Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இன்றுடன் மாமா இறந்து ஒன்பது நாட்கள் ஆகிவிட்டன. வீடு முழுதும் ஒரே உறவினர்களும் தேவைக்கு அதிகமான உணவுகளும் யாரினது என்று தெரியாத பாத்திர பண்டங்களுமாய் வாணிக்கு உடல், மன அலைச்சல் இரண்டும் சேர்ந்து இன்றாவது நின்மதியாகத் தூங்கவேண்டும் என்று எண்ணிக் கொண்டாள்.

சிறுநீரகங்கள் இரண்டும் செயலிழந்த பின்னும் மாமாவின் மனத்திடம் தான் இத்தனை நாட்கள் அவரை வாழ வைகிறதோ என்று வாணி பல நாட்கள் வியந்திருக்கிறாள். வாரத்தில் இரண்டு நாட்கள் மாமாவை வைத்தியசாலையில் இருந்து வரும் வாகனத்தில் அழைத்துச் சென்று அவர்களே மீண்டும் இறக்கி விடுவார்கள்.

போகும்போது நடந்து செல்லும் மாமா வரும்போது உற்சாகம் இழந்தபடி கைத்தாங்கலாக அழைத்து வரப்படுவது அவளுக்கு பச்சாதாபத்தை ஏற்படுத்தும். அவள் அவரை என்றும் தன் கணவனின் தந்தையாக எண்ணியதே இல்லை. தன் தந்தை போலவே ஓடி ஓடி எல்லாம் செய்பவள். அவருக்கும் மருமகள் மேல் தீராத அன்பு உண்டுதான். எத்தனை வேதனை என்றாலும் துளிகூட மகன் மனைவிக்கோ அன்றி வாணிக்கோ கூடக் காட்டிக்கொள்ளாது எதுவும் நடவாததுபோல் திரியும் மாமனாரை அவளுக்குப் பிடிக்காமற் போகுமா ??

ஒன்பது நாட்களுக்கு முன்னர் கூட காலையில் எழுந்து தானே குளித்து, உடைமாற்றி போட்டுவாறன் என்று கூறிவிட்டுப் போனவர் முக்கால் மணி நேரகுத்தில் இல்லாமற் போனது அவளால் இன்றுவரை நம்பத்தான் முடியாமல் இருக்கிறது.

இத்தனை நாட்கள் வீட்டில் மாறிமாறி உறவினர்கள் புடை சூழப் படுத்தது மனதுக்கு இதமாக இருந்தாலும் இன்று கட்டிலில் படுக்க வேண்டும் என்னும் ஆசையைத் தர இரவு பத்து மணிக்கு இரண்டு மகன்களுடன் அவர்கள் கட்டிலில்   போய் நின்மதியாகப் படுத்தாள் வாணி.

இரு மாடிகள் கொண்ட பெரிய வீட்டில் கீழே மாமனாருக்கும் மாமியாருக்கும் ஒரு படுக்கை அறை. மேலே இவர்களது படுக்கையறை அருகே பிள்ளைகளின் அறை. மாமியார் தனியே கீழே படுக்க முடியாது என்பதால் இவர்களது  படுக்கை அறையில் இந்த ஒன்பது நாட்களும் இவளது தாயும் மாமியாரும் தூங்க, இவள் மற்ற உறவினர்களுடன் வரவேற்பறையில் கணவனின் சகோதரி பிள்ளைகளுடன் தூங்கினாள். அவர்களும் நேற்றுக் காலை மாமாவின் எட்டு முடிய இன்று சுவிசுக்குக் கிளம்ப, இவளுக்குக் கணவனுடன் மாமனாரின் படுக்கையில் போய்த் தூங்க எதோ மனம் வரவில்லை. பயம் என்று சொல்ல முடியாது ஆனாலும் எதுவோ ஒன்று தடுக்க பிள்ளைகளுடன் படுத்தது அதனால்த்தான்.

மூத்தவன் எப்போதும் ஒழுங்காகப் படுக்கவே மாட்டான். அங்கு இங்கு திரும்பி போர்வை விலக்கியபடி .... சின்னவனும் பெரியவனும் மாறிமாறி இழுக்க இவளுக்குக் குளிரில் என்ன செய்வது என்று தெரியவில்லை. இன்றைக்கும் நின்மதியாகப் படுக்க முடியாது போல் இருக்கே என நினைத்தவள், எதுக்கும் கீழே போய் கணவனுடன் படுக்க முடிவு செய்து நேரம் பார்த்தால் பதினோரு மணி. மேலே அறை விளக்கை நிறுத்திவிட்டு படிகளில் கடகடவென இறங்கினால் கீழே இருட்டு.

மாமனாரின் அறையில் இருந்து கணவனின் குறட்டைச் சத்தமும் சிறிய வெளிச்சமும் கோலில் விழுந்து கொண்டிருந்தது. கீழே இறங்கியவளுக்கு அந்தக் கோலின் ஒரு மூலையில் யாரோ நிற்பது போல் தெரிய, மீண்டும் மேலே ஒடுவோமோ என மூளை எண்ணிய கணம், மேலேயும் எல்லா விளக்கும் அணைத்துவிட்டேனே எப்படிப் போவது என்னும் கேள்வியும் எழ, ஒரே ஓட்டமாக ஓடிச் சென்று கணவனுக்குப் பக்கத்தில் எப்படிப் படுத்தாள் என்று தெரியாமல் கணவனின் தோள்மூட்டில் தலை வைத்தும் கணவன் எழும்பாதது பீதியைக் கிளப்பியது.

கண்களை இறுக்க மூடி இருந்தவள் திறந்து பார்த்தபோது கணவனின் மூன்று அங்குலத் தாடியும் அதற்கு ஊடாக மாமனாரின் உருவமும் தெரிய வயிறு எல்லாம் பயத்தில் சுருள மீண்டும் உடனே கண்களை மூடினாள். என் நினைப்பாக இருக்கும் என்று எண்ணியபடி மீண்டும் கண்களைத் திறந்தால் மீண்டும் மாமனாரின் உருவம் தாடியூடாக. உடனே சிறிது துணிவை வரவளைத்துக்கொண்டு கணவனின் தாடியை  விலத்தினால் மாமனாரைக் காணவில்லை. என் நினைப்புத்தான் என்று எண்ணியபடி தாடியைக் கீழே விட மீண்டும் மாமனாரின் உருவம்.

ஐயோ தாடியை விடு என்று கணவன் சொன்னபோதுதான் அவளுக்குத் தான் கணவனின் தாடியை பயத்தில் இறுகப் பற்றி இருப்பது தெரிய உடனே கணவனிடம் மாமா தெரியிறார் என்றாள். நீ எப்ப இதில வந்து படுத்தனி என்று கேட்டபடி அவள் பக்கமாகத் திரும்பி அவளை அணைத்தபடி அப்பா எங்களுக்கு ஒண்டும் செய்ய மாட்டார். பயப்பிடாமல் படு என்று கணவன் சொன்னதன் பின் வாணி கண்களைத் திறக்கவே இல்லை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அவ்வளவு மோசமாகவோ இருக்கு ??? :D

  • கருத்துக்கள உறவுகள்

அவ்வளவு மோசமாகவோ இருக்கு ??? :D

அவ்வளவு மோசமாய் இல்லை ,ஆனால் வாசிக்க பயமாய் இருக்கு ......:D .....

  • கருத்துக்கள உறவுகள்

ஒருவருடைய இழப்பு என்பது ஈடு செய்யமுடியாதது

ஒருவர் அந்த இடத்தில் இல்லையென்பதை நாம்  ஏற்றுக்கொண்டுவிட்டால் கூட

பழக்கநிலையும்

மனமும் இன்னும் பரிட்சியமாகவில்லை என்பதே உண்மை...

நன்றி கதைக்கு....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இது என்னுடைய கதை இல்லை. அப்பாவின் இழப்பின் போது வந்த தம்பியின் நண்பன் மனைவி கூறியது. அதைக் கேட்ட எமக்கு பயம் இல்லாவிட்டாலும் அப்பாவின் எட்டு நடந்த அன்று ஒரு சுவாரசியமான நிகழ்வு இருக்கு பின்னர் எழுதுகிறேன்.

அவ்வளவு மோசமாய் இல்லை ,ஆனால் வாசிக்க பயமாய் இருக்கு ...... :D .....

வருகைக்கு நன்றி புத்தன். உங்களுக்கு இப்படி ஏதாவது அனுபவம் உண்டா ???
 
ஒருவருடைய இழப்பு என்பது ஈடு செய்யமுடியாதது

ஒருவர் அந்த இடத்தில் இல்லையென்பதை நாம்  ஏற்றுக்கொண்டுவிட்டால் கூட

பழக்கநிலையும்

மனமும் இன்னும் பரிட்சியமாகவில்லை என்பதே உண்மை...

நன்றி கதைக்கு....

வருகைக்கு நன்றி அண்ணா. அவர்கள் இல்லை என்பதும் தான் பல விடயங்கள் அப்படிச் செய்திருக்கலம் இப்படிச் செய்திருக்கலாம் என மனம் அங்கலைப்பதைத் தவிர்க்கவே முடிவதில்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இன்றுடன் மாமா இறந்து ஒன்பது நாட்கள் ஆகிவிட்டன. வீடு முழுதும் ஒரே உறவினர்களும் தேவைக்கு அதிகமான உணவுகளும் யாரினது என்று தெரியாத பாத்திர பண்டங்களுமாய் வாணிக்கு உடல், மன அலைச்சல் இரண்டும் சேர்ந்து இன்றாவது நின்மதியாகத் தூங்கவேண்டும் என்று எண்ணிக் கொண்டாள்.

சிறுநீரகங்கள் இரண்டும் செயலிழந்த பின்னும் மாமாவின் மனத்திடம் தான் இத்தனை நாட்கள் அவரை வாழ வைகிறதோ என்று வாணி பல நாட்கள் வியந்திருக்கிறாள். வாரத்தில் இரண்டு நாட்கள் மாமாவை வைத்தியசாலையில் இருந்து வரும் வாகனத்தில் அழைத்துச் சென்று அவர்களே மீண்டும் இறக்கி விடுவார்கள்.

போகும்போது நடந்து செல்லும் மாமா வரும்போது உற்சாகம் இழந்தபடி கைத்தாங்கலாக அழைத்து வரப்படுவது அவளுக்கு பச்சாதாபத்தை ஏற்படுத்தும். அவள் அவரை என்றும் தன் கணவனின் தந்தையாக எண்ணியதே இல்லை. தன் தந்தை போலவே ஓடி ஓடி எல்லாம் செய்பவள். அவருக்கும் மருமகள் மேல் தீராத அன்பு உண்டுதான். எத்தனை வேதனை என்றாலும் துளிகூட மகன் மனைவிக்கோ அன்றி வாணிக்கோ கூடக் காட்டிக்கொள்ளாது எதுவும் நடவாததுபோல் திரியும் மாமனாரை அவளுக்குப் பிடிக்காமற் போகுமா ??

ஒன்பது நாட்களுக்கு முன்னர் கூட காலையில் எழுந்து தானே குளித்து, உடைமாற்றி போட்டுவாறன் என்று கூறிவிட்டுப் போனவர் முக்கால் மணி நேரகுத்தில் இல்லாமற் போனது அவளால் இன்றுவரை நம்பத்தான் முடியாமல் இருக்கிறது.

இத்தனை நாட்கள் வீட்டில் மாறிமாறி உறவினர்கள் புடை சூழப் படுத்தது மனதுக்கு இதமாக இருந்தாலும் இன்று கட்டிலில் படுக்க வேண்டும் என்னும் ஆசையைத் தர இரவு பத்து மணிக்கு இரண்டு மகன்களுடன் அவர்கள் கட்டிலில்   போய் நின்மதியாகப் படுத்தாள் வாணி.

இரு மாடிகள் கொண்ட பெரிய வீட்டில் கீழே மாமனாருக்கும் மாமியாருக்கும் ஒரு படுக்கை அறை. மேலே இவர்களது படுக்கையறை அருகே பிள்ளைகளின் அறை. மாமியார் தனியே கீழே படுக்க முடியாது என்பதால் இவர்களது  படுக்கை அறையில் இந்த ஒன்பது நாட்களும் இவளது தாயும் மாமியாரும் தூங்க, இவள் மற்ற உறவினர்களுடன் வரவேற்பறையில் கணவனின் சகோதரி பிள்ளைகளுடன் தூங்கினாள். அவர்களும் நேற்றுக் காலை மாமாவின் எட்டு முடிய இன்று சுவிசுக்குக் கிளம்ப, இவளுக்குக் கணவனுடன் மாமனாரின் படுக்கையில் போய்த் தூங்க எதோ மனம் வரவில்லை. பயம் என்று சொல்ல முடியாது ஆனாலும் எதுவோ ஒன்று தடுக்க பிள்ளைகளுடன் படுத்தது அதனால்த்தான்.

மூத்தவன் எப்போதும் ஒழுங்காகப் படுக்கவே மாட்டான். அங்கு இங்கு திரும்பி போர்வை விலக்கியபடி .... சின்னவனும் பெரியவனும் மாறிமாறி இழுக்க இவளுக்குக் குளிரில் என்ன செய்வது என்று தெரியவில்லை. இன்றைக்கும் நின்மதியாகப் படுக்க முடியாது போல் இருக்கே என நினைத்தவள், எதுக்கும் கீழே போய் கணவனுடன் படுக்க முடிவு செய்து நேரம் பார்த்தால் பதினோரு மணி. மேலே அறை விளக்கை நிறுத்திவிட்டு படிகளில் கடகடவென இறங்கினால் கீழே இருட்டு.

மாமனாரின் அறையில் இருந்து கணவனின் குறட்டைச் சத்தமும் சிறிய வெளிச்சமும் கோலில் விழுந்து கொண்டிருந்தது. கீழே இறங்கியவளுக்கு அந்தக் கோலின் ஒரு மூலையில் யாரோ நிற்பது போல் தெரிய, மீண்டும் மேலே ஒடுவோமோ என மூளை எண்ணிய கணம், மேலேயும் எல்லா விளக்கும் அணைத்துவிட்டேனே எப்படிப் போவது என்னும் கேள்வியும் எழ, ஒரே ஓட்டமாக ஓடிச் சென்று கணவனுக்குப் பக்கத்தில் எப்படிப் படுத்தாள் என்று தெரியாமல் கணவனின் தோள்மூட்டில் தலை வைத்தும் கணவன் எழும்பாதது பீதியைக் கிளப்பியது.

கண்களை இறுக்க மூடி இருந்தவள் திறந்து பார்த்தபோது கணவனின் மூன்று அங்குலத் தாடியும் அதற்கு ஊடாக மாமனாரின் உருவமும் தெரிய வயிறு எல்லாம் பயத்தில் சுருள மீண்டும் உடனே கண்களை மூடினாள். என் நினைப்பாக இருக்கும் என்று எண்ணியபடி மீண்டும் கண்களைத் திறந்தால் மீண்டும் மாமனாரின் உருவம் தாடியூடாக. உடனே சிறிது துணிவை வரவளைத்துக்கொண்டு கணவனின் தாடியை  விலத்தினால் மாமனாரைக் காணவில்லை. என் நினைப்புத்தான் என்று எண்ணியபடி தாடியைக் கீழே விட மீண்டும் மாமனாரின் உருவம்.

ஐயோ தாடியை விடு என்று கணவன் சொன்னபோதுதான் அவளுக்குத் தான் கணவனின் தாடியை பயத்தில் இறுகப் பற்றி இருப்பது தெரிய உடனே கணவனிடம் மாமா தெரியிறார் என்றாள். நீ எப்ப இதில வந்து படுத்தனி என்று கேட்டபடி அவள் பக்கமாகத் திரும்பி அவளை அணைத்தபடி அப்பா எங்களுக்கு ஒண்டும் செய்ய மாட்டார். பயப்பிடாமல் படு என்று கணவன் சொன்னதன் பின் வாணி கண்களைத் திறக்கவே இல்லை.

உங்கள் கதைக்கு நன்றி சகோதரி .

எனது தந்தையை இழந்து மூன்று வருடங்கள் ஆகின்றன . அவர் இறந்த பின் அவர் இருப்பை சில நாட்களுக்கு நாம் உணருவோம் என்று தெரிந்தவர் கூறினார் .

ஆனால் நாம் அப்படி ஒன்றையும் உணரவில்லை . எனது தந்தை எல்லோராலும் மதிக்கப் பெற்ற ஒரு உத்தமராக வாழ்ந்தவர் .

இன்றும் அவர் பெருமையை பலர் போற்றுவதை கேள்விப் படுகிறேன் . எனது 10 வயது நிரம்பிய மகள் அப்பொழுது அவளுக்கு 7 வயதிருக்கும் கண்ணீருடன்

நின்ற அம்மாவிடம் சென்று பாட்டாவை கடவுள் தனக்கு வேண்டும் என்று கூப்பிட்டு இருக்கிறார் . ஆனால் உங்களோடு என்றும் இருப்பார் என்று பெரிய

மனிஷி போல் கூறியது மட்டும் எனது அப்பாவே அவள் வடிவில் எமக்கு ஆறுதல் கூறியது போல் இருந்தது .

உங்கள் கதையை வாசித்தவுடன் உடனே என் அப்பாவை தான் நினைத்தேன் .

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி மீரா வருகைக்கும் கருத்துக்கும்.  என் அப்பா கூட வருவார் என நாம் எல்லோரும் எதிர் பார்த்தோம் தான். 

  • கருத்துக்கள உறவுகள்

.  என் அப்பா கூட வருவார் என நாம் எல்லோரும் எதிர் பார்த்தோம் தான். 

எனது அப்பா ஊரில் இறந்த போது (2008) நான் அவருடைய இறுதிக்கிரிகையில் கலந்து கொள்ளவில்லை.

அவருடைய உடல் எரிந்த அதே நாள் அவர் என் வீட்டின்  வாசலில் ஒரு வினாடியில்   என் கண் முன்னே தோன்றி மறைந்தார். :)

 அன்பு கொண்டவர்கள் மரணித்தாலும் அன்புள்ளவர்களுக்கு அருகே இருப்பார்கள்.

வாசிக்கவே பயமாய் இருக்கப்பா  :(

வேண்டாம் நான் வாசிக்க மாட்டன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வாசிக்கவே பயமாய் இருக்கப்பா  :(

வேண்டாம் நான் வாசிக்க மாட்டன்

வாசிக்கவே வேண்டாம் நீங்கள் மீனா :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எனது அப்பா ஊரில் இறந்த போது (2008) நான் அவருடைய இறுதிக்கிரிகையில் கலந்து கொள்ளவில்லை.

அவருடைய உடல் எரிந்த அதே நாள் அவர் என் வீட்டின்  வாசலில் ஒரு வினாடியில்   என் கண் முன்னே தோன்றி மறைந்தார். :)

 அன்பு கொண்டவர்கள் மரணித்தாலும் அன்புள்ளவர்களுக்கு அருகே இருப்பார்கள்.

இப்படிப் பல இடங்களில் நடந்திருப்பதாகக் கேள்விப்பட்டுள்ளேன்.

பயம் என்று இல்லை. உண்மையில் விரும்பியவர்கள் திரும்பி வரமாட்டார்களா என்ற ஏக்கம் தான் கதையை வாசித்து முடித்த போது எனக்கு தோன்றியது. உங்கள் மற்ற திகில் கதையை காண ஆசை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

திகில் கதை கட்டாயம் வரும்

  • கருத்துக்கள உறவுகள்

எனது தாயாரும் காலமாகி ஆறு மாதங்களாகி விட்டன...! தகனம் செய்து உறவினர் எல்லாம் சென்றபின் ஒருமாதம்வரை அவவின் அசுமாத்தத்தை வீட்டில் நாம் உணர்ந்திருக்கின்றோம்.

--  அவவின் அறையைக் கடக்கும்போது தனியாகத் தெரியும் வாசனை.

---  அவ இரவில் செற்றியில் வந்து அமர்வது போன்ற சரசரப்பு,

---  அகஸ்மாத்தாய் கூப்பிடும் குரல்.

எமது நினைவுகளாய்க் கூட இருக்கலாம், தெரியவில்லை...!

போன்ற சில...!

இப்ப அப்படி எதுவும் இல்லை...!

  • கருத்துக்கள உறவுகள்

கொஞ்சம் திகிலாகித்தான் போனேன் சுமே..... மவளே திகில் கதையை அந்தமாதிரி எழுதக்கூடிய திறமை இருக்கிறது. கவனத்தில் எடுத்தால் நம்பர் வண் ஆகலாம். :rolleyes:

எழுத நினைத்த விடயத்தை முன்பெல்லாம் வெளியில் நின்று பார்ப்பதுபோல் உங்கள் எழுத்து தோன்றும் இப்போது மிக நெருக்கமாக உள்வாங்கப்பட்டுள்ளீர்கள்.....

கருத்து எழுதுவதற்கும் வாசிப்பதற்கும் நேரம் ஒதுக்கவேண்டியுள்ளதே.... :icon_mrgreen:

இறந்தவரின் ஆத்மா ஒரு மாதகாலத்திற்கு தான் இருந்த இடத்தையே சுற்றி சுற்றி வருமென்று முதியவர்கள் கூறுவார்கள்.

ஆண்டுக்கணக்காக அவர்கள் வாழ்ந்த இடம். ஒருநாளில் முடியக் கூடியதா என்ன??

கொஞ்சம் திகிலாகித்தான் போனேன் சுமே..... மவளே திகில் கதையை அந்தமாதிரி எழுதக்கூடிய திறமை இருக்கிறது. கவனத்தில் எடுத்தால் நம்பர் வண் ஆகலாம். :rolleyes:

எழுத நினைத்த விடயத்தை முன்பெல்லாம் வெளியில் நின்று பார்ப்பதுபோல் உங்கள் எழுத்து தோன்றும் இப்போது மிக நெருக்கமாக உள்வாங்கப்பட்டுள்ளீர்கள்.....

கருத்து எழுதுவதற்கும் வாசிப்பதற்கும் நேரம் ஒதுக்கவேண்டியுள்ளதே.... :icon_mrgreen:

நன்றி சகாரா உங்கள் கருத்துக்கு. நேரம் இருந்தாலும் என் கணணி தான் எனக்கு வில்லன் என்ன செய்ய ???

இறந்தவரின் ஆத்மா ஒரு மாதகாலத்திற்கு தான் இருந்த இடத்தையே சுற்றி சுற்றி வருமென்று முதியவர்கள் கூறுவார்கள்.

நான் லண்டனில் அப்பாவின் படத்தை வைத்து விளக்கைக் கொளுத்துவேன். வந்த ஒருவர் சொன்னார் ஒரு இடத்தில் மட்டுமல்லா கொளுத்த வேண்டும். அப்பா அங்கும் இங்கும் வந்து கஷ்டப்படப் போகிறார் என்று.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.