Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

6 பெண்களை பாலியல் வன்புணர்ந்ததாக அமெரிக்காவில் இந்திய யோகா குரு மீது புகார்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

201502271650353624_Hot-yoga-founder-Bikr

லாஸ் ஏஞ்சல்ஸ்,

அமெரிக்காவில் இந்திய யோகா குரு மீது அடுக்கடுக்காக செக்ஸ் புகார்கள் எழுந்துள்ளன. 6 பெண்கள் வழக்குகளை தாக்கல் செய்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இந்திய யோகா கல்லூரி என்ற பெயரில் யோகா கல்லூரி நடத்தி வருபவர், யோகா குரு பிக்ரம் சவுத்ரி (வயது 69). இந்திய அமெரிக்கர்.

இவர் கொல்கத்தாவை பூர்வீகமாகக் கொண்டவர். 3 வயதில் யோகா கற்கத் தொடங்கி அதில் வல்லுனர் ஆனார். திருமணமாகி ராஜஸ்ரீ என்ற மனைவி உள்ளார். குழந்தைகளும் உள்ளனர்.

01CBE95E-CD1F-4F88-9CA2-44CCF7C9F558_L_s

இவர் சுயமாக 26 யோகா நிலைகளை உருவாக்கி உள்ளார். இந்த யோகா பயிற்சியை 105 டிகிரி பாரன்ஹீட் வெப்ப நிலையில் உள்ள அறையில், உடலோடு ஒட்டி உறவாடும் இறுக்கமான உடை அணிந்துதான் செய்ய வேண்டும்.

இவர் தன்னிடம் யோகா கற்க வந்த பெண்களை பாலியல் பலாத்காரம் செய்ததாக அடுக்கடுக்காக புகார்கள் எழுந்துள்ளன. குறிப்பாக, 6 பெண்களை இந்தியா உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வைத்து பாலியல் வன்புணர்வு கொண்டதாக அமெரிக்காவில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.

E232D7C7-B5D9-45E9-9502-F2BE2A2EEE90_L_s

சமீபத்தில் இவர் மீது 6-வது வழக்கை லாஸ் ஏஞ்சல்ஸ் நகர் சுபீரியர் கோர்ட்டில் ஜில் லாலர் என்ற கனடா பெண் கடந்த் 13 ந்தேதி தொடர்ந்துள்ளார். இவர் முதலில் யோகா பயிற்சி பெற்று, பின்னர் அவரது நிறுவனத்தில் பயிற்சியாளராக பணியாற்றியவர். இவர் தனது வழக்கில் கூறி இருப்பதாவது:-

நான் யோகா மாஸ்டரிடம் (பிக்ரம் சவுத்ரி) 18 வயதில் யோகா கற்பதற்காகத்தான் சென்றேன். 2010-ம் ஆண்டு நான் போனேன். ஆனால் பல மாற்றங்கள் அதிரடியாக நடந்து விட்டன. அவர் நூற்றுக்கணக்கான மாணவர்களுடன் பின்னிரவில் இந்திப் படங்கள் பார்ப்பார். அப்போது நான் அவருக்கு மசாஜ் செய்ய வேண்டும் என்று எதிர்பார்த்தார். முதலில் செக்ஸ் தொல்லைகள் கொடுத்தார். அதைத் தொடர்ந்து பல முறை அவர் என்னை பாலியல் வன்புணர்வு செய்துவிட்டார்.

519902A0-DC8D-4DC5-9DE4-5A6E314066C8_L_s

அவர் இது தொடர்பாக ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு விளக்கம் தருவார். தனது செயலை சரியானதுதான் என நிலை நாட்டினார். அவர், ’நான் செத்துக்கொண்டிருக்கிறேன். நீதான் என்னை காப்பாற்ற வேண்டும். நான் உன்னுடன் செக்ஸ் உறவு வைத்துக்கொள்ளாவிட்டால் செத்து விடுவேன். நீ என் உயிரைக் காப்பாற்றிக்கொண்டிருக்கிறாய். நீ எனக்கு உதவுகிறாய்’ என்றெல்லாம் கூறி இருக்கிறார்.

முதலில் அவர் சாதாரணமாகத் தான் ஆரம்பித்தார். அடுத்து அவர் தனது லீலைகளை ஒவ்வொன்றாக அரங்கேற்றி, பாலியல் வல்லுறவு வரை வந்து விட்டார். இந்தியா உள்பட பல்வேறு இடங்களில் வைத்து அவர் என்னை பாலியல் வல்லுறவு புரிந்தார். எனக்கு வெட்கமாகவும் தர்ம சங்கடமாகவும் போய் விட்டது. யாரும் இதை நம்புவார்கள் என நான் கருதவில்லை. அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அந்த வழக்கில் கூறப்பட்டுள்ளது.

ஆனால் பிக்ரம் சவுத்ரி மீதான இந்தக் குற்றச்சாட்டுகளை அவரது வக்கீல்கள் மறுத்துள்ளனர்.இது தொடர்பாக அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில், 'எங்கள் கட்சிக்காரர் மீதான குற்றச்சாட்டுகள் தவறானவை. யோகா சமூகம் மீது தேவையற்ற களங்கம் சுமத்தப்பட்டுள்ளது. பல்லாண்டு காலம் ரகசியமாக வைத்து விட்டு, இப்போது அந்தப் பெண்கள் தாமாக தனிப்பட்ட முறையில் தங்கள் குற்றச்சாட்டுகளுடன் வர வில்லை. இது தொடர்பாக சமூக வலைத்தளங்களில் உலகளாவிய ஆதரவு திரட்டி விட்டு புகார் கூறி உள்ளனர். நிதி ஆதாயம் பெறுவதற்காக சட்டத்தை அவர்கள் தவறாகப் பயன்படுத்தி உள்ளனர்' என கூறப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் பெண்களுக்காக ஆஜராகும் வக்கீல் மேரி சியா, 'பாதிக்கப்பட்ட அனைத்துப் பெண்களின் புகாரின் மைய குற்றச்சாட்டு, தாங்கள் நம்பிக்கை மோசடி செய்யப்பட்டு விட்டதுதான். ஆனால் 6 பேரின் புகாரும் வெவ்வேறானவை. ஒரே வழக்காக அவற்றை இணைக்க முடியாது'என கூறி உள்ளார். லாரிசா ஆன்டர்சன் என்ற பெண் தனது வழக்கில், ' மனைவியும், பிள்ளைகளும் மாடியில் இருந்தபோதே என்னை சவுத்ரி பாலியல் வல்லுறவு செய்து விட்டார்' என கூறி இருப்பது குறிப்பிடத்தக்கது.

விக்ரம் சவுத்ரி மீதான செக்ஸ் புகார்கள், அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.

http://www.dailythanthi.com/News/World/2015/02/27165046/Hot-yoga-founder-Bikram-Choudhury-faces-more-rape.vpf

நியானி: தவிர்க்கப்படவேண்டிய பதங்கள் திருத்தப்பட்டுள்ளன.

Edited by நியானி

  • கருத்துக்கள உறவுகள்

படத்தைப் பார்த்தாலே தெரியுது.. ஆள் கட்டாயம் செய்திருப்பார்.. :huh: உள்ளே பிடிச்சுப் போடுங்க யுவர் ஆனர்.. :o

  • கருத்துக்கள உறவுகள்

519902A0-DC8D-4DC5-9DE4-5A6E314066C8_L_s

யோகா பழகப் போனவர்கள்....smiley7702.jpg நீச்சல் உடையுடன், ஏன் போனவர்கள்.
சவுத்திரி மேல் குற்றம் இல்லை, போன ஆட்கள் போட்ட உடுப்புத் தான்.... அவரை பாலியல் வன்முறை செய்ய தூண்டியிருக்கு.smiley6575.gif

  • கருத்துக்கள உறவுகள்

519902A0-DC8D-4DC5-9DE4-5A6E314066C8_L_s

யோகா பழகப் போனவர்கள்....smiley7702.jpg நீச்சல் உடையுடன், ஏன் போனவர்கள்.

சவுத்திரி மேல் குற்றம் இல்லை, போன ஆட்கள் போட்ட உடுப்புத் தான்.... அவரை பாலியல் வன்முறை செய்ய தூண்டியிருக்கு.smiley6575.gif

இதுக்குத்தான் ஊருக்கு, ச..ச.. யாழுக்கு எல்லாம் தெரிந்த ஆல் இன் ஆல் அழகுராஜா வேணுங்கிறது.

மறுத்தான் பாயின்டோட எதிர்கட்சி லாயர் வந்திட்டார்.

இசையருக்கு, அடுத்த பாயின்டு தேடும் வரை, கோட்டு ஸ் அட்யான்ட்.

ஜய்ச் ஐயா, இரண்டு பைண்ட் அடிச்சிட்டு வந்து மிகுதி பாயிண்டுகளை கேட்பார். :D

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

அப்போ!.. யோகம் பெறுவதற்கு வேறு என்னதான் வழி...........??? :(  :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

unif.gifjuge.gifmagistrate-smiley-emoticon.gif

 

ஆர்டர்.... ஆர்டர்.... ஆர்டர்.....
இசைக் கலைஞன் அவர்கள், தனது தரப்பு வாதத்தை, இப்போது தெரிவிக்கலாம்.

 

#####

 

avocatperruque.gifகனம் கோட்டார் அவர்களே....
இசைக் கலைஞன் தனது வாதத்தை முன் வைக்காவிடில், "மௌனம் சம்மதத்துக்கு அறிகுறி" என்பதை கவனத்தில் எடுத்து....

எனது தரப்புக்கு, சாதகமான தீர்ப்பை அளிக்கும்படி....வினயமாக வேண்டிக் கொள்கின்றேன்.avocatcolere.gif
நன்றி.. யூவார் ஆனர்.unif4.gif
 

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

69 வயசு.....

 

நன்றி

நமக்கும் காலம் இருக்கு.. :icon_mrgreen:  :D

  • கருத்துக்கள உறவுகள்

69 வயசு.....

 

நன்றி

நமக்கும் காலம் இருக்கு.. :icon_mrgreen:  :D

 

ஹ்ஹ்ம்ம்ம்.... இப்பிடியே சொல்லி ஆறுதல் அடைய வெண்டியது தான்.

இனி, யோகா... பயின்று, ஆட்களுக்கு கற்பிப்பது என்றால்... நடவாத காரியம்.

சவுத்திரி, மூன்று வயதில் யோகா கற்க ஆரம்பித்து தான்.... இந்த உயரத்துக்கு வந்தவர், என்று செய்தியில் உள்ளதை... விசுகர் கவனிக்கவில்லை போலுள்ளது. :D  :lol:

  • கருத்துக்கள உறவுகள்

ஹ்ஹ்ம்ம்ம்.... இப்பிடியே சொல்லி ஆறுதல் அடைய வெண்டியது தான்.

இனி, யோகா... பயின்று, ஆட்களுக்கு கற்பிப்பது என்றால்... நடவாத காரியம்.

சவுத்திரி, மூன்று வயதில் யோகா கற்க ஆரம்பித்து தான்.... இந்த உயரத்துக்கு வந்தவர், என்று செய்தியில் உள்ளதை... விசுகர் கவனிக்கவில்லை போலுள்ளது. :D  :lol:

 

அவருக்காவது தெரிந்திருக்கு... :icon_mrgreen:  :D

69 வயசு பொல்லாதது.. மேல போனாலும் கீழ வந்தாலும் ஒரேமாதிரித்தான்...  :o  :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

ஜில் லாலருக்கு யாராவது சொல்லுங்கப்பா, முதல்முறை ஏற்படுவதுதான் வன்புணர்வு... பின்னால் தொடர்வதெல்லாம் மின்புணர்வுகள்..!! ^_^:)

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி யுவர் ஆனர்.. :D

யோகாவின் முடிவில் மனக்கட்டுப்பாடு கட்டாயம் கிடைக்க வேணும் யுவர் ஆனர்.. அதனால் சீடர்கள் நீச்சல் உடையில் வந்து குருவின் அடக்கத்தை சோதித்துள்ளார்கள்.. :o ஆனால் குரு அடங்க மறுத்துள்ளார் யுவர் ஆனர்.. :blink: ஆகவே குருவுக்கு ஆண்மை சோதனை செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் யுவர் ஆனர். dizzy.gif:D

  • கருத்துக்கள உறவுகள்

மேன்மை... தங்கிய, நீதிபதி அவர்களே....
 

எதிர் தரப்பினர் கூறுவது போல், 69 வயது நிரம்பி... 70 வயதை எட்டப் போகும் சவுத்திரியிடம், 

ஆண்மை சோதனை நடத்த வேண்டும் என்று கேட்பது,  மருத்துவ நடைமுறைக்கு ஏற்புடையதல்ல.
ஏனென்றால்.... சவுத்திரியிடம், இருப்பது... காத்துப் போன பலூன்.
 

இதிலிருந்து.... நாம் அறிவது என்ன என்றால், சவுத்திரியின் பெயரை பாவித்து...
அந்த, யோகா நிலையத்தில் உள்ள.... "வாட்ச் மேன்" இந்த ஆறு அமெரிக்க பெண்களையும்... வன்புணர்வு செய்துள்ளார்.
சவுத்திரிக்கு ஆண்மை சோதனை நடத்தும் திட்டத்தை கைவிட்டு,

அந்த "வாட்ச் மேனை" இழுத்து வந்து, ஆண்மை சோதனை நடத்துங்கையா... :D

 

நன்றி, யுவார் ஆனர்.
(பக்கத்து பெட்டிக்கடையில,  ஒரு "பிளேன் சோடா" ஆர்டர் பண்ணி வாங்கி குடிச்சுட்டு, டக்கென்று வந்திடுறன்.) :lol:

Edited by தமிழ் சிறி

519902A0-DC8D-4DC5-9DE4-5A6E314066C8_L_s

யோகா பழகப் போனவர்கள்....smiley7702.jpg நீச்சல் உடையுடன், ஏன் போனவர்கள்.

சவுத்திரி மேல் குற்றம் இல்லை, போன ஆட்கள் போட்ட உடுப்புத் தான்.... அவரை பாலியல் வன்முறை செய்ய தூண்டியிருக்கு.smiley6575.gif

 

 

இப்படியான விடயங்களில் நீங்கள் வைத்தியர்;இல்லை வைத்திய கலாநிதி அதற்கும் மேலே போலத்தெரிகின்றது

  • கருத்துக்கள உறவுகள்

சைலன்ட் பீளீஸ்.

ஜய்ச் ஐயா, கொஞ்சம் கூட அடித்து கவுண்டு போனார்.

வக்கீல்களின் வாதங்களையும், பாயிண்டுகளையும் வைத்து பார்க்கையில், இந்த வழக்கு சுவாரசியமாக இருக்கிறது.

69 வயது சவுத்திரி, தீடீரென பெண்கள் மீது வன்முறை செய்தார் என்பதற்கு சான்றுகள் இல்லை.

அவர் தவறா நடப்பதாக உணர்ந்த உடனே அப்பெண்கள் விலகிச் செல்லவும் இல்லை. பொலீஸ் முறைப்பாடு செய்யவும் இல்லை.

மாறாக அவருடன் இந்தியா எல்லாம் சுயமாக சென்று வந்த பின், இவ்வாறு தீடீரென முறையிடுவது பணம் பறிக்கும் நோக்கம் கொண்டது என இந்த யாழ்கள மன்று தீர்மானிக்கின்றது.

சவுத்திரி, காத்துப் போன பை தான் என திறமையாக பாயிண்ட் பிடித்து வாதாடிய எதிர்தரப்பு வக்கீல் பாராட்டப்படுகிறார்.

இதுக்கு மேல தாங்காது. எங்கப்பா கூலீங் பியரு? :D

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

நாடே குளிரா இருக்கையில பிரிட்ஜ்க்கு ஏன் தனியா எக்ஸ்ரா குளிரு எண்டு கடைக்காரர் பிரிட்ஜ்சை நிப்பாட்டி வச்சிட்டார்.பியர் கொஞ்சம் சூடாத்தான் இருக்கு ,வாங்கி வரட்டுங்கலா ஐட்ஜூ ஐயா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
யோகாசனம்  சொல்லி கொடுக்கும் போது ....கைகள் வழுக்குபடுவது இயல்புதானே...இதற்கு பெயர் பாலியல் வன்புணர்வு!!!!!!!  :D
 
நல்லதுக்கு காலமில்லை. :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.