Jump to content

நான் சமைத்துப் பார்த்து ருசித்த நண்டுக் கறி 'Singapore Chilly Crab Curry'

Recommended Posts

104j4hv.jpg

நேற்று சனவரி முதலாம் திகதி வழக்கம் போன்று சமைக்காமல் கொஞ்சம் வித்தியாசமாக சமைத்து வீட்டில் சாப்பிடுவம் என்று நினைத்து சமைத்து ருசித்த உணவு இது.

Singapore Chilly crab curry என்பது உலகப் பிரசித்தமான ஒரு நண்டுக் கறி. சிங்கபூர் செல்லும் அசைவ பிரியர்கள் தவறாமல் உண்ணும் உணவு இது. அதைச் செய்யும் முறையை கூகிளின் உதவியுடன் பின் வரும் இணையத்தளத்தில் பார்த்து விட்டு அதில் உள்ளது போன்றே செய்யாமல் சின்ன சின்ன வித்தியாசங்களுடன் செய்து பார்த்தது.

http://www.sbs.com.au/food/recipes/singapore-chilli-crab?cid=trending

தேவையானவை:

நண்டுகள்: 04 (நண்டுக் கறிக்கு நண்டு போடாமல் செய்ய முடியாது)

பெரிய வெங்காயம்: 02

செத்த மிளகாய்: 15 (உறைப்பு கூடவாக இருக்க நான் 15 போட்டேன்)

எண்ணெய்: தேவையான அளவு (நான்  சோழம் எண்ணெய் Corn oil தான் பாவித்தேன்)

தக்காளி: 02 (நல்ல பழுத்த தக தகவென்று ஹன்சிகா மாதிரி இருக்க வேண்டும்)

சோயா சோஸ்: 02 தேக்கரண்டி

தக்காளி சோஸ்: தேவையான அளவு

கூனிக் கருவாடு: இரண்டு கைப் பிடி (அப்படித்தான் நான் எடுத்துப் போட்டேன்)

ஒடியல் மா: 2 மேசைக் கரண்டி (இணையத்தளத்தில் இதற்குப் பதிலாக சோழம் மாவு போட்டு இருந்தனர்)

சீனி: 02 மேசைக் கரண்டி

உப்பு: தேவையான அளவு

முட்டை: 01

1. நண்டை கழுவி, ஒவ்வொன்றையும் இரண்டு மூன்று துண்டுகளாக உடைத்துக் கொள்ளுங்கள். கால்களை சற்று உடைத்து (Chop) வைத்தால் சமைக்கும் போது காரம் உப்பு எல்லாம் நன்கு உள்ளே சென்று சுவையைக் கொடுக்கும். நான் சின்ன உலக்கையால் (.. மர உலக்கை) நசுச்சு கொண்டேன்.

2.  இனிக் கூனிக் கருவாட்டு சோஸ் (என் கண்டு பிடிப்பு: இணையத்தளத்தில் Shrimp Paste போட்டுள்ளார்கள்) இனை செய்து கொள்ளவும்

கூனிக்கருவாட்டினை எடுத்து நன்கு கழுவி (மண் இருக்கும்) எடுக்கவும். அதனுடன் நன்கு நறுக்கிய தக்காளித் துண்டுகள் 04 ளும், நறுக்கின வெங்காயத்துண்டுகள் 05 உம் போட்டு Mixer இல் போட்டு நன்கு பசைபோல வரும்வரைக்கும் அரைக்கவும்.

3. தக்காளிப் பழத்தினை நன்கு நறுக்கி துண்டுகளாக்கி அதை தனிய எடுத்து Mixer இல் அரைத்து தக்காளி பசையை தயாரித்து வைத்துக் கொள்ளவும்.

4. இனி, வெங்காயத்தினையும் செத்த மிளகாயையும் சேர்த்து mixer இல் சிறிதளவு தண்ணீர் விட்டு அரைத்து எடுக்கவும். Mixer இல் Puree என்ற தெரிவை அழுத்தினால் நல்ல பதமான பசை கிடைக்கும். (அரைத்து எடுத்ததின் வாசம் எப்படி இருக்கு என்று மணக்கப் போய் அதன் காரம் மூக்கில் ஏறி கண் எல்லாம் சிவந்து போய் பரிதாபமாக நின்றேன்)

5. நல்ல பெரிய தாச்சியில் (pan) எடுத்து எண்ணெயை ஊற்றி சூடாகியதும் எற்கனவே செய்து வைத்த வெங்காயம் + செத்த மிளகாய் பசையை அதில் இடவும். 

6. அத்துடன், கூனிக் கருவாட்டு பசையையும் இடவும்

7. இரண்டின் நிறமும் மாறி அதில் உள்ள தண்ணீர் எல்லாம் ஆவியானவுடன், சோயா சோஸ், தக்காளி சோஸ், தக்காளி பசை, சீனி, உப்பு ஆகியவற்றை இட்டு பொரிக்கவும்.

8.  ஒடியல் மாவை 200 மில்லி லீற்றர் தண்ணீரில் கரைத்து ஏற்கனவே வேகிக் கொண்டு இருக்கும் கலவையினுள் இடவும். (ஒடியல் மா அதிகம் போட்டல் சாப்பாடு கசக்கும்)

9. சில நிமிடங்கள் செல்ல அனைத்தும் சற்று இறுக்கமான கலவையாக மாறும் போது நண்டுத் துண்டுகளைப் போடவும்.

10. 10 இல் இருந்து 15 நிமிடங்கள் வரைக்கும் மூடியால் மூடி சராசரி வெப்பத்தில் அவிக்கவும் (Medium high). இடைக்கிடை நண்டின் துண்டுகளை பிரட்டி பிரட்டி வேகாத பக்கங்களை கலவையில் அமுக்கி விடவும்.

11. நண்டின் நிறம் மாறியதும் நன்கு அவிந்து விட்டதா என்று சரி பார்த்து விட்டு, முட்டையை உடைத்து அதில் கலந்து சில நிமிடங்கள் விட்டபின் அடுப்பில் இருந்து தாச்சியை இறக்கி வைக்கவும். (முட்டையை உடைக்க சுத்தியலை பயன்படுத்தவும்)

உடனடியாக சமைத்தவுடன் சாப்பிடாமல் ஒரு மணித்தியாலமாவது ஊற விட்டு விட்டு, பின் சாப்பிடவும்.

எம் அனைவருக்கும் இதன் சுவை பிடித்து இருந்தது. மிகவும் வித்தியசமாக, நல்ல காரத்துடன் சூப்பராக இருந்தது.

குறிப்பு:

நான் நினைக்கின்றேன் நண்டுக்கு  வியாக்ரா மருந்தின் குணம் இருக்கு என்று. கலியாணம் முடித்த ஆண்கள் செய்யும் போது வீட்டில் மனுசியுடன் அன்று சண்டை பிடிக்காமல் நல்ல பிள்ளையாக இருந்தால், நண்டு தன் வேலையைக் காட்டும் போது புகுந்து விளையாடலாம். அத்துடன், மனைவி மாதவிலக்காக இருக்கும் காலத்தில் செய்து போட்டு விட்டத்தினை பார்த்துக் கொண்டு இருக்க வேண்டாம் :lol: . மற்றது, பிரம்மச்சாரிகள் இதைச் செய்தால் தேவையில்லாமல் கைரேகைகளை இழக்க வேண்டி வரும் :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி

இதுக்குத்தான் நீங்கள் இருக்கணும் என்பது..

லீவில்  போனாலும் எம்மீதான தங்களது கரிசனைக்கு என்ன பரிகாரம் செய்யப்போகின்றோமோ ..

நிழலியானந்தாவின் வாக்குகள் பலித்தே வருகின்றன..

தொடர்வோம் அவர் பாதையை.. :icon_mrgreen:  :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பச்சை உங்கள் நண்டு  செய்முறைக்கு அல்ல, முக்கியமான மருத்துவக் குறிப்புக்கு.

(கைரேகை மங்கி வரும் காரணம் குறித்து யோசித்துக்கொண்டு இருக்க நீங்கள் நிவாரணம் சொல்லி இருக்குறீர்கள்) 

:lol:
   
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தனிய ஆண்களுக்கான சமையல் குறிப்பு போல:icon_mrgreen: பார்க்க நல்லாய்தான் இருக்குது உண்மையிலேயே நிழலி செய்தாரா :Dஅல்லது உணவகத்தில் வாங்கிப் போட்டு கதை விடுகிறாரோ:lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முட்டையை சுத்தியலால் உடைக்கும்போது கையில் வைத்து உடைப்பதா?? மேசையில் வைத்து உடைப்பதா ??? என்று எழுதவில்லையே ??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நண்டு வாங்கும் போது நீலக்கால் நண்டு பார்த்து வாங்குங்கள்.

நண்டுக் கறியும் வெள்ளைப் புட்டும் சொல்லி வேலையில்லை.

நண்டுக்கறி அடுத்த அடுத்த நாள் இன்னும் சுவை கூட.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

------

நான் நினைக்கின்றேன் நண்டுக்கு  வியாக்ரா மருந்தின் குணம் இருக்கு என்று. கலியாணம் முடித்த ஆண்கள் செய்யும் போது வீட்டில் மனுசியுடன் அன்று சண்டை பிடிக்காமல் நல்ல பிள்ளையாக இருந்தால், நண்டு தன் வேலையைக் காட்டும் போது புகுந்து விளையாடலாம். அத்துடன், மனைவி மாதவிலக்காக இருக்கும் காலத்தில் செய்து போட்டு விட்டத்தினை பார்த்துக் கொண்டு இருக்க வேண்டாம் :lol: . மற்றது, பிரம்மச்சாரிகள் இதைச் செய்தால் தேவையில்லாமல் கைரேகைகளை இழக்க வேண்டி வரும் :)

நண்டிலை..... இவ்வளவு விஷயம் இருக்கா..?smiley_emoticons_lachtot.gif

இவ்வளவு நாளும், தெரியாமல் போச்சே...... :D  :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

படம் எடுக்கமுன் பக்கத்தால அள்ளி வாய்க்குள்ள போட்டாச்சு போல...!  :lol:  :)

நீங்கள் ரசித்து எழுதியவிதம் சுவையாய் இருந்தது. அப்ப குழம்பும் தூக்கலாய்தான் இருக்கும்...!! :)

Link to comment
Share on other sites

பதிலிட்ட அனைவருக்கும் நன்றி.

 நிழலி செய்தாரா :Dஅல்லது உணவகத்தில் வாங்கிப் போட்டு கதை விடுகிறாரோ :lol:

ஆனாலும் இப்படி எல்லாம் சந்தேகப்படக்கூடாது...! விடுமுறை நாட்களில் மனுசிக்கும் பிள்ளைகளுக்கும் வித்தியாசமாக சமைத்து அசர வைப்பதில் அப்படி ஒரு சுகம் இருக்கு! :)
 
குறிப்பு:

நான் நினைக்கின்றேன் நண்டுக்கு  வியாக்ரா மருந்தின் குணம் இருக்கு என்று. கலியாணம் முடித்த ஆண்கள் செய்யும் போது வீட்டில் மனுசியுடன் அன்று சண்டை பிடிக்காமல் நல்ல பிள்ளையாக இருந்தால், நண்டு தன் வேலையைக் காட்டும் போது புகுந்து விளையாடலாம். அத்துடன், மனைவி மாதவிலக்காக இருக்கும் காலத்தில் செய்து போட்டு விட்டத்தினை பார்த்துக் கொண்டு இருக்க வேண்டாம்  :lol: . மற்றது, பிரம்மச்சாரிகள் இதைச் செய்தால் தேவையில்லாமல் கைரேகைகளை இழக்க வேண்டி வரும்  :)

நன்றி

இதுக்குத்தான் நீங்கள் இருக்கணும் என்பது..

லீவில்  போனாலும் எம்மீதான தங்களது கரிசனைக்கு என்ன பரிகாரம் செய்யப்போகின்றோமோ ..

நிழலியானந்தாவின் வாக்குகள் பலித்தே வருகின்றன..

தொடர்வோம் அவர் பாதையை.. :icon_mrgreen:  :D

யாம் பெற்ற இன்பம் பெறட்டும் வையகம் என்ற ஒரு  ஆசைதான் (சரி எப்ப செய்து பரீச்சிப்பதாக உத்தேசம்? )

(கைரேகை மங்கி வரும் காரணம் குறித்து யோசித்துக்கொண்டு இருக்க நீங்கள் நிவாரணம் சொல்லி இருக்குறீர்கள்) 

:lol:
   
இதை ஒரு பிரமச்சாரி சொன்னால் ஏற்கலாம்... ஆனால்!

முட்டையை சுத்தியலால் உடைக்கும்போது கையில் வைத்து உடைப்பதா?? மேசையில் வைத்து உடைப்பதா ??? என்று எழுதவில்லையே ??

முட்டையை எடுத்து சரியாக நெற்றிப் பொட்டில் குறி பார்த்து வேகமாக நெற்றியுடன் மோதியும் உடைக்கலாம்.

நண்டு வாங்கும் போது நீலக்கால் நண்டு பார்த்து வாங்குங்கள்.

நண்டுக் கறியும் வெள்ளைப் புட்டும் சொல்லி வேலையில்லை.

நண்டுக்கறி அடுத்த அடுத்த நாள் இன்னும் சுவை கூட.

நீலக்கால் நண்டு தான் வாங்கினேன். இந்தக் கறியில் குழம்பு வராது. எனவே  பரோட்டா, ரொட்டி போன்றவையுடன் தான் சாப்பிடலாம். Butter Naan இதுக்கு சூப்பர்

தனித்துவிட்டார் போல.கறியும் நிறம் வரவில்லை.

அண்ணை, வீட்டில ஒரு நாள் தானும் மனுசி பிள்ளைகளுக்கு சமைச்சு கொடுப்பதில்லை போல.

இது ஊரில் செய்யும் விதத்தில் செய்த கறி அல்ல நிறம் வருவதுக்கு. மிளகாய் தூள் போடாமல் செத்த மிளகாய் மட்டும் போட்டு செய்த கறி.

Thank you

ஆங்..!

நண்டிலை..... இவ்வளவு விஷயம் இருக்கா..?smiley_emoticons_lachtot.gif

இவ்வளவு நாளும், தெரியாமல் போச்சே...... :D  :lol:

உத நாம் நம்பனும்மாக்கும்...

Link to comment
Share on other sites

கனடாவிலிருப்பவர்கள் முதலில் இரண்டு டொலருக்கு கறிவேப்பிலை வேண்டிக்கொண்டு கீழுள்ள முகவரியிலிருக்கும் மில்லுக்கு போங்கள்.அங்கு உங்களுக்கு வேண்டிய விதத்தில் தூளுக்கு தேவையானவற்றை தெரிவு செய்து கொடுங்கள்.உங்கள் கண்முன்னே மிளகாய் வெட்டி வறுத்து தூள் அரைத்து தருவார்கள்.தூள் அரைக்கும் அதே நேரம் அப்பம் ஓடர் பண்ணி சாப்பிட்டுகொண்டிருக்கலாம்.பின்னே கறி தூக்கல் தானே.....
 
30,Intermodal Dr
  #40
Brampton ,On
L5T5K1
647 708 4498
647 389 4498
 
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.