Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆப்கானிஸ்த்தானிடம் அவமானகரமான தோல்வியிலிருந்து அருந்தப்புத் தப்பிய இலங்கையணி !

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இன்று நடைபெற்ற ஆப்கானிஸ்த்தான் அணிக்கும் இலங்கையணிக்குமிடையிலான உலகக் கிண்ணப் போட்டி மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்றது.

தாவீதும் கோலியாத்தும் மோதும் போட்டி என்று பலரும் வர்ணித்திருந்தாலும்கூட, இப்போட்டியிலும் சில அதிசயங்கள் நிகழலாம் என்று ஆருடம் கூறியவர்களும் இருக்கிறார்கள்.

அப்படி கூறப்பட்ட ஆருடங்களுக்கு ஏற்ப, நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கையணி ஆப்கானிஸ்த்தான் அணியை முதலில் துடுப்பெடுத்தாட அழைத்தது. கடந்த இரு மாதங்களுக்கு மேலாக நியுசிலாந்தில் படாத பாடு பட்டு விளையாடி வரும் இலங்கையணிக்கு ஆப்கானிஸ்த்தானுடனான இந்தப் போட்டி மிகவும் தேவைப்பட்ட ஒன்றாகவும், தொலைந்துபோன தமது விளையாட்டுத் திறனையெல்லாம் மீண்டும் கண்டுபிடிப்பதற்கான தேடல்க்களமாகவும் நிச்சயம் இருந்திருக்கும் என்பதில் யாருக்கும் சந்தேகம் வேண்டாம். ஆக, ஆப்கானிஸ்த்தானைத் துடுப்பெடுத்தாட அழைத்ததன் மூலம், தமது சோர்ந்துபோயிருக்கும் பந்துவீச்சாளர்களுக்கு உற்சாகத்தைக் கொடுத்து தமது நீண்டநாள் ஆசையான "இந்த உலகக் கிண்ணத் தொடரில் ஒரு போட்டியிலாவது வெல்லுதல்" என்பதை நிறைவேற்ற அது எண்ணியிருக்கலாம்.

ஆனால், இலங்கையணி எதிர்பார்த்ததுபோல ஆப்கானிஸ்த்தான் இலங்கையின் "நட்சத்திர" பந்துவீச்சாளர்களைப் பார்த்துப் பயப்படவில்லை. மாறாக தன்னால் முடிந்தளவிற்கு அட்டகாசமாக துடுப்பெடுத்தாடியது. 

அஸ்கார், சமியுள்ளா போன்ற ஆப்கானியத் துடுப்பாட்டக் காரர்கள் அசத்தலாக விளளையாடி இலங்கையணிக்குப் பெரும் தலையிடியாக மாறினர். இவர்களிருவரும் மூன்றாவது விக்கெட் இணைப்பாட்டமான 88 ஓட்டங்களைக் குவித்தபோது இலங்கையணியின் முகத்தில் அதே வழக்கமான தோல்விக்கான களை வந்து தொங்கிக் கொண்டதைக் காண முடிந்தது. ஒரு கட்டத்தில் 250 - 260 ஓட்டங்களைக் குவிப்பார்கள் என்று எதிர்பார்த்தபோதும்கூட இலங்கையணியின் இடை மற்றும் இறுதி ஓவர்கள்  பந்துவீச்சினால் இந்த ஓட்ட எண்ணிக்கை 232 ஆக மட்டுப் படுத்தப்பட்டது.

ஆரம்பத்தில் ஒரு நூறு ஓட்டங்களுக்கு இவர்களைச் சுருட்டிவிட்டு பின்னர் தமது வீரப் பிரதாபங்களைக் காட்டலாம் என்று மார்தட்டிக் கொண்டு இப்போட்டிக்கு வந்திருந்த இலங்கையணி, இறுதியில் இந்த 232 உடன் தங்களை விட்டது "தலை தப்பியது தம்பிரான் புண்ணீயம்"  என்று எண்ணியிருக்கும்.

சரி, 232 ஓட்டங்கள்தானே, ஒருவாறு சமாளித்து அடித்துவிடலாம் என்கிற நம்பிக்கையுடன், ஆப்கானிய வேகப் பந்துவீச்சாளர்களுக்கு இதுவரை முகம்கொடுத்திருக்காத இலங்கையின் ஆரம்பத் துடுப்பாட்டக் காரர்களான திரிமாணவும், தில்ஷானும் களமிறங்கியபோது நடக்கப்போவதை அவர்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை.

முதலாவது ஓவர், முதலாவது பந்தில் திரிமாண எல்.பி. டபுள்யூ முறையில் ஆட்டமிழந்து வெளியேறினார். அதிர்ச்சியில் உறைந்துபோனாலும்கூட, சரி, இன்னும் தில்ஷான், சங்கா, மஹேல இருக்கிறார்கள் என்று இலங்கையணி நினைத்திருக்க, இரண்டாவது ஓவரில் 2 ஓட்டங்கள் மட்டுமே பெற்றிருந்த வேளையில் தில்ஷான் பிடிகொடுத்து ஆட்டமிழக்க, இலங்கையணிக்கு நடக்கப்போகும் விபரீதம் மெதுவாகப் புரிய ஆரம்பித்திருக்கும். இதற்கிடையே சங்கக்காரவும் தன்பாட்டிற்கு ரண் அவுட் முரையில் ஆட்டமிழக்கப் பார்த்துத் தப்பித்துக் கொண்டதும் நடந்தது. இப்படி தட்டுத் தடுமாறி விளையாடிக் கொண்டிருந்த சங்கா 5 ஆவது ஓவரில் போல்ட் செய்யப்பட்டு ஆட்டமிழக்க வெறும் 18 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்கள் என்ற நிலைக்கு இலங்கை இறங்கியது.

இதன்பிறகு ஜோடி சேர்ந்தவர்கள் " மெதுவாக விளையாடு" புகழ் கருணாரட்ணவும் மஹேலவும். தனது வழமையான மெதுவாக விளையாடி 100 பந்துகளுக்கு 15 ஓட்டங்கள் பெறும் கருணாரட்ண, இம்முறை மிகவும் "ஆக்ரோஷமாக" விளையாடி "32 பந்துகளில் 23 ஓட்டங்களைக் குவித்து" ஒருவாறு பிடிகொடுத்து ஆட்டமிழக்க, மஹேலவுடன் அணித்தலைவர் மத்தியூஸ் சேர்ந்துகொண்டார்.

இந்திய அணியின் தலைவர் டோணியைப் போல இறுதிவரை நிதானமாக பந்துகளைத் தடவித் தடவி ஆடிவிட்டு இறுதியில் அசுர பலத்துடன் அடித்தாடுவது சுலபம் என்று நினைத்தாரோ என்னவோ, மத்தியூஸ், மஹேலவிடம் ஆட்டத்தைக் கொடுத்துவிட்டு மிகவும் நிதானமாக ( இந்த நிதானத்துடன் போட்டி முடியும்வரை மத்தியூஸ் விளையாடியிருந்தால் போட்டியில் ஆப்கானிஸ்த்தான் நிச்சயம் வென்றிருக்கும்) மற்றைய பக்கத்தில் நின்றுகொண்டு கொட்டாவி விட்டுக் கொண்டிருக்க, மஹேல மிகுந்த எரிச்சலுடம் மறுபக்கத்தில் ஆடிக்கொண்டிருந்தார். மத்தியூஸ் நிதானம் தலைக்கேறி எப்போது தனது விக்கெட்டை தூக்கி எறிந்துவிட்டு வெளியேறுவாரோ என்கிற பயம் ஒருபுறம், இனி வருபவர்களுக்கு என்ன அவசரங்களோ என்கிற பயம் இன்னொரு புறமிருக்க, நிதானத்துடன் மஹேல விளையாடத் தொடங்கினார். 

மஹேலவின் திறமையான துடுப்பாட்டத்தினால் மட்டுமே 51 இற்கு 4 விக்கெட்டுக்கள் என்று முக்கி முணகிக் கொண்டிருந்த இலங்கையணி, 177 வரை இழுத்து வரப்பட்டது. இதற்கிடையே பலமுறை எப்படியாவது ஆட்டமிழக்க வேண்டும் என்று பகீரதப் பிரயத்தனம் செய்து, அடிக்கடி ரண் அவுட் ஆக முயன்றுகொண்டிருந்த மத்தியூஸ்,இலங்கையணி 177 ஓட்டங்களைப் பெற்றிருந்த வேளையில் தனது முயற்சியில் வெற்றிபெற்றார். தான் ஆசைப்பட்டபடியே ரண் அவுட் முறையில் அவர் ஆட்டமிழந்தார்.

அதுவரை நிதானமாக மறு கரையில் ஆடிக்கொண்டிருந்த மஹேல என்ன நினைத்தாரோ தெரியவில்லை, 100 ஓட்டங்களைக் கடந்ததும் அவரும் அவசரமாக ஆட்டமிழந்து சென்றதைப் பார்க்கும்போது, அணியின் அறைக்குச் சென்று மத்தியூஸுடனான பழைய பிணக்கைத் தீர்த்துக்கொள்ளும் அவசரம்தான் தெரிந்தது.

176 இற்கு 4 விக்கெட்டுக்கள் என்று ஆறுதலாகவிருந்த இலங்கையணி 177 இற்கு 6 என்று தள்ளாடியது. அப்போது " பிடியை கோட்டை விடு -  சிரி " புகழ் மெண்டிசும், எதற்கு கிரிக்கெட் விளையாடுகிறேனோ தெரியவில்லை" புகழ் திசேர பெரேராவும் ஜோடி சேர்ந்தனர். பந்து தடுப்பாளர்கள் எங்கெல்லாம் இருக்கிறார்களோ அங்கு மட்டுமே பந்துகளை அடித்து "பீல்டிங்" பயிற்சி கொடுக்கத் தொடங்கினார் மென்டிஸ். மறுபுறத்திலிருந்த பெரேராவையே இவரது பீல்டிங் பிராக்டிஸ் வெறுப்பேத்தியிருக்கும் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். பொல்லாது கோபம் வந்திருக்க வேண்டும் பெரேராவுக்கு, மனுசன் என்ன நினைத்தாரோ தெரியாது, திடீரென்று தான் வழமையாக விளையாடும் பாணியை மறந்து (அதுதான் லெக்கில் தூக்கிக் கொடுத்து அவுட் ஆவது) கைகளை விசுக்கி அடிக்கத் தொடங்கினார். 50 பந்துகளில் 56 ஓட்டங்கள் பெறவேண்டும் என்கிற நிலையில் ஆடவந்த இவர்கள் இருவருமாகச் சேர்ந்து 48 ஓவர்களில் இலக்கான 233 ஓட்டங்களைப் பெற்றனர்.இதில் பெரேரா பெற்ற ஓட்டங்கள் 47. மீதி 9 ஓட்டங்களைக் குவித்தவர் ஜீவன் மெண்டிஸ். ஒரு கட்டத்தில் மெண்டிஸின் ஆட்டத்தைப் பார்த்து வர்ணித்த தொலைக்காட்சி வர்ணனையாளர்கள், "குறைந்தது இந்தப் போட்டியிலாவது தான் எதற்காக அணியில் இருக்கிறோம் என்பதை மெண்டிஸ் நிரூபிக்க வேண்டும். அப்படிச் செய்யாவிட்டால் இவரை ஒரு சுமை என்று விமர்சிப்பவர்களது கூற்று உண்மையாகிவிடும்" என்று வாய்விட்டே கூறினார்கள்.

ஆப்கானியர்களை சுலபமாக வெல்லலாம், வென்று தமது " Minnow Bashers" எனும் நாமத்தைத் தக்கவைத்துக் கொள்ளலாம் என்று கனவுகண்ட இலங்கையணிக்கு தமது முதலாவது சர்வதேசப் போட்டியில் விளையாடும் ஆப்கானியர்கள் நல்ல பாடம் புகட்டினார்கள் என்றால் அது மிகையாகாது.

இறுதியாக, இன்றுவரை சர்வதேச அங்கீகாரம் இல்லாத ஒரு நாடான ஆப்கானிஸ்த்தானிடமே அரும்பாடு பட்டு தோற்காத குறையாக விளையாடிய இலங்கையணி இனி நடக்கப்போகும் உலக ஜாம்பவான்களுடனான போட்டியில் என்னதான் செய்யப்போகிறதோ என்கிற கேள்வியும் தவிக்கமுடியாமல் எழுகிறது !

Edited by ragunathan

  • கருத்துக்கள உறவுகள்

அருமை ரகு.. :D மனம்விட்டுச் சிரித்தேன்.. :lol:

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை அணி தெரிவில் பிழை உள்ளது என்றும் பல நல்ல விளையாட்டு வீரர்கள் உள்வாங்கப்படவில்லை என முன்னை நாள் இலங்கை அணி தலைவர் சொன்னது  ஞாபகம் வருகிறது. ரகுவின் வர்ணனை நன்றாக இருந்தது. இலங்கை அணி வீரர்களுக்கு இட்ட நாமங்கள் :D  சிரிக்க வைத்தது.

  • கருத்துக்கள உறவுகள்

177 இற்கு 4 விக்கெட்டுக்கள் என்று ஆறுதலாகவிருந்த இலங்கையணி 176 இற்கு 6 என்று தள்ளாடியது. 

நல்ல வர்ணணை ரகு. 176 அல்ல 178

அருமை ரகு ,

ஆப்கான் ஒழுங்காக fielding செய்திருந்தால் மாட்சை வென்றிருக்கலாம் .அதே போல பாட்டிங் செய்யும் போது இலகுவாக இரண்டு ரன்கள் எடுக்ககூடிய நேரங்களில் எல்லாம் ஒரு ரன்னுடன் நின்றுவிட்டார்கள் .நல்லா சப்பாத்தி இறுக்கிவிட்டு விளையாடவந்தவர்கள் போல.

ரகு, உங்கள் 2 வர்ணனைகளும் வாசித்தேன். அழகிய எழுத்து நடையில் நகைச்சுவையாக எழுதி உள்ளீர்கள்.

உங்கள் ஆதங்கம் புரிகிறது. ஸ்ரீலங்கா அணி தெரிவில் தவறு நடந்து இருக்கிறது. இவர்களது பந்து வீச்சு சொல்லி கொள்ளும்படி இல்லை. மலிங்கா கடந்த ஆகஸ்ட் மாதத்திற்கு பிறகு இப்பதான் போட்டிகளில் விளையாட தொடக்கி இருக்கிறார். இப்படியே போனால் இவர்கள் கால் இறுதி தாண்டுவது முடியாத காரியம். :o

அடுத்தது ஒரு நாள் போட்டிக்கு கருணாரட்ணாவின் தெரிவு தவறு. உண்மையில் குசல் பெரேரா தான் வந்திருக்க வேண்டும். ஆனால் போன வருட கடைசியில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் போட்டிகளில் அவர் சோபிக்க தவறியதால் அணியில் இருந்து நீக்கப்பட்டார்.

மேலும் உங்கள் மத்தியூஸ் மீதான விமர்சனத்திற்கு, இன்றைய போட்டியில் அடுத்தடுத்து விக்கெட்கள் போய் கொண்டு இருக்கும் நிலையில் 12 ஓவரில் துடுப்பெடுத்து ஆட வந்த  மத்தியூஸ் அடித்து ஆடி வாண வேடிக்கை காட்ட சொல்கிறீர்களா?  ^_^  மறு முனையில்  மிகவும் அனுவவம் வாய்ந்த மஹேல இருக்கும்போது அவருக்கு துணையாக ஆடி ஓட்டங்களை உயர்த்துவதே புத்திசாலிதனமான ஆட்டம். அதைத்தான்  மத்தியூஸ் அணி தலைவர் என்ற முறையில் மிக சாதுரயமாக செய்தார். இதையே மத்தியூஸ் 40 அல்லது 45 வது ஓவரில் செய்து இருந்தால் எனது  கருத்தும் உங்களதுதான்.

அடுத்து மஹேல ஜயவர்த்தனா மீதான உங்களது கருத்து போன வாரம் " என்றுமே இலங்கையணிக்குப் பெருத்த பாரமாகவும், இளைய வீரர்கள் அணிக்கு வருவதை நந்திபோன்று தடுத்துக் கொண்டிருப்பவருமான மஹேல ஜயவர்த்தன"  அன்று மஹேல எடுத்த ஓட்டம் 0.

இன்று உங்கள் கருத்து  "மஹேலவின் திறமையான துடுப்பாட்டத்தினால் மட்டுமே 51 இற்கு 4 விக்கெட்டுக்கள் என்று முக்கி முணகிக் கொண்டிருந்த இலங்கையணி, 177 வரை இழுத்து வரப்பட்டது." இன்று மஹேல எடுத்த ஓட்டங்கள் 100. ஏன் இந்த தடுமாற்றம்?

மஹேல ஜயவர்த்தன போன வருடம்  தனது  149 டெஸ்ட் போட்டிகளிடுடன்  தனது ஓய்வை அறிவித்தார். தனது சொந்த சாதனைகளுக்காக ஆடுபவர் என்றால் குறைந்தது இன்னுமொரு  டெஸ்ட்டில் ஆவது ஆடி 150  டெஸ்ட் என்று பதிவு செய்து இருக்கலாமே. அன்று  S.S.C  மைதானத்தில் தனது கடைசி டெஸ்ட் இல் அவர் விளையாடி கொண்டு இருக்கும்போது  வெளிநாட்டு வர்ணனையாளர்கள் கூட இதே கருத்தை சொன்னார்கள்.

அடுத்தது ஜீவன் மென்டிஸ் சிரித்தது. :lol:  அதற்கான காரணம் அவர் சொல்லிவிட்டார். நீங்கள் செய்திகளை இங்காவது பார்த்திருந்தீர்கள் என்றால் தெரிந்து இருக்கும்.

http://www.yarl.com/forum3/index.php?/topic/148713-உலக-கிண்ண-கிரிக்கெட்-போட்டி-2015-செ/?p=1085888

எது எப்படியோ இந்த முறை ஸ்ரீலங்கா அணி கால் இறுதியை தாண்டுவது என்பது மிக சிரமமான காரியம்.

தொடர்ந்து எழுதுங்கள் ரகு

  • கருத்துக்கள உறவுகள்

சொறிலங்கா எப்ப வெளியேறுதோ.. அப்ப திருவிழா கொண்டாட இருக்கிறம். :lol::D

நன்றி ரகு அண்ணா. மச் பார்க்க நேரமில்லாமல் இருக்கும் எங்கள் போன்றவர்களுக்கு உங்கள்.. தொகுப்பு நன்மை அளிக்கிறது. :)

நீங்க குப்பை கொட்டுற மகாராணின்ட தேசம் தான் முதலாவதாக வெளியேறி விடுவார்கள் போல இருக்கு. அதை போய் கொண்டாடுங்க

Edited by nesen

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை அணி தெரிவில் பிழை உள்ளது என்றும் பல நல்ல விளையாட்டு வீரர்கள் உள்வாங்கப்படவில்லை என முன்னை நாள் இலங்கை அணி தலைவர் சொன்னது  ஞாபகம் வருகிறது. ரகுவின் வர்ணனை நன்றாக இருந்தது. இலங்கை அணி வீரர்களுக்கு இட்ட நாமங்கள் :D  சிரிக்க வைத்தது.

கருணாரட்ணவை ஏன் இன்னும் மாற்றாமல் வைத்திருக்கிறார்கள் என்று தெரியவில்லை. இவரை விடவும் திறமையான ஆரம்பத் துடுப்பாட்டக் காரர்கள் இலங்கையணியில் இருக்கிறார்கள். அப்படியிருந்தும் இவரையே தொடர்ந்தும் அணியில் வைத்திருப்பது வேறு காரணங்களுக்காக இருக்கலாம். அதேபோலத்தான் மெண்டிஸும். அவரது தகப்பனார் துலிப்பின் செல்வாக்கில்லாமல் விட்டால் இலங்கையணியின் ஏ பிரிவில் கூட விளையாட அவருக்குத் தகுதியிருக்காது.

ஒரு சின்னக் கேள்வி, உலகக் கோப்பையில் விளையாடும் வீரரகள் என்று ஒரு அணியை அறிவித்த பின்னர், வேறு ஒரு வீரரை உள்ளே கொண்டுவர முடியுமா என்பது. அப்படி முடியுமென்றால், கருணாவை அகற்றி விட்டு குசால் பெரேராவையோ அல்லது உபுல் தரங்கவையோ இறக்கிப் பார்க்கலாம். 

அதேபோல தில்ஷானும் கால் உபாதையுடன் விளையாடுவது அவரது டைமிங் மற்றும் ஷொட் செலெச்க்‌ஷனைப் பாதிக்கிறது. இதனால் அணிக்குத்தான் நஷ்ட்டம். இன்னொருவரை களமிறக்கிப் பார்க்கலாம். தேவையென்றால் திசேர பெரேராவை ஆரம்பத் துடுப்பாட்டக் காரராக இறக்கினால் இப்போதுள்ள தொய்வு நிலையை சரிப் பண்ண முடியும்.

ரகு, உங்கள் 2 வர்ணனைகளும் வாசித்தேன். அழகிய எழுத்து நடையில் நகைச்சுவையாக எழுதி உள்ளீர்கள்.

உங்கள் ஆதங்கம் புரிகிறது. ஸ்ரீலங்கா அணி தெரிவில் தவறு நடந்து இருக்கிறது. இவர்களது பந்து வீச்சு சொல்லி கொள்ளும்படி இல்லை. மலிங்கா கடந்த ஆகஸ்ட் மாதத்திற்கு பிறகு இப்பதான் போட்டிகளில் விளையாட தொடக்கி இருக்கிறார். இப்படியே போனால் இவர்கள் கால் இறுதி தாண்டுவது முடியாத காரியம். :o

அடுத்தது ஒரு நாள் போட்டிக்கு கருணாரட்ணாவின் தெரிவு தவறு. உண்மையில் குசல் பெரேரா தான் வந்திருக்க வேண்டும். ஆனால் போன வருட கடைசியில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் போட்டிகளில் அவர் சோபிக்க தவறியதால் அணியில் இருந்து நீக்கப்பட்டார்.

மேலும் உங்கள் மத்தியூஸ் மீதான விமர்சனத்திற்கு, இன்றைய போட்டியில் அடுத்தடுத்து விக்கெட்கள் போய் கொண்டு இருக்கும் நிலையில் 12 ஓவரில் துடுப்பெடுத்து ஆட வந்த  மத்தியூஸ் அடித்து ஆடி வாண வேடிக்கை காட்ட சொல்கிறீர்களா?  ^_^  மறு முனையில்  மிகவும் அனுவவம் வாய்ந்த மஹேல இருக்கும்போது அவருக்கு துணையாக ஆடி ஓட்டங்களை உயர்த்துவதே புத்திசாலிதனமான ஆட்டம். அதைத்தான்  மத்தியூஸ் அணி தலைவர் என்ற முறையில் மிக சாதுரயமாக செய்தார். இதையே மத்தியூஸ் 40 அல்லது 45 வது ஓவரில் செய்து இருந்தால் எனது  கருத்தும் உங்களதுதான்.

அடுத்து மஹேல ஜயவர்த்தனா மீதான உங்களது கருத்து போன வாரம் " என்றுமே இலங்கையணிக்குப் பெருத்த பாரமாகவும், இளைய வீரர்கள் அணிக்கு வருவதை நந்திபோன்று தடுத்துக் கொண்டிருப்பவருமான மஹேல ஜயவர்த்தன"  அன்று மஹேல எடுத்த ஓட்டம் 0.

இன்று உங்கள் கருத்து  "மஹேலவின் திறமையான துடுப்பாட்டத்தினால் மட்டுமே 51 இற்கு 4 விக்கெட்டுக்கள் என்று முக்கி முணகிக் கொண்டிருந்த இலங்கையணி, 177 வரை இழுத்து வரப்பட்டது." இன்று மஹேல எடுத்த ஓட்டங்கள் 100. ஏன் இந்த தடுமாற்றம்?

மஹேல ஜயவர்த்தன போன வருடம்  தனது  149 டெஸ்ட் போட்டிகளிடுடன்  தனது ஓய்வை அறிவித்தார். தனது சொந்த சாதனைகளுக்காக ஆடுபவர் என்றால் குறைந்தது இன்னுமொரு  டெஸ்ட்டில் ஆவது ஆடி 150  டெஸ்ட் என்று பதிவு செய்து இருக்கலாமே. அன்று  S.S.C  மைதானத்தில் தனது கடைசி டெஸ்ட் இல் அவர் விளையாடி கொண்டு இருக்கும்போது  வெளிநாட்டு வர்ணனையாளர்கள் கூட இதே கருத்தை சொன்னார்கள்.

அடுத்தது ஜீவன் மென்டிஸ் சிரித்தது. :lol:  அதற்கான காரணம் அவர் சொல்லிவிட்டார். நீங்கள் செய்திகளை இங்காவது பார்த்திருந்தீர்கள் என்றால் தெரிந்து இருக்கும்.

http://www.yarl.com/forum3/index.php?/topic/148713-உலக-கிண்ண-கிரிக்கெட்-போட்டி-2015-செ/?p=1085888

எது எப்படியோ இந்த முறை ஸ்ரீலங்கா அணி கால் இறுதியை தாண்டுவது என்பது மிக சிரமமான காரியம்.

தொடர்ந்து எழுதுங்கள் ரகு

மெண்டிஸின் சிரிப்பிற்கான அர்த்தம் இப்போதுதான் புரிந்தது. பாவம், மனுசன் என்ன பாடு பட்டாரோ ?? :D

மஹேல் சிறந்த துடுப்பாட்டக் காரர்தான், ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் அவரது கொன்ஸிஸ்டன்ஸி காணாது.  நம்பிக்கை நட்சத்திரம் என்று சொல்ல முடியாது. ஆனால் நேற்று இலங்கையைக் காப்பாற்றியது அவர்தான் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.  :)

ரகு, நான் அறிந்த வரை ஒருவரை மாற்றுவது என்றால் அவர் காயப்பட்டதை ஆதார பூர்வமாக நிருபித்து அதை ICC இன் அனுமதியுடன் தான் மாற்றலாம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ரகு, நான் அறிந்த வரை ஒருவரை மாற்றுவது என்றால் அவர் காயப்பட்டதை ஆதார பூர்வமாக நிருபித்து அதை ICC இன் அனுமதியுடன் தான் மாற்றலாம்.

ஓ...அப்படியா ? அதுதான் பேசாமலிருக்கிறார்களோ என்னவோ ?

  • கருத்துக்கள உறவுகள்

நீங்க குப்பை கொட்டுற மகாராணின்ட தேசம் தான் முதலாவதாக வெளியேறி விடுவார்கள் போல இருக்கு. அதை போய் கொண்டாடுங்க

மகாராணி தேசத்துக்கு தன் பலம்.. பலவீனம் தெரியும். சும்மா பீற்றிக்கிறதில்ல. சிங்களம்.. என்ன செய்யுது.. என்றது உலகத்துக்கே தெரியும். தர்மசேன மாதிரி.. நடுவர்களை வைச்சு பிழைச்சுக் கொண்டால் ஒழிய சொறீலங்கா கிரிக்கெட்.. எனி மீளாது. 1996 ரோட எல்லாம் முடிஞ்சுது. :lol::D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ரகுநாதன் அவர்களே, 

ஜீவன் மென்ஸ்டிஸ் முன்னாள் ஶ்ரீ லங்கா அணித்தலைவர் துலிப் மெண்டிசின் புதல்வன் என்று யார் உங்களுக்கு சொன்னது? இது தவறான தகவல் என்று நினைக்கின்றேன்.

ஶ்ரீ லங்கா அணியின் தெரிவின் பின்னால் உள்ளது முன்னாள் ஶ்ரீ லங்கா அணித்தலைவர் ஜெயசூர்யாவே.

ஆப்காணிஸ்தான் அணியிடம் தோல்வி அடைவது அவமானத்துக்கு உரிய விசயம் இல்லை. நேற்று அந்த அணி எப்படி விளையாடினது என்பதை பார்த்தால் தெரியும்.

திரமினே, டில்சான், சங்கேகார ஆகியோர் அபாரமான முறையில் ஆட்டம் இழந்தார்கள். மத்தியூஸ் நிதானமாய் விளையாடினார். 

ஶ்ரீ லங்காவின் துடுப்பாட்டத்தை விட பந்துவீச்சும், களத்தடுப்புமே பலவீனமாய் உள்ளதாய் படுகின்றது. எதிர்வரும் போட்டிகளில் ஶ்ரீ லங்கா அணியின் பந்துவீச்சு, களத்தடுப்பு என்பனவற்றில் முன்னேற்றம் ஏற்பட்டால் அவுஸ்திரேலியா அணியைக்கூட வெல்வது சாத்தியமே.

  • கருத்துக்கள உறவுகள்

ஆப்கானியர்களை சுலபமாக வெல்லலாம், வென்று தமது " Minnow Bashers" எனும் நாமத்தைத் தக்கவைத்துக் கொள்ளலாம் என்று கனவுகண்ட இலங்கையணிக்கு தமது முதலாவது சர்வதேசப் போட்டியில் விளையாடும் ஆப்கானியர்கள் நல்ல பாடம் புகட்டினார்கள் என்றால் அது மிகையாகாது.

 ரகு இலங்கை அணி மட்டுமல்ல இங்கு போட்டிகளில் கலந்து கொண்ட சகலருமே ஆப்கானிஸ்தான் கடைசியாகவும் குறைந்த புள்ளிகளையும் எடுக்கும் என்று தான் கணித்திருந்தார்கள்.

அடுத்த அடுத்த உலகப் போட்டிகளில் இன்னும் முன்னேற்றமடையும் என் எண்ணுகிறேன்.

மகாராணி தேசத்துக்கு தன் பலம்.. பலவீனம் தெரியும். சும்மா பீற்றிக்கிறதில்ல. சிங்களம்.. என்ன செய்யுது.. என்றது உலகத்துக்கே தெரியும். தர்மசேன மாதிரி.. நடுவர்களை வைச்சு பிழைச்சுக் கொண்டால் ஒழிய சொறீலங்கா கிரிக்கெட்.. எனி மீளாது. 1996 ரோட எல்லாம் முடிஞ்சுது. :lol::D

 அவர்கள் 1996 இல் வென்று சாதனை படைத்தார்கள். அதன் பின் பல தடவை இறுதி போட்டிக்கு வந்தார்கள். எல்லாம் தெரிந்த உங்க மகாராணி தேசம் கவுண்டு கொட்டுண்டு கிடக்கு ஒன்றுக்கும் வழி இல்லாமல் :lol:

ரகுநாதன் அவர்களே, 

ஜீவன் மென்ஸ்டிஸ் முன்னாள் ஶ்ரீ லங்கா அணித்தலைவர் துலிப் மெண்டிசின் புதல்வன் என்று யார் உங்களுக்கு சொன்னது? இது தவறான தகவல் என்று நினைக்கின்றேன்.

இது தான் எனது கேள்வியும்,

jeevan mendis கிரிக்கெட் பின்ணனி கொண்ட குடும்பத்தில் இருந்து வந்தவர்தான். ஆனால் துலிப் மென்டிஸ் இன் மகனா இவர்? அவரது தகப்பனாரது பெயர்

Jagath என்று இருக்கே.

http://www.espncricinfo.com/srilanka/content/player/49700.html

http://www.espncricinfo.com/srilanka/content/player/49629.html

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இது தான் எனது கேள்வியும்,

jeevan mendis கிரிக்கெட் பின்ணனி கொண்ட குடும்பத்தில் இருந்து வந்தவர்தான். ஆனால் துலிப் மென்டிஸ் இன் மகனா இவர்? அவரது தகப்பனாரது பெயர்

Jagath என்று இருக்கே.

http://www.espncricinfo.com/srilanka/content/player/49700.html

http://www.espncricinfo.com/srilanka/content/player/49629.html

தவறுதான், அவர் துலிப்பின் மகன் கிடையாது.

கேள்வி வாக்கில் நான் அறிந்து எழுதியது.

மன்னிக்கவும்.

ரகுநாதன் அவர்களே, 

ஜீவன் மென்ஸ்டிஸ் முன்னாள் ஶ்ரீ லங்கா அணித்தலைவர் துலிப் மெண்டிசின் புதல்வன் என்று யார் உங்களுக்கு சொன்னது? இது தவறான தகவல் என்று நினைக்கின்றேன்.

ஶ்ரீ லங்கா அணியின் தெரிவின் பின்னால் உள்ளது முன்னாள் ஶ்ரீ லங்கா அணித்தலைவர் ஜெயசூர்யாவே.

ஆப்காணிஸ்தான் அணியிடம் தோல்வி அடைவது அவமானத்துக்கு உரிய விசயம் இல்லை. நேற்று அந்த அணி எப்படி விளையாடினது என்பதை பார்த்தால் தெரியும்.

திரமினே, டில்சான், சங்கேகார ஆகியோர் அபாரமான முறையில் ஆட்டம் இழந்தார்கள். மத்தியூஸ் நிதானமாய் விளையாடினார். 

ஶ்ரீ லங்காவின் துடுப்பாட்டத்தை விட பந்துவீச்சும், களத்தடுப்புமே பலவீனமாய் உள்ளதாய் படுகின்றது. எதிர்வரும் போட்டிகளில் ஶ்ரீ லங்கா அணியின் பந்துவீச்சு, களத்தடுப்பு என்பனவற்றில் முன்னேற்றம் ஏற்பட்டால் அவுஸ்திரேலியா அணியைக்கூட வெல்வது சாத்தியமே.

தவறான தகவல்தான். சுட்டிக் காட்டியமைக்கு நன்றி !

  • கருத்துக்கள உறவுகள்

துடுப்பாட்டக்காரரை விட பந்து வீச்சாளருக்கு அதிகமான மனச்சுமை இருக்கும் என நினைக்கின்றேன்.பொதுவாக வேகப்பந்து வீச்சாளர்கள் பந்து கட்டு மற்றும் திரும்பல்களில் பல வித்தைகள் செய்வார்கள் என்று கேள்விப்பட்டுள்ளேன். ஆனால் அதற்கு போதிய கட்டுப்பாடு இல்லாவிட்டால் பந்தை குறித்த இலக்கில் வீசவும் முடியாது விரும்பிய மாதிரி திருப்பவும் முடியாது. நான் கேள்விப்பட்டதின் அடிப்படையில் பந்து வீச்சாளர்களின் பேராசை ஆரம்பத்தில் பலவற்றை முயற்சி செய்ய தூண்டும்,கட்டுப்பாடில்லாமல் அது மோசமானவுடன் பதற்றம் ஏற்படும் ஏனெனில் துடுப்பாட்டக்கார் அதனை உடனடியாக புரிந்து கொண்டு பந்து வீச்சை கடுமையாக அடித்தாட தொடங்குவார்.அது பந்து வீச்சாளரின் உளவுரணைப்பாதிக்கும்.பந்தின் கட்டை குறுக்காக பாவித்தால் அந்த பிரச்சனையில் இருந்து விடுபடலாம் ஆனால் துடுப்பாட்டக்காரை அச்சுறுத்தாது ஓட்டங்களை கட்டுப்படுத்தலாம் என்று கேள்விப்பட்டுள்ளேன்.

நீங்கள் கிரிக்கட்டில் நிறைய விசயம் தெரிஞ்ச ஆள்.. ஆனால் எல்லாவற்றையும் "நான் கேள்விப்பட்டுள்ளேன்" என்றுதான் முடிக்கிறீர்கள்.. :lol::D

இந்த உலக கோப்பை  போட்டியில் பல புதிய விதிகளை கடைப்பிடிக்கிறார்கள். முக்கியமாக வீசப்படும் பந்து 2 பந்துகள். அதனால் பந்து அதிகமாக தேய்வடையாது. அடுத்தது களதடுப்பு.

ஒரு சின்னக் கேள்வி, உலகக் கோப்பையில் விளையாடும் வீரரகள் என்று ஒரு அணியை அறிவித்த பின்னர், வேறு ஒரு வீரரை உள்ளே கொண்டுவர முடியுமா என்பது. அப்படி முடியுமென்றால், கருணாவை அகற்றி விட்டு குசால் பெரேராவையோ அல்லது உபுல் தரங்கவையோ இறக்கிப் பார்க்கலாம். //

ரகு, உங்கள் ஒரு ஆசை நிறைவேறும் போல இருக்கு. Jeevan mendis பயிற்சின் போது காயமடைந்து இருப்பதாகவும் ICC டாக்டர்களின் அறிக்கைக்கு காத்திருப்பதாகவும், அதேவேளை உபுல் தரங்க அவுஸ்ரேலியா நோக்கி பயணமாக இருப்பதாகவும் ஒரு உறுதிப்படுத்தப்படாத செய்தி.

சொறிலங்கா எப்ப வெளியேறுதோ.. அப்ப திருவிழா கொண்டாட இருக்கிறம். :lol::D

நன்றி ரகு அண்ணா. மச் பார்க்க நேரமில்லாமல் இருக்கும் எங்கள் போன்றவர்களுக்கு உங்கள்.. தொகுப்பு நன்மை அளிக்கிறது. :)

நானும் தான் நெடுக்கர்
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒரு சின்னக் கேள்வி, உலகக் கோப்பையில் விளையாடும் வீரரகள் என்று ஒரு அணியை அறிவித்த பின்னர், வேறு ஒரு வீரரை உள்ளே கொண்டுவர முடியுமா என்பது. அப்படி முடியுமென்றால், கருணாவை அகற்றி விட்டு குசால் பெரேராவையோ அல்லது உபுல் தரங்கவையோ இறக்கிப் பார்க்கலாம். //

ரகு, உங்கள் ஒரு ஆசை நிறைவேறும் போல இருக்கு. Jeevan mendis பயிற்சின் போது காயமடைந்து இருப்பதாகவும் ICC டாக்டர்களின் அறிக்கைக்கு காத்திருப்பதாகவும், அதேவேளை உபுல் தரங்க அவுஸ்ரேலியா நோக்கி பயணமாக இருப்பதாகவும் ஒரு உறுதிப்படுத்தப்படாத செய்தி.

நானும் கேள்விப்பட்டேன்,

உபுல் தரங்கவை உள்ளே கொண்டுவருவதற்காக மெண்டிசுக்கு கட்டாய காயம் வரவழைக்கப்பட்டதா என்று தெரியவில்லை. என்னமோ நடக்குது. ஆனால், இவர்களின் பந்துவீச்சை சரிப் பண்ணாமல் இவர்களால் எந்த மாட்சிலும் வெல்ல முடியாது. மலிங்கவைப் பார்த்தால் குட்டி போட்ட பூனை மாதிரி இருக்கிறார். ஒரு சர்வதேச விளையாட்டு வீரருக்கான உடல் கட்டு அவரிடம் இப்போது இல்லை. வண்டியும் தொந்தியுமாக அவர் படும்பாடு அலங்கோலமாக இருக்கிறது.

வருகிற பங்களாதேசுடனான மட்சிலும் இவர்கள் கோட்டை விடுவார்கள் என்பதை எதிர்பார்க்கலாம் !

  • கருத்துக்கள உறவுகள்

இல்லை இசை வெறும் கேள்வி ஞானம்தான், பழைய பந்துகளில் வீசப்படும் மட்டையாளர்களை திணறடிக்கும் இறுதி ஓவர் ரிவர்ஸ் சுயிங் யோக்கர்களை இதனால் பந்து வீச்சாளர்களினால் வீசமுடியாமல் போய்விடும் அதுவும் பந்து வீச்சாளரிற்கு பாதகம் தான் மலிஙகா,உமர்குல் இந்த பந்து வீச்சில் சிறந்தவர்கள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.