Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தலைவர் பெயரை சொன்னாலே கைதட்டல்! அதிர்ச்சிக்கு உள்ளாகியது பொது எதிரணி!! Photo in

Featured Replies

சுற்றிவர இராணுவமும் காவல்துறையும் குவிந்திருக்க பிரபாகரன் மற்றும் விடுதலைப்புலிகள் பற்றி பிரஸ்தாபித்த வேளைகளில் எல்லாம் ஆர்ப்பரித்த மக்களது உணர்வு எதிரணியினரை இன்று அதிர்ச்சிக்குள்ளாக்கியே இருந்தது.

puthu_ethiraninar_jaffna_01.jpg

யாழ்ப்பாணத்தின் முத்திரை சந்தியிலுள்ள கேணல் கிட்டு பூங்காவினில் இன்று நடைபெற்ற பிரச்சாரக்கூட்டத்தினில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனிற்கும் தனக்குமிடையேயான சமாதான பேச்சு பற்றி பிரஸ்தாபித்திருந்தார். அவ்வேளையில் பிரபாகரன் பெயரைச் சொல்லவே திரண்டிருந்த மக்கள் ஆரவாரித்தனர்.

puthu_ethiraninar_jaffna_02.jpg

இதனால் அதிர்ச்சிக்குள்ளான சந்திரிகா சிறிது நேரம் பேச்சை தொடர முடியாது திணறி பின்னர் பின் தொடர்ந்தார்.

அடுத்து பேசிய முன்னாள் இராணுவ தளபதி ஜெனரல் சரத்பொன்சேகா தனது உரையில் தான் மனச்சாட்சி படி யுத்தத்தை நடத்தியதாகச் சிங்களத்தில் பேச மொழி பெயர்த்தவரோ உயிர் இழப்புக்கள் இன்றி யுத்தத்தை நடத்தியதாக மொழி பெயர்த்தார். இதனால் ஆர்ப்பரித்த மக்கள் இன அழிப்பு கொலைகள் நடந்ததாக கூக்குரலிட்டனர்.

puthu_ethiraninar_jaffna_03.jpg

தொடர்ந்து பேசிய ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரி தனது உரையில் தான் மஹிந்த கட்டியுள்ள மாளிகைகளில் இருக்க மாட்டேனென கூற அதற்கும் மக்களிடமிருந்து கரகோசம் எழுந்தது. அடிக்கடி யாழ்ப்பாணம் வந்தால் மக்களிற்கு உங்களை நன்றாக பிடிக்குமென குரல்கள் எழுந்தன.

puthu_ethiraninar_jaffna_04.jpg

puthu_ethiraninar_jaffna_05.jpg

puthu_ethiraninar_jaffna_06.jpg

puthu_ethiraninar_jaffna_07.jpg

puthu_ethiraninar_jaffna_08.jpg

puthu_ethiraninar_jaffna_09.jpg

puthu_ethiraninar_jaffna_10.jpg

maithiri_jaffna_visite_01.jpg

maithiri_jaffna_visite_02.jpg

puthu_ethiraninar_jaffna_11.jpg

http://www.pathivu.com/news/36466/57//d,article_full.aspx

 

வாய் திறக்க மறுத்தார் மைத்திரி!! யாழில் பொது எதிரணி கூட்டம்!!

பொது எதிரணியின் தேர்தல் பிரசாரக்கூட்டம் வடக்கில் இன்று ஆரம்பித்துள்ளது. எனினும் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரி இனப்பிரச்சினை பற்றியோ தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் அன்றாட பிரச்சினைகள் பற்றியோ வாய் திறவாது வடக்கினை கடந்து சென்றுள்ளார்.

maithiri_jaffna_05.jpg

அதே வேளை தமக்கு நிபந்தனையற்ற ஆதரவை வழங்கியுள்ள கூட்டமைப்பிற்கு நன்றி தெரிவித்த மைத்திரி எனினும் கூட்டமைப்புடன் எழுத்து மூலமாகவோ வாய் மொழி மூலமாகவோ எந்தவொரு உறுதி மொழியினையும் தான் வழங்கியிருக்கவில்லையெனவும் கூட்டமைப்பும் அவ்வாறு எதனையும் கோரியிருக்கவுமில்லையெனவும் அவர் தெரிவித்தார்.

maithiri_jaffna_04.jpg

பொதுஜன ஜக்கிய முன்னணியினருக்கு பிடி கொடுத்துவிடக்கூடாதென்பதில் கூடிய முனைப்பாக இருந்த மைத்திரி நாடாளாவிய ரீதியில் குடும்ப அரசியலால் மக்கள் படும் துன்பங்களை பற்றியே பேசியிருந்தார்.

maithiri_jaffna_03.jpg

முன்னதாக வவுனியா வைரவர் புளியங்குளத்திலுள்ள விளையாட்டு மைதானத்தில் இன்று 11.30 க்கு அவர்களது பிரச்சாரம் ஆரம்பமாகியிருந்தது. ரிஷாத் பதியுதீன் தலைமையில் இடம்பெற்ற இந்தத்தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பொது எதிரணியின் முக்கிய தலைவர்கள் கலந்துகொண்டிருந்தனர்.

maithiri_jaffna_02.jpg

தொடர்ந்து மன்னாரில் பொது எதிரணியின் ஜனாதிபதி தேர்தல் பிரசாரக் கூட்டம் மன்னார் தனியார் பேருந்து நிலையத்தில் நடைபெற்றது. இதன்போது எதிரணி பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன உட்பட நாடாளுமன்ற உறுப்பினர்களான ரிஷாத் பதியுதீன், ரவி கருணாநாயக, ராஜித சேனாரத்தின ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் மற்றும் பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.

maithiri_jaffna_visite_01.jpg

தொடர்ந்து யாழ்ப்பாணத்தின் முத்திரை சந்தியிலுள்ள கேணல் கிட்டு பூங்காவினில் நடைபெற்ற பிரச்சாரக்கூட்டத்தினில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா மற்றும் இராணுவ தளபதி ஜெனரல் சரத்பொன்சேகா ஆகியவர்களும் இணைந்து கொண்டிருந்தனர்.

சுமார் நாலாயிரத்திற்கும் அதிகமான மக்கள் திரண்டிருந்தனர். குறிப்பாக கூட்டமைப்பினர் மேடையேறாத பிரச்சார கூட்டத்தினில் மைத்திரி தரப்பின் கருத்தை அறிந்து கொள்ளவே மக்கள் கூடிய அளவினில் குவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

maithiri_jaffna_visite_02.jpghttp://www.pathivu.com/news/36467/57//d,article_full.aspx

 

தமிழ் மக்களின் கடவுள் , மூச்சு எங்கட தேசியத்தலைவர் என்பது அவர்களுக்கு தெரியும் ஆனால் வெளிப்படையாக சொல்ல முடியாது . எங்க முடிந்தால் பயங்கரவாதிகள் என்று சொல்லி பாக்கட்டும் . ஒரு வாக்கும் கிடைக்காது .
 
மகிந்த தோற்க வேண்டும் , இப்ப உள்ள ஒட்டுண்ணிகள் எல்லாம் தனிக்க வேண்டும் .
  • கருத்துக்கள உறவுகள்

 

தமிழ் மக்களின் கடவுள் , மூச்சு எங்கட தேசியத்தலைவர் என்பது அவர்களுக்கு தெரியும் ஆனால் வெளிப்படையாக சொல்ல முடியாது . எங்க முடிந்தால் பயங்கரவாதிகள் என்று சொல்லி பாக்கட்டும் . ஒரு வாக்கும் கிடைக்காது .
 
மகிந்த தோற்க வேண்டும் , இப்ப உள்ள ஒட்டுண்ணிகள் எல்லாம் தனிக்க வேண்டும் .

 

அதுகள் அங்குபோய் ஒட்டிக்கொள்ளும்.
எந்த பேரினவாதிக்கும் அவர்களின் தேவை இருக்கும். தமிழரை கொல்லும் பாதி வேலையை அவர்கள் பார்ப்பார்கள் என்றால் ஏன் தவிர்க்க போகிறார்கள் ? 
  • கருத்துக்கள உறவுகள்

 

தமிழ் மக்களின் கடவுள் , மூச்சு எங்கட தேசியத்தலைவர் என்பது அவர்களுக்கு தெரியும் ஆனால் வெளிப்படையாக சொல்ல முடியாது . எங்க முடிந்தால் பயங்கரவாதிகள் என்று சொல்லி பாக்கட்டும் . ஒரு வாக்கும் கிடைக்காது .
 
மகிந்த தோற்க வேண்டும் , இப்ப உள்ள ஒட்டுண்ணிகள் எல்லாம் தனிக்க வேண்டும் .

 

 

ஆனால் சம்பந்தன் சொல்லி இருக்கே.. கடும்.. காட்டுமிராண்டி.. இராணுவ அமைப்பு புலிகள் என்று. கொழும்பில் ஊடக சந்திப்பில். பக்கத்தில் இருந்து சுமந்திரனும்.. மாவையும்.. தலையாட்டினம். பிறகு.. யாழ்ப்பாணம் வந்து இன்னொரு கதை.

 

இதுங்கள.. தமிழ் மக்களின் பிரநிதிதிகளா வெளிநாடுகளுக்கு அனுப்பிய போது.. இதுங்க என்ன பேசி.. எம்மை அழிச்சுதுங்களோ..?????! :icon_idea::rolleyes::(

  • கருத்துக்கள உறவுகள்

தமிழனை அழிக்க தமிழன் இருக்கும் பொது மற்றவன் எதற்கு ????

  • கருத்துக்கள உறவுகள்

தமிழனை அழிக்க தமிழன் இருக்கும் பொது மற்றவன் எதற்கு ????

 

காக்க வன்னியனும்.. எட்டப்பனும்.. கருணாக்களும்.. டக்கிளசுகளும்.. இன்னும் இன்னும் ஆட்களும்.. எல்லா இனத்துக்குள்ளும் உண்டு. அது தமிழங்களுக்க மட்டும் தான் என்று நினைக்கப்படாது. அது மனித குலத்துக்குள் எப்படியோ ஒரு கூர்ப்பின் கேட்டு விளைவுகளில் ஒன்றாக நுழைந்து விட்டது. அதையும் தாண்டி சிந்திக்கிறவன்.. செய்யுறவன்..செயற்படுறவன்.. தான் வெல்ல முடியும். :):icon_idea:

 

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்
பிரபாகரன் பெயர் கேட்டதும் பரப்புரைக்கூட்டத்தில் கூடியிருந்த ஆயிரக்கணக்கான மக்கள் மகிழ்ச்சியில் ஆரவாரித்த சம்பவம் நேற்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. 
 
யாழ்ப்பாணம் நல்லூர் கிட்டு பூங்காவில் பொதுவேட்பாளர் மைத்திபால சிறிசேனவின் தேர்தல் பிரச்சார கூட்டம் நேற்று நடைபெற்றது.
 
அதில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா தனது உரையில் பிரபாகரன் என்ற பெயரை கூறியதுமே கூடியிருந்த மக்கள் மகிழ்ச்சியில் விண்ணதிரக் கோஷமிட்டனர். 
 
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா ஆங்கிலத்தில் உரையாற்றியிருந்தார்.  அதன்போது 'மிஸ்டர் பிரபாகரன்' என்று ஆங்கிலத்தில் விளித்திருந்தார். 
 
அப்போது அங்கிருந்தவர்கள் உணர்ச்சி பொங்கி கோஷமிட்டனர். அத்துடன் அவரது ஆங்கில உரையின் தமிழாக்கம் செய்யப்பட்டது.
 
அதில் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் என்று தமிழாக்கம் செய்யப்பட்டதும் அப்போதும் கைதட்டல்களும் , ஆரவாரிப்பும் வானைப்பிளந்தது. 
 
 
இதேவேளை, தமிழ் தேசியக் கூட்டமைப்பு பொதுவேட்பாளருக்கு ஆதரவு வழங்கியமைக்கும் முன்னாள் ஜனாதிபதி நன்றிகளைத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 
- See more at: http://onlineuthayan.com/News_More.php?id=102603764931781577#sthash.BBg917dB.dpuf
  • கருத்துக்கள உறவுகள்

தமிழனை அழிக்க தமிழன் இருக்கும் பொது மற்றவன் எதற்கு ????

 

தக்கன பிழைக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

சுற்றிவர இராணுவமும் காவல்துறையும் குவிந்திருக்க பிரபாகரன் மற்றும் விடுதலைப்புலிகள் பற்றி பிரஸ்தாபித்த வேளைகளில் எல்லாம் ஆர்ப்பரித்த மக்களது உணர்வு எதிரணியினரை இன்று அதிர்ச்சிக்குள்ளாக்கியே இருந்தது.////

சுற்றிவர இராணுவம் சூழ்ந்திருந்தாலும் பிரபாகரன் என்பது ஒரு மந்திர சொல்......அதை உச்சரிக்கும் போதெல்லாம்.....மக்களின் மனங்களில் உற்ச்சாகம் பிறக்கும்.....தமிழன் என்ற திமிர் அவனுக்குள் தானாகவே எழும்.......

இதை சந்திரிக்காவில் இருந்து சுற்றி இருந்த இராணுவமும் தாமாகவே உணர்ந்திருப்பர்...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.