Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தேசிய நிறைவேற்று சபை நியமனம் தமிழ் பேசும் பிரதிநிதிகள் சம்பந்தன், மனோ, ரவுப், ரிசாத்

Featured Replies

cropped-dpfbanners062.jpg

JANUARY 16, 2015 · 3:28 PM
தேசிய நிறைவேற்று சபை நியமனம் தமிழ் பேசும் பிரதிநிதிகள் சம்பந்தன், மனோ, ரவுப், ரிசாத்

தேசிய நிறைவேற்று சபை என்ற உயர் சபையை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று நியமித்துள்ளார். இச்சபையின் முதல் கூட்டம் நேற்று ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.

100 நாள் வேலைத்திட்டம், உறுதியளிக்கப்பட்டுள்ள அரசியல் அமைப்பு திருத்தங்கள், கடந்த அரசின் ஊழல், சட்டவிரோத நடவடிக்கைகள், மனித உரிமை மீறல்கள், நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலின் போது நடைபெற்ற முறைகேடுகள், கொழும்பு மாநகரிலும், வட-கிழக்கு உட்பட நாடு முழுக்க நடைபெற்ற காணிக்கொள்ளைகள், தேசிய கணக்காய்வாளர் நடவடிக்கைகள் உட்பட புதிய அரசாங்கத்தின் தேசிய முன்னெடுப்பு தொடர்பாக, ஒவ்வொரு செவ்வாய்க்கிழமைகளிலும் இந்த சபை ஜனாதிபதி செயலகத்தில் கூடி ஆராய்ந்து முடிவுகளை எடுக்கும்.

இந்த சபையின் அங்கத்தவர்களாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, வண. சோபித தேரர், சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, சம்பந்தன், மனோ கணேசன், ரவுப் ஹக்கீம், ரிசாத் பதுதீன், சரத் பொன்சேகா, அனுரகுமார திசாநாயக்க, பாடலி சம்பிக்க ரணவக்க ஆகிய பதினோரு பேர் பணியாற்றுவர்.

562177_437535736333912_1039708119_n.jpg?

http://dpflanka.org/2015/01/16/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF/

மற்றவர்கள் பந்தை அடிக்கும் போது சரி பிழை கூறியவர்களிடமே போய் சேர்ந்த பந்து.ஏதோ விதத்தில் அடித்தாகவேண்டுமே? நரி மூளை எங்கிருந்தோ வேலை செய்கின்றது
 
Edited by BLUE BIRD

  • கருத்துக்கள உறவுகள்
மற்றவர்கள் பந்தை அடிக்கும் போது சரி பிழை கூறியவர்களிடமே போய் சேர்ந்த பந்து.ஏதோ விதத்தில் அடித்தாகவேண்டுமே? நரி மூளை எங்கிருந்தோ வேலை செய்கின்றது
 
பானையில  கிண்டி கிண்டி பார்த்தபின் தான்
அகப்பையை  தடியாக உபயோகித்தார்கள் தமிழர்கள்
மீண்டும்....???
வேற வழியில்லை
நல்ல தலைவர்கள் தம்மை மக்களுக்கு இனம் காட்டும்
வழி  நடாத்தி பலம் சேர்க்கும் காலப்பகுதி
பார்க்கலாம்
  • தொடங்கியவர்

சிறுபான்மையினரின் பிரச்சினையைத் தீர்க்க தமிழ், முஸ்லிம் தலைவர்கள் ஒன்றுபட வேண்டும்

Rishad-Bathiudeen_2-600x354.jpg

நாட்டில் நல்­லாட்சி ஏற்­பட்டு சிறு­பான்மை சமூ­கங்­களின் பிரச்­சி­னைகள் தீர்க்­கப்­ப­டு­வ­தற்கு முதலில் சிறு­பான்மை சமூக அர­சியல் தலை­வர்கள் ஒன்று பட­வேண்டும்.இதற்­காக தமிழ்­தே­சிய கூட்­ட­மைப்பின் தலைவர் இரா.சம்­பந்­து­டனும் பேச்­சு­வார்த்தை நடத்­தி­யுள்ளேன். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் தலைவர் ரவூப்­ஹக்­கீமு­டனும் விரைவில் பேச்­சு­வார்தை நடத்­த­வுள்ளேன் என கைத்­தொழில் மற்றும் வணிக அமைச்­சரும் அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ் தலை­வ­ரு­மான ரிசாத் பதி­யுதீன் தெரி­வித்தார்.

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் தலை­மை­யி­லான புதிய அர­சாங்­கத்தில் சிறு­பான்­மை­யி­னரின் பிரச்­சி­னை­க­ளுக்­கான தீர்­வுகள் தொடர்பில் வின­வி­ய­போதே அவர் மேற்­கண்­ட­வாறு கூறினார்.தொடர்ந்தும் அவர் கருத்து தெரி­விக்­கையில், நாட்­டு­மக்கள் ஜனா­தி­ப­தியின் 100 நாள் வேலைத்­திட்­டத்­துக்கு பூரண ஆத­ரவு வழங்­கி­யி­ருக்­கி­றார்கள். அரசில் இணைந்­துள்ள பல்­வேறு கொள்­கை­யு­டையோர் அனை­வரும் ஒரு மித்த கருத்­துடன் இந்­நாட்டில் மீண்டும் பொது­ப­ல­சேனா போன்ற அமைப்­புகள் மூலம் முஸ்­லிம்­க­ளுக்கு துன்­ப­க­ர­மான சூழ்­நிலை ஏற்­ப­டாது பாது­காக்­கப்­படும்.

கடந்த காலங்­களில் ஜாதிக ஹெல உறு­மய கட்­சியை முஸ்­லிம்கள் பிழை­யாக பார்த்­தி­ருந்­தாலும் அவர்கள் இஸ்­லாத்­தைப்­பற்றி தவ­றாக பிர­சாரம் செய்­தி­ருந்­தாலும் அவர்­களும் எம்­முடன் ஒன்­றி­ணைந்து இருக்­கி­றார்கள். எங்­க­ளுக்குள் நல்­லாட்­சிக்­காக நல்­லு­றவு உரு­வா­கி­யி­ருக்­கி­றது. வேற்­று­மை­களை மறந்து நாம் ஒன்று பட்­டி­ருக்­கிறோம்.

இதே போன்று பல கட்­சிகள் அமைப்­புகள் கைகோர்த்­துள்­ளன. அனைத்தும் நல்­லாட்சி, சக­வாழ்வு, நல்­லி­ணக்கம் என்­ப­வற்­றையே இலக்­காகக் கொண்­டுள்­ளன.

தமிழ், முஸ்லிம் அர­சியில் தலை­வர்கள் பேச்­சு­வார்த்­தைகள் நடத்­து­வது சதி­செய்­வ­தற்­கா­க­வல்ல. நல்­லாட்­சி­யையும் சக­வாழ்­ வி­னையும் உரு­வாக்­கு­வ­தற்கே. வடக்கு கிழக்கில் தமிழ் முஸ்லிம் சமூ­கத்தில் சில பிரச்­சி­னைகள் இருந்­தாலும் அவற்றை பேச்­சு­வார்த்­தைகள் மூலம் தீர்­த்­துக்­கொள்­வ­தற்கு நாம் உடன்­பாட்­டுக்கு வர­வுள்ளோம்.

புதிய அர­சாங்­கமும் தனது கட­மை­களைத் தொடர்ந்து அவற்றில் வெற்­றி­யீட்­டு­வ­தற்கு முஸ்லிம் அமைச்­சர்­களும் சமூ­கமும் பூரண ஒத்துழைப்பினை நல்கும். நாட்டில் முஸ்லிம் சமூகத்துக்கு ஏற்பட்ட துக்ககரமான நிகழ்வுகள் இனி ஒரு போதும் ஏற்படாதவாறு நல்லாட்சி நடைபெற நாங்கள் என்றும் அரசுக்கு பக்கபலமாக இருப்போம் என்று உறுதியளிக்கின்றோம் என்றார்.

http://tamilfm.cmr24.net/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D/

  • கருத்துக்கள உறவுகள்

மனோ கணேசன் அவர்களும் இந்த தேசிய நிறைவேற்று சபையில் நியமனம் பெற்றுள்ளதால் இலங்கையில் நல்லாட்சி ஒன்றிற்கான அடித்தளம் உறுதிபெறும் என்று நம்பலாம்.  

  • கருத்துக்கள உறவுகள்

தேர்தலை புறகணித்து மகிந்தவை வெல்ல விட்டிருந்தால் இந்த அநியாயம் நடந்திருக்குமா?

  • கருத்துக்கள உறவுகள்

தேர்தலை புறகணித்து மகிந்தவை வெல்ல விட்டிருந்தால் இந்த அநியாயம் நடந்திருக்குமா?

100வது தரம்..........

1000 ஆக வளர  வாழ்த்துக்கள்

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு லட்சம் தரமும் சொல்லலாம். ஏனெண்டால் 2005 இல் இதே மாதிரி சிந்தித்ததால் எம்மக்கள் அழிந்த வேதனை எனக்கு இன்னமும் ஆறவில்லை.

அந்த ரணத்தை மீள கிண்டும்படியாக மீண்டும் அதே படுகுழியில் என் மக்களை தள்ள நீங்கள் எல்லோரும் கையில் எடுத்த ஆயுதம் தான் தேர்தல் புறக்கணிப்பு. நல்ல வேளை மக்கள் சுதாகரித்து கொண்டர்கள். இந்த மக்குச் சித்தாந்தத்தின் பின் விளைவுகளை எப்போதும் நினைவு படுத்தியபடி இருக்க வேண்டும். இலாவிட்டால் மக்களை ஈசியாக வழிதிருப்பி மீண்டும் ரத்த ஆறை ஓடவைக்க எத்தனிப்பீர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

தேர்தலை புறகணித்து மகிந்தவை வெல்ல விட்டிருந்தால் இந்த அநியாயம் நடந்திருக்குமா?

எப்படியும் தமிழ்ருக்கு அடி விழுந்தே இருக்கும். நீங்கள் அப்படி நடக்காது என அனுமானமாக கூறலாம் அல்லது வி.புலிகள் மேல் உள்ள வெறுப்பில் கூறலாம்.

அவருக்கு வெறுப்பு தனது சக இனத்தில். எஜமானர்களில் மாத்திரம் தான் விசுவாசம்.

  • கருத்துக்கள உறவுகள்

2005 இல் ரணில் வெண்டிருந்தால் முள்ளிவாய்க்கால் போல் பெருவாரியாக மக்கள் அழிந்திருக்க மாட்டார்கள்.

சிறுக, சிறுக புலிகளை ஒண்டும் இல்லாமல் ஆக்கி அழித்திருப்பார் ரணில், ஆனால் மக்கள் இந்தளவுக்கு அழிந்திருக்க மாட்டார்கள்.

புலிகள் மீதுள்ள கண்மூடித்தனமான விசுவாசம் இதை ஏற்க உங்களை விடாது.

  • கருத்துக்கள உறவுகள்

ரணில் காலிமுக திடலில் கொஞ்ச இறைச்சியை வீசி இருப்பார்
புலிகள் பதுங்கி பதுங்கி போக அப்படியே வலையை வீசி பிடித்திருப்பார்.

மகிந்த ஆயுத பலத்துடன் இருந்த புலிகளை உலக இராணுவ பலத்துடன் இராணுவ படை எடுப்பின் மூலம் பிடிக்க வெளிக்கிட்ட படியால்தான் மக்கள் இறந்து போனார்கள்.

தேர்தலை புறகணித்து மகிந்தவை வெல்ல விட்டிருந்தால் இந்த அநியாயம் நடந்திருக்குமா?

நிச்சயமாக இல்லை......
இதைவிட சிறப்பாக நடந்திருக்கும். மகிந்த கூடத்தை எதிர்த்து சிங்கள மக்கள் ரோட்டில் இறங்கி இருப்பார்கள். மேலை நாடுகளின் தலையீடு நேரடியாக வந்திருக்கும். ஒருவரோடு ஒருவர் அடிபட்ட சிங்களம் நாட்டில் சுமூகம் வேண்டும் எனும் கட்டாயதிட்குள் தள்ள பட்டிருக்கும்.

மஹிந்தாவை வெல்ல வைக்கும் சிங்கள மக்களா ரோட்டில் இறங்கி இருப்பார்கள்?  :o

  • கருத்துக்கள உறவுகள்

கிட்டத்தட்ட அப்படித்தான். கருணாவை எப்படி வலை வீசிப் பிடித்தார்களோ, தமிழ்செல்வனின் இருப்பிடம் பற்றி துல்லியமாக சொல்லிக்கொடுத்தவரை எப்படி வலை வீசி பிடிதார்களோ, சங்கரின் நகர்வை, சார்ல்சின் நகர்வை சொல்லிக்கொடுத்தவர்களை எப்படி வலைவீசி பிடித்தனரோ அப்படி சிறுகச், சிறுக புலியை பலவீனப்படுத்தி இருப்பர். மறு புறத்தே சமாதானத்துக்கு பழக்கப்பட்ட மக்களின் போர்க்குணம் குறைந்து போக தொடங்கி இருக்கும். 2005-2009 வரை கூட யாழில் இருந்து இளைஞர் யாரும் சொல்லுமாப்போல் போருக்கு போகவில்லை. பிரபாவுக்கும் சக்கரை வியாதி வேறு. அவர் என்ன சாகாவரமா வாங்கி வந்தார்? இயற்கை ஓட்டதிலேயே விட்டு, நீண்ட கையிரில் ஓடவிட்டு 2020 வாக்கில் சோலியை முடித்திருப்பார்கள்.

சனத்தின் இழப்பு பெருவாரியாக இல்லாமல் புலிகளின் கதை முடிக்கப்பட்டிருக்கும். புலிகளுக்குமிது தெரியும். இந்த high stakes diplomatic gamble ஐ ஆடத்தெரியாமல் அல்லது ஆட விரும்பாமல் தாம் மொக்கன்/மோடயன் எண்டு தப்பாக எடை போட்டு மகிந்தவை கொண்டு வந்தனர். கூடவே எமில் காந்தன் மூலம் மகிந்த கொடுத்த காசையும் வாங்கினர். ரணிலை விட இனவாதியும், கடும் போக்கு சிந்தனையும் உடைய மகிந்தவை வெல்ல வைத்தால், சிங்களம் ரெண்டுபடும், இலங்கையில் குழப்பம் வரும் என்று மேலே கூறியிருப்பது போல் மனப்பால் குறித்தனர்.

மகிந்த சிந்த்ஹனையை வாசித்த தமிழர் யாரும் 2005 மகிந்தவுக்கோ அல்லது புறக்கணிப்போ செய்திருக்க மாட்டார்கள். புலிகள் செய்யச் சொன்னார்கள். மக்கள் செய்தார்கள். விளைவு மகிந்த பதவிக்கு வந்ததும் வட்டியும் முதலுமாக கொடுத்தார்.

  • கருத்துக்கள உறவுகள்

2005 இல் ரணில் வெண்டிருந்தால் முள்ளிவாய்க்கால் போல் பெருவாரியாக மக்கள் அழிந்திருக்க மாட்டார்கள்.

சிறுக, சிறுக புலிகளை ஒண்டும் இல்லாமல் ஆக்கி அழித்திருப்பார் ரணில், ஆனால் மக்கள் இந்தளவுக்கு அழிந்திருக்க மாட்டார்கள்.

புலிகள் மீதுள்ள கண்மூடித்தனமான விசுவாசம் இதை ஏற்க உங்களை விடாது.

புலிகள் மீதான வெறுப்பு உங்களை இப்படி கூற வைக்கிறது என எடுக்கலாமா?
ரனில் சொன்னவரா சிறுக சிறுக தான் கொல்ல  போகிறோம் என??
  • கருத்துக்கள உறவுகள்

JANUARY 16, 2015 · 3:28 PM
தேசிய நிறைவேற்று சபை நியமனம் தமிழ் பேசும் பிரதிநிதிகள் சம்பந்தன், மனோ, ரவுப், ரிசாத்

தேசிய நிறைவேற்று சபை என்ற உயர் சபையை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று நியமித்துள்ளார். இச்சபையின் முதல் கூட்டம் நேற்று ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.

மகிந்தவின் ஆட்சியில் ஜனாதிபதி ஆணைக்குழு

மைத்திரியின் ஆட்சியில் தேசிய..... என்னது ஆ..  நிறைவேற்றுச் சபை

இப்படி எத்தனை திருகுதாளங்களை நாங்கள் பார்த்திருப்போம்.

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்த நியாயமான முறையில்,வெண்டிருந்தால் ஒரு மாங்காயும் நடந்திராது.

இப்போதும் சிங்களவர்களின் பெருவாரித்தெரிவு மகிந்த்ஹவே. சிறுபானமை வோட்டால்தான் மைத்திரி வெண்டார்.

அப்படியாயின் மகிந்த ஆதரவாளர்கள் தெருவில் இறங்கி இருக்கோணுமே.

சிங்கள மனோநிலையை சரிவர புரியாதோர் குடிக்கும் மனப்பால்தான் இந்த சிங்களம் ரெண்டுபடும் எண்ட ஐடியா.

பொன்சேக்கா தோத்தபோது வராதது, விஜேவீர கொல்லப்பட்டபோது வராதது, மைத்திரி தோற்றதும் வருமாக்கும்.

மைத்திரி - வெண்டு, மகிந்த ராணுவப்புரட்சி செய்திருந்தால் - ஒரு குழப்ப நிலை வெளிநாட்டு தலியீட்டுக்கு வாய்ப்பு இருந்தது. ஆனால் அதுக்கும் மைத்திரிக்கு முதலில் நாம் வோட்டுப் போட்டிருக்க வேண்டும்.

நாம் புறக்கணிப்பதால் - மகிந்த சிங்கள வாக்குப் பலத்தில் வெண்டிருந்தால் ஒரு மண்ணாங்கட்டியும் நடந்திராது.

போர்க்குற்ற விசாரணை - மகிந்த தோற்றாலும் வெண்டாலும் அது மேற்க்கின் நிகழ்சி நிரலின் படியே நடக்கும்.

இதை எல்லாம் சொல்லிக்கொண்டா செய்வார்கள்? ரொம்ப சின்னபிள்ளத்தனமாக இருக்கு கேள்வி.

மகிந்த சொன்னாரா நரவேட்டை ஆடி, இனப்படுகொலை செய்து அதன் மூலம் தான் புலிகளை அழிப்பேன் என்று.

இதெல்லாம் உய்தறியும் விடயம்.

கருத்து மோதலில் கடுப்பாகீட்டு பிறகு எண்ட கருத்துக்களுக்கு கத்தி போடாதேயுங்கோ, இப்பவே சொல்லீட்டன்.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு லட்சம் தரமும் சொல்லலாம். ஏனெண்டால் 2005 இல் இதே மாதிரி சிந்தித்ததால் எம்மக்கள் அழிந்த வேதனை எனக்கு இன்னமும் ஆறவில்லை.

அந்த ரணத்தை மீள கிண்டும்படியாக மீண்டும் அதே படுகுழியில் என் மக்களை தள்ள நீங்கள் எல்லோரும் கையில் எடுத்த ஆயுதம் தான் தேர்தல் புறக்கணிப்பு. நல்ல வேளை மக்கள் சுதாகரித்து கொண்டர்கள். இந்த மக்குச் சித்தாந்தத்தின் பின் விளைவுகளை எப்போதும் நினைவு படுத்தியபடி இருக்க வேண்டும். இலாவிட்டால் மக்களை ஈசியாக வழிதிருப்பி மீண்டும் ரத்த ஆறை ஓடவைக்க எத்தனிப்பீர்கள்.

என்னைப்பொறுத்தவரை

சிறீலங்கா  ஒவ்வாத தேசம்....

அதன்படி தான் எனது கருத்தக்கள் இருக்கும்

தமிழரது அடிப்படை வாழ்வு சிதைக்கப்பட்ட அவலநிலையில்

தேனாறு பாலாறு ஓடுது என்று எழுதுவதைவிட

ஒரு மக்கு சித்தார்ந்தமும் இருக்கமுடியாது

இரண்டு கடவுச்சீட்டை  வைத்தபடி

எங்கு வளமாக வாழலாம் அதற்கேற்ப ஓடலாம் என்பவரது கருத்துக்கள் தாயகத்தின் கருத்தாகாது....

அப்படி நினைத்தால் அதைவிட மோட்டுத்தனமும்   சுயநலமும்  பச்சோந்தித்தனமும் இருக்கமுடியாது..

(புலம்  பெயர் தமிழர் பற்றிய  தங்களது இழி  சொற்கள் மற்றும் பட்டம் கொடுத்தல் (தற்பொழுது சுப்பன் குப்பன்) நக்கல்கள் நிறுத்தப்படணும்.  நிர்வாகத்துக்கு ஏற்கனவே எழுதியாச்சு. பதில் இல்லாததால் இனி  அவற்றைத்தொடர்ந்தால் என்னிடமிருந்தும் இவ்வாறு தான் பதில்கள் வரும். தொடர்ந்தீர்களானால் மேலும் அதிகரிக்கும். அதற்கு நிர்வாகமே பொறுப்பு)

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு ஒற்றை கடவுச்சீட்டுத்தான்.

நீங்கள் அவலை நினைத்து உரலை இடிக்கிறீர்கள். வழமை போல :).

மேலே நீங்கள் எழுதியதில் எனக்கு ஒரு மனவருத்தமும் இல்லை. அரிவரிப்பிள்ளை மாரி நான் நிர்வாகத்திடம் கோள் சொல்லப்போவதுமில்லை.

தனது போராட்டத்தை வாழ்வில் இந்திய அரசாலும் பல் வேறு அதிகார சக்திகாலும் ஆசை வார்தைகள் காட்டடப்பட்ட போதிலும், பணத்திற்கும் ஏனைய சலுகைகளுக்கோ மயங்காமல் நேர்மையுடனும் அரப்பணிப்புடனும் தனது குடும்பத்தையே போராட்டத்திற்காக அர்ப்பணித்தவர் பிரபாகரன் என்பதை அவரது எதிரிகள் கூட வியந்து பாராட்டியுள்ளனர். தமிழ் மக்களுக்கும் அது தெரியும் அதனாலேயே வரை என்றும் மரியாதையுடன் நோக்குகின்றனர். அப்படிப்பட்ட பிரபாகரன் காசு வாங்கினார் என தனது எஜமானர்களுக்கு மட்டும் வாலை ஆட்டும் சில பிராணிகள் கூறுகின்றன. போராளித்தலைவர்கள் உயிருடன் இல்லை என்பதால் தாம் நினைத்ததை எல்லாம் தெருவில் போகும் தெருப்பேச்சாக இவர்கள் கூறலாம் இதை நம்ப தமிழ் மக்கள் முட்டாள்கள் அல்ல. இது எஜமானர்களுக்கு வாலாட்டும் பிராணிகளுக்கு தெரிய நியாயமில்லை

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு ஒற்றை கடவுச்சீட்டுத்தான்.

நீங்கள் அவலை நினைத்து உரலை இடிக்கிறீர்கள். வழமை போல :).

மேலே நீங்கள் எழுதியதில் எனக்கு ஒரு மனவருத்தமும் இல்லை. அரிவரிப்பிள்ளை மாரி நான் நிர்வாகத்திடம் கோள் சொல்லப்போவதுமில்லை.

நான் எழுதியதன் அர்த்தம்

உங்கள் எழுத்துக்கள் பலருக்கு மனவருத்தம் தருகின்றன என்பதற்கே....

அதில் உடன்பாடுண்டென்றால் தொடருங்கள்...

திருப்பி மரியாதையை  எதிர்பாராதீர்கள்.....

நிர்வாகத்துக்கு அறிவித்தேன் என்று பகிரங்கமாக சொல்வது கோள் சொல்வதா?? களவிதியை  சரியான முறைப்படி ஞாபகப்படுத்தினோம்.  இனி..??)

  • கருத்துக்கள உறவுகள்

ரிச்சார்ட் பதியுத்தீன் தானே மன்னாரில் நீதிபதியை மிரட்டியவர்????அவரும் இந்நகர குழுவில் அங்கம் வகிக்கிறாரா?உருப்பட்ட மாதிரிதான்?????

Edited by புலவர்

  • கருத்துக்கள உறவுகள்

ரிச்சார்ட் பதியுத்தீன் தானே மன்னாரில் நீதிபதியை மிரட்டியவர்????அவரும் இந்நகர குழுவில் அங்கம் வகிக்கிறாரா?உருப்பட்ட மாதிரிதான்?????

ஏன் புலவர் அவர்களே..? அருணகிரிநாதர் உருப்படலாம். ரிச்சாட் பதியுதீன் உருப்படக்கூடாதோ...??  :(  :icon_idea:

கிட்டத்தட்ட அப்படித்தான். கருணாவை எப்படி வலை வீசிப் பிடித்தார்களோ, தமிழ்செல்வனின் இருப்பிடம் பற்றி துல்லியமாக சொல்லிக்கொடுத்தவரை எப்படி வலை வீசி பிடிதார்களோ, சங்கரின் நகர்வை, சார்ல்சின் நகர்வை சொல்லிக்கொடுத்தவர்களை எப்படி வலைவீசி பிடித்தனரோ அப்படி சிறுகச், சிறுக புலியை பலவீனப்படுத்தி இருப்பர். மறு புறத்தே சமாதானத்துக்கு பழக்கப்பட்ட மக்களின் போர்க்குணம் குறைந்து போக தொடங்கி இருக்கும். 2005-2009 வரை கூட யாழில் இருந்து இளைஞர் யாரும் சொல்லுமாப்போல் போருக்கு போகவில்லை. பிரபாவுக்கும் சக்கரை வியாதி வேறு. அவர் என்ன சாகாவரமா வாங்கி வந்தார்? இயற்கை ஓட்டதிலேயே விட்டு, நீண்ட கையிரில் ஓடவிட்டு 2020 வாக்கில் சோலியை முடித்திருப்பார்கள்.

 இப்படி வீணாக நீட்டி முழங்கமல் என்னை எப்படி வலைவீசி பிடித்தார்களோ அதே போல தான்  என்று சுருக்கமாக கூறியிருக்கலாம். யாழ்கள வாசகர்கள் புரிந்திருப்பார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

கிட்டத்தட்ட அப்படித்தான். கருணாவை எப்படி வலை வீசிப் பிடித்தார்களோ, தமிழ்செல்வனின் இருப்பிடம் பற்றி துல்லியமாக சொல்லிக்கொடுத்தவரை எப்படி வலை வீசி பிடிதார்களோ, சங்கரின் நகர்வை, சார்ல்சின் நகர்வை சொல்லிக்கொடுத்தவர்களை எப்படி வலைவீசி பிடித்தனரோ அப்படி சிறுகச், சிறுக புலியை பலவீனப்படுத்தி இருப்பர். மறு புறத்தே சமாதானத்துக்கு பழக்கப்பட்ட மக்களின் போர்க்குணம் குறைந்து போக தொடங்கி இருக்கும். 2005-2009 வரை கூட யாழில் இருந்து இளைஞர் யாரும் சொல்லுமாப்போல் போருக்கு போகவில்லை. பிரபாவுக்கும் சக்கரை வியாதி வேறு. அவர் என்ன சாகாவரமா வாங்கி வந்தார்? இயற்கை ஓட்டதிலேயே விட்டு, நீண்ட கையிரில் ஓடவிட்டு 2020 வாக்கில் சோலியை முடித்திருப்பார்கள்.

சனத்தின் இழப்பு பெருவாரியாக இல்லாமல் புலிகளின் கதை முடிக்கப்பட்டிருக்கும். புலிகளுக்குமிது தெரியும். இந்த high stakes diplomatic gamble ஐ ஆடத்தெரியாமல் அல்லது ஆட விரும்பாமல் தாம் மொக்கன்/மோடயன் எண்டு தப்பாக எடை போட்டு மகிந்தவை கொண்டு வந்தனர். கூடவே எமில் காந்தன் மூலம் மகிந்த கொடுத்த காசையும் வாங்கினர். ரணிலை விட இனவாதியும், கடும் போக்கு சிந்தனையும் உடைய மகிந்தவை வெல்ல வைத்தால், சிங்களம் ரெண்டுபடும், இலங்கையில் குழப்பம் வரும் என்று மேலே கூறியிருப்பது போல் மனப்பால் குறித்தனர்.

மகிந்த சிந்த்ஹனையை வாசித்த தமிழர் யாரும் 2005 மகிந்தவுக்கோ அல்லது புறக்கணிப்போ செய்திருக்க மாட்டார்கள். புலிகள் செய்யச் சொன்னார்கள். மக்கள் செய்தார்கள். விளைவு மகிந்த பதவிக்கு வந்ததும் வட்டியும் முதலுமாக கொடுத்தார்.

சர்க்கரை வியாதி வந்தால் செத்திடுவினமா?

  • கருத்துக்கள உறவுகள்

 இப்படி வீணாக நீட்டி முழங்கமல் என்னை எப்படி வலைவீசி பிடித்தார்களோ அதே போல தான்  என்று சுருக்கமாக கூறியிருக்கலாம். யாழ்கள வாசகர்கள் புரிந்திருப்பார்கள்.

இவர்களை எவரும் வலை வீசிப்பிடிக்கவேண்டிய அவசியமில்லை

இவர்களே போய் சிக்கிக்கொள்வார்கள்....

சர்க்கரை வியாதி வந்தால் செத்திடுவினமா?

இதையே

சம்பந்தருக்கு சொல்லிப்பாருங்கள்... :(

தேர்தல் நாளன்று

கையால மை குத்தக்கூட முடியலையாம்...

அவர் எமக்கு வழி காட்டுவார் என்பதை நானும் இன்றும் நம்புகின்றேன்... :(  :( 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.