Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

”இலங்கையில் இனி ஆயுதப் போராட்டம் சாத்தியமே இல்லை!” - ஷோபா சக்தி

Featured Replies

 'கொரில்லா’வில் தொடங்கி 'கண்டி வீரன்’ வரையிலும் தமிழ் இலக்கியப் பரப்பின் தனித்துவக் குரல். விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இயங்கி, பின்னர் அதில் இருந்து விலகி, புலிகளை இப்போதுவரை  கடுமையாக விமர்சித்து வருபவர். சமகாலத்தின் சிறந்தகதைசொல்லிகளில் ஒருவரான ஷோபா சக்தி, இப்போது கதாநாயகன். 'தீபன்’ என்ற பிரெஞ்சு திரைப்படம் ஒன்றில் நடிக்கிறார். பாரீஸில் இருந்து ராமேஸ்வரத்தில் கடைசிக்கட்டப் படப்பிடிப்புக்காக வந்திருந்தவரிடம் பேசினோம்...

p44a.jpg

 ''பிரான்ஸில் புகழ்பெற்ற இயக்குநர் ஜாக் ஓடியார் இப்போது இயக்கும் படம் 'தீபன்’. ஈழத்தின் யுத்தச் சூழலில் இருந்து தப்பித்து புலம்பெயர்ந்து பிரான்ஸுக்கு வரக்கூடிய மூன்று பேரைப் பற்றியது. அகதியாக வந்து புது நாட்டில் புதுச் சூழலில் எப்படி வாழ்கிறார்கள், அதற்காக எப்படிப் போராடுகிறார்கள் என்பது கதை. அதில்தான் நான் நடித்திருக்கிறேன். திடீரெனக் கூப்பிட்டார்கள். திரைக்கதையில் வேலைபார்க்க அழைக்கிறார்கள் என நினைத்துதான் போனேன். ஆனால், நடிக்கச் சொல்லிக்கேட்டு, நான் நடித்து, படமே முடிந்துவிட்டது.''

''நடிப்பை எப்படிச் சமாளித்தீர்கள்?''

'நான் குழந்தைப் போராளி மட்டும் இல்லை; குழந்தை நடிகனும்கூட. பத்து வயதில் இருந்தே கூத்துகளில் நடித்திருக்கிறேன். பிரான்ஸுக்குச் சென்ற பிறகு நாடகங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்தப் படத்தில் நடிப்பதற்காக, ஒருவரை நியமித்து நடிக்கப் பயிற்சி கொடுத்தார்கள். முதல் தடவையாக வாழ்க்கையில் பிடித்த வேலையை, சம்பளம் வாங்கிக்கொண்டு செய்கிறேன்.''

''இது என்ன எழுத்தாளர்கள் சினிமாவுக்குள் நுழையும் காலமா?''

p44b.jpg'இலக்கியவாதிகள் சினிமாவுக்குச் செல்லும்போது சினிமாவை ஓர் அங்குலமேனும் முன்னே நகர்த்த வேண்டும். ஆனால், இலக்கியத்தில் அவ்வளவு தரத்தைப் பார்க்கும் நமது எழுத்தாளர்கள், சினிமாவில் அனைத்து சமரசங்களுக்கும் ஆட்பட்டு, மலினமான திரைப்படங்களில் பணிபுரிகிறார்கள். வாயைத் திறந்தால் 'ரஜினி சார்’, 'மிஷ்கின் சார்’ என வணிக சினிமாக்காரர்களாக மாறிவிடுகிறார்கள். என்னைப் பொறுத்தவரை எந்தவிதமான வணிக சமரசத்துக்கும் ஆட்படாத படங்களில் மட்டும்தான் வேலைபார்ப்பேன். இந்த அடிப்படையில் இதுவே என் கடைசிப் படமாகவும் இருக்கக்கூடும்.''

''தமிழீழப் போராட்டம் இனி என்ன ஆகும்?''

''இலங்கையில் இனி ஆயுதப் போராட்டம் சாத்தியமே இல்லை. ஆயுதப் போராட்டங்கள் உருவான காலகட்டம் வேறு. இன்று தலைமுறைகள் மாறிவிட்டன. நாம் 80-களில் சிந்தித்ததுபோல இப்போதைய தலைமுறையினர் சிந்திப்பது இல்லை. உலகம் முழுக்க இருந்த புரட்சிகரச் சூழல், தேசிய விடுதலைப் போராட்டங்கள், மார்க்ஸியச் சூழல்கள் இன்றைக்கு இல்லை. இலங்கையில் மட்டும் அல்ல... உலகம் முழுவதுமே இதுதான் நிலை.

சமீபத்தில் இலங்கையில் அதிபர் தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. மகிந்தா ராஜபக்‌ஷே தோற்கடிக்கப்பட்டு, மைத்ரிபால சிறிசேன வெற்றிபெற்றுள்ளார். இதற்கு முந்தைய தேர்தல்களில் தமிழ் மக்களின் வாக்களிக்கும் உரிமையின் மீது செல்வாக்கு செலுத்தும் சக்திகளாக விடுதலைப் புலிகள் இருந்தனர். ஆனால், இந்த முறை ராஜபக்ஷேவைத் தோற்கடிக்க வேண்டும் என்ற சுயமுடிவை எடுத்து தமிழ் மக்கள் வாக்களித்தனர். இப்போது மக்களின் மனநிலை, நாம் நினைத்தது நடந்துவிட்டது என்பதுதான். தங்களின் செல்வாக்கு வரம்புக்கு உட்பட்டு ராஜபக்ஷேவைத் தோற்கடித்ததன் மூலம், மனதில் இருந்த கோபத்தின் சிறுபகுதியைத் தணித்துக்கொண்டார்கள். ஆனால், மைத்ரிபால சிறிசேன வெற்றிபெற்றதன் மூலம் தமிழர்களுக்கு எந்த நன்மையும் நடந்துவிடப்போவது இல்லை. சில தமிழர்களுக்கு அதிகாரத்தைச் சுவைக்கக் கொடுப்பதாலேயே, தமிழ் மக்களுக்கு நீதி கிடைத்துவிடாது.'

''மக்கள் போராட்ட இயக்கங்களின் செயல்பாட்டுக்குக்கூட இனி சாத்தியம் இல்லையா?''

p44c.jpg

'அத்தகைய மக்கள் போராட்ட இயக்கத்தைக் கட்ட, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு லாயக்கு இல்லை; அவர்களிடம் அப்படி ஒரு நோக்கமே இல்லை. கூட்டமைப்பினர், இந்த நாடாளுமன்ற அமைப்பு முறைக்குள் பதவிகளைப் பெற்று அதிகாரத்தைச் சுவைப்போரின் அங்கமாகவே மாறிவிட்டனர். ஆனால், இந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைத்தான் காலம், காலமாக மக்கள் ஆதரித்தும் வந்துள்ளனர். ஒருவகையில் பார்த்தால் விடுதலைப் புலிகள், ஈ.பி.ஆர்.எல்.எஃப், ப்ளாட் போன்ற ஆயுதம் தாங்கிய இயக்கங்களைவிட, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பரவாயில்லை. அவர்கள் யாரையும் கொலை செய்யவில்லை. இந்த இயக்கங்கள் இவ்வளவு உயிர்களைக் கொடுத்து, இவ்வளவு மக்களைப் பலிகொடுத்து சாதித்தது என்ன? கொழும்பில் இருந்த ராணுவத்தை இழுத்துக்கொண்டுவந்து அல்லைப்பிட்டியில் விட்டதுதான் மிச்சம்.

இலங்கையில் தமிழர் தரப்பிலும் சிங்களர் தரப்பிலும் சேர்த்து இதுவரை மூன்று மிகப் பெரிய ஆயுதப் போராட்டங்கள் நடந்துள்ளன. மூன்றிலுமே ஆயுதம் தூக்கியவர்கள், மக்களுக்கு எதிராகத்தான் மாறினார்கள். அதனால் மக்களுக்கு ஆயுதப் போராட்டங்கள் மீது என்றென்றைக்கும் மறக்கவியலாத கசப்பான நினைவுகள்தான் மிஞ்சியிருக்கின்றன. நாம் விளைவுகளை வைத்துதான் ஒவ்வொன்றையும் மதிப்பிட வேண்டியுள்ளது. அப்படிப் பார்த்தால் ஆயுதப் போராட்டத்தைவிட தேர்தல் அரசியல் சிறந்தது.

நாங்கள் தப்பித்துவிட்டோம். ஆனால், யுத்தத்திலும் அதற்குப் பிறகும் அங்கு சிக்கிக்கொண்டிருக்கும் மக்களின் நிலைமை என்ன? பிள்ளைகள் பள்ளிக்கூடம் போக வேண்டும், மக்கள் வேலைக்குப் போக வேண்டும், சாப்பிட வேண்டும், உயிர் பயம் இல்லாமல் நிம்மதியாக வாழ வேண்டும்... இதற்கு, சுமுகமான சமூக வாழ்க்கை வேண்டும். இதைத்தான் மக்கள் விரும்புகின்றனர். உலகத்திலேயே மிகக் கடுமையான ஆயுதப் போராட்டத்தை நடத்திப் பார்த்துவிட்டுத்தான், இந்த மனநிலைக்கு மக்கள் வந்துள்ளனர்.

முள்ளிவாய்க்காலில் கடும் சண்டை நடந்துகொண்டிருந்தபோது குரோஷியா அதிபர் சொன்னதை இங்கு நினைவுகூர்கிறேன்... 'பத்து நாட்கள் சண்டை நடத்தி தீர்வு காண்பதைவிட, பத்து ஆண்டுகள் பேச்சுவார்த்தை நடத்தலாம்’. அதை நான் வழிமொழிகிறேன்.''

''சரி... இப்போதைய நிலையில் என்னதான் தீர்வு?''

''பிரச்னை என ஒன்று இருந்தால் அதற்கு தீர்வும் இருக்க வேண்டும் என எதிர்பார்க்கக் கூடாது. இலங்கையில் பிரச்னை மட்டும்தான் இருக்கிறது.''

''இது யதார்த்தம். ஆனால், தீர்வு என்னவாக இருக்க முடியும் எனக் கருதுகிறீர்கள்?''

''நமக்கு அறம் சார்ந்து ஆயிரம் எதிர்பார்ப்புகள் இருக்கலாம். ஆனால், எதையும் யதார்த்தத்தில் இருந்து பரிசீலிக்க வேண்டும். என்னளவில் இலங்கை - இந்தியா ஒப்பந்தத்தை முழுமையாக அமல்படுத்த வேண்டும் என்கிறேன். இப்போது அமலில் உள்ள மாகாண சபை என்பது, அந்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதிதான். கிழக்கில் ஒரு தேர்தல் நடத்தி வடக்குடன் இணைந்திருப்பதா, தனித்திருப்பதா என்பதை முடிவுசெய்ய வேண்டும். இதற்கு அப்பால் ஜனநாயகத்துக்கும் நீதிக்குமான போராட்ட இயக்கங்கள் கட்டப்படத்தான் வேண்டும். அதற்கு முன்பு, மக்கள், ஆயுதப் போராட்டக் கலாசாரத்தில் இருந்து முற்றிலுமாக விடுபட வேண்டும். 'பிரச்னை என்றால் போட்டுத் தள்ளுவோம்’ என்ற மனநிலையில் இருந்து, 'பேச்சுவார்த்தைக்கு அழைப்போம்’ என்ற மனநிலைக்கு வர வேண்டும். தமிழர், சிங்களர் இரு தரப்பிலும் உள்ள ஜனநாயக சக்திகள் ஐக்கியப்படுவதன் வழியே, ஒரு நீண்ட காலத் தீர்வை நோக்கி நகர முடியும். அதற்கு, சிங்களப் பேரினவாதமும், கடும்போக்குத் தமிழ்த் தேசியவாதமும் கைவிடப்பட வேண்டும்.''

''நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் பற்றிய உங்கள் கருத்து என்ன?''

''அது ஒரு காமெடி. சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்குத் தண்டனை வழங்கப்பட்டதும், 'செல்வி ஜெயலலிதா, பதவியை இழந்து சிறையில் அடைக்கப்பட்ட நிகழ்வு தமிழீழ மக்களுக்கு மிகுந்த மனவேதனையைத் தருகிறது’ என நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் உருத்திரகுமாரன் அறிக்கை வெளியிட்டார். தமிழ் சினிமாக்காரர்கள், 'தெய்வத்துக்கே தண்டனையா?’ என ஃப்ளெக்ஸ் வைத்ததற்கும் இதற்கும் பெரிய வேறுபாடு இல்லை. நடந்து முடிந்த இலங்கை அதிபர் தேர்தலில், தமிழ் மக்கள் என்ன நிலைப்பாடு எடுக்க வேண்டும் என்றுகூட அவர் சொல்லவில்லை. 'ஸ்கைப்’பில் அமைச்சரவை நடத்திக்கொண்டிருக்கும் அவர்களால் மக்களுக்கு எந்தப் பிரயோஜனமும் இல்லை.''

p44d.jpg

''தமிழக அகதிகள் முகாம்களில் இருப்போர் மறுபடியும் இலங்கைக்கு அனுப்பப்படுவதைப் பற்றிய பேச்சுக்கள் இப்போது மேல் எழுந்துள்ளனவே?''

''லட்சக்கணக்கான தமிழ் மக்கள், முகாம்களில் வாழ்கிறார்கள். 30 வருடங்களுக்கு முன்பு இங்கு வந்தவர்களின் குடும்பங்களில் இங்கேயே பிறந்து வளர்ந்த ஒரு தலைமுறை உருவாகியிருக்கிறது. அவர்களுக்கு இதுதான் சொந்த நாடு. அவர்களை எப்படிக் கட்டாயப்படுத்தி வெளியேற்ற முடியும்? அப்படி அனுப்பினால் கிட்டத்தட்ட அது ஸ்ரீமாவோ-சாஸ்திரி ஒப்பந்தம்போல, தமிழ்நாட்டில் இருந்து சென்று இலங்கை மலையகப் பகுதிகளைச் செப்பனிட்டு தேயிலை, காபி தோட்டங்களாக மாற்றியவர்களை மறுபடியும் அள்ளிக்கொண்டுவந்து தமிழகத்தில் தள்ளியதைப்போலதான் இருக்கும். அப்போது இலங்கையில் இருந்து தமிழகம் வந்த மக்களை மலையகத்தில் இருந்து அழைத்து வந்த ரயிலுக்கு 'அழுகை கோச்’ எனப் பெயர். அந்த அளவுக்கு மக்கள் அந்த மண்ணோடு ஒன்றிப்போய் இருந்தார்கள். அதே போன்ற நிலைமைதான் இங்கும். மீண்டும் இலங்கைக்குச் செல்லும் வாய்ப்பைப் பயன்படுத்துவதும் நிராகரிப்பதும் மக்களின் விருப்பம். பல ஐரோப்பிய நாடுகளில் ஐந்து ஆண்டுகள் வாழ்ந்தாலே, குடியுரிமை கொடுத்துவிடுகிறார்கள்!''

http://www.vikatan.com/article.php?module=magazine&aid=103785

  • கருத்துக்கள உறவுகள்

சாத்தான் வேதம் ஓதுது. சில தமிழக சஞ்சிகைகளுக்கு வேற வேலையில்ல. பிரதிவிற்பனைக்காக.. செல்லாக்காசுகளை வெள்ளிக்காசாக்கி காட்டிவிட்டால்.. பின்னாடி வியாபாரம் படுக்கும் போது உபயோகிக்கலாம் என்று கருதிச் செயற்படுகிறார்கள் என்றே எண்ணத் தோன்றுகிறது.

சிறிலங்காவுக்கு மல்ரி பரல் உட்பட ஆயுதங்களை.. விமானிகளை அள்ளி வழங்கிய உக்கிரைனில் நடந்து கொண்டிருப்பது என்னவாம்..??! புதிய தலைமுறை இல்லாமல்.. இவரைப் போல கிழட்டு தலைமுறையா போராடிக்கிட்டு இருக்குது.

சர்வதேசச் சூழல்கள் மாறும் போது எதுவும் சாத்தியமே. ஆனால்.. எமது மக்கள் போதிய அளவுக்கு ஆயுதப் போராட்டத்தின் விளைவுகளை தாங்கிவிட்டார்கள். ஆயுதப் போராட்டத்தை முன்னெடுத்த மக்களை விட அதனால் அகதி அந்தஸ்து.. வெளிநாட்டு வாழ்கை பார்த்தோரே அதிகம். அந்த வகையில் எம்மவருக்கு ஆயுதப் போராட்டம்.. இத்தோடு போதும். அதனை கொண்டு நடத்தக் கூடிய தலைமையும் எனி இல்லை.

அந்த வகையில்.. இப்படியான.. ஒன்றிரண்டு.. பேர் தங்களின் வியாபாரத்துக்கு பேசிக் கொள்வது மட்டுமே மக்களின் குரலாக சில ஊடகங்களால்.. இனங்காட்டப்படும். ஏனெனில் அதில் அவர்களுக்கு நீண்ட கால ஆதாயத்துக்கு வழி பிறக்கலாம்.. என்ற நினைப்பு. அவ்வளவே. :icon_idea::)

  • கருத்துக்கள உறவுகள்

”இலங்கையில் இனி ஆயுதப் போராட்டம் சாத்தியமே இல்லை!” - ஷோபா சக்தி

ஒருக்கா 

வெளியில் உள்ளவர்களுக்கு  இதைப்பற்றி பேச அருகதையில்லை என்பார்

அவர்கள் பார்த்துக்கொள்வார்கள் என்பார்

அவரே கூட்டமைப்பு முதுகெலும்பில்லாதது  என்பார்

ஆனால் அவரே வெளிநாட்டில்தான் குப்பை கொட்டுகிறார்....

  • கருத்துக்கள உறவுகள்
''பிரச்னை என ஒன்று இருந்தால் அதற்கு தீர்வும் இருக்க வேண்டும் என எதிர்பார்க்கக் கூடாது. இலங்கையில் பிரச்னை மட்டும்தான் இருக்கிறது.''

இது குழந்தை நடிகரின் கருத்து. கவலை கொள்ளத்தேவை இல்லை. :)  புத்தகங்கள் எழுதி விற்க சிறந்த காலம் என இவர் போன்றவர்கள் நன்கே அறிந்து வைத்துள்ளார்கள்.
 
கூட்டமைப்பு, தமிழகத்தில் உள்ள அகதிகள் சார்பான இவரின் கருத்து  எனக்கு சரியாக படுகிறது. ஏதோ பிரச்சனைக்கான தீர்வு கண்டது போல் அகதிகளை அனுப்ப அவசரம் காட்டுபவர்கள் தங்கள் சுயநலம் சார்ந்தே செயற்படுவார்கள்.

தமிழர்களில் தீர்க்கதரிசிகள் வலு குறைவு .வெறும் கனவு காண்போர் தான் அதிகம் .

தீர்க்கதரிசிகள் சொல்வது கனவு காண்பவர்களுக்கு அபத்தமாக இருப்பதில் வியப்பில்லை . 

அண்ணைக்கு அவர் எழுதுவதுதான் விளங்குவதில்லை என்று பார்த்தால் பேட்டியும் விளங்கவில்லை . :icon_mrgreen:

Jacques Audiard.இவர் பிரபல பிரெஞ்சு இயக்குனர் ஆச்சே ? இவர் படத்திலா சோபா சக்தி நடிக்கின்றார் .  :o     : (19 February 2015 - 10:13 AM)A Prophet. இவரது இந்த படம் ஒஸ்காருக்கு நியமனம் பெற்றது .

இப்படி ஒரு இயக்குனர் பிரான்சில் இருப்பதாவது தெரியுமா ?

உலகம் லா-சப்பல் இல்லை அண்ணை .

தன் இனத்தை  காட்டிக்கொடுத்து பிழைப்பு நடாத்துபவர்களை கவனிப்பதே இல்லை அண்ணை

லா சப்பலில் நல்ல விடயங்கள் கனக்க இருக்கு...

popularly known as 'Powerstar' 

இவரு எங்க போய் நடிச்சா எமக்கென்ன??

தன் இனத்தை  காட்டிக்கொடுத்து பிழைப்பு நடாத்துபவர்களை கவனிப்பதே இல்லை அண்ணை

லா சப்பலில் நல்ல விடயங்கள் கனக்க இருக்கு...

popularly known as 'Powerstar' 

இவரு எங்க போய் நடிச்சா எமக்கென்ன??

நீங்கள் கவனிக்காதபடியால் இனி அந்த படம் ஓடாது  :icon_mrgreen: .

சிலவேளை லா-சப்பலில் அவரின் படத்தை தடை செய்ய சொல்லி ஊர்வலம் போன்ற நல்ல ? அலுவல்கள் செய்வீர்கள் . .

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் கவனிக்காதபடியால் இனி அந்த படம் ஓடாது  :icon_mrgreen: .

சிலவேளை லா-சப்பலில் அவரின் படத்தை தடை செய்ய சொல்லி ஊர்வலம் போன்ற நல்ல ? அலுவல்கள் செய்வீர்கள் . .

சீ

கண்டா விலகிப்போறம்...

அவ்வளவு......?

வேண்டாம் :lol:

  • கருத்துக்கள உறவுகள்
உலக விஞ்ஞானி வந்திட்டார்....
வெள்ளித்திரையில் உலகம் காட்ட.
 
கற்பனை கதை எழுதுறவருக்கு எதுக்கு நாட்டு அரசியல் கருத்து?
இவர் என்ன அரசியல் செய்தவரா ?
அல்லது எங்கேனும் பள்ளிக்கூடம் போய் அரசியல் படித்தவரா ?
 
இலக்கியம் படிக்கிறோம் என்று சினிமா காட்டும் சிலரை தவிர இந்த ---------- யாருக்கும் தெரியாது.
இலவச விளம்பரங்களுக்கு மாரி  தவக்கை மாதிரி கத்திகொண்டு இருக்கும்
இதையெல்லாம் யார் கண்டுகிறான்?
 
நாளையே ஒரு தமிழ் இளைஞன் பொறுமை இழந்து சிங்கள போலிசின் துவக்கை பறித்து போலிசை சுட்டால் ....?
ஆயுத போராட்டம் அங்கிருந்து தொடங்கலாம்.
இவர் என்ன தமிழர்களின் கடவுளா? அப்படி ஏதும் நடக்க முடியாது என்று கூற ......
 
செய்யுறது அடுத்த பெண்களின் சேலை இழுப்பது 
அநாகரீகம் கெட்ட இதுகளை 
அநாகாரீகம் கெட்டதுகள்தான் தூக்கி கொண்டு திரியும்...
பன்றிதான் மலத்தை தேடும்.
 
உண்மையான சமூக அக்கறை உடையவன் சேட்டை பிடித்து நாலு கேள்விதான் கேட்பான்.
ஊர் சுவரில் தூஷணம் எழுதுபவனும்தான் எதோ எழுதிக்கொண்டு திரிகிறான் ..
அவனுக்கும் சில ரசிகர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.
 
சமூகம் குப்பை தொட்டி ஒன்றை எப்போதும் தன்னோடு வைத்திருப்பது ....
இதுகளை வீசி விட்டு நகர்ந்து செல்லத்தான். 

Edited by நிழலி
வசைச் சொல்

  • கருத்துக்கள உறவுகள்

உலக விஞ்ஞானி வந்திட்டார்....

வெள்ளித்திரையில் உலகம் காட்ட.

கற்பனை கதை எழுதுறவருக்கு எதுக்கு நாட்டு அரசியல் கருத்து?

இவர் என்ன அரசியல் செய்தவரா ?

அல்லது எங்கேனும் பள்ளிக்கூடம் போய் அரசியல் படித்தவரா ?

இலக்கியம் படிக்கிறோம் என்று சினிமா காட்டும் சிலரை தவிர இந்த ******* யாருக்கும் தெரியாது.

இலவச விளம்பரங்களுக்கு மாரி தவக்கை மாதிரி கத்திகொண்டு இருக்கும்

இதையெல்லாம் யார் கண்டுகிறான்?

நாளையே ஒரு தமிழ் இளைஞன் பொறுமை இழந்து சிங்கள போலிசின் துவக்கை பறித்து போலிசை சுட்டால் ....?

ஆயுத போராட்டம் அங்கிருந்து தொடங்கலாம்.

இவர் என்ன தமிழர்களின் கடவுளா? அப்படி ஏதும் நடக்க முடியாது என்று கூற ......

செய்யுறது அடுத்த பெண்களின் சேலை இழுப்பது

அநாகரீகம் கெட்ட இதுகளை

அநாகாரீகம் கெட்டதுகள்தான் தூக்கி கொண்டு திரியும்...

பன்றிதான் மலத்தை தேடும்.

உண்மையான சமூக அக்கறை உடையவன் சேட்டை பிடித்து நாலு கேள்விதான் கேட்பான்.

ஊர் சுவரில் தூஷணம் எழுதுபவனும்தான் எதோ எழுதிக்கொண்டு திரிகிறான் ..

அவனுக்கும் சில ரசிகர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.

சமூகம் குப்பை தொட்டி ஒன்றை எப்போதும் தன்னோடு வைத்திருப்பது ....

இதுகளை வீசி விட்டு நகர்ந்து செல்லத்தான்.

நீங்க வேற..

இப்ப அவர் வெள்ளையோட சேர்ந்து நடிக்கிறார் என்றால்

சிலருக்கு துள்ளாதா...?

எங்களுக்கு வெள்ளை சொன்னால் வேதவாக்காச்சே...

இன்னொரு குறும் செய்தி

இனி சேலை இழுப்பு நடக்காது...

அப்பாடா

தப்பித்தது தமிழ்......

Edited by நியானி

  • கருத்துக்கள உறவுகள்
அப்ப இனி இவர் என்ன பிரஞ்சு இலக்கியவாதியும் ஆகிவிடுவார்போல ..............
என்ன பிரஞ்சுகாரருக்குதான் தெரியாது இருக்கும். 
தமிழருக்கு தெரியாது இருப்பதுபோல. 

புலம் பெயர்ந்தும் பங்கருக்குள் இருந்துகொண்டு குலைக்க எம்மவரை விட்டால் ஆட்களில்லை .

சோபா சக்தி சென்றவிட்ட உயரம்  நீங்கள் எவரும் கனவிலும் நினைத்து பார்க்க முடியாது .அரசியலில் மாற்று கருத்து இருந்தாலும் "மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கு  மணம் உண்டு " என்ற பக்குவம் வேண்டும் .

அதுவுமில்லை வெறும் காழ்ப்பு மட்டும் விரக்க்தியின் உச்சியில் இப்போ எஞ்சி இருப்பதைத்தான் பலரில் இப்போ காண்கின்றோம் .

அண்ணை மீண்டும்  மீண்டும்

அவர் எங்க இருந்தாலென்ன?

எங்கள் மனதில் இல்லை...

ஒரு தாய் வயிற்றில் பிறந்தாலும்

தாயை வீற்பவன் தள்ளித்தான்....

இப்படி நாலு வசனத்தை வைத்து முப்பது வருடங்கள் பிழைப்பை ஓட்டிய எத்தனை பேரை நாம் அறிவோம் .

அரைவாசி அழிந்ததே உந்த வார்த்தை ஜாலங்களாலும் சித்து விளையாட்டுக்களாலும் தானே .

உங்களுக்கு பரிதியும் பாம்பு கூட்டமும் தான் உலகம் அண்ணை .

பிரான்சே மிகவும் மதிக்கும் ஒரு இயக்குனர் படத்தில் அவர் இப்போ நடிக்கின்றார்.(உங்களுக்கு அவர் பெயரே தெரிந்திருக்காது ) நீங்கள் தள்ளி வைத்து என்ன ஆகப்போகிறது  அவருக்கு .

ஆழ்ந்த அனுதாபங்கள் . :(

மிகவும் தப்பான

மட்டமான கணிப்பு...

என்னைக்கடிப்பதிலேயே  உங்கள் பொழுது போகுதென்றால்

ஒரு படி மேலதான் நான் நிற்கிறன்

அதை யாழ் அறியும்..

அது சரி

தன்னை வைத்துத்தானே மற்றவரை மதிப்பிடமுடியும்...

நடத்துங்கோ

ஆனால் விசுகுவின் தலைமுடியைக்கூட

உங்களால  ஒன்றும் பண்ணமுடியாது.......... :(  :(  :(

A Common Man படத்தின் தொடக்கத்திலேயே, 1996 ம் ஆண்டு, கொழும்பு நகர மத்தியில் புலிகள் நடத்திய தற்கொலைக் குண்டுத் தாக்குதலான, மத்திய வங்கி குண்டு வெடிப்பை காட்டுகிறார்கள். உன்னைப்போல் ஒருவன் கமல் மாதிரி, "காமன் மேன்" ஆக வரும் பென் கிங்ஸ்லி, படத்தின் இறுதிக் கட்டத்தில், தென்னிலங்கையில் புலிகள் நடத்திய முக்கியமான குண்டுவெடிப்பு சம்பவங்களை பட்டியலிடுவார்.

அமெரிக்க நடிகரான Ben Kingsley யும், பிரிட்டிஷ் நடிகரான Ben Cross உம் பிரதானமான பாத்திரங்களில் நடித்துள்ளார்கள். அவர்களைத் தவிர ஏனையோர் இலங்கை நடிகர்கள். சிறிலங்கா பொலிஸ், சிறிலங்கா இராணுவம் படத் தயாரிப்புக்கு ஒத்துழைப்பு வழங்கியுள்ளன. அமெரிக்க, இலங்கை கூட்டுத் தயாரிப்பு என்று சொல்லப் பட்டாலும், இந்தியக் கலைஞர்களும் படத் தயாரிப்பில் பங்களித்துள்ளார்கள்.

சிறிலங்கா அரசின் புலி எதிர்ப்புக் கருத்துக்களை சர்வதேசியமயப் படுத்தி இருக்கும், A Common Man திரைப்படத்திற்கு இன்று வரையில் யாரும் எதிர்ப்புத் தெரிவிக்காதது ஆச்சரியத்திற்குரியது. சென்னையில் சிறிலங்கா அரசை விமர்சிக்கும் பிரசன்ன விதானகேயின் சிங்களத் திரைப்படம் காண்பிக்கப் பட்ட நேரம், அதை "நுணுக்கமான இனப்படுகொலை" என்று சிலர் உளறிக் கொண்டு திரிந்தனர்.

ஹிந்தி, சிங்கள மொழிகளில் கூட, புலிகளை கொச்சைப் படுத்தும் சினிமா வரக்கூடாது என்று தடுக்கும் போலித் தமிழ் தேசியவாதிகளுக்கு, இந்த ஆங்கிலத் திரைப்படம் வெளியானது தெரியாதா? மெட்ராஸ் கபே, கத்திக்கு எதிராக பொங்கி எழுந்தவர்கள், காமன் மேனை எதிர்க்க முடியாமல் பெட்டிப் பாம்பாக அடங்கிய மாயம் என்ன? அமெரிக்கா சம்பந்தப் பட்டிருப்பதால் எல்லோருக்கும் நடுக்கம் வந்து விட்டது போலும்.
"கலையகம்"

10959427_10204976581948805_2776010226849

உலகம் லா-சப்பல் இல்லை அண்ணை .

உலகம் லா சப்பேலில் இல்லை. அதேவேளை புலி எதிர்ப்பை மட்டுமே சதா சிந்திக்கும், அதற்கு மேல் சிந்திக்கும் ஆற்றல் அற்ற சில குறுகிய மனம் கொண்ட சில்லறை மனிதர்களை மட்டும் கொண்டதும் அல்ல.

Edited by trinco

  • கருத்துக்கள உறவுகள்

உலகம் லா சப்பேலில் இல்லை. அதேவேளை புலி எதிர்ப்பை மட்டுமே சதா சிந்திக்கும், அதற்கு மேல் சிந்திக்கும் ஆற்றல் அற்ற சில குறுகிய மனம் கொண்ட சில்லறை மனிதர்களை மட்டும் கொண்டதும் அல்ல.

நீங்க வேற..

எழுதக்கூடாது என்று நினைத்திருந்தேன்..

இன்று எழுதவேண்டியதாயிற்று....

அறிவு

படிப்பு

சம்பந்தமாக தான் மேலோங்கியிருப்பதாக காட்டுவதற்கு என்னைக்கடித்து திரிகிறார்

(நான் கொஞ்சம் எல்லோரையும் அரவணைக்கும் குணம் என்பதால். மற்றவர்களிடம் இந்த பாச்சா பலிப்பதில்லை)

ஆனால் அண்ணை அதையும் மீறி

தானாகவே காட்டிக்கொடுப்பது

அவரது மீற்றர் எனக்குப்பின்னால் தான் என்பது....

இதைக்கூட அறியாதவர் புத்தியீவியாம்........

எங்க போய் முட்ட.... :( 

உலகம் லா சப்பேலில் இல்லை. அதேவேளை புலி எதிர்ப்பை மட்டுமே சதா சிந்திக்கும், அதற்கு மேல் சிந்திக்கும் ஆற்றல் அற்ற சில குறுகிய மனம் கொண்ட சில்லறை மனிதர்களை மட்டும் கொண்டதும் அல்ல.

எங்களுக்கு எங்க என்ன பேசுவது எழுதுவது என்று தெரியும் தம்பி .உதாரணத்திற்கு இந்த திரையை எடுத்துபார்ததாலே தெரியும் .

யாழில போராட்டம் என்றவுடன் நாட்டை விட்டு ஓடிவந்து தேசிய வேஷம் போட்டு புலிகளை வைத்து பிழைப்பு நடத்துவர்களுக்கு தான் ,நடிப்பவர்களுக்கு தான் நானும் இழுத்து நாலு கொடுத்து வேசத்தை கலைக்க வேண்டி இருக்கு .

இந்த திரியில் கூட "தாயை விற்று " என்று இப்படியான வசனங்களை நடிப்பவர்களால் மட்டும் பாவிக்கமுடியும் .

போன மாதம் ஒரு தோழர் ஒருவர் எழுதிய புத்தக வெளியிடு நடந்தது ,அதில் நானும் ஒரு பேச்சாளர்.இருபது நிமிடங்கள் பேசினேன்  "புலி " என்ற சொல்லே நான் பாவிக்கவில்லை அதற்கான தேவையும் வரவில்லை .

பலருக்கு உரிந்தாயிற்று முக்காடுடன் திரியினம் இன்னமும் சிலர் இருக்கினம் அவர்களையும் விடும் எண்ணமில்லை . :icon_mrgreen:

எங்களுக்கு எங்க என்ன பேசுவது எழுதுவது என்று தெரியும் தம்பி .உதாரணத்திற்கு இந்த திரையை எடுத்துபார்ததாலே தெரியும் .

யாழில போராட்டம் என்றவுடன் நாட்டை விட்டு ஓடிவந்து தேசிய வேஷம் போட்டு புலிகளை வைத்து பிழைப்பு நடத்துவர்களுக்கு தான் ,நடிப்பவர்களுக்கு தான் நானும் இழுத்து நாலு கொடுத்து வேசத்தை கலைக்க வேண்டி இருக்கு .

ஆசிரியர்: உலகில் உயரமான மலை உச்சி எது?

பதில்: போராட்டம் என்றவுடன் நாட்டை விட்டு ஓடிவந்து தேசிய வேஷம் போட்டு................................................................................................................................

ஆசிரியர்: இலங்கையின் தேசிய வருமானத்தில் முக்கிய வருமானம் தரும் வருமான மூலம் என்ன?

பதில்: போராட்டம் என்றவுடன் நாட்டை விட்டு ஓடிவந்து தேசிய வேஷம் போட்டு................................................................................................................................

ஆசிரியர்: இலங்கையின் பணவீக்கம் சடுதியான அதிகரித்திருப்பதற்கு காரணம் என்ன?

பதில்: போராட்டம் என்றவுடன் நாட்டை விட்டு ஓடிவந்து தேசிய வேஷம் போட்டு பணத்தை அனுப்பி அதனால் இலங்கையின் பணவீக்கம் புலி ...............................................................................................................................

ஆசிரியர்: இங்கிலாந்து இடைவெப்ப வலயத்தில் இருந்தாலும் அங்கு மக்கள் வாழ்வதற்கேற்ப காலநிலையை ஏற்படுத்துவதற்கு மெக்சிக்கோ பகுதியில் அத்திலாந்திக் சமுத்திரத்தில் உள்ள வெப்ப நீரோட்ட்டமே காரணம். அந்த நீரோட்டத்தில் பெயர் என்ன?

பதில்: போராட்டம் என்றவுடன் நாட்டை விட்டு ஓடிவந்து தேசிய வேஷம் போட்டு நீரோட்டம்மாக ஓடி ஓடி அதனால் இங்கிலாந்திலும் புலி புலி புலி............................................................................................................................முப்பது வருடமாக............................

ஆசிரியர்: வட அமெரிக்க கண்டம் எந்த பூமித்தகட்டில் அமைந்துள்ளது?

பதில்: போராட்டம் என்றவுடன் நாட்டை விட்டு ஓடிவந்து தேசிய வேஷம் போட்டு................................................................................................................................ முப்பது வருமாக ............................................புலி புலி

ஆசிரியர்: மச்ச யந்திரத்தை வில் வித்தையினால் வீழ்த்திய வீரன் யார்?

பதில்: போராட்டம் என்றவுடன் நாட்டை விட்டு ஓடிவந்து தேசிய வேஷம் போட்டு.................................................................................................................போராட்டம் என்றவுடன் நாட்டை விட்டு ஓடிவந்து தேசிய வேஷம் போட்டு....................................... முப்பது வருடங்களாக ...........................................

ஆசிரியர்: என்னடா மக்குப்பயலே உனக்கு இந்த இரண்டு வசனத்தையும் தவிர எதுவும் தெரியாதா? இழந்த தமது அரசுரிமைக்காக போரிட்ட அந்த மாபெரும் அந்தமகாபாரத காவிய கதாநாயகனின் பெயரையே கெடுத்து குட்டிசுவராக்கிவிட்டாயே? நீயெல்லாம்.....................ஏன்டா இப்படி பித்தலாட்டம் போடுகிறாய்?

Edited by trinco

"அருண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் "

 "நயன்தாரா ,டோனி,ஜேம்ஸ்பாண்ட், ஸ்பூர்த்தி,உமா மகேஸ்வரன் ,கமலகாசன், சம்பந்தன் ,சினிமா ,விளையாட்டு ,அரசியல் ,சமையல்" 

நான் எழுதும் இந்த சொற்கள் விடயங்கள் எல்லாம் இவருக்கு புலி புலி புலி புலி என்று தெரியுதாம் . :icon_mrgreen:  :icon_mrgreen:  :icon_mrgreen:  :icon_mrgreen:  :icon_mrgreen:  :icon_mrgreen:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆசிரியர்: உலகில் உயரமான மலை உச்சி எது?

பதில்: போராட்டம் என்றவுடன் நாட்டை விட்டு ஓடிவந்து தேசிய வேஷம் போட்டு................................................................................................................................

ஆசிரியர்: இலங்கையின் தேசிய வருமானத்தில் முக்கிய வருமானம் தரும் வருமான மூலம் என்ன?

பதில்: போராட்டம் என்றவுடன் நாட்டை விட்டு ஓடிவந்து தேசிய வேஷம் போட்டு................................................................................................................................

ஆசிரியர்: இலங்கையின் பணவீக்கம் சடுதியான அதிகரித்திருப்பதற்கு காரணம் என்ன?

பதில்: போராட்டம் என்றவுடன் நாட்டை விட்டு ஓடிவந்து தேசிய வேஷம் போட்டு பணத்தை அனுப்பி அதனால் இலங்கையின் பணவீக்கம் புலி ...............................................................................................................................

ஆசிரியர்: இங்கிலாந்து இடைவெப்ப வலயத்தில் இருந்தாலும் அங்கு மக்கள் வாழ்வதற்கேற்ப காலநிலையை ஏற்படுத்துவதற்கு மெக்சிக்கோ பகுதியில் அத்திலாந்திக் சமுத்திரத்தில் உள்ள வெப்ப நீரோட்ட்டமே காரணம். அந்த நீரோட்டத்தில் பெயர் என்ன?

பதில்: போராட்டம் என்றவுடன் நாட்டை விட்டு ஓடிவந்து தேசிய வேஷம் போட்டு நீரோட்டம்மாக ஓடி ஓடி அதனால் இங்கிலாந்திலும் புலி புலி புலி............................................................................................................................முப்பது வருடமாக............................

ஆசிரியர்: வட அமெரிக்க கண்டம் எந்த பூமித்தகட்டில் அமைந்துள்ளது?

பதில்: போராட்டம் என்றவுடன் நாட்டை விட்டு ஓடிவந்து தேசிய வேஷம் போட்டு................................................................................................................................ முப்பது வருமாக ............................................புலி புலி

ஆசிரியர்: மச்ச யந்திரத்தை வில் வித்தையினால் வீழ்த்திய வீரன் யார்?

பதில்: போராட்டம் என்றவுடன் நாட்டை விட்டு ஓடிவந்து தேசிய வேஷம் போட்டு.................................................................................................................போராட்டம் என்றவுடன் நாட்டை விட்டு ஓடிவந்து தேசிய வேஷம் போட்டு....................................... முப்பது வருடங்களாக ...........................................

ஆசிரியர்: என்னடா மக்குப்பயலே உனக்கு இந்த இரண்டு வசனத்தையும் தவிர எதுவும் தெரியாதா? இழந்த தமது அரசுரிமைக்காக போரிட்ட அந்த மாபெரும் அந்தமகாபாரத காவிய கதாநாயகனின் பெயரையே கெடுத்து குட்டிசுவராக்கிவிட்டாயே? நீயெல்லாம்.....................ஏன்டா இப்படி பித்தலாட்டம் போடுகிறாய்?

கருத்தாடலுக்கு நன்றி... :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.