Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இவனா? அவன்..?? - புல்லரிக்கும் தொடர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அது துனிசியாவில் ஒரு நகரம்..

 

முகமெட்  ஓரளவு வசதியானவன்

சொந்தமாக TAXI  வைத்திருந்தான்..

திருமணமாகி  ஒரு ஆண்குழந்தை

அழகான மனைவி

சொந்தவீடு

ஆனந்தமான வழமாக வாழ்க்கை என வாழ்வு போய்க்கொண்டிருந்தது..

 

 மார்கழி மாசம்

சரியான குளிர்

மனைவி  கேட்டாள்

பிள்ளையைக்கூட்டிக்கொண்டு போய்  அம்மாவீட்டில் 2 நாள் தங்கி  வரட்டா என.

இன்றைய தினத்தின் முக்கியத்தை  உணராதவன்

அதற்கென்ன

ஆனால் நான் வேலைக்கு போய்விட்டு அங்கு வரமாட்டேன்

அங்கு வந்தால் ஆட்கள் அதிகம்

அவர்களுடன் பொழுது போகும்

ஆனால் நான் ஓய்வெடுக்கமுடியாது என.

அது வழமையாக நடப்பது என்பதால் மனைவியும் ஒத்துக்கொண்டாள்.

 

வழமை போல டக்சியை எடுத்துக்கொண்டு புறப்பட்ட முகமெட்

மனைவியைக்கொண்டு போய்  தாய்வீட்டுக்கு போகும் புகையிரத நிலையத்தில் விட்டுவிட்டு

தனது அன்றைய தினத்தை ஆரம்பிக்க புறப்பட்டான்...

 

சிறிது தூரம் போனவனை

ஒரு அழகான பெண் வழி மறித்தாள்...

வாகனத்தை நிறுத்தியவன்

பின் சீற்றில் ஏறும்படி சைகை செய்தான்...

ஏறியவள் சப்பாத்தையும் களட்டிவிட்டு

பெரும் நிம்மதிப்பெருமூச்சுடன் சீற்றில் சாய்ந்தாள்...

எங்கே போகணும் என முகமெட் கேட்க

எங்கு என்றாலும் போ என்றவள் கண்களை மூடினாள்...

 

தொடரும்........

  • Replies 97
  • Views 10.1k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சிறிது தூரம் போனவனை

ஒரு அழகான பெண் வழி மறித்தாள்...

வாகனத்தை நிறுத்தியவன்

பின் சீற்றில் ஏறும்படி சைகை செய்தான்...

ஏறியவள் சப்பாத்தையும் களட்டிவிட்டு

பெரும் நிம்மதிப்பெருமூச்சுடன் சீற்றில் சாய்ந்தாள்...

எங்கே போகணும் என முகமெட் கேட்க

எங்கு என்றாலும் போ என்றவள் கண்களை மூடினாள்...

 

தொடரும்........

 

வாகனத்தில் ஏறினால் போகும் இடத்தைச்சொல்லணும்

இல்லாது விட்டால் நான் எப்படி இடத்தைக்கண்டுபிடிப்பது என்று கொஞ்சம் கோபமாகக்கேட்டான் முகமெட்...

 

மீற்றரைப்போடு

எங்கு என்றர்லும் போ..

இறுதியில் எவ்வளவு பணம் என்று சொல்லு

அது தான் உன் வேலை என்றாள்...

நீ இடத்தைச்சொல்லாமல் என்னால் நகரமுடியாது

காலையிலேயே பிரச்சினை கொடுக்காதே என்றான்

சரி

ரவுணுக்குப்போ என்றவள் படுத்துவிட்டாள்...

 

ரவுணை ஒரு சுற்று சுற்றியவன் ஒரு இடத்தில் நிறுத்தி இனி என்றான்

கொஞ்சம் பொறு. பசிக்குது ஏதாவது வாங்கி வருகின்றேன் என்று இறங்கிச்சென்றவள்

2 சண்விச்சுடன் வந்தாள். அவனுக்கும் ஒன்றைக்கொடுத்து தானும் சாப்பிட்டவளை

நான் என்ன செய்ய இனி எனக்கேட்டான்..

பெரிய கடைக்குப்போ என்றாள்..

அவன் கடைப்பக்கமாக காரை நகர்த்தத்தொடங்கினான்....

அங்கும் ஒரு சுற்றுச்சுற்றியவன்

ஒரு இடத்தில் நிறுத்தினான்

Ice கிறீம் கடையைக்கண்டவள் இருவருக்கும் Ice கிறீம் வாங்கி  வந்தாள்..

 

இவன் மீண்டும் இனி என்றான் ...

கடற்கரைக்கு போ என்றாள்..

கடற்கரையை நோக்கி காரைச்செலுத்தத்தொடங்கினான்...... 

ஆனாலும் மனதில் கேள்வி

இந்தக்குளிருக்குள் கடற்கரையில் என்ன செய்யப்போகின்றாள்...

 

தொடரும்....

 

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

கடலுக்குள் குளித்து தற்கொலை செய்யப்போறா.. :o தொடருங்கோ.. :D

(அதுசரி.. நாலு வரி மட்டும் எழுதக்கூடாது என்கிற சட்டம் எனக்கு மட்டுமோ?! :lol: )

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இவன் மீண்டும் இனி என்றான் ...

கடற்கரைக்கு போ என்றாள்..

கடற்கரையை நோக்கி காரைச்செலுத்தத்தொடங்கினான்...... 

ஆனாலும் மனதில் கேள்வி

இந்தக்குளிருக்குள் கடற்கரையில் என்ன செய்யப்போகின்றாள்...

 

தொடரும்...

 

கடற்கரையை அடைந்ததும் சிறிது நேரம் காருக்குள் இருந்தவள்

மீற்றரை நிறுத்தாதே. இதோ வருகின்றேன் என இறங்கியவள் நேரே கடலுக்குள் சென்று குளிக்கத்தொடங்கி விட்டாள்.

அவள் உடுத்த உடுப்புடன் கடலுக்குள் இறங்க

இவனுக்கே நடுங்கத்தொடங்கிவிட்டது. அவ்வளவு குளிர். 

அத்துடன் பணம் தருவாளா??

ஆளைப்பார்த்தால்

படித்த

வசதியான 

பெரிய குடும்பத்தை சேர்ந்தவள் போலுள்ளது.

ஆனால் ஏன் இப்படி  நடந்து கொள்கின்றாள்.

இவளது பின்புலம்

வாழ்க்கை

அடுத்த கட்டம் என்ன....?

யோசித்துப்பார்த்தவனுக்கு எந்த முடிவும் தெரியவில்லை

காத்திருந்தான்......

 

ஈர உடுப்போடு வந்தவள்

அப்படியே காருக்குள் ஏற முற்பட்டாள்..

இவனுக்கோ சங்கடம்

நனைந்த உடுப்புடன் அவளைப்பார்க்க சங்கடமாக இருந்தது

மிகவும் கவர்ச்சியாக தென்பட்டாள்...

இருந்தாலும் இறங்கிச்சென்றவன்

டிக்கிக்குள் தான் வைத்திருந்த துவாயை எடுத்து

தலையை துவட்டிக்கோ துடைச்சுக்கோ எனக்கொடுத்தான்

வாங்கிக்கொண்டவள் துடைத்துவிட்டு  மீண்டும் காருக்குள் ஏறி 

பசிக்குது வண்டியை நல்ல சாப்பாடு கிடைக்கும் இடத்துக்கு விடு என்றாள்...

 

சாப்பாட்டு இடத்துக்கு வந்ததும் இருவருக்கும் சாப்பாடு வாங்கி  வந்தாள்

இருவரும்  சாப்பிட்டுக்கொண்டிருக்கும் போது.....

 

சூரியன் மறைந்து இருட்ட ஆரம்பித்திருந்தது

இன்னும் சிறிது தூரம்  தான் தான் வண்டியை செலுத்தமுடியும்

தனது இன்று ஓடக்கூடிய

தனது மீற்றர் காட்டக்கூடிய அதிக தொகை வரப்போகிறது

வந்தால் மீற்றர் அதற்கு மேல் நகராது என்பதை உணர்ந்தவன்

அவளிடம் சொன்னான்..

நான் எவ்வளவு தரணும் எனக்கேட்டவளுக்கு  தொகையைச்சொன்னான்...

என்னிடம் அவ்வளவு பணம் இல்லை என்றவள் திடீரென காரைவிட்டு இறங்கி

வங்கிக்காட்டால் பண்ம் எடுக்கும் இயந்திரத்தை நோக்கி  நடக்கத்தொடங்கினாள்...

 

தொடரும்.........

 

தொடரும்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கடலுக்குள் குளித்து தற்கொலை செய்யப்போறா.. :o தொடருங்கோ.. :D

(அதுசரி.. நாலு வரி மட்டும் எழுதக்கூடாது என்கிற சட்டம் எனக்கு மட்டுமோ?! :lol: )

 

தம்பி  எவ்வழியோ

நானும் அதேவழி....

 

இந்தக்கதையை  எழுதத்தூண்டியவரே நீங்க தானையா.... :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

பிறகு..... :D
தொடருங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

கதையின்... முடிவு எப்படி இருக்கும் என்று, எம்மால் ஊகிக்க கடினமாக உள்ளது.
தொடருங்கள்... விசுகு. :)

விசுகண்ணாட கதையே. அப்ப ஒண்டுமே நடக்காது. என்ன தான் ஈரத்துணியோட இருந்தாலும். :lol:

  • கருத்துக்கள உறவுகள்

என்னால் ஊகிக்க முடியுது, இந்தக் கதைக்கு ஒரு முடிவு இருக்கெண்டு...! :)

  • கருத்துக்கள உறவுகள்

இது ஒரு புல்லரிக்கும் தொடர்கதை . அதனால்  கிழமைக்கு இரண்டு தொடர் மட்டும் தானாம் :D:lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

என்னிடம் அவ்வளவு பணம் இல்லை என்றவள் திடீரென காரைவிட்டு இறங்கி

வங்கிக்காட்டால் பண்ம் எடுக்கும் இயந்திரத்தை நோக்கி  நடக்கத்தொடங்கினாள்...

 

தொடரும்...

 

அவள் போவதை முகமெட் பார்த்துக்கொண்டே இருந்தான்..

திரும்பி வருவாளா?

பணத்தை தருவாளா? என்ற சந்தேகம் வலுப்பட்டிருந்தது அவனுக்கு...

பணத்தை எடுப்பது தெரிந்தது

பணத்துடன் வந்தவள் இவனுக்கு கொடுக்கவேண்டியதைக்கொடுத்து விட்டு

மீண்டும் காருக்குள் ஏறி  தொடர்ந்து போ என்றாள்.

 

மீண்டுமா?  எங்கே?

எனது நேரம் முடிவடைந்துவிட்டது என்றான் முகமெட்...

இல்லை இப்படி என்னால் வெளியே போகமுடியாது

உடுப்பு எடுக்கணும்

ஒரு உடுப்புக்கடைக்கு போ என்றாள்...

 

மீற்றரை மீண்டும் போட்டவன்

உடுப்புக்கடையில் நிறுத்தினான்

உடுப்புடன் வந்தவள்

மீண்டும் காருக்குள் ஏறி தொடர்ந்து போ என்றாள்

முகமெட்டுக்கு கோபம் வந்து விட்டது

இனி  எங்கு போவது?

 

பார்த்தால் நல்லவளாக 

படித்த  பண்பானவளாக தெரிகிறாய்

ஆனால் ஏன் இப்படி நடந்து கொள்கிறாய்?

உன்னுடைய நோக்கம் என்ன?

யார் நீ....?  என கேள்விகளை  அடுக்கிக்கொண்டே   போனான்

அவள் பதிலே சொல்லாமல் இருப்பதைப்பார்த்து

திரும்பி அவளைப்பார்த்தான்..

அவளது கண்கள் கலங்கியிருந்தன

அழுவது தெரிந்தது..

சிறிது அமைதியாக இருந்தான்.

 

சிறிய இடைவெளியின் பின் அவளாகவே பேசத்தொடங்கினாள்..

நான் திருமணமானவள்

இந்த நகரத்தின் முக்கிய நபரின் மனைவி

ஆனால் அவருடன் வாழ்வது நரகமானது

எனது உடம்பில் வெளியாருக்கு காட்டமுடியாத இடமெல்லாம் 

சுறு(ரு)ட்டால் சுட்ட காயங்கள் உள்ளன

முதுகை மட்டும்  கர்ட்டினாள்

அப்படியே வெந்து போயிருந்தது

இவன் கண்களும் பனித்தன...

அதே நேரம் எனது குடும்பம் அவருக்கு பயப்படுகிறது

என்னை ஏற்க அஞ்சுகிறார்கள்...

என்னால் அவரது முரட்டுக்குணாதிசியங்களை தாங்கமுடியல.

அது தான் புறப்பட்டு வந்துவிட்டேன்

ஆனால் எங்கு போவது? என்ன செய்வது ஒன்றும் புரியல??

கோட்டல்களுக்கும் போக என்னிடம் அடையாள அட்டை கூட இல்லை

எனக்கு இந்த உடையை  மாற்ற மட்டும் ஒரு  இடம்  ஏற்பாடு செய்து தா..

ஈரத்தால் உடம்பெல்லாம  நடுங்குகிறது

இப்படியே இங்கு இறங்கி நின்றால் செத்துவிடுவேனோ என பயமா இருக்கு என்றாள்..

 

 

என்ன செய்வது என்று இவனுக்கு ஒரே குழப்பம்

அவளுக்கு உதவலாமா?

இப்படியே விடுவது பாவமல்லவா..?

ஒரு முடிவுக்கு வந்தான்

 

சரி

எனது வீடு பக்கத்தில் தான் உள்ளது

அங்கு உனது உடுப்பை மாற்றிக்கொள்ள உதவுகின்றேன்

நான் திருமணமானவன்

எனது குடும்ப வாழ்வு நிம்மதியாக அமைதியாக போகிறது

அதில் குழப்பங்கள் வரக்கூடாது என்றான்

அவளும் அதே பெரிய உதவி.

நன்றி  என்றாள்..

 

இன்சா அல்லா என்றபடி காரை தனது வீட்டை நோக்கி ஓட்டத்தொடங்கினான்....

 

இவன் இன்சா அல்லா என்றதும் அல்லா இவன் மீது பார்வையைத்திருப்பினார்

அவர் முகத்தில் சோகம் பரவியிருந்தது

இதுவரை இவனது பைலை வைத்து பார்த்து

இவனது ஒவ்வொரு நடவடிக்கையின் போதும் இவனைக்காப்பாற்ற துடித்த அல்லா

இவன் வீட்டுக்கு கூட்டிப்போகும் முடிவை எடுத்ததும்...

இனி அல்லாவாலும் உன்னைக்காப்பாற்ற முடியாது முகமெட்

விதியை மதியால் வெல்வதற்காக நான் கொடுத்த தருணங்களை எல்லாம் நீ பயன்படுத்தத்தவறிவிட்டாய்

இனி விதியே உன்னை வழி நடாத்தப்போகிறது

தொலைந்து போ என்று சலித்தபடி இவனது பைலை ஓரமாக வீசியவர்

தனது ஆத்திரத்தை தீர்க்க

விதியை மதியால் வெல்பவர்கள்

வெல்ல முயல்பவர்கள் இருக்கும் பக்கம் சென்று ஒரு பைலை எடுத்துக்கொண்டார்

அந்த பைல்

அவளுடைய  கணவனுடையது.....

 

தொடரும்....

 

 

Edited by விசுகு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பிறகு..... :D

தொடருங்கள்

 

பிறகு...

பொறுங்கள்....

 

நன்றி  வருகைக்கும் ஆர்வத்துக்கும் ஊக்கத்துக்கும்...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கதையின்... முடிவு எப்படி இருக்கும் என்று, எம்மால் ஊகிக்க கடினமாக உள்ளது.

தொடருங்கள்... விசுகு. :)

 

முடிவு அல்லாவின் கையில் சிறி... :lol:  :D

 

 

நன்றி  வருகைக்கும் ஆர்வத்துக்கும் ஊக்கத்துக்கும்...

விசுகண்ணாட கதையே. அப்ப ஒண்டுமே நடக்காது. என்ன தான் ஈரத்துணியோட இருந்தாலும். :lol:

 

உங்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யமுடியாமல்

எனது உறவுகள் எனது தலையில் பொறுப்பை வைத்துவிட்டார்கள்... :)

பொறுமையாக இருங்கள் :icon_idea:

 

 

நன்றி  வருகைக்கும் ஆர்வத்துக்கும் ஊக்கத்துக்கும்...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

என்னால் ஊகிக்க முடியுது, இந்தக் கதைக்கு ஒரு முடிவு இருக்கெண்டு...! :)

 

 

முடியும்

ஆனா முடியாது..

நன்றியண்ணா

வருகைக்கும் ஆர்வத்துக்கும் ஊக்கத்துக்கும்...

இது ஒரு புல்லரிக்கும் தொடர்கதை . அதனால்  கிழமைக்கு இரண்டு தொடர் மட்டும் தானாம் :D:lol:

 

 

திரிகளில் ஏற்பட்ட

கருத்துக்கள உறவுகளின் உரசல்களை களம் மாற்றவே இது திறக்கப்பட்டது

எனவே இழுக்கலாம்...

 

நன்றி  வருகைக்கும் ஆர்வத்துக்கும் ஊக்கத்துக்கும்...

2 - 3  ஆவது பதிவை வாசிக்கப் புல்லரிக்க ஆரம்பிக்கிறது. தொடருங்கள். 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

2 - 3  ஆவது பதிவை வாசிக்கப் புல்லரிக்க ஆரம்பிக்கிறது. தொடருங்கள். 

 

தேவையான  அளவு வரவேற்பு  கிடைக்கவில்லை

அதனால் நிறுத்தலாம் என்றிருந்தேன்...

 

நீங்க புல்லரிக்குது என்றதே பெரிய  வரவேற்பு எனக்கு.. :icon_idea:

தொடரலாம்...

 

நன்றி 

வருகைக்கும் ஆர்வத்துக்கும் ஊக்கத்துக்கும்...

Edited by விசுகு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இவன் வீட்டுக்கு கூட்டிப்போகும் முடிவை எடுத்ததும்...

இனி அல்லாவாலும் உன்னைக்காப்பாற்ற முடியாது முகமெட்

விதியை மதியால் வெல்வதற்காக நான் கொடுத்த தருணங்களை எல்லாம் நீ பயன்படுத்தத்தவறிவிட்டாய்

இனி விதியே உன்னை வழி நடாத்தப்போகிறது

தொலைந்து போ என்று சலித்தபடி இவனது பைலை ஓரமாக வீசியவர்

தனது ஆத்திரத்தை தீர்க்க

விதியை மதியால் வெல்பவர்கள்

வெல்ல முயல்பவர்கள் இருக்கும் பக்கம் சென்று ஒரு பைலை எடுத்துக்கொண்டார்

அந்த பைல்

அவளுடைய  கணவனுடையது.....

 

தொடரும்....

 

வீட்டுக்கு வந்தவுடன்

குளிக்கும் இடத்தைக்காட்டி குளித்து உடுப்புக்களை மாற்றும்படி சொல்லிவிட்டு

இருவருக்கும் தேநீர் போட்டான் முகமெட்.

 

தேநீர் போட்டுக்கொண்டிருக்கும் போது அவனது மனைவி தொலைபேசியில் தொடர்பு கொண்டு

காலையில் அவசரமாக போகும்  பொது

பிள்ளையின் முக்கிய  பொருட்கள் அடங்கிய தோழ்ப்பையை கதவடியில் விட்டு விட்டு வந்துவிட்டேன்

அதற்குள் இருக்கும் பொருட்களை  கொடுக்காது விட்டால் மகன் இரவுக்க படுக்கமாட்டான்

கொண்டு வந்து தரமுடியுமா எனக்கேட்டாள்.

அப்பொழுது தான் இவனும் கவனித்தான் அது வாசலடியில் கிடப்பதை.

ஓம் ஒரு அரை மணித்தியாலத்தில் கொண்டு வந்து தருகின்றேன் என்று சொல்லிக்கொண்டிருக்கும் போதே

அவள் உடுப்பு மாற்றி விட்டு வந்து இவர்களது படுக்கை அறையை எட்டிப்பார்த்தபடி வந்து அமர்ந்தாள்..

 

இவனுக்கு அவசரம்

பதபதைப்பு

அவளோ தேனீரைக்குடித்தபடியே அரை நித்திரைக்கு போய்விட்டிருந்தாள்..

அவளை உலுப்பியவன் 

தான் புறப்படணும் என்பதைச்சொன்னான்..

 

எத்தனையோ நாளாச்சு நான் நித்திரை கொண்டு....

உனது கட்டிலைக்கண்டதும் தூக்கம் தூக்கமாக வருகுது

நீ போய் வரும் வரை உனது கட்டிலில் நித்திரை கொள்கின்றேனே எனக்கெஞ்சினாள்..

இவனுக்கு என்ன சொல்வதென்றெ தெரியவில்லை

அவள் எழும்பி  நடப்பாள் போலவும் தெரியவில்லை

பாவமாகவும் இருந்தது..

 

சரி நான் 2 மணித்தியாலத்தில் திரும்பி  வந்துவிடுவேன்

அது வரை நித்திரை கொள்.

நான் வந்தவுடன்  போய்விடணும் என்றான்

கடவுளைக்கண்டது போல் கையெடுத்துக்கும்பிட்டாள்...

போகும் போது திறப்பைக்கொடுத்து உள்ளே பூட்டிக்கோ

நான் வந்து எனது 5 விரல்களும் கதவில் படும்படியாக 5 தரம் தட்டுவேன்

அப்படி தட்டினால் மட்டுமே திறக்கணும்

மற்றும் வீட்டு தொலைபேசி அழைப்பு வந்தால் எடுக்கக்கூடாது எனச்சொல்லிவிட்டு

TAXI எடுத்துக்கொண்டு புறப்பட்டான்

விதி விளையாட காத்திருக்கு என்பதையறியாமல்.....

 

தொடரும்...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

போகும் போது திறப்பைக்கொடுத்து உள்ளே பூட்டிக்கோ

நான் வந்து எனது 5 விரல்களும் கதவில் படும்படியாக 5 தரம் தட்டுவேன்

அப்படி தட்டினால் மட்டுமே திறக்கணும்

மற்றும் வீட்டு தொலைபேசி அழைப்பு வந்தால் எடுக்கக்கூடாது எனச்சொல்லிவிட்டு

TAXI எடுத்துக்கொண்டு புறப்பட்டான்

விதி விளையாட காத்திருக்கு என்பதையறியாமல்.....

 

தொடரும்...

 
 
 
காரை ஓட்டிக்கொண்டிருந்தாலும் மனசு முழுவதும்
அவளும்
அவளுக்கு நடந்த கொடுமைகளும்
இன்றைய தனது பொழுதும்
இன்னும் அவள் தன்னை விட்டுப்போகாததால் வரப்போகும் சங்கடங்களும்
என மனது அலைந்தது அவனுக்கு.....
 
நான் வந்து எப்படி இவளை அனுப்புவது?
மீண்டும் மீண்டும் உதவி கேட்பாளா?
எங்கு போவாள்?
எப்படி அர்த்த ராத்திரியில் வீதியில் விடுவது??
அல்லா என்ன இது சோதனை?? என கண்ணை மூடியவன்  
அல்லா என சத்தம் கேட்டு  பிரேக் பிடிக்கவும்
கார் ஒரு பெண்ணை  தூக்கி  எறிந்திருந்தது...
 
சனங்கள் ஓடிவந்து இவனை அடிக்கவர
ஏதோ நல்ல காலமாக பக்கத்தில் காவல்துறையினர் நின்றபடியால் தப்பித்தான்.
பொக்கற்றிலிருந்த பணம்
பத்திரங்கள்
கைத்தொலைபேசி அனைத்தும் பறிக்கப்பட்டு
கைத்தொலைபேசி உடனடியாகவே நிறுத்தப்பட்டு
உடனடியாகவே விலங்கு மாட்டப்பட்டுவிட்டான்...
 
கண் மூடிமுடிப்பதற்குள் இவை அத்தனையும் நடந்துவிட
இவனுக்கோ விபத்தைவிட
வீடே கண்முன்னே  நின்றது
மாட்டிக்கொள்ளப்போகிறேனே என அழாத குறையாக காவல்துறையினரிடம்  கெஞ்சினான்...
 
துனிசியிலெல்லாம் காவல்துறையை கை காட்டி கதைத்தாலே கை இருக்காது..
அவர்கள் சொல்வது தான் வேதவாக்கு
அவர்கள் சொல்வது தான் சட்டம்...
காவல்த்துறை வாகனத்தில் இவனைத்தூக்கிப்போட்டவர்கள்
காவல்த்துறை அலுவலகத்தை நோக்கி வாகனத்தை செலுத்தத்தொடங்கினர்......
 
தொடரும்...
 
 

Edited by விசுகு

அண்ணைக்கு என்ன நடந்தது ? கதை அந்த மாதிரி போகுது . :D

  • கருத்துக்கள உறவுகள்

வஸிட்டர் வாயால் பிரம்ம ரிசி....! கலக்குங்கள் விசுகு...!!

  • கருத்துக்கள உறவுகள்

ஆர்வத்துடன் வாசிக்கிறேன் விசுகர்!

 

புல்லரிக்குது தான்...!

 

கனடாக்காரருக்கும், ஐரோப்பியருக்கும் 'டபுள்' புல்லரிப்பாய் இருக்கும்!

 

குளிரைச் சொன்னேன்!  தொடருங்கள்!

  • கருத்துக்கள உறவுகள்

நன்றாகப் போகிறது விசுகு அண்ணா.. தொடருங்கள்..!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் விசுகர் :D

 

 

 

உந்தப் பக்கம் எல்லோ வர ஏலாமல் கிடக்கிது " ஒரு ஆத்தாத்தை இருந்த வீடு வளவு ஒண்டு விக்கப் போட்டவங்கள் அங்காலை  இஞ்சாலை பாத்திற்று தாறன் எண்டு காசு மாறி பொருத்திப் போட்டன். சித்திரை பிறக்க முதல் உள்ளுக்கு போகவேணும் ஊரிப்பட்ட வேலை கிடக்கிது   வேலைக்கு  வந்தவங்கள் எல்லாம் தண்ணிக்கு கீளால நெருப்பு கொண்டுபோறவங்களா இருக்கிறாங்கள் விட்டு விலத்த ஏலாமல் கிடக்கிது "

 

வந்த வீச்சுக்கு சுத்திப்போடு மாறீற்றான் எண்டு நினைசுப் போடுவியள் எண்டுதான் விசயத்தை சொன்னனான். இனிதான் கண்ணை புளிஞ்சு புளிஞ்சு வாசிக்கப்போறன் :lol:  

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
துனிசியிலெல்லாம் காவல்துறையை கை காட்டி கதைத்தாலே கை இருக்காது..
அவர்கள் சொல்வது தான் வேதவாக்கு
அவர்கள் சொல்வது தான் சட்டம்...
காவல்த்துறை வாகனத்தில் இவனைத்தூக்கிப்போட்டவர்கள்
காவல்த்துறை அலுவலகத்தை நோக்கி வாகனத்தை செலுத்தத்தொடங்கினர்......
 
தொடரும்...
 
முகமெட்டின்  மாமியார் வீட்டிலிருந்த அவனது மனைவி
அவனுக்கு பலமுறை தொலைபேசியில் அழைத்தாள்
கைத்தொலைபேசி நிறுத்தப்பட்டிருப்பதாக அலறியது.
வீட்டுக்கும் அழைத்தாள்
பதிலில்லை.
அரை மணித்தியாலத்தில் வருவதாக சொன்னவர்
ஒன்றரை மணித்தியாலமாகியும் இன்னும் வரவில்லை
அவளுக்குள் ஒருவித பயம்  படரத்தொடங்கியது.....
 
முகமெட்டின் தம்பியை தொலைபேசியில் அழைத்து நிலமையைச்சொன்னாள்..
அவனும் தொடர்பு கொள்ள முயன்றான்
தோல்வியே.
சரி  நான் நேரே வீட்டுக்குப்போய் பார்த்துவிட்டு தொடர்பு கொள்கின்றேன் என்றவன்
இரவானதால் தான் வளர்க்கும் நாயையும் பாதுபாப்புக்கு அழைத்துக்கொண்டு 
முகமெட்டின் வீட்டை நோக்கி போகலானான்...
 
வீட்டுக்கு போனவன்
ஆள் நடமாட்டமில்லாதது கண்டு
வீட்டின் கதவைத்தட்டினான்...
 
மிகுந்த தூக்கத்திலிருந்தவள்
கதவு தட்டப்படும் சத்தம் கேட்டு முழித்தாள்
அடிக்கடி தொலைபேசி அழைப்பு வந்து நிம்மதியான தூக்கத்தை குலைத்ததால் 
அடிக்கடி தூக்கம் கலைந்ததால் தலை வேறு இடித்தது...
 
நேரத்தைப்பார்த்தாள்
சரியாக அவன் போய் 2 மணித்தியாலமாகியிருந்தது
கதவை நோக்கி  நடக்கத்தொடங்கினாள்..
மீண்டும் கதவு தட்டப்படும் சத்தம் கேட்டது....
 
தொடரும்......
 
 
 

Edited by விசுகு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.