Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்திய எழுத்தாளருக்கு ஆதரவாக யாழில் ஆர்ப்பாட்டம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நான் இன்னும் படிக்கவில்லை. முக நூல் நண்பர் ஒருவரின் பதிவு இது. குடுமி வைப்பது ஊர்வழக்கம். அதை முதன்முதலாக மீறுகிறார் நல்லுப்பையன். 'கிராப்' வைத்துக் கொண்டு வரும் அவரைப் பார்த்து ஊரே களோபரப்படுகிறது. பஞ்சாயத்துக் கூடி ஊரைவிட்டு விலக்குவது உள்பட பல தீர்மானங்களை அடுக்குகிறது. இறுதியாக நல்லுப்பையனை அழைத்து, மீண்டும் குடுமி வளர்த்துக் கொள்கிறேன் என்று சொன்னால் அபராதம் மட்டும் கட்டச் சொல்லிவிட்டு தண்டனைகளை ரத்து செய்வதாக கூறுகிறது. "ஊர்க் கெளரவம் என்னோட மசுருலதான் இருக்குதுன்னா நான் வளத்துக்கறன். தாடிமீச வேணாலும் வளத்துக்கறன். வளர்த்துக்கிட்டு பேன் புடுங்கிக்கிட்டு உங்களாட்டம் மயிர் கோதிக்கிட்டு இருக்கறன். இன்னொன்னையும் சொல்லீருங்க. ரொம்ப அரிப்பா இருக்குதுன்னு நேத்துத்தான் குஞ்சுமயிரையும் செரச்சிக்கிட்டு வந்தன். உங்க ஊர்க் கெளரவம் எங்குஞ்சுமயிருலயும் இருக்குதுன்னா இப்பவே அதையும் சொல்லீருங்க. அதயும் வளத்துக்கறன்" என்கிறார் நல்லுப்பையன். இதுவரை தமிழில் ஒரு நாவலைக்கூட முழுமையாக படித்தது இல்லை. 'மாதொருபாகன்' நாவல் சர்ச்சையால் முதன்முதலாக ஒரு தமிழ் நாவலை ஒன்றுக்கு இருமுறை படித்து முடித்தேன். இந்து அமைப்புகள் 'மாதொருபாகன்' நாவலை எரித்து கொண்டிருக்கிறார்கள் என்பதன் அடிப்படை உளவியல் குறித்து பேச வேண்டுமானால், இந்துக் கலாச்சாரம் சாதிக்கேற்ற சொற்களை கொண்டிருக்கிறது. மதத்திற்கேற்ற அடக்குமுறைக் கொண்டிருக்கிறது. இதில் இந்து விதிமுறைகள் மாற்றப்படுவது நல்லுப்பையன் போன்ற கலகக்காரர்களால்தான். அவரின் வார்த்தைகள் அநாகரிகமல்ல; நாகரிகமற்ற கூட்டத்திற்கு நாகரிகத்தை கற்றுக் கொடுக்கும் மனுச பாஷை.

  • கருத்துக்கள உறவுகள்

முதலில இந்தக் கலியாணம் .செத்தவீடு,கோயில்pல்செய்யும் பூசைகளை தமிழில் செய்ய வேணும் உலகில் எல்லாமதங்களைப் பின்பற்றுவர்களும் அவர்கள் மொழியையே பூசைகளின் போது பயன்படுத்த இந்துமதம் மட்டும் எதற்கு அழிந்து போன சமஸ்கிருதத்தை தூக்கிப் பிடிக்குது.நான் இன்னும் நாவலைப் படிக்கவில்லை. நாவலைப் படிக்காமல் கருத்தெழுத முடியாது.

  • கருத்துக்கள உறவுகள்

போராளிகள் கவனத்திற்கு

மாதொருபாகனை முழுமையாக படித்துவிட்டேன்....

அதில் குறிப்பிட்ட கதாபாத்திரங்களின் வார்த்தை பிரயோகம் மிகவும் வக்கிரம்....பெண்களின் கற்பு நிலையை மிகவும் தரம் தாழ்த்தி எழுதி இருக்கிறார்.... நாவல் முழுக்க கள்ளத்தொடர்பு அசைவ ஜோக்குகள் என கற்பனையில் களமாடுகிறது

"ஒரு சிறந்த எழுத்தாளன் வாசகர்களின் மனதில் கற்பனையால் ஆழ பதிய வேண்டுமே ஒழிய...இப்படி கற்பனையால் ஆபாசங்களை அள்ளி தெளிக்க கூடாது"

உதாரணமாக ஊர் இடத்தில கதாநாயகன் அம்மா தம் மகனின் பெருமையை பற்றி ஊராரிடம் சொல்லபடுவதாய் இப்படி குறிப்பிடுவார்....

"என் மகன் பொம்பளைங்க வாசமே ஆகாதவன்"

"ஓஒ அம்மா எப்போ நம்ம கிட்ட வாசம் பிடிச்சாங்கன்னு

மகன் சொல்ற மாறி நாவலை வெச்சு இருப்பார்......

பாமர மக்களின் வட்டாரஇயல்பு என கூறி இவர் வரைந்திருக்கும் நாவலில் ஏகப்பட்ட சர்ச்சைக்குரிய உறவு முறைகள் தவறாக பிணைக்கப்பட்டுள்ளது

கேடுகெட்ட பெருமாள் முருகன்

இப்பொழுதெல்லாம் காசு பார்த்தலே முதன்மை பெறுவதால்

யாரை விற்கின்றொம் என்பதல்ல முக்கியம்..

எதை விற்றால் அதிகம் கிடைக்கும் என்பதே கணிப்பு..

அதன்படி

தாய்

தாயகம்

தாய்மொழி

இவையே விலை போகின்றன... :(  :(  :(

மகாபாரதத்தில் பாண்டு, திர்தராஸ்டினன், விதுரன் போன்றோர் பிறந்த கதையையும், ராமாயணத்தில் ராமன் மற்றும் சகோதரர்கள் பிறந்த கதையையும் படித்தவர்களுக்கு இந்த "மாதொருபாகன்" அதிர்ச்சியை ஏற்படுத்தாது.

அவற்றை புனிதக் கதைகளாக போற்றுகின்ற ஒரு நாட்டிலே பெருமாள் முருகனுக்கு ஏற்பட்டிருக்கும் நிலை ஆச்சரியமானது.

மாதொருபாகன் நாவல் pdf வடிவில்..

https://dl.dropboxusercontent.com/u/60228630/Mathoru%20Pagan.pdf

நன்றி சுபேஸ்
 
இன்று சிறிது நேரம் கிடைத்துள்ளது மாதொருபாகன் வாசிக்கின்றேன் 190 பக்கங்களை கொண்டது. வாசித்து முடிந்ததும் கருத்திடுகின்றேன்.

இதில் ஆச்சரிய பட ஒன்றும் இல்லை....இந்த இதிகாசங்களில் வந்தவர்கள் யாருமே "மனிதர்கள்" அல்ல...கடவுள்/தேவர்களின் அம்சம் என்றே எல்லாரும் பார்க்கிறார்கள்...."இந்த" பழக்கம் வழக்கத்தில் இருந்திருந்தாலும் எல்லாருமே அதை செய்தார்களா...அப்படி செய்தவர்களும் அதை வெளிதெரியாமல் தானே இரக்க நினைப்பார்கள்...பெருமாள் முருகன் இது "நம்மூர்" வழக்கம் என்று அந்த வட்டாரத்தில் உள்ள எல்லாரையுமே சந்தேகிக்க வைத்தார் என்பது தான் குற்ற சாட்டு...

பெருமாள் முருகன்...இது "நான் பிறந்த கதை" என்று சொல்லிவிட்டு எழுதியிருந்திருக்கலாம் :) அப்போது எதிர்ப்பவர்கள் இருந்திருக்க மாட்டார்கள்......

எதற்கும் இந்த புத்தகத்தை படித்தவர்கள்...நிறை குறைகளையும்...இதை எதிர்ப்பவர்கள்..ஆதரிப்பவர்களின் பார்வைகளையும் அலசினால்...நன்றாக இருக்கும்.....

மகாபாரதத்தில் பாண்டு, திர்தராஸ்டினன், விதுரன் போன்றோர் பிறந்த கதையையும், ராமாயணத்தில் ராமன் மற்றும் சகோதரர்கள் பிறந்த கதையையும் படித்தவர்களுக்கு இந்த "மாதொருபாகன்" அதிர்ச்சியை ஏற்படுத்தாது.

அவற்றை புனிதக் கதைகளாக போற்றுகின்ற ஒரு நாட்டிலே பெருமாள் முருகனுக்கு ஏற்பட்டிருக்கும் நிலை ஆச்சரியமானது.

Edited by naanthaan

  • கருத்துக்கள உறவுகள்

போராளிகள் கவனத்திற்கு

மாதொருபாகனை முழுமையாக படித்துவிட்டேன்....

அதில் குறிப்பிட்ட கதாபாத்திரங்களின் வார்த்தை பிரயோகம் மிகவும் வக்கிரம்....பெண்களின் கற்பு நிலையை மிகவும் தரம் தாழ்த்தி எழுதி இருக்கிறார்.... நாவல் முழுக்க கள்ளத்தொடர்பு அசைவ ஜோக்குகள் என கற்பனையில் களமாடுகிறது

"ஒரு சிறந்த எழுத்தாளன் வாசகர்களின் மனதில் கற்பனையால் ஆழ பதிய வேண்டுமே ஒழிய...இப்படி கற்பனையால் ஆபாசங்களை அள்ளி தெளிக்க கூடாது"

உதாரணமாக ஊர் இடத்தில கதாநாயகன் அம்மா தம் மகனின் பெருமையை பற்றி ஊராரிடம் சொல்லபடுவதாய் இப்படி குறிப்பிடுவார்....

"என் மகன் பொம்பளைங்க வாசமே ஆகாதவன்"

"ஓஒ அம்மா எப்போ நம்ம கிட்ட வாசம் பிடிச்சாங்கன்னு

மகன் சொல்ற மாறி நாவலை வெச்சு இருப்பார்......

பாமர மக்களின் வட்டாரஇயல்பு என கூறி இவர் வரைந்திருக்கும் நாவலில் ஏகப்பட்ட சர்ச்சைக்குரிய உறவு முறைகள் தவறாக பிணைக்கப்பட்டுள்ளது

கேடுகெட்ட பெருமாள் முருகன்

சுண்டல், நீங்கள் மாதொருபாகனைப் படித்தீர்களா? அல்லது வேறு யாரோ சுவரில் எழுதியதை ஒட்டியிருக்கின்றீர்களா?

முன்னர் நவீன இலக்கியம் எதுவும் படிக்காமல் மாதொருபாகனை முதன் முதலாகப் படித்தால் இப்படித்தான் எழுத வரும். இதில் தப்பில்லை. மாதொருபாகன் மூலம் இலக்கியம் படிக்க ஆரம்பிப்பதே நல்லவிடயம்.

இப்பொழுதெல்லாம் காசு பார்த்தலே முதன்மை பெறுவதால்

யாரை விற்கின்றொம் என்பதல்ல முக்கியம்..

எதை விற்றால் அதிகம் கிடைக்கும் என்பதே கணிப்பு..

அதன்படி

தாய்

தாயகம்

தாய்மொழி

இவையே விலை போகின்றன... :(  :(  :(

ஆமாம். எட்டுக்கோடி தமிழர்கள் இருக்கின்ற இடத்தில் ஆயிரம் புத்தகங்கள் விற்றுக் காசு உழைத்துத்தான் விடுவார். உழைக்கவேண்டுமென்றால் சரோஜாதேவி ரேஞ்சில் எழுதப் போகலாம். வீணீர் வடித்துப் படிக்கப் பலர் இருக்கின்றனர்.

நேற்று மாதொருபாகன் முழுமையா வாசிக்க முடிந்தது (நன்றி சுபேஸ்). 
 
விரசமில்லாத எழுத்துக்கள். எழுத்தாளர் தனது கற்பனையில் இருப்பதை வெற்றிகரமாக வாசகர்களது கண்முன் நிறுத்துகின்றார். பொன்னவின் பிறந்த வீடும் அந்தப் பூவரசு மரமும், முத்துவின் குடிப்பதற்கான மறைவிடங்களும், திருவிழாவின் கோலங்களும் அப்படியே வாசகர்களின் கண்முன் நிறுத்துகின்றர் பெருமாள்முருகன்.
 
எழுத்துநடை ஜெயகாந்தனின் ஒரு பிடி சோறு, பாவம் இவள் ஒரு பாப்பாத்தி, பாரீசுக்குப் போ போன்றவற்றை ஞாபகப்படுத்துகின்றது. சுஜாதாவின் கதைகள் போன்று எளிதாக வாசிக்கமுடியாது. எழுத்துநடை 1940களில் உள்ளது போன்றது. நிறுத்தி நிதானமாக வாசிக்க வேண்டி உள்ளது. பல புதிய சொற் (இல்லை பழைய) பிரயோகங்கள் அர்த்தத்தை அனுமானிக்க வேண்டி நிற்கின்றன்
 
மொத்தத்தில் தரமான நல்ல புத்தகத்தைப் படித்த திருப்தி. புத்தகத்தின் மூலக்கருவில் ஏற்பாடு இல்லாதவர்கள் தாராளமாக தங்கள் கருத்தை முன்வைக்கலாம். மற்றவர்கள் தயவு செய்து வாசித்தபின் கருத்திடவும்.
 
ஆசிரியர் ஒரு சம்பவத்தை கதையாக எழுதியிருந்தார், எம் கண்முன் கொண்டுவந்தார். முடிவு அருமை. பொன்னாவுக்கு என்ன நடந்தது, பொன்னா தவறிழைத்திருந்தால் காளியின் நிலை என்ன, அவர்கள் எதிர்காலம் எப்படி இருக்கும் காளிக்கும் முத்துவிற்கும் இடையிலான நட்பு (மைத்துனன் எனும் பந்தமும்தான்) போன்றவற்றை ஆசிரியர் வாசகர்களிடமே விட்டு விடுகின்றார். நாவல் மனதில் உயிருள்ள வரை நிற்கும்.
 
அதுசரி மாதொருபாகன் 2010 இல் வெளிவந்தது. 2013 இல் ஆங்கில மொழிமாற்றம் வந்தது. ஏன் 2014இல் தகராறு. தமிழர்களிற்கு ஆங்கிலத்தில் வந்தபின்தான் மூலக்கரு புரிந்ததா. என்னைப் பொறுத்தவரையில் பிரச்சனைக்கு உட்காரணம் ஏதோ உள்ளதாகவே பார்க்கின்றேன். இலக்கிய ஆர்வமுள்ளோர் நிச்சயம் படிக்க வேண்டிய நாவல்.
 
மறுபடியும்: தயவு செய்து வாசித்தபின் கருத்திடவும்.

நல்லதொரு ஆக்கபூர்வமான பதிவு .

பிரச்சனை எல்லா இடங்களிலும் அரை குறைகளால் தான்  :(

இதில் ஆச்சரிய பட ஒன்றும் இல்லை....இந்த இதிகாசங்களில் வந்தவர்கள் யாருமே "மனிதர்கள்" அல்ல...கடவுள்/தேவர்களின் அம்சம் என்றே எல்லாரும் பார்க்கிறார்கள்...."இந்த" பழக்கம் வழக்கத்தில் இருந்திருந்தாலும் எல்லாருமே அதை செய்தார்களா...அப்படி செய்தவர்களும் அதை வெளிதெரியாமல் தானே இரக்க நினைப்பார்கள்...பெருமாள் முருகன் இது "நம்மூர்" வழக்கம் என்று அந்த வட்டாரத்தில் உள்ள எல்லாரையுமே சந்தேகிக்க வைத்தார் என்பது தான் குற்ற சாட்டு...

பெருமாள் முருகன்...இது "நான் பிறந்த கதை" என்று சொல்லிவிட்டு எழுதியிருந்திருக்கலாம் :) அப்போது எதிர்ப்பவர்கள் இருந்திருக்க மாட்டார்கள்......

எதற்கும் இந்த புத்தகத்தை படித்தவர்கள்...நிறை குறைகளையும்...இதை எதிர்ப்பவர்கள்..ஆதரிப்பவர்களின் பார்வைகளையும் அலசினால்...நன்றாக இருக்கும்.....

நான்தான்.
 
தேவடியாள் என்ற சொற்பதமே தேவ அடியாள் என்பதுதானே. கடவுளிற்கு நேர்ந்து விட்ட பெண்கள். கடவுள் சேவையே அவர்கள் வாழ்கை. அப்பெண்களின் பருவ உணர்ச்சிகளை பூசாரிகளும் ஊர் பெரியவர்களும் தமக்கு சாதகமாகப் பயன்படுத்திய சமுதாயம்தான் தமிழ் இந்துக்கள். இன்று பாலியல் தொழிலாளர்களை தேவடியா என்றழைக்கும் நிலை. இச்சமுதாயத்தில் இல்லாத ஒன்றையா பெருமாள்முருகன் எழுதினார்.

பெருமாள்முருகன் எழுதியது தமிழ்ச் சமுதாயத்தில் இருப்பதை. இருப்பதால் அதனை வரவேற்க வேண்டுமா..?? :o 

சமுதாயத்தில் சீர்கேடு தொடர்வதை அறியாதவர்களும் அறிந்துகொள்ள வைத்த அவருக்கு நன்றிசொல்லி, எங்கள் சமுதாயத்தைத் திருத்துவதற்கு நாங்கள் ஓன்றுபட்டுப் போராட முயற்சிக்கலாமே. :rolleyes:   

ஒரு சிறிய திருத்தம்.
இருப்பதை இல்லை இருந்ததை. இந்த நாவல் 1940களில் நடந்தவை பற்றியது. வருடம் சரியாக தெரியவில்லை (கூகில் ஆண்டவரிடம் கேட்டு பின்னர் பதிவிடுகின்றேன்). இக்கதையில் கதாநாயகனும் கதாநாயகியும் தியாகராஜரின் ஸ்ரீவள்ளி பார்த்ததாக ஒரு பதிவு. அதனால் ஒரு அனுமானம் 1940 என்று. 
 
தமிழ் சமுதாயம் நாகரீகத்திலும் வாழ்கைமுறையிலும் எவ்வளவோ இப்போது முன்னேறி உள்ளது. இது கடந்தகாலம். அதை பிரதிபலிக்கும் ஒரு நாவல் - அவ்வளவுதான் வேறு எதுவுமில்லை. 
Paanch தவறுக்கு மன்னிக்கவும்
 
ஸ்ரீவள்ளி திரைப்படம் 1945 இல் வெளிவந்ததாகவும் ரி ஆர் மகாலிங்கம் நடித்ததாக கூகிள் ஆண்டவர் கூறுகின்றார். இத்தரவுகளின்படி பார்த்தால் கதை 1955 - 1960 களில் நடந்திருக்கலாம். சந்தர்ப்பம் குறைவுதான் இக்காலகட்டத்தில் தமிழ் இநதுக்களின் வாழ்கைமுறை மிகவும் முன்னேற்றம் அடைந்திருக்கும் என்பது எனது ஊகம்.
 
ஸ்ரீவள்ளி படம்பற்றிய பதிவு மட்டுமே நாவலில் இருந்தது. தியாகராஜர் நடித்தது என்பது எனது அனுமானம் மட்டுமே.

Edited by ஜீவன் சிவா

  • கருத்துக்கள உறவுகள்

புனைவு இலக்கியம் என்பது ஒரு சிறு சம்பவத்தை வைத்து புதிய உலகத்தை படைப்பாளி தனது கற்பனைக் குதிரையத் தட்டிப் படைப்பது. இதனை வரலாறாகவும், போதனையாகவும் படைக்கவேண்டும் என்று எதிர்பார்க்கக் கூடாது. அதற்கு வேறு புத்தகங்களைப் படிக்க வேண்டும்.

கழிப்பறைச் சுவரில் கரிக்கட்டியால் எழுதுபவற்றைப் படிப்பதில் ஆர்வமுள்ளவர்களுக்கு பெருமாள் முருகனைப் பற்றி ஒன்றும் தெரியாது. தங்கள் கரிக்கட்டி சுவர்க்கிறுக்கலால் அவர் மீது வசைபாடி தங்களைப் பிரபல்யப்படுத்துவதில் மட்டும் ஆர்வம் உள்ளது.

மாதொருபாகனை இன்னமும் படிக்கவில்லை. ஆனால் பெருமாள் முருகனின் கூளமாதாரியையும் "பீக்கதைகள்" (ஆம். அதைப் பற்றித்தான்!) சிறுகதைத் தொகுதியையும் படித்துள்ளேன்.

  • கருத்துக்கள உறவுகள்

பெருமாள் முருகனை எழுத்து துறையில் இருந்தே விரட்டி அடிச்சாச்சு......அவரும் இனி எழுதவே மாட்டன் என்று சொல்லிட்டார் இதை நாங்கள் அனைத்து இந்துக்களுக்கும் கிடைத்த வெற்றியாகவே பாக்கின்றோம்........இது பெருமாள் முருகன் போன்ற எழுத்தாளர்களுக்கு விடப்பட்ட எச்சரிக்கை....

ஆதிபராசக்தியின் இடுப்புக்கு ஆபத்து வந்துவிடக்கூடாது என்று ஆதி சங்கரர் வழிப் பிரார்த்திப்போமாக.

”அம்மா ! இயற்கையில் மெல்லியதான உன் இடுப்பு , உன் இரு பருத்த ஸ்தனங்களின் பாரத்தைத் தாங்க முடியாமல் , கொஞ்சம் முன்புறம் சாய்ந்து இருப்பதைப் பார்த்தால் , ஒடிந்து விழுந்து விடுமோ , என்று தோன்றுகிறது . தண்ணீருள்ள ஆற்றின் கரையிலுள்ள மரமானது , கீழே விழுந்துவிடும் போல் சாய்வாக இருந்தாலும் , எவ்வளவு உறுதியாக இருக்குமோ , அதுபோல் உன் இடுப்பிற்கு எந்த ஆபத்தும் வராமல் ( ஓடிந்துவிடாமல்) , நீண்டகாலம் நன்றாக இருக்கப் பிரார்த்திக்கிறேன்” - சௌந்தர்ய லஹரி, சுலோகம் 79

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.