Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தூசு தட்டியே காசு பிழைத்தவர் - மூனா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தூசு தட்டியே காசு பிழைத்தவர்

மூனா

8f2bd9aa-71f4-4135-8753-946b32cf662f1.jp

ஒரு விடயத்தை நடைமுறைப்படுத்தும் பொழுது, அது சிறிதோ பெரிதோ அதை மிகத் துல்லியமாக ஆராய்ந்து முடிவு எடுப்பதில் யேர்மனியர்கள் வல்லுனர்கள். அவர்களுடனான பல ஆண்டுகள் பழக்கத்தினால் இதை நான் சொல்லவில்லை. ஆரம்பத்திலேயே அதை நான் அறிந்து கொண்டேன். புகலிடம் தேடி யேர்மனிக்கு வந்தபொழுது அவர்கள் எங்களைக் கையாண்ட விதத்திலேயே அவர்களின் திறமையைப் புரிந்து கொண்டேன்.

எண்பதுகளில் யேர்மனிக்கு புகலிடம் தேடி வந்தபொழுது நிறையவே சிரமப்பட்டிருக்கிறோம். படிப்பதற்கும், வேலை செய்வதற்கும் அனுமதி இல்லாமல் வாழ்க்கையில் இரண்டு வருடங்களை முகாம்களுக்குள்ளேயே வீணாக்கி இருக்கிறோம். இந்த நாட்டில் இருந்தால் சரிப்பட்டு வராது என்று கனடா, லண்டன் எனப் பலர் பறந்துவிட்டார்கள். எஞ்சியவர்களை முகாமில் இருந்து வேறு வேறு நகரங்களுக்கு அனுப்பி விட்டார்கள். ஓர் இனத்தை ஒரே இடத்தில் வாழ அனுமதித்தால் அங்கே அவர்களால் தங்களது சமூகத்திற்கு இடையூறு வந்துவிடும் என்ற முன்னெச்சரிக்கையே அது.

பரவலாக ஒவ்வொரு நகரத்திலும் இரண்டு மூன்று பேர்களாக குடியேற்றப்பட்டோம். பழைய நண்பர்களைச் சந்திப்பதாக இருந்தால் நிறையத் தூரம் பயணிக்கவேண்டி இருக்கும். சொந்தமாக வாகனம் வைத்துக்கொள்ள வசதி இருக்கவில்லை. பிரயாணச் சீட்டு வாங்கி பயணிக்க கையில் காசு கிடையாது. இதற்கு மேலாக அகதிக்கான அங்கீகாரம் கிடைக்கும் வரைக்கும் அவர் அவரது நகரத்தை விட்டு வேறு நகரத்துக்குச் செல்ல அனுமதி கிடையாது. மீறிப் போய் பிடிபட்டால் தண்டம் செலுத்த வேண்டும். அந்தத் தண்டம் ஏறக்குறைய ஓர் அகதிக்கான ஒரு மாதக் குடுப்பனவுக்கு சமமாக இருந்தது. இதனால் அடங்கி ஒடுங்கி அவரவர்கள் அவரவர்களுக்கு ஒதுக்கப்பட்ட நகரங்களிலேயே அமைதியாக இருந்து விட்டோம்.

இப்படி அங்கொன்று இங்கொன்றாகப் பரவலாக வாழ்ந்து கொண்டிருந்த தமிழ் மக்களை சந்தித்து தமிழர் புனர்வாழ்வுக் கழக யேர்மனிக் கிளையில் எங்கள் சேவைகளைச் செய்வதற்கு நாங்கள் நிறையவே உழைத்திருக்கிறோம்.

ஒருநாள் நண்பர் தினாவுடன் (தினகரன்) றாவன்ஸ்பேர்க் என்ற நகரத்துக்கு புனர்வாழ்வு பணி நிமித்தமாகப் பயணித்துக் கொண்டிருந்தேன்.

'புதுசா ஒரு கசெற் வந்திருக்குது, கேட்டுப் பாருங்கோ' தினா சொல்லும் பொழுது எனக்கு மகிழ்வாக இருந்தது. தூரப் பயணங்கள் போகும்பொழுது அவரவர்களுக்குக் கிடைக்கும் புதிய பாடல்கள் அடங்கிய கசெற்றுகளை எடுத்து வந்து கூடப் பயணிப்பவர்களை மகிழ்விப்பது வழக்கம். அந்த வகையிலேயே தினா அந்த கசெற்றைக் கொண்டு வந்திருந்தார். அவர் கசெற்றை போடும் பொழுது அவரது முகத்தில் நமட்டுச் சிரிப்பு இருப்பதை அவதானித்தேன். அந்தச் சிரிப்பின் அர்த்தத்தை பின்னால் புரிந்து கொண்டேன்.

அவர் போட்ட கசெற்றில் இருந்து இசையோடு பாடல் வரவில்லை. மாறாக வசையோடு கவிதை வந்தது.

'பெற்ற தாயினை எட்டி உதைப்பது போல

தாயகம் தீயில் எரிகையில் விட்டு

விமானத்தில் ஏறி பறந்தவர்

வீரம் இல்லாதவர் நாயிலும் கீழானவர்

சுற்றி வளைத்தனர் சிங்களப் படையினர்

சுட்டுத் தள்ளுவர் என்ற பயத்தினால்

விட்டுப் பறந்த கோழைகள் நாளையே

வீடு திரும்பினால் காறியே துப்புவோம்.

கப்பல் ஏறி ஜெர்மன், பிரான்ஸ் உடன்

கனடா நாட்டிலும் தஞ்சம் புகுந்தனர்

அப்பு ஆச்சியை கவனம் கவனம் என்று

அங்கேயிருந்துமே கடிதம் எழுதினர்

தப்பிப் பறந்தவர் தம்பியும் வாவென

தம்பிமாரையும் அங்கு அழைத்தனர்

துப்புக் கெட்டவர் அகதி லேபலில்

தூசு தட்டியே காசு பிழைத்தனர்

ஓடியவர் ஓடட்டும்

ஊழைச் சதையர் எல்லாம் பேடியர்கள், ஓடட்டும்

போனவர் போகட்டும்

பாய்விரித்தால் போதும் படுத்துறங்கும்

இவர்கள் எல்லாம் நாய்சாதி

நாய்சாதி ஓடி நக்கிப் பிழைக்கட்டும்

தப்பிப் பறந்து தமிழன் என்று சொல்ல வெட்கி

கப்பலிலே ஏறி கனடாவில் நக்கட்டும்'

கவிதையை முழுவதுமாகவே கேட்டேன். வாகனத்தைச் செலுத்தியபடியே தினா என்னைப் பார்த்து அடிக்கடி சிரித்துக் கொண்டதை பார்த்தும் பாராமல் இருந்தேன்.

'என்னமாதிரி எங்களைக் கிழிக்கிறாங்கள் எண்டு பாத்தீங்களே?'

தினாவின் கேள்விக்கு நான் நேரடியாகப் பதில் தரவில்லை

'நிப்பாட்டிறதுக்கு இடம் வந்தால் பாத்து நிப்பாட்டுங்கோ. கொஞ்சம் ஆறி இருந்திட்டுப் போவம்'

'கவிதையைக் கேட்ட உடனே குழம்பிட்டீங்கள் போலை. இதை விடுங்கோ. இதெல்லாம் கேட்டால் ஒண்டும் செய்யேலாது. நேற்றுத்தான் கிடைச்சுது. கேட்டுப் பாத்த உடனை யோசிச்சன்.. நீங்களும் கேட்டால் நல்லா இருக்கும் எண்டு'

வாகனம் நெடுஞ்சாலையை விட்டு விலகி இளைப்பாறும் தரிப்பிடத்தில் நின்றது.

கொஞ்சம் இளைப்பாறினோம். கவிதை எனக்குப் பிடிக்காததால் தினா அதைப் பற்றி கதைக்கவில்லை. மீண்டும் பயணத்தைத் தொடங்கினோம்.

'அந்த கசெற்றை எடுத்துப்போட்டு இதைப் போடுங்கோ' தினா தந்த கசெற்றைப் போட்டேன்.

'எங்கை அது?'

'எது?'

'அந்த கவிதை கசெற்'

'நீங்கள் நிப்பாட்டின இடத்திலை இருந்த குப்பைத் தொட்டிக்குள்ளை நான் அப்பவே போட்டுட்டன்'

'புதுவை இரத்தினதுரையின்ரை கவிதை எண்டதாலை நான் காசு குடுத்து வேண்டினதப்பா அது'

'காசு குடுத்து திட்டு வேண்டுற ஆளை இப்பதான் பாக்கிறன்'

அதற்குப் பிறகு நடந்த அர்ச்சனைகளை இங்கே நான் எழுதவில்லை. ஆனால் எனது கூற்று இதுவாக இருந்தது. உடனடியாக இந்த கசெற் வெளிநாடுகளில் தடை செய்யப்படல் வேண்டும். இல்லை என்றால் இப்பொழுது செய்கின்ற சேவையை நிறுத்திவிட்டு இந்த கசெற்றுக்கு எதிராக செயற்படுவேன்.

அந்த கசெற்றுக்கு எதிராக நான் மட்டும் அல்ல, மேலும் பலர் குரல் கொடுத்தார்கள்.

அது விற்பனையில் இருந்து எடுக்கப்பட்டுவிட்டது.

2012 இல் புனர்வாழ்வுப் பணிக்காக தாயகம் சென்றிருந்தேன். பலரைச் சந்தித்தேன்.

'புதுவையைப் போய்ப் பார்க்கவில்லையா?' என கவிஞர் நாவண்ணன் கேட்டார்.

'பார்க்கவேண்டிய அவசியம் இல்லை' என்றேன்.

அதே ஆண்டு மாவீரர் தினத்துக்காக புதுவை இரத்தினதுரை ஐரோப்பாவிற்கு வந்திருந்தார்.

அவர் வருகையை அறிந்த எனது இணைய நண்பர், அவர் நூறன்பேர்க் என்ற நகரத்தில் இருக்கிறார், அவருக்கு புதுவையை சந்திக்க ஆவலாக இருந்திருக்க வேண்டும். எனக்கு தொலைபேசி எடுத்து 'சுவிஸில் அவர் எங்கிருக்கிறார்? எப்பொழுது யேர்மனிக்கு வருவார்? எங்கு தங்குவார்?' என பல கேள்விகளைக் கேட்டார். எல்லாவற்றிற்கும் 'தெரியாது' என்று பதில் சொன்னேன்.

அவருக்கு என்மேல் வந்தது எரிச்சலா கோபமா என்று தெரியவில்லை 'உங்களுக்கு ஆளுமை பத்தாது' என்று சொல்லிவிட்டு தொலைபேசியைத் துண்டித்து விட்டார்.

சுவிஸ் நாட்டில் நடந்த மாவீரர் தினத்தில் கவிதை சொல்லிவிட்டு, புகலிடத் தமிழர்கள் அவருக்காக ஒழுங்கு செய்த பிரத்தியேக தனி விமானத்தில் யேர்மனி மாவீரர் தினத்தில் கவிதை சொல்ல டோர்ட்மூண்ட் வந்து சேர்ந்தார் புதுவை இரத்தினதுரை.

மாவீரர் தின மண்டபத்தில் முன் வரிசையில் நான் அமர்ந்திருந்தேன். எனக்கு மூன்று இருக்கைகள் தள்ளி புதுவை இரத்தினதுரை அமர்ந்திருந்தார். நான் நிகழ்ச்சியிலேயே கவனம் செலுத்தினேன்.

அவரது கவிதைக்கான நேரம் வந்தது.

'நான் போட்டிருக்கும் இந்தக் காலணி புலம்பெயர் தம்பி ஒருவர் வாங்கித் தந்தது. இந்த சேர்ட், நான் போட்டிருக்கும் ரவுசர் எல்லாம் தாயகத்தில் இருந்து புலம்பெயர்ந்து சுவிஸில் வாழும் தம்பிகள் வாங்கித் தந்ததுதான். புலம்பெயர்ந்த தமிழர்கள் இப்போது புகலிட நாடுகளிலிருந்து உணர்வு குன்றிவிடாமல், எமது போராட்டத்தைத் தாங்குவதில் பெரும் பலமாக இருக்கின்றார்கள்' என்று இன்னும் என்னென்னவோ சொன்னார். ஒவ்வொரு வார்த்தை சொல்லும் பொழுதும் மேலே பார்த்து நின்று நிதானமாகச் சொன்னார்.

பக்கத்தில் இருந்தவர் கேட்டார், 'எதுக்கு புதுவை அடிக்கடி மேலே பாக்கிறார்?'

எடுத்த கவிதை மறந்து போயிருக்கும். அதுதான் நினைத்துப் பார்க்கிறார்.

http://ponguthamil.com/showcontentnews.aspx?sectionid=11&contentid=8f2bd9aa-71f4-4135-8753-946b32cf662f

இது உண்மைதான்.. அந்தக் கவிதையைக் கேட்டு அப்போது ஆத்திரப்பட்டதுண்டு.. அதுமட்டுமல்ல.. வெளிநாட்டுக்கு வந்த தமிழர்களைப் பழித்து ஒரு வில்லுப்பாட்டும் தாயகத்தில் இருந்து வந்ததாக நினைவு இருக்கிறது.

 

ஆனால்.. தலைவரை நேரில் சந்தித்து, அவருடன் படம் எல்லாம் எடுத்து வந்த மூனா அவர்கள், அவரிடமே அவற்றைச் சுட்டிக் காட்டாமல் இவ்வளவு நாளும் மௌனமாக இருந்துவிட்டு, இப்போது இணயத்தளங்களில் எழுதுவதுதான் ஏன் என்று புரியவில்லை!!  :o

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

'பெற்ற தாயினை எட்டி உதைப்பது போல

தாயகம் தீயில் எரிகையில் விட்டு

விமானத்தில் ஏறி பறந்தவர்

வீரம் இல்லாதவர் நாயிலும் கீழானவர்

சுற்றி வளைத்தனர் சிங்களப் படையினர்

சுட்டுத் தள்ளுவர் என்ற பயத்தினால்

விட்டுப் பறந்த கோழைகள் நாளையே

வீடு திரும்பினால் காறியே துப்புவோம்.

கப்பல் ஏறி ஜெர்மன், பிரான்ஸ் உடன்

கனடா நாட்டிலும் தஞ்சம் புகுந்தனர்

அப்பு ஆச்சியை கவனம் கவனம் என்று

அங்கேயிருந்துமே கடிதம் எழுதினர்

தப்பிப் பறந்தவர் தம்பியும் வாவென

தம்பிமாரையும் அங்கு அழைத்தனர்

துப்புக் கெட்டவர் அகதி லேபலில்

தூசு தட்டியே காசு பிழைத்தனர்

ஓடியவர் ஓடட்டும்

ஊழைச் சதையர் எல்லாம் பேடியர்கள், ஓடட்டும்

போனவர் போகட்டும்

பாய்விரித்தால் போதும் படுத்துறங்கும்

இவர்கள் எல்லாம் நாய்சாதி

நாய்சாதி ஓடி நக்கிப் பிழைக்கட்டும்

தப்பிப் பறந்து தமிழன் என்று சொல்ல வெட்கி

கப்பலிலே ஏறி கனடாவில் நக்கட்டும்'

 

 

 

அடிக்கடி மனதில் வந்து போகும் வறட்டுக்கவிதை. பலரை முகம் சுழிக்க வைத்த கவிதை.

ஒரு முறைஇங்கு கூட இது பற்றி ஒரு கருத்து எழுதினேன்.தூக்கிவிட்டார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

அடிக்கடி மனதில் வந்து போகும் வறட்டுக்கவிதை. பலரை முகம் சுழிக்க வைத்த கவிதை.

ஒரு முறைஇங்கு கூட இது பற்றி ஒரு கருத்து எழுதினேன்.தூக்கிவிட்டார்கள்.

கவிதை என்பது ஒரு கவிஞனின் பார்வை .....
 
இந்த கவிதை புதுவை அவர்கள் எழுதியது 1988இல்  1989இல் இது ஒலி வடிவம் பெற்றது.
அப்போதைய நாட்டின் சூழலில் ..... 
அது ஒரு கவிஞனின் பார்வையாக பதிவாகி இருந்தது.
 
எனக்கு என்றால் அதில் ஏதும் தவறு இருப்பதாக தெரியவில்லை.
ஒருவன் ஒரு சமூகத்தில் ஆணாக பிறப்பது என்பது பின்நாளில் பல கடமைகளை அவன் செய்ய வேண்டும் எனும் நிர்பந்தம் உருவாகிறது.
 
இப்போதும் கூட்டாக குழுமமாக வாழும் விலங்குகளே இப்படி ஒரு கடமை உணர்வுடன்தான் இருக்கின்றன.
சிங்கத்தை பார்த்தால் ஒரு குறிப்பிட்ட பருவம் வரும்போது ஆன் சிங்கத்தை குழுமத்தை விட்டு துரத்தி விடுவார்கள்.
பின்பு தனியாக வேட்டை ஆடி வாழ பழகிய பின்பு திரும்பி குழுமத்தை தேடிவந்து அப்போதைய குழுமத்தின் தலைவருடன் (அப்போது அவருக்கு வயது ஆகி இருக்கும்) சண்டை போட்டு ஜெயித்தால்தான் பெண்சிங்கத்துடன் உறவு கொள்ள முடியும். அந்த குழுமம் ஒரு குறிபிட்ட பிரதேசத்தை தமது கட்டுபாடுக்குள் வைத்திருக்கும்.
 
குரங்கில் கூட்டமாக வரும்போது நாங்கள் கலைத்தால் உடனே குறிப்பிட்ட தூரம் பாதுகாபிட்காக எல்லாம் ஓடும்.
ஒரு 300-400 மீட்டர் ஓடிய பின்பு ஆண் குரங்குகள் முன்னுக்கு வந்துவிடும் பெண் குரங்குகள் குட்டிகளை பின்னுக்கு விட்டுவிடும்.
இப்போ தன துரத்துபவரின் பலம் பல வீனம் என்பவற்றை பார்க்கும் நான் சிறிய வயதில் இருக்கும்போது என்னை துரத்துவதற்கு ஆண் குரங்குகள் (தாட்டன் குரங்கு)  முயற்சி செய்து இருப்பதை நேரில் கண்டு இருக்கிறேன். 
 
மனிதனில்தான் அடுத்தவனை சுரண்டி வாழும் பொறுக்கித்தனமான எண்ணம் இருக்கிறது.
இப்போதும் எமது சமூகம் பெரிய அளவில் சீரழிய ஆண்களின் பொறுப்பற்ற கடமை உணர்வற்ற செயற்பாடுகளே காரணம்.
நாடு வாழ்வா சாவா ? என்று இருக்கும் போது ஓடிய என்னை ஒரு விலங்காக கூட என்னால் பார்க்க முடியவில்லை.
இது தெளிவான உண்மை ....
எனக்கு இந்த கவிதையில் எந்த பிழையும் இருப்பதாக தெரியவில்லை.
 
கால ஓட்டத்தில் புலம்பெயர் உறவுகள் போராட்டத்தில் பாரிய பங்கு அளித்ததும் 
போராட்ட வடிவம் மாறியதும் பின்பு வந்த நிலைமைகள். 
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எவர் எதை கூறினாலும் புதுவை ஏதோ ஒரு மமதையில் எழுதிய கவிதை அது.

  • கருத்துக்கள உறவுகள்
1987-1988 இல் ஈழ தமிழருக்கு எதிராக சிங்களம் இந்தியா ஒட்டிய ஒட்டாத துரோக குழுக்கள் எல்லாம் 
போரை கட்டவிழ்த்து விட்டு இருந்த நேரம். மக்களின் குருதியை காட்டேரிகள் உறிஞ்சிகொண்டிருந்த காலம்.
ஒரு கவிஞனுக்கு ஒரு மமதை இருந்துதான் இருக்கும்.
அப்படி ஒன்று  இல்லாது  இருந்தால்தான் தவறு. 

ஈழத்தில் பேய்களும் செய்ய மறந்ததை உங்களின் இராணுவம் செய்து முடித்தது ....
என்று இன்னொரு கவிஞன் இந்திய உறவுகளுக்கு எழுதிய நேரம் அது. 
  • கருத்துக்கள உறவுகள்

இந்த கவிதையை  எழதிய போது அது சரியாக இருந்தது

அனால் தற்பொழுது அது சரியன்று

சூழ்நிலை மாறிவிட்டது என புதுவை அவர்கள் பின்னர் கூறியிருந்தார்.....

 

 

இது உண்மைதான்.. அந்தக் கவிதையைக் கேட்டு அப்போது ஆத்திரப்பட்டதுண்டு.. அதுமட்டுமல்ல.. வெளிநாட்டுக்கு வந்த தமிழர்களைப் பழித்து ஒரு வில்லுப்பாட்டும் தாயகத்தில் இருந்து வந்ததாக நினைவு இருக்கிறது.

 

ஆனால்.. தலைவரை நேரில் சந்தித்து, அவருடன் படம் எல்லாம் எடுத்து வந்த மூனா அவர்கள், அவரிடமே அவற்றைச் சுட்டிக் காட்டாமல் இவ்வளவு நாளும் மௌனமாக இருந்துவிட்டு, இப்போது இணயத்தளங்களில் எழுதுவதுதான் ஏன் என்று புரியவில்லை!!  :o

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அந்த கால கட்டத்தில் புதுவை அப்படி எழுதியது மிகவும் சரியே.ஆதலால்தான் மேலதிக ஈடுபாடு தமிழரிடம் இருந்து கிடைத்து.இது யதார்த்தம்.

புதுவையின் இந்த கவிதையில் என்ன குற்றம் கண்டீர்?
ஒரு போராளிக்கு உள்ள அக வெளிப்பாட்டை நியத்தை வெளியில் கொண்டுவந்தது.அது காலத்தின் கட்டாயம்.

இதை கேட்ட போது நான் எனக்குள் என்னை அவமதிப்பை ஆக்கிக் கொண்டேன்.நியம் சுட்ட வார்த்தைகள் அவை:
தற்போது இதை விபரித்து கிளறுவது ஒரு வித வக்கிர எண்ணமே தவிர வேறேதும் இல்லை.

முக்கியமாக புதுவை யேர்மனியில் கவி வாசித்தபோது தான் அப்போது இப்படி ஒரு கவிதையை எழுதியததற்காக நாணி தன் பெருந்தன்மையை வெளிக்கொணர்ந்து அந்த வரிகளை ஏன் மறந்தீர்?

சும்மா போக்கு காட்ட இப்படி ஒரு பதிவு.
சீ!
வெட்கம் வெட்கம்.

  • கருத்துக்கள உறவுகள்

அந்த கால கட்டத்தில் புதுவை அப்படி எழுதியது மிகவும் சரியே.ஆதலால்தான் மேலதிக ஈடுபாடு தமிழரிடம் இருந்து கிடைத்து.இது யதார்த்தம்.

புதுவையின் இந்த கவிதையில் என்ன குற்றம் கண்டீர்?

ஒரு போராளிக்கு உள்ள அக வெளிப்பாட்டை நியத்தை வெளியில் கொண்டுவந்தது.அது காலத்தின் கட்டாயம்.

இதை கேட்ட போது நான் எனக்குள் என்னை அவமதிப்பை ஆக்கிக் கொண்டேன்.நியம் சுட்ட வார்த்தைகள் அவை:

தற்போது இதை விபரித்து கிளறுவது ஒரு வித வக்கிர எண்ணமே தவிர வேறேதும் இல்லை.

முக்கியமாக புதுவை யேர்மனியில் கவி வாசித்தபோது தான் அப்போது இப்படி ஒரு கவிதையை எழுதியததற்காக நாணி தன் பெருந்தன்மையை வெளிக்கொணர்ந்து அந்த வரிகளை ஏன் மறந்தீர்?

சும்மா போக்கு காட்ட இப்படி ஒரு பதிவு.

சீ!

வெட்கம் வெட்கம்.

 

உண்மை

நன்றி..

புதுவை நாணியது காலம் கடந்து... அதற்காக அந்தக் கவிதையை எக் காரணம் கொண்டும் நியாயப்படுத்திவிட முடியாது.

அந்த கால கட்டத்தில் ஐரோப்பாவில் பல இயக்கங்களூக்கு பங்களிப்புகள் சென்று கொண்டிருந்தன.. பெரும்பான்மையான பங்களிப்பு புளொட்டுக்குத்தான் சென்றது... அந்தக் கவிதைக்குள் இப்படியான காரணங்களின் எரிச்சலும் அடங்கியிருக்கலாம்.

 

முதலில் உள்மனதில் இருந்து வந்தது கவிதை .பின்னர் வந்தவை எல்லாம் சமாளிப்புகளும் அரசியலும் .

  • கருத்துக்கள உறவுகள்

புதுவை நாணியது காலம் கடந்து... அதற்காக அந்தக் கவிதையை எக் காரணம் கொண்டும் நியாயப்படுத்திவிட முடியாது.

அந்த கால கட்டத்தில் ஐரோப்பாவில் பல இயக்கங்களூக்கு பங்களிப்புகள் சென்று கொண்டிருந்தன.. பெரும்பான்மையான பங்களிப்பு புளொட்டுக்குத்தான் சென்றது... அந்தக் கவிதைக்குள் இப்படியான காரணங்களின் எரிச்சலும் அடங்கியிருக்கலாம்.

 

அப்ப நாடு வாழ்வா சாவா என்று இருக்கும்போது 
விட்டு விட்டு ஓடுபவர்களுக்கு .... என்ன புகழ் மாலையா பாட வேண்டும் ?
 
நாட்டில் 14-15 வயது பெண் பிள்ளைகள் கரும்புலியாகவும் ..... வேவு புலியாகவும் ..கயவனின் முகாம்களுக்குள் புகுந்து கொண்டு இருக்கும் நேரம்.
 
ஆண் சிங்கங்கள் நாங்கள் கட்டிலில் காலை நீட்டி படுத்திருந்தோம் ...
கொடுத்த பத்து ரூபா ... அவர்கள் கால் தூசுக்கே சமன் ஆகாது. 
 
அவர்கள் எமது முகத்தில் காறி உமிழ்ந்தாலும் தகும்! 

மற்றவனை அரவணைத்துச் செல்லும் திறன் இல்லாமல், இயலாமையை மற்றவன்மேல் வசைமாரியாக்குவதுதான் நியாயம் என்றால்... அவர் ஒரு நேர்மைத்திறன் கொண்ட மனிதனே அல்ல.. நாங்களூம் கேட்கலாம்.. (இது விவாதத்திற்கு மட்டுமே..) அவரே கவிஞர்தானே.. போராளி அல்லவே... அவர் கவிதையால் போராட்டத்திற்கு பங்களித்தார்.. வெளிநாட்டில் இருப்பவன் தனது வசதிகளால் பங்களித்தான்.. 

 

இவர்கள் எல்லாம் நாய்சாதி

நாய்சாதி ஓடி நக்கிப் பிழைக்கட்டும்

 

கவிஞர்   :lol: .

  • கருத்துக்கள உறவுகள்

இவர்கள் எல்லாம் நாய்சாதி

நாய்சாதி ஓடி நக்கிப் பிழைக்கட்டும்

 

கவிஞர்   :lol: .

 

 

அவர் இதை எழுதியபோது

கோபம் வரவில்லை

ரோசம் தான் வந்தது

காரணம்

அவர் நெருப்பை மூட்டினார்

காரணம்

அவரிடம் நக்கலிருக்கவில்லை...

அட அது உங்களை போன்றவர்களுக்கு எழுதிய கவிதையா . :icon_mrgreen:

அதுதான் எனக்கு விளங்காமல் போய்விட்டது .

  • கருத்துக்கள உறவுகள்

அட அது உங்களை போன்றவர்களுக்கு எழுதிய கவிதையா . :icon_mrgreen:

அதுதான் எனக்கு விளங்காமல் போய்விட்டது .

 

 

அது எங்களுக்காக எழுதியது தான்

அதை நாம் புரிந்து கொண்டோம்

அதற்கு பிரதிபலனாக என்ன செய்யணும் என்று கேட்டோம்

கேட்டதை எல்லாம் செய்து கொடுத்தோம்..

அவரையும் தேசியக்கவியாக ஏற்றுக்கொண்டோம்...

 

சிலதுகள் இவற்றை வைத்து எம்மிடையே மூட்டி வைத்து

விளையாட முயன்றவை

அவை இன்னும் அப்படியே தான் இருக்கினம்..

நிமிர்த்த முயல்வதில்லை..

Edited by விசுகு

அது எங்களுக்காக எழுதியது தான்

அதை நாம் புரிந்து கொண்டோம்

அதற்கு பிரதிபலனாக என்ன செய்யணும் என்று கேட்டோம்

கேட்டதை எல்லாம் செய்து கொடுத்தோம்..

அவரையும் தேசியக்கவியாக ஏற்றுக்கொண்டோம்...

 

சிலதுகள் இவற்றை வைத்து எம்மிடையே மூட்டி வைத்து

விளையாட முயன்றவை

அவை இன்னும் அப்படியே தான் இருக்கினம்..

நிமிர்த்த முயல்வதில்லை..

 

தற்போது பழையதைக் கிளறியவர் வேறு யாருமல்ல. அன்றிலிருந்து போராட்டத்திற்கு பங்களிப்புச் செய்த ஒருவர்.. அவரது துணைவியார் மாவீரர்களின் சகோதரி சந்திரவதனா செல்வகுமாரன்... வன்னிக்கு சென்று தலைவருடன் உணவருந்தி அளவளாவி வந்தவர்கள்.. ஆக அவர்கள் கூறுவதிலுள்ளதில் உள்ள உண்மை உண்மை எனில் உண்மைதான்!!  

 

http://www.selvakumaran.de/index.php?option=com_content&view=article&id=497:2013-11-26-10-41-03

தற்போது பழையதைக் கிளறியவர் வேறு யாருமல்ல. அன்றிலிருந்து போராட்டத்திற்கு பங்களிப்புச் செய்த ஒருவர்.. அவரது துணைவியார் மாவீரர்களின் சகோதரி சந்திரவதனா செல்வகுமாரன்... வன்னிக்கு சென்று தலைவருடன் உணவருந்தி அளவளாவி வந்தவர்கள்.. ஆக அவர்கள் கூறுவதிலுள்ளதில் உள்ள உண்மை உண்மை எனில் உண்மைதான்!!  

 

http://www.selvakumaran.de/index.php?option=com_content&view=article&id=497:2013-11-26-10-41-03

 

 

நான் எழுதுகின்ற விடயம் இந்தத ;தலைப்புடனோ இது குறித்த கருத்துப் பகிர்வுடனோ சம்பந்தமற்றது. ஆனால் சோழியன் அண்ணாவின் இந்தப் பகிர்வில் குறிப்பிடப்பட்ட விடயம் சம்பந்தப்பட்டது.

 

ஒருவரின் சகோதரர்கள் போராட்டத்தில் இணைந்திருந்தார்கள் என்பதற்காக குறிப்பிட்ட நபர் புனிதமானவர் ஆகி விட முடியாது. இவ்வாறு எனது மூன்று சகோதரர்கள் மாவீரர் என்று கூறிக் கொண்டு காசு சுருட்டியவர்களும் இருக்கிறார்கள். போராடப் போனவர்களுக்குத் தலை வணங்கலாம். ஆனால் ஒரே வயிற்றில் பிறந்தவர்கள் என்பது அவர்களுக்கு எந்த வித உயர்ச்சியையும் தந்து விட முடியாது.

 

அதே போல தலைவருடன் உணவருந்தி விட்டார் என்பதற்காக அவர் கூறும் கருத்துக்கள் வேதவாக்காகிவிட முடியாது. அப்படிப் பார்த்தால் கருணா கூறும் அத்தனை விடயங்களும் வேதவாக்காகிவிடும்.

 

எனது மனதில் பட்டதை பதிவிட்டேன். தவறெனில் மன்னிக்கவும்

அவர்களின் பணிகளை குறைத்து மதிப்பிட முடியாது. 

அந்தக் கவிதை பற்றி மூனா குறிப்பிட்டதிலும் எவ்வித பொய்யும் இல்லை.

ஆனால்... முடிந்து போன நிகழ்வுகளை கிளறும் அவசியம் ஏன் அவருக்கு ஏற்பட்டது என்பதுதான் புரியவில்லை!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

முடிந்து போன நிகழ்வுகளை கிளறும் அவசியம் ஏன் அவருக்கு ஏற்பட்டது என்பதுதான் புரியவில்லை!

புலம்பெயர் நாடுகளில் இருக்கும் விசிலடிச்சான் குஞ்சுகளைப் பார்த்து வந்த விரக்தியால் நடந்த உண்மைகளை எழுத ஆரம்பித்துள்ளாராக்கும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புலம்பெயர் நாடுகளில் இருக்கும் விசிலடிச்சான் குஞ்சுகளைப் பார்த்து வந்த விரக்தியால் நடந்த உண்மைகளை எழுத ஆரம்பித்துள்ளாராக்கும்.

 

"விசிலடிச்சான் குஞ்சுகள்" யார் அவர்கள்?????

  • கருத்துக்கள உறவுகள்

அவர்களின் பணிகளை குறைத்து மதிப்பிட முடியாது. 

அந்தக் கவிதை பற்றி மூனா குறிப்பிட்டதிலும் எவ்வித பொய்யும் இல்லை.

ஆனால்... முடிந்து போன நிகழ்வுகளை கிளறும் அவசியம் ஏன் அவருக்கு ஏற்பட்டது என்பதுதான் புரியவில்லை!

 

வேறை ஒன்றுமில்லை இலங்கையில் வசந்தங்கள் வீசிய பின்னர்

மாற்றங்கள் தொடர்வதால் பலரும் அந்த மாற்றத்தில் சங்கமிக்க  முனைகின்றனர்.அதற்கான முன்னேற்பாடாக இருக்கலாம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.