Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் பெண்ணை மணப்பதற்காக முஸ்லிம் இளைஞன் இந்து மதத்தை தழுவினார்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் பெண்ணை மணப்பதற்காக முஸ்லிம் இளைஞன் இந்து மதத்தை தழுவினார்

மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் பெண்ணை மணப்பதற்காக முஸ்லிம் இளைஞன் ஒருவர் இந்து மதத்தை தழுவியுள்ளார்.

பொத்துவில் அல் நஜாத் வீதியில் வசிக்கும் அஸ்கார் லெப்பை இல் முபீன் என்பவரே இவ்வாறு மதம் மாறி மட்டக்களப்பு மாவட்டம் செங்கலடி காளி கோயில் வீதியில் வசிக்கும் சுதாராணி என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

குறித்த மணமகன் இஸ்லாமிய மதத்தில் இருந்து இந்து மதத்தை தழுவி சிவகணேசன் என்று பெயர் மாற்றப்பட்டு திராவிடர் பாரம்பரிய முறையாக காது குத்தி கடுக்கன் இட்டு பெண்ணின் கழுத்தில் தாலி கட்டினார்.

இவர்கள் செங்கலடி வர்த்தக சங்கத் தலைவர் செல்லம் மோகனின் தலைமையில் திருமணம் செய்து கொண்டனர். இது பற்றி மோகன் தெரிவிக்கையில், நமது சமூகத்திற்கு ஒரு கட்டுப்பாடு நியதி உள்ளது. அதன் பிரகாரம் அவர்களுக்கு எமது சம்பிரதாய முறைப்படி திருமணம் செய்து வைக்கப்பட்டது.

எமது சமூகத்திற்குள் முறையற்ற விதத்தில் யாரும் நடக்க முற்பட்டால் இதுதான் இனியும் நடக்கும் என்று தெரிவித்தார்.

batty_wedding_001.JPG

batty_wedding_002.JPG

DSC_0329.JPG

tamilwin.com

 

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்ப் பெண்ணின்.... சீதனக் காசுக்கு, ஆசைப் பட்டு மாறியிருப்பார்.
 
எதுக்கும்... அந்த இளைஞர், தனது முஸ்லீம் சமுதாய மக்களின்,
அச்சுறுத்தலை சமாளிக்க.... தன்னை, தயார் படுத்திக் கொள்ள வேண்டும்.
கடைசியாய்... அந்த தமிழ் பெண்தான்... பலிக் கடாவோ தெரியாது.

********
 
வாழிய.... மணமக்கள்.



நியானி: ஒரு வரி நீக்கம்

Edited by நியானி

நாய் மனிதனைக் கடித்தால் அது செய்தியில்லை. மனிதன் நாயைக் கடித்தால் அதுதான் செய்தி என்று சொல்வார்கள். இந்தச் செய்தி அதற்கு ஒரு நல்லதோர் உதாரணம்.

 

ஏதோ தமிழ் மக்களுக்கும் இந்த மதத்திற்கும் கிடைத்த பாரிய வெற்றி இது என்பது போல ஒரு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. இதற்கு மட்டக்ளப்பின் தமிழ் பிரமுகர்? ஒருவர் போய் தமிழ் மக்களின் கட்டுப்பாட்டிற்கும் கலாச்சாரத்திற்கும் கிடைத்த வெற்றி இது என்பதாகப் பேசயுள்ளாராம்.

 

தினம் தினம் எத்தனை தமிழர்கள் இஸ்லாமியராக மதம் மாறிக் கொண்டிருக்கிறார்கள் என்பது அந்தப் பிரதேசங்களில் வாழ்பவர்களுக்கு நன்றாகத் தெரியும் . தொழில் வாய்ப்பிற்காக திருமணத்திற்காக தமது வறுமையைக் களைவதற்காக என்று பலர் இஸ்லாமியர்களாக மாறிக் கொண்டிருக்கிறார்கள்.

Edited by Manivasahan

  • கருத்துக்கள உறவுகள்

உலக்கை போகிற இடம் பார்க்காமல், ஊசி போகிற இடத்துக்கு.... முக்கியத்துவம் கொடுப்பவர்கள் தமிழர்கள்.
 

நெத்தியில்... திருநீறு பூசியவன் எல்லாம்... இந்து அல்ல,
தொப்பி... போட்டவன் எல்லாரும்,  முஸ்லீமும் அல்ல. :D 

 

-வெள்ளிக்கிழமை சிந்தனை.- :lol: 

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

"எமது சமூகத்திற்குள் முறையற்ற விதத்தில் யாரும் நடக்க முற்பட்டால் இதுதான் இனியும் நடக்கும் என்று தெரிவித்தார்."

 

இது ஏதோ கட்டாயக் கலியாணம் போல இருக்குது.  இதே மாதிரி ஒரு முஸ்லீம் பெண்ணை இந்துவாக மாற்றிக் கடைசிவரை மணக்க முடியாது.  காதலுக்கெல்லாம் அங்கு இடமேயில்லை.  இந்தத் தம்பதிகளுக்கும் என்னென்ன ஆபத்து வருமோ தெரியவில்லை.

 

நெத்தியில்... திருநீறு பூசியவன் எல்லாம்... இந்து அல்ல,

தொப்பி... போட்டவன் எல்லாரும்,  முஸ்லீமும் அல்ல. :D 

 

-வெள்ளிக்கிழமை சிந்தனை.- :lol: 

 

ஐயோ.....எனக்கு புல்லரிக்குது சிறி.   :D  :D

  • கருத்துக்கள உறவுகள்

மதம் மாறியவரை முஸ்லிம்கள் உண்டு இல்லை என்றாக்கி விடுவார்கள். கலவரம் கூட வர வாய்ப்புண்டு.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.