Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மோடி வருகையுடன் இந்திய- இலங்கை உறவில் புதிய ஆரம்பம்! - ரணில்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
ranil-200-news6.jpg

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயத்துடன் இருநாட்டு உறவில் புதிய ஆரம்பம் ஏற்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். இந்திய பிரதமரின் பாராளுமன்ற உரையை தொடர்ந்து உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது, பழமை வாய்ந்த ஜனநாயக முறை இலங்கையில் காணப்படுகிறது. 1835ல் அரசியலமைப்பு சபை இருந்தது. அதில் அங்கம் வகித்த ஆறுமுகம்பிள்ளை குமாரசாமியின் பரம்பரையில் வந்தவரே இன்று எமது மீள்குடியேற்ற அமைச்சராக இருக்கிறார்.

வெஸ்ட் மினிஸ்ட் முறை அமுல்படுத்தப்பட்ட நீண்ட வரலாறு எமக்கிருக்கிறது. மீண்டும் வெஸ்ட்மினிஸ்டர் முறையை அமுல்படுத்துவது குறித்து ஆராய்ந்து வருகிறோம். எமது மொழி, கலாசாரம் என்பவற்றுக்கிடையில் நெருக்கம் காணப்படுகிறது. மன்னர் ஆட்சிக்காலம் முதல் பல்வேறு தொடர்புகள் இருந்து வருகிறது.

நாமும் இந்த வரலாற்றில் பங்காளராக இருக்கிறோம். மொழி கலாசாரம், சட்டம், பாராளுமன்ற முறை, கிரிக்கெட் ஊடாக இருநாடுகளும் இணைந்துள்ளன. இரு நாடுகளும் நாணயத்தின் இரு பக்கங்களாக உள்ளன. எமது மக்களுக்கு சமாதானத்தையும் சுபீட்சத்தையும் வழங்குவதே எமது நோக்கமாக இருக்கிறது. வலய நாடுகளிடைலேயான உறவை பலப்படுத்த இந்த தலைமைத்துவ பங்கு வகிக்க வேண்டும். உங்கள் வருகையினூடாக இரு நாட்டு உறவில் புதிய ஆரம்பம் ஏற்பட்டுள்ளது. என்றார்.

http://seithy.com/breifNews.php?newsID=128239&category=TamilNews&language=tamil

  • Replies 60
  • Views 3k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

இரு நாடுகளும் நாணயத்தின் இரு பக்கங்களாக உள்ளன

இரு நாட்டுக்கும் ஒரு நாணயம் இருந்தால் உறவு இன்னும் நன்றாக இருக்கும் என மொடி மனதில் நினைத்திருப்பார்....:D

Edited by putthan

  • கருத்துக்கள உறவுகள்

இவங்கள் 13 ஐ இந்தியாவின் உதவியுடன் இல்லாமல் செய்யப்போறாங்கள்.. இதற்கு இந்தியாவும் சம்மதம்.

அண்மையில்..

மோடி: இந்தியாவில் உங்களுக்கு நம்பிக்கை உள்ளதுதானே?!

கூட்டமைப்பு: ஆமாம்.. ஆமாம்.. ஆமாம்.. :D

தமிழ்மக்கள் :இந்தியா மீது பல வருடங்களாகவும்,இந்தியா பிரதமர் பலர் மீதும் நம்பிக்கை வைத்திருந்தோம்,வைத்தும் இருக்கின்றோம் ஆனால் தீர்வில் எமக்கு இன்னும் நம்பிக்கையில்லை

  • கருத்துக்கள உறவுகள்

மோடி: இந்தியாவில் நம்பிக்கை இருக்குதானே?

இதற்கு கூட்டமைப்பு ஆம் என்று சொல்வதை தவிர வேறு என்ன சொல்லியிருக்க முடியும்.

மரியாதையா தனிநாடு கொடு, இல்லை என்றால் தற்கொலையாளிய அனுப்பிவோம் எண்டா:)

  • கருத்துக்கள உறவுகள்

மோடி: இந்தியாவில் நம்பிக்கை இருக்குதானே?

இதற்கு கூட்டமைப்பு ஆம் என்று சொல்வதை தவிர வேறு என்ன சொல்லியிருக்க முடியும்.

மரியாதையா தனிநாடு கொடு, இல்லை என்றால் தற்கொலையாளிய அனுப்பிவோம் எண்டா :)

வேறு பதில் வராது என்று   மோடிக்கும் தெரியும் தானே?

பின்னர் எதற்கு இந்தக்கேள்வி...?

  • கருத்துக்கள உறவுகள்

இதைதான் மேலாண்மைவாதம்(ஹெகமனி) என்பது. அதுதான் இந்தியா - தாம் விரும்பும் பதிலை உங்கள் வாயாலே வரவைப்பர். இதுதான் 87லும் நடந்தது. அர்ஜூன் அண்ணா அந்த அனுபவமே இருப்பதாக சொல்கியுள்ளார்.ஜே ஆர் புரிந்து கொண்டு அடங்கிப் போனார். சிலர் சிலிப்பிகிட்டு நிண்டதன் விழைவை மொத்த இனமுமே 2009இல் சந்தித்தது.

அடடே நம்ம குதிரை கஜன்.

Edited by goshan_che

எமக்கு ஒரு தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கை அதிகரித்துக்கொண்டே போகின்றது .

முதலில் பயங்கரவாதம் ஒழிந்தது 

அடுத்து இந்தியாவில் மோடி அரசு வந்தது 

அதற்கடுத்து மகிந்தா தொலைந்து மைத்திரி வந்தார் .

இப்போ இலங்கை -இந்திய உறவு எப்போதும் இல்லாத அளவு நெருக்கமாக இருக்கு .

அடுத்து பொது தேர்தல் .

அதற்குடுத்து எமது தீர்வு தான் . :icon_mrgreen:  :icon_mrgreen:  :icon_mrgreen:

2020 இற்கு இடையில் சாத்தியமாகும் .நானும் நாட்டிற்கு போய் அரசியல் செய்ய கணக்கு சரியாக இருக்கு . :icon_idea:  

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிங்களத்திலும் எழுதப்பட்ட பதாதையை நம்ம கஜூ பிடித்துக்கொண்டு போகிறாரே.. இதென்ன அனர்த்தம்? தேர்தல் வரும் நேரத்தில் கிடைக்கவிருப்பதை (எம்.பி. பதவியல்ல)  கெடுத்துக் கொள்கிறாரே.. வேறு மீன் சிக்கிருச்சா?

இதைதான் மேலாண்மைவாதம்(ஹெகமனி) என்பது. அதுதான் இந்தியா - தாம் விரும்பும் பதிலை உங்கள் வாயாலே வரவைப்பர். இதுதான் 87லும் நடந்தது. அர்ஜூன் அண்ணா அந்த அனுபவமே இருப்பதாக சொல்கியுள்ளார்.ஜே ஆர் புரிந்து கொண்டு அடங்கிப் போனார். சிலர் சிலிப்பிகிட்டு நிண்டதன் விழைவை மொத்த இனமுமே 2009இல் சந்தித்தது.

.

நீங்க காந்தி காலத்தில் பிறந்திருந்து காந்திஜிக்கு நீங்கள் இப்படி அட்வைஸ் பண்ணி அவர் அதை கேட்டிருந்தால்இன்றைக்கு இந்தியா .......
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எமக்கு ஒரு தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கை அதிகரித்துக்கொண்டே போகின்றது .

முதலில் பயங்கரவாதம் ஒழிந்தது 

அடுத்து இந்தியாவில் மோடி அரசு வந்தது 

அதற்கடுத்து மகிந்தா தொலைந்து மைத்திரி வந்தார் .

இப்போ இலங்கை -இந்திய உறவு எப்போதும் இல்லாத அளவு நெருக்கமாக இருக்கு .

அடுத்து பொது தேர்தல் .

அதற்குடுத்து எமது தீர்வு தான் . :icon_mrgreen:  :icon_mrgreen:  :icon_mrgreen:

2020 இற்கு இடையில் சாத்தியமாகும் .நானும் நாட்டிற்கு போய் அரசியல் செய்ய கணக்கு சரியாக இருக்கு . :icon_idea:  

'2020 இற்கு இடையில் சாத்தியமாகும் .நானும் நாட்டிற்கு போய் அரசியல் செய்ய கணக்கு சரியாக இருக்கு"

தேர்தல் முறையை மாற்றி, பழைய முறையை கொண்டுவந்து, நீங்கள் மானிப்பாய் தொகுதியில் வேட்பாளராக நின்றால் ஜெயிக்கலாம்.

உங்களுக்கு எப்படி செல்வாக்கோ தெரியாது, உங்கள் தலைவருக்கு இந்த தொகுதியில் உண்டு. அவரது தந்தை வழி செல்வாக்கு. சுதுமலை தாவடி வீதியில் (பழைய அரிசி ஆலை அருகே) அவருக்கு நினைவுத் தூபி உள்ளது. அதற்கு பெரும் மரியாதையும் உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

ரிங்கோ,

காந்தி கூட மேலாண்மை வாதத்தை அனுசரித்தே முக்கால் வாசி காலம் போராடினார்.

உலக யுத்தத்தின் போது அமெரிக்க உதவிக்கு மாற்றீடாக காலனித்துவத்தை முடிவுக்கு கொண்டுவர பிரிட்டன் ஓப்புக்கொண்டது. இதுவே ஆங்கிலேய மேலாண்மை வாதத்தை தவிடுபொடியாக்கியது.

இப்படி ஒரு புறஏது நிலை வரும் வரை - இந்திய மேலாண்மைக்கு சலாம் போடுவதை தவிர வேறு வழியில்லை.

அந்த புறநிலை வரும்வரை காந்திஜி பிரிட்டிஷ்கார்ர்களுக்கு சலாம்போட்டு வாழ்ந்தார்.

  • கருத்துக்கள உறவுகள்

ரிங்கோ,

காந்தி கூட மேலாண்மை வாதத்தை அனுசரித்தே முக்கால் வாசி காலம் போராடினார்.

உலக யுத்தத்தின் போது அமெரிக்க உதவிக்கு மாற்றீடாக காலனித்துவத்தை முடிவுக்கு கொண்டுவர பிரிட்டன் ஓப்புக்கொண்டது. இதுவே ஆங்கிலேய மேலாண்மை வாதத்தை தவிடுபொடியாக்கியது.

இப்படி ஒரு புறஏது நிலை வரும் வரை - இந்திய மேலாண்மைக்கு சலாம் போடுவதை தவிர வேறு வழியில்லை.

வேறு வழியில்லாமைக்கு ராஜதந்திரம் என்று.....

கூட்டமைப்பு செய்யுபோது பெயர் வைத்துவிட வேண்டும்.

புலிகள் வேறு வழிகளை தேடிபோனால்.....

சம்பல் அரைக்க வேண்டும்.

(அப்படி என்றால் இப்படி வந்திருக்கும் இப்படி என்றால் அப்படி போயிருக்கும் என்று வசதிக்கு போட்டு

வாங்கு வாங்கு என்று வாங்க வேண்டும்)

உங்கள் நிலைபாட்டை சிலநேரம் புரிய முடியவில்லை!

(ஆக்கிரமிப்பு காரர்கள் உலகில் போட்டு தாக்கு தாக்கு என்று தாக்கிதான் வந்துள்ளார்கள்

புளட்டையும் புலிகளையும் ஓரம் கட்டும் வேலையை இந்தியா 1984-1985 இலேயே தொடங்கிவிட்டது

அதன் தொடர்ச்சி 2009 வரை நீண்டது. இடையில் எந்த மாற்றத்தையும் இந்தியா செய்ததில்லை)

  • கருத்துக்கள உறவுகள்

நிச்சயமாக, தென்னாபிரிக்காவில் இருந்த சமயம் boer war எனும் சண்டையில், சகல இந்தியர்களும் கறுப்பர்களும் பிரித்தானிய படையில் சேர்ந்து போரிட வேண்டும் என்று சொன்னதோடு - தானே ஒரு மருத்துவ தாதியாகவும் சென்றார். பிரித்தானிய முடிக்கு விசுவாசமாய் இருப்பது தன் கடமை எனும் சொன்னார்.

இந்தியா வந்த பின்பும் 8/8/42 இல் தான் quit India எனும் வெள்ளையனே வெளியேறு பிரகடனத்தை காங்கிரஸ் வெளியிட்டது.

1931 காந்தி - ஏர்வின் ஒப்பந்தம் எனும் ஒன்றில் டொமினியன் அந்தஸ்து போதும் என்று காந்தி ஏற்றுக்கொண்டு கையொப்பமும் இட்டார்.

இதன் பின் 2 வட்ட மேசை மகாநாடு இப்படி பலதுக்குப்பின், 42 இல் நிலமை சாதகமாகமாறுவதை உணர்ந்தே காந்தி கச்சிதமாக காய் நகர்த்தினார்.

இதுதான் வரலாறு. இனியாவது சீனி, மா வாங்கும் பொட்டலம் சுத்தும் பேப்பர் துண்டுகளில் காந்தியை பற்றி வாசித்ததை வைத்து கருத்து எழுதாமல் உண்மையை தீர விசாரித்து அறியுங்கள்.

இப்ப சீனி பக்கற்றில் Sugar என்றும் மாவு பக்கற்றில் white flour என்று தான் எழுதியிருக்கு. என்ன செய்ய கோசான். பேப்பரில் பொட்டலாமா சுத்தும் வழக்கம் நம்ம நாட்டில் இல்லையே

  • கருத்துக்கள உறவுகள்

ஊரில் "லூசாய்" (லூசுத்தனமாய் இல்லை) மா, சீனி வாங்கினால் இப்பவும் பொட்டலம் தான்.

வெளிநாட்டுப் பவிசில பைகேற்றில் மா வாங்கிற ஆக்களுக்கு இது புரிய நியாயமில்லை :)

ஊரில் "லூசாய்" (லூசுத்தனமாய் இல்லை) மா, சீனி வாங்கினால் இப்பவும் பொட்டலம் தான்.

வெளிநாட்டுப் பவிசில பைகேற்றில் மா வாங்கிற ஆக்களுக்கு இது புரிய நியாயமில்லை :)

வெளிநாட்டிலை பவிசு இல்லாமல் போனாலும் பக்கற்றில் தான் தருறாங்க கோசான். நீங்க வாழுற நாட்ட்டிலை பவிசு இல்லாமல் போனால் பொட்டலத்திலை லூசாய்  தருவாங்களா

Edited by trinco

நிச்சயமாக, தென்னாபிரிக்காவில் இருந்த சமயம் boer war எனும் சண்டையில், சகல இந்தியர்களும் கறுப்பர்களும் பிரித்தானிய படையில் சேர்ந்து போரிட வேண்டும் என்று சொன்னதோடு - தானே ஒரு மருத்துவ தாதியாகவும் சென்றார். பிரித்தானிய முடிக்கு விசுவாசமாய் இருப்பது தன் கடமை எனும் சொன்னார்.

இந்தியா வந்த பின்பும் 8/8/42 இல் தான் quit India எனும் வெள்ளையனே வெளியேறு பிரகடனத்தை காங்கிரஸ் வெளியிட்டது.

1931 காந்தி - ஏர்வின் ஒப்பந்தம் எனும் ஒன்றில் டொமினியன் அந்தஸ்து போதும் என்று காந்தி ஏற்றுக்கொண்டு கையொப்பமும் இட்டார்.

இதன் பின் 2 வட்ட மேசை மகாநாடு இப்படி பலதுக்குப்பின், 42 இல் நிலமை சாதகமாகமாறுவதை உணர்ந்தே காந்தி கச்சிதமாக காய் நகர்த்தினார்.

இதுதான் வரலாறு. இனியாவது சீனி, மா வாங்கும் பொட்டலம் சுத்தும் பேப்பர் துண்டுகளில் காந்தியை பற்றி வாசித்ததை வைத்து கருத்து எழுதாமல் உண்மையை தீர விசாரித்து அறியுங்கள்.

விமர்சனம் இல்லாமல் எவரும் இல்லை ஆனால் காந்தியை அறிய ஒரு பக்குவம் வேண்டும் .

அவரின் சுயசரிதம் வாசித்து வியந்து ஏன் அவரை "மகாத்மா " என்று மக்கள் அழைக்க தொடங்கினார்கள் என்று உணர்ந்தேன் .ஏன் உலக பெரும் தலைகளே காந்தியை தமது முன்னோடியாய பார்க்கின்றார்கள் என்று விளங்கும் .காந்தியின் இளம்பிராய வாழ்க்கை தான் எனக்கு அதிகம் பிடித்திருந்தது .கோடியில் ஒருவர் தான் அப்படி வாழமுடியும் .

இன்று காந்தியின் சிலை லண்டனில் திறக்கபடுகின்றது 

  • கருத்துக்கள உறவுகள்

உண்மைதான் அண்ணா. 1999 ஒருதரமும் 2003 இல் ஒருதரமும் என இருதடவை நானும் வாசித்தேன்.

ஆனால் காந்தி எப்பேற்ப்பட்ட யதார்த ராஜதந்திரி என்பதை - 2009 ஏப்பிரல் மாதம் - எல்லாம் கைநழுவிப்போகிறது, என்று உறைத்த ஒரு இரவில், கண்கள் அழுது காய்ந்து போய், இனி எந்த போராட்டமும் மக்கள் அழிவை தடுக்கப்போவதில்லை என்று உணர்ந்த போது, வெஸ்மினிஸ்டர் வளாகத்தில், லிங்கனின் சிலையில் கீழ் உக்காந்தபடி சிந்தித்த போதே புரிந்துகொண்டேன் (பின்னணியில் அவர் லீடர் கோசங்கள் தொடர்ந்தும் கேட்டபடியே இருந்தன) :(

உங்க சென்ரிமென்ற் சுப்பர். அவர் தோற்க போகிறார் என்றவுடன் " அவர் ரீடர்"  என்ற கோசத்தை வெறுக்க தொடங்கீற்றீங்க.மேர்வின் டீ சில்வாவை போல.

  • கருத்துக்கள உறவுகள்

மருது,

இது நாங்கள் முன்பே சிலாகித்ததுதான்.

87 இல் பிரபா இந்திய மேலாண்மைக்கு சலாம் போட்டிருந்தா - அவரும், நாமும் நாடும் - இப்போ இருப்பதை விட ரொம்ப நல்லா இருந்திருப்போம்.

இதில் உங்களுக்கு விளங்காத சூத்திரம் ஏதுமில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

இல்லை ரிங்கோ - கோசத்தின் மீது ஒரு போதும் விருப்போ, வெறுப்போ இருந்ததில்லை.

அது வெற்றுக்கோச தனிமனித துதி என்பது எப்போதும் தெரிந்தே இருந்தது.

ஒரு போதும் உங்கள் முருகனை தொழுதவனில்லை நான்.

ஆனால் இந்த கோச கோஸ்டியோடு சேர்ந்து குரல் கொடுப்பதை தவிர 2009 இல் போரை நிப்பாட்ட வேறு தெரிவு இருக்கவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

கேக்கிறேன் எண்டு குறைநினைக்க வேண்டாம் ரிங்கோ,

முகம் பெயர் தெரியாத நான் உங்களிடம் செண்டிமெண்ட் சீன் போட்டு என்னாகப் போகிறது?

உங்கள் சொத்தைப் பல்லையா சீ... சொத்தையா ஆட்டையைப்போட்டுவிடுவேன் :)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.