Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சல்மான கான் தலைமையிலான குழு வந்தடைந்தது

Featured Replies

salman-khan1.jpg

 

பொலிவூட் நடிகர் சல்மான் கான் மற்றும் இலங்கையுடன் தொடர்பை வைத்திருக்கின்ற பொலிவூட் நடிகையான ஜெகலின் பெர்னாண்டஸ் உள்ளிட்ட ஆறுபேர் அடங்கிய குழுவினர் இலங்கையை வந்தடைந்தனர். பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாகவே அக்குழுவினர் இன்று அதிகாலை நாட்டுக்குள் பிரவேசித்துள்ளதாக விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜெட் விமான சேவைக்கு சொந்தமான 9W256 என்ற இலக்கத்தைகொண்ட விமானத்திலேயே இக்குழுவினர் மும்பாய் நகரத்திலிருந்து வருகைதந்துள்ளனர்.

 

 http://www.tamilmirror.lk/136586#sthash.ZnFjsBwk.dpuf

  • தொடங்கியவர்

நடிகர் சல்மான், ஜனாதிபதி மஹிந்தவுடன் பிரசார கூட்டத்தில் இணைந்தார்

 

bolly(2).jpg

 

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள பொலிவூட் நடிகர் சல்மான் கான், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஜனாதிபதி தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டுள்ளார். பொரளையில் நடைபெறும் கூட்டத்திலேயே சல்மான் கான் இணைந்துகொண்டுள்ளார். இதேவேளை, இலங்கையுடன் தொடர்பை வைத்திருக்கின்ற பொலிவூட் நடிகையான ஜெகலின் பெர்னாண்டஸூம் அவர்களுடன் இணைந்து கொண்டுள்ளார். பொலிவூட் நடிகர் சல்மான் கானுடன் ஆறுபேர் அடங்கிய குழுவினர் இலங்கையை இன்று திங்கட்கிழமை காலை வந்தடைந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

 

http://www.tamilmirror.lk/136615#sthash.gWFVZImZ.dpuf

  • தொடங்கியவர்

HCP_8779(1).jpg

 

 

HCP_8751.jpg

 

HCP_8798.jpg

 

 

HCP_8834.jpg

 

HCP_8841.jpg

 

HCP_8883.jpg

 

HCP_8914.jpg

 

 

Pix by Kithsiri de Mel (daily mirror)

  • கருத்துக்கள உறவுகள்

கருணாநிதியும் கடைசியில.. குஷ்பு.. வடிவேல் என்று களம் இறக்கினவர் தானே. இந்திய உபகண்ட அரசியல்வாதிகள் தங்கள் மக்கள் செல்வாக்கின்மையை மறைக்க.. சினிமா பிரபல்யங்களின் தயவை நாடுவது புதிதல்ல. இந்தியா கற்றுக்கொண்ட.. ஜனநாயகம் அப்படி. :lol::D

 

அதுசரி.... இவர்கள் வெள்ளம்.. மண்சரிவு.. பாதித்த பகுதிகளுக்கு போவினமோ.. இல்ல..???! :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

HCP_8779(1).jpg

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

ஆரிய கூத்து நடந்தாலும் பையன் எப்போதும் தனது காரியத்தில் கண்ணாகவே இருப்பான்.
கெட்டிக்கார பையன்! 

நடிகர்கள் விடயத்தில் சிங்களவர்களும் தமிழ்நாட்டுக் காரர்களுக்கு கொஞ்சமும் குறைந்தவர்கள் அல்ல.

 

டெலி நாடகங்களில் நடிக்கின்ற நடிகை  உபேக்சா தான் போட்டியிட்ட முதலாவது தேர்தலிலேயே கம்பஹா மாவட்டத்தில் கரு ஜயசு+ரிய உள்ளிட்டவர்களை முந்தி மாவட்டத்தில் முதலாவதாக விருப்பு வாக்குகளை பெற்றவர்.

  • கருத்துக்கள உறவுகள்

ஜக்குலின் போட்டிருக்கும் டிறஸ் நல்ல வடிவா இருக்கு! ^_^

  • கருத்துக்கள உறவுகள்

http://www.dailymirror.lk/media/images/HCP_8834.jpg

மகிந்த சேர் என்னத்தையோ தேடுறார்.

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்தவின் காசில்

அவர்கள் கனிமூன்  கொண்டாட  போகிறார்களா?? :icon_mrgreen:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மட்டக்களப்பிலை ஜெமினிகணேசனும் மனோரமாவும் ஜே ஆருக்கு தேர்தல்வியாபரம் செய்ததை நான் இன்னும் மறக்கவேயில்லை... :D

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்தவின் காசில்

அவர்கள் கனிமூன்  கொண்டாட  போகிறார்களா?? :icon_mrgreen:

 

HCP_8779(1).jpg

 

அவர்கள் "கனிமூன்" கொண்டாட... நாமல் ராஜபக்ச விட்டு விடுவானா...? :D  :lol:

  • தொடங்கியவர்

சிவகாசி படத்தில நயன்தாரவை வைச்சு ஓட்டுக்கேட்ட பிரகாசுராஜ்தான் நினைவுக்கு வாறார்.. மகிந்தரே

 

புலிகள அழிச்சனான் என்று மார்ப நிமித்தி திரிபவர், பாவம் சர்மான்கானுக்கு பக்கத்தில மனுசன் எட்டாய் நெளியுது - யாழ்ப்பாணத் தம்பி:-

Jaffn%20thambi%2030_CI.jpg



உள்ளதையும் கெடுத்தான் கொல்லிக் கண்ணன் என்ற மாதிரி வாற கொஞ்ச ஓட்டையும் இப்பிடி இல்லாமல் செய்திட்டியளே? ஓ... பின்ன என்ன? 

சிவகாசி படத்தில நயன்தாரவை வைச்சு ஓட்டுக்கேட்ட பிரகாசுராஜ்தான் நினைவுக்கு வாறார்.. அந்தப் படத்தில எலக்சனில அவர் தோத்துப்போறார் எண்டுறத நான் சொல்ல வரேல்ல.... 

சல்மான்கானை கூப்பிட்டு மகிந்தர் ஓட்டுக்கோக்கிற அளவுக்கு மகிந்தவின்ட அரசியல் வங்குரோத்து ஆகிட்டுது. சிங்கள சனம் எல்லாம் முகத்த சுழிக்குதாம்.. 

அது மட்டுமே சல்மான்கான் கலந்து கொண்ட நிகழ்ச்சியில அறிவிப்பாளர் சாருகானுக்கு கரகோசம் எழுப்பச் சொன்னராம்.. சல்மான்கானின்ட முகம் சுருற்கிப் போச்சாம்...

மகிந்தர் இப்பிடி பல நடிக நடிகைளய கூப்பிட்டு எலக்சனில வெல்லுற விளையாட்டுக்காட்டுறார்.. 

போற போற இடமெல்லாம் யுத்தத்தை வென்றன். இரண்டாயிருந்த நாட்ட ஒண்டாக்கினன். என்ன கொல்லப் போறாஙகள். கடாபிய கொன்ற மாதிரி என்ன கொல்லப் போறாங்கள்..மின்சாரக்கதிரையில இருத்தப்போகிறினம்.. என்று சொல்லிப் பாத்தார்.

அது எடுபடேல்லையோ? 

அதாலதான் சல்மான்கானையும் ஜெக்லீனையும் கூப்பிட்டு காட்டியாவது வெல்லலாம் எண்டு பாக்கிறார். 

இண்டைக்கு சல்மான்கானை தேர்தல் பிரசாரத்திற்கு கூப்பிட்டுபோட்டு தன்ட சொந்த நாட்்டில உள்ள கலைஞர்களுக்கு அடி உதை விழுந்திருக்குது...

ஓ.. மைத்திரிக்கு ஆதரவாய் கூடின கலைஞர்கள சல்மான்கானை அழைச்சு வரவேற்ற நாமல் ராஜபக்சவின்ட நீலப்படையணி அந்த ரீசேட்டோட வந்து தாக்கினதாம்.. 

சொந்த நாட்டில உள்ள கலைஞர மதிக்க தெரியாதவர். அவளின்ட கருத்து சுதந்திரத்திற்கு இடமளியாதவர் இன்னொரு நாட்டுக் கலைஞரை கூப்பிட்டு தேர்தல் பிரசாரம் ஈடுபடுறார் எண்டுறதில பல செய்தியள் வெளிப்படுறது இந்த சின்னப் பொடியனுக்கே விளங்குது...

ஒண்டு மாத்திரம் நல்லா விளங்குது...

மகிந்த தன்ட தோல்விய உணர வெளிக்கிட்டுவிட்டார்...

அதால நல்லா பயப்பிடுறார்.. 

சர்வாதிகாரம் தோக்கிற நேரம் எதொ எல்லாம் செய்யுமாம்..

இவர் சால்மான்கானத்தானே கூப்பிட்டிருக்கிறார்.

புலிகள அழிச்சனான் என்று மார்ப நிமித்தி திரிருவர், பாவம் சர்மான்கானுக்கு பக்கத்தில மனுசன் எட்டாய் நெளியுது... 

ஏல்லாம் தோல்விப்பயம்தான்.

யாழ்ப்பாணத் தம்பி

 

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/114948/language/ta-IN/article.aspx

 

  • தொடங்கியவர்

Cartoon2(140).jpg

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.