Jump to content

மசாலா மீன் ப்ரை


Recommended Posts

மசாலா மீன் ப்ரை 

 

இதுவரை எத்தனையோ மீன் ப்ரையை சுவைத்திருப்பீர்கள். ஆனால் மசாலா மீன் ப்ரையை சுவைத்ததுண்டா?

 

சரி, உங்களுக்கு மசாலா மீன் ப்ரை எப்படி செய்வதென்று தெரியுமா?

 

இது செய்வது மிகவும் ஈஸி. மேலும் விடுமுறை நாட்களில் வீட்டில் செய்து சாப்பிட ஏற்றது. அதுமட்டுமில்லாமல் இது வீட்டில் உள்ளோர் அனைவரும் விரும்பி சாப்பிடுமாறு இருக்கும். சரி, இப்போது அந்த மசாலா மீன் ப்ரையை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!

29wvev4.jpg

 

 தேவையான பொருட்கள்:

 

ஊற வைப்பதற்கு... மீன் - 5 துண்டுகள்

 

தயிர் - 1 டேபிள் ஸ்பூன்

 

மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்

 

மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்

 

மல்லித் தூள் - 1/2 டீஸ்பூன்

 

உப்பு - தேவையான அளவு

 

அரைப்பதற்கு...

 

மல்லி - 1 டீஸ்பூன்

 

சோம்பு - 1/2 டீஸ்பூன்

 

மிளகு - 1/4 டீஸ்பூன்

 

பட்டை - 1/4 இன்ச்

 

கிராம்பு - 1

 

சின்ன வெங்காயம் - 4-5

 

பூண்டு - 2 பற்கள்

 

செய்முறை:

 

முதலில் அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை மிக்ஸியில் போட்டு, தண்ணீர் சேர்க்காமல் அரைத்துக் கொள்ள வேண்டும்.

 

பின் மீனை நன்கு கழுவி, அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித் தூள், தயிர் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து, அத்துடன் அரைத்து வைத்துள்ள பேஸ்ட் சேர்த்து நன்கு பிரட்டி 30 நிமிடம் ஊற வைக்க வேண்டும்

 

. பின்பு ஒரு தோசைக் கல்லை அடுப்பில் வைத்து, கல் சூடானதும், அதில் மீன் துண்டுகளைப் போட்டு, எண்ணெய் ஊற்றி, முன்னும் பின்னும் பொன்னிறமாக பொரித்து எடுத்தால், மசாலா மீன் ப்ரை ரெடி!!!

 

 

Read more at: http://tamil.boldsky.com/recipes/non-veg/masala-fish-fry-recipe-007756.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மூனரைதுண்டுதான் கிடக்கு மீதம் ஒன்னரை எங்கே...! :lol::)

Link to comment
Share on other sites

மூனரைதுண்டுதான் கிடக்கு மீதம் ஒன்னரை எங்கே...! :lol::)

 

ஆஆஆ எப்படி எல்லாம் படத்தை கவனித்து பார்க்கிறார்கள் :lol: :lol:

 

இனி இரவு  ஒருவர் வருவார் அவர்  கேட்டபார் அது என்ன ப்ரை? ஏன்  மீன் பொரியல் இல்லையோ என்று :icon_mrgreen::lol:

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மூனரைதுண்டுதான் கிடக்கு மீதம் ஒன்னரை எங்கே...! :lol::)

 

29wvev4.jpg

 

சட்டியை  நல்லவடிவாய் கவனிச்சு பாருங்கோ....சட்டி கிண்ணச்சட்டி....மிச்ச இரண்டரையும்....மூண்டரைக்கு கீழை  :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிஸ்கட் தூளில் பொரித்து எடுக்க வேண்டும். அந்த மாதிரி

Link to comment
Share on other sites

நன்றி இணைப்புக்குச் சகோதரர்!  :D


 பின்பு ஒரு தோசைக் கல்லை அடுப்பில் வைத்து, கல் சூடானதும், அதில் மீன் துண்டுகளைப் போட்டு, எண்ணெய் ஊற்றி, முன்னும் பின்னும் பொன்னிறமாக பொரித்து எடுத்தால், மசாலா மீன் ப்ரை ரெடி!!!

 

 

 

பொரியலைப் பார்த்தால் நிறைய எண்ணை விட்டுப் பொரித்த பொரியல் மாதிரி எல்லோ இருக்கு!  :D


மூனரைதுண்டுதான் கிடக்கு மீதம் ஒன்னரை எங்கே...! :lol::)

 

மூக்குக் கண்ணாடியைப் போட்டுப் பாருங்கோ சகோதரர் 5 துண்டுகள் இருக்கு ! :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மசாலா மீன் ப்ரையை..... பார்க்கவே,  "நாக்கில்" ஜலம் ஊறுகின்றது. :D  :wub:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

பின்பு ஒரு தோசைக் கல்லை அடுப்பில் வைத்து, கல் சூடானதும், அதில் மீன் துண்டுகளைப் போட்டு, எண்ணெய் ஊற்றி, முன்னும் பின்னும் பொன்னிறமாக பொரித்து எடுத்தால், மசாலா மீன் ப்ரை ரெடி!!!

 

எப்ப தொடக்கம், மீனிலை 'தோசை' சுடுகிற பழக்கம்? :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உந்த விளையாட்டில போனா, பிறகு மீன் சதையை பிச்சு எடுத்து, தண்ணி விட்டு அரைத்து, மீன் இட்டலி, மீன் தோசை என்று போயிடும். :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பார்தோம் , பார்தொம்...! ( மன்னிக்கவும் என்று பொருள்.) :)

 

சே...., இந்த ஒன்னரை துண்டு மீன் எனக்கு ஏழரையாயுட்டுது...!  :huh::)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆஆஆ எப்படி எல்லாம் படத்தை கவனித்து பார்க்கிறார்கள் :lol: :lol:

இனி இரவு ஒருவர் வருவார் அவர் கேட்டபார் அது என்ன ப்ரை? ஏன் மீன் பொரியல் இல்லையோ என்று :icon_mrgreen::lol:

சாரி,நேற்று நான் நித்திரை:)
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஹஹா நான் வேறு ஒருவரை சொன்னேன் :D

அவர் தான் இவர்!!  :D

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.