Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

4 கடற்படையினர் சிறைப்பிடிப்பு, 25 கடற்படை பலி, 2 டோரா மூழ்க

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மட்டுறுத்துனர்கள் யாராவது இந்த இணைப்பை மின்னலின் இணைப்புடன் இணைத்துவிடவும்.நன்றி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தகவலுக்கு நன்றி ஈழப்பிரியன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பருத்தித்தறைக்கருகாமையில் உள்ள உறவினரொருவருடன் நண்பர் சற்றுமுன் தொடர்கொண்டபோது அங்கே நீண்ட நேரமாக வெடிச்சத்தங்கள் கேட்டுக்கொண்டிருப்பதாக உறவினர் சொன்னாராம் . கெலிகளும் பறந்து கொண்டிருப்பதாகவும். சரியான திருவிழா நடந்திருக்கின்றது.

நாகர்கோவில் கடற்பரப்பில் மோதல் டோரா மூழ்கடிப்பு: 18 படையினரின் நிலை கவலைக்கிடம்.

வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் கடற்பரப்பில் சிறீலங்கா கடற்படையினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் கடற்சமர் ஒன்றுறு இடம்பெற்றுள்ளது. இன்றைய கடற்சமரில் சிறீலங்காப் படையினரின் டோரா பீரங்கிப் படகு ஒன்று மூழ்கடிக்கப்பட்டதோடு மேலும் ஒரு டோராப் படகு சேத்திற்கு உள்ளாகியுள்ளது. மோதலின் போது சிறீலங்காப் கடற்படையினர் 18 பேரைக் காணவில்லை என சிறீலங்காத் தரப்பால் அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று மாலை 5.35 மணியளவில் நாகர்கோவில் கடற்பரப்பில் பயிற்சியில் ஈடுபட்ட கடற்புலிகள் மீது வலிந்த தாக்குதலைத் தொடுத்த கடற்படையினர் மீதே விடுதலைப் புலிகள் பதில் தாக்குதலை நடத்தியுள்ளனர் என விடுதலைப் புலிகளின் படைத்துறைப் பேச்சாளர் ஐ.இளந்திரையன் தெரிவித்துள்ளார்.

முதலாவது தாக்குதலில் சிறீலங்காப் படையினரின் அதிவேக டோராப் படகு மூழ்கடிக்கப்பட்டதோடு அதிலிருந்து 18 கடற்படையினரும் காணவில்லை எனத் தெரிவித்த போதும் அவர்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகின்றது.

இதனையடுத்து பிறிதொரு மோதல் மாலை 6 மணியளவில் இடம்பெற்றது இதன் போது சிறீலங்கா கடற்படையினரின் அதிவேக டோராப் பீரங்கிப் பகுதி தீப்பற்றி எரிந்து பெரும் தேசத்திற்கு உள்ளாகியுள்ளது எனத் தெரியவருகின்றது.

http://www.pathivu.com/index.php?subaction...t_from=&ucat=2&

வடமராட்சி கடற்சமரில் டோரா மூழ்கடிப்பு: 18 கடற்படையினர் கதி என்ன?

[வியாழக்கிழமை, 9 நவம்பர் 2006, 19:04 ஈழம்]

யாழ். வடமராட்சி கடற்பரப்பில் நடைபெற்ற மோதலில் சிறிலங்கா கடற்படையின் டோரா அதிவேக தாக்குதல் படகு மூழ்கடிக்கப்பட்டுள்ளது. இம்மோதலில் 18 கடற்படையினரை காணவில்லை என்று கூறப்படுகிறது. [விரிவு]

http://www.eelampage.com/

Sea Tigers capture 4 SLN troopers, seize armament, 2 Dvoras sunk

[TamilNet, Thursday, 09 November 2006, 12:45 GMT]

A Sea Tiger flotilla clashed with Sri Lanka Navy in the Northern waters killing 25 SLN troopers, capturing 4 troopers alive and destroying two Dvora Fast Attack Crafts, LTTE's Military Spokesman Irasiah Ilanthirayan told TamilNet. The two Dvora FACs were seized and the Sea Tigers dismantled all the armament including a 23 mm canon and an AGL gun, he said. Dead body of a SLN trooper was also recovered by the Tigers. The clash erupted as Sea Tigers engaged in training activities were provoked by Sri Lanka Navy vessels in the seas off Nagarkovil in LTTE territorial waters, according to the Tiger spokesman. A third Dvora FAC was damaged. Five Sea Tigers were killed in close gunbattle, he said.

A 23 mm Canon, five PK-LMGs, four 50 calibre guns and an Auto HK Grenade Launcher with ammunition were seized by the Sea Tigers.

Dead body of a SLN trooper was recovered by the Sea Tigers and brought to Vanni.

Meanwhile, Sri Lankan naval officials in Colombo claimed that the Dvora FACs which came under attack east of Point Pedro were escorting a vessel "Green Ocean‚" with 300 troopers on board.

The Tiger Spokesman denied the Sri Lankan claim.

He also refuted Sri Lankan Navy officilas claim that seven Sea Tiger boats were destroyed.

The Sea Tiger flotillas under the Command of Deputy Commander of Sea Tigers, Cheliyan, safely returned to their base with captured armaments, all LTTE vessels and the recovered body, he quoted Sea Tiger Special Commander Col. Soosai as saying.

A Sri Lanka Navy (SLN) Dvora Fast Attack Craft (FAC) was sunk by a Sea Tiger flotilla around 5:30 p.m. Thursday in the seas off Point Pedro and another SLN gunboat was damaged around 6:00 p.m. off Valvettithurai by the same flotilla which chased the SLN vessels into Kankesanthurai harbour, eyewitness reports in Vadamaradchi said.

Two Sri Lanka Air Force (SLAF) Kfir bombers flew over the waters attempting to chase the Sea Tiger flotilla, the eyewitness reports from Point Pedro said.

LTTE military spokesman in Kilinochchi further said that the Sri Lanka Army was continuing heavy artillery shelling in Muhamaalai and Nagarkovil FDL areas.

4 பேர் உயிருடன் பிடிக்கப்படதாகவும் ஒரு சிங்கள கடற்படையின் உடலும் கைப்பற்றப்பட்டுள்ளது என்று தமிழ்நெற்றில் செய்தி வந்து இருக்கு.

2ND LEAD

Sea Tigers capture 4 SLN troopers, seize armament, 2 Dvoras sunk

[TamilNet, Thursday, 09 November 2006, 12:45 GMT]

A Sea Tiger flotilla clashed with Sri Lanka Navy in the Northern waters killing 25 SLN troopers, capturing 4 troopers alive and destroying two Dvora Fast Attack Crafts, LTTE's Military Spokesman Irasiah Ilanthirayan told TamilNet. The two Dvora FACs were seized and the Sea Tigers dismantled all the armament including a 23 mm canon and an AGL gun, he said. Dead body of a SLN trooper was also recovered by the Tigers. The clash erupted as Sea Tigers engaged in training activities were provoked by Sri Lanka Navy vessels in the seas off Nagarkovil in LTTE territorial waters, according to the Tiger spokesman. A third Dvora FAC was damaged. Five Sea Tigers were killed in close gunbattle, he said.

A 23 mm Canon, five PK-LMGs, four 50 calibre guns and an Auto HK Grenade Launcher with ammunition were seized by the Sea Tigers.

Dead body of a SLN trooper was recovered by the Sea Tigers and brought to Vanni.

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=20221

(2 ஆம் இணைப்பு) தமிழீழ கடல் இறைமை பாதுகாப்புக்கான சமரில் 2 டோராக்கள் மூழ்கடிப்பு: 25 கடற்படையினர் பலி- 4 பேர் கைது

[வியாழக்கிழமை, 9 நவம்பர் 2006, 19:04 ஈழம்] [ச.விமலராஜா]

யாழ். வடமராட்சி கடற்பரப்பில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற தமிழீழ கடல் இறைமை பாதுகாப்புக்கான சமரில் 25 சிறிலங்கா கடற்படையினர் கொல்லப்பட்டுள்ளனர். 4 கடற்படையினர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒரு டோரா தாக்கி அழிக்கப்பட்டுள்ளது. 5 போராளிகள் வீரச்சாவைத் தழுவியுள்ளனர் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் தெரிவித்தார்.

இது தொடர்பாக "புதினம்" செய்தியாளரிடம் இராசையா இளந்திரையன் தெரிவித்ததாவது:

வடமராட்சி கடற்பரப்பில் கடற்பயிற்சியில் ஈடுபட்டிருந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் படகு அணி மீது சிறிலங்கா கடற்படை வேகப் படகுகள் தாக்குதல் தொடுத்தன. கடற்புலிகளின் பாதுகாப்பு அணி முன்னே சென்று நடத்திய பதில் தாக்குதலில் 5.35 மணியளவில் சிறிலங்கா கடற்படையின் ஒரு டோரா படகு மூழ்கடிக்கப்பட்டது. அதன் பின்னர் 6.05 மணியளவில் இரண்டாவது டோராவின் மீது கடற்புலிகள் ஏறி அதனைக் கைப்பற்றினர். அனைத்து ஆயுதங்களும் அந்த டோராவிலிருந்து கழற்றப்பட்டன.

கழற்றப்பட்ட ஆயுதங்களின் விவரம்:

23 மில்லி மீற்றர் பீரங்கி - 1

பிகே இயந்திர துப்பாக்கி - 5

50 கலிபர் பார இயந்திர துப்பாக்கிகள் - 4

ஓட்டோ எச்.கே. கிரேனேட் லாஞ்சர் - 1

மற்றும் சிறிய ரக மற்றும் ஆயுதங்கள்

மேலும் சிறிலங்கா கடற்படையின் 4 மாலுமிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஒரு சிறிலங்கா கடற்படையின் மாலுமியின் உடல் எடுக்கப்பட்டுள்ளது.

அதன் பின்னர் இரண்டாவது டோரா மூழ்கடிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து மூன்றாவது டோரா மீது தாக்குதல் நடத்தப்பட்டதில் பலத்த சேதமடைந்தது. அதனால் அந்த டோராவை சிறிலங்கா கடற்படையினர் கட்டி இழுத்து கொண்டு சென்றனர்.

இந்த சமரில் 25-க்கும் மேற்பட்ட சிறிலங்கா கடற்படையினர் கொல்லப்பட்டிருப்பதை கடற்புலிகள் உறுதி செய்துள்ளனர்.

எங்கள் கடற்புலிகள் தரப்பில் 5 போராளிகள் தாயகக் கடலில் இறைமையை நிலைநாட்டுவதற்காக தங்கள் இன்னுயிரை இழந்துள்ளனர்.

வடபோர் அரங்கு முன்நிலைகள் மீது சிறிலங்கா இராணுவத்தினர் எமது நிலைகள் மீது தொடர் தாக்குதலை நடத்தி வருகின்றனர். யாழ். குடா நாட்டை தமிழீழ தாயகப் பகுதிகளோடு இணைக்கும் ஏ-9 பாதையை திறப்பதற்கு சர்வதேச சமூகம் முயற்சித்து வரும் நிலையில் அதனை முறியடிக்கும் வகையில் இத்தகைய தாக்குதலை சிறிலங்கா இராணுவம் நடத்தி வருகிறது. கடற்சமருக்குப் பின்னர் இத்தாக்குதல் தீவிரமடைந்துள்ளது என்றார் இளந்திரையன்.

இதனிடையே கிரீன் ஓசென் என்ற 300 இராணுவத்தினருடன் சென்ற கப்பலுக்கு பாதுகாப்பாகச் சென்ற டோராக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக சிறிலங்கா கடற்படையினர் தெரிவித்துள்ளனர். ஆனால் இதனை இளந்திரையன் மறுத்துள்ளனர். மேலும் தமிழீழ விடுதலைப் புலிகளின் 7 படகுகள் மூழ்கடிக்கப்பட்டதாக சிறிலங்கா கடற்படையின் தெரிவித்துள்ளதையும் இளந்திரையன் மறுத்துள்ளார்.

"கடற்புலிகளின் துணை கட்டளைத் தளபதி செழியன் கட்டளைக்கிணங்க கைப்பற்றப்பட்ட ஆயுதங்களுடனும் சிறிலங்கா கடற்படை மாலுமியின் உடலுடனும் அனைத்து கடற்புலிகளின் படகுகளும் பாதுகாப்பாக தளத்துக்குத் திரும்பிவிட்டன" என்று கடற்புலிகளின் சிறப்புத் தளபதி கேணல் சூசை தெரிவித்துள்ளார்.

http://www.eelampage.com/?cn=29667

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மீண்டும் ஒரு மிக்க மகிழ்ச்சியான செய்தி..

கடலிலே வீரமரணம் எய்திய அந்த வீரர்களை நினைத்துப்பார்க்கின்றேன்.

எனது சிரம் தாழ்த்தி அந்த வீரர்களுக்கு "வீரவணக்கங்கள்"

நல்ல செய்திதான்...

ஆனால் செய்தியை சொன்ன முறையில ஏதாவது குற்றம் இருக்குதோ தெரிய இல்லை...! ஆராவது அறிஞர்கள் சொன்னால் பறவாய் இல்லை...!

யாரும் என்ன என்றாலும் சொல்லட்டும் தலை ஆனா ஒவரு முறையும் 8 படகு 12 என்று கதை விட்டவை இந்த முறையும் 8 போட்டுதாம் என்று சொன்னவை கடைசியில் 25 பேர் பலியாம் 4 பேர் உயிரோடு வேற

ஆயுதம் கொடுத்தவனுக்கு சாட்டை அடி போல இருக்கும் :P

யாரும் என்ன என்றாலும் சொல்லட்டும் தலை ஆனா ஒவரு முறையும் 8 படகு 12 என்று கதை விட்டவை இந்த முறையும் 8 போட்டுதாம் என்று சொன்னவை கடைசியில் 25 பேர் பலியாம் 4 பேர் உயிரோடு வேற

ஆயுதம் கொடுத்தவனுக்கு சாட்டை அடி போல இருக்கும் :P

இது ஆரம்பம்தானே முடிவு இல்லை...! இன்னும் விழும் இனியும் விழும்...!

நல்ல செய்திதான்...

ஆனால் செய்தியை சொன்ன முறையில ஏதாவது குற்றம் இருக்குதோ தெரிய இல்லை...! ஆராவது அறிஞர்கள் சொன்னால் பறவாய் இல்லை...!

தலக்கு என்ன பிரச்சினை? சும்மா எழுதுங்கோப்பா?

கன நாளாக் காணன்? சும்மா சில்லறைப் பிரச்சினைகளை பெரிசாக்கிக் கொண்டு. :wink: :lol::lol:

பி.பி.சி யில் ரம்புக்வல சொல்லுறார் பயணிகள் கப்பலை தாக்கவந்தனராம் புலிகள் இதில் 26 படகுகளும் 5 கரும்புலி படகுமாம் தாக்குதலில் 22 படகு முழ்கடித்திட்டாராம் ஆனால் தங்கட சேதவிபரம் தெரியாதாம் பய்னிகள் கப்பலை பாதுகாப்பாக நக்ர்த்திவிட்டாராம் இப்போது அது எங்கே இருக்குது எண்டு பாதுகாப்பு காரணத்துக்காக சொல்லமுடியாதாம் எவ்வளவு காலத்துக்கு சிங்களச்சனத்தையும் சர்வதேசத்டையும் எம்மத்துவார் இந்த ஜோனி வோக்கர் அடிமை

பி.பி.சி யில் ரம்புக்வல சொல்லுறார் பயணிகள் கப்பலை தாக்கவந்தனராம் புலிகள் இதில் 26 படகுகளும் 5 கரும்புலி படகுமாம் தாக்குதலில் 22 படகு முழ்கடித்திட்டாராம் ஆனால் தங்கட சேதவிபரம் தெரியாதாம் பய்னிகள் கப்பலை பாதுகாப்பாக நக்ர்த்திவிட்டாராம் இப்போது அது எங்கே இருக்குது எண்டு பாதுகாப்பு காரணத்துக்காக சொல்லமுடியாதாம் எவ்வளவு காலத்துக்கு சிங்களச்சனத்தையும் சர்வதேசத்டையும் எம்மத்துவார் இந்த ஜோனி வோக்கர் அடிமை

ஜோனி வோக்கர் இருக்குமட்டும் ஏமாத்துவார். அல்லது இவர் உச்சிக்கு ஏதாவது புூசினால் இப்புளிச்சல் கதை குறையும்..............

ரம்புக்வெல இத்தொழிலை விட்டுவிட்டு சினிமாத்துறையில் இறங்கினால் சிறப்பாக வரலாம் சிறந்த கற்பனை திறமையான கதை..........கொயம்பசை (கிட்லரின் இராணுவப் பேச்சாளர்) மிஞ்சி விட்டார் விழுங்கி விட்டார்............................................. :lol:

  • கருத்துக்கள உறவுகள்

பி-461 டோராவிலிருந்து கைது செய்யப்பட்டோர்:

கமல் கேமந்த குமரசிறி (வயது 26), (XS 29966), பதவி பராக்கிரமபுர, அனுராதபுரம்.

சமிந்த குமார ஹேவக (வயது 28), (XS 25749), பெலியகந்த, கலேவல

இயந்திரப் பொறியிலாளரான இந்திக பிரசாந்த பிட்டியகுகுபுர (வயது 30), கடற்படை பதிவிலக்கம் EE17275), 37C, கிரிந்திவெ, பூண்டுலவோயா, நுவரெலியா.

பி-416 டோராவிலிருந்து அனில் பிரியங்க மடத்தெனிய (வயது 21), (SS38801), நாலந்த, மாத்தறை - கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட சிறிலங்கா கடற்படையினரை கிளிநொச்சியில் சந்திக்க வியாழக்கிழமை இரவு ஊடகவியலாளர்களுக்கு அனுமதிக்கப்பட்டது.

-புதினம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

துவங்கீட்டாங்கையா துவங்கீட்டாங்க

  • கருத்துக்கள உறவுகள்

சிறிலங்கா அரச இணையத்தில் ,திருகோணமலையில் இலங்கைநேரப்படி, வெள்ளி 5.30க்கு தாக்குதல் நடந்ததாக வந்திருக்கின்றது. இரண்டு தற்கொலைப்படகுகளை மூழ்கடித்திருப்பதாக சிறிலங்கா அரசு கூறுகின்றது. ஆனால் மேலதிக தகவல் வரவில்லை என்கின்றது.

ஆனால் இது கரும்புலிதாக்குதல்லில்லை என இளந்திரயன் கூறுகிறாரே

தற்கொலைத் தாக்குதல என்டா படகு மூழ்கும் தானே. அவையின்ட பொய் இப்ப கடலுக்குள்ள மூழ்கிக் கொண்டு இருக்குது. பதிவுல ஒளிப்படமா தமிழ் நெட்டில நிழல்படமா பெயர் முகவரி இலக்த்தோட எல்லாமே விலாவாரிய போட்டிருக்கினம். ஒன்டு ரெண்டில்ல 22 படகுகளை மூழ்கடிச்சிட்டினமாம். கெட்டிக்காரர்தான். ஆனா நம்பத்தான்ஆளில்ல. பொய் சொல்லுரதுக் கெண்டே சம்பளம் குடுத்து வைச்சிருக்கு.

மரணித்த மாவீரரே உமக்கெம் வீர வணக்கங்கள்

ஈழத்திலிருந்து

ஜானா

  • கருத்துக்கள உறவுகள்

இல்லை. நான் சொன்ன தகவல் திருமலைத் தாக்குதல் பற்றியது. இன்று இலங்கைநேரம் அதிகாலை நடந்ததாகச் சொல்லப்பட்ட தகவலே அது. அதைப் பற்றி கந்தப்பு புதுத் தலைப்பில் போட்டிருக்கார்.

09_11_06_sea_01_58204_435.jpg

09_11_06_sea_02_58208_435.jpg

09_11_06_sea_03_58212_435.jpg

09_11_06_sea_04_58216_435.jpg

பொட்டு அண்ணா சொன்னது நடக்குது போல வீண் இழப்புகளை சந்திக்காமல் தாகுதல் நடத்த உதவி தேவை என ஒருக்கா சொன்னவரில்லையா

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.