Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வெளிநாட்டுப் பணிப்பெண் வேலைவாய்ப்பும் சமூக சீரழிவும்

Featured Replies

குவைத்தில் உயிரிழந்த பெண்ணின் சடலத்தை கொண்டுவர நடவடிக்கை

 

குவைத் நாட்டில் உயிரிழந்த மட்டக்களப்பைச் சேர்ந்த பெண்ணின் சடலத்தை இலங்கைக்குக் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக உயிரிழந்த பெண்ணின் உறவினர்கள் தெரிவித்தனர். மட்டக்களப்பு, சத்துருக்கொண்டான் மூன்றாம் குறுக்குத்தெருவில் வசித்து வந்த சோமசுந்தரம் சர்நீதியா (22) என்பவரே இவ்வாறு குவைத்தில் உயிரிழந்துள்ளார்.

 

குறித்த பெண் கடந்த நான்கு மாதத்துக்கு முன்னர் பணிப்பெண்ணாக குவைத் நாட்டுக்கு சென்றிருக்கின்றார். ஆரம்ப காலத்தில் உறவினர்களுடன் தொடர்புகொண்டு கதைத்த இவரைப் பற்றி கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக தகவல் எதுவுமில்லாததால் யுவதியின் உறவினர்கள் மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தனர்.

 

இந்நிலையில் கடந்த 01.03.2015 அன்று அவர் வேலை செய்த வீட்டில் உயிரிழந்துள்ளதாக உறவினர்களுக்கு அறியக்கிடைத்துள்ளது. எனினும் காரணம் அறியப்படவில்லை. இந்த பெண்ணின் உறவினர்களுக்கு இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தினால் அதன் அலுவலகத்துக்கு வருகை தருமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டதாக உறவினர்கள் தெரிவித்தனர். உயிரிழந்த பெண், நான்கு வயதுடைய குழந்தையையுடைய கைம்பெண் என்பது குறிப்பிடத்தக்கது. -

 

http://www.tamilmirror.lk/141525#sthash.82V49GUa.dpuf

Edited by Athavan CH

  • தொடங்கியவர்

குவைத்தில் மட்டக்களப்பை சேர்ந்த தமிழ் பெண் பாலியல் பலாத்காரத்தால் பலி

 

குவைத் நாட்டில் மட்டக்களப்பைச் சேர்ந்த இளம் தமிழ் பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார். இவரின் சடலத்தை இலங்கைக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக உயிரிழந்த பெண்ணின் குடும்ப உறவினர்கள் தெரிவித்தனர்.
 
மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் கிராமத்தை சேர்ந்த 22வயதுடைய சோமசுந்தரம் சர்நீதியா என்ற இளம் பெண்ணே கொல்லப்பட்டுள்ளார்.  இப்பெண் கடந்த நான்கு மாதத்திற்கு முதல் குவைத் நாட்டிற்கு சென்றிருந்தார்.
இந்த பெண் கடந்த முதலாம் திகதி வேலை செய்த வீட்டில் உயிரிழந்துள்ளார்.
 
இவரைப் பற்றி கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக தகவல் எதுவுமில்லாததால் இந்த யுவதியின் குடும்ப உறவினர்கள் மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தனர்.  இப்பெண்ணுக்கு நான்கு வயதுடைய குழந்தை உண்டு எனவும் இவரது கணவர் இறந்து விட்டதாகவும் உறவினர்கள் தெரிவித்தனர்.
 
இப்பெண் கடுமையான பாலியல் சித்திரவதை காரணமாகவே உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
batti-girl.jpg
 
batti-girl-ic-1.jpg
 
batti-girl-ic.jpg
 
 

தாயின் சோகம், குழந்தை ஒன்று அநாதையாகியது.

 

குவைத் நாட்டில் உயிரிழந்த மட்டக்களப்பைச் சேர்ந்த பெண்ணின் சடலம் இன்று வெள்ளிக்கிழமை (13) காலை சத்துருக்கொண்டானில் நல்லடக்கம் செய்யப்பட்டது. மட்டக்களப்பு, சத்துருக்கொண்டான் மூன்றாம் குறுக்குத்தெருவில் வசித்து வந்த சோமசுந்தரம் சர்நீதியா (22) என்பவரே இவ்வாறு குவைத்தில் உயிரிழந்தார்.

 
குறித்த பெண் கடந்த நான்கு மாதத்துக்கு முன்னர் பணிப்பெண்ணாக குவைத் நாட்டுக்கு சென்றிருக்கின்றார்.
 
காத்தான்குடியைச் சேர்ந்த உப முகவர் ஒருவரின் ஊடாக கொழும்பிலுள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் குவைத்துக்கு அனுப்பியிருந்தார். ஆரம்ப காலத்தில் உறவினர்களுடன் தொடர்புகொண்டு கதைத்த இவரைப் பற்றி கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக தகவல் எதுவுமில்லாததால் யுவதியின் உறவினர்கள் மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தனர்.
 
இந்நிலையில் கடந்த 01.03.2015 அன்று அவர் வேலை செய்த வீட்டில் உயிரிழந்துள்ளதாக உறவினர்களுக்கு அறியக்கிடைத்துள்ளது. எனினும் காரணம் அறியப்படவில்லை. இந்த பெண்ணின் உறவினர்களுக்கு இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தினால் அதன் அலுவலகத்துக்கு வருகை தருமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டது.
 
நேற்றைய தினம் வியாழக்கிழமை (12) இரவு வீட்டிற்குக் கொண்டுவரப்பட்ட சடலம் உடனடியாக நல்லடக்கம் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. உயிரிழந்த பெண், நான்கு வயதுடைய குழந்தையையுடைய கைம்பெண் ஆவார்.
 
batti-sarnithiya-600x903.jpg
 
 
Batti-Mother-600x398.jpg
 
batti-600x398.jpg
 
முஸ்லீம் நாடுகளுக்கு தமிழ்பெண்கள் செல்வதைத் தவிர்க்கும் அறிவூட்டல் கிழக்கு, வன்னிப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட வேண்டும்.
 
நவீன உலகின் காட்டு மிராண்டிகள் இந்த முஸ்லீம் நாடுகள்.
 
  
  • 2 weeks later...
  • தொடங்கியவர்

இலங்கை பணிப்பெண்கள் இருவரின் சடலங்கள் சவுதியில் மீட்பு 

 

சவுதி அரேபியாவின்அஸீர் பிரதேசத்தில் பணிப்பெண்களாக சேவையாற்றுவதற்கு சென்றிருந்த இலங்கை பணிப்பெண்கள் இருவர் மரணமடைந்துள்ளதாக அந்நாட்டு செய்தி தெரிவிக்கின்றது.

இவ்விருவரில் ஒருவர் விபத்திலும் மற்றவர் எரியூட்டப்பட்ட நிலையிலும் மரணமடைந்துள்ளனர் என்றும் அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
அவர்களில் ஒருவர் திருகோணமலை உப்புவேலியை வசிப்பிடமாக நசுரா என்றும் அவர் கொண்ட ஐந்து பிள்ளைகளின் தாயாவார்.இன்றைக்கு ஆறு மாதங்களுக்கு முன்னரே பணிப்பெண்ணாக அவர் சவுதிக்கு சென்றுள்ளார்.
 
தான், பணிப்பெண்ணாக இருந்த எஜமானின் வீட்டு எஜமானி தன்னை தாக்கியதுடன் பல்வேறான துன்புறுத்தல்களுக்கும் உட்படுத்தினார். அத்துடன் சில நாட்களுக்கு முன்னர் பெற்றோல் அல்லது வேறு ஏதாவது எரிபொருட்களை ஊறி, அறைக்குள் போட்டு பூட்டி எரியூட்டியிட்டினார் என்று அஸர் வைத்தியசாலையின் ஊழியரிடம் அந்த பணிப்பெண் தெரிவித்துள்ளார்.
 
அஸர் வைத்தியாசாலைக்கு வெளியே உயிருக்காக துடித்துகொண்டிருந்த அப்பெண்ணை, வைத்தியசாலை ஊழியர்கள் வைத்தியசாலையில் அனுமதித்ததாக அந்நாட்டில் இருக்கின்ற இலங்கை சமூக சேவையாளரான நிமல் எடேரமுல்ல தெரிவித்துள்ளார் என்றும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அஸர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள இலங்கை பணிப்பெண்களை பார்வையிடுவதற்காக சென்றிருந்த போதே வைத்தியசாலை ஊழியர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
 
எவ்வாறாயினும் அந்த பெண், 25ஆம் திகதி புதன்கிழமை மரணமடைந்துள்ளார். அவருடைய சடலம் அஸர் வைத்தியசாலையின் சவச்சாலையில் வைக்கப்பட்டுள்ளது.
 
அந்த பெண் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் அராபிமொழியில் எழுதப்பட்ட ஆவணமொன்றில் அவருடைய பெருவிரல் அடையாளம் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.
 
இதற்கிடையில் அபா பிரதேசத்திலிருந்து 60 கிலோமீற்றர் தூரத்தில் இருக்கின்ற அரப் மலை பிரதேசத்தில் பணியாற்றிய இலங்கை பணிப்பெண்ணான மற்றுமொரு பெண், எஜமானின் வீட்டிலிருந்து தப்பியோடிய போது விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார் என்று ஜேடா கவுன்சிலர் காரியாலயம் தெரிவித்துள்ளது.
அவர், இலங்கை பிரஜை என அடையாளம் காணப்பட்டுள்ள போதிலும் அவர் தொடர்பிலான மேலதிக தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை என்று அந்த காரியாலயம் தெரிவித்துள்ளது.
அப்பெண்ணின் சடலம், ஜிசாத் வைத்தியசாலையின் சவச்சாலையில் வைக்கப்பட்டுள்ளது.
 
 
  • தொடங்கியவர்
குவைத், சவூதி சென்ற பெண்களில் ஆறு பேர் குழந்தைகளை பெற்ற பின்னர் நாடு திரும்பினர்
 
  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்..!

பணிப்பெண்களால் இலங்கைக்கு அதிக அந்நிய செலாவணி கிடைக்கின்றது. ஆகவே அவர்கள் இதை ஊக்கப்படுத்துகிறார்கள். இறந்துபோனால் உடலை எடுத்துவர உதவி செய்வார்கள். அவ்வளவும்தான்.

இந்த முஸ்லிம்கள் செய்யும் இந்த அநியாயங்களை எல்லாம் கண்டும் காணாமல் இருக்கும் உலகில் தான் குற்றம் .

மத்திய கிழக்கு நாடுகளில் நடக்கும் மனித உரிமை மீறல்களை எவரும் கண்டு கொள்வதும் இல்லை கேள்வி கேட்பதும் இல்லை .

இவற்றை பற்றி ஆயிரம் விபரணப் படங்கள் வந்துவிட்டது  ஆனால் எல்லாம் செவிடன் காதில் ஊதிய சங்குதான் .அண்மையில்  ஒன்று பார்த்தேன் பாலைவனத்தில் ஓட்டக ரேஸ் .மிகப்பெரிய வாகனங்களில் பாலைவனத்தில் வந்து இறங்கும் சேக்குகள் தான் பார்வையாளர்கள் .ஒட்டகங்கள் ஓடுபவர்கள் சிறுவர்கள் ஒரு லயம போன்ற இடத்தில் தான் அவர்களை மிருகங்களை வளர்ப்பது போல வளர்கின்றார்கள் .பயிற்சியின் போது அடிஎன்றால் சொல்லி மாளாது .

கமாராவை ஒழித்து கொண்டுபோய் எடுத்த படம் நினைக்கின்றேன் .

Edited by arjun

  • கருத்துக்கள உறவுகள்

இந்த முஸ்லிம்கள் செய்யும் இந்த அநியாயங்களை எல்லாம் கண்டும் காணாமல் இருக்கும் உலகில் தான் குற்றம் .

மத்திய கிழக்கு நாடுகளில் நடக்கும் மனித உரிமை மீறல்களை எவரும் கண்டு கொள்வதும் இல்லை கேள்வி கேட்பதும் இல்லை .

இவற்றை பற்றி ஆயிரம் விபரணப் படங்கள் வந்துவிட்டது  ஆனால் எல்லாம் செவிடன் காதில் ஊதிய சங்குதான் .அண்மையில்  ஒன்று பார்த்தேன் பாலைவனத்தில் ஓட்டக ரேஸ் .மிகப்பெரிய வாகனங்களில் பாலைவனத்தில் வந்து இறங்கும் சேக்குகள் தான் பார்வையாளர்கள் .ஒட்டகங்கள் ஓடுபவர்கள் சிறுவர்கள் ஒரு லயம போன்ற இடத்தில் தான் அவர்களை மிருகங்களை வளர்ப்பது போல வளர்கின்றார்கள் .பயிற்சியின் போது அடிஎன்றால் சொல்லி மாளாது .

கமாராவை ஒழித்து கொண்டுபோய் எடுத்த படம் நினைக்கின்றேன் .

இலங்கையில் என்றால் புலிகளின்  தலையில் போடலாம்  ரொம்ப ஈசியா அலுவல் முடியும்.
 
உலகம் என்றால் ?
இதற்குள்ளும் புலிகள் வருகிறார்கள்தானே......?
அப்படி என்று குரல் கேட்கிறது.......
 
உங்கள் புண்ணியத்தில் சுருக்கமாக எனக்கும் எழுத வருகிறது ...
 
எல்லா நாட்டிலும் நடப்பதுதான் ....
விகிதாசாரம்தான் வித்தியாசம். 
  • 2 weeks later...
  • தொடங்கியவர்

மனைவியின் சடலத்தை கொண்டுவர உதவுமாறு கணவர் வேண்டுகோள் -

 

சவூதி அரேபியாவுக்கு பணிபெண்ணாகச் சென்ற தனது மனைவி அங்கு கொலை செய்யப்பட்டுள்ளார் என்றும் அவரது சடலத்தை இலங்கைக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்குமாறும் கோரி, அப்பெண்ணின் கணவரால் மஸ்கெலியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்று செய்யப்பட்டுள்ளது. மஸ்கெலியா, பிரன்ஸ்விக் தோட்டத்தைச் சேர்ந்த கந்தையா தர்ஷினி என்பவரே இவ்வாறு சவூதிக்கு பணிபெண்ணாக சென்று அங்கு உயிரிழந்துள்ளார்.

 

அவரது கணவரான டபிள்யூ.ஏ.வசந்த குமார என்பவரே மேற்படி பொலிஸ் முறைப்பாட்டைச் செய்துள்ளார்.   இதுதொடர்பில் மேலும் தெரியவருவதாவது, குடும்பத்தில் நிலவிய வறுமை காரணமாக  மேற்படி பெண், இரண்டு வருடங்களுக்கு முன்பு வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவரொருவரின் உதவியில் சவூதி அரேபியாவுக்கு பணிப்பெண்ணாகச் சென்றுள்ளார்.   இந்நிலையில், அப்பெண் பணிபுரிந்த வீட்டிலிருந்து கடந்த 2014.8.24ஆம் திகதி காணாமல் போயுள்ளார்.

 

இந்நிலையில் 4 மாதங்களுக்கு பிறகு அவரது சடலம் பண்ணையொன்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளது. இதுதொடர்பில், குறித்த பண்ணையின் உரிமையாளரால் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்ட நிலையில் சவூதி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வந்துள்ளனர். தனது மனைவி தொடர்பில் அறிந்துகொள்வதற்கு தனக்கு உதவுமாறு குறித்த பெண்ணின் கணவர், வெளிவிவகார அமைச்சிடம் கோரியிருந்தார். இந்நிலையில், வெளிவிவகார அமைச்சின் ஆலோசனைக்கமையவே, அவர் இந்த பொலிஸ் முறைப்பாட்டைச் செய்துள்ளார். தனது மனைவியை சவூதிக்கு அனுப்பிய வெளிநாட்டு முகவருக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்குமாறும் மனைவியின் சடலத்தை இலங்கைக்கு கொண்டுவருவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் அவர் அந்த முறைப்பாட்டில் கோரியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இச்சம்பவம் தொடர்பில் மஸ்கெலியா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். -

 

: http://www.tamilmirror.lk/143558#sthash.gzi19oMQ.dpuf

  • தொடங்கியவர்

பணிப்பெண்ணாகச் சென்ற எனது மனைவி கொலை செய்யப்பட்டுள்ளார் : பொலிஸ் நிலையத்தில் கணவர் முறைப்பாடு

 

dead_3.jpg

 

சவூதி அரேபியாவுக்கு பணிப்பெண்ணாகச் சென்ற தனது மனைவி அங்கு கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் அவரது சடலத்தை இலங்கைக்கு எடுத்துவர நடவடிக்கை எடுக்குமாறும் கோரி, அப்பெண்ணின் கணவர் மஸ்கெலியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
 
மஸ்கெலியா, பிரவுன்ஸ்விக் தோட்டத்தைச் சேர்ந்த கந்தையா தர்ஷினி என்பவரே இவ்வாறு சவூதிக்கு பணிப்பெண்ணாக சென்று அங்கு உயிரிழந்துள்ளார். அவரது கணவரான டபிள்யூ.ஏ.வசந்த குமார என்பவரே மேற்படி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டைச் செய்துள்ளார்.  
 
இதுதொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
 
குடும்பத்தில் நிலவிய வறுமை காரணமாக  மேற்படி பெண், இரண்டு வருடங்களுக்கு முன்பு வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவரொருவரின் உதவியில் சவூதி அரேபியாவுக்கு பணிப்பெண்ணாகச் சென்றுள்ளார்.   
 
அப்பெண் பணிபுரிந்த வீட்டிலிருந்து கடந்த 2014.8.24ஆம் திகதி காணாமல் போயுள்ளார். இந்நிலையில் 4 மாதங்களுக்கு பிறகு அவரது சடலம் பண்ணையொன்றிலிருந்து மீட்கப்பட்டது. 
 
இதுதொடர்பில், குறித்த பண்ணையின் உரிமையாளரால் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்ட நிலையில் சவூதி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வந்துள்ளனர். தனது மனைவி தொடர்பில் அறிந்துகொள்வதற்கு தனக்கு உதவுமாறு குறித்த பெண்ணின் கணவர், வெளிவிவகார அமைச்சிடம் கோரியிருந்தார். 
 
இந்நிலையில், வெளிவிவகார அமைச்சின் ஆலோசனைக்கமையவே, அவர் இந்த பொலிஸ் முறைப்பாட்டைச் செய்துள்ளார். தனது மனைவியை சவூதிக்கு அனுப்பிய வெளிநாட்டு முகவருக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்குமாறும் மனைவியின் சடலத்தை இலங்கைக்கு கொண்டுவருவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் அவர் அந்த முறைப்பாட்டில் கோரியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இச்சம்பவம் தொடர்பில் மஸ்கெலியா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 
 

Edited by Athavan CH

நீங்கள் சொல்வது சரி,
 
ஆனா அமெரிக்கா அங்கதானே கடுமையா ஆட்டையை போடுது
அதால தான் யாரும் கேள்வி கேட்பதில்லை

சவுதி, கட்டார், UAE எல்லாம் அமெரிக்கன்தான் ஆளுறான்....
 
 
சரி நவீன உலகம் எங்க இருக்குது? :D

Edited by Surveyor

  • 2 months later...
  • தொடங்கியவர்

கனவுகளுடன் சவுதி சென்ற தமிழ் பெண் மரணம்; கால்கள் பாதிக்கப்பட்ட கணவன் புலம்பல்

 

பல கனவுகளுடன் புலம்பெயர்ந்த பொருளாதாரத்தை ஈட்டிக்கொள்ள நினைக்கும் பணிப்பெண்கள் பல்வேறு துன்பங்களை சுமந்த கதைகளை நாம் அறிந்துள்ளோம்.

 
வீட்டின் வறுமை, பிள்ளைகளின் கல்வி, குடும்ப பொருளாதாரத்தின் கீழ் நிலை என்பன பெண்கள் மனதை அதிகம் பாதித்துகொள்வதன் விளைவே பணிபெண்களாக குடும்பத்தை விட்டு, குழந்தைகளை விட்டு அந்நிய தேசத்தில் அந்நிய செலவாணி தேடிய பயணத்தை நம் நாட்டு பெண்கள் மேற்கொள்ள வேண்டி ஏற்படுகின்றது.
 
இவ்வாறாக குவைத், சவுதி, கட்டார், பர்கேய்ன் என்று பல நாடுகளுக்கு செல்லும் பெண்கள் தினம் தினம் அனுபவிக்கும் வேதனைகள் பல.
 
அந்தவகையிலேயே வவுனியா செட்டிகுளம் காந்திநகர் கிராமத்தை சேர்ந்த 44 வயதான நாகசந்திரராசா ஜெயராஞ்சினிக்கும் இடம்பெற்றுள்ளது வேதனைகள் மட்டுமே.
 
கால்கள் பாதிக்கப்பட்ட கணவன் உட்பட 4 பிள்ளைகளுடன் வாழ்ந்து வந்த ஜெயரஞ்சினி, வீட்டின் வறுமை காரணமாக பல கனவுகளை சுமந்துகொண்டு 2013 ஆம் ஆண்டு 10 ஆம் மாதம் சவுதி அரேபியாவிற்கு சென்றார்.
 
பின்னர் இறந்துவிட்டதாக உறவினர்களுக்கு அறிவிக்கப்பட்ட நிலையில், சடலம் இன்று வரை இலங்கைக்கு அனுப்பப்படவில்லை. இதனால் இக் கிராம மக்களும் உறவினர்களும் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.
 
900 ரியால் சம்பளம் தருவதாகக்கூறி அழைக்கப்பட்ட ஜெயரஞ்சினி, 750 ரியால்கள் மர்திரமே சம்பளமாக வழங்கப்பட்டு வந்துள்ளது.
 
இதுதொடர்பாக அவரது கணவன் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்துடன் 2014 ஆம் ஆண்டு 11 ஆம் மாதம் தொடர்புகொண்ட போதிலும் எந்தவித பலனும் இல்லாத நிலையில் மனைவியின் சம்பளப் பணம் முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளது.
 
2014 ஆம் ஆண்டு சித்திரை மாதம் 14 மற்றும் 30 ஆம் திகதிகளில் தொலைபேசியில் தொடர்புகொண்ட மனைவி வேலைப்பளு அதிகரித்துள்ளதாகவும் தன்னால் வேலை செய்ய முடியாதுள்ளமையினால் நாட்டுக்கு திருப்பி அழைக்குமாறும் கணவனிடம் கேட்க மீண்டும் கணவன் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தை நாடியுள்ளார்.
 
எனினும் அன்றிலிருந்து மனைவியை மீட்கும் போராட்டத்தில் குதித்த கணவன், மனைவி பணியாற்றிய வீட்டு பெண்மணியுடனும் நேரடியாக தொலைபேசியில் தொடர்பு கொண்டு மனைவியை நாட்டுக்கு அனுப்புமாறு கோரியுள்ளார்.
 
எனினும் 5ஆம் திகதி 6 ஆம் மாதம் 2015 ஆம் ஆண்டு மாலை 2.30 அளவில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் இருந்து வீட்டுக்கு வந்த தொலைபேசி அழைப்பு ஜெயரஞ்சினி இறந்துவிட்டார் என்பதாக இருந்தது.
 
இந்தநிலையில் சடலத்தை பெறுவற்காக வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தை நாடிய அக்குடும்பத்திற்கு சடலமும் 3 மாதங்கள் கழித்தே கிடைக்கும் என்ற பெரிய ஏமாற்றம் நிறைந்த செய்தியே மிஞ்சியுள்ளது.
 
பல கனவுகளோடு வீட்டின் வறுமையை எண்ணி அந்நிய தேசம் சென்ற ஜெயரஞ்சினி இறந்து விட்டதாக வந்த செய்தி அந்த குடும்பத்தை மாத்திரமல்ல காந்திநகர் கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
 
  • கருத்துக்கள உறவுகள்

 

முஸ்லீம் நாடுகளுக்கு தமிழ்பெண்கள் செல்வதைத் தவிர்க்கும் அறிவூட்டல் கிழக்கு, வன்னிப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட வேண்டும்.
 
நவீன உலகின் காட்டு மிராண்டிகள் இந்த முஸ்லீம் நாடுகள்.

 

 

முஸ்லீம் நாடுகளுக்குச் சென்று உழைத்தபணத்துடன் திரும்பி வந்தவர்கள், விடுமுறையில் வருபவர்கள் காட்டும் பந்தாக்களும் இந்த விபரீதங்களை வளர்க்கத் துணைபுரிகின்றன.  :o

ஆசியாவின் அதிசயம் இப்பிடிட்த்தான் இருக்கும்.

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.