Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தங்களுக்குள் மோதி உரு மாறும் அண்டங்கள்... (Colliding Galaxies...)

Featured Replies

தங்களுக்குள் மோதி உரு மாறும் கலக்சிகள்...
 
பூமியிலிருந்து சுமார் 130 மில்லியன் ஒளியாண்டுகள் தூரத்தில் நடந்த இச்சம்பவத்தை நாசாவின் மூன்று விண்கலங்கள்  பிடித்த படங்களின் சேர்க்கையை கீழே காண்கிறீர்கள்.
 
chandra-nasa-ngc2207_0.jpg?1418341741
 
பலவண்ண மின்குமிழ்களால் அலங்கரிக்கப்பட்ட கிறிஸ்மஸ் மரத்தைப் போல் மயிர்கூச்செறியும் ஒரு நிகழ்வாக நாசா இதனை வர்ணித்துள்ளது. 
 
130 மில்லியன் ஒளியாண்டுகள் தூரத்தில் என்னும் போது 130 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு நட‌ந்து விட்டிருந்தாலும் அவ்விரு கலக்சிகளிலும் உயிரினங்கள் வாழ்கிற கோள்களை உடைய சூரியக் குடும்பங்கள் இருந்திருக்கலாம். 
 
இவ்விரு கலக்ஸிகளிலும் உள்ள black holeகளின் அபரிமிதமான ஈர்ப்புக்களால் ஏற்படும் இம்மோதல்கள் மூலம் மில்லியன் டிகிரி வெப்பம், கெடுதலான எக்ஸ்றே கதிர்கள் வெளியிடப்படுகிறதாம்.
 
நமது பால் வெளியும் ஒரு நாள் இந்நிலையை அடையும்.
 
இன்னும் 4 பில்லியன் ஆண்டுகளில், இதே போன்றதொரு மோதல் எமது கலக்சியான பால் வெளியும், அன்றோமெடா கலக்ஸியும்(M31) ஒன்றை ஒன்று சந்திக்கும் புள்ளியை நோக்கி ஒரு செக்கனுக்கு 70 மைல்கள் வேகத்தில் நெருங்கி வருவதால் இடம்பெற உள்ளது.
 
In about four billion years, the Milky Way will collide with its nearest neighbor, the Andromeda Galaxy. The two are rushing towards each other at about 70 miles per second (112 km per second). When they collide, they will provide a fresh influx of material that will kick of star formation anew.
Andromeda-Galaxy-Collided-with-the-Milky
The Andromeda Galaxy (M31)
 
சிறு புள்ளி

Edited by Small Point

  • கருத்துக்கள உறவுகள்

நாலு பில்லியன் ஆண்டுகளுக்குள் மனிதன் வேறு ஒரு நல்ல கலக்சியாகப் பார்த்து குடிபோய்விட வேண்டியதுதான்.. :wub:

  • தொடங்கியவர்

நாலு பில்லியன் ஆண்டுகளுக்குள் மனிதன் வேறு ஒரு நல்ல கலக்சியாகப் பார்த்து குடிபோய்விட வேண்டியதுதான்.. :wub:

இன்னும் நாம் சந்திரனைத் தாண்டவில்லை...

:unsure:

  • கருத்துக்கள உறவுகள்

நேற்றிரவு எனது சின்னமகள் இவ்வாறான ஒரு ஆவணப்படத்தை பார்த்துக்கொண்டிருந்தாள் 

ஒன்றோடொன்று மோதுவதும்

வெடித்து சிதறுவதும் வர்ண பிளம்புகளை  கக்குவதுமாக இருந்தது

இருந்தது

பயப்படுத்தாம நிற்பாட்டடி ஆத்தா என்றேன்

நம்மை சுற்றி  நடப்பவை தானே அப்பா என்றாள்

கொஞ்சம் பயமாகத்தான் இருந்தது :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப, நாலு பில்லியன் ஆண்டிகளுக்குப் பிறகு ஒலகம் அழியப்போகுது.

எனக்கொரு உண்மை தெரிஞ்சாகணும்,

நான் இப்போது வங்கியில் வைப்பில் இட்டு வைச்சிருக்கும் காசை உசிரு போனாலும் எடுத்துச் சிலவளிக்கமாட்டேன், சேத்து வைச்சிருக்கிற சொத்துகள் எனது பேரப்பிள்ளைகளுக்குக் கொடுத்திடுவன், எனது சொத்துக்களைப்போலவே எனது ஜீன்களையும் எனது சந்ததி நாலு பில்லியன் ஆண்டுகளானாலும் காவிக்கொண்டு போகிறதால என்னுடைய சொத்துக்கள் தவிர இனி சேர்க்கப்போகும் சொத்துக்கள் எல்லாத்தையும் அவர்கள் செலவளிக்க மாட்டினம்

அப்ப எல்லாமெ அண்டத்தில போகப்போகுதோ அட கடவுளே.

அவரவருக்கு

அவரவர் பிரச்சினை

நீங்க ஒன்றுக்கும் கவலைப்படாதீர்கள்

நாம எதுக்கு இருக்கிறம்..?

எனது வங்கிக்கு மாற்றிவிடுங்கள்

என்ன அழிந்தாலும் நாம்அவற்றை பாதுகாப்பம்.. :lol:

பூமி அழிவதற்கு கோடிக்கணக்கான ஆண்டுகள் வரை பொறுத்திருக்கத் தேவையில்லை. பூமியின் மேற்பரப்பில் வெப்பம் பரவலாக இன்னும் 10 °C  கூடினாலே இங்கிருந்து எல்லோரும் கிளம்பத் தொடங்க வேண்டியதுதான். :lol:

2050 ஆம் ஆண்டில் 2°C இலிருந்து 4°C அதிகரிக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளதாகச் சொல்கிறார்கள். இதனை 2°C ஆக வைத்துக் கொண்டாலே புண்ணியமாகப் போகும். 

இமாலய மலையில் 2300 ஆம் ஆண்டளவில் கடைசித் துளி பனியும் உருகிவிடும். கரையோரத்தில் அமைந்திருக்கும் நாடுகள் பல கடலில் மூழ்கிவிடும் - ஈழம் உட்பட.  அதுக்கு முன்னரே மனிதர் பூமியைப் பிடித்த நோய்க் கிருமி மாதிரிப் பெருகி பூமியைச் சூறையாடி விடுவார்கள். 

சில ஆயிரம் ஆண்டுகளில் பூமியில் மீண்டும் வெப்பம் நீங்கிப் பனி சூழ்ந்து கொள்ளலாம்.

இது எதுவுமே நடக்காது என்று வைத்துக் கொண்டாலும் சில ஆயிரம் ஆண்டுகளில் பரிமாண வளர்ச்சியால் இதுபோன்ற ஒரு ஜந்து மாதிரி ஆகிவிடுவோம். :rolleyes:

future-man-1.png

  • தொடங்கியவர்
எமது வருங்கால சந்த்ததியினரின் முன்னால் வளரும் வாலைப் பார்த்தால் பாவமாக உள்ளது. :(
 
இன்னும் ஒரு ஆயிரம் வருடங்களுக்குள் மீண்டும் ice age வரலாம். தப்பிப் பிழைத்ததுகள் மீண்டும் நல்ல மனித‌ நாகரிகங்களை உருவாக்கலாம்.
 
புவி வெப்பமாதல் மட்டுமல்ல வேறு பல காரணிகளும் உண்டு. அதில் முதல் பத்துக் காரணங்களை எடுத்து ஆராய்ந்துள்ளார்கள் இக் காணொளியில்...

https://www.youtube.com/watch?v=YtBUNnvnFmM

Edited by Small Point

  • கருத்துக்கள உறவுகள்

இன்னும்.. 40 வருசம் வாழுவோமோ தெரியல்ல. 4 பில்லியனுக்கு அப்புறம் நடக்கப் போறதை இட்டு...????! :lol:

இந்தப் பிரபஞ்சத்தில் எல்லாமே இயங்கிக் கொண்டிருப்பதால்.. மாற்றங்களுக்கு குறைவில்லை. எமது அகிலமும் மாறும்.

இக்கட்டுரையில் சில பதத்தவறுகள் உண்டு.

அகிலம்- galaxy

அண்டம் - Universe

அகிலத்தை அண்டம் என்று இங்கு குறிப்பிட்டிருக்கிறார்கள். அண்டம் பலகோடி அகிலங்களால் நிறைந்தது. எமது அகிலம் பால்வீதியாகும். :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு அகிலத்தைப் பற்றியெல்லாம் தெரியாது.. அகிலாவைத்தான் தெரியும்.. :lol:

நன்றி நெடுக்ஸ் தவறை சுட்டிக்காட்டியதற்க்கு.
உண்மையில் அண்டம் என்ற சொற்பதத்தை "இனம்புரியாத துகள்களை உற்பத்தி செய்யும் பால்வெளி மண்டல ராட்சத கருந்துளை" என்று ஆதவன் Athavan CH இணைத்த‌ கட்டுரையிலிருந்து காப்பியடித்தது.
 
Edited by Small Point

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
அண்டவெளியில் முப்பத்து முக்கோடி சூரியதேவர்கள் இருக்கின்றார்கள் என்று புராண கதைகளில் சொல்லப்படுகின்றதே அது உண்மையா?
 
வெள்ளைக்காரன் எதை சொல்லுறனோ அதை பக்கெண்டு நம்புவம்.
  • கருத்துக்கள உறவுகள்

அண்டவெளியில் முப்பத்து முக்கோடி சூரியதேவர்கள் இருக்கின்றார்கள் என்று புராண கதைகளில் சொல்லப்படுகின்றதே அது உண்மையா?
 
வெள்ளைக்காரன் எதை சொல்லுறனோ அதை பக்கெண்டு நம்புவம்.

வேதத்தில் உள்ள கருத்துக்கள், எழுத்து வடிவம் இல்லாமல், 'செவி' வழியாகக் கூறப்பட்டு வந்தவை!

'வித்' என்பது செவியைக் குறிப்பிடுகின்றது எனவும், செவி வழியாகக் கூறப்பட்டு வந்ததால்.. வித் என்ற வார்த்தையிலிருந்து 'வேதா' என்ற பெயர் வந்தது என்றும் கூறப்படுகிறது!

அதை விடுவம்!

அந்த வேதத்தின் ஆரம்ப காலத்தில், இரண்டு சூரியன்கள் பூமியில் தெரிந்ததாக, ஒரு செய்தி இருந்தது!

அதே போலச் 'சரஸ்வதி' நதியென்று ஒன்று இருந்ததாக இன்னுமொரு செய்தி இருந்தது!

இவ்வளவு காலங்களின் பின்னர்.. இப்போது 'சரஸ்வதி' நதி ஓடிய பாதையை, நாசாவிலிருந்து உறுதிப் படுத்தியிருக்கிறார்கள்! ( இதுவே இராமாயணத்தில் வருகின்ற ' சரயு நதி' ஆகும்)

சூரியன்களின் நகர்வுகளைப் பின்னோக்கி நகர்த்திப் பார்த்த போது.. இரண்டு சூரியன்கள் பூமியிலிருந்து தெரிந்திருக்கும் 'சாத்தியங்கள்' இல்லாமல் இல்லை, என்று இப்போது கூறுகின்றார்கள்!

எனவே முப்பத்து முக்கோடி சூரியன்கள் இருக்கக் கூடிய சாத்தியங்களும் இல்லாமல் இல்லை! :D

  • கருத்துக்கள உறவுகள்

பூமி அழிவதற்கு கோடிக்கணக்கான ஆண்டுகள் வரை பொறுத்திருக்கத் தேவையில்லை. பூமியின் மேற்பரப்பில் வெப்பம் பரவலாக இன்னும் 10 °C  கூடினாலே இங்கிருந்து எல்லோரும் கிளம்பத் தொடங்க வேண்டியதுதான். :lol:

2050 ஆம் ஆண்டில் 2°C இலிருந்து 4°C அதிகரிக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளதாகச் சொல்கிறார்கள். இதனை 2°C ஆக வைத்துக் கொண்டாலே புண்ணியமாகப் போகும். 

இமாலய மலையில் 2300 ஆம் ஆண்டளவில் கடைசித் துளி பனியும் உருகிவிடும். கரையோரத்தில் அமைந்திருக்கும் நாடுகள் பல கடலில் மூழ்கிவிடும் - ஈழம் உட்பட.  அதுக்கு முன்னரே மனிதர் பூமியைப் பிடித்த நோய்க் கிருமி மாதிரிப் பெருகி பூமியைச் சூறையாடி விடுவார்கள். 

சில ஆயிரம் ஆண்டுகளில் பூமியில் மீண்டும் வெப்பம் நீங்கிப் பனி சூழ்ந்து கொள்ளலாம்.

இது எதுவுமே நடக்காது என்று வைத்துக் கொண்டாலும் சில ஆயிரம் ஆண்டுகளில் பரிமாண வளர்ச்சியால் இதுபோன்ற ஒரு ஜந்து மாதிரி ஆகிவிடுவோம். :rolleyes:

future-man-1.png

எனக்கு... சொந்தம் கொண்டாட இல்லாத தாய்நாடு, இந்தப் பூமிப் பந்தில் இல்லை என்றால்....

இந்த உலகம், எனக்கு தேவையில்லை.

அது இன்றைக்கே... அழிந்தாலும், சந்தோசமாக ஏற்றுக் கொள்வேன்.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு அகிலத்தைப் பற்றியெல்லாம் தெரியாது.. அகிலாவைத்தான் தெரியும்.. :lol:

எங்க சுத்தி வந்தால் அகிலாவில் மோதாலாம் ??
இன்னொரு கலக்க்ஷி உருவாகுமே என்ற ஒரு நல்லெண்ணம்தான்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.