Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுமந்திரனுடன் தமிழ்மாறனும் யாழ். தேர்தல் களத்தில் குதிப்பு

Featured Replies

tamil%20suman%2068889586958.jpg

 

 

கடந்த தடவை பொதுத் தேர்தலை அடுத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் தேசியப் பட்டியல் எம்.பியாக நியமனம் பெற்ற எம்.ஏ.சுமந்திரன் விரைவில் நடைபெறவிருக்கும் பொதுத் தேர்தலில் யாழ். தேர்தல் மாவட்டத்திலிருந்து களமிறங்க இருக்கின்றார். அதற்கான முன்னேற்பாடு, முஸ்தீபுகளில் அவர் ஈடுபட்டு வருகின்றார்.
 
இதேவேளை, சட்டத்துறை விடயங்களில் அதிக பரிச்சயம் மிக்கவரும் கொழும்புப் பல்கலைக்கழக சட்ட விரிவுரையாளருமான வி.ரி.தமிழ்மாறனையும் இந்தத் தடவை யாழ். மாவட்டத்தில் களத்தில் இறக்குவது குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமை தீவிரமாக சிந்தித்து வருகின்றது எனத் தெரிகின்றது.
 
கடந்த தடவை தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பட்டியலில் தீவுப் பகுதி சார்பில் இரா.சிவச்சந்திரன் போட்டியிட்டார். அவர் தேர்தலில் தெரிவாகவில்லை. அவர் வேலணைப் பகுதியைச் சேர்ந்தவர். அவரது இடத்துக்கே இம்முறை புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட வி.ரி.தமிழ்மாறனைக் களமிறக்குவதற்கு ஆலோசிக்கப்படுகின்றது.
 
இதற்கு முன்னேற்பாடாக, தீவுப் பகுதியின் ஊர்காவற்றுறை தேர்தல் தொகுதியின் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கிளை ஊடாக ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஒரு கோரிக்கை கட்சித் தலைமைப் பீடத்திடம் முன்வைக்கப்பட்டிருப்பதாகவும் தெரிகின்றது. தீவுப் பகுதியின் சார்பில் இம்முறை வி.ரி.தமிழ்மாறனை களமிறக்கக் கோரும் இக்கடிதத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஊர்காவற்றுறைக் கிளைத் தலைவர் பேராசிரியர் இரா.சிவச்சந்திரனே ஒப்பமிட்டுள்ளார் எனவும் தெரிகின்றது.
 
வி.ரி.தமிழ்மாறனின் மூத்த சகோதரர் அமரர் நாவேந்தன் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முக்கிய பிரமுகராக விளங்கியவர். உச்ச நெருக்கடி காலத்தில் கட்சியை விட்டுக் கொடுக்காது பணியாற்றியவர் நாவேந்தன். பல தரப்பினாலும் உயிர் அச்சுறுத்தல் விடப்பட்ட சமயத்திலும் கட்சியின் சார்பில் யாழ். பிரதி மேயராகப் பணியாற்றியவர்.
 
அரசமைப்புச் சட்ட விடயங்களில் வி.ரி.தமிழ்மாறன் நன்கு பரிச்சயம் உள்ளவர் என்பதால் அவரது பங்களிப்பு நன்கு உதவும் என இரா.சம்பந்தன் கருதுகின்றார் எனத் தெரிகின்றது. இதேவேளை எம்.ஏ.சுமந்திரன் எம்.பி. வடமராட்சி கிழக்கை மையமாக வைத்து தேர்தலில் களமிறங்கும் ஏற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றார். அப்பகுதியைச் சேர்ந்த கூட்டமைப்பின் வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் அவருக்கான களப்பணியை முன்னெடுத்து வருகின்றனர். என்றும் தெரிகின்றது.
 
இதேசமயம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் இப்போது நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் யாழ். மாவட்ட எம்.பி.க்கள் அனைவருக்குமே அடுத்த தேர்தலில் இடம் கொடுக்கப்பட வேண்டும் என்று கூட்டமைப்புத் தலைவர் இரா.சம்பந்தன் கருதுகின்றார். இவர்களுள் விநாயகமூர்த்தி எம்.பி. சற்று நோய் வாய்ப்பட்டுள்ளார். எனினும் அடுத்த தேர்தலிலும் தமக்கு இடமளிக்கப்பட வேண்டும் என்று அவர் விரும்புகின்றார் எனவும், அந்த விருப்பம் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனிடம் அழுத்தம் திருத்தமாகத் தெரிவிக்கப்பட்டிருகின்றது என்றும் அறிய வருகின்றது.
 
இதேசமயம், கடந்த முறை யாழ். தேர்தலில் போட்டியிட்ட சீ.வி.கே.சிவஞானம் இப்போது வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவராக உள்ளார். அதேபோல பொ.ஐங்கரநேசன் மாகாண அமைச்சராகவுள்ளார். இவர்களுக்கு இடமளிப்பதில் கூட்டமைப்புத் தலைமை அதிக விருப்பம் காட்டவில்லை எனத் தெரிகின்றது.
 
இதேசமயம், ஒன்றரை வருடங்களுக்கு முன்னர்தான் நடந்து முடிந்த வடக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்டு உறுப்பினர்களாகத் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு பொதுத் தேர்தலில் இடமளிப்பதிலும் கூட்டமைப்புத் தலைமைக்கு அதிக விருப்பம் இல்லை என்று தெரிகின்றது.
 
புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தனும் வடக்கு மாகாண சபை உறுப்பினராக உள்ளார். அவரும் மற்றொரு மாகாண சபை உறுப்பினரான திருமதி அனந்தி சசிதரனும் இம்முறை பொதுத் தேர்தலில் யாழ். மாவட்டத்தில் களமிறங்கும் இலக்கைக் கொண்டுள்ளனர் எனத் தெரிகின்றது.
 
இவர்களுள் சித்தார்த்தன், கூட்டமைப்பில் தமது புளொட் கட்சிக்கு உரிய 'கோட்டா' மூலம் வேட்பாளர் பட்டியலில் இடம்பெற முயலக்கூடும். ஆனால் வடக்கு மாகாண சபை உறுப்பினர்களுக்குத் பொதுத் தேர்தலில் இடமளிப்பதில்லை, அந்தப் பதவியில் அவர்களின் சேவை தொடரட்டும் என்ற காரணத்தைக் காட்டி அனந்திக்கு இடமளிக்காமல் இலங்கைத் தமிழரசுக் கட்சி அவரை வெட்டிவிடக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால், அப்படி ஒரு தீர்மானத்தை இலங்கைத் தமிழரசுக் கட்சி எடுக்குமானால் வன்னி மாவட்டத்தில் பொதுத் தேர்தலில் போட்டியிடும் இலக்கை வைத்து காய் நகர்த்தி வரும் வடக்கு மாகாண சபையின் சுகாதார அமைச்சர் டாக்டர் ப.சத்தியலிங்கத்துக்கு அது பெரும் இக்கட்டாய்ப் போய்விடும். "அவரைப் பொதுத் தேர்தலில் களமிறக்கினால் நல்ல ஒரு சுகாதார அமைச்சரை வடக்கு மாகாண சபை இழந்துவிடுமே...!" - என்று கூட்டமைப்புத் தலைவர் இரா.சம்பந்தன் தமக்கு நெருக்கமானவர்களிடம் கூறினார் எனவும் அறியவந்தது. -
 
 
 
  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் மாறனா? அந்தாளுக்கு நாக்கிலேயே சனியாச்சே? கூட்டமைப்பை உடைக்காம விடமாட்டாங்க போல :)

தமிழ் மாறனா? அந்தாளுக்கு நாக்கிலேயே சனியாச்சே? கூட்டமைப்பை உடைக்காம விடமாட்டாங்க போல :)

 

கோசான் புரியவில்லை. 
 
தமிழ் மாறன், அழகான தமிழ்ப்பெயர் ஆனாலும் தெரியவில்லை யாரென்று இந்த மரமண்டைக்கு. ஏதாவது இணைய இணைப்பைத் தரமுடியுமா புரிந்து கொள்ள.
 
நன்றி
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழ் மாறனா? அந்தாளுக்கு நாக்கிலேயே சனியாச்சே? கூட்டமைப்பை உடைக்காம விடமாட்டாங்க போல :)

கொஞ்சம் சிக்கல்தான். ஆனால், செய்தி வித்தியிடம் இருந்து வருவதை கவனிக்கவும். வேறு யாருக்கோ கௌண்டர் கொடுக்க வெளிடப்பட்ட செய்தி இது. கூட்டமைப்பில் ஓரிருவர் மிரளக்கூடும்.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் அரசியலுக்கு புதிதாக ஒருவரை இழுத்துவந்து நிறுத்தியபின் அவரின் அண்ணா அது செய்தவர் அவரின் அப்பா இது செய்தவர் என்று சொல்லி இவரையும் ஏற்றுக்கொள்ளுங்கள் என்று அப்பாவி சனங்களைக் ஏமாற்றி அரசியலில் தங்கள் தங்கள் தலைமுறைகளை நிலைநிறுத்துவதையே நோக்கமாக கொண்டு பொறுப்புள்ள தமிழ் அரசியல்வாதிகள் நடந்துகொள்வதை இனியும் சகித்துக்கொள்ள முடியாது. அரசியலுக்கு வரும்போது சட்டம் தெரிந்திருக்கவேண்டுமா? பல்கலையில் படித்திருக்க வேண்டுமா அல்லது சாதாரண பாமர மக்களுக்கு அரசியலில் இடமே இல்லையா? போக அரசியல் என்பது பாமரனுக்கு புரியாதது என்று போக்கு காட்ட எண்ணுகிறார்களா?

ஆள் வேற  புங்குடுதீவாம் இனித்தான்  இருக்கு  அரசியல் வியாபார முன்னேற்றம் ..

 

எதுக்கும்  ஊர்  காணிக்கு  வேலி  போடச்சொல்லி  அப்பத்தாக்கு  சொல்லணும்  ,மொத்தமா  ஆட்டையை  போட்டுடுவாங்க  :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

ஜீவன் - அது ஒரு அனுபவப் பகிர்வு :)

  • கருத்துக்கள உறவுகள்

படித்தென்ன?

அரசியலைக்குரைத்துக்குடித்து பட்டம் பெற்றென்ன?

தமிழரிடம் தெரிவாக இந்தத்தகுதிகள்   போதாது

 

ஆள் தீவானாம்...

இவர் தெரிவு செய்யப்படவாய்ப்பே இல்லை..

ஊரவனே போட்டுக்கொடுத்திடுவான்

வாய்ப்பே இல்லை......

தமிழேண்டா.... :(  :(

யார் அரசியலுக்கு வந்தாலும், புதிதிலை கொஞ்சம் நல்ல ஆக்கள் மாதிரி காட்டிக்கொளுவினம், பிறகு எல்லாம் தன்ரை மாமன் மச்சானுக்கு எண்ட கதைதான் நடக்கும். வோட் போட்ட சனம் நடு ரோட்டிலை.....

  • கருத்துக்கள உறவுகள்

தேர்தலின் பின்னர் சிங்களவர்கள் தரவிருக்கும்  தீர்வில் பல சட்டச் சிக்கல்கள் வரலாம்.

இதை நன்கு முன்கூட்டியே அறிந்து கொண்ட ஐயா சம்பந்தன் அவர்கள் பல சட்டத்தரணிகளை அடுத்த தேர்தலில் உள்வாங்கும் முயற்சியில் உள்ளாராம்.

அப்ப இனி தமிழ் கூட்டமைப்புக்கு , சட்டத்தரணிகளின் கூட்டமைப்பு என பெயர் மாற்ற வேண்டி வரும் போல இருக்குது.

இது எல்லாம் சம்பந்திரின் மாஸ்டர் பிளான் தமிழ் கூட்டமைப்பை உடைப்பதற்கு.

 

  • கருத்துக்கள உறவுகள்

சுமந்திரனின் விதியை யார் தான் மாற்ற முடியும். பின் கதவால் வந்த சுகம் போல் இருக்காது தேர்தல் களத்தில் அவரின் சித்து விளையாட்டு.  :D  :icon_idea:


மக்கள் தெளிவா இருக்கினனம்..! யாருக்கு வாக்களிக்கனுன்னு..!!!  :icon_idea:

தமிழர் விடுதலைக் கூட்டணி (70, 80 களில்), கூட்டமைப்பு இதில் உள்ள தமிழரசுக்கட்சி (தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு முன்னரும்தான்) சட்டத்தரணிகளையே தேர்தல் களத்தில் இறக்கியது. இதனை யாரும் கேள்வியே கேட்காமல் வாக்களித்தார்கள். 
 
ஏன், சட்டத்தரணிகள் தமது வேலையைப் பொறுபேற்கும்போது உண்மைக்கும் நீதிக்கும் விசுவாசகமாக இருப்போம் என்று சத்தியப் பிரமாணம் எடுக்கின்றார்கள். பின்னர் ஒரு கள்வனிடம் பணம் பெற்றுக்கொண்டு அவன் களவெடுக்கவேயில்லை என்று சத்தியப் பிரமாணம் எடுத்த நீதிமன்றிலேயே வாதிடுவார்கள்.
 
ஏன், எப்படி இந்த கலாச்சாரம் எமக்குள் வந்தது. இது நாம் யாவரும் விட்ட பிழை.
 
வாய் உள்ள பிள்ளை பிழைக்கும் என்ற நம்பிக்கையா?
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

தமிழர் விடுதலைக் கூட்டணி (70, 80 களில்), கூட்டமைப்பு இதில் உள்ள தமிழரசுக்கட்சி (தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு முன்னரும்தான்) சட்டத்தரணிகளையே தேர்தல் களத்தில் இறக்கியது. இதனை யாரும் கேள்வியே கேட்காமல் வாக்களித்தார்கள். 
 
ஏன், சட்டத்தரணிகள் தமது வேலையைப் பொறுபேற்கும்போது உண்மைக்கும் நீதிக்கும் விசுவாசகமாக இருப்போம் என்று சத்தியப் பிரமாணம் எடுக்கின்றார்கள். பின்னர் ஒரு கள்வனிடம் பணம் பெற்றுக்கொண்டு அவன் களவெடுக்கவேயில்லை என்று சத்தியப் பிரமாணம் எடுத்த நீதிமன்றிலேயே வாதிடுவார்கள்.
 
ஏன், எப்படி இந்த கலாச்சாரம் எமக்குள் வந்தது. இது நாம் யாவரும் விட்ட பிழை.
 
வாய் உள்ள பிள்ளை பிழைக்கும் என்ற நம்பிக்கையா?

 

 

உலகளாவிய ரீதியில் சட்டம் படித்தவர்களும் சட்டத்தரணிகளுமே அதிகளவு அரசியல்வாதிகளாக இருக்கின்றனர். 

  • கருத்துக்கள உறவுகள்

தேர்தலின் பின்னர் சிங்களவர்கள் தரவிருக்கும்  தீர்வில் பல சட்டச் சிக்கல்கள் வரலாம்.

இதை நன்கு முன்கூட்டியே அறிந்து கொண்ட ஐயா சம்பந்தன் அவர்கள் பல சட்டத்தரணிகளை அடுத்த தேர்தலில் உள்வாங்கும் முயற்சியில் உள்ளாராம்.

தமிழன் குளிக்கிறது கழுவுரதட்கும் நீதிமன்றில் போய் அனுமதி எடுத்துதான் வர வேண்டுமா ??? 
தீர்வை தந்துவிடுவார்களோ ?
என்றுதான் மக்களுக்கு இப்ப பீதி வர போகிறது .....
  • 2 months later...
  • தொடங்கியவர்

வித்தியா கொலையாளியை காப்பாற்றுவதில் சட்டத்தரணி வீ.ரி.தமிழ்மாறன் தீவிரம்…?

 

வித்தியாவின் கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபரான சுவிஸ் பிரஜையை காப்பாற்றுவதில் சட்டத்தரணி வீ.ரி.தமிழ்மாறன் தீவிரம் காட்டியதுடன் யாழ் பொலிசில் ஒப்படைக்க வேண்டிய கைதியை வெள்ளவத்தை காவல் நிலையத்தில் ஒப்படைத்து சுவிட்சலாந்திற்கு அனுப்புவதற்கு வீ.ரி. தமிழ்மாறன் பகிரத பிரயத்தனம் செய்வதாகவும் அதனால் புங்குடுதீவு சனசமூக நிலையம் பதட்டமாக காட்சியளிப்பதாக மக்கள் கூறுகின்றனர்.

 

நீதியை நிலைநாட்டுவதாக காவல்துறை..! மக்களை காப்பாற்ற வேண்டிய சட்டத்தரணி தமிழ்மாறன் குற்றவாளிகள் சார்பில், ஏழைத் தமிழன் இப்படிப்பட்டவர்கள் மத்தியில் வாழலாமா…..??
 
புங்குடுதீவு மக்கள் பற்றியோ அல்லது பாதிக்கப்பட்ட குடும்பம் பற்றியோ கவலைப்படாத வீ.ரி.தமிழ்மாறன் சட்டம் பற்றி கதைப்பதுடன் இவ்வாறான கொலைக்கு என்ன ஆதாரம் உண்டு..? சுவிஸ் பிரஜை மீது குற்றஞ் சாட்ட முடியாது.
 
என தீவக மக்களை மதிக்காமல் கதைத்ததாக புங்குடுதீவு சனசமூக நிலைய செயலாளர் தெரிவித்ததுடன் இந்த சட்டத்தரணி இங்கு பிறந்தே அநீதிக்கு விலை போன நயவஞ்கன், இவர் இனி எமது ஊருக்கு வருவாரா…?  இவரும் அசிங்கமான சட்டத்தரணிகளான ரெமிடீயஸ் மற்றும் சிறிக்காந்தா பட்டியலில் இணைகிறார் புங்குடுதீவாரின் அடுத்த நிலை என்ன….??
 
  • தொடங்கியவர்

தமிழ்மாறனின் கொடும்பாவி எரிப்பு

 

article_1432119588-ehli.jpg

 

புங்குடுதீவு மாணவியின் படுகொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட சுவிஸ் நாட்டைச் சேர்ந்தவரை தப்பிக்க வைக்க முயற்சித்தார் என்ற குற்றஞ்சாட்டப்பட்டு கொழும்பு பிரபல சட்டத்தரணி வி.டி.தமிழ்மாறனின் கொடும்பாவி,  கிளிநொச்சி பளைப் பகுதியில் புதன்கிழமை (20) எரிக்கப்பட்டது.
 
பளை பிரதேச விளையாட்டுக் கழகங்களை சேர்ந்த இளைஞர்கள் ஒன்று சேர்ந்து   பளை பொது விளையாட்டு மைதானத்திலிருந்து மத்திய பேரூந்து நிலையம் நோக்கி ஊர்வலமாக சட்டத்தரணி வீ.டி.தமிழ்மாறனின் கொடும்பாவியை இழுத்துச் சென்று, அங்கு கொடும்பாவியை எரித்து தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
புங்குடுதீவு மாணவி படுகொலையுடன் தொடர்புபட்ட 8 சந்தேகநபர்களுடன் நெருங்கிய தொடர்பைப் பேணிய சுவிஸ் நாட்டுப் பிரஜையை பொதுமக்கள் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்தனர். 
 
அந்நபர் மீது எவரும் வழக்குப் பதிவு செய்யாத காரணத்தால் அவரை பொலிஸார் விடுவித்த நிலையில், மேற்படி சட்டத்தரணி, சுவிஸ் நாட்டைச் சேர்ந்தவரை கொழும்புக்கு கூட்டிச் சென்று சுவிஸுக்கு அனுப்பி வைக்கும் நடவடிக்கையை மேற்கொண்டார்.
இதனை அறிந்த மக்கள் சட்டத்தரணி வி.டி.தமிழ்மாறன், செவ்வாய்க்கிழமை (19) புங்குடுதீவு வந்திருந்த வேளை அவரை தடுத்து வைத்துப் போராட்டம் செய்தனர். மக்களின் போராட்டத்தால் சுவிஸ் நாட்டைச் சேர்ந்தவர் வெள்ளவத்தையில் வைத்துக் கைது செய்யப்பட்டார்.
 
இந்நிலையில் கொலையாளிகளுக்கு சார்பாகச் செயற்படுகின்றார் என சட்டத்தரணியின் கொடும்பாவி பளையில் எரிக்கப்பட்டுள்ளது
 
article_1432119602-eg.jpg
 
  • கருத்துக்கள உறவுகள்

சுமந்திரன் மட்டும் சும்மாவா.. இந்தா காணி மீட்க வழக்குப் போடுங்கள் என்று மகிந்த காலத்தில் மக்களிடம் 5000 தொடங்கி 50,000 வரை ஆயிரக்கணக்கானோரிடம் வசூல் செய்தாரே...??!

 

அந்த வழக்குகளுக்கும்.. காசுக்கும் என்னாச்சுது...??! காணிகளும் இன்னும் உருப்படியா விடுவிக்கப்பட்டு வழங்கப்பட்டதாகத் தெரியவில்லை.

 

உந்த தமிழ் சட்டாம்பிமார் பலே கள்ளர். இவர்கள் தான் தமிழ் மக்களை நடுத்தெருவில் அரசியல் ரீதியாகவும் நிறுத்தியவர்கள். :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல பெரிய கேப்பா கிடச்சிருக்கு, புலத்து வியாபாரிகள் கத்தியோட கிளம்பியாச்சு கிடா வெட்ட.

  • கருத்துக்கள உறவுகள்

சுமந்திரன் ஊரில வெட்டின பெருங்கடாக்களை காட்டிலுமா... புலத்தில் (புலம் என்பதும் ஊர்தான். தமிழும் தெரியாமல் தான் வெழுத்துக் கட்டி வருகிறார்கள் சிலர்.) வெட்டிறாங்க. :lol::D

  • கருத்துக்கள உறவுகள்

புலத்துக்கு விளக்கம் தெரியும். இங்கே புலம் என்பது புலம்பெயர்ந்த என்பதின் சுருக்கம்.

 

கோசான் புரியவில்லை. 
 
தமிழ் மாறன், அழகான தமிழ்ப்பெயர் ஆனாலும் தெரியவில்லை யாரென்று இந்த மரமண்டைக்கு. ஏதாவது இணைய இணைப்பைத் தரமுடியுமா புரிந்து கொள்ள.
 
நன்றி

 

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.