Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ராஜீவ் காந்தியை விடுதலைப்புலிகள் கொலை செய்தது புனிதப் போர் ; சீமான்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

6221af83ce54aaee9a465bf658628990.jpg

இந்திய-இலங்கை அமைதிப்படை மூலம் தமிழர்களை கொலை செய்த ராஜீவ்காந்திய விடுதலைப் புலிகள் கொலை செய்தது புனிதப் போர் என சீமான் தெரிவித்துள்ளார்.

இராமநாதபுரம் மாவட்டம் நாம்தமிழர் கட்சியின் சார்பில் அரண்மனை முன்பு மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் டோம்னிக் ரவி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு உரையாற்றிய போதே இதனை தெரிவித்துள்ளார்.

அங்கு தொடர்ந்து உரையாருகையில்,

இந்திய நாடு மொழி வாரியாக மாநிலமாக பிரிக்கப்பட்ட பின்பு அந்தந்த மாநிலத்தை அந்த மொழித்தவரே ஆழ்கின்றனர். ஆனால் தமிழ்நாட்டை மட்டும் ஒரு தமிழன் ஆளவில்லை இதனால் தான் காவேரி, முல்லை பெரியாறு, கூடங்குளம், மீனவர் உட்பட பல்வேறு பிரச்சனைகள் வருகின்றது. 

மேலும் அமெரிக்காவில் இரட்டை கோபுரத்தை ஒசாமாபின்லேடன் குண்டு வைத்து தகர்த்த சர்வதேச பயங்கரவாதம் என்றால்? இலங்கைக்கு இந்திய-இலங்கை அமைதிப்படையை அனுப்பி தமிழர்களை கொலை செய்த ராஜீவ்காந்தி செய்ததற்கு பெயர் என்ன? 

பாகிஸ்தானில் மறைந்திருந்த ஒசாமாபின்லேடனை அமெரிக்க ராணுவம் சுட்டு கொலை செய்தது புனிதப் போர் என்றால் இலங்கைக்கு இந்திய-இலங்கை அமைதிப்படையை அனுப்பி தமிழர்களை கொலை செய்த ராஜீவ்காந்தியை விடுதலைப்புலிகள் கொலை செய்ததும் புனிதப் போர் தான் என்று தெரிவித்தார்.

a(83).jpg

unnamed(71).jpg
 
http://onlineuthayan.com/News_More.php?id=778093873114752300

நுணலும் தன் வாயால் கெடும் என்ற உதாரணத்திற்கு  இவரை விட்டால் ஆளில்லை . :lol:

கனடாவில் பெற்ற அனுபவத்தில் இருந்து கூட அண்ணை பாடம் படிக்கவில்லை போலிருக்கு . :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

நுணலும் தன் வாயால் கெடும் என்ற உதாரணத்திற்கு  இவரை விட்டால் ஆளில்லை . :lol:

கனடாவில் பெற்ற அனுபவத்தில் இருந்து கூட அண்ணை பாடம் படிக்கவில்லை போலிருக்கு . :icon_mrgreen:

சீமான் சொன்னதில் என்ன பிழை என்று சொல்வதை விட்டு கனடா செய்ததை என புகழ்கிறீர்கள்?  கனடியருக்கு எகிப்தில் என்ன நடந்தது? அந்த ஊடகவியலாளருக்கும் வாய் பிழை போல? பொப் ரேயிக்கு சிறிலங்கா என்ன செய்தது என இங்கு சொல்லலாமே? அவருக்கும் வாய் பிழை போல.

எமக்கு ஆதரவாக யார் பேசினாலும் நண்பர் ஆக்குவதை விட்டு  ரொரண்டோவில் இருந்து நக்கலடிக்க மட்டும் தான் தெரியும்.
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மறுபடியும் ....

சிமான் சொன்னது சரி பிழை என்பதிற்க்கு மேலே இப்படி சொன்னவர்களுக்கு என்ன நடந்தது என யோசித்துப் பார்த்திருக்கலாம் ...

  • கருத்துக்கள உறவுகள்

கிந்திய தேசிய அரசியல்வாதிகள்(குறிப்பாகத் காங்கிரஸ், தமிழகக்காங்கிரஸ், சு.சுவாமி) ராஜீவைவைத்தே தமது காலத்தை ஓட்டுகிறார்கள் இன்றுவரை. இந்த நிலையில் சீமான் போன்ற வளர்ந்துவரும் தலைமைகளுக்கென்று கோடுபாட்டு ரீதியிலான உரையாடற் பண்பொன்று அவசியமானது. கருத்தியல் தளமொன்றிலே நகரவேண்டியதொரு சூழலில் உணரவுமயமான செய்திகள் வெளிப்படுத்தல்கள் நீண்டகால நோக்கிலான தமிழராட்சி தமிழருக்கான தலைமைத்துவம் தமிழரது நிலைநிறுத்துகை என்பவற்றிலே பாரியளவிலான தாக்கத்தைச் செலுத்தும். கிந்திய தேசியமென்றபோர்வையில் தமிழினம் அழிக்கப்பட்டுவரும் சூழலில் கட்சியரசியல் சார்ந்து அதிகாரங்களைக் கைப்பற்றுதலுக்கான கருவியாகவே கட்சிகள் பயன்படுகின்ற அமைப்பாக மட்டுமே இருக்கின்றது. எனவே இந்தநிலை மாறி தெளிவான கொள்கை கோட்பாடு சார்ந்த நகர்வுகளும் உரைகளுமே தேவை.   

  • கருத்துக்கள உறவுகள்

உலகம் மறந்தாலும்,இந்தாள் மறக்கவிடாது.

நுணலும் தன் வாயால் கெடும் என்ற உதாரணத்திற்கு  இவரை விட்டால் ஆளில்லை . :lol:

கனடாவில் பெற்ற அனுபவத்தில் இருந்து கூட அண்ணை பாடம் படிக்கவில்லை போலிருக்கு . :icon_mrgreen:

நுணலும் தன வாயால் கெடும் என்பதற்கு மிக சிறந்த உதாரணம்
உங்களை விட்டால் வேறு யார் அர்ஜுன்?  :D
 
மாலைதீவில் இருந்து ஒரு பாடத்தையும் படிக்காத நீங்கள் சீமான் கனடாவில பாடம் படிக்கிறதை பற்றி கதைப்பது செம காமடி அர்ஜுன்.  :D  :lol:

Edited by seeman

சீமான் ராஜீவ் காந்தி பிரபாகரன் தமிழீழ கதைகளை குறைத்து தாம் பதவிக்கு வந்தால் எவ்வாறு தமிழ் நாட்டின் பொருளாதாரம் கல்வி முறை தொழில் நுட்பம் கைத்தொழில் நகர கிராமிய கட்டமைப்பு விவசாயம் உள்ளூர் உற்பத்தி போக்குவரத்து மின்சாரம் நீர் விநியோகம்  வாழ்க்கை தரம் வேலை வாய்ப்பு கலாச்சாரம் போன்றவற்றை மேம்படுத்தலாம் அதற்கான புதிய உத்திகள் பொறி முறைகள் அதனை எவ்வாறு நடை முறை சாத்தியமாக்குவது போன்றவற்றில் கவனம் செலுத்துவது மிக முக்கியம். சீமான் ராஜீவ் புலி தமிழீழம் பிரபாகரன் என்பவை பற்றி கதைப்பதில் எந்த தவறும் கிடையாது. அவர் நேர்மையாக உண்மையை சொல்கிறார். ஆனால் தமிழ் நாட்டை பொறுத்தவரை தாம் ஆட்சிக்கு வந்தால் தமது ஆட்சியின் தனித்துவமான அணுகுமுறை என்ன அது எவ்வாறு கலைஞர் அம்மா ஆட்சியிலிருந்து வேறு பட்டு தமிழகத்தை எவ்வாறு  ஒரு குஜராத் போலவோ அல்லது சிங்கபூர் போலவோ கொண்டுவருவது என்பது பற்றிய தெளிவான கொள்கை அணுகுமுறை அவசியம். சீமான் இவற்றின் மேல் கூடிய கவனம் செலுத்துவது மிகவும் ஆக்க பூர்வமாக இருக்கும். 

சீமானுக்கு கிடைத்த மிக பெரிய பலம் அவருக்கு பின்னால் அணிதிரண்டு நிற்கும் படித்த இளையோர்கள். படித்த இளையோர்களை தொழில் சார் வல்லுனர்களை வைத்து எவ்வாறு ஒரு சிறந்த அரசாங்க மொடலை உருவாக்குவது அதனை எவ்வாறு நடை முறையில் ஒரு சிறந்த கம்பனியை நிர்வகிப்பது போன்று நடை முறை படுத்துவது ( மோடியின் குஜராத் அரசாங்கக மொடல், லீ குவான் யூவின் சிங்கபூர் அரசாங்க மொடல்) என்பவற்றில் கவனம் செலுத்தி அதனை சரியாக தேர்தல் பிரச்சாரத்தில் பயன் படுத்தினால் நிச்சயம் நாம் தமிழர் 2016 இல் தமிழ் நாட்டில் ஆட்சியை கைப்பற்றி நேர்மையான ஊழல் அற்ற ஆக்க பூர்வமான ஆட்சியை நிச்சயமாக சீமானால் வழங்க முடியும். 

சீமான்.. நீங்கள் சொல்வது முற்றிலும் சரி..

அதனால்தான் அவர் ஈழ விவகாரங்களைவிட தமிழகத்தின் பிரச்சினைகள் தீர்வுகளை அதிகம் பேசுகிறார்.. ஈழ விடயங்களை 5% க்கு மேல் பேசுவதில்லை. ஆனால் ஊடகங்கள் அந்த 5% ஐதான் பெருப்பித்துக் காட்டுகின்றன.

இன்று காலை வைகோ ஐயாவின் மேடை உரை ஒன்றைப் பார்த்தேன். முத்துக்குமாருக்கு அகவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி. அதில் இறுதி ஒரு நிமிடத்தில் தலைவர் உயிருடன் இருப்பதாகவும், தம்மை வழி நடத்துவதாகவும் சொல்கிறார். அதையே அந்தக் காணொளிக்குத் தலைப்பாக்கி இருக்கிறார்கள். :huh:

கிந்திய தேசிய அரசியல்வாதிகள்(குறிப்பாகத் காங்கிரஸ், தமிழகக்காங்கிரஸ், சு.சுவாமி) ராஜீவைவைத்தே தமது காலத்தை ஓட்டுகிறார்கள் இன்றுவரை. இந்த நிலையில் சீமான் போன்ற வளர்ந்துவரும் தலைமைகளுக்கென்று கோடுபாட்டு ரீதியிலான உரையாடற் பண்பொன்று அவசியமானது. கருத்தியல் தளமொன்றிலே நகரவேண்டியதொரு சூழலில் உணரவுமயமான செய்திகள் வெளிப்படுத்தல்கள் நீண்டகால நோக்கிலான தமிழராட்சி தமிழருக்கான தலைமைத்துவம் தமிழரது நிலைநிறுத்துகை என்பவற்றிலே பாரியளவிலான தாக்கத்தைச் செலுத்தும். கிந்திய தேசியமென்றபோர்வையில் தமிழினம் அழிக்கப்பட்டுவரும் சூழலில் கட்சியரசியல் சார்ந்து அதிகாரங்களைக் கைப்பற்றுதலுக்கான கருவியாகவே கட்சிகள் பயன்படுகின்ற அமைப்பாக மட்டுமே இருக்கின்றது. எனவே இந்தநிலை மாறி தெளிவான கொள்கை கோட்பாடு சார்ந்த நகர்வுகளும் உரைகளுமே தேவை.   

காலத்தின் தேவை கருதிய மிக தெளிவான ஆக்க பூர்வமான் கருத்து நொச்சி 

சீமான்.. நீங்கள் சொல்வது முற்றிலும் சரி..

அதனால்தான் அவர் ஈழ விவகாரங்களைவிட தமிழகத்தின் பிரச்சினைகள் தீர்வுகளை அதிகம் பேசுகிறார்.. ஈழ விடயங்களை 5% க்கு மேல் பேசுவதில்லை. ஆனால் ஊடகங்கள் அந்த 5% ஐதான் பெருப்பித்துக் காட்டுகின்றன.

இன்று காலை வைகோ ஐயாவின் மேடை உரை ஒன்றைப் பார்த்தேன். முத்துக்குமாருக்கு அகவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி. அதில் இறுதி ஒரு நிமிடத்தில் தலைவர் உயிருடன் இருப்பதாகவும், தம்மை வழி நடத்துவதாகவும் சொல்கிறார். அதையே அந்தக் காணொளிக்குத் தலைப்பாக்கி இருக்கிறார்கள். :huh:

ஆமாம் இசை நீங்கள் குறிப்பிட்டது போல மீடியாக்கள் தமது வியாபாரத்திற்காக இந்த விடயங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றன. 
 
பலம் மிக்க மீடியாக்களை உருவாக்கி அதனை மக்கள் மத்தியில் வெற்றிகரமாக கொண்டு செல்வது மற்றைய மீடியாக்களை தமக்கு ஆதரவான தளத்திற்கு திசை திருப்புவது என்பவையும் வெற்றிக்கு மிகவும் முக்கியம்.  
 
தலைவரே தற்போதைய காலகட்டத்தில் தான் தேவை இல்லை என்று கருதி மறைந்து விட்ட பிறகு வை கோ ஐயா தலைவர் பற்றி பேச வேண்டிய அவசியம் என்ன என்பது புரியவில்லை. தலைவர் பற்றி பேசுவதை தவிர்த்திருக்கலாம். 

Edited by seeman

  • கருத்துக்கள உறவுகள்

காலத்தின் தேவை கருதிய மிக தெளிவான ஆக்க பூர்வமான் கருத்து நொச்சி 

நன்றிகள் சீமானவர்களே!
 
தமிழினம் தமிழகம் தமிழீழம் என்ற  இரு பிராந்தியங்களிலும் (இருநாடுகளிலும்) வெளித் தெரியும்,  வெளித்தெரியா இரு துருவமயப்பட்ட அழிவுக்குள் உள்ள வேளையில் இளைய அரசியல் தலைமைகள் அல்லது தலைமைதாங்கும் தன்மையுடையோர் அரசறிவியல் போக்குடனான கருத்துகளை முன்வைத்து தமிழ்க்குமுகாயத்தை அரசறிவியல் ஆற்றலும் சிந்தனையும் செயல்வடிவமும் கொண்டவர்களாக உருவாக்க வேண்டியது அவசியமாகும். (சுட்டுவதற்காக மட்டும்: தமிழீழத்தில் தேர்வெளுதலாம் வாருங்கள் என்ற நிலை இப்போது சாத்தியமில்லை) எனவே சரிய திசைவழியே பயணிக்கும் திட்டமிடலும் செயலுமே தேவை. இனித் தமிழினம் சாகக்கூடாது. வாழ வேண்டும். தலைநிமிர்ந்து வாழவேண்டும். எம்மைச் சாகடித்தோரை அனைத்துல நீதிமன்றிற்கு எப்படிக் கொண்டுவரப்போகிறோம். என்று சிந்திக்கவும் செயற்படவும் வேண்டிய காலம். இது தனியே தமிழீழமக்களுக்கானதல்ல. உலகத்தமிழினத்துக்கானதும் அவர்தம் இருப்பிற்கானதும். உலகத்தமிழினத்தின் விழிப்பிற்காக 40000 மேற்பட்ட மாவீரர்களையும் 300,000 மேற்பட்ட தமிழர்களை விதைத்தும் புதைத்துமுள்ளோம். எனவே இவற்றை நாம் மறந்துவிடமுடியாது. இவர்களின் ஆத்மபலத்தை ஆக்கசக்தியாக மாற்றுதலே தமிழினத்தினதும். அதன் தலைமைகளது கடனாகும்.

ரோ  என்ன  சொல்லுதோ  அதைதானே  சீமான்  சொல்லுவார் இது கூட  புரியாமல் போங்கப்பு   :icon_idea:

ரோ  என்ன  சொல்லுதோ  அதைதானே  சீமான்  சொல்லுவார் இது கூட  புரியாமல் போங்கப்பு   :icon_idea:

அப்பு சீமான் எழுதின புத்தகத்தை றோ பணம் போட்டு  வெளியிட்டு வெளியீட்டு விழாவுக்கு றோவின் முக்கியஸ்தரை அனுப்பினால் நீங்கள் சொல்லுறதை நாங்கள் நம்புறம் அப்பு.  :D

அப்பு சீமான் எழுதின புத்தகத்தை றோ பணம் போட்டு  வெளியிட்டு வெளியீட்டு விழாவுக்கு றோவின் முக்கியஸ்தரை அனுப்பினால் நீங்கள் சொல்லுறதை நாங்கள் நம்புறம் அப்பு.  :D

அழகான  விளக்கம்  அண்ணே  பெயருக்கு  ஏற்றால்  போல  உங்கள்  கருத்தும் நச்  :icon_idea:

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
இந்தக் காணொளி கிடைத்துவிட்டது.. :D
 
அமெரிக்கா அத்துமீறி பாகிஸ்தானுக்குள் சென்று கொலை செய்ததைத்தான் குறிப்பிட்டுச் சொல்லியிருக்கிறார். அடிமைக் குணம் உள்ளவர்கள்தான் அச்செயலை ஏற்பார்கள் என்கிறார்..
 
"வெள்ளையாக இருப்பவன் சொல்வது எல்லாம் உண்மை என்று நம்பிவிடாதே.. படித்தவன் சொல்வது எல்லாம் உண்மை என நம்பாதே.. எப்பொருள் யார்யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு.. இதை மனதில் கொள்.." இதைத்தான் சீமான் சொல்லியிருக்கிறார்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.