Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சீனாவின் திட்டத்தினால் நாட்டின் இறைமை, பாதுகாப்புக்கு ஆபத்து – சிறிலங்கா அரசாங்கம்

Featured Replies

சீனாவின் திட்டத்தினால் நாட்டின் இறைமை, பாதுகாப்புக்கு ஆபத்து – சிறிலங்கா அரசாங்கம் JAN 16, 2015 | 11:56by கார்வண்ணன்in செய்திகள்

kabir-hashim-300x200.jpgசீனாவின் 1.3 பில்லியன் டொலர் உதவியுடன் மேற்கொள்ளப்படும், கொழும்பு துறைமுக நகரத் திட்டம், சிறிலங்காவின் பாதுகாப்பு மற்றும் இறைமை பற்றிய கவலைகளை  ஏற்படுத்தியுள்ளதாக, சிறிலங்காவின் புதிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இதனால் இந்த திட்டத்தை மீளாய்வு செய்யவுள்ளதாக, சிறிலங்காவின் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் கபீர் ஹாசிம் இன்று கொழும்பில் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

“துறைமுக நகரத் திட்டத்தை முழுமையாக மீளாய்வு செய்ய வேண்டியுள்ளது.

இதனால் ஏற்படக் கூடிய பாதுகாப்புக் கவலைகள் குறித்தும் நாம் எப்போதும் பேசி வந்துள்ளோம்.

இன்னொரு நாட்டுக்கு உயர்பாதுகாப்பு வலயத்தில், அறுதி அடிப்படையில் நிலத்தை வழங்க முடியாது. இந்த விடயத்தில் வெளிப்படைத் தன்மை இல்லாதுள்ளது.

திட்டத்தை நடைமுறைப்படுத்தும் அதிகாரம், துறைமுக அதிகாரசபையிடம் உள்ளது. ஆனால், இதனைச் செய்வதற்கு துறைமுக அதிகாரசபைக்கு ஆணை கிடையாது.

இது நிதி அமைச்சு மூலமாக வந்திருக்க வேண்டும். சரியான நடைமுறைகளின் ஊடாகவே இது வரவேண்டும்.

துறைமுக அதிகாரசபை ஒரு அதிகாரசபை. அதற்கு பலநோக்குத் திட்டத்தை செயற்படுத்தும் அதிகாரம் இல்லை.

அதற்கு கப்பல் மற்றும் துறைமுகங்கள் விடயத்தில் தான் அதிகாரம் உள்ளது. ஆனால் இது துறைமுகங்கள், கப்பல்கள் சம்பந்தமான திட்டம் அல்ல.

இது வீடமைப்பு வளாகங்களை அபிவிருத்தி செய்யும் திட்டம். இந்த திட்டம் புதிய அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும்.

இது எமது நாட்டின் இறைமையின் மீது தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நாம் மிகப்பெரிய கவலை கொள்கிறோம்.

எமது நாட்டின் கரையோரப் பகுதியில் மாற்றத்தை ஏற்படுத்துவதானால், அது சரியான முறையில், நாட்டிலுள்ள  எல்லோரினாலும் ஏற்றுக் கொள்ளப்படத்தக்க வகையிலும் விழிப்புணர்வுடனுமே மேற்கொள்ளப்பட வேண்டும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

http://www.puthinappalakai.net/2015/01/16/news/2944

தொடர்புபட்ட செய்தி :  http://www.yarl.com/forum3/index.php?/topic/152247-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%89%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE/

சீனாவுடனான உறவுக்கு சிறிலங்கா முன்னுரிமை கொடுக்குமாம் – ரணில் கூறுகிறார்

  • கருத்துக்கள உறவுகள்

இவர்கள்

சீனாவுடனும்

இந்தியாவுடனும் முறுகுவதுபோல் ஆட்சி  செய்யப்போகிறார்களா??

இதற்குள் தமிழனது சகல விடயங்களை  மழுங்கடிக்கச்செய்யலாம் என்றால்.....?? :(

  • கருத்துக்கள உறவுகள்
வழக்கமான சிங்கள விளையாட்டு அவர்கள் எப்பாடுபட்டாவது சிங்களத்தை பொருண்மியத்தை சுய இறைமையையும் வளர்த்து விடுவார்கள்.
 இருக்கும் சந்தர்ப்பங்களை தவற விட்டுவிட்டு எடுத்தற்க்கு எல்லாம் புலி வாந்தி எடுத்தே தமிழனை  குட்டிச்சுவராக்க சம்பந்தனும் சுமத்திரனும் நமக்குள், தமிழனின் தலையெழுத்து மாற்ற முடியாது.
  • கருத்துக்கள உறவுகள்

சீனா சிங்களத்தால் (வேண்டாவெறுப்பாக என்றாலும்) ஓரங்கட்டப்படுவதே தமிழர்களுக்கு நல்லது.. :D

  • கருத்துக்கள உறவுகள்

சீனா சிங்களத்தால் (வேண்டாவெறுப்பாக என்றாலும்) ஓரங்கட்டப்படுவதே தமிழர்களுக்கு நல்லது.. :D

சிறிமா சீனா பக்கம் பார்த்தா ஜெ.வி.பி மூலம் தூக்கிட்டோம்.....ஜே.ஆர் அமேரிக்கா பக்கம் பார்த்தார் புலிகள் மூலம் அடிபணியவைச்சோம்,பிரமதாசா புலிகள் கூட சேர்ந்தார் புலிகள் மூலமே அழிச்சோம்,புலிகள் நோர்வேக்கு போனார்கள் மகிந்தா பிரதர்ஸ் மூலம் அழிச்சோம்,மகிந்தா பிரதர்ஸ் மீண்டும் சீனா பக்கம் போனார்கள் ரணில்,சந்திரிக்கா கூட்டு முலம் தூக்கி போட்டோம்....இவர்களும் எமக்கு டிமிக்கி விட்டால் ஜனநாயக சதி மூலம் தூக்க எங்களுக்கு ரொம்ப நாள் செல்லாது......இப்படி இந்தியா சொல்லுது

இப்போது ஒரு வினோதமான சூழ்நிலை தோன்றியுள்ளது..! வழக்கமாக சுந்திரக்கட்சி லேசான சீன சார்புடனும் ஐதேக மேற்கு பக்கமும் செயல்படுவினம்.. இந்தமுறை இரண்டு பக்கமும் சேர்ந்து மேற்கு/இந்தியா பக்கம் விளையாடுகினம்.. :rolleyes:

இதனால் சீனாவின் பக்கம் ஒரு வெற்றிடம் தோன்றியுள்ளது. வெற்றிடத்தை எப்பவுமே காற்று நிரப்பும்.. :D

  • கருத்துக்கள உறவுகள்

. இந்தமுறை இரண்டு பக்கமும் சேர்ந்து மேற்கு/இந்தியா பக்கம் விளையாடுகினம்.. :rolleyes:

இதனால் சீனாவின் பக்கம் ஒரு வெற்றிடம் தோன்றியுள்ளது. வெற்றிடத்தை எப்பவுமே காற்று நிரப்பும்.. :D

விரும்பி விளையாடவில்லை ...விளையாட நிர்பந்திக்கப்பட்டுள்ளார்கள் ....

  • கருத்துக்கள உறவுகள்

விரும்பி விளையாடவில்லை ...விளையாட நிர்பந்திக்கப்பட்டுள்ளார்கள் ....

உண்மை.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்கள் சீனா உடன் பேரம் பேசுவது மாதிரி ஒரு போக்கு காட்டினால் விளைவு எப்படி இருக்கும

????

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்கள் சீனா உடன் பேரம் பேசுவது மாதிரி ஒரு போக்கு காட்டினால் விளைவு எப்படி இருக்கும

????

இப்ப இருக்கிறவை சரிப்பட மாட்டினம் புலவர்.. :D

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப எங்கள் நிலை அடங்கி ஒடுங்கி அழிந்து போக வேண்டியதுதானா!!!!

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப எங்கள் நிலை அடங்கி ஒடுங்கி அழிந்து போக வேண்டியதுதானா!!!!

ஏன்

தமிழருக்கு இப்ப என்ன பிரச்சினை...??

தமிழர்கள் தெரிவு செய்த ஐனாதிபதி  தான் ஆட்சியில் உள்ளார்

கூட்டமைப்புக்கேட்ட ஆகக்கூடுதலான கோரிக்கையான ஆளுணரை மாற்றியாச்சு

அதென்ன குழு?

அதற்கள் கூட்டமைப்பு வந்தாச்சு...

வேறு என்ன வேண்டும்?

வேறு என்ன கேட்டீர்கள் தருவதற்கு?

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களத்திடமிருந்து நாம் கற்கவேண்டியது இதைத்தான். எப்ப எதை எப்படி தேவையானவற்றை வெட்டியபடி, விடவேண்டியதை விட்டு, சேர்க்க வேண்டியதை சேர்த்து, தமது நலனை பாதுகாப்பார்.

ஏன்

தமிழருக்கு இப்ப என்ன பிரச்சினை...??

தமிழர்கள் தெரிவு செய்த ஐனாதிபதி  தான் ஆட்சியில் உள்ளார்

கூட்டமைப்புக்கேட்ட ஆகக்கூடுதலான கோரிக்கையான ஆளுணரை மாற்றியாச்சு

அதென்ன குழு?

அதற்கள் கூட்டமைப்பு வந்தாச்சு...

வேறு என்ன வேண்டும்?

வேறு என்ன கேட்டீர்கள் தருவதற்கு?

வேறென்ன வேண்டும்? நாடுவிட்டு ஓட ஒரு கள்ளத்தோணி 

  • கருத்துக்கள உறவுகள்

வேறென்ன வேண்டும்? நாடுவிட்டு ஓட ஒரு கள்ளத்தோணி 

ஏன் சொந்த மண்ணைவிட்டு ஓடமுயலவேண்டும்

அப்படியாயின் ஏதோ அவர்களை விரட்டுகிறது..??

அதற்குத்தான் தீர்வு வேண்டும்

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர் தரப்பை சீனா தொட்டும் பார்க்காது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழர்கள் சீனா உடன் பேரம் பேசுவது மாதிரி ஒரு போக்கு காட்டினால் விளைவு எப்படி இருக்கும

????

பேரம் பேச போவது நீயா, நானா என்பதில் தமிழர்களுக்குள் சண்டைவரும். 

Edited by sabesan36

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.