்கள், இதனை உட்கொள்வதும் நல்லது.

 

சரி, இப்போது வாழைப்பழ முட்டை தோசையை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

 

தேவையான பொருட்கள்:

நன்கு கனிந்த வாழைப்பழம் - 1
முட்டை - 2
 சீனி/உப்பு - தேவையான அளவு
தேங்காய் எண்ணெய் - தேவையான அளவு

 

செய்முறை:

முதலில் வாழைப்பழத்தை நன்கு மசித்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் முட்டையை ஒரு பௌலில் உடைத்து ஊற்றி நன்கு அடித்துக் கொள்ள வேண்டும்.

பின்பு இவ்விரண்டையும் ஒன்றாக கலந்து, அத்துடன் சர்க்கரை/உப்பு சேர்த்து மீண்டும் நன்கு அடித்துக் கொள்ளவும்.

பிறகு ஒரு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து, அதில் கலந்து வைத்துள்ள கலவையை தோசைகளாக ஊற்றி, மேலே எண்ணெய் ஊற்றி முன்னும் பின்னும் வேக வைத்து எடுத்தால், வாழைப்பழ முட்டை தோசை ரெடி!!!

 

நன்றி தற்ஸ் தமிழ்.

 

பிற்குறிப்பு:
இந்தத் தோசையை.... 1 ஐரோவுக்குள் சுட்டு விடலாம்.
1 வாழைப்பழம். - 15 சென்ற்.
2 முட்டை. - 30 சென்ற்.
சீனி/ உப்பு. - 10 சென்ற்.
எண்ணை. - 25 சென்ற்.
மொத்தச் செலவு: 80 சென்ற்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிறி லண்டனில இப்ப எல்லாம் விலை கூடீற்றுது. :lol:

Link to comment
Share on other sites

இதைச் சாப்பிட்டு உடலைப் பிட்டாக வைத்திருக்கவா ?

உப்பு, சீனி, கொலஸ்ரரோல் என்று எல்லாமே எதிரிக் கூட்டமா இருக்கே  :rolleyes:

Link to comment
Share on other sites

தமிழ்சிறி அண்ணா இந்த தோசை எங்க சுட்டீங்க, உங்க வீட்டிலா அல்லது தட்ஸ் தமிழ் இணையத்திலா

http://tamil.boldsky.com/recipes/non-veg/banana-egg-dosa-recipe-007109.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

10-bananaeggpancakes.jpg

 

வாழைப்பழ முட்டை தோசை.

 

காலையில் குழந்தைகள் விரும்பி சாப்பிடும் வகையில் ஏதேனும் காலை உணவு செய்ய நினைத்தால், வாழைப்பழ முட்டை தோசை செய்து கொடுங்கள். இந்த தோசை உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது. மேலும் உடலை பிட்டாக வைத்துக் கொள்ள நினைப்பவர்கள், இதனை உட்கொள்வதும் நல்லது.

 

சரி, இப்போது வாழைப்பழ முட்டை தோசையை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

 

தேவையான பொருட்கள்:

நன்கு கனிந்த வாழைப்பழம் - 1

முட்டை - 2

 சீனி/உப்பு - தேவையான அளவு

தேங்காய் எண்ணெய் - தேவையான அளவு

 

செய்முறை:

முதலில் வாழைப்பழத்தை நன்கு மசித்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் முட்டையை ஒரு பௌலில் உடைத்து ஊற்றி நன்கு அடித்துக் கொள்ள வேண்டும்.

பின்பு இவ்விரண்டையும் ஒன்றாக கலந்து, அத்துடன் சர்க்கரை/உப்பு சேர்த்து மீண்டும் நன்கு அடித்துக் கொள்ளவும்.

பிறகு ஒரு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து, அதில் கலந்து வைத்துள்ள கலவையை தோசைகளாக ஊற்றி, மேலே எண்ணெய் ஊற்றி முன்னும் பின்னும் வேக வைத்து எடுத்தால், வாழைப்பழ முட்டை தோசை ரெடி!!!

 

நன்றி தற்ஸ் தமிழ்.

 

பிற்குறிப்பு:

இந்தத் தோசையை.... 1 ஐரோவுக்குள் சுட்டு விடலாம்.

1 வாழைப்பழம். - 15 சென்ற்.

2 முட்டை. - 30 சென்ற்.

சீனி/ உப்பு. - 10 சென்ற்.

எண்ணை. - 25 சென்ற்.

மொத்தச் செலவு: 80 சென்ற்.

 

 

தகவலுக்கு நன்றி சிறித்தம்பி.
தனித்தவில் தம்பிமாருக்கு நல்ல பிரயோசனமான திடீர் சமையல் செய்முறை...செலவும் பெரிசாய் இல்லை.... :D
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிறி லண்டனில இப்ப எல்லாம் விலை கூடீற்றுது. :lol:

 

o-TOPLESS-DAVID-CAMERON-ON-HOLIDAY-IN-CO

 

பாத்தால் அப்பிடி தெரியேல்லையே!!!  :lol:  :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்சிறி அண்ணா இந்த தோசை எங்க சுட்டீங்க, உங்க வீட்டிலா அல்லது தட்ஸ் தமிழ் இணையத்திலா

 

------

நன்றி தற்ஸ் தமிழ்.

 

பிற்குறிப்பு:

இந்தத் தோசையை.... 1 ஐரோவுக்குள் சுட்டு விடலாம்.

1 வாழைப்பழம். - 15 சென்ற்.

2 முட்டை. - 30 சென்ற்.

சீனி/ உப்பு. - 10 சென்ற்.

எண்ணை. - 25 சென்ற்.

மொத்தச் செலவு: 80 சென்ற்.

 

தோசை சுட்ட இடத்தை...  ஏற்கெனவே, குறிப்பிட்டுள்ளேன் ஆரணி. :)

சிறி லண்டனில இப்ப எல்லாம் விலை கூடீற்றுது. :lol:

 

சுமோ... லண்டனில், ஒரு முட்டை என்ன விலை போகுது? :D  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழைப்பழத்தை தோசைக்கல்லில் போட்டால் எடுபடுமோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மா, அரிசி, உளுந்து இல்லாமல் ஒரு தோசையா...!

வேணுமெண்டால்  எக் பனான் ஆம்லட் என்டு சொல்லவும்...!! :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ம்

பார்க்க நல்லாத் தான் இருக்கு.

ஆனால் சேர்ந்திருக்கிற கூட்டம் நம்ம உடம்புக்கு ஆகாத கூட்டம்.

ஏற்கனவே அதிகாலையில் ஒரு சிறங்கை குளிசை.

ஒவ்வொரு தடவையும் டாக்ரரிடம் போகும் போது வைத்திருக்கிற சேர்ட்டிபிக்கற் காணும் இனி பிறமோசன் வேண்டாம் என்று சொல்லி தான் வீட்டிலிருந்து அனுப்புவார்கள்.

 

இருந்தாலும் பிள்ளைகளுக்கு நிச்சயம் இதைச் செய்து கொடுக்கலாம்.

 

நன்றி சிறி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தோசை சுட்ட இடத்தை...  ஏற்கெனவே, குறிப்பிட்டுள்ளேன் ஆரணி. :)

 

சுமோ... லண்டனில், ஒரு முட்டை என்ன விலை போகுது? :D  

 

எங்கள் கடையில் 25 p ஒரு முட்டை, வாழைப்பழம் ஒன்று 30p :D

 

Link to comment
Share on other sites

இன்று காலையில் இந்த தோசையை :) செய்துபார்த்தேன். பிடித்திருந்தது.

முட்டையின் மணம் கொஞ்சம் தூக்கலாக இருந்ததால்  அடுத்த தடவை சிறிது வனிலா கலந்து செய்யலாம் என்று இருக்கின்றேன்.

 

செய்முறையை இணைத்த தமிழ் சிறி அண்ணாவிற்கு நன்றிகள்!!!!

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.