Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறிசேன அரசை நம்ப முடியாது.. சொல்கிறார் ருத்திரகுமாரன்

Featured Replies

யாராவது தயான் ஜயதிலக்காஅண்மையில் எழுதிய கட்டுரையை தமிழில் போட்டால் நல்லது. 

 

தமிழாக்கம் செய்யும் தகுதி எனக்கில்லை. இணைப்பை தந்தால் வாசிக்கமுடியும் இணைப்பை தருவீர்களா?

  • கருத்துக்கள உறவுகள்

தமிழாக்கம் செய்யும் தகுதி எனக்கில்லை. இணைப்பை தந்தால் வாசிக்கமுடியும் இணைப்பை தருவீர்களா?

டிபிஸ். ஜெயராஜ் தளத்தில் உள்ளது ஜீவன்.

http://dbsjeyaraj.com/dbsj/archives/37638

  • கருத்துக்கள உறவுகள்

யாராவது தயான் ஜயதிலக்காஅண்மையில் எழுதிய கட்டுரையை தமிழில் போட்டால் நல்லது. அவரின் கட்டுரைப்படி மங்கள சமரவீர டில்லிக்குப் போய் கொடுத்த உறுதிகள்:

வடக்கு கிழக்கில் இராணுவ அழுத்தம் குறைக்கப்படும்/நீக்கப்படும்.

13+ திருத்தச் சட்டமூலம் மூலம் மாகாண சபைகளுக்கு மேலதிக அதிகாரம் வழங்கப்படும்.

ஐ.நாவின் போர்க்குற்ற விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்கப்படும்.

இப்படி நல்லதுகளைத் தமிழர்களுக்குச் செய்யவுள்ள அரசை உருத்திரகுமாரன் நம்பாமல் இருப்பது சிங்களவர்கள் ஒருபோதும் தமிழர்களை சமமாக நடாத்தமாட்டார்கள் என்ற தமிழர்களின் நம்பிக்கையீனத்தில் இருந்து வந்தது என்று ஏன் பார்க்கக்கூடாது?

மங்கள சொன்னவை இலங்கையில் நடக்கச் சிங்களவர்கள் சம்மதிப்பார்கள் என்று எத்தனை பேர் நம்புகின்றீர்கள்?

 

அதிகாரபூர்வமாக வராத இவ்விடயங்கள் பற்றி

இந்த ராயதந்திரி பொறுப்புடன் தான் வெளியில் விடுகிறாரா?

அல்லது

நெருப்பை மூட்டுகிறாரா???

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

தயான் மகிந்தவின் ஆதரவாளர்.

2009 இல் பாரிய யுத்தத்தை வென்றது இவற்றுக்காகவா என்று அழுது கட்டுரையை முடித்துள்ளார்.

டிபிஸ். ஜெயராஜ் தளத்தில் உள்ளது ஜீவன்.

http://dbsjeyaraj.com/dbsj/archives/37638

நன்றி

  • கருத்துக்கள உறவுகள்

ஜெயராஜ்., ஒரு ஒட்டுண்ணி
ஆருக்கும், சிங்கி அடிப்பான்.

  • கருத்துக்கள உறவுகள்

இவனால்... நாடு, நாசமாய் போனது , வேறு கதை.
இதுகளை, எல்லாம்...  ஒட்டுக்குழு, பட்டியலில் சேர்க்க வேண்டும்..
வந்திட்டாங்கள்.... பிச்சை எடுக்க.

  • கருத்துக்கள உறவுகள்

இவனால்... நாடு, நாசமாய் போனது , வேறு கதை.

இதுகளை, எல்லாம்...  ஒட்டுக்குழு, பட்டியலில் சேர்க்க வேண்டும்..

வந்திட்டாங்கள்.... பிச்சை எடுக்க.

யாரு தயானா இல்லை டிபிஎஸ்ஸா?

இது ஜெயராஜ் எழுதியதல்ல தமிழர்க்கெதிராக எப்பவும் கத்தும் தயான் ஜெயத்திலக எழுதியது. இவர் கவலைப்பட்டு அழும் விடையங்கள் உண்மையில் நடந்தால் தமிழர்க்கு நன்மையே. மங்கள சமரவீரா இந்தியாவில் கூறியது உண்மை என்றால் எமக்கே நன்மை. த ஐலன்ட்டில் வெங்கட் நாராயன் எழுத்தின்படி மங்கள சமரவீரா இந்தியாவில் கூறியது உண்மையென்றே எடுக்க வேண்டியுள்ளது. கடந்த காலத்தில் எத்தனயோ தீர்வுகள் முன்வைக்கப் பட்டுள்ளன புதிதாக எதுவும் தேவையில்லை இருப்பதில் இருந்து ஆரம்பிக்கலாம் என்கிறார். நல்லதை எதிர்பார்ப்போம் நல்லவைக்கு துணை போவோம். 

"இத்தனை வருடமாக எம்மால் ஒரு தேசிய சமரசத்திற்கு வரமுடியாதிருந்ததிற்கு அரசியல் விருப்பமின்மையே காரணம். இப்போது அரசியல் விருப்பமிருக்கின்றது நம்பிக்கையுடன் முன்நகர்வோம்". மங்களவின் இறுதிக்கருத்து. நாமும் நம்பிக்கையுடன் முன்நகர்வோம் (வேறு வழி?).

  • கருத்துக்கள உறவுகள்

டிபிஸ். ஜெயராஜ் தளத்தில் உள்ளது ஜீவன்.

http://dbsjeyaraj.com/dbsj/archives/37638

 

சிங்கள எழுத்தாளர் சிங்களவர்களுக்காக எழுதிய கட்டுரை.

தமிழர்களுக்கு எதுவும் கிடைக்க விடாமல் தடுக்கும் வகையில் எழுதப்பட்டிருக்கலாம் :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள எழுத்தாளர் சிங்களவர்களுக்காக எழுதிய கட்டுரை.

தமிழர்களுக்கு எதுவும் கிடைக்க விடாமல் தடுக்கும் வகையில் எழுதப்பட்டிருக்கலாம் :rolleyes:

உண்மையும் அதுதான்.

பிறகென்ன வழமையான சிங்கள விளையாட்டு  இங்கு  ஒன்று இரண்டு இலவு காத்த கிளி <_<

Edited by பெருமாள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

இனிமேல் இஞ்சை கருத்து எழுதுறதுக்கும் புதுச்சட்டம் கொண்டுவரவேணும் கண்டியளோ.. :lol:
படிச்சவன் தான் எழுதோணும்
துவக்கு தூக்கினவன் தான் எழுதோணும்
போராட போனவன் தான் எழுதோணும்
நாட்டைப்பற்றி நாட்டிலை இருந்துதான் எழுதோணும்
வெளிநாட்டு சிற்றிசன் எடுத்தவனெல்லாம் கதைக்கேலாது.......

 

ஐயா.. வெளிநாட்டில் இருந்தால், நியூயோர்க் தமிழீழத்தில் பிரஜையாகலாம். அமைச்சரும் ஆகலாம். விளையாட்டுத்துறை, களியாட்டத்துறை எல்லாவற்றுக்கும் அமைச்சர்கள் உள்ளனர். இப்படியொரு அரிய வாய்ப்பை நம் தேசிய பிரதமர் ஏற்படுத்தி தந்திருப்பது உங்களுக்கு தெரியாதா? மைத்திரி அமைச்சரவையைவிட நம் தேசிய பிரதமரிடம் அதிக அமைச்சர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்க விடயம். இந்த ஆண்டு கோடை காலத்தில் மரவள்ளி பயிர்ச்செய்கைக்கு புதிய அமைச்சு நிறுவப்படவுள்ளது.

Edited by sabesan36

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஐயா.. வெளிநாட்டில் இருந்தால், நியூயோர்க் தமிழீழத்தில் பிரஜையாகலாம். அமைச்சரும் ஆகலாம். விளையாட்டுத்துறை, களியாட்டத்துறை எல்லாவற்றுக்கும் அமைச்சர்கள் உள்ளனர். இப்படியொரு அரிய வாய்ப்பை நம் தேசிய பிரதமர் ஏற்படுத்தி தந்திருப்பது உங்களுக்கு தெரியாதா?

 

ஒண்டும் தெரியாது மிச்சத்தை சொல்லுங்கோ.

உண்மையும் தான், மைத்திரி அரசை நம்ப முடியாது. அன்னால் நாடுகடந்த அரசினால் அதுக்கு எதுவும் செய்யவும் முடியாது.

  • கருத்துக்கள உறவுகள்

தயான் ஜெயத்கிலக எழுதிய ஆக்கத்தில் இருந்து மங்களவின் இந்திய அரசிடம் கொடுப்பட்ட உறுதிமொழிகள் (மங்கள சிந்தன - தயான் ஜெயத்கிலக இவற்றுக்கு வழங்கி இருக்கும் பட்டப்பெயர்)

  1. வடமாகாணத்தில் இருந்து இராணுவ பிரசன்னத்தை குறைத்தல் அல்லது அகற்றுதல்.
  2. போரின் கடைசி மாதங்களில் நடந்தவை பற்றி ஐக்கிய நாடுகளின் உதவியுடனான உள்ளூர் விசாரணை.
  3. திம்பு தீர்வு திட்டம், மங்கள முனசிங்க தீர்வு திட்டம் மற்றும் சந்திரிக்கா தீர்வு திட்டம் போன்றவற்றின் அடிப்படையில் தீர்வு.

http://dbsjeyaraj.com/dbsj/archives/37638

 

 

தமிழ் நெற்றில் வந்த சம்பந்தன் - மங்கள சிங்கபூர் 2013 இரகசிய உடன்பாடு:

  1. ஒரு நாட்டின் கட்டமைப்பை தீர்மானிக்கும் போது அதன் உள்ளடக்கமே முக்கியமானது, பெயர்களும் அடையாளங்களும் இரெண்டாம் தரமானவை.
  2. நாட்டின் அரசியலமைப்பு, மக்களின் தன்னாதிக்கம், பங்குபற்றும் ஜனநாயகம், சட்டத்துக்கு அதியுயர் மதிப்பு ஆகியவற்றை அடிப்படையாக கொண்ட கட்டமைப்பாக அமையும்.
  3. அதிகாரபரவலாக்கல், ஒன்றுபட்ட இலங்கைக்குள் சுயாட்சி மற்றும் கூட்டாட்சி என்ற அடிப்படையில் அமையும்.
  4. ஆதிக்க ஜனாதிபதி ஆட்சி ஒழிக்கப்பட்டு பாராளுமன்ற ஆட்சி அமைக்கப்படும்.
  5. நாட்டின் பல்லின தன்மை அரசியலமைப்பில் அங்கீகரிக்கப்பட்டு ஒவ்வொரு பிரிவினதும் விருப்புகளும் அடையாளங்களும் அரசியலமைப்பில் ஏற்றுகொள்ளப்படும்.
  6. சர்வதேச தரத்திலான மக்களின் அடிப்படை உரிமைகள் சட்டம் உறுதியானதாக உருவாக்கி நடைமுறைப்படுத்தப்படும்.
  7. நீதித்துறை முற்றிலும் சுதந்திரமாக செயற்படும். அரசியலமைப்பு நீதிமன்றமும் அமைக்கப்படும்.
  8. முக்கியமான நிறுவனங்கள் சுதந்திரமாக ஆனால் பொறுப்பு உள்ளவையாக நிறுவப்பட்டு அவற்றுக்கான நியமனங்கள் வெளிப்படையான தன்மை கொண்ட மக்கள் ஏற்றுகொண்ட அமைப்பால் செய்யப்படும்.
  9. நாட்டின் பல்லின தன்மையை பிரதிபலிக்கும் வகையில் அரச நிறுவனங்களுக்கான நியமனங்கள் அமையும்.
  10. நாடு மதச்சார்பு அற்ற ஒன்றாக அமையும். பௌத்தம் முதலிடம் பெற்ற மதமாகவும் ஏனையவை சம உரிமையுள்ள மதங்களாகவும் இருக்கும்.

 

http://tamilnet.com/art.html?catid=79&artid=37606

 

 

 

 

 

Edited by Jude

  • தொடங்கியவர்

எனக்கு தெரிந்த வரையில் போர்க்குற்றம் விசாரணைக்கு போனால் அது இனப்படுகொலை என்ற தீர்ப்பு வருமானால் அடுத்த கட்டம் சர்வசன வாக்கெடுப்புத்தான். இதுவரை ஐ நா எடுத்த சாட்சியங்களின் அடிப்படையில் சர்வசன வாக்கு எடுக்க வேண்டிய சூழல் தான் இலங்கையில் உருவாகும். இப்படி உருவாகும் அரசில் விடுதலைப்புலிகள் ஆதிக்கம் செலுத்தும் நிலை தான் அதிகம்.விடுதலைப்புலிகளின் அரசியல் கட்டமைப்பும் மேலிடங்களும் எங்கு என்று யாரும் இதுவரை உறுதிப்படுத்தவில்லை. இலங்கையின் உள் நாட்டிலும் வெளி நாடுகளிலும் அவர்களுக்கு இருக்கும் ஆதரவும் அதிகமாகவே உள்ளது. இப்படியொரு நிலையை மேற்குலகு விரும்பவில்லை.இதையெல்லாம் நிறைவேற்ற மகிந்தாவை பலிக்கடாவாக்கிய மேற்குலகும் இந்தியாவும் முதல் வலை விரித்த மனிதர் சோதிடர் சுமணதாசா அதன் பின் நடந்தவைகள் யாவரும் அறிந்ததே. 

Edited by BLUE BIRD

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.