Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜெயலலிதா சொத்து குவிப்பு அப்பீல் மனு மீதான விசாரணை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

https://www.youtube.com/watch?v=zm0tKvOA3sQ

 

  • Replies 311
  • Views 29.2k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

கருணாநிதியை விட.... ஜெயலலிதா மேல். :D

 

 

உண்மைதான்  சிறி

ஆனால் தமிழன் தன்னைத்தானே ஆளவேண்டுமென்றால் 

இந்த இரு கட்சிகளும் பலமிளக்கணும்... :icon_idea:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜெயலலிதா அவர்கள் குமாரசாமிக்கு நன்றி சொல்லணும்.  :D

  • கருத்துக்கள உறவுகள்

ஜெயலலிதா அவர்கள் குமாரசாமிக்கு நன்றி சொல்லணும்.  :D

 

ஓ, நீங்கள் அவோவுக் காண்டி விரதம் இருந்தியலோ?  :o
 
அப்ப உங்களுக்கு நன்றி சொல்லத் தான் வேண்டும். :icon_mrgreen:
  • தொடங்கியவர்

 

ஓ, நீங்கள் அவோவுக் காண்டி விரதம் இருந்தியலோ?  :o
 
அப்ப உங்களுக்கு நன்றி சொல்லத் தான் வேண்டும். :icon_mrgreen:

 

 

யூ மீன் கண்ணகி விரதம் :icon_mrgreen::lol:

 

http://www.yarl.com/forum3/index.php?/topic/156790-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95/

  • கருத்துக்கள உறவுகள்

 

ஓ, நீங்கள் அவோவுக் காண்டி விரதம் இருந்தியலோ?  :o
 
அப்ப உங்களுக்கு நன்றி சொல்லத் தான் வேண்டும். :icon_mrgreen:

 

 

 

சீ

அண்ணையின் அன்றைய கனவுக்கன்னி :icon_mrgreen:

 

MGR மட்டும் குறுக்கிடாமல் இருந்திருந்தால்... :wub:

 

 

 

Edited by விசுகு

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சீ

அண்ணையின் அன்றைய கனவுக்கன்னி :icon_mrgreen:

 

MGR மட்டும் குறுக்கிடாமல் இருந்திருந்தால்... :wub:

 

 

அந்தக்காலத்திலை உந்த பாட்டுக்களை பார்த்து சாரத்தை நனைச்சதுதான் மிச்சம்.... :(

  • கருத்துக்கள உறவுகள்

அந்தக்காலத்திலை உந்த பாட்டுக்களை பார்த்து சாரத்தை நனைச்சதுதான் மிச்சம்.... :(

 

 

இப்பவும் அப்பிடித் தானோ?  :icon_mrgreen:

  • தொடங்கியவர்

ஜெ. வழக்கில்.... அப்பீல் குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை - சித்தராமையா

 

பெங்களூர்: அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்து விடுதலை செய்து அப்பீல் மனு மீது கர்நாடக உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ள தீர்ப்பை எதிர்த்து அப்பீல் செய்வது தொடர்பாக கர்நாடக அரசு இன்னும் முடிவெடுக்கவில்லை என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா கூறியுள்ளார்.

 

ஜெயலலிதா வழக்கைப் பொறுத்தவரை கர்நாடக உயர்நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து கர்நாடக அரசுதான் அப்பீல் செய்ய முடியும்.

 

 

இந்த வழக்கில் அரசுத் தரப்புக்கு உதவி புரிந்த திமுகவால் அப்பீல் செய்ய முடியாது. அதேசமயம், இந்த வழக்கை முதலில் தொடுத்தவரான சுப்பிரமணிய சாமி அப்பீல் செய்ய முடியும். ஆனால் அப்பீல் செய்வது குறித்து கர்நாடக அரசுத் தரப்பிலிருந்து எந்தத் தகவலும் இதுவரை இல்லை. இந்த நிலையில் இதுகுறித்து கர்நாடக முதல்வர் சித்தராமையாவிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, தீர்ப்பின் முழு விவரம் தெரியாது. தீ்ர்ப்பின் முழுவிவரமும் அறிந்த பின்னர், சட்டத்துறையுடன் ஆலோசனை நடத்திய பின்னரே இந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்வது குறித்த முடிவை கர்நாடக அரசு எடுக்கும் என்றார்.

 

 

Read more at: http://tamil.oneindia.com/news/india/jayalaithaa-acquittal-karnataka-yet-decide-on-appeal-226584.html

  • தொடங்கியவர்

கோயிலுக்குச் சென்று திரும்பியதும் தீர்ப்பு எழுதிய நீதிபதி
 

 

குமாரசாமியின் பூர்விகம் கர்நாடக மாநிலம் பெல்லாரி என்றாலும், பிறந்து வளர்ந்தது பெங்களூருவில்தான். ஏழ்மை யான குடும்பத்தைச் சேர்ந்த குமாரசாமி அரசுப் பள்ளியில் படித்து, முதல் தலைமுறையாக கல்லூரியை மிதித்தார். தனது தந்தையின் ஆசையின்படி பெங் களூரு சட்டக் கல்லூரியில் சேர்ந்து சட்டப்படிப்பில் பட்டம் பெற்றார். 12 ஆண்டுகள் வழக்கறிஞராக வலம்வந்த குமாரசாமி 1995-ல் பெங்களூரு மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதியாக பொறுப்பேற்று சிவில் மற்றும் குற்றவியல் வழக்குகளை விசாரித்தார். குடும்ப நல நீதிமன்றம், லோக் ஆயுக்த நீதிமன்றம் ஆகியவற்றில் 10 ஆண்டுகள் பணியாற்றிய பின், 2005-ல் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதி யாகவும், 2007-ல் நிரந்தர நீதிபதி யாகவும் பதவியேற்றார்.

 

 

முல்பாகலில் முடிவு

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஹெச்.எல்.தத்து கர்நாடக உயர் நீதிமன்றத்தில் பணியாற்றிய போது அவருடன் நெருங்கிப் பழகியுள்ளார். இருவரும் நெருக்க மான நண்பர்கள் என்பதால் விடுமுறை காலங்களில் சிருங்கேரி கோயிலுக்கும், முல்பாகல் சிக்கு திருப்பதி கோயிலுக்கும் சென்று பூஜை செய்து வருவார்கள். ஜெயலலிதா வழக்கில் தீர்ப்புக்கு இறுதி வடிவம் கொடுத்துவிட்டு மே 3-ம் தேதி தனியாக சிக்கு திருப்பதி கோயிலுக்கு சென்று பிரம்ம முகூர்த்த பூஜை செய்துள்ளார் குமாரசாமி. அநேகமாக அங்கு சென்று வந்த பிறகுதான் தீர்ப்பின் முடிவை தீர்மானித்திருக்கிறார். இதனை குமாரசாமியுடன் பணியாற்றும் நீதிமன்ற ஊழியர்கள் உறுதியாக சொல்கிறார்கள்.

 

 

கடைசி நிமிடத்தில்..

கடந்த 2 மாதங்களாக தினமும் காலை 9.30 மணிக்கு நீதிமன்றத்துக்குள் நுழையும் அவரது கார் மாலை 6.50 மணிக்கு தான் வீட்டுக்கு கிளம்பும். அதுவரை சேம்பரில் இருந்து இயற்கை உபாதைகளை தவிர எதற்கும் எழுந்து போகாமல் தீர்ப்பெழுதியுள்ளார். இந்த பணிக்காக தான் தேர்ந்தெடுத்த‌ 7 பேர்களில் நம்பிக்கையான 3 பேரிடம் முக்கிய பக்கங்களை தட்டச்சு செய்ய கொடுத்துள்ளார்.

 

ஞாயிற்றுக்கிழமைகளிலும் தீர்ப்பெழுதும் பணி நடந்தது. நீதிபதியின் தனி வழி காட்டு தலின்படி நீதிமன்ற உதவி அதிகாரி லாவண்யா தீர்ப்பு ஆணையை பிரின்ட் எடுக்கும் பணியில் ஈடுபட்டார். குறிப்பாக தீர்ப்பின் கடைசி இரண்டு பக்கங் களை (ஆப்ரேட்டிவ் போர்ஷன்) நேற்று காலை 7.30 மணிக்கு வந்து தயாரித்துள்ளார். ஏனென்றால் தீர்ப்பின் முடிவு வெளியே கசிந்து விடக்கூடாது என்பதற்காகவே குமாரசாமி இவ்வாறு செய்துள்ளார்.

 

அதிரடி தீர்ப்புகள்

ஆயிரம் வழக்குகளுக்கு மேல் விசாரித்துள்ள அவர் அதில் சரிபாதி வழக்குகளில் விசாரணை நீதிமன்றம் வழங்கிய தண்டனையை உறுதி செய்துள்ளார். ஆனால் பெரிய வழக்குகளிலும், பிரபல வழக்கு களிலும் விசாரணை நீதிமன்ற தீர்ப்புக்கு எதிரான தீர்ப்பையே வழங்கியுள்ளார்.

இதற்கு உதாரணமாக முத்திரைத்தாள் மோசடி மன்னன் கரீம் தெல்கி, சர்ச்சைக்குரிய சாமியார் நித்யானந்தா, பி.டி. பருத்தி போன்ற வழக்குகளை கூறலாம். அதே போல நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய கம்பாளப்பள்ளி கிராமத்தில் 7 தலித்துகள் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்ட வழக்கில் ‘தலித் படுகொலைக்கு போதிய ஆதாரங்கள் இல்லை' எனக்கூறி அனைவரையும் விடுதலை செய்தார்.

 

வருகிற ஆகஸ்ட் மாதத்துடன் ஓய்வு பெறுகிற குமாரசாமி மீது இதுவரை பெரிய அளவிலான குற்றச்சாட்டுகள் இல்லை. இருப்பினும் தவறான ஆவணங்களை தாக்கல் செய்து இரு வீடுகள் பெற்றதாக புகார் எழுந்தது. அப்போது இவருடன் சர்ச்சையில் இடம்பிடித்த‌ ஹெச்.எல். தத்து, குமாரசாமிக்கு ஆதர வாக செயல்பட்டு பிரச்சினையை தீர்த்து வைத்தார்.

 

பெரிதும் பேசப்படும் தீர்ப்பை வழங்கிய குமாரசாமியை கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதிகளும், பதிவாளர்களும் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். ஆனால் தலைமை நீதிபதி வகேலாவும், ஊழல் தடுப்புத்துறை பதிவாளரும், குன்ஹாவும் சந்திக்கவே இல்லை. தனது தீர்ப்பால் இவர்கள் அதிருப்தி அடைந்திருக்கலாம் என குமாரசாமி தனது உதவியாளர் கனகராஜிடம் தெரிவித்திருக்கிறார்.
 

 

http://tamil.thehindu.com/india/%E0%AE%95%E0%AF%87%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF/article7196643.ece

  • தொடங்கியவர்

ஒருதலைபட்சமான விசாரணை, தீர்ப்பு: அரசு வழக்கறிஞர் ஆச்சார்யா கருத்து
 

 

கர்நாடக உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து கர்நாடக அரசு மேல்முறையீடு செய்யுமா அல்லது இத்துடன் இந்த வழக்கு முற்றுப் பெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதுதொடர்பாக சொத்துக் குவிப்பு வழக்கில் அரசு வழக்கறிஞராக ஆஜரான‌ ஆச்சார்யா ‘தி இந்து'வுக்கு சிறப்பு பேட்டியளித்தார்.

 

கர்நாடக உயர் நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை எதிர்பார்த்தீர்களா?

முற்றிலுமாக எதிர்பார்க்க வில்லை. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தனக்குள்ள அதிகாரத்தின் அடிப்படையின் இந்த மேல்முறையீட்டை விசாரிக்க 3 மாதங்கள் கால அவகாசம் அளிக்கிறார். இதற்கு முன்பு எத்தனை வழக்குகளில் இத்தகைய கால அவகாசம் வழங்கப்பட்டிருக் கிறது? ஒரு வழக்கை விரைவாக முடிக்க வேண்டும் என்பதைவிட, இயற்கையான நீதி கிடைக்க வேண்டும் என்ற நோக்கம் தானே சிறந்ததாக இருக்க முடியும்?

 

மேல் முறையீட்டில் குற்றவாளிகள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் ஒவ்வொருவரும் 10 நாட்கள் வரை வாதிட்டுள்ளனர். அதனை அப்போதைய அரசு வழக்கறிஞர் ஆட்சேபித்தாரா தெரியவில்லை. ஆனால் என்னை அரசு வழக்கறிஞராக நியமித்தபோது எழுத்துப்பூர்வமாக மட்டுமே வாதிட வேண்டும். அதுவும் ஒரு நாளுக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தர விடப்பட்டது. அரசு வழக்கறிஞருக்கு வாதிட அனுமதி அளிக்காமல் ஒருதலைபட்சமாக விசாரணையை அனுமதித்தது ஏன்? 18 ஆண்டுகள் இழுத்தடித்த ஒரு வழக்குக்கு, கூடுதலாக 6 மாதங்கள் வழங்குவது குற்ற மில்லையே?

 

இவ்வளவு சிக்கல் நிறைந்த வழக்கில், ஒரே நாளில் எழுத்துப்பூர்வ வாதத்தை தாக்கல் செய்ய நீங்கள் சம்மதித்தது ஏன்?

ஜெயலலிதாவின் வழக்கில் அரசு வழக்கறிஞராக ஆஜரான போது நான் நேரடியாகவும், மறைமுகமாகவும் பலவிதமான அச்சுறுத்தலுக்கு ஆளானேன். பாஜக மேலிடத் தலைவர்கள் தொடர்ந்து அழுத்தம் கொடுத்ததால் தான் அப்போது ராஜினாமா செய்தேன்.இந்த வழக்கால் நான் சந்தித்த சோதனைகளைப் பற்றி எனது சுயசரிதையில் ஓர் அத்தியாயமே எழுதி இருக்கிறேன். ஏப்ரல் 27-ம் தேதி உச்ச நீதிமன்றம் பவானிசிங்கை நீக்கியபோது நான் எனது சொந்த ஊரான உடுப்பியில் இருந்தேன். கர்நாடக அரசுக்கு ஒரே ஒருநாள் கால அவகாசம் வழங்கி எழுத்துப்பூர்வ வாதத்தை தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. உச்ச நீதிமன்ற தீர்ப்பை மீற முடியாது என்பதால் கர்நாடக அரசு என்னை அணுகியது.

 

உங்கள் ஒருவருக்கு மட்டும் தான் இந்த வழக்கின் அனைத்து விஷயங்களும் தெரியும். உங்களால் மட்டும்தான் ஒரே நாளில் எழுத்துப்பூர்வ வாதத்தை தாக்கல் செய்ய முடியும். எனவே நீங்கள் மீண்டும் அரசு வழக்கறிஞ ராக பொறுப்பேற்க வேண்டும் என கேட்டார்கள். அரசாங்கமும் நீதிமன்றமும் எனது உதவியை எதிர்ப்பார்க்கும் நிலையில் எனது அகங்காரத்தை காட்ட முடியாது. எனவே வேறு வழி இல்லாமல் ஒப்புக்கொண்டு எழுத்துப்பூர்வ அறிக்கையை தாக்கல் செய்தேன்''என்றார்.
 

 

http://tamil.thehindu.com/india/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/article7196641.ece

  • கருத்துக்கள உறவுகள்

 

இயற்கை சொல்லும் தீர்ப்புக்கு யாரும் மறுப்பெழுத முடியாது. மற்றும்படி மனிதன் இயற்றியவை எல்லாம் போலி. :lol::D

 

பூமி கொஞ்சம் குலுங்கினாலே.. போதும்.. ஆட்டம் முடியும். :icon_idea:

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்

நீதிபதி குமாரசாமியின் சொத்து மதிப்பீடு சரியானது அல்ல: சாடும் பி.வி. ஆச்சார்யா!

 

பெங்களூரு: ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் கர்நாடகா உயர்நீதிமன்ற நீதிபதி குமாரசாமியின் சொத்து மதிப்பீடு முறை சரியானது அல்ல என்று அரசு வழக்கறிஞர் ஆச்சார்யா திட்டவட்டமாக கூறியுள்ளார். சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து ஜெயலலிதா உள்ளிட்டோரை விடுதலை செய்து நீதிபதி குமாரசாமி நேற்று உத்தரவிட்டிருந்தார். இந்த தீர்ப்பு பல்வேறு தரப்பினரையும் அதிர்ச்சி அடையவைத்துள்ளது.

 

 இந்த தீர்ப்பு குறித்து அரசு வழக்கறிஞராக ஆஜராகிய பி.வி. ஆச்சார்யா கூறியதாவது: நீதிபதி குமாரசாமி தீர்ப்பளிக்கும் போது சொத்துகளை மதிப்பீடு செய்து கூறிய முறை சரியானது அல்ல. அவர் போட்டிருக்கும் கூட்டுத் தொகைகளில் பிழைகள் உள்ளன. இது ஒன்றே மேல்முறையீட்டுக்கு செல்ல போதுமானதாகும்.

 

கட்டுமான செலவு, திருமண செலவு ஆகியவற்றை ரூ5 கோடி என மதிப்பீடு செய்திருக்கிறார் நீதிபதி குமாரசாமி. வங்கிக் கடன்கள் குறித்து நீதிபதி குமாரசாமி செய்திருக்கும் மதிப்பீடு தவறானதாக இருக்கிறது. இந்த அடிப்படையே மேல்முறையீடு செல்வதற்கு போதுமானதாக இருக்கும். இது தொடர்பாக கர்நாடகா அரசுடன் கலந்து ஆலோசித்து முடிவு செய்வோம். இவ்வாறு ஆச்சார்யா கூறினார்.

 

Read more at: http://tamil.oneindia.com/news/india/jaya-case-spp-questions-judges-calculations-says-excellent-case-for-appeal-226607.html

அடபாவியளா. அப்ப 2016 தேர்தலில முருகன் முன்னேற்ற கழக தலைவருக்கு சங்குதான்.  :D  :lol:  :icon_idea:

அம்மா எண்டா சும்மாவா. நாட்டிலை அம்மாவை விட  விட பெரும்பெருச்சாளிகள்  எல்லாம் சுதந்திரமாக உலாவும் போது அம்மா மட்டும் ஏன் தண்டனை பெற வேண்டும். சோனியா ராகுல் கருணாநிதி குடும்பம் மாறன் பிரதர்ஸ் போன்ற பெரும் ஊழல் பேர்வழிகள் இன்னும் வெளியில் சுதந்திரமாக உலாவுகிறார்கள். எல்லாரும் சொத்து குவிக்கும் போது அம்மா மட்டும் கொஞ்சம் எடுத்தால் தப்பா என்ன?  :D  :lol:

அம்மா முழு பலத்துடன் 2016 தேர்தலில் களம் இறங்கினால் முருகன் முன்னேற்ற கழக தலைவர் கட்டு காசும் இல்லாமல் துண்ட காணம் துணிய காணம் எண்டு ஓட வேண்டியான்  :lol:  :lol:  :lol:


அம்மா விடுதலையான செய்தி கேட்டவுடன் கிழவனுக்கு மாரடைப்பு வந்து இன்னும் மண்டையை போட இல்லையா? :D  :lol:

  • தொடங்கியவர்

தப்பு கணக்கு' விவகாரம் விஸ்வரூபம்.. ஹைகோர்ட் தீர்ப்புக்கு தடை கோர ஆச்சாரியா திட்டம்!

 

பெங்களூரு: ஹைகோர்ட் வழங்கிய தீர்ப்பில், கடன் தொகை தவறாக மதிப்பிடப்பட்டு, அதன் அடிப்படையில் ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டுள்ள விவகாரம் விஸ்வரூபம் எடுத்து வருகிறது. இந்த அடிப்படையில், கோர்ட் தீர்ப்புக்கு சுப்ரீம்கோர்ட்டில் இடைக்கால தடை வாங்க தீவிர ஆலோசனை நடத்தி வருவதாக அரசு வக்கீல் ஆச்சாரியா தெரிவித்துள்ளார்.

 

ஜெயலலிதா தரப்பினர் பெற்ற கடன் 24,17,31,274 ரூபாய் என்று நீதிபதி குமாரசாமி தனது தீர்ப்பில் குறிப்பிட்டிருக்கிறார். ஆனால் நீதிபதியே குறிப்பிட்ட கடன் தொகையை கூட்டி பார்த்தால், அதன் கூட்டுத் தொகை 10,67,31,274 ரூபாய் தான் வரும்.

124a7q0.jpg

 

 ஆனால் நீதிபதியோ, இதன் கூட்டுத் தொகை 24,17,31,274 ரூபாய் என்றும், இந்தக் கூட்டுத் தொகையின் அடிப்படையில் தான் ஜெயலலிதா மீது சொத்துக் குவிப்பு வழக்கு 66 கோடி ரூபாய்க்கு தொடுத்தது தவறு என்றும் கூறியுள்ளார்.

 

இதன் அடிப்படையில்தான் வருவாய்க்கு அதிகமாக ஜெயலலிதா 8.12 சதவீதம் மதிப்புக்கு மட்டுமே சொத்து சேர்த்துள்ளதாக கூறியுள்ளார். ஆனால், உண்மையான கடன் தொகையை வைத்து கணக்கிட்டு பார்த்தால் வருமானத்தைவிட 76.75 சதவீதம் அளவுக்கு கூடுதலாக சொத்து சேர்த்துள்ளது தெரியவருகிறது. இந்நிலையில்தான், நீதிபதி தனது தீர்ப்பின் மையப்புள்ளியாக கொடுத்த அந்த 8.12 சதவீத பாயிண்ட்டில் தவறு உள்ளதை எதிர்க்கட்சிகளும், சட்ட வல்லுநர்களும் கண்டுபிடித்துள்ளனர்.

2ed6x5y.jpg

 

 எனவே, ஹைகோர்ட் தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்யப்பட்டால், இந்த ஓட்டை பெரும் பின்னடைவை ஜெயலலிதா தரப்புக்கு ஏற்படுத்தும். கீழ்நீதிமன்ற நீதிபதி மைக்கேல் டி குன்ஹா இதையெல்லாம் பரிசீலித்து கூட்டி கழித்து கணக்கு சரியாக போட்டுள்ளதையும், சுப்ரீம் கோர்ட்டில் எதிர்தரப்பு எடுத்து வைக்க வாய்ப்புள்ளது.

2mxrsz.jpg

 

 இந்நிலையில், அரசு வக்கீல் ஆச்சாரியா கூறுகையில், "கூட்டல் கணக்கில் பிழை உள்ளது. எனவே, ஹைகோர்ட் தீர்ப்பை எதிர்த்து அப்பீல் செய்தால் அப்போது, ஹைகோர்ட் தீர்ப்புக்கு இடைக்கால தடை விதிக்க கோரிக்கை விடுக்க தீவிரமாக பரிசீலிக்கப்படும்.

 

அப்போது இந்த பாயிண்ட் மிகவும் உதவும்" என்றார்.  ஹைகோர்ட் தீர்ப்புக்கு சுப்ரீம்கோர்ட் இடைக்கால தடை விதித்தால், ஜெயலலிதாவால் முதல்வராக பதவி வகிக்க முடியாத சட்ட சிக்கல் ஏற்படும் வாய்ப்புள்ளது.

 

fn5j4j.jpg

Read more at: http://tamil.oneindia.com/news/india/stay-the-judgment-is-matter-deep-consideration-says-acharya-226622.html

  • தொடங்கியவர்

ஜெ.வழக்கு தீர்ப்பில் பிழை: சட்ட செயலர் படித்து பார்க்க கர்நாடகா சட்ட அமைச்சர் உத்தரவு

 

ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கின் தீர்ப்பை முழுவதுமாக படிக்க சட்டத்துறை செயலாளருக்கு, கர்நாடக சட்டத்துறை அமைச்சர் ஜெயச்சந்திரா உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து ஜெயலலிதா விடுதலையை எதிர்த்து கர்நாடக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோரை விடுதலை செய்து கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி குமாரசாமி உத்தரவிட்டார்.

 

இந்த தீர்ப்பு பல்வேறு சர்ச்சைகளை கிளப்பி வருகிறது.

 

நீதிபதியின் கூட்டல் கணக்கில் பிழை உள்ளதாக கர்நாடகா அரசு வழக்கறிஞர் ஆச்சாரியா தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கின் தீர்ப்பை முழுவதுமாக படிக்க சட்டத்துறை செயலாளருக்கு, கர்நாடக சட்டத்துறை அமைச்சர் ஜெயச்சந்திரா உத்தரவிட்டுள்ளார்.

 

மேலும் கர்நாடக அரசு வழக்கறிஞர் பி.வி.ஆச்சார்யாவுடன் கலந்து ஆலோசித்து அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். இதன்மூலம் உயர்நீதிமன்ற தீர்ப்பினை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் கர்நாடக அரசு மேல்முறையீடு செய்யும் என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

 

 

Read more at: http://tamil.oneindia.com/news/india/karnataka-law-minister-orders-go-throw-the-jayalalitha-judge-226624.html

  • கருத்துக்கள உறவுகள்

மின்கல பற்றுச்சீட்டை சட்டைப் பையில் கண்டுபிடித்தவர்களுக்கு கூட்டல் கழித்தல் எல்லாம் ஒரு பெரிய பிரச்சினையா? :icon_idea::D

  • தொடங்கியவர்

ஹைகோர்ட் தீர்ப்பு 'கணித தவறுகளின் சோகம்'.. ஜெ. மீண்டும் முதல்வர் பதவியை இழப்பார்: சு.சுவாமி

 

டெல்லி: ஜெயலலிதாவை சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து கர்நாடக உயர்நீதிமன்றம் விடுவித்திருந்த நிலையில், அதை எதிர்த்து சுப்ரீம்கோர்ட்டில் அப்பீல் செய்ய பாஜகவின் சுப்பிரமணியன் சுவாமி திட்டமிட்டுள்ளார். இதுகுறித்து சு.சுவாமி கூறுகையில், ஹைகோர்ட் தீர்ப்பை முழுமையாக படித்து பாரத்த பிறகு, எந்த இடத்தில் தவறு உள்ளது என்பதை பரிசீலித்து, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும். இந்த வழக்கை அப்படியே போகட்டும் என்று விட முடியாது என்றார்.

 

 

 இதனிடையே, இன்று தனது டிவிட் ஒன்றில் சு.சுவாமி கூறுகையில், உச்ச நீதிமன்றத்தில் அப்பீல் செய்ய உள்ளேன். ஹைகோர்ட் தீர்ப்பு, 'கணித தவறுகளின் சோகம்'. எனவே, ஜெயலலிதா முதல்வரானால், மீண்டும் தனது பதவியை அவர் இழக்க வேண்டிவரும் என்று கூறியுள்ளார். மற்றொரு டிவிட்டில், சிறப்பு நீதிமன்றம் ஜெயலலிதாவுக்கு தண்டனை கொடுத்தபோது, கன்னடர்கள் ஒரு தலைப்பட்சமாக நடப்பதாக கூறினார்.

 

Subramanian SwamyVerifizierter Account
‏@Swamy39

In my Appeal to SC In JJ DA case. I will prove that the KHC judgment is a "tragedy of arithmetic errors". JJ will have to resign again if CM

 

ஹைகோர்ட் விடுதலை செய்தால் அது நியாயம். சுப்ரீம்கோர்ட் ஜெயலலிதாவுக்கு தண்டனை கொடுத்தால் அப்போது என்ன சொல்வார் என்று சு.சுவாமி கேள்வி எழுப்பியுள்ளார். வருமானம் மற்றும் செலவு போன்றவற்றை கணக்கு போட்டு பார்த்து சுமார் 8.12 சதவீத சொத்துக்கள்தான், கணக்கில் வராதவை என்று கூறிய ஹைகோர்ட், அதிகபட்சம் 10 சதவீதம் வரை கணக்கு காட்ட முடியாத சொத்துக்கள் இருக்க அனுமதியுள்ளதாக கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

 

 

Read more at: http://tamil.oneindia.com/news/india/will-appeal-against-verdict-jayalalithaa-case-swamy-226567.html

  • தொடங்கியவர்

"தப்புக் கணக்கு".... ஜெ. தீர்ப்பை ஆய்வு செய்கிறார் நீதிபதி குமாரசாமி!

 

பெங்களூரு: அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் அப்பீல் மனு மீது தான் அளித்த தீர்ப்பில் பல குறைபாடுகள் குறிப்பாக தப்புக் கணக்கு இருப்பதாக பரபரப்பு கிளம்பியுள்ள நிலையில் அந்தக் குறைபாடுகள் குறித்து நீதிபதி குமாரசாமி தனது சேம்பரில் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் தாக்கல் செய்த அப்பீல் மனுவை விசாரித்த நீதிபதி குமாரசாமி, நான்கு பேரின் அப்பீல் மனுக்களையும், அவர்களது தரப்பு வாதங்களையும் ஏற்று விடுதலை செய்து அதிரடி தீர்ப்பளித்தார்.

 

 

இந்தத் தீர்ப்பின்போது அவர் நான்கு பேரின் சொத்துக் கணக்கு குறித்து முக்கியமாக குறிப்பிட்டு அதன் அடிப்படையில் விடுதலை செய்வதாக தெரிவித்திருந்தார். ஆனால் அங்குதான் பெரும் தப்பு நடந்து விட்டது. அதாவது குமாரசாமி பட்டியலிட்டுக் கூறியிருந்த சொத்துக்கணக்கில் பெரும் கூட்டல் கழித்தல் பிழை நடந்துள்ளது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பார்த்ததுமே தெரியும் வகையிலான மிகப் பெரிய பிழை அந்தக் கூட்டல் கழித்தலில் இருப்பது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாடே பெரிதும் எதிர்பார்த்த ஒரு மிகப் பெரிய வழக்கில், அதுவும் ஊழல் தொடர்பான, சொத்துக் குவிப்பு தொடர்பான அப்பீல் வழக்கில் இவ்வளவு அஜாக்கிரதையாக எப்படி நீதிபதி குமாரசாமி தவறிழைத்தார் என்று அனைவரும் விமர்சித்து வருகின்றனர்.

 

 

இந்தத் தீர்ப்பை எதிர்த்து உடனடியாக கர்நாடக அரசு அப்பீல் செய்ய வேண்டும் என்று சிறப்பு வழக்கறிஞர் பி.வி.ஆச்சார்யா வலியுறுத்தியுள்ளார். தமிழகத்திலும் அதிமுகவைத் தவிர அத்தனை எதிர்க்கட்சிகளும் அப்பீல் செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளன. இதனால் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மேலும் ஜெயலலிதா மீண்டும் முதல்வராக பதவியேற்பதற்கும் இது பெரும் குந்தகமாக மாறும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் தனது தீர்ப்பில் சுட்டிக் காட்டப்பட்டுள்ள குறைபாடுகள் குறித்து ஆய்வில் இறங்கியுள்ளார் நீதிபதி குமாரசாமி என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. தான் விசாரணை நடத்தி வந்த 14ம் எண் சேம்பரில் தனது உதவியார்களுடன் இணைந்து என்ன தவறு நடந்தது, அதை எப்படிச் சரி செய்வது என்பது குறித்து தீவிர ஆலோசனை மற்றும் ஆய்வில் நீதிபதி குமாரசாமி ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

 

 

ஆனால் கணக்கை சரி செய்தாலும் தீர்ப்பை அவர் திருத்த சட்டத்தில் இடமில்லையாம். இதனிடையே, குமாரசாமி தானாக முன்வந்து தனது கணக்கீடு தவறை திருத்துவாரா, அல்லது, யாராவது இதுகுறித்து மனு தாக்கல் செய்யும்வரை காத்திருந்து, அந்த மனுவை ஆதாரமாக கொண்டு திருத்தம் செய்வாரா என்பது புரியாத புதிராக உள்ளது.

 

 

Read more at: http://tamil.oneindia.com/news/india/justice-kumaraswamy-look-into-the-errors-his-judgement-226679.html

  • தொடங்கியவர்

ஜெ. வழக்கில் அப்பீல் செய்ய அரசியல் நெருக்கடியில்லை: கர்நாடக முதல்வர் சித்தராமையா

 

பெங்களூரு: ஜெயலலிதா வழக்கில் ஹைகோர்ட் வழங்கியுள்ள தீர்ப்புக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் கர்நாடக அரசு அப்பீல் செய்வது குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை என்று தெரிவித்த கர்நாடக முதல்வர் சித்தராமையா, இதில் அரசியல் நெருக்கடி ஏதுமில்லை என்று கூறினார். சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு கர்நாடகாவில் பொறுப்பேற்று, 2 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், பெங்களூருவில் இன்று பத்திரிகையாளர்களுடனான கலந்துரையாடல் நடத்தினார் சித்தராமையா. அப்போது, ஜெயலலிதா வழக்கில் கர்நாடகா அப்பீல் செய்யுமா என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

 

 

 இதற்கு பதிலளித்து சித்தராமையா கூறுகையில், தீர்ப்பு நகலை கர்நாடக சட்ட வல்லுநர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். அரசு தரப்பில் வாதிட தனக்கு வாய்ப்பே தரப்படவில்லை என்று, அரசு தரப்பு வக்கீல் ஆச்சாரியா கூறியதையும் அரசு கவனத்தில் எடுத்துள்ளது. மேல்முறையீடு செய்ய சாதகமான அம்சங்கள் உள்ளனவா என்பதை தீர்ப்பு பக்கங்கள் முழுமையையும் படித்து பார்த்த பிறகு சட்ட வல்லுநர்கள் குழு முடிவு செய்யும். இந்த வழக்கில் அதிமுக அல்லது திமுக சம்மந்தப்பட்டுள்ளதா என்று கர்நாடக அரசு பார்க்கவில்லை. சட்ட பிரச்சினையாக மட்டுமே இதை அணுகுகிறது. அரசியல் காரணங்களின் கோணத்தில் இந்த வழக்கு பார்க்கப்படவில்லை. இவ்வாறு சித்தராமையா கூறினார்.

 

 

Read more at: http://tamil.oneindia.com/news/india/no-political-pressure-karnataka-government-the-jayalalitha-asset-case-226685.html

  • தொடங்கியவர்

கூட்டல் தவறை திருத்த சுப்ரீம்கோர்ட் போக வேண்டாம், ஹைகோர்ட்டாலே முடியும்! ஆனால்...

 

பெங்களூரு: ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் கர்நாடக ஹைகோர்ட் அளித்த தீர்ப்பில் ஏற்பட்டுள்ள கணித தவற்றை, உச்சநீதிமன்றம் செல்லாமல், ஹைகோர்ட்டே திருத்திக்கொள்ள முடியும் என்று சட்ட வல்லுனர்கள் கூறுகின்றனர். ஆனால், அதில் ஒரு சிக்கல் உள்ளது. ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில், கடந்த 11ம் தேதி தீர்ப்பு வழங்கிய கர்நாடக ஹைகோர்ட், ஜெயலலிதா, வருவாய்க்கு அதிகமாக 8.12 சதவீதம் அளவுக்குதான் சொத்து சேர்த்துள்ளார் என்று கூறி அவரை விடுதலை செய்தது.

 

3478s2h.jpg

 

கோடிக்கணக்கில் தவறு ஆனால், ஜெயலலிதா பெற்ற வங்கிக் கடன்களை கூட்டும்போது, அது ரூ.24.17 கோடி என்று நீதிபதி குமாரசாமி குறிப்பிட்டுள்ளார். சரியாக கூட்டினால், அது ரூ.10.67 கோடியாகும். எனவே, வருவாய்க்கு மீறிய சொத்து மதிப்பு கிட்டத்தட்ட 77 சதவீதமாகிவிடுகிறது.

 

தடை கோர ஆச்சாரியா திட்டம் இந்த கணித தவறை வைத்து, சுப்ரீம்கோர்ட்டில் அப்பீல் செய்யும்போது, தீர்ப்புக்கு தடை கோரலாம் என்று அரசு வக்கீல் ஆச்சாரியா கூறியிருந்தார். அவ்வாறு தடை கோரினால், ஜெயலலிதா முதல்வர் பதவி பறிபோகும் வாய்ப்பு ஏற்பட்டுவிடும்.

 

ஹைகோர்ட்டாலே முடியும் ஆனால், சுப்ரீம்கோர்ட்டுக்கு போகாமலே, ஹைகோர்ட்டே தனது தவற்றை திருத்திக்கொள்ள முடியும் என்கின்றனர் மூத்த வழக்கறிஞர்கள். குற்றவியல் நடைமுறைச் சட்டம், செக்ஷன் 362ன்படி, ஒரு கோர்ட் தீர்ப்பு வழங்கிய பிறகு, கணித தவறு இருந்தால் அதை திருத்த முடியும்.

 

தீர்ப்பையே மாற்ற வேண்டும் ஆனால், தீர்ப்பை மாற்றிச் சொன்னால், ஆச்சாரியா கூறியபடி, சொத்துமதிப்பு உயர்ந்துவிடும். எனவே, சொத்து மதிப்பை ஆதாரமாக கொண்டு வழங்கப்பட்ட தீர்ப்பையே மாற்ற வேண்டி வரும். ஏனெனில், இந்த வழக்கை பொறுத்தளவில், அந்த கணக்கீடுதான், தீர்ப்பின் ஆதார புள்ளியாகும். அதையே மாற்றினால், தீர்ப்பு மாறுபட்டேயாக வேண்டும் என்பதே லாஜிக்.

 

பொறுத்திருந்து பார்க்க எனவே, ஹைகோர்ட் தனது தீர்ப்பை திருத்த முன்வருமா, அல்லது சுப்ரீம்கோர்ட்டுக்கு போய் ஹைகோர்ட் தீர்ப்பை ஸ்டே செய்வதுதான் ஒரே வழியா என்பது விடை காணாத கேள்வியாகவே தொடருகிறது.

 

Read more at: http://tamil.oneindia.com/news/india/jaya-court-can-correct-arithmetic-error-but-it-could-reverse-verdict-totally-226668.html

  • கருத்துக்கள உறவுகள்

நீதிபதி குமாரசாமிக்கு பிழையான கல்குலேட்டர்களை வழங்கியவர்கள் அதிமுக‌ வக்கீல்களாத்தான் இருக்கும்.. :icon_idea::D

  • கருத்துக்கள உறவுகள்

என்ன தான் நடக்கின்றது.
அம்மா உள்ளேயா வெளியேவா :D

  • கருத்துக்கள உறவுகள்

அம்மா உள்ளே என்டு நினைப்பீங்கள் , ஆனால் அவ வெளியே  இருக்கிறா , வெளியே என்டு நினைத்தால் அவ உள்ளே இருக்கிறா , அவவாவது  பரவாயில்லை...!

 

எனக்கு பண்ணீரை நினைக்கத்தான் கண்ணீர் வருது....!  அந்தாளும் எவ்வளவுக்குத்தான் முதல்வராகவே நடிக்கிறது...!! :lol::D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.