Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தேர்தலுக்கு முன்னரும் பின்னரும் கிழக்கின் ஆட்சியை அமைக்க SLMCக்கு விடுத்த அழைப்பு தூக்கிஎறியப்பட்டது - சுமந்திரன் காட்டம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்களும் முஸ்லிம் மக்களும் இணைந்துதான் ஆட்சியமைக்க வேண்டும். அதில் சிங்கள மக்களும் நிச்சயம் உள்வாங்கப்பட வேண்டும். ஆனால் தமிழர்களை முஸ்லிம்களோ முஸ்லிம்களை தமிழர்களோ விட்டுவிட்டு கிழக்கில் நிர்வாகத்தை அமைப்பது நியாயமற்ற செயல் என்பதே எமது நிலைப்பாடு. இந்த நிலைப்பாட்டில் நாம் உறுதியாக இருக்கிறோம் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் ஏற்பாட்டில் தபால் தலைமையக கேட்போர் கூடத்தில் நேற்று மாலை இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உயைாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

சுமந்திரன் எம்.பி. தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

இறுதியாக நடைபெற்ற கிழக்கு மாகாண சபைத் தேர்தலின்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பு 11 ஆசனங்களையும் ஐக்கிய தேசியக் கட்சி 4 ஆசனங்களையும் பெற்றுக் கொண்டன. அந்தத் தேர்தலில் கூட்டமைப்பையும் ஐ.தே.க.வையும் விட மிக மோசமாக அரசாங்கத்தை விமர்சித்த முஸ்லிம் காங்கிரஸ் 7 ஆசனங்களைப் பெற்றுக் கொண்டது.

இந்த மூன்று கட்சிகளும் பெற்றுக் கொண்ட ஆசனங்களையும் சேர்த்தால்  அரசாங்கத்திற்கு எதிரான ஆசனங்கள்தான் அதிகமாக இருந்தன.

அவ்வாறான சூழ்நிலையில் கிழக்கு மாகாண சபைத் தேர்தலுக்கு முன்னரும் பின்னரும் எம்முடன் இணைந்து ஆட்சியமைக்க வருமாறும் முதலமைச்சர் பதவியைத் தருவதாகவும் நாம் பகிரங்கமாகவே முஸ்லிம் காங்கிரசுக்கு அழைப்பு விடுத்தோம்.  முஸ்லிம் சகோதரர் ஒருவரை முதலமைச்சராக நியமியுங்கள் என்று நாம் தெளிவாகவே கூறினோம்.

ஆனால் அந்த அழைப்பை உதாசீனம் செய்து,  மத்தியில் தமக்கிருந்த அமைச்சுப் பதவிகளுக்கும் சலுகைகளுக்கும் பிசகு ஏற்பட்டுவிடாமல் யாருக்கு எதிராகப் பிரசாரம் செய்தார்களோ அவர்களோடு சேர்ந்தே ஒரு ஆட்சியை அமைத்தார்கள்.

கடந்த 2 வருடங்களுக்கும் மேலாக இருக்கின்ற அந்த அமைச்சரவையில் ஒரு தமிழருக்குக் கூட இடமில்லை. 5 அமைச்சர்களிலே ஒருவர் கூட தமிழர் இல்லை. சபைத் தலைவரோ பிரதித் தலைவரோ கூட தமிழர் அல்ல. கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்களுக்கு இடமில்லையா? கிழக்கில் அரசாங்கம் நிர்வாகம் அமைக்கின்ற போது அங்கே ஒரு தமிழ் மகனுக்குக் கூட இடமில்லாமல் ஆட்சி நிறுவப்படுவது நியாயமா?

7 ஆசனங்களைக் கொண்டிருந்த முஸ்லிம் காங்கிரசுக்கும் 11 ஆசனங்களைக் கொண்டிருந்த தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குமிடையில் ஏன் ஓர் இணக்கப்பாட்டைக் காண முடியவில்லை? நாங்கள்தான் முதலமைச்சர் பதவியைக் கேட்கவில்லையே? குறைந்த ஆசனங்களைக் கொண்டிருந்த உங்களுக்குத்தான் முதலமைச்சர் பதவியைத் தருவதாக சொன்னோமே?. அப்படியிருந்தும் அங்கு ஒரு தமிழருக்குக் கூட இடமில்லை என்பதைப் பற்றிக் கூட கவலைப்படாமல் ஒரு ஆட்சியை அமைத்தீர்கள். இந்த ஜனாதிபதித் தேர்தலோடு அந்த ஆட்சி முடிவுக்கு வருகிறது.

முஸ்லிம் காங்கிரசோடு இப்போதும் நாங்கள் பேச்சுவார்த்தை நடத்தினோம். நாங்கள் உங்களுக்கு சந்தர்ப்பத்தைக் கொடுத்தபோது அதை நீங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. அது நீங்கள் விட்ட தவறு என்று சொன்னோம். அவர்களில் சிலர் அதனைத் தவறு என்று ஏற்றுக் கொள்கிறார்கள்.  ஆனால் இன்னொரு தடவை பெருந்தன்மையோடு விட்டுத் தரத்தான் வேண்டும் எனக் கேட்கிறார்கள்.  ஆனால் இன்னொருவரோ அதனைத் தவறு என்று நான் சொல்லாமட்டேன். அது காலத்தின் தேவையாக இருந்தது என்கிறார்.

என்ன தேவையாக இருந்தது? அமைச்சுப் பதவிதானே தேவையாக இருந்தது. எங்களது  உறுப்பிர்கள் எமக்கு அழுத்தங்களைத் தந்தார்கள். வேறு விதமாக கிழக்கில் ஆட்சியை அமைப்போம் எனக் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். இன்று கூட அதனைச் செய்யலாம். ஆனால் அதனை நாம் செய்யமாட்டோம்.

முதலமைச்சர் பதவி வேண்டும் என்பதற்காக முஸ்லிம் மக்களின் பெரும்பான்மையான வாக்குகளைப் பெற்றவர்களைப் புறந்தள்ளி நாம் ஆட்சியமைக்கமாட்டோம். ஒரு காலமும் அதனைத் செய்யமாட்டோம்.

எனவே முதலில் நாம் முஸ்லிம் காங்கிரசுடன்தான் பேசுவோம். அவர்களுடன் இணைந்தே ஆட்சியமைப்பதற்கான சந்தர்ப்பத்தைக் கொடுப்போம் என்றே நாம் சொன்னோம். ஆனால் இப்பொழுதும் கூட அவர்கள் அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்த தயாரில்லை என்பது புலனாகின்றது.

ஏற்கவே கிழக்கில் இரண்டு வருடம் அமைச்சுப் பதவிகளை முஸ்லிம் காங்கிரஸ் கொண்டிருந்தது. மத்தியிலும் அமைச்சுப் பதவிகளை வகித்தது. இப்போது புதிய ஆட்சியிலும் அமைச்சுப் பதவிகளைக் கேட்டுக் கேட்டுப் பெற்றுக் கொண்டிருக்கிறா்கள்.

ஏன் உங்களிடம் கொள்கை என்ற ஒன்றே கிடையாதா? எதைச் செய்ய வேண்டும் செய்யக் கூடாது என்ற வரையறைகளே உங்களிடம் இல்லையா? ஏன் இவ்வளவு மோசமாக செயற்படுகிறீர்கள் என்று எமது தலைவர்கள் அவர்களிடம் நேரடியாகவே கேட்டிருக்கிறார் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/115806/language/ta-IN/article.aspx

நாய் வாலை நிமிர்த்த ஏலுமோ ?

முஸ்லீம்கள் இல்லாமல் நீங்களும் ஆட்ச்யமைக்கலாம் என்றால் ஏன் செய்யக்கூடாது?

நீக்கள் ரொம்ப நல்லவர்களாம் என்று யாரு உங்களுக்கு சொல்லவேண்டும்?

ஒன்றுபட்ட சிறுபான்மையினரின் வாக்குப் பலம்தான் பெரும்பான்மை சிங்களவர்கள் விரும்பிய ஒருவரை சனாதிபதியாக வரவிடாமல் தாம் விரும்பிய ஒருவரை வர விட்டது. கண்டிப்பாக இந்த ஒன்றுபட்ட பலம் சிங்கள பெளத்த பேரினவாதத்துக்கு பெரும் சினத்தினைத் தான் தந்து இருக்கும். எனவே தமிழ் முஸ்லிம் உறவினை 90 களில் சிதைத்த மாதிரி சிதைப்பதற்கு சிங்களம் கிழக்கு மாகாண சபை விடயத்தினை கண்டிப்பாக தெரிவு செய்யும். இது தெரிந்து தான் கூட்டமைப்பு இவ் விடயத்தில் (மட்டும்) சமயோசிதமாக செயற்படுகின்றது என்று நினைக்கின்றேன்.

இல்லாவிடின் ஐ.தே.க வின் 4 உறுப்பினர்களின் ஆதரவுடன் 15 உறுப்பினர்களின் பெரும்பான்மை பலத்துடன் அங்கு இலகுவாக த.தே.கூ ஆட்சியமைக்க முடியும்.

பெரும்பாண்மைக்கு 18 உறுப்பினர்கள் வேண்டும் என நினைக்கிரேன். எப்படி கூட்டி கழிச்சு பர்ர்த்தாலும் தற்பொழுது இருக்கும் எண்ணிக்கை அடிப்படையில் மீதமுள்ள ஆட்சிக்காலத்தை தொடருவது சிக்கலாகத்தான் இருக்கும்.

தேர்தல் ஒன்றுதான் நல்லது.

  • கருத்துக்கள உறவுகள்

இன்னொரு தடவை பெருந்தன்மையோடு விட்டுத் தரத்தான் வேண்டும் எனக் கேட்கிறார்கள்.  ---- 1

 அடுத்த  பதவி காலம் முடிய..
 
இன்னொரு தடவை பெருந்தன்மையோடு விட்டுத் தரத்தான் வேண்டும் எனக் கேட்கிறார்கள்.  ---- 2

 அடுத்த  பதவி காலம் முடிய..

இன்னொரு தடவை பெருந்தன்மையோடு விட்டுத் தரத்தான் வேண்டும் எனக் கேட்கிறார்கள்.  ---- infinity

விட்டு கொடுப்பதற்காவே பிறந்தவர்கள் .....   விட்டுகொடுப்பதுதானே முறை  .....அதுவும் சிறுபான்மை சக்கோதர இனம்

...
<_<

கிழக்கிலே மீண்டும் தேர்தல் இப்போது வருமா?

அப்படி வந்தால் இந்த மைத்திரியின் அரசும் 13 ம் திருத்தச் சட்டத்தை உதாசீனம் செய்வதாகிவிடும்.

இணைந்த வட கிழக்கு மாகாணத்திற்கான தேர்தலை நடத்துவதே சரியானதாக இருக்கும்.  முஸ்லீம்கள் அப்போது எதிர்க்கட்சியில் உட்காரலாம்.

ஆனால் சிங்கள அரசு கிழக்கை வைத்துத் தங்கள் அரசியல் லாபத்தைத் தேட நினைப்பார்கள். இஸ்லாமியர்களின் நிலைப்பாடும் அதுவாகத்தான் இருக்கும். மீண்டும் தேர்தல்வந்தால் கூட்டமைப்பிற்கு மீண்டும் எதிர்க்கட்சி வரிசைதான்

  • கருத்துக்கள உறவுகள்

தேர்தல்தான் நல்ல முடிவு. சம்பந்தன் ஜயா இன்னும் பட்டு திருந்தல!

கிழக்கிலே மீண்டும் தேர்தல் இப்போது வருமா?

அப்படி வந்தால் இந்த மைத்திரியின் அரசும் 13 ம் திருத்தச் சட்டத்தை உதாசீனம் செய்வதாகிவிடும்.

இணைந்த வட கிழக்கு மாகாணத்திற்கான தேர்தலை நடத்துவதே சரியானதாக இருக்கும்.  முஸ்லீம்கள் அப்போது எதிர்க்கட்சியில் உட்காரலாம்.

ஆனால் சிங்கள அரசு கிழக்கை வைத்துத் தங்கள் அரசியல் லாபத்தைத் தேட நினைப்பார்கள். இஸ்லாமியர்களின் நிலைப்பாடும் அதுவாகத்தான் இருக்கும். மீண்டும் தேர்தல்வந்தால் கூட்டமைப்பிற்கு மீண்டும் எதிர்க்கட்சி வரிசைதான்

2012 சனத்தொகை மதிப்பீட்டிலிருந்து:
 
                    வடமாகாணம்   கிழக்குமாகாணம் மொத்தம்   %
சனத்தொகை    1061315           1555510            2616825
சிங்களவர்கள்       31839              360878              392718   15,01 %
தமிழர்கள்             995513             609760            1605273   61,34 %
முஸ்லீம்கள்         32901               573983              606884   23,19 %
ஏணையோர்            1061                 10889                11950    0,46 %
 
இணைந்த வடகிழக்கு மாகணத் தேர்தல் நடக்குமாயிருந்தால் தமிழர்களது வாக்குகள் பிரிக்கப்படாமல் இருக்க வேண்டும். அதுமட்டுமல்லாது வாக்குகள் போடப்படவேண்டும் (குறிப்பிட்ட சில தேர்தல்கள் தவிர ஏணைய தேர்தல்களில் வடமாகாண வாக்களிப்பு நாட்டின் சராசரியை விட குறைவே).
 
எங்காவது சறுகினால் தமிழர்கள் எதிர்கட்சியில் உட்காரும் நிலை வரலாம்.

Edited by ஜீவன் சிவா

  • கருத்துக்கள உறவுகள்

-----

ஆனால் அந்த அழைப்பை உதாசீனம் செய்து,  மத்தியில் தமக்கிருந்த அமைச்சுப் பதவிகளுக்கும் சலுகைகளுக்கும் பிசகு ஏற்பட்டுவிடாமல் யாருக்கு எதிராகப் பிரசாரம் செய்தார்களோ அவர்களோடு சேர்ந்தே ஒரு ஆட்சியை அமைத்தார்கள்.

கடந்த 2 வருடங்களுக்கும் மேலாக இருக்கின்ற அந்த அமைச்சரவையில் ஒரு தமிழருக்குக் கூட இடமில்லை. 5 அமைச்சர்களிலே ஒருவர் கூட தமிழர் இல்லை. சபைத் தலைவரோ பிரதித் தலைவரோ கூட தமிழர் அல்ல. கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்களுக்கு இடமில்லையா? கிழக்கில் அரசாங்கம் நிர்வாகம் அமைக்கின்ற போது அங்கே ஒரு தமிழ் மகனுக்குக் கூட இடமில்லாமல் ஆட்சி நிறுவப்படுவது நியாயமா?

7 ஆசனங்களைக் கொண்டிருந்த முஸ்லிம் காங்கிரசுக்கும் 11 ஆசனங்களைக் கொண்டிருந்த தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குமிடையில் ஏன் ஓர் இணக்கப்பாட்டைக் காண முடியவில்லை? நாங்கள்தான் முதலமைச்சர் பதவியைக் கேட்கவில்லையே? குறைந்த ஆசனங்களைக் கொண்டிருந்த உங்களுக்குத்தான் முதலமைச்சர் பதவியைத் தருவதாக சொன்னோமே?. அப்படியிருந்தும் அங்கு ஒரு தமிழருக்குக் கூட இடமில்லை என்பதைப் பற்றிக் கூட கவலைப்படாமல் ஒரு ஆட்சியை அமைத்தீர்கள். இந்த ஜனாதிபதித் தேர்தலோடு அந்த ஆட்சி முடிவுக்கு வருகிறது.

முஸ்லிம் காங்கிரசோடு இப்போதும் நாங்கள் பேச்சுவார்த்தை நடத்தினோம். நாங்கள் உங்களுக்கு சந்தர்ப்பத்தைக் கொடுத்தபோது அதை நீங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. அது நீங்கள் விட்ட தவறு என்று சொன்னோம். அவர்களில் சிலர் அதனைத் தவறு என்று ஏற்றுக் கொள்கிறார்கள்.  ஆனால் இன்னொரு தடவை பெருந்தன்மையோடு விட்டுத் தரத்தான் வேண்டும் எனக் கேட்கிறார்கள்.  ஆனால் இன்னொருவரோ அதனைத் தவறு என்று நான் சொல்லாமட்டேன். அது காலத்தின் தேவையாக இருந்தது என்கிறார்.

என்ன தேவையாக இருந்தது? அமைச்சுப் பதவிதானே தேவையாக இருந்தது. எங்களது  உறுப்பிர்கள் எமக்கு அழுத்தங்களைத் தந்தார்கள். வேறு விதமாக கிழக்கில் ஆட்சியை அமைப்போம் எனக் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். இன்று கூட அதனைச் செய்யலாம். ஆனால் அதனை நாம் செய்யமாட்டோம்.

முதலமைச்சர் பதவி வேண்டும் என்பதற்காக முஸ்லிம் மக்களின் பெரும்பான்மையான வாக்குகளைப் பெற்றவர்களைப் புறந்தள்ளி நாம் ஆட்சியமைக்கமாட்டோம். ஒரு காலமும் அதனைத் செய்யமாட்டோம்.

எனவே முதலில் நாம் முஸ்லிம் காங்கிரசுடன்தான் பேசுவோம். அவர்களுடன் இணைந்தே ஆட்சியமைப்பதற்கான சந்தர்ப்பத்தைக் கொடுப்போம் என்றே நாம் சொன்னோம். ஆனால் இப்பொழுதும் கூட அவர்கள் அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்த தயாரில்லை என்பது புலனாகின்றது.

ஏற்கவே கிழக்கில் இரண்டு வருடம் அமைச்சுப் பதவிகளை முஸ்லிம் காங்கிரஸ் கொண்டிருந்தது. மத்தியிலும் அமைச்சுப் பதவிகளை வகித்தது. இப்போது புதிய ஆட்சியிலும் அமைச்சுப் பதவிகளைக் கேட்டுக் கேட்டுப் பெற்றுக் கொண்டிருக்கிறா்கள்.

நாம் அறியாத... பல தகவல்களை, தந்த பிழம்பிற்கு நன்றி. :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

இன்னொரு தடவை பெருந்தன்மையோடு விட்டுத் தரத்தான் வேண்டும் எனக் கேட்கிறார்கள்.  ---- 1

 அடுத்த  பதவி காலம் முடிய..

இன்னொரு தடவை பெருந்தன்மையோடு விட்டுத் தரத்தான் வேண்டும் எனக் கேட்கிறார்கள்.  ---- 2

 அடுத்த  பதவி காலம் முடிய..

இன்னொரு தடவை பெருந்தன்மையோடு விட்டுத் தரத்தான் வேண்டும் எனக் கேட்கிறார்கள்.  ---- infinity

விட்டு கொடுப்பதற்காவே பிறந்தவர்கள் .....   விட்டுகொடுப்பதுதானே முறை  .....அதுவும் சிறுபான்மை சக்கோதர இனம்

... <_<

தண்ணீரும், மூன்று தரம் தான்.... பொறுக்கும் என்று சொல்வார்கள்.

இனிக் கேட்டால், செருப்பலை அடிக்கணும்.

தமிழனை, முஸ்லீம்கள்...  இளிச்ச வாயன்கள் என்று, நினைத்து விட்டார்கள் போலுள்ளது.  :o

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.