Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

குமார் சங்கக்கார மறுமுகம்

Featured Replies

சங்காவின் மறுமுகம்
 

இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் குமார் சங்கக்கார சிறந்த கிரிக்கெட் வீரர் என்பதுடன் சிறந்த வயலின் கலைஞர் என்பதை தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் வெளிப்படுத்தியிருந்தார்.

 

33fffib.jpg

குமார் சங்கக்கார  வயலின் வாசிக்கும் தனது திறமையை அண்மையில் இந்திய தொலைக்காட்சி நடத்திய நிகழ்ச்சியில் வெளிப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

http://youtu.be/jKp4frmbYhs

 

 

 

http://www.virakesari.lk/articles/2015/03/06/%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D

  • கருத்துக்கள உறவுகள்

எனது அபிமான வீரர் சங்கக்கார. அவர் சிங்களவர் என்பதெல்லாம் வேறு விடயம்.

 

மிகச் சிறந்த பேச்சாளர். சிறந்த நாவடக்கம் கொண்டவர்.

 

இன்றிருக்கும் பல முண்ணனி வீரர்களிடம் இல்லாத சிறப்பம்சங்கள் இவை.

 

துடுப்பாட்டத்தில் இவருக்கு சமமாக இருக்கும் இந்தியாவின் கோலிக்கும் இவருக்குமான கனவான் குணத்தில் வித்தியாசம் மடுவுக்கும் மலைக்குமான வித்தியாசம் !

  • தொடங்கியவர்

உண்மை ரகு, எனக்கும் பிடித்த வீர்ர் அது தான் நான் profile படத்திலேயே போட்டிருக்கிறேன்.

கனவான் குணம்!! :o

 

  • கருத்துக்கள உறவுகள்

இன்றுதான் இதைப்பற்றி கேள்விப்படுகிறேன்.. :o

 

  • தொடங்கியவர்

இது நடந்தது தான், ஆனால் நான் நினைக்கிறேன் நோபால் போடும்படி சொன்னது டில்ஷான்.

  • கருத்துக்கள உறவுகள்

இது எனக்குத் தெரியாது. ஆனால் நடந்திருப்பது உண்மையே.

 

தில்ஷான் பந்துவீச்சாளரிடம் தேவையென்றால் னோ போல் பொடு என்று கூறுவது கேட்கிறது. பந்துவீச்சாளரும் சங்கக்காரவையும், மற்றைய அணியின் மூத்த வீரர்களையும் பார்த்தபின்னர் னோ போல் போடுகிறார்.

 

ஆனால் போட்டி முடிந்த பின்னர் தமது தவறை உணர்ந்து இந்திய அணியின் சேவாக்கிடமும், தோனியிடமும் மன்னிப்புக் கோரியிருக்கிறார்கள்.

 

நடந்தது தவறுதான்.

  • கருத்துக்கள உறவுகள்

ஜெயவர்தன, சங்கக்கார: இவர்கள் சிங்களவர்கள் என்றாலும், இவர்களின் துடுப்பாட்டம் ஒரு பாட புத்தகம் மாதிரி. இங்கிலாந்தில் ரெண்டு கழகங்களில் சிறுவர் அணிக்களுக்கு பயிற்ச்சி விப்பாளராக இருந்தேன். பெரும்பான்மையான வர்கள் இவர்கள் இருவரையும் பின் பற்றுகிறார்கள். முக்கியமாக சங்கக்கார ஒரு பந்தை மூன்று வித்தியாசமான திசைகளில் அடிக்கக் கூடியவர். ஜெயவர்தன, wrist shot நன்றாக விளையாடுவார்.

இது நடந்தது தான், ஆனால் நான் நினைக்கிறேன் நோபால் போடும்படி சொன்னது டில்ஷான்.

 

 

Sri Lanka captain Kumar Sangakkara on Wednesday took full responsibility for the'no-ball' incident during his team's tri-series match against India and said his Board will take appropriate action if any player is found guilty.

"I regret what happened, we need to take responsibility as a team. The incident is up to the Board to take a decision. The Board has said they will take action. I spoke my mind out to the team on the whole incident. Now it's up to cricket board to decide what way we should go," Sangakkara told a press conference ahead of his side's tri-series match against New Zealand on Thursday.

 

 

http://cricket.rediff.com/report/2010/aug/18/kumar-sangakkara-takes-blame-virender-sehwag-randiv-no-ball-incident.htm

  • தொடங்கியவர்

அந்த நேரம் சங்ககாரா அணித்தலைவர் என்ற படியால் இந்த நோபோல் பிரச்சினைக்கு தார்மீக ரீதியில் பொறுப்பெடுத்திருக்கலாம். ஆனால் அப்படி நோபோல் போட சொன்னது டில்சான் என்பதே உண்மை. சரி இப்ப இதுக்கு என்ன செய்வது? இது நடந்து இப்ப 5/6 வருடங்களாக இருக்கலாம்.

நானும் நேற்று பல வீடியோக்கள் இது சம்மந்தமாக பார்த்தேன். அந்த கடைசி பந்தை காலுக்குபோடும்படி தான் சங்ககாரா சிங்களத்தில் சொல்வதாக எனக்கு விளங்கியது.நோபோல் போடும்படி சங்ககாரா சொல்லவில்லை.

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

சங்கா - அணித்தலைவராக, தான் செய்யாத தப்புக்கு மன்னிப்பு கேட்டது அவரின் கனவான் குணத்தை மேலும் எடுத்துக் காட்டுகிறது.

இனவாதமில்லா சிங்களவர்களில் ஒருவர். இவரின் கொலின் கெளட்றி லெக்சரை கேட்டுப்பார்த்தால் புரியும்.

  • கருத்துக்கள உறவுகள்

சங்கக்கார தெண்டுல்க்கர் மாதிரி ஒரு சிறந்த அடிப்படை துடுப்பாட்ட விளையாட்டு வீரர் மட்டுமே,கனவான் குணம் உள்ளவர் என்று சொல்வது மிகைப்படுத்தப்பட்ட கருத்து.சங்கக்காரவும் தெண்டுல்க்கரும் எப்போதும் ஆட்டத்தை நிர்ணயிப்பவர்கள் அல்ல தனியாளாக ஆட்டத்தின் போக்கை மாற்றக்கூடியவர்களான லாரா,கெயில்,கோலி மாதிரியான ஆட்டங்களை இவர்களிடம் எதிர்பார்க்க முடியாது. கனவான் குணத்திற்கு என்னைப்பொறுத்தவரை தோனிதான்.

  • கருத்துக்கள உறவுகள்

சங்கக்கார தனிப்பட்ட ரீதியில் சிறந்த மனிதர், சிறந்த துடுப்பாட்ட வீரர் ,வயலின் விற்பன்னர் ,சட்டம் படிப்பவர் ,இனவாதமற்றவர்
எல்லாமே ஏற்றுகொள்ளகூடியவை , யாரும் மறுக்கபோவதில்லை , ஆனால் இலங்கை அணி அப்படியல்ல அதன் தெரிவாளர்கள் அப்படியல்ல இனத்துவேசத்தின் மறுவடிவமே இலங்கை அணி ,அடுத்த அரசியல் சாக்கடை , சங்ககார இருப்பதால் அணியோ அதனுடன் தொடர்புடையவர்களோ சுத்தமாக இருக்கபோவதில்லை, 80/90 களில் தமிழர்களின் உயிரை காப்பாற்றிய எத்தனையோ சிங்களவர்கள் இருக்கின்றனர் அதனால் இலங்கை சுத்தமாகவா அல்லது இனத்துவேசமற்றா இருக்கிறது ...? :D 
http://www.sundaytimes.lk/130505/sports/are-the-lankan-cricket-selectors-playing-hide-and-seek-43435.html
 

மூலம் :Sunday Times

Edited by அக்னியஷ்த்ரா

  • கருத்துக்கள உறவுகள்

உண்மைதான். சங்காவை வைத்து கொண்டு இலங்கைக்கு வெள்ளை அடிக்க முடியாது.

ஆனால் இந்தியாவுடன் ஒப்பிடுகையில் இலங்கை எவ்வளவோ மேல், கிரிகெட் இனவாததில்.

6.5 கோடி தமிழர்கள் வாழும் இந்தியாவில் இதுவரை டெஸ்ட் விளையாடிய பிராமணர் அல்லாத தமிழரை காண முடியாது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.