Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பரப்புரைப் பணிகள் ஆரம்பம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பரப்புரைப் பணிகள் ஆரம்பம்
news
235e50f4b94844cff9659546d78c904a.jpg
 ஜனாதிபதித் தேர்தலில் பொது எதிரணி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை ஆதரித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பரப்புரைப் பணிகள் நேற்று மட்டக்களப்பில் ஆரம்பித்து வைக்கப்பட்டன.
 
இதில் பாராளுமன்ற உறுப்பினரான பா.அரியநேத்திரன், மாகாண சபை உறுப்பினர்களான கே.துரைராஜசிங்கம்,கோ.கருணாகரம், பிரசன்னா, வெள்ளிமலை, நடராசா மற்றும் தமிழரசுக் கட்சியின் முக்கியஸ்தர்கள் ஆதரவாளர்களும் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
 
மட்டக்களப்பிலுள்ள தமிழரசுக்கட்சியின் அலுவலகத்தில் இருந்து ஆரம்பிக்கப்பட்டு  நகரின் பல்வேறு பகுதிகளிலும் துண்டுப் பிரசுரங்களை விநியோகிக்கப்பட்டன.
02 ஜனவரி 2015, வெள்ளி 10:15 மு.ப
  • கருத்துக்கள உறவுகள்

துண்டுப் பிரசுரம் அடிக்க..... மைத்திரி காசு கொடுத்திருப்பாரா?

உவயலுக்கு ஏன் இந்த வேலை? 

 

அதுதான் ஆதரித்து அறிக்கை விட்டாச்சு பிறகு எதுக்கு அங்களுக்கு பிறகென கொடிபிடிப்பு? 

  • கருத்துக்கள உறவுகள்

சுமத்திரன் அமைச்சராக போகிற ஆசையில தான் பதுக்கி வைச்சிருக்கிற பணத்தை எல்லாம் எடுத்து குடுத்திருப்பார்...நோட்டீஸ் அடிக்க.....

வெட்கம் ,மானம் இருக்குதோ தெரியவில்லை சில பிறவிகளுக்கு

  • கருத்துக்கள உறவுகள்

சுமந்திரன்,சம்மந்தர் எல்லாரும்கும் அது இல்லாம போய் ரொம்ப நாலாச்சுன்னே.....:D

காங்கேசன் துறையில் செல்வாவை எதிர்த்து போட்டியிட்டு 10000 வாக்குகளை பெற்ற v p யை உங்களின் கொல்லைப்புறத்தில் வைத்துகொண்டு சம்பந்தரை விமர்சிக்க வெட்கம் மானம் இருக்கா ?

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு தெரிஞ்ச ஒரே VP வேலுப்பிள்ளை பிரபாகரன் தான் அவர் எல்லாம் தேர்தலில் போட்டியிட்டத்தா சரித்திரமே இல்லையே......என்னன்னே பேசுறீங்க.....சம்மந்தர் ,சுமி கூட சேர்ந்து தான் உங்களுக்கு இப்பிடி ஆகிடிச்சு.....

ஹையோ ஹையோ

  • கருத்துக்கள உறவுகள்

ஹா ஹா இது தான் அன்று தொடக்கம் இன்றுவரை கூட்டமைப்பின் தலைவர்களின் லட்சணம்....மக்களை முட்டாளாக்குவது....

1972 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் உரும்பிராய் இந்துக் கல்லூரிக்கு பிரதியமைச்சர் சோமவீர சந்திரசிறி விஜயம் செய்தார்.அவரது காருக்கு குண்டு வீசப்பட்டது. வீசியது சிவகுமாரன்.

அதனைத் தொடர்ந்து சிவகுமாரன் பொலிசாரால் கைது செய்யப்பட்டார்.

யாழ்ப்பாணம் மல்லாகம் மாஜிஸ்திரேட் நீதிமன்றில் சிவகுமாரன் சார்பில் ஆஜரானவர் அமரர் சுந்தரலிங்கம்

‘அடங்காத் தமிழர்’ என்று அழைக்கப்பட்ட சுந்தரலிங்கம் “பணம் தராவிட்டால் வழக்காடமாட்டேன்|| என்று சிவகுமாரின் தாயார் திருமதி அன்னலட்சுமி பொன்னுத்துரையிடம் அடம் பிடித்தார்.

தருவதாகச் சொன்னார் சிவகுமாரின் அம்மா. ஆனால் கொடுக்க வசதியில்லை.

சுந்தரலிங்கத்தின் கார்சாரதி தினமும் சிவகுமாரின் வீட்டு வாசலில் காவல் நின்று நச்சரிப்பார்.

“ஐயா வாங்கி வரச் சொன்னார் என்பார் சாரதி. மல்லாகம் நீதிமன்றம் தனக்கு சிவகுமாரன் விடயத்தில் பிணை வழங்கும் அதிகாரம் இல்லை என்று விட்டது.

உடனே தலைவர் அமிரை சிவகுமாரன் வீட்டார் சந்தித்தனர்.

அவர் கொழும்பில் இருந்த திருச்செல்வத்திற்கு ஒரு கடிதம் எழுதிக் கொடுத்தார். மேல்நீதிமன்றத்தில் மனுப்போட்டு பிணை வாங்கிக் கொடுக்குமாறு கடிதத்தில் தெரிவிக்கப்பட்டது.

கடிதத்தோடு வந்த இளைஞர் கொழும்பில் திருச்செல்வத்தை சந்தித்தார்.

கடிதத்தைப் படித்துவிட்டு திருச்செல்வம் அந்த இளைஞரைப் பார்த்துக் கேட்டார்.

“எங்களைக் கேட்டோ செய்தனீங்கள்?||

பிணை கேட்க மறுத்துவிட்டார் திருச்செல்வம்.

செத்தபின் வாழ்த்து

பின்னர் பல மாதங்கள் சென்று சிவகுமாரன் விடுதலையானார்.

1974 ஜுலை 5 ஆம் திகதி இறந்த சிவகுமாரனுக்கு கொழும்பில் ஒரு அஞ்சலிக்கூட்டம்.

இராமகிருஷ்ண மிஷன் மண்டபத்தில் நடந்த அந்த அஞ்சலிக்கூட்டத்தை தமிழ் இளைஞர் பேரவையின் கொழும்புக் கிளையினர் ஒழுங்கு செய்திருந்தனர்.

பிரதான பேச்சாளர் திருச்செல்வம், அவர் தனது உரையில் கரகோஷத்தின் மத்தியில் கூறினார்.

“தம்பி சிவகுமாரன் எங்களுக்கு வழிகாட்டிவிட்டார்||

முன்னர் கடிதத்தோடு திருச்செல்வத்தை சந்தித்த அந்த இளைஞரும் அந்தக் கூட்டத்தில் அமர்ந்திருந்தார் என்பது தான் இன்னும் சுவாரசியம்.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பரப்புரைப் பணிகள் ஆரம்பம்

 

மைத்திரியே  எதிர்பாராத கும்பிடல் இது

தேவையா  தமிழருக்கு....?

 

மைத்திரிக்கு கூட்டமைப்பு  ஆதரவு தரவேண்டும் என இங்கு கருத்து எழுதியவர்கள்

இதற்கு விளக்கம் தரட்டும்......

  • கருத்துக்கள உறவுகள்

இதற்கு எல்லாம் விளக்கம் கேட்கக்கூடாது. ஒருதருக்கும் தெரியாத பரம ரகசியம் இருக்குதாம்.

 

அதாவது..

உண்மையில் கூட்டமைப்பு மைத்திரி ஜனாதிபதியாக வருவதை விரும்பவில்லையாம். மகிந்தவே மீண்டும் ஜனாதிபதியாக வருவதைத்தான் விரும்புகின்றார்கள். அப்பதானே போர்க்குற்றம் புரிந்த, தமிழ் மக்களைக் கொன்றொழித்த அவரையும் அவர் சகோதரர் கோத்தபாயவையும் சர்வதேச நாடுகள் தொடர்ந்தும் அழுத்தம் கொடுத்து தமிழர்களுக்கு ஏதாவது தீர்வைக் கொடுக்க வற்புறுத்தலாம். மைத்திரி வந்தால் அவர் தனக்கும் போர்க்குற்றங்களுக்கும் சம்பந்தமில்லை என்று ஒரு தீர்வையும் கொடுக்காமல் விட்டுவிடுவாரல்லவா!

இதையெல்லாம் கணக்குப் போட்டுத்தான் நமது கூட்டமைப்பில் உள்ள சுழியர்களான தலைவர்கள் சுமந்திரனின் ஆலோசனைப்படி மைத்திரிக்கு வெளிப்படையாகவே ஆதரவைக் கொடுத்து பிரச்சாரத்தில் ஈடுபடலாம் என்று முடிவெடுத்தனர். தமிழர்களினதும் முஸ்லிம்களினதும் வெளிப்படையான மைத்திரிக்கான ஆதரவைப் பார்த்து இனவாதம் கொண்ட சிங்களவர்கள் சிங்கள மக்களுக்கு நாடு பிரியப்போகின்றது என்று கூப்பாடு போட்டு புலிகளை அழித்த மகிந்தவே நமது சிங்கள பூமியைக் காக்கவல்ல ஒரேயொரு தலைவர் என்று உசுப்பேத்துவார்கள். அதனைக் கேட்டு சிங்கள மக்கள் மகிந்தவுக்கு அதிகமாக வாக்குப் போட்டு அவரை மீண்டும் ஜனாதிபதியாக்குவார்கள்!

மைத்திரியை ஜனாதிபதியாக்கி தமிழர்களின் பிரச்சினையை நீர்த்துப் போகச் செய்து தமிழர்களுக்கு அல்வா கொடுக்க நினைக்கும் மேற்கு நாடுகளுக்கு அவர்களின் பேச்சைக் கேட்டு இயங்குவது மாதிரி நடித்து அவர்களுக்கே அல்வா கொடுக்கவுள்ள கூட்டமைப்பின் மூளைசாலிகளின் இராஜதந்திரத்தை நாமெல்லாம் மெச்சவேண்டும்!

  • கருத்துக்கள உறவுகள்

நிலாந்தனின் கட்டுரையில் இருந்து..

மைத்திரிக்கு ஆதரவாக அறிவித்ததன் மூலம் பொது எதிரணியின் பக்கம் நின்றது போலவும் இருக்கும். அதே சமயம் அந்த அறிவிப்பை மிகப் பிந்தி அறிவித்தன் மூலமும் குறுகிய கால பிரசாரத்தையே முன்னெடுத்ததன் மூலமும் மைத்திரியின் வெற்றிக்கு அதிகரித்த அளவில் உதவ முடியாது போகலாம். அதோடு அந்த அறிவிப்பின் மூலம் சிங்கள கடும் கோட்பாளர்களில் ஒரு பகுதியினரை அரசை நோக்கி தள்ளியதாகவும் முடியலாம். இது மறைமுகமாக மஹிந்தவிற்கு உதவி செய்தது போலவும் இருக்கும். ஆக மொத்தம் பூனை இப்பொழுதும் மதில் மேல் தான் இருக்கிறது. ஆனால், மைத்திரியின் பக்கம் பார்த்துக் கொண்டிருக்கிறது. இது அரசிற்கு எதிரான தமிழ் மக்களின் கோபத்தை துஷ்பிரயோகம் செய்வதில் முடியாதா?!

http://www.yarl.com/forum3/index.php?/topic/151505-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1/

  • கருத்துக்கள உறவுகள்

நிலாந்தன் பேசாம மர்மநாவல் எழுதப் போகலாம்.

அடுத்த பேச்சுவார்த்தை எல்லை நிர்ணயம் பற்றியதாய் தன் இருக்கும் என்று லூசுத்தனமா 2006 இல் ரீவியில் சொன்ன ஆள் இவர்.

இப்ப அரசு தன்னை மன்னித்து விட்டதுக்கு கூலியாக - கூட்டமைப்புக்கு எதிராக மர்மநாவல் எழுதுகிறார்.

இந்த துதிபாடிகளால்தான் பிரபா அழிந்தார். இதே துதிபாடிகளால்தான் மகிந்தவும் அழிவார்.

  • கருத்துக்கள உறவுகள்

நிலாந்தன் பேசாம மர்மநாவல் எழுதப் போகலாம்.

அடுத்த பேச்சுவார்த்தை எல்லை நிர்ணயம் பற்றியதாய் தன் இருக்கும் என்று லூசுத்தனமா 2006 இல் ரீவியில் சொன்ன ஆள் இவர்.

இப்ப அரசு தன்னை மன்னித்து விட்டதுக்கு கூலியாக - கூட்டமைப்புக்கு எதிராக மர்மநாவல் எழுதுகிறார்.

இந்த துதிபாடிகளால்தான் பிரபா அழிந்தார். இதே துதிபாடிகளால்தான் மகிந்தவும் அழிவார்.

2006 இல் இருந்து 2015க்கு 9 வருடங்கள். இத்தனை வருடங்களில் அறிவு விசாலித்து இருக்கும் என்று ஏன் எண்ணத் தோன்றவில்லை. சரியான வாதங்களை வைத்து எழுதப்பட்ட கட்டுரையை ஒற்றை வரியில் அவர் மர்மநாவல் எழுதப் போகலாம் என்று சொல்வது வெறும் அவதூறே அன்றி சரியான தர்க்கமாக இருக்காது. முடிந்தால் கட்டுரையை வாசித்து எது தவறு என்பதையும் அவருடைய வாதங்களை மறுதலித்தும் கருத்து வைத்தால் சரி பிழைகளை நாங்கள் அறியமுடியும்.

துரோகி, ஒட்டுக்குழு, மாற்றுக்கருத்தாளர்கள் என்று மற்றவர்கள் சொல்வதற்கும் நீங்கள் துதிபாடி என்று சொல்வதற்கும் ஒரு வித்தியாசமுமில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

எந்த முகாந்த்ஹிரமுமில்லாமல் மகிந்த வெல்ல வேண்டும் என்று கூட்டமைப்பு மைத்திரியை ஆதரிக்கிறது என்று எழுதுவது மர்ம நாவல் தானே.

இதில் வாசித்து தர்க்கிக்க என்ன இருக்கு - முழுக்க முழுக்க ஆசிரியரின் கற்பனை எனும் போது.

2006 இல் இருந்த அதே துதிபாடித்தனத்தைதான் இன்றும் காண்கிறேன். மூளை கொஞ்சமும் விசாலப்படவில்லை.

அப்போ வெளிப்படையா துதி பாடினார், இப்போ மறைமுகமா.

விடுதலை புலிகள் சம்பந்த பட்ட பலர் பேச அஞ்சும் சூழ்நிலையில், அனந்தி போன்றோர் தாக்குதலுக்குள்ளாகும் நிலையில், சிங்கள ஆங்கில பத்திரிகையாளர் கூட நாட்டை விட்டு ஓடும் நிலையில் - இவர் மட்டும் எப்படி சுதந்திரமாக - அரசின் எதிரிகளை மட்டும் விமர்சிக்க முடிகிறது? யோசியுங்கள்.

சண்டையின் பின், இவர் அரசின் அடக்குமுறையை விமர்சித்து ஏதும் எழுதுவதில்லை. கூட்டமைப்பை வசைபாடுவதில்தான் முழுக்கவனமும்.

  • கருத்துக்கள உறவுகள்

வாங்கின காசை அப்படியே பொக்கட்டுக்குள்ள போட்டா.. கணக்கு எப்படி காட்டிறது. பிரச்சாரத்தை முன்னெடுத்தால் தானே.. இரண்டு மூன்று நாளைக்கு நோட்டீஸ் அடிச்ச செலவையாவது காட்டலாம். சம்பந்தன் கூடாரம் பிழைச்சுக்கும். :D:icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

வாங்கின காசை அப்படியே பொக்கட்டுக்குள்ள போட்டா.. கணக்கு எப்படி காட்டிறது. பிரச்சாரத்தை முன்னெடுத்தால் தானே.. இரண்டு மூன்று நாளைக்கு நோட்டீஸ் அடிச்ச செலவையாவது காட்டலாம். சம்பந்தன் கூடாரம் பிழைச்சுக்கும். :D:icon_idea:

 

நீங்களும் போர்க்காலத்தில் கமிசனுக்கு காசு சேர்த்தவர்களில் ஒருவரா? இப்படித்தானா நீங்களும் செய்தீர்கள்? இப்போது தான் புரிகிறது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.