Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மைத்திரியுடன் எனது மகளைக் கண்டேன்: மீட்டுத் தருமாறு தாயொருவர் கதறல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
காணாமல்போன மகளின் புகைப்படத்துடன், கண்ணீருடன் தேடியலையும் தாயொருவரின் சோகம் நிறைந்த வடுக்கள் இவை.

இறுதிக்கட்ட யுத்தத்தின்போது இராணுவத்தினால் எனது மகள் பிடித்து செல்லப்பட்டாள். ஆனால் எனது மகளை இராணுவம் பிடித்து செல்லவில்லை என்று கையினை விரித்து விட்டார்கள். அவளை எங்கு தேடியும் கிடைக்கவில்லை. சிறிது காலத்திற்கு பின்னர் தொலைபேசி அழைப்பு ஒன்று வந்தது.

அதில் எனது மகள் கொழும்பிலுள்ள ஒரு பாடசாலை ஒன்றில் கல்வி கற்று வருகிறாள். அவளை வந்து அழைத்து செல்லுங்கள் என்று கூறீனார்கள்.

எனக்கு உயிரே வந்த மாதிரி இருந்தது என வவுனியாவில் இன்றைய தினம் நடைபெற்ற காணாமல்போனவர்களின் உறவினர்களின் ஆர்ப்பாட்டத்தில் ஒரு தாய் கண்ணீர்மல்க கூறியிருக்கின்றார்.

தொடர்ந்தும் அவர் விபரிக்கையில்,

அடுத்த நாள் போவதற்கு ஆயத்தமாகிய போது அதே தொலைபேசி அழைப்பிலிருந்து அது உங்களுடைய மக்கள் இல்லை என்று கூறி விட்டு, தொலைபேசி இணைப்பை துண்டித்து விட்டார்கள். நான் மீண்டும் முயற்சித்த போது அந்த இலக்கம் இயங்கவில்லை.

பின்னர் தேர்தல் காலங்களில் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனாவின் தேர்தல் துண்டுப் பிரசுரத்தில் எனது மகளை கண்டேன். எனவே எனது மகளை மீட்டுத் தாருங்கள் என அந்த தாய் கேட்டுக் கொண்டார்.

missing_girl_001.jpg

missing_girl_002.jpg

tamilwin.com

  • கருத்துக்கள உறவுகள்

மேற்கத்திய ஜனநாயக நாடுகளில் இதுபோன்ற விடயங்கள் ஒரு அரசாங்கத்தையே கலைத்து அரச அதிபர் இராஜினமா செய்ய போதுமானதாகும். இந்த விடயம் உண்மைஎன்று நிரூபிக்கப்பட்டால் சரியான முயற்சிகள் எடுக்கப்படும் பட்சத்தில் மைத்திரியின் அரசியல் வாழ்வுக்கு சிவப்பு கொடி காட்ட வேண்டிவரும். மைத்திரி இதற்க்கு பதில் சொல்லியே தீரவேண்டும். குழந்தையை இழந்து தவிக்கும் இந்த தாயாருக்கு எவரும் உதவ முன்வராத பட்சத்தில் எதிர்கட்சி காரர்களுக்கு இந்த விடயம் ஒரு துருப்புச்சீட்டாகவும் அமையலாம்.

Edited by vanangaamudi

புலம்பெயர் அமைப்புக்கள் இதைக் கவனத்தில் எடுக்க வேண்டும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மேற்கத்திய ஜனநாயக நாடுகளில் இதுபோன்ற விடயங்கள் ஒரு அரசாங்கத்தையே கலைத்து அரச அதிபர் இராஜினமா செய்ய போதுமானதாகும். இந்த விடயம் உண்மைஎன்று நிரூபிக்கப்பட்டால் சரியான முயற்சிகள் எடுக்கப்படும் பட்சத்தில் மைத்திரியின் அரசியல் வாழ்வுக்கு சிவப்பு கொடி காட்ட வேண்டிவரும். மைத்திரி இதற்க்கு பதில் சொல்லியே தீரவேண்டும். குழந்தையை இழந்து தவிக்கும் இந்த தாயாருக்கு எவரும் உதவ முன்வராத பட்சத்தில் எதிர்கட்சி காரர்களுக்கு இந்த விடயம் ஒரு துருப்புச்சீட்டாகவும் அமையலாம்.

இனவாத சிங்களம் எதிர்கட்சியாக இருக்கும் வரை அது நடக்காத காரியம் .

 Sri Lanka

The number of crimes against children in Sri Lanka increased by 64% in 2012 , compared to the previous year, a Unicef report said.

"According to Unicef and ILO [international Labour Organisation] there are 40,000 child prostitutes in Sri Lanka and 6.4% of the country's child population gets pregnant," said United National Party MP Rosy Senanayake.

Although girls are sexually exploited both in the sex industry and by sex tourists, many NGOs believe that it is boys who face greater abuse by foreign sex offenders, NGO Ecpact (Ending Child Prostitution, Pornography and Trafficking) said.

In Sri Lanka, the plantation sector has been identified as a notorious area for trafficking of children into the worst forms of child labour, particularly child domestic work and commercial sexual exploitation, according to ILO.

The National Child Protection Authority issued a warning in 2011 of an increase in child sexual exploitation, related to the rapid growth of tourism.

http://www.ibtimes.co.uk/top-five-countries-highest-rates-child-prostitution-1435448

Edited by பெருமாள்

இந்த விடயம் உண்மையா?   மிக முக்கியமான ஒரு விடயத்தை பற்றி கள உறவுகளிடம் இருந்து  கருத்துக்கள் வராதது ஆச்சரியத்தை அளிக்கிறது.  ஒரு வேளை எல்லோரும் அதிர்ச்சி அடைந்துவிட்டார்களா?

  • கருத்துக்கள உறவுகள்

அந்த தமிழ் பிள்ளையை..... யாரோ சிங்கள அரசியல் வாதியோ, இராணுவ உயர் அதிகாரிகளோ....

சிங்கள பாடசாலையில் விட்டு கல்வி கற்பிக்கிறார்கள் போலுள்ளது.

படமும்... அண்மையில் எடுக்கப் பட்டுள்ளது.
அந்தப் படத்திலுள்ள சீருடையை வைத்து, கொழும்பிலுள்ள எந்தப் பாடசாலை என்று கண்டு பிடிப்பது சுலபம்.
ஆனால்.... இதனை தனியொருவர் மேற்கொள்வது, அந்தச் சிறுமிக்கு ஆபத்து ஏற்படுத்தலாம்.
செஞ்சிலுவை சங்கம் போன்ற, சர்வதேச உதவியை நாடுவது உசிதமானது.

  • கருத்துக்கள உறவுகள்

காணாமல்போன மகளின் புகைப்படத்துடன், கண்ணீருடன் தேடியலையும் தாயொருவரின் சோகம் நிறைந்த வடுக்கள் இவை.

இறுதிக்கட்ட யுத்தத்தின்போது இராணுவத்தினால் எனது மகள் பிடித்து செல்லப்பட்டாள். ஆனால் எனது மகளை இராணுவம் பிடித்து செல்லவில்லை என்று கையினை விரித்து விட்டார்கள். அவளை எங்கு தேடியும் கிடைக்கவில்லை. சிறிது காலத்திற்கு பின்னர் தொலைபேசி அழைப்பு ஒன்று வந்தது.

அதில் எனது மகள் கொழும்பிலுள்ள ஒரு பாடசாலை ஒன்றில் கல்வி கற்று வருகிறாள். அவளை வந்து அழைத்து செல்லுங்கள் என்று கூறீனார்கள்.

எனக்கு உயிரே வந்த மாதிரி இருந்தது என வவுனியாவில் இன்றைய தினம் நடைபெற்ற காணாமல்போனவர்களின் உறவினர்களின் ஆர்ப்பாட்டத்தில் ஒரு தாய் கண்ணீர்மல்க கூறியிருக்கின்றார்.

...

பின்னர் தேர்தல் காலங்களில் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனாவின் தேர்தல் துண்டுப் பிரசுரத்தில் எனது மகளை கண்டேன். எனவே எனது மகளை மீட்டுத் தாருங்கள் என அந்த தாய் கேட்டுக் கொண்டார்.

பாவம்.. இப்படி எத்தனையெத்தனை துயரக் கதைகள்.. வெளிச்சத்திற்கு வராமல் கரைந்தவை எத்தனையோ..?

தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் தீர்வு கிட்டாதோ? :(

  • கருத்துக்கள உறவுகள்

பொறுங்க மக்களே புலம். பெயர் தமிழர்கள் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியிலும் ஜெசிகாவை ஜெயிக்க வைப்பதிலும் பிஸி ..... இத பற்றி பிறகு பேசுவம் ....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.