Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உங்களுடைய அரசிலுக்காக இலங்கை தமிழரை பலிக்கடாக்களாக்குவதை நிறுத்தி கொள்ளுங்கள்; இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம்

Featured Replies

இலங்கையில் நடைபெற்று முடிவடைந்த ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரிபால சிறிசேன தெரிவுசெய்யப்பட்டுள்ளமை தமிழர்களின் மனங்களில் ஓரளவுக்கு நிம்மதியை ஏற்படுத்தியுள்ள தருணத்தில் தமது உசுப்பேத்தும் பாணியை தமிழகத் தலைவர்களுள் ஒருவரான தொல்திருமாவளவன் தொடங்கியிருப்பது வேதனை தருகின்ற விடயமாகும் எனத் தெரிவித்துள்ள தழிழர் ஆசிரியர் சங்கம், இதுபோன்ற கருத்துக்களை முன்வைத்தால் உலகளாவிய ரீதியில் உள்ள ஆசிரியர்களுக்கூடாக உங்களைக் கண்டிக்க வேண்டியிருக்கும் எனவும் எச்சரித்துள்ளது.

இச்சங்கத்தின் பொதுச் செயலாளர் சரா புவனேஸ்வரன் அனுப்பிவைத்துள்ள மடலிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அம் மடலில், காலம் காலமாக இலங்கையில் உள்ள இலங்கைத் தமிழர்கள் படுகின்ற துன்பங்களும், துயரங்களும் எண்ணிலடங்காதவை.

இந்தியாவின் தமிழ்நாட்டில் வாழுகின்ற தமிழ்பேசும் ஒருசில தலைவர்கள் இத்துன்பங்களை தமக்குச் சாதமாகப் பயன்படுத்தி அரசியல் இலாபம் தேடுவது சாதாரணமான விடயமாக இருந்தாலும், தற்போது இலங்கையில் நடைபெற்று முடிவடைந்த ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரிபால சிறிசேன தெரிவுசெய்யப்பட்டுள்ளமை தமிழர்களின் மனங்களில் ஓரளவுக்கு நிம்மதியை ஏற்படுத்தியுள்ள தருணத்தில் தமது உசுப்பேத்தும் பாணியை தமிழகத் தலைவர்களுள் ஒருவரான தொல்திருமாவளவன் தொடங்கியிருப்பது வேதனை தருகின்ற விடயமாகும்.

ஆட்சிமாற்றத்தை விரும்பிய தமிழ் மக்கள் மைத்திரிக்கு வாக்களித்தனர். அதனால் அவர் தமிழர்களின் பெரும்பான்மை வாக்குகளால் வெற்றி பெற்றார். இதனை ‘‘ராஜபக்ஸவும் மைத்திரியும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்” என்று தொல்திருமாவளவன் கூறியிருப்பது. தற்போது தோன்றியுள்ள தமிழர் மீதான அனுதாபத்தையும் அழித்துவிடும். உங்கள் அரசிலுக்காக இலங்கைவாழ் தமிழ் மக்களை பலிக்கடாக்களாக்குவதையும், ஊசுப்பேத்திவிடுவதையும் நிறுத்திக் கொள்ளுங்கள். நீங்கள் கூறுகின்ற வார்த்தைகள் உலக அரங்கில் மாற்றங்கள் எதனையும் கொண்டு வரப்போவதில்லை. இதுவரை அவ்வாறான மாற்றங்கள் நிகழ்ந்ததாகவும் இல்லை. மக்கள் அழிந்தபோது நீங்கள் எங்கே இருந்தீர்கள் என்ற வினாவை ஒருமுறை உங்களிடமே கேட்டுப்பாருங்கள். மாறாக இங்குள்ள தமிழ் மக்களாகிய நாம் படுகின்ற துன்பங்களும், சுமைகளும் உங்களுக்கு பஞ்சுமெத்தைகளைத் தருகின்றன.

இனிமேலும் இதுபோன்ற கருத்துக்களை முன்வைத்தால் உலகளாவிய ரீதியில் உள்ள ஆசிரியர்களுக்கூடாக உங்களைக் கண்டிக்க வேண்டியிருக்கும்.

என இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் தமது அறிக்கையில் வெளிப்படுத்தியுள்ளது.

Share the post "உங்களுடைய அரசிலுக்காக இலங்கை தமிழரை பலிக்கடாக்களாக்குவதை நிறுத்தி கொள்ளுங்கள்; இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம்"

  • கருத்துக்கள உறவுகள்

மிகச்சரியான நெத்தியடி.

முள்ளிவாய்க்கால் முடிந்த கையோடு ராஜபக்சேவுடன் போய் பல்லிளித்தவர்தான் இந்த தொல்லு.

இதே போல் என் அம்மா ஊரில் இருக்கிறா, தம்பி ஊரில் இருக்கிறான் என்று சப்பை கட்டுகட்டியபடி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்களை, அநாகரீகமாக விமர்சிக்கும் போக்கையும் புலம்பெயர்ஸ்சில் சிலர் கைவிடவேண்டும்.

யுத்தம் நடந்த போதும் ஊரில் இருந்து, பின்பும் இருந்து தொடர்ந்து தேர்தல்களில் மக்களாணையை நிரூபித்துள்ள தலைவர்களை புலத்து சுப்பனும், குப்பனும் விமர்சிக்கும் போது வார்த்தைகள் கவனமாய் வரவேணும்.

  • கருத்துக்கள உறவுகள்

நீங்க இதை மற்றவர்களுக்கு சொல்லுவதற்கு என்ன தகுதி உங்களுக்கு உள்ளது.நீங்க புடுங்கின நாலு புல்லைக்காட்டுங்களேன்.

அநாகரீகமான உரையாடல் இருந்தால் அதை நிச்சயம் நிறுத்தவேண்டும்.
நீங்கள் என்னை சாடுகிறீர்கள் என்பது புரிகிறது.
ஈழம் எனது தாய் நிலம் ...
இந்த  மரம் எங்கு கிளை பரப்பி வாழ்ந்தாலும் வேர்கள் புதைந்து கிடப்பது அங்குதான்.
எங்களை சொந்த மண்ணிற்கு சுப்பனும் குப்பனும் ஆக்க .............. நீங்கள் யார் ?
அப்படி என்ன அதிகாரத்தை கிழித்து வைத்திருக்கிறீர்கள் ?? 
சிங்களவனே இப்படி இதுவரையில் கூறவில்லை.
அடவடிதனத்தை திரும்ப திரும்ப தொடருகிறீர்கள் ....
இதில் எந்த லாபமும் உங்களுக்கும் (ஏதும் மன நோய் பீடிக்காது இருந்தால்) இல்லை எனக்கும் இல்லை. 
வார்த்தைகள் கவனம் இன்றி இருக்கும் இடங்களில் அதை சுட்டி காட்டுங்கள் அதை திருத்த எதுவாக இருக்கும்.
ஊரில் ஒருவரும் எனக்கு இல்லாவிட்டாலும் ....... நான் உயிருடன் இருக்கு மட்டும் அதுதான் எனக்கு ஊர்.
இனி வேறு ஒரு இடத்தில் நான் திருப்பி பிறக்க முடியாது ...
எனது தாய் நிலம் ஈழம்தான். 
 
புலிகளை பற்றி எகிறி கொட்டியவை ஞாபகத்தில் இருக்கும் என்று எண்ணுகிறேன். 
அதற்காக பதிலுக்கு கூட்டமைப்பை நையாண்டி பண்ண எனக்கு புத்தி சுவாதீனம் ஒன்றும் இல்லை. 
மேலே இருக்கும் வசனங்களில் ஒரு முறை புலிகளை போட்டு பார்க்கலாம்.
 
தயவு செய்து அடாவடித்தனத்தை கைவிடுங்கள்.
நான் முன்பு ஏதும் எழுதி இருந்தால் மன்னித்து கொள்ளுங்கள்.
யாழ் களம் குப்பை கொட்டும் இடமாக இருக்கிறது என்று பலரும் குறை கூறுகிறார்கள்.
அப்படி குப்பை கொட்டும் ஒருவராக இனி இருக்க எனக்கு இஸ்டமில்லை.
 
நேர்த்தியான விவாதங்களை எதிர்பார்கிறேன்.
தவறு விடும் இடங்களில் அதை சுட்டி காட்டுங்கள் .... அதை அங்கேயே திருத்தி கொள்ளலாம். 
 
உங்களுடைய நிலைப்பாடு எனக்கு புரியவில்லை ...
கூட்டமைப்பை பற்றி எழுத நான் புலம்பெயர்ந்து இருப்பதால் அருகதை இல்லை என்று எழுதுகிறீர்கள்.
யாழ் களத்தில் 98% மானவர்கள் புலம்பெயர்ந்து வாழ்பவர்கள்தான்.
யாழ்களத்தில் எதை பற்றி எழுதினாலும் புலம்பெயர்ந்தவர்கள்தான் எழுத வேண்டும்.
இனி சந்திரனில் இருப்பவர்கள்தான்  ............. சந்திரனை பற்றி எழுதலாம் என்றால்.
தமிழ் படிப்பித்து நீல் அம்ஸ்ரொங்கை திரும்ப நிலவுக்கு அனுப்ப வேண்டுமா ?? 
 
உங்களை அறிவாளி என்று இதுவரையில் எண்ணி வந்தேன்.
  • கருத்துக்கள உறவுகள்

நீங்க இதை மற்றவர்களுக்கு சொல்லுவதற்கு என்ன தகுதி உங்களுக்கு உள்ளது.நீங்க புடுங்கின நாலு புல்லைக்காட்டுங்களேன்.

இப்படியெல்லாம் கேட்கப்படாது

சுப்பன்  குப்பனுக்குள் நீங்களும் நானும் அடக்கம்

அதாவது படிக்காத புலம் பெயருகள்....

அவர்

நீலன் திருச்செல்வம்

கதிர்காமர் பகுதிக்குள் அடக்கம்....

எந்தப்பகுதி  தமிழ் மக்களுடன் இருந்தது

இருக்கும் என்று பார்த்தால்

நீங்கள் கொவிக்கமாட்டீர்கள்...

  • கருத்துக்கள உறவுகள்

இதில் அடாவடித்தனம் ஒன்றும் இல்லை. நீங்கள் எந்ததொனியில் எழுதுகிறீர்களோ அதே தொனியில் என் பதில் வருவது இயல்பே.

குப்பை கொட்டக்கூடாது எனும் எண்ணத்தில் உங்களுக்கு பதிலளிப்பதே இல்லை என்று கூட நான் முன்பு முடிவெடுத்தது நினைவிருக்கலாம். எனவே இப்போக்கை பரப்ஸ்பரம் கைவிடுவோம் என்பதில் எனக்கு 100% உடன்பாடே.

நையாண்டி என்பது வேறு, கீழ்த்தர தாக்குதல் வேறு. நையாண்டி என்பது அரசியலில் மிக முக்கியம். பிரான்ஸில் ஒரு குழுவே இதுக்காக உயிரைக்கொடுத்திருக்கு. பிரபாவை நான் ஒரு போதும் சொத்துக்காக, சோத்துக்காக போராடப் போனார் என்று சொல்வதில்லை. ஏரம்பு வாத்தியாருக்கு மாமனிதர் கொடுத்ததை நக்கலடிப்பேன். ரெண்டுக்கும் வித்தியாசம் உண்டு.

கூட்டமைப்பை விமர்சிக்காதீர்கள் என்று சொல்லவில்லை. நீங்கள் நினைக்கும் பாதையில் அவர்கள் போகவில்லை என்ற ஆதங்கம் இருப்பது புரிகிறது. ஆனால் உங்கள் பாதைக்கு இப்போ ஊரில் ஆதரவில்லை. கூட்டமைப்பு மக்களின் நிலையை அச்சொட்ட பிரதிபலிக்கிறது. அந்த மக்கள் முடிவுக்கு மதிப்பளியுங்கள். கூட்டமைப்பை விமர்சிக்கும் போக்கில் மக்களுக்கு முட்டாள் பட்டம் கட்டாதீர்கள். மைத்திரியுடன் இணைந்து செயல்படவேணும் என்பது மக்கள் அவா. அதை எதிர்த்தவர்கள் என்ன ஆனார்கள் என்று பாருங்கள். உங்கள் போக்குக்கு ஆதரவான கஜன் அணிக்கு என்ன மதிப்பு எண்டு பாருங்கள்.

புலத்தில் இருக்கும் யாருக்கும் அதை செய், செய்யாதே என்று சொல்லும் உரிமை இல்லை. எனக்கும் கூட. நம் வழிகாட்டல் அவர்களுக்குத் தேவை இல்லை. அமெரிக்கா வாழ் தமிழர் எப்படி வாக்களிக்க வேண்டும் என்று ஊரில் இருந்து யாரும் சொல்வதில்லையே?

கூட்டமைப்பை விமர்சியுங்கள். ஆனால் அவர்கள் போகும் பாதையை (grand direction of travel) மக்களே தீர்மானிக்கிறார்கள் - அதை விமர்சிக்கும் உரிமை நம்மில் யாருக்கும் இல்லை. இந்த பாதையை மக்கள் மாற்ற விரும்பினால் அடுத்த தேர்தலில் சங்கரியை கடாசியது போல் கடாசி விட்டு கஜன் கட்சியை ஆதரிப்பார்கள்.

என்னை அறிவாளி என தப்பாக எடை போட்டது, உங்கள் பிழை.

நந்தன் நீங்கள் என்ன தோரணையில் என்னை கேட்பீர்கள். இப்படி என்னிடம் கேட்க நீங்கள் யார் ? முதலில் நீங்கள் புடுங்கியதுக்கு ஆதாரத்தை காட்டுங்கள், பிறகு நானும் காட்டுவதை பற்றி யோசிக்கிறேன்.

விசுகு,

அறிவு வேறு, படிப்பு வேறு.

இங்கே விமானத்துறையில், மருத்துவத்தில் பெரும் படிப்பெல்லாம் படித்த பலரும் என் சுப்பன் குப்பன் வகைக்குள் அடங்குகிறார்கள்.

Edited by goshan_che

இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத்தின் அறிக்கை வரவேற்கப்படிய
ஒன்றுதானே. கூட்டமைப்பே அடக்கி வாசிக்கின்றது. எந்தவித 
தேர்தல் ஒப்பந்தமும் இல்லை என்றார்கள். இப்போது மைத்திரியுடனான சந்திப்பில் தமிழர்களது சில பிரச்சனைகள் பற்றி பேசினார்கள். இதையே தேர்தலுக்கு முன்னரே சொல்லி இருந்தால் மகிந்த இதை வைத்து இனவாதத்தை கிழப்பி இருப்பார். இது ஒருவித ராஐதந்திரம்.
 
தற்போது எம்க்கு சாதகமான சில சமிக்கைகள் தெரிகின்றது. உதாரணமாக ஆளுனர் மாற்றம். இதனைக்கூட வடக்கு கிழக்குக்கு (இங்கு மட்டுமே இராணுவ அதிகாரிகள் ஆளுனர்கள்) மட்டும் மாற்ற மைத்திரியால் முடியாது அதனால் அனைத்து மாகாணத்துற்கும் மாற்றுகின்றார். இதுதான் இன்று யதார்த்தம். 
 
மைத்திரி வட கிழக்கில் தேனும் பாலும் ஓட வைப்பார் என எதிர்பார்க்கவில்லை. எமது மக்களுக்கு மைத்திரி ஏதாவது செய்ய முனைந்தாலும் அவைகளை தற்போது உள்ள நிலமையில் நேரடியாக செய்யமுடியாது. உதாரணமாக வடக்கு கிழக்கில் உள்ள மேலதிக ராணுவத்தை இப்போது உடனே வாபஸ் பெற்றால் மைத்திரியின் அரசியலே அஸ்தமனம்தான். எப்படி 100 நாட்களில் பாராளுமன்ற தேர்தலை எதிர் கொள்வார். இதில் தமிழ் பேசும் மக்களின் வாக்குகள் உதவப் போவதில்லை.
 
எமது நிலமை முள்ளில் விழுந்த சேலை போன்றதே மெதுவாகத்தான் எடுக்க முடியும். கூட்டமைப்பு அதை சாணக்கியமாகச் செய்வது போலவே உள்ளது. அதற்கிடையில் திருமாவளவன் ராஜபக்ஸவும் மைத்திரியும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் என்பதும் (இது எமக்கும் கூட்டமைப்புக்கும் தெரியாததில்லை), சீமான் இது மகிந்தாவிற்கு மட்டும் தோல்வி இல்லை மோடிக்கும்தான் என்பதும் (காரணம் மோடி மகிந்தாவிற்கு வாழ்த்து சொன்னாராம். யாரையாவது சந்தித்தால் வாழ்த்து சொல்வது பண்பாடு).
 
நாம் நடுக்கடலில் தத்தளிக்கின்றோம். மைத்திரி கப்பல் இல்லை எமக்கு கிடைத்த ஒரு மரக்கட்டை. இந்த கட்டையைப் பற்றி சிறிது இளைப்பாறவாவது இந்த அரசியல்வாதிகள் விடமாட்டார்களா.
 
எமக்கு இந்தியா தேவை, தமிழக ஆதரவு நிச்சயம் தேவை. ஆனால்
அவர்கள் தங்கள் அரசியல் லாபத்திற்கு எம்மை பயன்படுத்த வேண்டாமே 
  • கருத்துக்கள உறவுகள்

மிக நியாயமான கருத்து. தொடர்ந்து எழுதுங்கள் ஜீவா.

எங்களை எதுவும் செய்யாவிட்டால் எவர் என்ன செய்தாலும் குழப்புவோம்.முப்பது வருடமாக செய்த பணியை விட்டுவிடுவது என்பது லேசான விடயமா ?

மரக்கட்டையை புடுங்கி தாழுவதை பார்த்து "நாங்கள்  அப்பவும் சொன்னோம் பார்த்தீர்களா" என்று எழுத துடியாய் துடிக்குது ஒரு கூட்டம் .

இனி பாச்சா அவர்கள் பாச்சா பலிக்காது என்றுதான் பல்லி சொல்லுது . :icon_mrgreen:  

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத்தின் அறிக்கை வரவேற்கப்படிய
ஒன்றுதானே. கூட்டமைப்பே அடக்கி வாசிக்கின்றது. எந்தவித 
தேர்தல் ஒப்பந்தமும் இல்லை என்றார்கள். இப்போது மைத்திரியுடனான சந்திப்பில் தமிழர்களது சில பிரச்சனைகள் பற்றி பேசினார்கள். இதையே தேர்தலுக்கு முன்னரே சொல்லி இருந்தால் மகிந்த இதை வைத்து இனவாதத்தை கிழப்பி இருப்பார். இது ஒருவித ராஐதந்திரம்.
 
தற்போது எம்க்கு சாதகமான சில சமிக்கைகள் தெரிகின்றது. உதாரணமாக ஆளுனர் மாற்றம். இதனைக்கூட வடக்கு கிழக்குக்கு (இங்கு மட்டுமே இராணுவ அதிகாரிகள் ஆளுனர்கள்) மட்டும் மாற்ற மைத்திரியால் முடியாது அதனால் அனைத்து மாகாணத்துற்கும் மாற்றுகின்றார். இதுதான் இன்று யதார்த்தம். 
 
மைத்திரி வட கிழக்கில் தேனும் பாலும் ஓட வைப்பார் என எதிர்பார்க்கவில்லை. எமது மக்களுக்கு மைத்திரி ஏதாவது செய்ய முனைந்தாலும் அவைகளை தற்போது உள்ள நிலமையில் நேரடியாக செய்யமுடியாது. உதாரணமாக வடக்கு கிழக்கில் உள்ள மேலதிக ராணுவத்தை இப்போது உடனே வாபஸ் பெற்றால் மைத்திரியின் அரசியலே அஸ்தமனம்தான். எப்படி 100 நாட்களில் பாராளுமன்ற தேர்தலை எதிர் கொள்வார். இதில் தமிழ் பேசும் மக்களின் வாக்குகள் உதவப் போவதில்லை.
 
எமது நிலமை முள்ளில் விழுந்த சேலை போன்றதே மெதுவாகத்தான் எடுக்க முடியும். கூட்டமைப்பு அதை சாணக்கியமாகச் செய்வது போலவே உள்ளது. அதற்கிடையில் திருமாவளவன் ராஜபக்ஸவும் மைத்திரியும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் என்பதும் (இது எமக்கும் கூட்டமைப்புக்கும் தெரியாததில்லை), சீமான் இது மகிந்தாவிற்கு மட்டும் தோல்வி இல்லை மோடிக்கும்தான் என்பதும் (காரணம் மோடி மகிந்தாவிற்கு வாழ்த்து சொன்னாராம். யாரையாவது சந்தித்தால் வாழ்த்து சொல்வது பண்பாடு).
 
நாம் நடுக்கடலில் தத்தளிக்கின்றோம். மைத்திரி கப்பல் இல்லை எமக்கு கிடைத்த ஒரு மரக்கட்டை. இந்த கட்டையைப் பற்றி சிறிது இளைப்பாறவாவது இந்த அரசியல்வாதிகள் விடமாட்டார்களா.
 
எமக்கு இந்தியா தேவை, தமிழக ஆதரவு நிச்சயம் தேவை. ஆனால்
அவர்கள் தங்கள் அரசியல் லாபத்திற்கு எம்மை பயன்படுத்த வேண்டாமே 

நல்லதொரு  கருத்தையும்

ஆக்கபூர்வமான விளக்கத்தையும் கொடுத்துள்ளீர்கள் நன்றி...

வரலாறே எம்முன் சில தயக்கங்களைத்தந்துள்ளது..

சிங்களம் எமது தலைவர்களை உள்வாங்கி

எவ்வாறு எம்மை ஆக்கிரமித்தது

எம்மை பலவீனப்படுத்தியது என்பது வரலாறு...

உங்களது கருத்தை மதிக்கின்றேன்

சிங்களத்தின் விட்டுக்கொடுப்புக்களை மிகவும் அவதானமாகவே பார்க்கின்றேன்

இந்த விட்டுக்கொடுப்பின் முதல் பலியாக ஆனந்தி இருக்காமல் இருக்கக்கடவது....... :(  :(

(கூட்டமைப்பு ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து நான் அதன் ஆதரவாளன் என்பதை மனதில் கொள்க)

  • கருத்துக்கள உறவுகள்

. மைத்திரியுடன் இணைந்து செயல்படவேணும் என்பது மக்கள் அவா. 

இதற்கு என்ன ஆதாரம்??

தாயகத்தில் பலருடன் பேசினேன்

பலரது பேட்டிகள்

உரையாடல்கள்

கட்டுரைகள்

செய்திகள் பார்த்தேன்

எதிலும்  இவ்வாறு எவரும்  சொல்லவில்லை

மகிந்தவை அனுப்பணும்

மற்றும் படி மைத்திரியும் மகிந்தவும் ஒன்றுதான்

என்றுதான் சொல்கிறார்கள்:

இதைத்தான் நாமும் சொல்கின்றோம்

மைத்திரியுடன் இணைந்து செயற்படணும் என்று கூட்டமைப்பே சொல்லவில்லை

கூப்பிட்டும் வேண்டாம் என்றுவிட்டார்கள்...

உங்கள் இந்தக்கூற்றுக்கு ஆதாரம் என்ன???

Edited by விசுகு

அர்ஜுன் இத்திரியை திசை திருப்ப வேண்டாமே.
ஆரோக்யமான பதிவுகளை செய்யலாமே. உங்கள் பதிவுகளை  ஊர்ப் புதினம் தவிர்ந்த இடங்களிலும் வாசித்துள்ளேன். உங்களிற்கு எழுத்தில் ஆழுமைஉள்ளது. அதனை ஆரோக்யமாக பாவிக்கலாமே.
நடந்தது நடந்து முடிந்தவை. இப்போது எமக்கு உள்ளது கூட்டமைப்பு மட்டுமே. நடப்பவை பற்றி விவாதிப்போம், நடக்கப் போவதையும் விவாதிப்போம், நடந்து முடிந்தவைகளை பாடமாக மடடும் பார்ப்போம் விவாதம் வேண்டாம்.
நன்றி
  • கருத்துக்கள உறவுகள்

இதில் அடாவடித்தனம் ஒன்றும் இல்லை. நீங்கள் எந்ததொனியில் எழுதுகிறீர்களோ அதே தொனியில் என் பதில் வருவது இயல்பே.

குப்பை கொட்டக்கூடாது எனும் எண்ணத்தில் உங்களுக்கு பதிலளிப்பதே இல்லை என்று கூட நான் முன்பு முடிவெடுத்தது நினைவிருக்கலாம். எனவே இப்போக்கை பரப்ஸ்பரம் கைவிடுவோம் என்பதில் எனக்கு 100% உடன்பாடே.

நையாண்டி என்பது வேறு, கீழ்த்தர தாக்குதல் வேறு. நையாண்டி என்பது அரசியலில் மிக முக்கியம். பிரான்ஸில் ஒரு குழுவே இதுக்காக உயிரைக்கொடுத்திருக்கு. பிரபாவை நான் ஒரு போதும் சொத்துக்காக, சோத்துக்காக போராடப் போனார் என்று சொல்வதில்லை. ஏரம்பு வாத்தியாருக்கு மாமனிதர் கொடுத்ததை நக்கலடிப்பேன். ரெண்டுக்கும் வித்தியாசம் உண்டு.

கூட்டமைப்பை விமர்சிக்காதீர்கள் என்று சொல்லவில்லை. நீங்கள் நினைக்கும் பாதையில் அவர்கள் போகவில்லை என்ற ஆதங்கம் இருப்பது புரிகிறது. ஆனால் உங்கள் பாதைக்கு இப்போ ஊரில் ஆதரவில்லை. கூட்டமைப்பு மக்களின் நிலையை அச்சொட்ட பிரதிபலிக்கிறது. அந்த மக்கள் முடிவுக்கு மதிப்பளியுங்கள். கூட்டமைப்பை விமர்சிக்கும் போக்கில் மக்களுக்கு முட்டாள் பட்டம் கட்டாதீர்கள். மைத்திரியுடன் இணைந்து செயல்படவேணும் என்பது மக்கள் அவா. அதை எதிர்த்தவர்கள் என்ன ஆனார்கள் என்று பாருங்கள். உங்கள் போக்குக்கு ஆதரவான கஜன் அணிக்கு என்ன மதிப்பு எண்டு பாருங்கள்.

கூட்டமைப்பிற்கு மைத்த்ரியை ஆதரிப்பதை தவிர்த்து வேறு ஏதாவது ஒன்றை செய்யலாம் என்று நான் எங்காவது எழுதினேனா ?
அதுதான் ஒரே தெரிவு என்று இருக்கும்போது காலத்தை கடத்தி இந்தியாவில் போய்  படுத்து அது இது என்று காலத்தை இழுத்து.
இன்று தமிழராலேயே தெரிவு செய்யபட்ட சேனாதிபதியிடம் எந்த ஒப்பந்தமும் செய்யப்படவில்லை.
இதில் என்ன சாணக்கியம் இருக்கிறது?
இதுதான் எனது நிலைப்பாடு கூட்டமைப்பை பொருத்தமட்டில்.
எனது தனிப்பட்ட நிலைப்பாடு மகிந்த வெல்ல வேண்டும் என்பதே ...
மகிந்த வென்றிருந்தால் தமிழர்கள் அதிக லாபம் எட்டி இருக்கலாம் என்று நான் வைத்த காரணங்கள் தேர்தலின் அடுத்த நாளே ஆதாரம் ஆகியது.
மக்கள் எப்போதும் அன்றாட பிரச்சனையையே முன்வைப்பார் ...
அது எனக்கு நன்றாகவே தெரியும். 3 வருடம் கழிந்த அரசியல் திருப்பம் பற்றி மக்கள் சிந்திக்க மாட்டார்கள்.
கூட்டமைப்பிற்கு இதுதான் ஒரே பாதை .....
இருந்தும் சொதப்பிவிட்டார்கள்.

புலத்தில் இருக்கும் யாருக்கும் அதை செய், செய்யாதே என்று சொல்லும் உரிமை இல்லை. எனக்கும் கூட. நம் வழிகாட்டல் அவர்களுக்குத் தேவை இல்லை. அமெரிக்கா வாழ் தமிழர் எப்படி வாக்களிக்க வேண்டும் என்று ஊரில் இருந்து யாரும் சொல்வதில்லையே?

எமது நாட்டுக்கு சாதகமான ஒருவரை தெரிவு செய்யுங்கள் என்று  அமெரிக்க வாழ் தமிழரை கேட்பதற்கு உலக தமிழர் அனைவருக்கும் உரிமை உண்டு.
நாம் சகோதர்கள் எமது இலக்கு எமது இனத்தின் விடுதலைதான்.
நீங்கள் ஓரிருவர்தான்   கணவனுக்கும் மனைவிக்கும் என்ன  உரிமை உண்டு என்ன உரிமை இல்லை என்று பகிர்ந்து அளித்து வருகிறீர்கள்.
காரணம் ஏதும் இல்லை ....
உரிமை இல்லை உரிமை இல்லை என்று மட்டும் எழுதுகிறீர்கள். 

கூட்டமைப்பை விமர்சியுங்கள். ஆனால் அவர்கள் போகும் பாதையை (grand direction of travel) மக்களே தீர்மானிக்கிறார்கள் - அதை விமர்சிக்கும் உரிமை நம்மில் யாருக்கும் இல்லை. இந்த பாதையை மக்கள் மாற்ற விரும்பினால் அடுத்த தேர்தலில் சங்கரியை கடாசியது போல் கடாசி விட்டு கஜன் கட்சியை ஆதரிப்பார்கள்.

என்னை அறிவாளி என தப்பாக எடை போட்டது, உங்கள் பிழை.

நந்தன் நீங்கள் என்ன தோரணையில் என்னை கேட்பீர்கள். இப்படி என்னிடம் கேட்க நீங்கள் யார் ? முதலில் நீங்கள் புடுங்கியதுக்கு ஆதாரத்தை காட்டுங்கள், பிறகு நானும் காட்டுவதை பற்றி யோசிக்கிறேன்.

விசுகு,

அறிவு வேறு, படிப்பு வேறு.

இங்கே விமானத்துறையில், மருத்துவத்தில் பெரும் படிப்பெல்லாம் படித்த பலரும் என் சுப்பன் குப்பன் வகைக்குள் அடங்குகிறார்கள்.

விடும் பிழைகளை அந்த இடங்களில் சுட்டி காட்டுங்கள் .... திருத்தி கொள்கிறேன். 

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்கா வாழ் தமிழர்கள் ஒன்றும் சொலக்கூடாது.. ஆனால் அமெரிக்கா வாழ் ஆங்கிலேயர்கள் கூறலாம்.. (ஜான் கெரி; ஹிலரி, ஒபாமா இத்யாதி.. இத்யாதி..) :lol:

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்கா வாழ் தமிழர்கள் ஒன்றும் சொலக்கூடாது.. ஆனால் அமெரிக்கா வாழ் ஆங்கிலேயர்கள் கூறலாம்.. (ஜான் கெரி; ஹிலரி, ஒபாமா இத்யாதி.. இத்யாதி..) :lol:

இதென்ன அநியாயமாக்கிடக்கு..

இவருக்கு

வாலுக்கும்  தலைக்கும் வித்தியாசம் தெரியாதோ...?? :D

விசுகு,

அறிவு வேறு, படிப்பு வேறு.

இங்கே விமானத்துறையில், மருத்துவத்தில் பெரும் படிப்பெல்லாம் படித்த பலரும் என் சுப்பன் குப்பன் வகைக்குள் அடங்குகிறார்கள்.

ஏற்கனவே

உங்க பெயர் இதற்குள்ள கிடக்கு இசை.. :lol:

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்கா வாழ் தமிழர்கள் ஒன்றும் சொலக்கூடாது.. ஆனால் அமெரிக்கா வாழ் ஆங்கிலேயர்கள் கூறலாம்.. (ஜான் கெரி; ஹிலரி, ஒபாமா இத்யாதி.. இத்யாதி..) :lol:

பச்சை முடிஞ்சு போட்டுது .......
சிலதை நினைச்சால் சிரிப்பு தாங்க முடியாது.
  • கருத்துக்கள உறவுகள்

பச்சை முடிஞ்சு போட்டுது .......
சிலதை நினைச்சால் சிரிப்பு தாங்க முடியாது.

சரி போட்டிருக்கிறன்

ஒரு பச்சை கடன்.. :D

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்கா வாழ் தமிழர்கள் ஒன்றும் சொலக்கூடாது.. ஆனால் அமெரிக்கா வாழ் ஆங்கிலேயர்கள் கூறலாம்.. (ஜான் கெரி; ஹிலரி, ஒபாமா இத்யாதி.. இத்யாதி..) :lol:

நான் நினைக்கிறேன் அவர்கள் யாழ் களத்தில் புலம்பெயர்ந்தவர்கள் நாடு பற்றி எழுத கூடாது என்று சொல்கிறார்கள் என்று.
 
நான் நேற்றே ஒரு பாட்டு திரி ஒன்று திறந்து அதில் ஆக ஓகோ என்று போய்கொண்டு இருக்கிறேன்.
நீங்களும் தமிழில் எழுத  தடை வருமுன்பு ஏதும் பொழுதுபோக்கு திரிகளில் எழுதுங்கள். 
 
அம்மா அப்பா ஊரில் இருந்து எழுதும் கடிதங்களை ஸ்கேன் செய்து போட 
அப்பீல் பண்ணலாம் என்று இருக்கிறேன். 
 
கணம் கோட்டார் அவர்களே ....
இது ஊரில் இருந்து வந்த வார்த்தை நான் இணைப்பது மட்டுமே.
அப்படி என்று வாதாட உத்தேசித்துள்ளேன். 
  • கருத்துக்கள உறவுகள்

மருது, விசுகு, இடை எல்லோருக்கும் பதில் சொல்ல ஆசைதான் - குப்பை கொட்டவேண்டாமே என்று பார்க்கிறேன்.

தலைக்கு மேல் வேலை கிடக்கு. இனி அடுத்து ஏதாவது தேர்தல் சமயம் பார்ப்போம்.

அதுவரைக்கும் நீங்களே கூடிக் கூடி பழங்கதை பேசி மகிழுங்கள். இடையிடையில் அர்ஜூன், தென்னாலி, ரதி, சபேசன் வந்து உண்மையை பேசி உங்களுக்கு குடைச்சல் கொடுக்கப் பார்ப்பார்கள். விடாதீர்கள். கடிச்சு குதறி விடுங்கள் :)

ஜீவா தொடர்து எழுதுங்கள்.

அண்ணை ரைட்.

  • கருத்துக்கள உறவுகள்
அடிக்கடி நேரம் கிடைக்கும்போது வந்து போங்கள் ...
குப்பை என்று தெரிந்தால் கொட்டாதீர்கள்.
சில விடயங்களில் உங்களுடைய பார்வை வித்தியாசமானது ,,,,,, பகிர்ந்து கொள்ளுங்கள். 

ஒபாமாவும் கெரியும்  வெறும் அமெரிக்க வாழ் ஆங்கிலேயர்கள் என்று நினைத்ததால் தான் சதாம் ,கடாபி ,பிரபா ,மகிந்தா இப்படியான இன்னும் பலருக்கு இந்த கதி ஏற்பட்டது .

சதாமை பங்கருக்கால் தூக்கும் போது கூட இவர்களுக்கு இன்னமும் விளங்காமல் இருக்குதே என்று நான் மண்டையை போட்டு உடைத்த நாட்களும் இருக்கு ,

புலம் பெயர்ந்த நாட்டிலேயே இருக்கினம் அப்ப அவர்களை சொல்லி என்ன பிழை . 

  • கருத்துக்கள உறவுகள்

தூய்மையான அரசியலை மேற்கொள்வோம்; வெளிப்படையான அரசியலை மேற்கொள்வோம் என்று சொல்பவர்கள்தான் வெள்ளைக்காரர்கள் குறுக்குசால் ஓட்டும்போது கண்டுகொள்ளாமல் இருப்பவர்கள்.. நேர்மை என்றால் நூறுவீதம் நேர்மை என்று இருக்க வேண்டும்.. புலம் பெயர்ந்தவர்கள் கருத்துச் சொன்னால், 'ஏய் நீ கதைக்காதே' என்பது. பிறகு அதையே அமெரிக்ககாரன் செய்தால் 'அருமையா சொன்னீங்க' என்கிறது.. :D இந்த இரட்டை நாக்குகளை கண்டுபிடிக்க வேண்டியது நம் கடமை.. :lol:

  • கருத்துக்கள உறவுகள்
ஒபாமாவும் கெரியும் வெறும் அமெரிக்க ஆங்கிலேயர் இல்லையாம் ....
குறிபெடுத்து கொள்ளுங்கள்!
பின்பு லூசுத்தனமாக கருத்துகள் எழுதாமல் ..
அரசியலை வாசித்து அறிந்து கொள்ளுங்கள். 
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதென்ன அநியாயமாக்கிடக்கு..

இவருக்கு

வாலுக்கும்  தலைக்கும் வித்தியாசம் தெரியாதோ...?? :D

ஏற்கனவே

உங்க பெயர் இதற்குள்ள கிடக்கு இசை.. :lol:

விசுகர் நீங்கள் பெற்றோல் தகரம் இல்லை ..... பெற்றோல் குதம் lol2.gif  :D

  • கருத்துக்கள உறவுகள்

இசை ஒன்றை மட்டும் சொல்லி விடைபெறுகிறேன்.

புலம்பெயர் குப்பனுக்கும், சுப்பனுக்கும் ஜான் கெரிக்கும், ஹிலாரிக்கும் இருக்கும் வித்தியாசம் உங்களுக்கு பிடிபடவில்லை. ஒரு வல்லரசின் பிரதிநிதிகளாக அவர்கள் சொல்லுவதர்க்கும், ஏன் மனித உரிமை அமைப்புகள் சொல்லுவதற்க்கும், குப்பனும் சுப்பனும் குவாட்டரை மடக்கி விட்டு குளறுவதுக்கும் ரொம்ப வித்தியாசம் இருக்கு.

கெரியும், ஹிலரியும் கூட ஒரு போதும், அரசியல் கட்சிகளை, அரசியல்வாதிகளை தேவையில்லாமல் விமர்சிக்கார். மனித உரிமை, போர் குற்றம் எனப் பொதுப்படையாகவே பேசுவர்.

தமிழ்நாட்டுக் கோமாளி அரசியல்வாதிகளும், புலம்பெயர்ஸும்தான், கூட்டமைப்பையும் அதன் அரசியல் தலைவர்களையும் ஏதோ அவர்கள் வீட்டு தோட்டக்காரனை திட்டுமாப்போல திட்டுவது.

நீங்கள் திட்டுவது கூட்டமைப்பை அல்ல - அவர்களுக்கு சனநாயக ஆணை வழங்கியுள்ள மக்களை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.