Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ்த் தேசிய கீதத்தால் சபையில் பெரும் சர்ச்சை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை அர­சி­ய­ல­மைப்புச் சட்­டத்தில் தேசிய கீதம் தமிழ் மொழியில் உள்­வாங்­கப்­ப­ட­வில்­லை­. ஆகவே அதனை சிங்­கள மொழியில் மட்டுமே பாடவேண்டும்.தமிழ் மொழியில் பாடுவது தடைசெய்யப்படவேண்டும் என்று ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் திகா­ம­டுல்ல மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சரத் வீர­சே­கர நேற்று பாரா­ளு­மன்­றத்தில் கூறி­யதால் சபையில் பெரும் சர்ச்­சையும் களே­ப­ரமும் ஏற்­பட்­டது.

sri-lanka-parliament.jpg

 

சரத்­வீ­ர­சே­க­ரவின் மேற்­படி கூற்­றி­னை­ய­டுத்து எதிர்க்­கட்­சியில் அமர்ந்­துள்ள ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­னணி உறுப்­பி­னர்­க­ளி­டையே பிளவு ஏற்­பட்ட வகை­யிலும் கருத்­துக்கள் முன்­வைக்கப்பட்டன.

 

சரத் வீர­சே­க­ரவைப் பார்த்து எம்.பிக்களான டிலான் பெரேரா மற்றும் வாசு­தேவ நாண­யக்­கார ஆகியோர் கடு­மை­யா­கத்­திட்­டித்­தீர்த்­த­துடன் அர­சி­ய­ல­மைப்புச் சட்­டத்தை நன்­றாகப் படித்து விட்டு வந்து கதைக்­கு­மாறும் கடு­மை­யான தொனியில் தெரிவித்தனர்.

 

இதே­வேளை சரத் வீர­சே­க­ரவின் கூற்­றுடன் இணைந்துகொண்ட உறுப்­பினர் தினேஷ் குண­வர்த்­தன சரத் வீர­சே­க­ர­வுடன் முன்­ன­தாக முரண்­பட்ட ஜன­நா­யக தேசியக் கூட்­டணி எம்.பி.யான சுனில் ஹந்­துன்­னெத்­தியை கண்டித்து பேசி சரத் வீர­சே­கர எம்.பி.க்கு ஆத­ர­வாக குரல் எழுப்பினார்.

 

இதே­வேளை ஐக்­கிய தேசியக் கட்­சியின் எம்.பி. ஆர். யோக­ராஜன் மற்றும் முஸ்லிம் காங்­கி­ரஸின் செயலாளரும் அமைச்சருமான ஹசன் அலி ஆகிய உறுப்­பி­னர்­களும் சரத் வீர­சே­கர எம்­பி­யுடன் முரண்­பட்­டனர்.

 

இதனால் சபையில் சில நிமி­டங்கள் பெரும் களே­பரம் தோன்­றி­யி­ருந்­ததை அவ­தா­னிக்க முடிந்­தது.முன்­ன­தாக சுனில் ஹந்­துன்­னெத்தி எம்.பி சரத் வீர சேக­ரவின் கூற்றை முற்று முழு­தாக மறுப்­ப­தாக கூறி­ய­துடன் அர­சி­ய­ல­மைப்புச் சட்­டத்தில் கூறப்­பட்­டுள்­ளதை திரி­பு­ப­டுத்திப் பேசு­வ­தாக குறிப்பிட்டார்.அர­சி­ய­ல­மைப்பில் ஏற்றுக் கொள்­ளப்­பட்­டுள்ள தேசிய கீதத்தை தமிழ் மொழியில் பாடக்­கூ­டாது என்று கூறு­வ­தற்கு நீங்கள் யார் என்றும் சரத் வீர­சே­க­ரவைப் பார்த்து ஆவே­ச­மாக அவர் கேள்­வி­யெ­ழுப்­பினார்.

 

பாரா­ளு­மன்­றத்தில் நேற்று வெள்­ளிக்­கி­ழமை அமர்வின் போது இடம்­பெற்ற சபை ஒத்­தி­வைப்பு வேளை விவா­தத்தில் உரை­யாற்­று­வ­தற்கு தயாரான சரத் வீர­சே­கர எம்.பி. தேசிய கீதம் தமிழில் பாடப்­ப­டு­வது தடை செய்­யப்­பட வேண்டும் என்ற ரீதியில் ஜன­நா­யக மக்கள் முன்­ன­ணியின் தலை­வரும் மேல்­மா­காண சபை உறுப்­பி­ன­ரு­மான மனோ­க­ணே­சனை குற்றம்சாட்டி பேசினார்.

 

இதன் போது அவர் மேலும் கூறு­கையில்;

 

தேசிய நிறை­வேற்று சபையில் அங்கம் வகித்து வரு­கின்ற மனோ­க­ணே­சனின் வேண்­டு­கோ­ளுக்­கி­ணங்க தேசிய கீதத்தை தமிழ் மொழியில் பாடு­வ­தற்கு அனு­ம­தி­ய­ளிக்­கப்­பட்­டுள்­ளது.

 

எனினும் அர­சி­ய­ல­மைப்புச் சட்­டத்தில் தேசிய கீதம் தமிழ் மொழியில் இல்லை என்­பதால் அதனை தமிழ் மொழியில் பாடு­வ­தற்கு இட­ம­ளிக்க முடி­யாது. மனோ­க­ணேசன் போன்ற இன­வா­தி­களின் கோரிக்­கை­க­ளுக்கு இணங்க முடி­யாது. எனவே தேசிய கீதம் சிங்­கள மொழியில் அன்றி தமிழ் மொழியில் பாடு­வ­தற்கு இட­ம­ளிக்க முடி­யாது.

 

இலங்­கையில் 2.5 மில்­லியன் தொகை­யி­னரே தமிழ் மக்கள் வாழ்­கின்­றனர். ஆனால் இந்­தி­யாவில் 65 மில்­லியன் தமிழ் மக்கள் வாழ்­கின்­றனர். எனினும் அங்கு தமிழ் மொழியில் தேசிய கீதம் பாடப்­ப­டு­வ­தில்லை.

 

அப்­ப­டி­யானால் இந்­தி­யா­விலும் அந்­நாட்டு தேசிய கீதம் தமிழ் மொழியில் பாடப்­பட வேண்டும் என்று மனோ ­க­ணேசன் இந்­திய பிர­தமர் மோடி­யிடம் கேட்க முடி­யுமா என்று நான் மனோ­ க­ணே­ச­னுக்கு சவால் விடுக்­கிறேன்.

 

தமி­ழர்­களின் வாக்­கு­களைப் பெறு­வ­தற்­கா­கவே இந்த சபையில் இருக்­கின்ற சில உறுப்­பி­னர்கள் இவ்­வாறு பேசு­கின்­றனர் என்றார்.

 

சுனில் ஹந்துன்னெத்தி

 

இதே­வேளை சரத் வீர­சே­கர எம்.பி. யின் உரையின் போது இடை­ம­றித்த சுனில் ஹந்­துன்­னெத்தி எம்.பி. சரத் வீர­சே­கர எம்­பி­யுடன் கடு­மை­யான வாக்­கு­வா­தத்தில் ஈடு­பட்டார்.

அர­சி­ய­ல­மைப்பில் தேசிய கீதம் தமிழ் மொழியில் இருக்­கி­றது. எனவே அர­சி­ய­ல­மைப்பு சட்­டத்தை நன்­றாக வாசித்து விட்டு இங்கு வந்து பேச வேண்டும் என்று கடு­மை­யாக எச்­ச­ரித்தார்.

 

தினேஷ்

 

இதே­வேளை தினேஷ் குண­வர்த்­தன எழுந்து சுனில் ஹந்துன் நெத்தி எம்.பி .யுடன் தர்க்­கத்தை ஏற்­ப­டுத்தி சரத்­வீர சேக­ர­வுக்கு ஆத­ர­வா­கப்­பே­சினார். சுனில் ஹந்­துன்­நெத்தி எம்பி யையும் பார்த்து கையை நீட்டி ஆவே­ச­மாக பேசி­ய­போது ஒலி­வாங்கி செயற்­பாட்­டில்­லா­ததால் அவ­ரது கருத்­துக்கள் வெளி­வ­ர­வில்லை.

 

டிலான்

 

இதே­வேளை டிலான் பெரேரா எம்.பி. எழுந்து நின்று வீர­சே­கர எம்.பி யைப்­பார்த்து கடு­மை­யாக சாடினார். இன­வா­தத்தை எழுப்ப வேண்டாம். அர­சி­ய­ல­மைப்பில் உள்­ளதை தவ­றாக எடுத்­துக்­கூற வேண்டாம் என்று. கூறி­ய­துடன் தேசிய கீதம் சிங்­கள மொழியில் மட்­டு­மல்ல தமிழ்­மொ­ழி­யிலும் அர­சி­ய­ல­மைப்பு சட்­டத்தில் உள்­வாங்­கப்­பட்­டி­ருப்­ப­தாக சுட்­டிக்­காட்­டினார்.

 

வாசு­தேவ

 

இத­னை­ய­டுத்து ஒழுங்­குப்­பி­ரச்­சி­னையை எழுப்­பிய வாசு­தேவ நாண­யக்­கார எம்.பி கூறு­கையில்:

 

அர­சி­ய­ல­மைச்­சட்­டத்தில் தேசிய கீதம் தமிழ்­மொ­ழியில் பாடு­வது ஏற்­றுக்­கொள்­ளப்­பட்­டுள்­ளது. சிங்­க­ளத்தில் தேசிய கீதம் பாடும்­போது "சிறி­லங்கா மாதா" என்று பாடு­கின்றோம். தமிழ்­மொ­ழியில் பாடும்­போது" சிறி­லங்கா தாயே"என்றே பாடப்­ப­டு­கி­றது. இதன் அர்த்தம் ஒன்­றா­கவே இருக்­கி­றது. தொனி ஒன்­றா­கவே இருக்­கி­றது.பொருள் ஒன்­றா­கவே இருக்­கி­றது. அத்­துடன் இது அர­சி­ய­ல­மைப்பு சட்­டத்­திலும் ஏற்­றுக்­கொள்­ளப்­பட்­டுள்­ளது.எ னவே சரத்­வீ­ர­சே­கர எம்.பி இவ்­வாறு கருத்து வெளி­யி­டக்­கூ­டாது என்றார்.

 

இதே­வேளை சுனில் ஹந்­துன்­நெத்தி எம்பி அர­சி­ய­ல­மைப்­புச்­சட்­டத்தை சுட்­டிக்­காட்டி அதில் ஏற்­றுக்­கொள்­ளப்­பட்­டுள்­ளதனாலேயே தேசிய கீதம் தமிழ்­மொ­ழியில் உள்­வாங்­கப்­பட்­டுள்­ளது என்றார்.

 

சரத் வீரசேகர

 

இத­னை­ய­டுத்து பேசிய சரத்­வீ­ர­சே­கர எம்.பி. அப்படி தமிழ்­மொ­ழியில் எழு­தப்­பட்­டி­ருக்­க­வில்லை என்று வாதிட்டதுடன். அப்­ப­டியே எழு­தப்­பட்­டி­ருந்­தாலும் தமிழ்­மொ­ழியில் பாடக்­கூ­டாது தமி­ழர்­களும் தேசிய கீதத்தை சிங்­கள மொழி­யிலே பாட வேண்டும் எனவும் தமிழ்­மொ­ழியில் பாடப்படுவது தடை செய்யப்படவேண்டும் என்றும் கூறினார்.

 

இதன்போது குறுக்கிட்ட சுனில் ஹந்துன்நெத்தி எம்பி அரசியலமைப்பில் கூறப்பட்டதை தடைசெய்யுமாறு கூறுவதற்கு நீங்கள் யார் என்று வீரசேகர எம்.பி.யைப் பார்த்து கேள்வி எழுப்பியதுடன் அப்படி அரசியலமைப்பு சட்டத்தில் மாற்றத்தை ஏற்படுத்தி தமிழ்மொழியை நீக்குவதென்றால் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வேண்டும் இப்போது உங்களால் அந்தபெரும்பான்மையை பெற்றுக்கொள்ள முடியுமா?என்றும் கேட்டார்.

 

இவ்வாறு சர்ச்சைகள் ஏற்பட்டிருந்தபோது டிலான் பெரேரா மற்றும் வாசுதேவ நாணயக்கார ஆகியோர் சரத்வீரசேகரவுடன் வாக்குவாதப்பட்டதை அடுத்து தினேஷ் குணவர்த்தன எம்பி அமைதியாக அமர்ந்து விட்டார்.

 

http://www.virakesari.lk/articles/2015/03/21/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AF%80%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88

தேசிய கீதப்பிரச்சனையை தீர்ப்பதற்க்கே இந்தியாவின் மத்தியஸ்தம் வேண்டும்போல ....  :icon_mrgreen: 

  • கருத்துக்கள உறவுகள்

தேசிய கீதத்தைத் தமிழில் பாடுவதைத் தடுப்பதன்மூலம்> இலங்கையில் தமிழர்களின் இருப்பை இல்லாமற்செய்ய இன்னொரு வகையில் முயல்கிறார்கள்.  இந்த விவாதத்தில் தமிழ்தேசியக் கூட்டமைப்பு எங்கே போனது என்று தெரியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்து ஹக்கீம் ஒரு பிரச்சினையை கிளப்புவார்.. அரேபிய மொழியில் பாடவேணுமெண்டு.. :lol:

  • கருத்துக்கள உறவுகள்

 இந்த விவாதத்தில் தமிழ்தேசியக் கூட்டமைப்பு எங்கே போனது என்று தெரியவில்லை.

 

சுமந்திரன் இப்போது நாட்டில் இல்லாததால் வந்த வில்லங்கம்.

திரும்பி வந்ததும் இவர்களுக்கு இருக்கு ஆப்பு :D

 

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள தேசிய கீதத்தை ...
ஏன் தமிழில் பாடவேண்டும்?

 

நாம்தான் தொடர்ந்தும் அவர்களை தொல்லை படுத்தி வருகிறோம். .

  • கருத்துக்கள உறவுகள்

வீரசேகர மற்றும் தினேசை மகிந்த ஆட்டுவிப்பது தெரிகிறது.

இனவாத சக்திகளுக்கெதிராக யூஎன்பி, சுக ஜேவிபி எல்லோரும் குரல் எழுப்பியது நல்ல விடயம். இது இலங்கைக்குப் புதுசு.

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள இனவாதிகள்.. இரண்டு வகை.

 

சில்லறை விசயத்துக்கும் இனவாதம் பேசுவது ஒன்று.

 

சீரியஸான விசயத்திற்கு இனவாதம் பேசுவது இன்னொன்று.

 

இங்கு சிலர் சில்லறகளை வைச்சு.. சீரியஸுகளுக்கு புதிய குஞ்சம் கட்டிவிடுகின்றனர்.

 

இதே சிங்கள மிதவாதிகள்.. இனவாதிகள் ஆக வேண்டிய விடயங்களில் ஆகியே தீருவர். அதற்கு அண்மையில்.. இனப்படுகொலை தீர்மானம் தொடர்பில் வாசுதேவ தன் சம்பந்தி.. விக்னேஸ்வரனை கண்டித்துவிட்ட அறிக்கை சான்றாகும்.  :icon_idea:  :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சிங்களவன் ஒருகாலமும் திருந்தமாட்டான். 

சிங்களவன் ஒருகாலமும் திருந்தமாட்டான். 

 

சிங்களவர்கள் திருந்தினாலும் திருந்த முயற்சித்தாலும் நாங்கள் விடமாட்டமே.
 
ஒரு இனத்துவேசப் பத்திரிகை என்று பெயரெடுத்த பத்திரிகை சிகிரியாவில் எழுதிய பெண்ணிற்காக பரிதாபப்படுகின்றது. இப் பெண்ணிற்காக ஒரு சிங்கள பாராளுமன்ற உறுப்பினர் பாராளுமன்றத்தில் பேசுகின்றார். தமிழில் தேசியகீதம் பாடவேண்டும் என இன்னும் பல சிங்கள பாராளுமன்ற உறுப்பினர்கள் குரல் கொடுக்கின்றார்கள். 
 
தப்பு எல்லாரும் செய்வதுதான் ஆனால் அதை ஏற்றுக்கொள்பவர்கள் குறைவு. சிங்களத்திடம் மாற்றம் தெரிகின்றது - வரவேற்கலாமே.
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அட நாசமாய்ப்போவாரே,

 

தமிழில் தேசிய கீதம் பாடக்கூடாது என்றால் பிறகு என்ன கோதாரிக்கு அரசாங்கத்தின் இலவச பாட நூல்களில் ஆண்டு ஒன்று தொடக்கம் பதினொன்று வரை முதல் பக்கத்தில் தமிழில் தேசியகீதத்தை அச்சு அடித்தார்கள்?

 

அதில் இது வாசிப்பதற்கு மட்டும் ஒழிய பாடுவதற்கு அல்ல என்று ஒரு அடிக்குறிப்பையும் போட்டு இருக்கலாமே.

 

தமிழனுக்கு ஒரு முள்ளிவாய்க்கால் போல. சிங்களவனுக்கும் ஒரு கண்டம் நிச்சயம் வரும். அப்போது கிடைக்கும் அழிவுடனாவது சிங்கள சமூகம் திருந்தட்டும்.

Edited by கிழவி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.