Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கவிதை அந்தாதி

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

முடியாமல் போனதேன்

படிப்பை தொடரமுடியாமல்

இடிந்து போய் நிற்கின்றேன்

அடியாத மாடு படியாது என்றே

தடி கொண்டு படி படி என்றே

அடித்து அடித்து வளர்த்த அப்பா

அடிக்கு ஓடி ஒளிந்திட்ட என்னை

தேடி தேடி அணைத்திட்ட அம்மா

மடியாது நினைவுகள் என்றும் நெஞ்சினில்

  • Replies 1.9k
  • Views 182.2k
  • Created
  • Last Reply

நெஞ்சினில்..

நெருஞ்சியடி

வஞ்சியே..

வானவில்லே..

கொஞ்சமும்..

வஞ்சமில்லா

நெஞ்சிலே நீ..

மட்டும் இருந்தால்..

வசந்தம்..உன்..

தங்கையும்.

வந்ததால். இட

நெருக்கம்.

நெருக்கமாய்...

நெஞ்சினில் நீ வந்த பின்னால் தான்

என்னையே நான் எனக்கு

அறிமுகமாக்கினேன்...!

அதுவரை நான் எங்கிருந்தேன்...???

உன்னினுள்தான் எங்கோ

ஒழிந்திருந்தேனா..?

இல்லை -உன் வரவால் தான்

தன் நிலை தெளிந்தேனா...?

இத்தனை நாளும்

என்னமோ செய்தேனே..??

உனைசந்தித்த பின்னால் தான்

உனக்காக - ஒவ்வொன்றும்

செய்கிறேன்...!!

அர்த்தமற்ற வாழ்க்கையை

அர்த்தப் படுத்தியவள் - நீ

வெற்றுக் கண்ணாடிக்கு

முலாமிட்டவள்

நீ தானே..... :wub:

Edited by gowrybalan

நீதானே எல்லாம்

என்றென்னை சுட்டுவிரலால்

தொட்டுக்காட்டி..

அழகான பொய்களை அடுக்கி கொண்டு

போகிறாயே.. அன்பே...

நீ என்ன அரசியல்வாதியா..

அரசியல்வாதி மட்டுமா

அடுக்கடுக்கா பொய் சொல்லுறான்

ஆண்மகன் எல்லோருமே

அப்படித்தானே வாழ்கின்றனர்

பெண்களை ஏமாற்ற

ஆண்மகன் வாயில்

யாருமே அறியாவண்ணம்

பூசிய உதட்டுசாயமே

பொய்.. பொய்.. பொய்!

ஆமாம்

அது பொய் தான். :wub:

Edited by வெண்ணிலா

பொய்.. பொய்.. பொய்!

ஆமாம்

அது பொய் தான் இன்று

புரியாத

உணர்வு வலிக்க

இதயம் கனக்க ஓர் கவி

ஒளியின் ஒளியாய்

சிரிப்பின் சிரிப்பாய்

உறுதியின் உறுதியாய்

வாழ்ந்திட்ட சரித்திரம்

பூமியில் சரிந்ததேனோ?

விதியென்று இருள்கொண்டு

வந்ததேனோ?

பல பூக்கள் சிகப்பாகி

சேர்ந்ததேனோ?

விடியலின் விடிவெள்ளி

விடிய முதல் சென்றதேனோ?

சாபங்கள் எம்மோடு

தொடர்வதேனோ?

தொடர்வதேனோ என்னை?

நிமிர்ந்து பார்த்து

நிலவைக் கேட்டேன்!

தலை கவிழ்ந்து

முகம் பார்த்துச் சொன்னது

நிலவு...

களவு போன என்

உள்ளத்தை களவாடிய கள்வன்

இவனா என அறியத் தொடர்ந்தேன்!

Edited by kavi_ruban

தொடர்ந்தேன் உன்னை

தொலைந்த என்னைத்தேடி

கண்ணாளனே என்னை நான்

கண்டெடுத்தேன் உன்னில்

நிஜமா இது நிஜமா

நீயா திருடினாய் எனை

நான் உனைப் பார்க்க

விண்ணில் இருந்து

மண்ணை நோக்கினேன்

மணவாளனே என்ன அதிசயம்

வெண்பஞ்சு மேகங்கள்

வெண்ணிலாவை மறைக்கின்றன

திருமகனே என் மனமகனே

ஒருமுறை எனை நோக்கு

உன் கண்ணொளி பட்டு

வெண்பஞ்சு மேகம் ஓடட்டும்.

Edited by வெண்ணிலா

வெண்பஞ்சு மேகம்

ஓடட்டும்

வெள்ளி நிலா

ஒளி வீசட்டும்

விழியிரண்டும் அவனைத்

தேடட்டும்

கனவுக்குள் அவன்முகம்

தோன்றட்டும்

நினைவு சொன்ன நாட்கள்

அவனாகட்டும்

அவனாகட்டும்

உன் காதல் வானம் - உன்

செவ்விதழாகட்டும்

அவன் பருகும் தடாகம்!

மொட்டு அவிழட்டும்

அவன் கைகள் பட்டு

சொட்டுச் சொட்டாய்

ஜீவன் உருகட்டும்

கட்டு அவனை

காதலில் கட்டு

விட்டுப் பறக்காது இனி

அவன் காமனின் சிட்டு!

காட்டு உன்னழகை

அவன் முன் காட்டு

பார்த்து கண்கள் இமைக்காது

பார்த்து எழுதுவான்

பல பாட்டு!

நிப்பாட்டு

மின்சாரத்தை

அவன் ஆழட்டும்

உன் அழகின் சாரத்தை!!!

அழகின் சாரத்தை அடடா இங்கு கண்டேன்

காதல் இரசம் சொட்டும் காமபாணங்கள்

கவி அந்தாதியை காதல் அந்தாதியாக்கி

கறுப்பிக்காவை விரட்டி விட்டதோ? :wub::lol:

காதல் கிறுக்கர்களே!

கவி அந்தாதிக்கு விடுதலை கொடுப்பீர்!

புதிதாய் ஒரு திரியெடுத்து

காமரசம் சொட்டச் சொட்ட

காதல் லீலைகளின் காட்சி பகிர்ந்திடுக!

காதல் அந்தாதியில்

தின்ற ஊண் செறிக்காத தினவர்கள் பார்வையிடப் படைப்பீர்! :D:blink::huh:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

படைப்பீர் கவிதை அழகாய்

தடையேதும் இல்லை சுவைக்க

படை கொண்டு வந்து தடுத்திட்டாலும்

விடைகொடுத்து முடித்திடமுடியாத அந்தாதி

ஆதிமுதல்வனாய் அந்தாதியில் நனைய

ஆறுமுகனை நினைந்து கவிதை படைத்திடுவீர்

ஆதி அருள் கிடைத்திடும்

ஆதி அருள் கிடைத்திடும்

என்று எத்தனை நாள்

காத்திருந்தேன்

பாதி அருள் கூடக் கிடைக்கவில்லை

இது வரை!

என்றாலும்

சோதி ஒரு நாள்

என் வாசல் வரும்

கூவி எனை அழைத்து

புகழ் குன்றில் எனை

ஏற்றிவிடும்...!

காவிப் பல் தெரிய

ஏளனமாய் சிரிக்காதீர்

ஆதி தமிழின்

செல்லப் பிள்ளை நான்!

  • கருத்துக்கள உறவுகள்

நான்முகன் மைந்தர் நால்வர் நின்றனர்!

மௌன குருவிடம் மௌனம் பயின்றனர்!

நால்வரில் ஒருவன் ஆறுமுகமாயினன்!

ஆறுமுகமானவன் வேலெடுத்து வென்றனன்!

வான்மனளை மணந்தவன் வள்ளியையும் கவர்ந்தான்!

நானிலத்தோர் உய்வதற்காய் நல்லூரில் லுறைந்தான்.

உறைந்தான் புன்னகையோடு..

ஊர்கிடந்தழ - தமிழ்

மகன்தான் மறைந்தான்

மண்ணோடுகல்கலங்க..

புன்னகைத்தீபத்தில்...

அமிலந்தெளித்தவனை

மாலையிட்டு கௌரவிக்கும்..

தேசமன்னர்கள்..ஆசைக்கே..

சமாதனப்புறாக்களை

சட்டியிடுவதென்ன.. ஆயுதக்கிடங்கை

அகலமாக்கி.. நவீன

பீரங்கியை விற்கவென்று...

உலகப்பூங்காவை சுடு

காடாய்ச்செய்த சர்வ அதிகாரர்களே...

மழலைப்பூவை ரசிக்க வாருங்கள்..

அம்மா அன்பை உணர்ந்து பாருங்கள்..

அன்பு காட்டி வாழ்ந் பாருங்கள்..

சிரித்து க்கலந்து வாழ்ந்து பாருங்கள்..

எளிமை இன்பம் நுகர்ந்து பாருங்கள்..

ஒருநாள் ஏழையாகி தூங்கிப்பாருங்கள்..

வியர்வை சிந்த உழைத்துப் பாருங்கள்..

இயற்கை காற்றில் நனைந்து பாருங்கள்..

வங்கிக்கணக்கை வளர்க்கும் நீங்கள்...

வாழ்க்கை எது நினைத்துப்பாருங்கள்

நினைத்துப் பாருங்கள்

உன்னை காதலிக்கும்

என்னை ஒரே ஒரு கணம்

கண்ணிமைகளை மூடி..

உற்றுப்பாருங்கள்

வெற்றுத்தாள்தான் நான்

என்மேல் எழுதிடு

உன்கவிக் காவியத்தை

உனதழகி நிலவவள்

இன்றும் உனக்காக

உருகுகின்றேன் தினமும்

உயிரே வா கரம் கோர்க்க

கரம் கோர்க்க

நான் வருவதானால்

சிரம் தாழ்த்தி

நீ ஒன்று கேட்கவேண்டும்

பரம் பொருள் காலடியன்றி

என் காலடி என்றும்

தொழக்கூடாது...!

ஏனெனில்,

கால் வாருகின்ற

ஆசை உனக்கேதும்

இருந்தால் அடியேன்

பாவமன்றோ...!

அன்றோ அவள் பாவை..

அராதித்தேன்..

வார்த்தை யேதும் வாய்வழி

விழாதா எனத் தவங்கிடந்தேன்...

இன்றோ அவள் மேதை..

சிறிது வாய் மூட மாட்டாளாஎன

நொந்து போய் இருக்கிறேன்..

ஆசைபட்டதும் நான்தான்..

அதற்காக இப்படியா இறைவா..

இறைவா உனை

இறைஞ்சுகின்றேன்

இந்த ஜென்மம் போல

இனிமையான நம் உறவு

இடைவிடாமல் தொடரணும்

இறுதிக்காலம் வரை

இறுதிக் காலம் வரை

இடைவிடாது தொடரும்

உறுதிமொழி ஏதும்

தரமுடியாது என்னால்...

சும்மா உதட்டளவில்

உச்சரிக்கப்படும்

உறவுகளில் எனக்கு

உடன்பாடில்லை!

உள்ளத்தில் கொப்பளிக்கும்

அன்பருவியில்

நீராடுகின்ற உற்சாகத்தை

தருகின்ற உறவு

முற்றுப்புள்ளி எதுவுமின்றி

முடிவிலிக்கு அழைத்துச்செல்லும்!

ஆகவே இறைவா..

என் உள்ளத்தில் என்றும்

அன்புப் பூக்கள்

பூத்துக் குலுங்கவிடு...

அது போதும்

உறவு தொடர...!

உறவுகள் தொடரும்

இறுதிவரை இதேபோல

உதட்டளவில் இல்லை

இதயத்தில் இருந்து

கூறு ஒருமுறை அன்பே

மறுப்பேதும் சொல்லாமல்..

நிம்மதியாக இருக்கின்றாயா

அம்மணியை நீங்கியதால்

வருவேன் நாளைமறுதினம்

வரவேற்பியா செங்கம்பளம்

விரித்து இவ்வெண்ணிலாவை...

வெண்ணிலாவை

செங்கம்பளம் விரித்து

வரவேற்கின்ற அவசியம்

ஏதேனும் உண்டா?

நீலக் கம்பளம் விரித்து

இயற்கை வரவேற்பதை விட

அடியேன் பெரிதாக என்ன

செய்துவிட முடியும்?

நிம்மதி ஆளை நீங்குவதாலோ

ஆளோடு கூட இருப்பதாலோ

கிடைத்துவிடுமா என்ன?

மனதுக்குள் சாந்தப்

பன்னீர் தெளித்தால்

கூட்டத்தில் கூட

குட்டித் தூக்கம் போடலாம்...

என்றாலும் வரவேற்பியா

என்ற கேட்டபடியால்

யாழ் களம் எங்கணும்

போஸ்டர் அடிக்கலாம்

என்று இருக்கிறேன்...

செலவு மட்டும்

உன் பொறுப்பு..!

உன் பொறுப்பு

என்று சொல்லி

சாதுரியமாக நழுவும்

சாந்தமானவனே

வெண்ணிலாவுக்கு

செங்கம்பளமும் வேண்டாம்

போஸ்டரும் வேணாம்

வரவேற்பும் வேண்டாம்

பலவர்ண வானவில்

புடைசூழ...

மின்னும் நட்சத்திரங்கள்

மிளிர..

சட்டென மறையும் மின்னல்

படமெடுக்க..

இடிகள் மேளச் சத்தம்

முழங்க..

பஞ்சு மேகங்கள் என்

பிஞ்சு விரல்களை பிடித்து

அழைத்து வர..

நீலவானமதில் நான்

உல்லாசமாக

உலா வருவேன்.!

எப்படித்தான் வலம்வரினும்

என்னால் உனை மறக்கமுடியாது

சிறு வயதில் நாமிருவரும்

மணல்வீடு கட்டி விளையாடியதை.!!

அன்று மணல்வீடு கட்டி

விளையாடிய நீயா

இணைய வழி ஊடாக வந்து

இன்று கவிதை அந்தாதிக்குள்

நக்கலென்ற பெரிய

கல்லெறிந்து காயப்படுத்துகிறாய்..!

நக்கலென்ற பெரிய

கல்லெறிந்து காயப்படுத்துகிறாய்

என்று புலம்பியது கேட்டு

பல முறை எனக்கு

விக்கல் வந்தது

விருந்துண்ணும் போது!

நீ உன் புலம்பலில்

சொன்ன சேதி பல

என் சிந்தை கடைகின்றது...

முந்தை ஒரு நாள்

மணல் வீடு

கட்டி விளையாடியதாய்ச்

சொன்னாய்...

சிந்தை குடைந்து

நினைவு அலுமாரி எங்கும்

தேடியும் ஏதும்

கிடைக்கவில்லை அப்படி!

சில சமயம்

எனகெழுதும் வரிகளுக்கிடையில்

ஏதேனும் தூது

அனுப்புகின்றாயா

வேறெவருக்கும்?

சும்மா இப்படித்தான்

ஏதேனும் கேட்பேன்

மருண்டு போகாதே நீயும்!

போகாதே நீயும்

பாவியெனை தவிக்கவிட்டு

காததூரம் நீ சென்றிடில்

ஆவியெனை விட்டு நீங்கும்

நான் புலம்பியது கேட்டு

நீ விக்கியபோதிலும்

வாஞ்சையோடணைத்து

வாய்முத்தம் தரநினைத்து

வஞ்சியிவள் முயன்றபோதும்

வார்த்தைகள் தடுமாறியதால்

வாய்பொத்தி உன்முன்னே

மெளனமாக தலைகுனிந்தேன்..

மண்வீடு கட்டி

வெண்ணிலைவை துரத்தி

ஓடியாடி விளையாடியதை

மறந்து அலுமாரியை

திறந்து தேடினாயா?

அதற்குப்பதில் உன்

இதயவறைகளை திறந்து

கண்மூடி சிந்தனை செய்

மண்வீடு என்ன மாளிகையே

உன் மனக்கண் முன்..!

உனக்கனுப்பும் சேதிகளை

நான் வேறெவருக்கும்

அனுப்பவே மாட்டேன் என

நன்கு தெரிந்தும்

அன்பே எதற்காக

மீண்டும் கல்லெறிகின்றாய்

என்மேல் உனக்கென்ன கோவம்?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.